அன்பான சகோதர சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்றேல்லாம் இன்று புலம்பி பிழைப்பு நடத்திவரும் மேற்கத்திய மேதாவிகளுக்கு பதில் தரும் விதமாக, உலக புகழ் பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் சகோதரர் காலித் யாஸீன் அவர்கள் ஆற்றிய செற்பொழிவுகளிலிருந்து ஒரு சில பகுதியை உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறோம்.
இச்சொற்பொழிவு ஆங்கிலத்தில் இருந்தாலும், குறைந்த ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கும் புரியும்படி உள்ளது. உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவை அனைவரும் நிச்சயம் கேட்க வேண்டும். இறைவனின் மார்க்கமான இஸ்லாம் மட்டும் தான் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மார்க்கம் என்பதை மேற்கத்திய கலாச்சார மேதாவிகள் புரிந்துக்கொள்ளட்டும்.
சில மாதங்களுக்கு முன்பு தினமல(ம்)ர் என்ற நாளிதழில் நபிகளால் சொன்னது என்று ஒரு செய்தியில் பாதி ஹதீஸ்களை மட்டும் பதிந்துவிட்டு ஒர் தவறான கருத்தோட்டத்தை இஸ்லாத்தின் மீது தினிக்க முயன்றது அல்லாஹ்வின் உதவியால் அது எடுபடவில்லை. இச்செய்தியை ஒர் இஸ்லாமிய இணையதளமும் அவைகள் முழுமையான ஹதீஸ்கள் இல்லை என்று அறியாமல் வெளியிட்டது. இதனால் குழப்பம் அடைந்த நம் சகோதரிகள் சிலர் தமிழ் இணைய குழுமங்களில் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் இஸ்லாம் பெண்ணடிமையை தூண்டுகிறது என்று. இவை தினமலரில் வெளியான செய்தி, ஆதாரமற்ற முழுமைபெறாத செய்தி என்று நாம் தெளிவாக்கியதோடு அல்லாமல் இந்த இஸ்லாமிய சொற்பொழிவையும் அனுப்பிவைத்தோம், இஸ்லாத்தின் மீதான அச்சகோதரிகளின் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டது.
இதை எதற்காக சொல்லுகிறோம் என்றால் இஸ்லாம் தொடர்பான எந்த செய்தியும் மீள் பதிவு செய்யும் போது அச்செய்திகள் சரியான தகவல்களுடன் உள்ளனவா என்பதை அளசி ஆராய்ந்து வெளியிடுவது நல்லது. இல்லாவிட்டால் அதுவே காலப்போக்கில் இணைய தேடல்களில் தேடுபவர்களுக்கு இஸ்லாமியர்களின் இணையத்தளங்களிலிருந்து ஆதாரம் உள்ளது என்று எடுத்துக்காட்டி இஸ்லாத்தை பற்றி தவறாக விமர்சனம் செய்வதற்கு நாமே ஒர் பாதை அமைத்து கொடுத்ததுபோல் ஆகிவிடும். அல்லாஹ் பாதுகாப்பானாக.
-- அதிரைநிருபர் குழு
நன்றி: அதிரை TV
-- அதிரைநிருபர் குழு
நன்றி: அதிரை TV
10 Responses So Far:
வலை மேய்ச்சலில் அதிகமிருக்கும் நம் சகோதரர்களும் மேற்கத்திய தொலைக் காட்சிகளின் ஆங்கில செய்திகள் லயித்து செய்திகள் கேட்கும் எத்தனையோ இஸ்லாமிய சகோத்ரர்கள் அவசியம் காண வேண்டிய காணொலி !
மிக அற்புதமான பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கிறாது இந்த மிகச் சிறிய தொகுப்பு காணொலியில் பொய்ப் பிரச்சாரம் செய்யும் செய்தியாளர்களுக்கும், ஆவனப்ப்டங்கள் எடுத்து திசை திருப்புவர்களுக்கும்.
நம் கையில் கிடைத்திருக்கும் இதே மீடியாவை வைத்தே அவர்களுக்கு பதில் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்க வேண்டும், நமது எதிர்ப்பை எடுத்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும் அதோடு நம்முடைய எத்திவைக்கும் பனியையும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்....
சில மாதங்களுக்கு முன்பு தினமல(ம்)ர் என்ற நாளிதழில் நபிகளால் சொன்னது என்று ஒரு செய்தியில் பாதி ஹதீஸ்களை மட்டும் பதிந்துவிட்டு ஒர் தவறான கருத்தோட்டத்தை இஸ்லாத்தின் மீது தினிக்க முயன்றது///
என்னிக்கு அவங்க முறையான கண்ணோட்டத்தோடு இஸ்லாத்தை பார்த்தாங்க. ignore them News'es...
khlid yaseen not khalid yaasir
//khlid yaseen not khalid yaasir //
பிழையை சுட்டிக்காட்டிய சகோதரர் ஹஸன் அவர்களுக்கு மிக்க நன்றி. திருத்தம் செய்யப்பட்டுவிட்டது.
ஹலோ அ.நி எடிட்டர் குழு...நீங்களேல்லாம்...சூப்பர் சோனிக் ஆராய்ச்சியில் இருக்க வேண்டியவங்க...அவ்வ்வ்ளவு ஃபாஸ்ட் மாத்திட்டீங்க சகோ.ஹசன் சொன்னவுடன்........யேன் மேல் உள்ள பாசத்தில் நீங்க யாசிர் என்று டைப் அடித்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன் ஹி ஹி ஹி....
இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் பரப்பப்படுவது ஒரு புறம் இருக்கட்டும்.அது அவர்களுக்கு தொய்வற்ற பணி.
இஸ்லாத்தை உயர்த்தி காட்ட இஸ்லாத்தில் இல்லாததையும் சொல்லி திரியும் நம்மவர்களை என்னவென்று சொல்வது ?
(தன்னை இறைமறுப்பாளர் என்று சொல்லிகொள்ளும் கவிஞர் சல்மா முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கிய ஸஹர் நேர நிகழ்ச்சியை யாரவது பர்த்தீர்கள?)
//(தன்னை இறைமறுப்பாளர் என்று சொல்லிகொள்ளும் கவிஞர் சல்மா முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கிய ஸஹர் நேர நிகழ்ச்சியை யாரவது பர்த்தீர்கள?) //
சகோதரர் அபு ஆதில் நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி பற்றி செய்திகளில் படித்தது உண்டு.
இது போன்றவர்கள் பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சகோதரர் யாஸீன் அவர்கள் சொன்னது போல் எல்லா மதத்திலும் கருப்பு ஆடுகள் உள்ளது, இக்கருப்பு ஆடுகள் சொல்வது எல்லாம் இஸ்லாமிய கருத்தாகாது.
சல்மா பற்றி சகோதரர் ஆளூர் ஷா நவாஸ் அவர்களின் கட்டுரை இந்த சுட்டியில் உள்ளது சென்று பாருங்கள் http://aloorshanavas.blogspot.com/2010/10/blog-post_02.html
//யேன் மேல் உள்ள பாசத்தில் நீங்க யாசிர் என்று டைப் அடித்து விட்டீர்கள் என்று நினைக்கின்றேன் ஹி ஹி ஹி.... //
ஹா ஹா ஹா. பாசத்துடன் கூடிய நேசம்.
அல்லாஹ் போதுமானவன்
அ.நி. சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாத்தில் பெண்கள் - கருத்து போடலாம் என்று டைப் செய்தால் நீண்டு கொண்டே போய்விட்டது. அதனால் ///சுதந்திரமா? பெண்ணுக்கா? /// என்று தனி ஆக்கமாக வந்து விட்டது. இன்ஷாஅல்லாஹ் விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் அலாவுதீன், தங்களின் தனிபதிவை (சுதந்திரமா? பெண்ணுக்கா?) மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம்.
Post a Comment