ஒரு மரம் ஒரு மலையின்
உச்சியில் ஊஞ்சலாடியது .......
அதோ எதிர்படும் திசையில்
வசந்த காலக்காற்று மரத்தை
நெருங்கிகொண்டிருந்ததது..
சில கணங்களில் மரத்தை வருடியது
உதிர்ந்த இலைகள் எல்லாம் குயில்களாக மாறி
முன்படும் திசையெல்லாம் வசந்தம் வரும் நற்செய்தியை குதூகோலத்துடன் கூவி கூவி
பறந்தது ........
அதே மரம் ,அதே மலை
ஆனால் இப்பொழுது எதிர் திசையில் கோடைகாலக் காற்று நெருங்கியது ...
உதிர்ந்த இலைகள் எல்லாம் அன்னப் பறவைகளாக
மாறி நீரில் கொற்றப்பொய்கை ஆடியது
நீரில் உள்ள மீன்களிடம் கோடை வருகிறது
இடம்பெயருங்கள் என நன்மாராயம் ஓதியது......
அதே மரம்,அதே மலை
மழைக்கு முன் வரும் அழகிய தென்றல்
மரத்தை தீண்டியது ...
உதிர்ந்த இலைகள் காளான் குடையின் விதைகளாய் மாறி மண் நோக்கி விறைந்தது
மழையிலிருந்து பொன்வண்டுகளை காப்பதற்காக .....
அதே மரம் ,அதே மலை
எதிர் திசையில் குளிர்காலக்காற்று
மரத்தை நெருங்கியது, இலைகள் உதிர்ந்தன ..
உதிர்ந்த இலைகள் எல்லாம் வண்ணத்துப் பூச்சிகளாக மாறியது
வாழ்வின் சுகமான நினைவுகளை தன் இறக்கையில்
ஓவியமாக சுமந்து
கடும் குளிரை வெல்லப்பறந்தன வண்ணத்துப் பூச்சிகள்
நம்மை போல........
---அப்துல் ரஹ்மான்
----harmys-----------
28 Responses So Far:
Harmys,
சமவெளிப் பசுமையில் ஒற்றையடிப்பாதையில் உற்ற துணையுடன் நடப்பதைப்போல சுகமாய் நீள்கிறது உங்கள் வர்ணனை.
உங்களுக்கு இயற்கை வர்ணனை ரொம்ப நல்லா ரசனையா வருது. "நம்மைப் போல" என்று முடிக்கும்போது உங்கள் செய்தி விளங்குகிறது, எனினும் செய்தி சொல்லும் இடத்தில் இன்னும் சற்று அழுத்தம் தரலாம் என்பது என் அபிப்ராயம்.
பூக்கள், தண்ணீர், நீர்நிலை, பருவமாற்றங்கள் வரிசையில் அடுத்து?
க்ரவுன்: மூடப்பழக்க வழக்கங்கள் எங்கே?
வழ்த்துகள் அப்துர்ரஹ்மான்.
ஏரிக்கரை ஓரத்தில் உடகார்ந்து வாசித்த உணர்வு கொடுக்கிறது...
மொன்மையின் சாயல் மேலோங்கியிருப்பதுதான் தம்பி அப்துல் ரஹ்மானின் ஸ்பெஷலே !
தொடருந்து கொண்டிருக்க வேண்டும் இவ்வகை வருடல்கள்...
வாழ்த்துக்கள் !
கவிக் காக்கா: இந்த டிசம்பர் ன்னு ஒரு மாதம் ஏன் வருகிறது !?
//கவிக் காக்கா: இந்த டிசம்பர் ன்னு ஒரு மாதம் ஏன் வருகிறது !?//
எனக்கும்தான் எரிச்சலா வருது? இன்னுமா காசு எண்ணுறாங்க? கலிஃபோர்னியாவ்லே எல்லாம் சில்லறையாத்தான் பே பண்ணுவாங்களோ? (அப்துர்ரஹ்மான், உங்க க்லாஸ்ல ஓ. பி. அடிக்கிறதுக்கு சாரி. நாங்க இங்கே ஒரு தொடர் எழுதுகிறவரைத் தேடுறோம்)
கவிக் காக்கா: அப்துர்ரஹ்மானின் நந்தவனத்தில் உட்கார்ந்து பேசாம வேற எங்கே உடகார்ந்து பேசப் போறோம்... !
sabeer சொன்னது…
க்ரவுன்: மூடப்பழக்க வழக்கங்கள் எங்கே?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா மூடப்பழக்கவழக்கமாய் இல்லை,காரணம் அந்த் பழக்கம் சின்ன வயசிலேயே என்னிடமிருந்து ஒழிய அல்லாஹ் அருள்புரின்சிட்டான் அல்ஹம்துலிலாஹ்.(சும்மா ஒரு தமாசு) காக்கா பணி சுமை வரும் என்றுதான் தர்கா பற்றி கவிதை அனுப்பினேன்,
நீர்வாகிகளிடம் தான் கேட்கனும். அய்யா மார்களா எங்கே என் தர்கா கவிதை?
சலாம் காக்காமார்கள் .........
//பூக்கள், தண்ணீர், நீர்நிலை, பருவமாற்றங்கள் வரிசையில் அடுத்து?//
தெரியல காக்கா!
//மொன்மையின் சாயல் மேலோங்கியிருப்பதுதான் தம்பி அப்துல் ரஹ்மானின் ஸ்பெஷலே !//
Harmys,
//சமவெளிப் பசுமையில் ஒற்றையடிப்பாதையில் உற்ற துணையுடன் நடப்பதைப்போல சுகமாய் நீள்கிறது உங்கள் வர்ணனை.//
படிக்க சந்தோசமாக இருந்தது ......
தஸ்தகீரை வன்மையாக(உரிமையாக ) கண்டிக்கிறேன் ...வந்துட்டு
ஒன்னும் சொல்லாம போன எப்படி ?
”மச்சுபிச்சு(Machu Picchu)” மலை சிறப்பை சில நாள்களுக்கு முன்னர் படித்தேன்..அந்த மலையின் காடுகள் நிறைந்த சமவெளிக்குள்..கவி காக்கா சொன்னதுமேல் உற்ற துணையுடன் // தப்பா நினைக்காதிங்க மனைவியுடன் தான் :( // நடந்த உணர்வை கொடுத்தது உங்கள் கவிதை
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல கவிதை ,படிக்க மனதுக்கு இதமாக இருந்தது.
Yasir சொன்னது…//அந்த மலையின் காடுகள் நிறைந்த சமவெளிக்குள்..கவி காக்கா சொன்னதுமேல் உற்ற துணையுடன் தப்பா நினைக்காதிங்க மனைவியுடன் தான் //
அஸ்ஸலாமு அழைக்கும்
உற்ற துணையுடன் நடந்தால் மகிழ்ச்சி தான்,
மற்ற துணையுடன் நடந்தால் இகழ்ச்சி தான்!!!
Shahulhameed சொன்னது…
// இதமாக இருந்தது //
சாஹுல் காக்கா: இப்படி நந்தவனம் பக்கம் அப்படியே அந்தெ மெட்ரோ பக்கமெல்லாம் வந்தீங்க சரி... எப்போ உங்களின் ஆக்கம்(மாகிப்)போடப் போறீங்க ரக்கெட்ட் விட்டதுக்குப் பின்னாடி ஆய்வுத் தகவல் வந்துச்சா ? இல்லே.. வேவு எதாவது பார்க்கனுமா சொல்லுங்க செஞ்சுடுவோம் பொதையல் மேட்டரா இருந்தா கலிஃபோரினியாவுக்கு தகவல் கொடுங்க !
அபுஇபுறாஹிம் சொன்னது…
//சாஹுல் காக்கா: இப்படி நந்தவனம் பக்கம் அப்படியே அந்தெ மெட்ரோ பக்கமெல்லாம் வந்தீங்க சரி..//
அஸ்ஸலாமு அழைக்கும்
நேரமில்லை
( உம்மாடி இந்த வார்த்தையை இனி போடா கூடாதுமா அலாவுதீன் காகா போட்டகலே "நேரமில்லை" அத படிக்கவும் கொல நடிங்கி போச்சி)
இனிமே நேரமில்லைன்னு சொல்லவே மாட்டேன்.
அபுஇபுறாஹிம் சொன்னது…
//கலிஃபோரினியாவுக்கு தகவல் கொடுங்க//
அஸ்ஸலாமு அழைக்கும்
அவுக கணக்குலே (வீக்கோ)பிசிய இருக்காக டிஸ்டப் செய்ய வேணாமுன்னு நினைக்கிறேன்
முதலில் Harmy [ அப்துல் ரஹ்மான் ] உங்கள் கவிதையில் இயற்கையை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். இயற்கையை எனக்கு மெத்த பிடிக்கும், இயற்கையை ரசிப்பவர்களையும்.
To Crown...
///நீர்வாகிகளிடம் தான் கேட்கனும். அய்யா மார்களா எங்கே என் தர்கா கவிதை? ///
நார்சா பொட்டி சேத்து அனுப்பாமெ இப்படி கேட்கலாமானு அபு இப்ராஹிம் கேட்க சொன்னார் [ ஏதோ நம்ம நாலெ முடிஞ்ச "சின்டு' ]
//நார்சா பொட்டி சேத்து அனுப்பாமெ இப்படி கேட்கலாமானு அபு இப்ராஹிம் கேட்க சொன்னார் [ ஏதோ நம்ம நாலெ முடிஞ்ச "சின்டு' ]//
அதானே (ஜாஹிர் காக்கா), நார்சா இல்லாம சும்மா அப்படியே போடு போடுன்னு அனுப்பினா எப்படி !? ஆனா நாங்க நார்ஷாவில் கைவைக்க மாட்டோம் ! ஏன்னா பொவுரத்தான் எங்க பெரிசுங்க எந்திரிப்பாங்க ! :))
crown சொன்னது…
//நீர்வாகிகளிடம் தான் கேட்கனும். அய்யா மார்களா எங்கே என் தர்கா கவிதை?//
அஸ்ஸலாமு அழைக்கும்
எந்த தர்ஹா விற்கும் நேராம நேரா அதிரை நிருபருக்கு அனுப்பிய தர்ஹா கவிதையை எப்போது வெளி இடுவீர்கள்!
அஸ்ஸலாமு அழைக்கும்
மிகவும் அற்புதமான வரிகள்...ஆழ்ந்த அனுபவத்தில் எழுதப்பட்ட கவிதை
Shahulhameed சொன்னது…
// எந்த தர்ஹா விற்கும் நேராம நேரா அதிரை நிருபருக்கு அனுப்பிய தர்ஹா கவிதையை எப்போது வெளி இடுவீர்கள்! //
தர்ஹாக்களைத்தான் புறக்கனிக்கிறோம் ஆனால் "தர்ஹா கவிதை"யை அல்ல, நிச்சயம் பதிவுக்குள் பளிச்சிடும் இன்ஷா அல்லாஹ் !
அப்துர்ரஹ்மானின் சோலையில் உட்கார்ந்து பேசுவதே அலாதி உவகைதானே ! (கவிக் காகா / சவுதி (சாஹுல்)காக்கா)
harmys சொன்னது…
தஸ்தகீரை வன்மையாக(உரிமையாக ) கண்டிக்கிறேன் ...வந்துட்டு
ஒன்னும் சொல்லாம போன எப்படி ?
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். ஏம்பா அப்துற்றஹ்மான். உம் கவிதையை படித்தபின் மூளையை கசக்கி எப்படி கருத்து எழுதுறதுன்னு யோசிக்கனும். நீபாட்டுக்கும் , நிப்பாட்டாம வர்னனை செஞ்சிட்டு
போய்டுவே உன் முளைக்கு முன் என் முளையெல்லாம் ஒரு மூலைக்கும்
உதவாது.மேலும் கவிதையை உள்வாங்கி எழுதுவதற்குள் தாவு வாங்கிவிடுகிறது.
அதுவும் இங்கே சும்மா கருத்துன்னு உளரி கொட்டிவிட முடியாது.பெரிய ,பெரிய தலைகள்
உள்ள(வர) இடம் இது.சாமானியன் நான் யோசிக்க நேரம் வேண்டும்.மரமன்டையில்
சட்டுன்னு வர மாட்டேன்குது.சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்? சரி இனி
கவிதைபற்றிபார்போம்.
இந்த கவிதையை படித்தவுடன் என் சிற்றரிவிற்குத்தோன்றியது இதுதான்.
மரம் என்பது (போதிமரம்) பள்ளிக்கூடம் இலைகள் எல்லாம் மாணவர்கள் பருவங்கக் மானவனுக்கும் மாறும்.காலச்சுழலில் அவன் கவிஞாகவோ,மருத்துவனாகவோ,கட்டிட கலை நிபுனராகவோ இப்படி பாறிப்போனலும் அந்த பள்ளி அப்படியேத்தான் இருக்கிறது. சின்னப்பயன் வளர்ந்து
சேட்டைகள் அதிகம் செய்தால் ரெக்க முளைச்சுடுச்சுன்னு சொல்றமாதிரி,கிளி வளர்ந்து
எங்கேயோ பறந்துடுச்சின்னு சொல்ற மாதிரி,பூக்களுக்கு ரெக்கை முளைத்தது
எந்தன் தோட்டட்தில்னு கவிஞன் சொல்ற மாதிரி நீ இலைகள் ரெக்கை முளைத்து
அது குயிலாக,அன்னமாக,காளானுக்கு விதையாக உருமாறியதைச்சொன்னதும்,
நான் (என் சிற்றரிவிற்கு) மாணவனாக எண்ணிப்பார்த்தேன், தவறாக இருந்தால் என்பிழை பொருத்தருள்க.பொருந்தி பார்த்து பதில் எழுதேன். மேலும் இறுதி வரி அருமையான் கற்பனை
அது வண்ணத்துபூச்சியாக மாறி பறப்பது.பட்டம் பெற்று வாழ்வின் உன்னத நிலை அடையும் நிகழ்சி அட்டகாசமாய் பொருந்தி போகிறது. சரி எப்படி இப்படியெல்லாம் இயற்கையைப்பற்றி எழுதுகிறாய் எனக்கும் கொஞ்சம் சொல்லி தருவாயா? நானும் எழுதிப்பழகத்தான் கேட்கிறேன்.
//நானும் எழுதிப்பழகத்தான் கேட்கிறேன்//
இது டூ மச், டூ டூ மச், த்ரீ மச், ஃபோர் மச், அன்ட் சோ ஆன் இன்ஃபினிடி மச்.
அபு இபுறாகீம்,
கொத்தக் கற்றுத்தரச் சொல்லி கொக்கும், நீந்தக் கற்றுத்தரச்சொல்லி மீனும் கேட்டால் நீங்கள் பார்த்துக்கிட்டு சும்மாவா இருப்பீங்க?
(அப்துர்ரஹ்மான் நல்லா அனுபவித்து எழுதி இருப்பதும் அதை அப்படியே உள்வாங்கி அ.நி.காரங்க அழகழகான படங்களால் அலங்கரித்து இருப்பதும் குஜாலாத்தான் இருக்கு.)
//அ.நி.காரங்க அழகழகான படங்களால் அலங்கரித்து இருப்பதும் //
அன்பு சகோதரர் சபீர் அவர்களுக்கு,
புகைப்படமும் அப்துல் ரஹ்மான் அனுப்பியிருந்தார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த நந்த வனத்திற்கு வந்த யாசிர் ,ஜாகிர் காக்கா;ஷாகுல் காக்கா,இர்பான் ,
ஆகியோரின் கருத்துக்கள் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது ..நன்றி ..
தஸ்தகீர் ..உன்னுடைய விளக்கமும் அட்டகாச மாய் பொருந்துகிறது .....
கொற்றபொய்கை என்ற வார்த்தையை படித்தவுடன் என்ன நியாபகம்
வருகிறது ?
தாஜுதீன் முடிந்தால் மற்ற இரு படங்களையும் பேஸ்ட் பண்ணவும்
அட கிரவ்ன்(னு) ! அப்துர்ரஹ்மான் இயற்கையை எழுதினால் நீ இயற்கையாகவே எழுதுவியே... இதுல கவிக் காக்கா கேட்டதுக்காக சொல்றேன் ! அந்த மீனை கொத்தாம அப்படியே ஆக்கிடலாமா ! அதான் செய்வோம்ல(ன்னு) சொல்லு(டா)ப்பா !
அஸ்ஸலாமு அழைக்கும்
சில பின்னுட்டங்கள் (என்னுடைய)கவிதைக்கு சம்பந்தம் இல்லாமல் இருந்தாலும் அந்த கவிதை குடைக்கு கீழ் இருந்து எழுதப்பட்டவை என்பதனை இங்கு தெரிவித்து கொள்கின்றேன்
சாஹுல் காக்கா : இத முதல்லையே சொல்லவேயில்லே !!!
///
உற்ற
துணையுடன் நடந்தால்
மகிழ்ச்சி தான் !
மற்ற
துணையுடன் நடந்தால்
இகழ்ச்சி தான்!!!
///
இந்தக் கவிதைக்கு(தானே) ! பின்னால் ஊட்டத்தான் நினைத்தேன் ஆனால் ஊக்குவி(ற்)க்க கவிக் காக்கா துணையோடுதான் இங்கே நடந்தேன்... ஆக எனக்கும் மகிழ்ச்சிதானே !
அபுஇபுறாஹிம் சொன்னது…
//இந்தக் கவிதைக்கு(தானே) ! பின்னால் ஊட்டத்தான் நினைத்தேன் ஆனால் ஊக்குவி(ற்)க்க கவிக் காக்கா துணையோடுதான் இங்கே நடந்தேன்... ஆக எனக்கும் மகிழ்ச்சிதானே !//
அஸ்ஸலாமு அழைக்கும்
உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் அது எங்களுக்கு "நெகிழ்ச்சி"தான்
அதிரை கவிக்கோ அப்துல் ரஹ்மான்,
தங்களின் ஆக்கம் மிக அருமை. கொஞ்ச நேரம் கொடைக்கானலுக்கும், கொஞ்ச நேரம் ராசல் கைமாவுக்கும் (UAE) சென்று வந்ததுபோல் உணர்வு.
//தாஜுதீன் முடிந்தால் மற்ற இரு படங்களையும் பேஸ்ட் பண்ணவும்//
அனைத்துப் புகைப்படங்களையும் பதிந்துவிட முயற்சி செய்தேன், பதிய முடியவில்லை, காரணம் text alignment மாறிப்போகிறது.
தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் ஆக்கங்களை.
Post a Comment