செக்கடிகுளக் கரையினிலே.........


குளிர்ந்த காற்று குளத்தை முத்தமிட்டுச்செல்லும்

மரங்கள் அதை தட்டிக்கொடுத்து மகிழும்

உண்டியலில் விழும் சில்லரை காசுபோல்

மீன்கொத்தி குள‌த்தில் விழுந்து தன் அலகால் மீனைக்கவ்வும்

மீன் பிடித்து ஓய்ந்து போன‌ ப‌ற‌வைக‌ள் ம‌ர‌த்தில் ஓய்வெடுக்கும்

பெரியவர், சிறியவர் பாகுபாடின்றி திண்ணை வரவேற்கும்

சாய்ங்கால‌க்காற்று திண்ணையில் சாய்வோருக்கு சாம‌ர‌ம் வீசும்

வெண் சோப்பு நுரை கரையேற அலையில் துடிக்கும்

ஊருக்கு வரும் வரியவர்க்கு கோடைவாச‌ஸ்தலமாய் மாறும்

எவ்வித மருந்தின்றி அங்கு உற‌க்க‌ம் தானாய் தேனாய் வரும்.

இரவில் வெண் நிலா இற‌ங்கி வ‌ந்து குள‌த்தில் நீந்தும்

காண்போரின் உள்ள‌மோ க‌ண்கொள்ளாக்காட்சியில் மிளிரும்

சிறு பாம்புகள் நெளிந்து சென்று நீச்ச‌ல் ப‌ழ‌கும்

ஆமைக‌ள் அவ்வ‌ப்பொழுது நீர் மேல் வந்து

வருகைப்பதிவேடு ஏதுமின்றி வ‌ண‌க்க‌ம் ஐயா சொல்லிச்செல்லும்

குளிப்ப‌வ‌ரை சிறு மீன்க‌ள் கிள்ளிச்செல்லும்

த‌வ‌ளைக‌ள் த‌ன் வாயால் யாருக்கோ கூப்பாடு போடும்

தாம‌ரை இலை த‌ன்மேல் ப‌டுத்துற‌ங்கும் த‌ண்ணீரை தாலாட்டும்

ம‌ழை நீரால் குள‌ம் நிர‌ம்பும் ம‌கிழ்ச்சியில் ம‌ன‌ம் நிர‌ம்பும்

துவைக்க‌ப்ப‌டும் துணியால் குள‌க்க‌ரை ந‌ன்கு அடிவாங்கும்

அத‌ன் ச‌ப்த‌ம் குள‌ம் சுற்றும் கேட்கும்

வானில் ப‌ட‌ர்ந்து சூரிய‌னுக்கு விடுமுறைய‌ளிக்கும்

சிறார்க‌ளின் க‌ல் சிறு அலையை சிறுவட்டமாய்‌ உண்டாக்கும்

யார் வீட்டு அன்ன‌மோ குள‌த்தில் அது எண்ண‌ம் போல் நீந்தும்

இவை மூலம் இய‌ற்கை இராப்பகலாய் கொஞ்சி விளையாடும்

எல்லாவ‌ற்றையும் இறையில்ல‌ம் (செக்கடிப்ப‌ள்ளி) மேலிருந்து நன்கு க‌ண்காணிக்கும்.

ஊரில் ந‌ல்ல‌ ம‌ழை எங்கோ ந‌ம் உள்ள‌த்தில் குளிர்

காற்றால் ம‌ர‌ம் அங்கு சாய்ந்த‌து உள்ள‌மோ இங்கு உருண்ட‌து

நீரில் அங்கு மீன் துள்ளிய‌து இங்கு நினைப்பால் உள்ள‌ம் துள்ளிய‌து

அங்கோ உண்மையில் ம‌ழைத்தூரல் இங்கோ உள்ளத்தில் ம‌ழைச்சார‌ல்


அதிரையில் உள்ள குள‌த்தாங்க‌ரைகளின் குளிர்காற்று அர‌பிக்க‌ட‌ல் ஓர‌ம் ஒதுங்கிய‌ ந‌ம‌க்கும் அவ்வ‌ப்பொழுது வீச‌த்தான் செய்கிறது நினைவில். அவ்வப்பொழுது நிஜ‌த்தில் விடுமுறையில்.(அது க‌லிபோர்னியாவ‌ரை செல்லுமா என்ப‌து தெரிய‌வில்லை? அங்கு மையமிட்டிருக்கும் மகுடமே (க்ரவ்ன்) பதில் சொல்லட்டும்)

(நீங்கள் அனனவரும் குளித்துக் கொண்டாடிய குளங்களை தலைப்பில் இட்டு நீங்கள் எழுதி/நினைத்து மகிழலாம் எமக்கு ராய‌ல்ட்டி ஒன்றும் தேவையில்லை இஞ்சிடீயே போதுமான‌து ச‌கோ. த‌ஸ்த‌கீர் இய‌ம்பிய‌து போல்)

இய‌ற்கையை அழ‌காய் உருவாக்கி அதை செவ்வ‌னே ஆட்சி செய்து வரும் இறைவ‌னுக்கே எல்லாப்புக‌ழும் என்று இறுதியில் போற்றிப்புக‌ழ்ந்த‌வ‌னாக‌.


-- மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து.

புகைப்படம்: நன்றி அதிரை வரலாறு.

20 கருத்துகள்

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

அன்பு சகோதரர் நெய்னா, உங்கள் எழுத்தால் அப்படியே ஒரு சில வினாடிகளில் அதிரைக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள். Really a virtual trip to Adirai.

விடுமுறை எடுக்காமல், air ticket இல்லாமல் எங்களை அதிரைக்கு அடிக்கடி அழைத்து செல்வது சகோதரர் நெய்னா தனித்திறமை. வாழ்த்துக்கள்.

இன்ஞி டீ யாருக்கு நல்ல போட தெரியும்? நெய்னா வெயிட்டிங்ல இருக்கிறப்புல..

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

// யார் வீட்டு அன்ன‌மோ
குள‌த்தில் அது எண்ண‌ம் போல் நீந்தும் //

ஊருக்கு அழைத்துச் செல்லவில்லை, செக்கடிக் குளத்தையே இங்கே கொண்டு வந்துட்டீங்க MSM(n) !.

//அதிரையில் உள்ள குள‌த்தாங்க‌ரைகளின் குளிர்காற்று அர‌பிக்க‌ட‌ல் ஓர‌ம் ஒதுங்கிய‌ ந‌ம‌க்கும் அவ்வ‌ப்பொழுது வீச‌த்தான் செய்கிறது நினைவில்//

வங்கக் கடல் ஓரத்தில் இருக்கும் செக்கடிக் குளத்தின் குளிர் காற்று! இங்கே அரபிக் கடல் ஒதுங்கிய நமக்கு அடிக்கடி வீசுவதற்கும் வானிலை அறிக்கை வாசிப்பதற்கும் MSM(n) வருடும் வரிகள் என்றுமே வசந்தமே !

Unknown சொன்னது…

வருக வருக நெய்னா..........
போட்டோவை பார்த்தவுடன் நினைவுகள் குளத்தில் தப்படிக்க ஆரம்பித்துவிட்டது .....
படித்தவுடன் மனது ஏங்க ஆரம்பித்துவிட்டது .......

sabeer.abushahruk சொன்னது…

MSM,

சில்லென்ற அதிகாலையில் செல்லமாய் சுடும் காலை வெயிலின் சுகமும், சுவைத்துச் சாப்பிடும் அதிரைப்பட்டினத்தின் உணவின் ருசியும், குளித்து முடித்த பிறகு அதே உங்கள் குளத்தின் படிக்கட்டுகளில் நின்று தலை துவட்டும் இதமும் என சந்தோஷ நிமிடங்களை நினைவு படுத்துகிறது உங்கள் ஆக்கம்.

சற்றே குதிகால் தூக்கி, கபீர் காக்கா வைத்திருக்கும் அளவு குச்சியை எட்டி ஜாவியாவுக்குள் நுழைந்த சுகம் உங்கள் வர்ணனையை வாசிக்கையில் கிடைக்கிறது. 

இப்படி அடிக்கடி படுத்துங்கப்பா. 

Harmys,
நீங்களும் இத்தகைய வர்ணனைகளில் கில்லாடியாயிற்றே எங்கே ஒன்னையும் கணோம்?

crown சொன்னது…

அதிரையில் உள்ள குள‌த்தாங்க‌ரைகளின் குளிர்காற்று அர‌பிக்க‌ட‌ல் ஓர‌ம் ஒதுங்கிய‌ ந‌ம‌க்கும் அவ்வ‌ப்பொழுது வீச‌த்தான் செய்கிறது நினைவில். அவ்வப்பொழுது நிஜ‌த்தில் விடுமுறையில்.(அது க‌லிபோர்னியாவ‌ரை செல்லுமா என்ப‌து தெரிய‌வில்லை? அங்கு மையமிட்டிருக்கும் மகுடமே (க்ரவ்ன்) பதில் சொல்லட்டும்)
-------------------------------------------------------------------

அஸ்ஸலாமுஅலைக்கும். நைனா வழக்கம்போல் பின்னி எடுத்தாச்சு.கலிபோர்னியா என்ன? கபுருஸ்தான் போகும் வரை அந்த நினைவலைகள் தான்.டில்லிக்கு ராசா(ஸ்பெக்ட்ரம் கதா நாயகன் அல்ல)ஆனாலும்,கலிபோர்னியாவுக்கு கவர்னரனாலும் அதிரையின் மைந்தன் தான் நான்.மண்ணை நேசிப்பவனின் நாடிபிடித்துபார்க்கலாமா>?அதுவும் என்னை தெரிந்த நைனா கேட்கலாமா? இது ஏதோ போட்டு வாங்குவதாகத்தெரிகிறது.யார்வீட்டு அண்ணமோ எண்ணம் போல நீரில் நீந்தும் அஹா அருமை.மழை பொய்தபின் வெள்ளனீரில் நீந்தும் அண்னம் ,தன் தலையை நீரினுள் அமிழ்து இறைதேடும் அந்த அண்ணம் பால் நீரில் நிறம் பிரிப்பதில்லை. கால்வாயில் வந்த தண்ணீரில் வாய்,கால் கழுவியதும்.வாய்கால் மூலம் அசுத்த தண்ணீர் வெளியேரும் போது கை, காலை குறுக்கேவிட்டு தர்காலிக அனை போட்டதும்.சுத்த கர்னாடகத்தனமாகத்தெரிந்தாலும், நிரந்தரமாய் அனைபோட முடியாமல் நம் திட்டம் உடைந்து நீர் விடுதலைப்பெற்ற வாலிபனைப்போல் ஓடும் அந்த காட்சியெல்லாம் மறந்துபோகுமா? நாம் என்ன ஜடமா? இடம் மாறினால் இதயம் மாறுமா? அந்த இளைய வயதில் நடந்த இனிய நினைவு மாறுமா? குளதின் நடுமயம் என்னால் எப்படி மறக்கமுடியும் அது உடலின் இதயம் இருக்கும் பகுதிபோல் அதன் நேர் எதிரே என் வீடு,ஆனந்தம் கூத்தாடும் நினைக்கும் போது. உலுவமீன் பிடித்து ,காரமாய் வருத்து தின்ற நினைவு மறக்குமா? உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பதுபோல் ருசிக்கும் ,பசிக்கும் மீன் தந்த அந்த குளம் எப்படி மறக்கும்? சொல்லில் முடியாது சொல்லி முடியாது. மீண்டும்,மீண்டும் அசைபோடும் நினைவுகளுடன் நைனவிற்கு நன்றி.

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்.குளத்தை குத்த"கை" எடுத்தவர் ,மீன்களையெல்லாம் ஒரு"கை" பார்த்து பிடித்து விடுவது என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி காத்திருக்க அந்த குத்தகை எடுத்தவரின் வலது"கை"யாய், "கை"யாள் ஒருவன் வலம் வந்திருக்க,அந்த குத்தகைகார் நெடு நேரம் ஒரே எடத்தில் குத்தவைத்ததால் கொஞ்சம் உலாதிவிட்டு வர.அந்த வலதுகையை நம்மவர்கள் "கை"க்குள் போட்டுக்கொண்டு சில "கை"யூட்டு கொடுத்து,விலாங்"கை" (மீனை)வாங்க தன் பங்"கை" வாங்கியவன் விலாங்கை உருவி கொடுக்க நம் நம்பி"கை"யான நண்பன் மிதிவண்டியேறி பறந்துவிட அன்று இரவு ரொட்டியுடன் விலாங்கை மூக்"கை" பிடிக்க ஒரு "கை" பார்த்ததை எப்படி மறக்க முடியும்?

sabeer.abushahruk சொன்னது…

க்ரவுன்,
இந்த வேடிக்"கை" என்ன வாடிக்"கை"யா அல்லது சின்ன வயசு கேளிக்"கை"யா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

அடக் கிரவ்ன்(னு): எல்லாத்தையும் இப்படி உல்லங்"கை"யில் வைத்துக் கொண்டு எல்லா உள்ளங்களையும் ஒரு "கை" பார்ப்பதை நினைத்து நானும் புன்ன"கை"க்கிறேன்(டா)ப்பா !

இருந்தாலும் "கை"யை எடுக்காம எழுதினா எல்லாமே ஒமலில் வந்த மாதிரியிருக்கு(டா)ப்பா.. அடிக்கடி உந்து பட்டனை (enter key) தட்டிக்க அப்போதான் நாங்க தட்டும் "கை" ஓசையும் கேட்கும் அதிமாக !

Latest : "கை"கொடுத்தவங்க, "கை"கோர்த்தவங்க, ஒரு "கை"போட்டவங்க எல்லாம் "கை"விட்டுட்டாங்கன்னு பேச்சு "ராசா" மனசுல என்ன இருக்கோ !?

Yasir சொன்னது…

வாவ் சகோ.நெய்னா...இது கவிதையா...அல்லது “ரெட் புல் “ எனர்ஜி டிரிங்கா...படித்தவுடன்..அப்படி ஒரு துள்ளல் மனதில்,உடம்பில்,உணர்வுகளில்...வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...

Yasir சொன்னது…

// எழுதினா எல்லாமே ஒமலில் வந்த மாதிரியிருக்கு// ஏன் காக்கா இன்னைக்கு ஒரு முடிவோடுதான் வந்திருக்காப்ல தெரியுது....படிப்பவர்கள் சிரித்து வயிற்றை புண்ணாக்க வேண்டும் என்று

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கிரவ்ன்(னு): "நைனா"ன்னு "wainaa" எழுதுறியே யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு(டா)ப்பா, இனிமே குட்டு வைக்கனும் உனக்கு !

"நெய்னா"ன்னு "weynaa" எழுதினா என்னவாம் ? என்னா அழகா இருக்கு ஆங்கிலத்தில் எழுதியாதைப் படிக்கவும் இனிமையா இருக்குதானே !?

என்ன பன்றது "N" னோடு இருக்கு பாதிப் பெயரும் !

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

அசலாமு அலைக்கும் சபீர் காக்கா,
இன்ஷா அல்லாஹ்

ZAKIR HUSSAIN சொன்னது…

//ம‌ழை நீரால் குள‌ம் நிர‌ம்பும் ம‌கிழ்ச்சியில் ம‌ன‌ம் நிர‌ம்பும்//

படிக்க நல்லா இருக்கு...இதே 25 வருடத்துக்கு முன்னாடினா ரசிக்கலாம்..ஏன்னா அந்த குளத்தில் எல்லாம் குளித்தோம். இப்போது அதிராம்பட்டினத்தில் சில முக்கிய குளங்கள் குளிக்க முடியாத அளவுக்கு நாசப்படுத்தபட்டிருக்கிறது. மீறி குளித்தால், குளித்தவனின் படம் 'தோற்றம்- மறைவு" போட்டு தினத்தந்தியில் வந்துவிடும்.

Bro. மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து,உங்களின் ஒவ்வொரு வரியும் ரசிக்ககூடியவை...நீங்கள் எழுதிய காலம் திரும்ப் கிடைக்குமா என ஏங்க வைக்கிறது.

crown சொன்னது…

sabeer சொன்னது…
க்ரவுன்,
இந்த வேடிக்"கை" என்ன வாடிக்"கை"யா அல்லது சின்ன வயசு கேளிக்"கை"யா?
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா.இந்த யாக்கைவைத்து அதில் உள்ள மூக்கை, நாக்கை,இருக்கை எல்லாவற்றையும் சில செய்கையில் பயன்படுத்துகிறோம் அதுபோல் தான் தமிழில் எதுகை,மோனை உபயோகித்தால் நல்லது என்றுதான் அந்த பொய்கை(குளம்) பற்றி இத்தனை கைகளை உபயோகித்தேன்.அனாலும் சிறுவயதிலிருந்தே இந்த செய்கை என் வாடிக்கைத்தான். நைனா தம்பி காக்காவின் சொல்வழக்கை ,கண்டு நாக்கை தொங்க போட்டு கொள்கிறேன் அவர் எல்லாரைவிட மிஞ்சியவர் என்பதை அவர் நடவடிக்கைய பார்த்து பழகியவன். இப்படி எல்லா கைகளும் இணைந்த கைகளாக பணியாற்றுவது உவகை கொள்ளத்தான் செய்கிறது.இயற்கையில் இப்படித்தான் நான்.

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

\\தாம‌ரை இலை த‌ன்மேல் ப‌டுத்துற‌ங்கும் த‌ண்ணீரை தாலாட்டும்\\ -- எனக்கு தெரிஞ்ச வரை செக்கடிகுளத்தில் தாமரை இருந்தனவா என்பது தெரியாது, அதை எங்கே வளர விட்ராங்க நம்மூர் சிறுசுகள் செக்கடிக்குளம் முழுவதும் நிச்சலில் உலா வருகிறார்களே!

\\துவைக்க‌ப்ப‌டும் துணியால் குள‌க்க‌ரை ந‌ன்கு அடிவாங்கும்

அத‌ன் ச‌ப்த‌ம் குள‌ம் சுற்றும் கேட்கும்\\ --- அருமை அருமை

\\எல்லாவ‌ற்றையும் இறையில்ல‌ம் (செக்கடிப்ப‌ள்ளி) மேலிருந்து நன்கு க‌ண்காணிக்கும்.\\ --- முகைதின் ஜும்மா பள்ளியும் தான்

\\அங்கோ உண்மையில் ம‌ழைத்தூரல் இங்கோ உள்ளத்தில் ம‌ழைச்சார‌ல்\\ --- இவ்வரி எனக்கோ கவியில் முழுதும் நனையச செய்த கவிச்சாரல்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

Bro. Irfan CMP: நல்ல கவனிப்பு ! தாமரை நாமிருக்கும் பக்கம் நெருங்க முடியாதிருந்தாலும் இலை மறை காயாக அதன் வாசம் ஊடுருவாமல் அரனாக நாம் தானே இருந்திடனும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

இவ்வளவு காலம் உன் அழகிய தமிழ் வரிகளை வாசிக்க மிஸ் பண்ணிவிட்டேன் நெய்னா மச்சான்

majith safiullah சொன்னது…

சகொதரர். நைனா அவகலுடய கவிதயை படிக்கும் பொது என் கண்கலில் அந்த பலைய நினைவுகள் அலயென வந்து செல்கிரது
விரால் பாயிசல், தொட்டு விலையாட்டு, குன்ரின் மெல் ஏரி பெல்டி என்ட்ரு மனிக்கனக்கில் ஊரிய நாட்கள் இவை எல்லாம் அப்படியெ கண் முன் கொன்டு வந்து நிருத்தி விட்டார்கள். உடலால் முடியா விட்டாலும் உள்ளத்தால் நனைந்து பொனேன்.
சகொ: அதுரை தென்ட்ரல் சொன்னது தவரு. எனக்கு தெரிந்து ஒரு வருடம் தாமரை மட்ரும் அல்லி இருந்திருக்கிரது.