Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மெட்ரோ ரயில் பயணங்களிலே... 27

அதிரைநிருபர் பதிப்பகம் | December 04, 2010 | , ,

நாங்கள் கடல் கடந்து திரவியம் தேடவந்தவர்கள் இங்கே எங்களுக்குத் தடம் கொடுத்தவர்கள் ஒர் ஐக்கிய(மான) அரபு(நாடுகளின்) அமீர(கங்கள்) கண்டெடுத்த நாள் தேசிய ஒருங்கினைப்பு தினம் (national day) இன்று அதுதான் எங்களுக்கும் விடுமுறை நாள்.

விடுமுறை என்றால் உறக்கமே பிரதானமாக இருந்திடும் இங்கிருப்பவர்களின் வாழ்வியலின் பகுதியாக. சரி என்னத்த தூங்கி கண்டுவிடப் போறோம்னு காலை 09:17 மணிக்கு உறைவிடம் விட்டு வெளிக்காற்று வாங்கலாமே என்று பொடி நடை பயில ஆரம்பித்தேன் தலையைக் கவிழ்த்தவனாக. சட்டென்று ஒலித்த வாகனத்தின் சக்கரச் சிக்கலின் சத்தம் கேட்ட திசை நோக்கி பார்த்தால் மஞ்சள் வண்ணம் பூசிய டெயோட்டோ வாடகை கார் (சூரியக் குடும்பத்திற்கு சொந்தமானதல்ல) மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடுபோல் என்னை வெறித்துப் பார்ப்பதுபோல் தோன்றியதால் என் பார்வையை மாற்றி சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன்.

நேர் கொண்ட நடைன்னு சொல்லிட்டு கவிழ்ந்து நடந்தா எப்படின்னு யோசனையிலேயே தனியா சாலையோர முனையில் நின்ற பலகையை கண்டதும் அதில் "Dubai Metro" - 200mன்னு போட்டிருந்தது சரி என்னதான் இருக்குன்னு 200 மீட்டர் தூரத்திற்கு நடந்து பார்த்தேன். அட! கீழ்நோக்கி மாடிப் படிகள் மடித்து மடித்து சென்று கொண்டிருப்பதைக் கண்டதும் இன்றைக்கு மெட்ரோ இரயிலில் போயித்தான் பார்ப்போமே என்று உள்ளே சென்றேன். ஆராவராமில்லாத அமைதியாக '1985'களில் அதிரைப்பட்டினம் - பட்டுக்கோட்டை சாலையில் தெரியும் ஆள் நடமாட்டம் போல் அங்கே மூன்று பேர்தான் அந்த மடிப்போடு கீழ் இருக்கும் படிக் கட்டில் நின்றார்கள்.

ஏற்கனவே பயணத்திற்கான நுழைவு அட்டை என்னிடம் இருந்ததால் இலகுவாக உள்ளே சென்றேன், அங்கேயும் மீண்டும் மடித்து மேல் நோக்கிச் செல்லும் படிக்கட்டிலே இரயில் வந்து நிற்கும் இடம் சென்றடைந்தேன் அப்போது காலை 09:28 அங்கே குடையிடனோ அல்லது மஞ்சள் பையுடனோ யாரையும் காண முடியவில்லை. பள்ளிக் கூடத்திலிருந்து ஓடிவந்த சிறுவனைப் போல் ஃபிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த இருவர் அரைக்கால் டிரவ்சர் அனிந்து அமைதியா வந்து நின்றார்கள் அதன் பின்னர் சிறுகச் சிறுக பன்னாட்டு முகங்களின் கலவையை அங்கே காண முடிந்தது. சரியாக நான்கு நிமிடம் கழித்து மெட்ரோ இரயில் வந்தது எல்லோருடன் சேர்ந்தே நானும் ஏறிக் கொண்டு தேடினேன், இருக்கை கிடைத்த இடத்தில் அமர்ந்தேன்.

உட்கார்ந்து கல்களை மடக்கி எடுப்பதற்குள் யாரோ சண்டைக்கு நிற்பதுபோல் கொய்யோ முய்யோன்னு சத்தம் வருவதைக் கண்டு திரும்பினால் இரண்டு ஃபிலிப்பைன் நாட்டுக் காரர்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் சாதாரனமாக பேசினாலே சத்தமாகத்தான் பேசுவார்கள் அல்லது அரைக் கரண்டில் ஓடும் டேப்ரிக்கார்டர் மாதிரி இழுத்து இழுத்தும் பேசுவார்கள்.

அடுத்த நிறுத்தம் "யூனியன் ஸ்கொயர்" அங்கே ஏராளமான கூட்டம் ஏறியது, ஏறியவர்கள் கிடைக்கும் இடத்தில் தங்களைப் பொறுத்திக் கொண்டார்கள் சட்டென்று "பின்னே அவட எந்தானு போயி" இப்படி சடேரென்று ஒரு குரலை எழுப்பிக் கொண்டிருந்தவர் பக்கத்தில் இருப்பவர்கள் காது கிழியுமே என்றுகூட விளங்காமல் நாட்டிலிருக்கும் தாரத்திற்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் மொழி தெரிந்தவர்களும் தெரியாதவர்கள் அந்நபரைப் பார்ப்பதும் பார்வையை திருப்புவதுமாக இருந்தனர்.

"காலித் பின் வாலித்" நிறுத்தம் இறங்கியவர்களைத் தொடர்ந்து ஏறியவர்கள் குறைவுதான், அதில் இருவர் பேசிக் கொண்டே உள்ளே வந்தார்கள் "you should not allow them" மற்றவர் "I can't do further" இப்படியாக அவர்களின் பிரச்சினையை பேசி கொண்டிருந்த ஒருவருக்கு அலைபேசி ஒலித்தது அதனை எடுத்து அவரது மொழியில் பேசினார் என்ன பேசினார்னு தெரியலை, என்னோட யூகம் அது இந்திய மொழிகளில் ஒன்று அதுவும் வடநாட்டைச் சேர்ந்ததுன்னு விளங்கிக் கொண்டேன்.

அடுத்த நிறுத்தம் "அல்-கராமா" இங்கேதாங்க நம்ம மின்சார இரயிலில் ஏறுமே கூட்டம் அந்த மாதிரி திபு திபுன்னு ஏறினாய்ங்க, ஆஹா.. சய்த்தம்ம் "கொய்யோ முய்யோ", "கைகளியே", "கியாகர்னக்கல்யே", "கோமஸ்தகா", " எத்தியா" அதனூடே "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற முகமுன்னும், இப்படியாக காதில் விழுந்த மொழிகளின் சிலது தெரிந்திருந்தாலும் மற்றவைகள் எனக்குத் தெரியவில்லையே, இங்கே உங்களுக்கு சொலித்தர ஆனா ஆராவரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

நிறுத்தம் "அல்-ஜாஃப்லியா" யாருமே ஏறவில்லை இறங்கவும் இல்லை என் கண்ணுக்கு பட்டவகையில்.

அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில் "துபாய் டிரேட் செண்டர்" மற்றும் "ஃபினான்ஸியல் செண்டர்" ஓரிருவர் ஏறி இறங்கினர் ஆனா தொடரும் மொழிச் சத்தங்கள் அப்படியே அதில் ஏற்றம் இறக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது.

அடுத்த நிறுத்தம் "புர்ஜ் கலிஃபா" இங்கே கொஞ்சம் கொய்யோ முய்யோ கூட்டமும் மற்றவர்களும் இறங்கினார்கள் சற்று மொழிகளின் ஓசைச் சண்டைகள் குறைவானது போல் உணர்வு ஏற்பட்டது.

அதற்கு அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களிலும் "பிஸினஸ் பே", "இஸ்லாமிக் பேங்க்", "ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க்" ஏற்றமும் இறக்கமும் இருந்தது ஆனால் சற்று மொழிகள் வதைகள் குறைந்திருந்தது என்னவோ மெய்யே.

நிறுத்தம் "தி மால் ஆஃப் எமிரேட்ஸ்" அப்படியே பாதி இரயில் காலியான மாதிரி தோன்றிய சில விணாடிகளில் அதற்கும் சற்று குறைவாக மற்றொரு கூட்டம் ஏறியது இதில் நிறைய ஐரோப்பிய வெளிநாட்டினர்தான் அதிகம். நாம மட்டும் என்னவான்னு கேட்டுடக் கூடாது அதுக்காக எங்களை இங்கே மண்ணின் மைந்தர்கள் என்றும் நினைத்துட வேண்டாம். மொழிக் கூச்சல் குறைவாக இருந்தாலும் பாதி புரிகிறது மீதி புரியாமல் இருந்தது அவர்களுக்கு அப்படித்தான் போலும்னு சும்மாவே இருந்திட்டேன்.

இப்படி அமைதியாக இருந்திக்கும் போதுதான் வேறு பெட்டியில் ஏறியவர்கள் இடம் தேடி அலைந்த பெண்களும் ஆண்களும் வட நாட்டினர் (அங்கே அரசியில் நடத்துறவங்களா இருக்கலாம்) சுற்றுலாவுக்கு வந்தவர்கள் போலிருந்தனர். என்ன விஷயம்னா அவர்கள் ஒவ்வொரு வரையும் நாம்தான் சுற்றி சுற்றிப் பார்க்கனும் அவ்வளவு உருண்டையாக இருந்தார்கள் இந்த உடல்வாகோடு சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார்கள் வந்தவர்கள் அப்படியே அந்த இடத்திலேயே நின்று விட்டார்கள், சற்று அமைதி காத்த இடம் மீண்டும் இந்திய இரயில் பயணங்களை நினைவுக்கு கொண்டு வந்தார்கள். திராவிடக் கட்சிக்காரர் இருந்திருந்தால் நிச்சயம் தார்பூசியிருப்பார் இங்கே இந்தி ஒழிக என்று அதோடு நோட்டீஸும் ஒட்டியிருப்பர் இந்த மெட்ரோவில் !

வட நாட்டு மொழி வதை(ச்சத்தம்) குறந்தபாடில்லை அதற்கு அடுத்தடுது வந்த நிறுத்தங்கள் சிலரின் ஏற்றம் இறக்கம் இருந்தாலும் அவர்கள் அமைதியாக எதோ தொலைத்தவர்கள் போல்தான் வந்தார்கள் சென்றார்கள்.

இறுதியாக இறங்க வேண்டிய இடம் "இப்னு பத்துத்தா மால்" நிறுத்தம் வந்து இரயில் நின்றதும் புயல் அடித்து ஓய்ந்த அமைதியானது இரயில் ஆனல் குளிர்சாதங்களின் இரைச்சல் மட்டும் தூறலின் இனிய சத்தத்தை ஞாபகப்படுத்தியது.

இந்த 50 நிமிடப் மெட்ரோ பயணத்தில் தமிழ் பேசுபவரோ என்று எண்ணத் தோன்றிய முகங்களை காண முடிந்ததே தவிர ஆனால் ஒரு வார்த்தை தமிழில் என் காதுகளில் விழவில்லை ஆச்சர்யமாக இருந்தது, ஒருவேளை எனக்கு தமிழ் தெரியும்னு தெரிந்துதான் அமைதியாக இருந்தா(ய்)ங்களோ என்னவோ.. வேற என்னவென்று தெரியலைங்க !.

இந்த மெட்ரோ இரயில் பயணங்கள் பற்றி எழுத நிறைய இருக்குங்க என்ன ஒரு சிக்கல்னா அத எல்லாத்தையும் தமிழிலதான் வாசிக்க வேண்டும் அதுதான் நம் நிலமை J.

ஒரேயொரு விஷயம் கேட்கனும்னு தோனுச்சு அதைக் கேட்டு விடுகிறேனே : அதெப்படிங்க இந்த ஏழு குட்டி குட்டி நாடுகளே (ஐக்கிய அரபு அமீரகம்) எவ்ளோ ஒத்துமையாக இருக்காங்க ஒன்னாவே எல்லாமே செய்றாங்க, ஒரே பெருநாள் கொண்டாடுறாங்க ஆனா நாம நாலு தெருப் பெயராலே பிரித்து பிரித்து வைத்து இருக்கோம் ? ஏனுங்க எப்போதான் ஒன்னா சேர்ந்தே எல்லாமே செய்யப் போறோம். சரி சரி நாங்க ஒன்னாதானே இருக்கோம்னு என்னோட காதை திருவ வேண்டாம், கொஞ்சம் முன்னாடி வாங்க அத கைகோர்த்து முன்னிருத்தி காட்டுவோமே!

-- அபுஇபுறாஹிம்

27 Responses So Far:

Unknown said...

i like this article..........

Yasir said...

வாவ் காக்கா....கட்டுரையை படிக்குபோது நாமே இரயிலில் உட்காந்து சென்ற உணர்வை உங்கள் ஆக்கம் ஏற்படுத்தியது..அருமையான நடை...

// அவர்கள் ஒவ்வொரு வரையும் நாம்தான் சுற்றி சுற்றிப் பார்க்கனும் அவ்வளவு உருண்டையாக இருந்தார்கள் // ஹாஹாஹாஹா நல்ல நகைச்சுவை

180 நாட்டு மக்களுக்குமேல் வாழும் இந்த அரபு அமீரகம்..நமக்கு எல்லாம் இரண்டாவது தாய் நாடு என்றால் அது மிகையல்ல..நாம் நாட்டில் இருப்பதை விட நாம் இங்கு பாதுகாப்பாகவும்,சுதந்திரமாகவும் இருக்கின்றோம்

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தங்களின் வர்ணனை மிக அருமை, கட்டுரையை மிக அழகாக வடிவமைத்து கடைசியாக கொடுத்த பஞ்ச் இலவம் பஞ்சில் ஊசி ஏற்றியது போல் உள்ளது.

ZAKIR HUSSAIN said...

To

Bro.abu Ibrahim

கொஞ்சம் கேமராவை எடுத்துபோய் / அல்லது செல்போன் கேமராவில் 'க்ளிக்" செய்திருக்களாமே...நீங்க சொல்ர எடமெல்லாம் அங்கு வந்தால்தான் பார்க்கமுடியும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// கொஞ்சம் கேமராவை எடுத்துபோய் / அல்லது செல்போன் கேமராவில் 'க்ளிக்" செய்திருக்களாமே...நீங்க சொல்ர எடமெல்லாம் அங்கு வந்தால்தான் பார்க்கமுடியும். //

ஜாஹிர் காக்கா: சும்ம உடம்பு முறிக்கலாம்னுதான் பொடி நடை போட்டேன் அது என்னடான்னா மெட்ரோ இரயில் ஏத்தி விட்டுச்சு !

அதனாலென்ன இனிவரும் சந்தர்ப்பத்தில் nikon d90 உதவியுடன் எண்ணங்களிலிலும், பார்வைகளிலிலும் சிக்கியவைகளை வண்ணச் சித்திரமாக்கி உங்களுக்கு சீர் அனுப்பி வைக்கிறோம் அல்லது பதிவுக்குள் புகுத்திட முயற்சிக்கிறேன் வெகு விரைவில்... அதற்காக இங்கு வரும் travel planஐ தள்ளிப் போட்டிட வேண்டாம்... ஆவலோடு எதிர்பாக்கிறோம் :)

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
நல்லவேளை, ஆரம்பித்த 8வது 9வது வரியிலேயே யார் எழுதியதுன்னு ஒரு க்லான்ஸ் பார்த்துக்கிட்டேன். இல்லேன்னா லேசா ஜாகிர் ஸ்டைலில் இருந்ததால் அவன் எழுதியதாக நினைத்திருப்பேன்.

நல்ல நேரேஷன்.

இப்ப நீங்க அந்த மெட்ரோ ட்ரெயினின் ட்ரைவர் என வைத்துக் கொள்வோம். உங்கள் ட்ரெயினில் ரிகா ரோடில் 20 பேரோடு புறப்படும் ரயில் யூனியன் ஸ்கொயர் ஸ்டேஷனில் நின்றவுடன் 2 பேர் இறங்கி 8 பேர் ஏறுறாங்க, பிறகு காலித் பின் வாலிதில் 12 பேர் இறங்கி 9 பேர் ஏறுறாங்க, தொடர்ந்த ரயில் அல் கராமா நிறுத்தத்தில் 5 பேரை இறக்கி 90 பேரை ஏற்றி பிறகு அல் ஜாஃபிலியாவில் ஒருவரும் ஏறாமல் இறங்காமல், அதற்கு அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களிலும் "பிஸினஸ் பே", "இஸ்லாமிக் பேங்க்", "ஃபர்ஸ்ட் கல்ஃப் பேங்க்" ஏற்றமும் இறக்கமும் சமமாக இருந்தது என்றால், மால் ஆஃப் எமரைட்ஸில் வண்டி நிற்கும்போது 25 பேர் இறங்கி, 5 பேர் ஏறினால் இப்னு பதூதா மால் (அங்கேதான் கிழம்பிகொண்டு இருக்கோம்.) போய் சேரும்போது அந்த மெட்ரோவின் ட்ரைவரின் வயது என்ன?

சொல்லுங்க பார்ப்போம்>

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// போய் சேரும்போது அந்த மெட்ரோவின் ட்ரைவரின் வயது என்ன?

சொல்லுங்க பார்ப்போம்> //

கவிக் காக்கா : நல்லாதாப் போச்சு நான் தான் ஓட்டி சென்றேன்னு சொல்லிடல..

ஓட்டுநரை கண்ணுல காட்டவேயில்ல ஏதோ ஆவிய வச்சு ஓட்டுறாய்ங்க போல ? காக்கா இல்லேன்னே கேட்டுட்டு வந்திருப்பேன் வயசு என்னான்னு.

இது ஆட்டோமேட்டிக்குன்னுல சொன்னாய்ங்க ! அப்பவே நெனச்சேன் இப்படி புளிய மரத்தடியில உட்கார்ந்து யோசிக்கிறங்களும் இருப்பாங்கன்னு (கவிக் காக்கா)

ஜலீல் நெய்னா said...

எல்லா சத்தமும் காதுலெ விழுந்துச்சி ஆனா,

அந்த...தடிக்குரலில்

டீ...காபி டீ...காபி

ம்ம்ம் விலெலய.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
திருத்துறை பூண்டி ஸ்டேஷன்னில் பூரி கிழங்குகாக பல் விளக்காமல் ஒரு கூட்டம் முண்டியடிக்குமே!
நினைப்பு உண்டா?

Unknown said...

//நமக்கு எல்லாம் இரண்டாவது தாய் நாடு என்றால் அது மிகையல்ல//
Brother your saying UAE as ur motherland shame shame......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

jaleelsa சொன்னது…

/// அந்த...தடிக்குரலில்
டீ...காபி டீ...காபி
ம்ம்ம் விலெலய.///

இப்படித் தடிக்குரலில் உள்ளே வந்தார்களேயானல் அதோடு வாங்கி சாப்பிட்டால் திர்ஹம் 200/- மொய்யெழுதிடுவாங்க ஆபிஸருங்க !

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

//இது ஆட்டோமேட்டிக்குன்னுல சொன்னாய்ங்க ! அப்பவே நெனச்சேன் இப்படி புளிய மரத்தடியில உட்கார்ந்து யோசிக்கிறங்களும் இருப்பாங்கன்னு (கவிக் காக்கா)//

அஸ்ஸலாமு அழைக்கும்
இது போன்ற ரயில்களுக்கு டிரைவர்கள் இருக்க மாட்டார்கள்.டிரைவர்களுக்கு பதிலாக கன்ரோல் ரூமில் ஆப்பரடேர்கள்
இருப்பார்கள்.இதுவும் புளிய மரத்தடி யோசனைதான்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed சொன்னது… /// கன்ரோல் ரூமில் ஆப்பரடேர்கள் ///

சாஹுல் காக்கா: சரியாத்தான் சொல்லியிருக்கீங்க அவைகள் (கேமராக்)கண்role ஆவதால்தான் இவைகள் சாத்தியம்.

சமீபத்தில் முன் அனுபவம் ஒன்று, சரியான பீக் நேரத்தில் அதாவது மாலை 06:00 மணிக்கு எதேச்சையாக மெட்ரோவில் வர நேர்ந்தது சரியான கூட்டம் இருந்தது அவரவர்கள் கிடைத்த பிடிகளில் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர் அதில் ஒருவர் பெட்டியின் ஒரு குவியலாக இருந்த பகுதியில் கைவைத்து நின்று கொண்டிருந்தார்.

இரண்டு நிமிடம் கூட இருந்திருக்காது பாதுகாப்பு பனியிலிருந்த பெண் ஒருவர் கூட்டத்தினூடே ஊர்ந்து வந்து பெட்டியின் குவியலில் கை வைத்திருந்ததை எடுக்கும் படி சொல்லி இனிமேல் அங்கே கை வைக்க கூடாது என்று சொல்லி விட்டுச் சென்றார் மீண்டும் அவர் அங்கே அறிந்தோ அறியாமல் வைத்தார் மீண்டும் அதே பெண் வந்தார் உடனே அவரிடமே கேட்டார் ஏன் அங்கே தடுக்கிறீங்கன்னு.

அப்போது அவர் "உங்கள் யாவரையும் கண்கானிக்கும் மற்றொரு கண் தான் அது "கேமரா" அதனை காதில் வாங்கியவர்கள் அப்படியே எல்லோரும் உற்று நோக்க ஆரம்பித்தவர்கள் அதனைப் பார்ப்பதும் வேறு இடத்திற்கு பார்வையை மாற்றுவதுமாக இருந்தனர் ! - ரசிக்கவும் செய்தேன் இந்த விழிகளின் அலைச்சலை !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// ட்ரைவரின் வயது என்ன?
சொல்லுங்க பார்ப்போம் //

கவிக் காக்கா : அந்த டிரைவர் ஆறாம் நாள் சூலைத் திங்களில் பிறந்தாராம் வருஷம் (ரொம்ப அவசியம்னா) குறுஞ் செய்திய்ல அனுப்புவாராம் :))))))))

Yasir said...

///abutalha சொன்னது…
//நமக்கு எல்லாம் இரண்டாவது தாய் நாடு என்றால் அது மிகையல்ல//
Brother your saying UAE as ur motherland shame shame....../// ரொம்ப UAE-யினால் பாதிக்கபட்டிருப்பீர்கள் போலும சிலரைப்போல்..எனக்கு இதை சொல்வதில் shame இல்லை..if you have anything to say more ....shoot a mail to me : mdyasir@msn.com, its not my style to argue our personal opinion in this open form,thanks for your understanding

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி யாஸிர்: I do appreciate your prompt response and crystal clear response to "Mr.Abutaha".

Mr. AbuTaha: I wish both of us will get introduce if you can mail me to : nainathambi@gmail.com, which may assist everyone to know before commenting anything harm.

However, once I again recall message from Adirai Nirubar HOME PAGE Header message "அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துக்கள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துக்கள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசகர் நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துக்கள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு"

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
அபு என்பது ஆகு பெயர் அல்லவா. இபுறாகிமுக்கு வாப்பா ஆனதால் அபு இபுறாகீம். தாஹாவுக்கு வாப்பாவானதால் அபு தாஹா. எனவே, சகோ. அபு தாஹாவை அனாமத்தாக கொள்ளக் கூடாது. ''அறிமுகமில்லாத'' என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

தம்பி யாசிர், ய்.எ.இ மேலான வெறுப்பு அவர்தம் சொந்த அனுபவங்கள் சார்ந்ததாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் அவருக்கு நீங்கள் விளக்கம் தந்தாலும் அவை நியாயமாக்வே இருந்தாலும் அவை அவரின் அனுபவங்களால் விளைந்த வேதனையையோ வலியையோ திருப்பித் தரமுடியாது அல்லவா?

சகோ.அபுதாஹா, பெற்றுப்போட்டுவிட்டால் போதுமா? தேவைகள் குறைவான சிறுபிராயாத்தில் மட்டும் கவனித்து தேவைகள் பொருப்புகள் கூடிய இளைய பருவத்தில் அம்போவென விட்டுவிட்ட தாய்நாட்டைவிட தத்தெடுத்து வளர்த்துவரும் இந்த அரபு நாடு மேலல்லவா? இதை மற்றொரு தாய்நாடாக தம்பி யாசிர் சொல்வது மிகச் சரியானதல்லவா? நமக்கும் நம் குடுமத்திற்கும் சோறு போடும் இந்த நாடு நம் தாய் நாட்டைவிட் நம்மை வாழ வைப்பதில் எங்கே குறைவைத்தது.

சில விளக்கங்கள் வேண்டியும் சகோ.அபு தாஹா போன்ற மாற்றுக்கருத்துக் கொண்டவர்களுக்கு யதார்தத்தை புரிய வைக்கவும் அ.நி. அனுமதித்தால் இங்கேயே விவாதிக்கலாம்.

அதிரைநிருபர் said...

//சில விளக்கங்கள் வேண்டியும் சகோ.அபு தாஹா போன்ற மாற்றுக்கருத்துக் கொண்டவர்களுக்கு யதார்தத்தை புரிய வைக்கவும் அ.நி. அனுமதித்தால் இங்கேயே விவாதிக்கலாம். //

சகோதரர் சபீர் அவர்களின் கோரிக்கைக்கு வரவேற்கிறோம், மிக்க நன்றி.

வலைப்பூ உலகில் அனாமத்தாக (anonymous) அறிமுகமில்ல நபரிடமிருந்து வரும் கருத்துக்கள் நல்லவை இருக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்ளலாம் (சகோதரர் ஜாஹிர் இதில் உடன்படுவார்). மாறாக (வரட்டு பிடி) விவாதம் செய்வதற்காக, நக்கலுக்காக, பொழுதுபோக்குக்காக, குத்திக்காட்டுவதற்காகவும், நட்பு வட்டாரத்தில் தற்பெருமையடிப்பதற்காகவும், அல்ப சந்தோசத்திற்காக நேரத்தை அனாமத்தாக செலவழிக்கும் அன்பு சகோதரர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதே மேல். இது போன்றவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளட்டும்.

நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்களே (இளைய முதிய நண்பர்களே) இது போன்ற அனாமத்து பின்னூட்டமிடுவது தான் வேதனை. அல்லாஹ் அவர்களுக்கு நற்சிந்தனையை தருவானாக.

அதிரைநிருபர் வலைப்பூவின் பதிவுகளுக்கு மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்கள் சுய அறிமுகத்துடன் வந்து தங்களின் கருத்தை பதிந்தால் மிக பயனுல்லதாக இருக்கும். சகோதரர் சபீர் சொல்வது போல் மாற்றுக்கருத்துக் கொண்டவர்களுக்கு யதார்தத்தை புரிய வைக்கலாம். நாம் அனைவரும் தெளிவுபெற்று ஒற்றுமை உணர்வுடன் வாழ வழிவகுக்கும் என்பது எங்கள் நிலைப்பாடு.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அனைவருக்கும் என் சலாமும் விசாரிப்புகளும். முன்பு எப்பொழுதும் போல் என்னால் இங்கு வந்து கலந்துகொள்ளமுடியவில்லை(அப்பாடா! நிம்மதி என்கிறீர்களா)காரணம் இங்கு எங்களின் பாதினோருமாத பொருமை,உழைப்பு, நம்பிக்கை எல்லாவற்றிற்கும் வெள்ளாமை நேரம். ஹாலாலேயே நம்பி கடின சூழ்னிலையிலும் வியாபரம் செய்துவரும் எங்களுக்கு நல்ல விளச்சலும்,அறுவடையும்(வியாபார லாபம்)கிடைக்க வல்ல நாயன் அல்லாஹ்வை எங்களுக்காக துஆ செய்ய கேட்டுக்கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ் விரைவில் வருவேன்.(2 ஆக்கம் அனுப்பி வைத்துள்ளேன், நிர்வாக குழுவினர் சரியான நேரத்தில் எல்லாம் வெளியிடுவார்கள்).

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// sabeer சொன்னது…
அபு இபுறாகீம்,
அபு என்பது ஆகு பெயர் அல்லவா. இபுறாகிமுக்கு வாப்பா ஆனதால் அபு இபுறாகீம். தாஹாவுக்கு வாப்பாவானதால் அபு தாஹா. எனவே, சகோ. அபு தாஹாவை அனாமத்தாக கொள்ளக் கூடாது. ''அறிமுகமில்லாத'' என்று வேண்டுமானால் கொள்ளலாம். ///

கவிக் காக்கா: நான் சகோதரர் அபு-தல்ஹா அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்துதான் என்னுடைய தனிப் பட்ட கருத்தை பதிந்திருந்தேன், அதிரைநிருபரில் பதியப்படும் ஆக்கங்களிலோ அலல்து கருத்துகளிலோ மாற்றுக் கருத்தோ அல்லது விவாதமோ இருப்பின் நிச்சயம் அதனை வரவேற்போம் அதில் பங்கெடுக்கவும் செய்வோம், அதனை முன்னிருத்தவே என்னுடைய மின் அஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன் சுய அறிமுகம் வேண்டித்தான்.

தம்பி யாசிரின் உணர்வையும் நான் மதித்துதான் என் கருத்தை பதிந்தேன் அவர் சொல்வதில் தவறேதும் இல்லை, அது யாசிரின் அனுபவ நிஜம்.

நிற்க!

உங்களுக்கிடையே அழகிய பெயர்களைக் கொண்டு அழைத்துக் கொள்ளுங்கள் என்ற நபிமொழியை நினைவில் கொள்வோம்.

வலை மேய்ச்சலிலும் வலைச் சிக்கல்களில் அதிர்கமாக நாம் உழல்வதால் அனாமத்தாக மட்டுமல்ல விரும்பிய பெயர்களை வைத்துக் கொண்டும் கருத்துக்கள் எப்படியெல்லம் வருகிறது, அதுமட்டுமல்ல இவர்கள் யாரென்று கண்டறிந்தால் நம் முதுகுக்கு பின்னால்தான் இருப்பார்கள் அல்லது நம்மோடு முகம் கொடுத்து இனிமை காட்டுபவராக இருப்பார்கள் இது அனுபவ உண்மை.

ஒன்றாகத்தான் சஹனில் உட்கார்ந்து சாப்பிடுவோம் பாசமிக்க நட்பு சாப்பாட்டை பொரட்டி ஆணம் சொழு சொழுன்னு ஊற்றி இந்த மச்சான் சாப்பிடுன்னு ஒதுக்கித் தருவான் ஆனா உள்ளே பச்சை மிளகாய் வைத்திருப்பது தெரியாமலே நாமும் சாப்பிட்டு விடுவோம் அங்கே நாம் கடித்ததும் வரும் எரிச்சலையும் ஆ ஊ சத்தத்தையும் ரசிக்கும் நண்பர்கள் கூட இங்கே இந்த வலை மேய்ச்சலில் அதே வேலையைத்தான் செய்கிறார்கள்.

இதனைத் தவிர்க்கவே, முதல் கருத்துப் பதிவில் இல்லா விட்டாலும் அடுத்தடுத்த கருத்துப் பதிவுகளின் தங்களை அறிமுகம் செய்து கொள்ளலாம் அல்லது தனி மின் அஞ்சல் மூலம் அதிரைநிருபருக்கு தெரிவித்து விட்டு தொடரலாம்.

sabeer.abushahruk said...

தம்பி க்ரவுனுக்கு அவர்தாம் எதிர்பார்த்ததைவிட அல்லாஹ் லாபம்தர என் துஆ. அ.நி. & ஆபு இபுறாகீம் விளக்கங்களுக்கு நன்றி.

(இந்த சூதுவாதெல்லாம் நமக்குத் தெரியாதுப்பா. அதனால்தான், சகோ. அபு தால்ஹாவை "ஏன் வெக்கிக்கிட்டு? எல்லாம் ஆம்பிளைகள்தான் இருக்கோம். மரப்புக்கு பின்னால் நிக்காம வந்து உக்காருங்க பேசுவோம்னேன்)

Yasir said...

கவிகாக்கா....டிரைவரின் வயது கால்குலேஷனுக்கு வருவோம்
அவரின் வயது = அவருடைய தற்போதய வயது + அவர் கிளம்பிய ஸ்டேஷனில் இருந்து அடையும் ஸ்டேஷன் வரை எடுத்துக்கொண்ட நாள் (நேரம்)

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அதெல்லாம் சரி அதிரைக்கு எப்போது கம்பன் வரும்? இது பற்றி இதுவரை என்ன நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளது.

Unknown said...

Dear brothers my intention is not to hurt Mr.Yaasir i just want to comment for him. Nothing else but cannot accept about his UAE comment, by the way i never visit UAE before.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Brother AbuTalha: Thank you for understanding and making clear comment in Adirai Nirubar.

Yasir said...

dear bro abu talha...appreciate your response and again telling you that my personal opinion can't be mass opinion...there is no reason to say that your comments were hurt me...please do visit adirainirubar as always and we will be enjoy reading your comments and opinion, we are here to make good terms & relation with our brothers not to loose it

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு