நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

டிசம்பர் ஆறும்! இஸ்லாமியர்களின் கண்களில் குளமும்!!. 12

Unknown | திங்கள், டிசம்பர் 06, 2010 | ,

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 வந்தால் முஸ்லிம்கள் இடிக்கப்பட்ட பாபரி பள்ளியின் நினைவாக போராட்டம் நடத்துவதும், கோரிக்கைகளை முன் வைப்பதும் வாடிக்கையான ஒன்றாகிப்போனது!. அன்றைய தினம் பாராளுமன்றம் நடந்தால் வேஷம் போட்ட இந்த அரசியல் வாதிகள் பாராளுமன்றத்தில் கோஷம் போட்டு தங்களின் அரிப்பை தீர்த்துக் கொள்ளுவார்கள். ஆனால் இந்தப் பாவப்பட்ட முஸ்லிம்கள் மட்டும் இன்று நமக்கு நல்ல தீர்ப்பு வரும், நாளை நமக்கு தீர்ப்பு வரும் என்று நீதிமன்றங்களை நம்பி, நீதியின் மேல் தங்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தி வந்தனர். ஆனால் இந்த அலகாபாத் நீதிமன்ற தீதுபதிகள், அயோக்கியர்கள் சங்க்பரிவார்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, அந்த பொறுப்பினை இவர்கள் தங்களிடம் எடுத்துக்கொண்டு விட்டனர். சங்க் பரிவார்கள் முஸ்லிம்களுக்கு கடப்பாரை மூலம்தான் கரசேவை நடத்திக்காட்டினார்கள் என்றால் இந்த கட்டப்பஞ்சாயத்து நாட்டாமைகள், தங்களின் பேனா மூலமாகவே முஸ்லிம்களின் இதயத்தில் வேறொரு கரசேவையை நடத்தி, அட அறிவு கெட்ட முஸ்லிம்களே! இன்னுமா நீங்கள் எங்களை நம்பி இருக்கின்றீர்கள் (?) என்று நமக்கு ஒரு பாடத்தினை கற்று தந்துள்ளனர். இந்த தீர்ப்பினை கேட்டதும் முஸ்லிம்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்து “கண்கள் குளமானதம்மா பாபர் பள்ளியை நினைக்கையிலே” என்ற வரிகள் தான் நம் நினைவுக்கு வந்தது!.

இதனிடையே உச்ச நீதிமன்றம் முஸ்லிம்களின் கண்களில் வடியும் அந்த நீரை துடைப்பதைப் போல், அலகாபாத் நீதிபதிகள் மீது சரமாரி புகார்களை தெரிவித்து கண்டனம் தெரிவித்ததையும் நாம் நன்றியோடும் நம்பிக்கையோடும் பார்க்கின்றோம்!. என் இஸ்லாமிய சகோதரர்களே! இயக்கங்களே!!. இனியும் இந்த அரசியல் அயோக்கியர்களை நம்பி பாபரி பள்ளி விசயத்தில் அவர்களின் பின்னால் நாம் செல்வது முறைதானா? என்றொரு கேள்வியை நமக்கு நாமே கேட்கும் நாள் வந்துவிட்டதாகவே நமக்கு படுகின்றது!. அதுமட்டுமில்லாமல் வருகின்ற தேர்தல்களில் ஓட்டு என்ற அந்த ஆயுதம் மூலம் நாமும் ஒரு கரசேவையை நடத்திக்காட்டி இந்த காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்க நேரம் வந்துவிட்டது!. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு கடைசியாய் நாம் காத்திருப்போம். அங்கும் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் “யா அல்லாஹ் இது உன்னுடைய இல்லம். எங்களை காட்டிலும் உனக்கே அதில் முக்கியத்துவம் உண்டு!. எங்களால் முடிந்தவரை நாவால் போராடினோம்!. ஆனால் கரத்தால் போராட சக்தியற்றவர்களாக இருக்கின்றோம்!. அதனால் நீ எங்களை குற்றம்பிடித்து விடாதே!. எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் எங்களை வழிநடத்தி எங்களுக்குள்ளே மேலும் மேலும் ஒற்றுமையை குழைத்துக் கொண்டிருக்கின்றனர்!. எனவே முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு!. நீ அபாபில் பறவையை வைத்து சுட்ட சிறு கல்லினால் யானைப்படைக்கே கரசேவை நடத்தியவன், விளையாட்டு காட்டியவன்!!. அதேபோல் இந்த பாபர் பள்ளிக்கும் நீ அருள்புரிவாயாக என்று மனமுறுகி துவா செய்தவனாக!

அதிரை முஜீப்.

12 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

//“யா அல்லாஹ் இது உன்னுடைய இல்லம். எங்களை காட்டிலும் உனக்கே அதில் முக்கியத்துவம் உண்டு!. எங்களால் முடிந்தவரை நாவால் போராடினோம்!. ஆனால் கரத்தால் போராட சக்தியற்றவர்களாக இருக்கின்றோம்!. அதனால் நீ எங்களை குற்றம்பிடித்து விடாதே!. எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் எங்களை வழிநடத்தி எங்களுக்குள்ளே மேலும் மேலும் ஒற்றுமையை குழைத்துக் கொண்டிருக்கின்றனர்!. எனவே முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு!//

எங்களின் துஆவும் இணையட்டும் இங்கே.. !

அன்புடன் மலிக்கா சொன்னது…

எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு.//

ஆமீன்..

Yasir சொன்னது…

டிசம்பர் ஆறு..ஆறாத வடுக்களை நாம் அனைவரின் மனதிலும் எற்படுத்தி சென்று விட்டது.....அதை அதட்டி கேட்ட மக்களை ஆடு அறுப்பதுபோல் அறுத்து இரத்த ஆறு ஒட வைத்த சில காட்டேரிகள் இன்றும் ஆட்சிக்கட்டிலில் ஆனந்தமாய் உட்காந்து இருக்கிறார்கள்...இந்த மாதிரி பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு அவதிப்படுவது என்னமோ...திராணியற்ற ஏழைகள்தாம்..

//“யா அல்லாஹ் இது உன்னுடைய இல்லம். எங்களை காட்டிலும் உனக்கே அதில் முக்கியத்துவம் உண்டு!. எங்களால் முடிந்தவரை நாவால் போராடினோம்!. ஆனால் கரத்தால் போராட சக்தியற்றவர்களாக இருக்கின்றோம்!. அதனால் நீ எங்களை குற்றம்பிடித்து விடாதே!. எங்களின் சகோதர இயக்கங்களும் ஆளுக்கொரு திசையில் எங்களை வழிநடத்தி எங்களுக்குள்ளே மேலும் மேலும் ஒற்றுமையை குழைத்துக் கொண்டிருக்கின்றனர்!. எனவே முதலில் அவர்களுக்குள் ஒற்றுமையைக் கொடு!//

எங்களின் துஆவும் இணையட்டும் இங்கே..

Unknown சொன்னது…

பாபரி மஸ்ஜித் தொடர்பான வரலாறுகளையும், தகவல்களையும் சேகரித்து தனி இணையதலம் www.babarmasjid.blogspot.com
என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பாபரி தொடர்பான கெய்திகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். za.muhammad1@gmail.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

abutalha சொன்னது…
// பாபரி மஸ்ஜித் தொடர்பான வரலாறுகளையும், தகவல்களையும் சேகரித்து தனி இணையதலம் www.babarmasjid.blogspot.com
என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது. பாபரி தொடர்பான கெய்திகள், கட்டுரைகள், கார்ட்டூன்கள் மற்றும் தகவல்கள் உங்களிடம் இருந்தால் பின்வரும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். za.muhammad1@gmail.com //

வாய்ய்ப்புகள் வசப்படும்போது இன்ஷா அல்லாஹ் !

Unknown சொன்னது…

ஓ எங்கள் பாப்ரி! நீ வீர மறவர்களின் சுவாசம்! ஆண்டுகள் தோறும் ஆறுகள் வரும்போது
ஆறாத ரணமாக எமது உள்ளம்!
இடித்தது என்னவோ பாப்ரிதான்!
நொடிந்து போனது எங்கள் இதயங்களல்லவா?

அடையாள கரசேவைக்கு
அயோக்கியர்களின் அகராதி
கடப்பாறை சேவை என்றது!

புரிந்துக்கொள்ளாத உச்சநீதிமன்றத்தை
தெரிந்தே துச்சமாக்கினர் துரோகிகள்

வீதிகள் தோறும் குருதியின் வாசனை
நாதியற்ற முஸ்லிம் தலைமை
பீதியில் உறைந்தது எம் சமூகம்!

காத்திருந்த நீதி
கதவை சாத்தியது
காவியின் கரங்களில்
நீதியின் சாவிகள் அடைக்கலம் தேடின

கறுப்பு அங்கிக்குள் ஒரு
கருவறுப்பு கச்சிதமாக அரங்கேறியது!
கொலைக்கார கும்பலுக்கு
கலைமாமணி பட்டம்!

இனி அமைதிப் புறாக்கள்
போருக்குத்தான் தூது செல்லும்!

நம்பிக்கையின் மிச்ச மீதி
உச்சநீதிமன்றத்தில்
ஆறுதல் கொள்வதா?
அல்லது ஆத்திரமடைவதா?

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க
விலை போனவர்கள் சிலர்
வலை வீசுகின்றனர்

ஆனாலும்
ஓ!எங்கள் பாப்ரியே!
நாங்கள் சக்திப் பெறுவோம்!
விரக்தியை கருவறுப்போம்!
யுக்தியை வரையறுப்போம்!
உனை ஒருநாள் மீட்டெடுப்போம்!

உனது வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!

உன் மீது படிந்துபோன நஜீஸுகளை
அகற்றிவிட்டு
சுஜூது செய்வோம் ஒருநாள்!

ஓ எங்கள் பாப்ரி!
நீ வீணர்களின் கோஷம் அல்ல!
வீரமறவர்களின் சுவாசம்!

நாங்கள் நேற்று முளைத்த காளான்களல்ல!
களைத்துப் போக!
நாற்றுக்களை நட்டுவிட்டோம்!
இனி கழனியில்
களைபிடுங்கும் வேலைதான் மிச்சம்!


-ஆயிஷாமைந்தன்

sabeer.abushahruk சொன்னது…

பதிவிலும் பின்னூட்டங்களிலும், குறிப்பாக அபு தல்ஹாவின் பின்னூட்டத்திலும் (நன்றி: ஆயிஷாமைந்தன்)விஞ்சி நிற்கும் ஆதங்கமும் வீரமும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இறை இல்லத்தை மீட்டெடுக்க கரசேவை என்ன உடலாலும் உயிராலும்கூட சேவை செய்ய காத்துதான் இருக்கிறோம்.

இத்தகைய உத்வேகமூட்டும் எழுத்துக்கள் அதிகம் எழுதுங்கள் அதிரை முஜீப்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

abutalha சொன்னது…

//வீழ்ச்சியை
எங்களது எழுச்சியால்
வென்றெடுப்போம்!// - (ஆயிஷாமைந்தன்)

கைகோர்ப்போம் இன்ஷா அல்லாஹ்!

Yasir சொன்னது…

சகோ.அபு தல்ஹா..பின்னுட்டமாக பதிந்து இருக்கும் கவிதை ..கவிக்காகா சொல்வதுபோல் மெய்சிலிர்க்க வைத்தது....

crown சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும் சென்றவருடம் நான் எழுதியது,
ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஆராத ரணம் கொண்டோம்.
ஆருவது சினமே! ஆதனால் ஆறியே போனது என் இனமே!
கூரிய ஆயுதம் கொண்டே எங்களின் இறை வணக்கத்தளத்தினை இடித்தது வணங்கா தலைகள்.
அதுமசசார்பின்மையுடன் இணங்கா தலைகள்.
பொருத்தார் புவியாள்வார் ஆதனால் பொருத்தோம.
நம்மை வெறுத்தோர் வாழ்கின்றார் நாம் எங்கே?
சாதுமிரண்டால் காடு கொள்ளாது!
சாது நாம் எப்ப மிரள்வது? பின் மீள்வது?
ஒவ்வொருத்தரும் மதுக்குள் அழுகின்றோம் புனித ஆலயம் இடிக்கபட்டதால்.
பின் நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொண்டு சரியாகின்றோம்.
நம்மை தீண்டியவன் ,
அந்த தீயவன் மேலும் தீவைப்பதுபோல் சொல்கின்றான,
நம் இறை வணக்கத்தளத்தில் ராமனுக்கு கோவில் கட்டுவோமென்று.
கேட்டும் கணமே இதயதில் இடி!
இன்னும் ஏன் தாமதம்?
அந்த மதம் பிடித்த ஆனையை அடக்க
ஒன்று சேருவீர் சதோரர்களே!
இனிவரும் காலம் இன்சா அல்லாஹ் இருள் நீங்கி வெளிச்சமாகும்.
crown

Shameed சொன்னது…

அஸ்ஸலாமு அழைக்கும்
இவர்கள் (உச்ச நீதி மன்றம் ,உயர் நீதி மன்றம்)கொடுக்கும் தீர்ப்புகள் எல்லாம் அட்டு தீர்ப்புக்கள் இவர்களை நம்ப வேண்டாம்
இறைவன் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு

இறைவனின் தீர்ப்பைதான் நாம் நம்பவேண்டும்.

majith safiullah சொன்னது…

/அதிரை நிருபர் சொன்னது:
அதுமட்டுமில்லாமல் வருகின்ற தேர்தல்களில் ஓட்டு என்ற அந்த ஆயுதம் மூலம் நாமும் ஒரு கரசேவையை நடத்திக்காட்டி இந்த காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து விரட்டி அடிக்க நேரம் வந்துவிட்டது!.//

இந்த காங்ரஸ் அரசை விரட்டி விட்டு வெரு எந்த கட்சியை வைப்பது பி.ஜெ.பி????????

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு