Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

No Parking 30

அதிரைநிருபர் | December 25, 2010 |

இன்றைய சூழலில் சமீபகாலமாக துபாய் போன்ற வளைகுடா நாடுகளில் கங்கனம் கட்டிக் கொண்டு போடும் அபராதங்கள் எதற்குத் தெரியுமா ? ஓடும் வகனங்களுக்கும் அதோடு ஓடாமல் அமைதியாக நிறுத்தப் பட்டிருக்கும் அப்பாவி வாகங்களுக்கும்தான். இதில் என்ன ஆச்சர்யம் என்றால் இந்த வாகனங்களுக்கு வாயொன்று இருந்திருந்தால் அதன் புலம்பல்கள்களை கோர்வையாக்கி பத்தி பத்தியாக எழுதிக் கொண்டே இருக்கனும்.

-- அதிரைநிருபர் குழு

 
அன்பு நிறைந்த அ. நி .வாசகர்களே !

இந்தப் படத்தைப் பார்த்து நகைச்சுவை உணர்வோடு உங்கள் கருத்து / கவிதை குதிரையை தட்டி விடுங்களேன்!




-- M.S.M. ராஃபியா

30 Responses So Far:

அதிரை முஜீப் said...

இதே கார்பார்கிங் பிரச்சினை உள்ள துபையில் தான் ஈமானை எங்கேயோ பார்க் செய்த இந்த படுபாவிகளை பாரீர்!

http://www.youtube.com/watch?v=7jG57Uc8-SY

அதிரை முஜீப் said...

வேர் விட்ட மரம் கண்ட மனிதா! நீ,
கார் விட்ட மரம் கண்டாயா!.

அரசன் பாரியோ முல்லைக்கு தேரைத் தந்தான்!
அரச மரத்திற்கோ யார் இந்த காரைத் தந்தான்!.

இதயத்திற்குள் அம்புவிட்ட காட்சியைக் கண்டேன் முன்பு!
கார் இயந்திரத்தின் இடதிற்குள்ளே,மரக்கம்பைக் கண்டேன்,ஏன் இந்த வம்பு!.

காருக்குள் மரம் வளர்ந்ததா? இல்லை மரத்துக்குள் கார் படர்ந்ததா?.
ஆலும் வேலும் பல்லுக்குறுதியா!இல்லை காரும் வேரும் பல்லுக்குறுதியா!

காடு சார்ந்த படிப்பு படித்தால் அது IFS ஸாம்!.
காரு சார்ந்த படிப்பு படித்தால் அது Eng.(Mech) ஆம்!

இது இரண்டையும் படிக்காததால்,இந்த சமுதாயம் இதுபோல் தான் விபத்திலானதோ?.

நீ கண்டதும் பொய்! மர மண்டையும் பொய்!
இனி ஓரு கோடாரி செய்வோம்! கிளைபடர்ந்த மரத்தை வெட்டவல்ல!.
தடையாய் இருக்கும் காரின் தகரத்தை வெட்ட!.

இத்துப்போன காரின் தகரத்திற்கே, இத்தனை வீம்பா?
பத்துப்பேரை தயார் செய்! சமுதாயக் கம்பாய்!.

சைரன் வைத்த காருக்குள்ளே, முஸ்லிம்சார் போனால், சமுதாயநலனாம்!
வேரு விட்ட மரதிற்குள்ளே, மரத்தின்சார் போனால் சமுதாயகேடாம்!.

ஆழம் விழுதுபோல் அத்தனையையும் படி!
இதுதான் முஜீப்.காமின் சரமாரி வெடி!

எங்களுக்கும் கவிதை வரும்ல! .........

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்பவே சொன்னேன் கயிறு கட்டி இழுத்துகிட்டு போகும்போது கொறிச்சுக் கொட்டிகிடே போகாதேன்னு சொன்னேனே இப்போ பாருங்க அன்னைக்கு விட்டுட்டுப் போன காரே வேலியாக வளர்த்து எடுத்திருக்கும் ஆலமரம்...

இதே கார் இன்று
துபாய் சாலையோரம்
நிறுத்தப்பட்டிருந்தால் நிறைய
ஒட்டப் பட்டிருக்கும்
அபராத நோட்டீஸ் !

இதே கார் இன்று
சென்னைச் சாலையோரம்
நிறுத்தப்பட்டிருந்தால் நிலையான
சேரிகளின் குடிலாகியிருக்கும்
அங்கே கூக்குறலோடு !

இதே கார் இன்று
நமதூரின் தெருவோரம்
நிறுத்தப்பட்டிருந்தால் வதந்திகள்
ஊர்சுற்றி வந்திருக்கும்
அங்கே பேய் இருபதாக !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சமுதாய புரட்சிகவி அதிரை முஜீப், வீரிட்டு எழும் வார்த்தைகளில் ஆங்காங்கே மட்டுமல்ல எங்கும் தெறிக்கிறது உங்களின் ஆதங்கம்... விழித் தெழுவோம் கல்வியால் சாதித்து காட்டுவோம் மேம்பட்ட அதிரைச் சமுதாயத்த்தை !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிந்தனையை உசுப்பிவிட சித்திரம் தந்த எங்கள் MSM(r) Senior அவர்களுக்கு நன்றிகள் !

sabeer.abushahruk said...

எத்தனைதான் 
மனிதன்
இரும்புகொண்டு செய்தாலும்
அத்தனையும்
தகர்க்கும்
ஆற்றல் மிகு இயற்கை!

தான் வளரும் பார்க்கில்
தனியொரு கார் பார்க்கிங்...???
விட்டுக்கொடுக்க
வேர்களென்ன முடக்கப்பட்ட முஸ்லிமா?
ரேடியேட்டர் நீர் குடித்தும்
ஊடுருவும் உலோகத்தை!

இன்னும் உயரும்
எண்ணியது எட்டும்வரை!

யார் வீட்டுக் கார்
யார் வீட்டில் பார்!

Zakir Hussain said...

//ரேடியேட்டர் நீர் குடித்தும்
ஊடுருவும் உலோகத்தை!// By Sabeer

அறிவியலும் தமிழும் ஒன்றாக இருக்கும் ஒரு இடம்

//இத்துப்போன காரின் தகரத்திற்கே, இத்தனை வீம்பா?// by Mujeeb

simply superb

Yasir said...

சகோ.முஜிப்பின் கவிதை உடம்பு,உயிர் சிலிர்க்க வைத்தது...சகோ.அபுஇபுராஹிம் சொன்னதுபோல் விழித்தெழுவோம்...வேரறுப்போம்...தடைகளை

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பினிய சகோதரர் முஜீப்,

அற்புதமான வரிகள், உண்மையில் உள்ளதை அதிர வைக்கிறது. தங்களின் விழிப்புணர்வு கவிதைக்காக.வாழ்த்துக்கள்

//காடு சார்ந்த படிப்பு படித்தால் அது IFS ஸாம்!.
காரு சார்ந்த படிப்பு படித்தால் அது Eng.(Mech) ஆம்!

இது இரண்டையும் படிக்காததால்,இந்த சமுதாயம் இதுபோல் தான் விபத்திலானதோ?.//

உங்களுடன் சேர்ந்து நானும் கேட்கிறேன் இந்த கேள்வியை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாத்தி யோசிக்கிற மக்களை யாரையும் இன்னும் கானோமே... எல்லோரையும் இந்த Year கடைசின்னு ஒரு கரடு முரடு வழியில் இருப்பதாலோ என்னவோ... சரி சரி சீக்கிரம் வாங்கப்பா !

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
துருபிடித்த இரும்பை துளைத்து துளிர்விட்ட மரம்!
தளர்ந்திட்ட மனங்களுக்கு உரம்.
தடை தாண்டும் இளைஞனா இந்த மரம்?
தாம் வளரும் பாதையில்,
உபாதயாய் எதுவரினும் மேல் நோக்கி வளர்வதே நோக்கம்.
இந்த வளர்சிக்கு ஏன் மனிதா இன்னும் தயக்கம்.?
ஆறாரிவு என்பது சிறப்பல்ல சிந்திக்காவிட்டால்!
தடை உடைக்கும் துணிவும்,
உரிமை கேட்டு பெரும் உணர்வும்,
தடுத்தால் எடுத்து கொள்ளவேண்டிய ஆவேசமும்,
இந்த இந்த மரத்திடமிருந்து பார்த்து பழகு,
மரமண்டையாய் இல்லாமல்அறியாமை இருளிலிருந்து விலகு. .

crown said...

sabeer சொன்னது…
தான் வளரும் பார்க்கில்
தனியொரு கார் பார்க்கிங்...???
விட்டுக்கொடுக்க
வேர்களென்ன முடக்கப்பட்ட முஸ்லிமா?
------------------------------------------------------
அதானே?

Yasir said...

கவிக்காக்கா...சகோ.கிரவுன் என்ன இப்படி கலக்கீபிட்டீங்க...அருமை அருமை....நாங்களும் யோசிச்சுகிட்டு இருகோம்ல...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இனிமே சொல்லனுமாக்கும் கவியும்(காக்கா) கிரீடமும்(தம்பி) இந்த மரத்தின் உச்சியை பார்க்காமல் விடமாட்டார்கள்.

Yasir said...

அபு இபுராஹிம் காக்காவின் துபாய்/சென்னை/அதிரைப்பட்டினம் /கம்பெரிசன் அழகு

//சேரிகளின் குடிலாகியிருக்கும்
அங்கே கூக்குறலோடு // உண்மை காக்கா..வீராணம் குழாய்க்குலேயே குடும்பம் நடத்தும் கூட்டம் இந்த காடிலேக் (சும்மா !!! அனுமானம் தான் ) காரை விட்டு வைக்குமா ?

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்!

நமக்கும் சேர்த்து இங்கு கலக்குகிறார்கள்
நம் சகோதரர்கள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சாஹுல் காக்கா இதுதான் கவிதையே !

கவிதை நமக்கு
ரொம்ப தூரம்!

சேர்த்து இங்கு
கலக்கு கிறார்கள்
நம் சகோதரர்கள்

ரொம்ப்ப சிம்பிள் காக்கா இதுக்குபோய் புளிய மரத்தடியிலேயே இருக்கலாமா... வாங்க கார் ஓட்டுவோம்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//Shahulhameed சொன்னது…

கவிதைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்!//

கவிதை தெரியாது என்று சொல்லிட்டு தப்பிச்சிட்ட விடுவோமா.. நச்சுண்டு உங்க ஸ்டைலில் கருத்துச்சொல்லிட்டு போங்க ஷாஹுல் காக்கா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது மூலிகைப்பெட்ரோல ஓடுர கார் ஷாஹுல் காக்கா, எந்த நாட்டு டிரைவிங் லைசன்ஸும் தேவையில்லை, சும்மா வந்து கார் ஓட்டி கவிதை இல்லாட்டி கருத்து எழுதிட்டு போங்க காக்கா.

ஜலீல் நெய்னா said...

காருக்கு சொந்தக்காரர் யார்?
சுற்றுப்புர சூழலுக்கு அதி..முக்கியத்துவம் தந்துள்ளார்,இதேபோல் அரபு பூமியில்
இருக்கும் கார் பார்க்கிங் எல்லாம் மரங்களை நட்டோமானால் சுற்றுப்புர சூழல்
பாதுகாக்கப்படும் அல்லவா.

Shameed said...

ரொம்ப்ப சிம்பிள் காக்கா இதுக்குபோய் புளிய மரத்தடியிலேயே இருக்கலாமா... வாங்க கார் ஓட்டுவோம்

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆகா கார் ஓட்ட சொல்லி தருவது போல் கவிதை ஓட்ட அழக சொல்லிடிக
ஆனா எழுத தான் முடியலே
ஒருவேளை புளியமரத்தடி ஓரமா உட்காந்த வருமோ கவிதை!
(நாம புளியமரத்தை விட்டாலும் நீங்கள் விடுவதாக தெரியவில்லை)

Shameed said...

//கவிதை தெரியாது என்று சொல்லிட்டு தப்பிச்சிட்ட விடுவோமா.. நச்சுண்டு உங்க ஸ்டைலில் கருத்துச்சொல்லிட்டு போங்க ஷாஹுல் காக்கா//

காருக்கு மரம் காவலா?
மரத்துக்கு கார்
காவலா?
யாருக்கு யார்
காவல்
இதை யார் தான்
சொல்வாரோ?

போதுமா தம்பி தாஜுதீன் .
(அபு இப்ராகிம் கவனிக்கவும் கொஞ்சம் கவிதை மாதிரி தெரிதா

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா மற்றும் கிரவ்ன் : என் வேலைய செய்துட்டேன் அப்புறம் புதுக் கவி வந்திருக்காக... அப்புறம் உங்க பாடு !

என் கருத்தைச் சொல்லனும்ல.. ஆஹா ! சாஹுல் காக்கா மாத்திய் யோசிக்கச் சொன்னது இதுக்குத்தான் மெய்யாலும் மரத்திற்குத்தான் கார் காவல் (உலக வெப்ப மயமவதை சொல்லாமல் சொல்லும்) கவிதையே ! :))

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ஷாஹுல் காக்கா இதை இதை இதைத் தான் எதிர்ப்பார்த்தோம். ஆர்வமூட்டினால் எல்லா திறமையும் தானா வரும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

வேண்டுகோளை ஏற்று கவிதை தந்ததுக்கு நன்றி காக்கா.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

இது இததான் உசுப் பேத்துறதுன்னு சொல்றதா ?

Meerashah Rafia said...

அதோ பார் காரு.
காருக்குள்ள யாரு?

எங்க மரத்து வேறு.
அங்க என்ன செய்றாரு?

இஞ்சின பிரிச்சி மேயிராறு!!!

ஏதோ என் வயசுக்கு ஏற்ற கவிதை எழுதியாச்சு...

மு.செ.மு.மீரஷாஹ்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

எல்லாம் சரி கருத்துக்கள், கவிதைகள் வந்தாச்சு, எங்கே MSM(N) & MSM(R) இருவரையும் காணமுடியவில்லை?

முடிவுரையாவது சொல்லீட்டு போகலாமலே?

RAFIA said...

தேன்! அத்தனையையும் ரசித் தேன்! நம் சகோதரர்களின் எழுத்தாற்றல்களை கண்டு வியந் தேன்!இந்த சின்ன புகைப் படத்தில் அப்படி என்ன கற்பனைக் குதிரையை
தட்டி விடப் போகிறார்கள்...கூடுதல்   பட்சம் தம்பி கிரவுன் பிடிச்சமாதிரி ..".மரம் நின்றாலும் பார்க்!கார் நின்றாலும் பார்க் கிங்...- " கொஞ்சம் கூடுதல் நேரம் பார்க் செய்துட்டான்களோ.."-..என்ற மாதிரி கமண்ட்ஸ் தான் வருமென்று இலகுவாக எடை போட்டு விட்டேன், அப்பப்பா! தேன் கூட்டை கலைத்தது போலல்லவா ஆகிவிட்டது,பேஷ் !பேஷ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(rm)junior: இப்படி அத்திப் பூ பூத்த மாதிரியெல்லாம் வந்துட்டு போகப்படாது... இருக்கும் திறமையை அடிக்கடி வந்து பகிர்ந்துகிட்டே இருக்கனும் நாங்கதான் இருக்கோம்ல, தட்டிக் கொடுக்கவும், தாலாட்டவும், மெருகேற்றவும், ஒற்றுமையாக !

வந்திடு சிறுசு, இங்கே பெருசுன்னு யாரும் சொல்லிக் கொள்வதில்லை !

Meerashah Rafia said...

@ சகோ அபுஇபுறாஹிம் :


நானும்
என்றோ மலரும் அத்திப்பூ போலில்லாமல்
தினம் உதிரும் மல்லிப்பூவாக இருந்து
ஒரு கமன்டையும் , கட்டுரையையும் அவிழ்த்துவிட நினைக்கிறேன், ஆனால்........

கணினியை கையில் குடுத்து குனிய வச்சி குத்துறாங்க..

நிமிரும் நேரம் குறிகிய தருவாயில் இருக்கிறது,
நிரூபருக்குள் வரும் தருணம் அருகாமையில் இருக்கிறது.

இன்ஷா அல்லாஹ் சந்திப்போம் காக்கா..

MSM(MR)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு