(FACE BOOK)
முகப் புத்தகம்!
இதில் அறிமுகமானவர்களும்,
அறிமுகமில்லாத புதியவர்களும்.அறிமுகப்படுத்திகொள்ளலாம்.
தகவல் பறிமாறவும்,
கருத்து பறிமாறவும் ஆரம்பித்து,
பித்து பிடிக்கும் அளவிற்கு காதல்,
காமம் பறிமாறிக்கொள்ளவும்,
அந்தரங்கம்,அரங்கத்தில் அரங்கேறவும் செய்யும்.
நட்பு குரங்காக வந்து தலையில் ஏறி
பேன் பார்துக்கொண்டே ,
நம் மூளையை உரிஞ்சு விடக்கூடிய அபாயமும் உண்டு.
நமக்குத்தெரியாமலே நாம் களவாடப்படுவதும்,
திருட்டு போவதும் என்னேரமும் நடக்கலாம்.
இந்த முக புத்தகத்திற்கு பல முகம் உண்டு.
நாம் உளவு பார்கப்படுவது நம் கண்னெதிரே தெரியும்
நம்மாள் ஒன்றும் சொல்லவியலாது.
நமக்குத்தெரியாமலும் உளவு பார்க்கும்
ஓற்றர்கள் இந்த இனையங்கள் .
இதில் அதிக கவணம் பார்த்து இருங்கள்.
கவனத்துடனே இணையுங்கள்.
அவ்வாறு இல்லையென்றால்,
நாளை நம் முகம் தொலைந்தவர்களாகவோ,
பிறர் முகத்தில் விழிக்க முடியாதவர்களாகவோ
ஆகிவிடுவோம்.எச்சரிக்கை
-- CROWN
7 Responses So Far:
அஸ்ஸலாமு அலைக்கும். நிர்வாகத்தினர் கவனத்திற்கு நான் இப்படித்தான் அனுப்பினேன்.ஒருவேளை சில வார்தைகள் விடுபட்டிருந்திருக்கலாம்.தயவு செய்து திருத்தி விளியிடவும்.இது அன்பு வேண்டுகோள்.
(FACE BOOK)
முகப்புத்தகம்!
இதில் அறிமுகமானவர்களும்,
அறிமுகமில்லாத புதியவர்களும்.
அறிமுகப்படுத்திகொள்ளலாம்.
தகவல் பறிமாறவும்,
கருத்து பறிமாறவும் ஆரம்பித்து,
பித்து பிடிக்கும் அளவிற்கு காதல்,
காமம் பறிமாறிக்கொள்ளவும்,
அந்தரங்கம்,அரங்கத்தில் அரங்கேறவும் செய்யும்.
நட்பு குரங்காக வந்து தலையில் ஏறி
பேன் பார்துக்கொண்டே ,
நம் மூளையை உரிஞ்சு விடக்கூடிய அபாயமும் உண்டு.
நமக்குத்தெரியாமலே நாம் களவாடப்படுவதும்,
திருட்டு போவதும் என்னேரமும் நடக்கலாம்.
இந்த முக புத்தகத்திற்கு பல முகம் உண்டு.
நாம் உளவு பார்கப்படுவது நம் கண்னெதிரே தெரியும்
நம்மாள் ஒன்றும் சொல்லவியலாது.
நமக்குத்தெரியாமலும் உளவு பார்க்கும்
ஓற்றர்கள் இந்த இனையங்கள் .
இதில் அதிக கவணம் பார்த்து இருங்கள்.
கவனத்துடனே இணையுங்கள்.
அவ்வாறு இல்லையென்றால்,
நாளை நம் முகம் தொலைந்தவர்களாகவோ,
பிறர் முகத்தில் விழிக்க முடியாதவர்களாகவோ
ஆகிவிடுவோம்.எச்சரிக்கை
இப்படி வார்த்தைகளில் விளையாடி வாகாய் எச்சறிக்கும் நேக்குப் போக்கில் தம்பி க்ரவுன் கில்லாடி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
எல்லோரும் சொல்றாங்களேனு நானும் ரொம்ப நாளைக்கு முன்பு முகப்புத்தகத்தில் சேர்ந்தேன். அதன்பின் பல நாட்கள் நேரமின்மையால் திறக்கவே இல்லை. பிறகு ஒரு நாள் திறந்தபோது மேற்கத்திய உடையில் ஒருத்தி என்னை நண்பனாக்கிக் கொள்ள விளைவதாக கவனக்குறைவா (கவனமாக?) ட்ரெஸ் போட்டுக்கிட்டு சொன்னா. அதோடு விட்டதுதான்.
நல்ல புத்திமதி சொன்னீங்க க்ரவுன்.
நல்ல எச்சரிக்கை,
எத்தனையோ சமூக பிணைப்பு தளங்களில் போலிகளால் ஏமந்தவர்கள் அதிகம். விழிப்புணர்வுகள் அதிகம் இருந்தும் அப்பாவிகள் போல் தெரிந்து ஏமாறுகிறார்கள் ஏமாற்றுகிறார்கள்.
அஸ்ஸலாமு அழைக்கும்
FACEக்கு பல முகம் உண்டு என்பதை அழக சொன்னீர்கள்.
முகப்புத்தகம்....முகம் தொலைத்த எத்தனையோ என்னுடைய நண்பர்களை..மீட்டேடுத்து தந்து இருக்கிறது....15 வருடங்களுக்கு முன் நான் முகவரி தொலைத்த...ஒரு அருமை நண்பன் சமிபத்தில் add request கொடுத்தான்...அவனின் முகம் சரியாக தெரியா விட்டாலும்...profile ஜ படித்தபின் இணைத்தேன்..அப்போதுதான் தெரிந்தது..அவன் என்னுடைய நெருங்கிய ஸ்கூல் மேட் என்று.....என்னுடைய நண்பன் ஒருவன் முகம்புத்தகத்தின் வழியாக “தாவா” பணியினை செய்து வருகிறான்…அதில் ஒரளவு வெற்றியும் பெற்று இருக்கிறான்.நன்மையும் தீமையும் எல்லா இடத்திலும் உண்டு...
சகோ.கிரவுன் சொல்லும்
///இதில் அதிக கவணம் பார்த்து இருங்கள்.
கவனத்துடனே இணையுங்கள்.
அவ்வாறு இல்லையென்றால்/// வார்த்தைகளை மனதில் நிறுத்தி வலம் வாருங்கள்
Facebook-க்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம்களால் தொடங்கபட்ட இதையும் பாருங்கள் “http://www.millatfacebook.com/
நன்மையும் தீமையும் அனைதிலும் நிறைந்துகிடக்கு நாம் அதை அணுகும் விதத்தைப்பொருத்து நம்மிடம் வந்துசேரும்.தெளிந்த உணர்வோடு தூயமனதோடு அணுகும்போது நன்மைபயக்கும். யாசிர்காக்கா சொன்னதுபோல் பலர் இதில் தீனை விதைகிறார்கள். பலர் தீனை புதைக்கிறார்கள்.
இதில் நாம் புதைபவர்களாகவோ புதைப்பவர்களாகவோ இல்லாமல் நல்லதை விதைப்பவர்களாக இருப்போம்.தீயதை வேரறுப்பவர்களாக இருப்போம்.
நட்புலகமென்பதால் அனைவரும் நட்பாகிவிடமுடியாது. நாம் தேர்ந்தெடுக்கும் அதேசமயம் நாம் அனுமதிக்கும் நட்புகளிடமே நாம் பலகுவது நல்லது.
கவனம் கணினியில் மட்டுமல்ல நம் மனத்தெளிவிலும் இருக்கிறது.. என்பது என்கருத்து..
இன்று இனிய பாதையில் நன்மைகளை விதை. http://fmalikka.blogspot.com என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்.
இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எத்தனைபேர் இதுபோன்ற தளங்களுக்கு சென்று கருத்தினை பகிர்கிறீகள். வீண் வாதங்களை தவிர்த்து நல்லது கெட்டதுகளை சொல்கிறீகள். சொல்லுங்கள் சும்மாதான் கேட்கிறேன்..
பார்க்கிறோம்தான் ஆனால் கருதுக்கள் இடுவதில்லை அப்படியெல்லாம் சாக்குசொல்லக்கூடாது. மேலே சொல்லியுள்ளார்கள்
இறைவனுக்கு பயந்து எழுதுங்கள் என்று..அப்பாடா வந்த வேலை முடிஞ்சது..
இதனால் மனதிலும் வைரஸ் , சிஸ்டத்திலும் வைரஸ் ..
ஒரு வாரமாக என் சிஸ்டத்திலும் ....
Post a Comment