Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தர்கா - கவிதை‏ 16

அதிரைநிருபர் | December 14, 2010 | , ,

இது வழிபாட்டுத்தலமல்ல
வழிகேட்டில் தள்ளும் தலம்.
நிர்வகிப்பவர்கள் நீதிபதி அல்ல தீர்ப்பு சொல்ல.
அவர்களே தண்டனை எதிர் நோக்கியுள்ள குற்றவாளிகள்.
வழிகாட்டுகிறேன் ,ஓதி பினி ஓட்டுகிறேன் என்பவர்கள்
மருத்துவரும் அல்ல.
மகாசக்தி படைத்தவர்களும் அல்ல.
அவர்கள் ஸைத்தானின் முகவர்கள்.
அங்கே அடங்கி இருக்கும் மஹான்களும் ,
அல்லாஹ்வின் சாதாரண அடிமைகளே!
அவர்களும் நாளை நாயனிடம் திரும்புபவர்கள்.
தர்கா நழைவாயிலின் முடிவு
நரகத்தின் நுழைவாயிலின் ஆரம்பம்.
தர்கா பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம் அல்ல,
தகர்த்தெரியவேண்டியத் தளம்.

--crown


சில நாட்களுக்கு முன்பு சினிமா என்ற கேடுகெட்ட துறையின் மூலம் எல்லோரையும் முட்டாள்களாக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகனின் பிறந்த நாளுக்கு முஸ்லீம் என்று பெயர் வைத்துள்ள சிலர், நாகூர் தர்காவில் சிறப்பு பிரர்த்தனை செய்ததாக ஊடகங்களில் செய்தியாக வந்து நம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இத்தருணத்தில் சகோதரர் தஸ்தகீர் நமக்கு பதிவுக்காக அனுப்பிய தர்கா கவிதையை இப்போது பதிவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

-- அதிரைநிருபர் குழு

புகைப்படம்: நன்றி அதிரை முஜீப்

16 Responses So Far:

Unknown said...

சாட்டையடி ...இதை தர்ஹவில் ஒட்டி வைக்கணும் ....

sabeer.abushahruk said...

இது, இந்த தைரியமும் தெளிவான சிந்தனையும்தான் தம்பி க்ரவுனின் ப்ளஸ் பாயின்ட்ஸ்.

//தர்கா பாதுகாக்கபட வேண்டிய பொகிஸம் அல்ல,
தகர்த்தெரியவேண்டியத் தளம்.//

இதை ஆணித்தரமாக நான் வழிமொழிகிறேன். இந்த பகிரங்க அறிவிப்பால் க்ரவுனுக்கு யாரும் தர்கா விரும்பிகள் எதிர்ப்புத் தெரிவித்தால் அதை "வழி: சபீர் " என்று அனுப்பட்டும்.

//தர்கா நழைவாயிலின் முடிவு
நரகத்தின் நுழைவாயிலின் ஆரம்பம்//

...க்ளாஸ் க்ரவுன்.

இந்த முழக்கத்திற்காக உஙகளுக்கு பொன்னாடை போர்த்தி ( பச்சை நிறமல்ல) போர்த்தி கெளரவிக்கிறேன்.

கீப் இட் அப் தம்பி க்ரவுன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவுன்(னு): அது ஒரு காலம்(டா)ப்பா ! கலேஜ் திடலில் ஃபுட்பால் விளையாடிவிட்டு செடியன் குளத்தில் கை கால் கழுவிட்டு காட்டுப் பள்ளி தர்கா வழி கடந்துதான் வீடு வந்து சேரனும், அந்த தருனத்தில் மாலை இருட்டோடு இரவை இருள் கவ்விக் கொண்டிருந்த நேரம், உன் (பெரியப்பா விட்டு)காக்கா கால்பந்து விளையாட்டில் கிள்ளாடி வழக்கமாக காலில் பந்தை தட்டி தட்டி வந்து கொண்டிருக்கும்போது அடித்த வேகத்தில் அது அவுலியாப் பக்கம் உள்ளே சென்றது ! அதை எடுக்க ஓடியபோது, தடுமாறி கீழே விழுந்து விட்டேன் அப்போது என்னை அங்கே பிடித்து வைத்தனர். என்னோடு வந்த நன்பர்கள் எனது வாப்பிச்சாவிடம் (அல்லாஹ் ரஹ்மக்கும்) சென்று சொல்ல அதுக்கு அவங்க வரிஞ்சு கட்டிக் கொண்டு அங்கே வந்து என்னோட பேரனை பிடித்து வைத்த அவ்லியாவை ஒருகை பார்த்துட்டு வர்ரேன் கிளம்பி வந்து பிடித்து வைத்த நபர்களை பாடு படுத்தி எடுத்துட்டாங்க ஒரு வகையா ! அத மறக்க முடியல(டா)ப்பா ! அதுக்கப்புறம் அந்தப் பக்கம் நடைக்கு தடை போடப்பட்டது எனக்கு(ம்)!

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆரம்ப வரிகளோ 10000 VOLTAGE ல் வந்து பாய்கின்றது.
இது கவிதையா அல்லது கரண்டா ?
என்று அதிரை கவி சபீர் அவர்கள் தான் விளக்கம் தரவேண்டும்.

Meerashah Rafia said...

இனி, வர்ற வருஷம் காதலர்கள் தினத்திற்காகவும் , ஏப்ரல் ஃபூல் தினத்திற்காகவும் சந்தன கூடு எடுத்து கந்தூரி கடைல வாழ்த்து அட்டைகள தொங்கவிட்டு, ஜோடியாக வருபவர்களுக்கு கொஞ்சம் தூக்கலா பொக போட்டு கைல கயிற கட்டி அனுபிவச்சாலும், அதற்கு தமிழக அரசு இலவச ரயில் விட்டாலும் ஆச்சரியபடுறதிற்கு இல்லை.

மு.செ.மு./ M.S.M. மீராஷாஹ் ரஃபியா
ஜெத்தா, சஊதி அரேபியா.
www.meerashah.in

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தர்கா பக்கமிருந்த கருத்தை மாற்றிட்டேன்னு யாரும் pin-run போடதிருக்கும் வரை... MSM-Meerasha, சுய வலைத் தளம் கண்டேன் அருமையாக இருக்கிறது வேலைப்பாடுகளின் தொகுப்பு.. தனியாக எழுதுகிறேன் PINனால்.

Meerashah Rafia said...
This comment has been removed by the author.
Meerashah Rafia said...

நன்றி அபு இப்றாஹிம் அவர்களே.
என் வலைத்தளத்தின் கண்டு ரொம்ப கண்ணு வச்சிராதீங்க.. அப்புறம் தஞ்சாவூர் ரெட்டமஸ்தான் தர்கால 101 ருபாய் குடுத்து 'டொமைன் நேம்' பேர்ல பாதிஹா ஓதி லேப்டாப் மேல பன்னீர் தெளிச்சி சர்வர் மேல சந்தணம் பூசி பாவாவ சுத்திபோட சொல்லவேண்டி இருக்கும். இதுக்காக சவுதி கஃபீல்ட(ஸ்பான்சர்) எக்ஸிட்-ரி என்டிரிலாம் வாங்க முடியாது. அவன்கிட்ட தர்கா என்றால் என்னனு சொல்லி புரியவச்சிட்டா , அப்புறம் என்னை ஹராமினு சொல்லி சமாதி கட்டி மேலோகத்துக்கு ப்ரீ டிக்கெட் வாங்கி கொடுத்துடுவான் .

மு.செ.மு./ M.S.M. மீராஷாஹ் ரஃபியா
ஜெத்தா, சஊதி அரேபியா.
www.meerashah.in

Yasir said...

வாவ்...இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது வார்த்தைகளா அல்லது தர்ஹாவில் மீது வீச விஷேசமாக தயாரிக்கபட்டு இருக்கும் ஹைட்ரஜன் குண்டுகளா...அவ்வளவு கனல்,கோபம்,ஆதங்கம் -பின்னி பெண்டு எடுத்துண்டீங்க தர்ஹா பேர்வழிகளை...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//அவர்களே தண்டனை எதிர் நோக்கியுள்ள குற்றவாளிகள்.//

சகோதரர் அஸ்ஸலாமு அலைக்கும்.

அற்புதமான வரி, செய்வது குற்றம் என்று அறிந்தே இன்னும் சிலர் இன்னும் தர்கா வழிபாட்டில் மூழ்கியுள்ளார்கள்.

தொடர்ந்து இது போன்ற விழிப்புணர்வு ஆக்கங்களை எழுதுங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

// Shahulhameed சொன்னது…
ஆரம்ப வரிகளோ 10000 VOLTAGE ல் வந்து பாய்கின்றது.
இது கவிதையா அல்லது கரண்டா ?
என்று அதிரை கவி சபீர் அவர்கள் தான் விளக்கம் தரவேண்டும்.//

இந்த 10000 voltage வரிகள் கொண்ட shock அடிக்கடி நம் மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கனும் ஷாஹுல் காக்கா. இல்லாட்டி மேல உள்ள புகைப்படத்தைப் போன்று நாளுக்கு நாள் செய்தித்தாளில் செய்தியாக வந்து நம்மை பீஸ் போன பல்பு போல் ஆக்கிவிடும் காக்கா.

sabeer.abushahruk said...

ஷாகுல்,
இது
கவிதையல்ல
கதைத்துவிட்டுப் போக,
கரன்ட்டுதான் எனினும்
க்ரவுன்
கலக்கலா கையான்டிருக்கார்.

இது
அடக்கி வைத்த
அவுலியாவை
போர்த்தி வைத்து
ஃபாத்திஹா ஓதும்
மடமை விரட்டும்
முதன்மைக் கரன்ட்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே Current-டாதான் இருக்கும் போல !

அதுசரி எல்லா கவிதையையும் ஊடுருவி பிரித்து பிரித்து கருத்தாயும் கிரவ்ன்(னு) எங்கே இன்னும் கானோமே !?

Shameed said...

sabeer சொன்னது…
//ஷாகுல்,
இது
கவிதையல்ல
கதைத்துவிட்டுப் போக,
கரன்ட்டுதான் எனினும்
க்ரவுன்
கலக்கலா கையான்டிருக்கார்.

இது
அடக்கி வைத்த
அவுலியாவை
போர்த்தி வைத்து
ஃபாத்திஹா ஓதும்
மடமை விரட்டும்
முதன்மைக் கரன்ட்.//

அஸ்ஸலாமு அழைக்கும்
crown னின் கரன்ட் கவிதைக்கும் கவிதையில் அழகாக விளக்கம் அளித்த அதிரை கவி சபீர் அவர்களே எங்கே உங்கள் அருமை மாச்சான்ஸ் ஜலால் (அதாங்க நம்ம ஹாஜி) ஆளை காணோம்.

Shameed said...

தாஜுதீன் சொன்னது…
//இந்த 10000 voltage வரிகள் கொண்ட shock அடிக்கடி நம் மக்களுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கனும்//

அஸ்ஸலாமு அழைக்கும்
நோய் முத்திட்டா shock கொடுத்து தான் சரி பண்ணனும்
அதற்கு வேண்டி நம் அதிரை நிருபர் குழு சிறப்பு குழு அமைத்து அடிகடி இது போன்று shock கொடுக்க வேண்டும்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும்
மட்டுமென்று உள்ளங்களை
கட்டுக்குள் வைத்திருந்தால்
கல்லறைப் பக்கம்
காத்திருக்க வேண்டியதில்லை !

இவைகள் அடியோடு
இடித்து ஒழிந்திட
இன்னும் அடிமேல் அடி
கொடுக்கத்தான் வேண்டும் !

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு