Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

துபாயும் வாக்குச்சாவ‌டியும்... 24

அதிரைநிருபர் பதிப்பகம் | May 26, 2011 | ,

நான் துபாய்க்கு போன புதிதில் பல இடங்களுக்கு வேலை தேடிப்போனோம்.
தேடுன உடனே மேனேஜர் பதவியா கொடுப்பாய்ங்க. ஒன்னும் உருப்படியா சிக்கல.. வந்து ரெண்டு மாசமாச்சுனு.. புலம்பல்தான் ஜாஸ்தி.. மூணுமாசத்துல விசிட்டும் முடிஞ்சிரும்.. விசிட்ட ரினீவ் பண்ணனும்.. இப்படிய கவலைகள் மட்டுமே நிறைஞ்ச நேரம் அது.

அப்படியான சமயத்துல ஒரு மாசம் மட்டும் ஒரு வேலை இருக்குன்னு பேப்பர்ல விளம்பரத்த பார்த்தவுடனே நானும் சக வேலைதேடிகளும்? அங்கே சென்றோம். அந்த கம்பெனி கார்கோ கம்பெனி. சொன்னபடியே இவ்வளவு சம்பளம், இதான் வேலை என்றார்கள். அதன்படியே கொடுத்தார்கள். {கவனிக்க நாங்க எல்லோரும் DEGREE, DIPLOMA படித்தவர்கள்..} வேலையும் நல்லபடியாகவே போனது..

எனக்கு பார்கோட் ஸ்டிக்கரை ஒவ்வொரு பேக்கிங்கிலும் ஒட்ற வேலை... நான் லஞ்ச் ப்ரேக்கில் (1 ஹவர்) சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் அமைந்திருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் என்னுடைய பயோடேட்டாவை (சி.வி) கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வருவேன். அப்படி கொடுத்த கம்பெனிகளில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில் இருந்த ஒருவர்(ம) ("ம- இவர்களில்லாத தேசமே கிடையாது")

என்னுடைய சி.வியை பார்த்துவிட்டு நாளைக்கு வந்து என்னைப் பாரு என்றார்.
அவர் சொன்னபடி அடுத்த நாளும் போனேன். இப்ப எம்.டி. இல்ல வெளியிலே போய்ட்டாரு இப்ப முடியாது நாளைக்கு கண்டிப்பா வந்துருன்னாரு.. என்னடா இப்படி அலைய விடுறாங்களேன்னு சலிச்சுக்கிட்டே அடுத்த நாளும் (எதையும் தாங்கிற இதயம்) போனேன். அப்பவும் எதையாவது காரணத்த சொல்லிக்கிட்டே இருந்தான்(ர்).

எனக்கு கண்டிப்பா தெரிஞ்சிப்போச்சி இவன் நம்மள அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கிறான் இவனுக்கு பாடம் கற்பிக்கனும்னு.. அந்த சமயம் மறுபடியும் என் சி.வி.யை பார்த்துக்கிட்டே கேள்வி கேட்டான்... இங்கே ஒன்னு சொல்லிக்கிறேன் என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..

"உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"

அன்னைக்கு அடிச்ச வேப்பிலைதான்,

தமிழன்டா யார்னு புரிய வெச்சுட்டேன்...

--------------------------------------------------

நாம் ஒட்டுப்போடுற இடத்துக்கு ஏன் "வாக்குச் சாவடின்னு" பெயர் வந்தது?

பணத்தை வாங்கிட்டு ஒன்னுக்கும் பிரயோஜமில்லாதவனுக்கு "வாக்கைப்போட்டு அதை சாவடிக்கிறோம்'ல அதனால வந்திருக்கும்...

- அஹ்மத் இர்ஷாத்

24 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சொல்லித் தெரிவதில்லை தம்பி இர்ஷாத்தின் குறும்புகள் பற்றி... கொட்டிக் கிடக்கும் அவரின் வலைப் பதிவுகளில்... இங்கேயும் தட்டிக் கொடுக்க வந்திட்டார் ! வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதிடு நிச்சயம் நிறைய அனுபவங்கள் இங்கே அலசப்அபடும் !

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

. .அரபி மொழிக்கு பதிலளித்த விதம் அதிரையும் ஆட்டுக்குட்டியும் கதை நினைவுக்கு வருகிறது.தமிழனுக்கு சற்று மேல் அதிரையன் என்பதை தெளிவாக உணர்த்திய இர்சாத் அருமை பதிவு.

. . அவன்க கொடுத்த வாக்குறுதிகளெல்லாம் அன்றோடு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு ஓட்டளித்தவர்களை (ஏமாற்றும்) சாகடிக்கும் இடம் வாக்குச்சாவடி என்றும் பெயர் வந்திருக்கலாமே!

ZAKIR HUSSAIN said...

துபாயில் உள்ளவர்கள் மலையாளிகளை இப்படி வருத்தெடுக்கும் அளவுக்கு அநியாயம் நடக்கிறதா?...இங்கு மலேசியாவில் அப்படி ஒன்றும் தெரியவில்லை...சில ஜெனரேசன் மாறினால் வித்தியாசம் தெரியலாம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல நகைச்சுவையான பகிர்வு. அரபி பற்றிய ஜோக் பழமையானது என்றாலும் மருபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி. என் பெரியப்பா வீட்டு சாதிக்காக்கா முன்பு பல வருடமுன் சொன்ன ஜோக் அது. வாக்கு சாவடிப்பற்றி எனக்கு முன்பு இதே சந்தேகம் தோன்றி இருக்கு நான் நினைச்சுக்குவேன் வேட்பாளர் வெற்றி பெற்று கொடுத்த வாக்கை சாகடிப்பதுதான் என்று.

sabeer.abushahruk said...

இர்ஷாத்,

வேலை தேடியபோதே இத்தனை குசும்பான பதில் என்றால் வேலை கிடைத்து தேராவின் கட்ட தோசை காலங்களில் கேட்டிருந்தால், 

"அரபி தெரியுமா?"
"தெரியும் பக்க்ஷே நினக்கு பரையாம் பாடில்லா" என்றும்,

எல்லா கார்டுகளும் கிடைத்து ரூம் மேட்ஸ்லாம் செட்டாகி சொந்த சமையல் ரிஸ்க் எடுக்கும் காலத்தில் கேட்டிருந்தால், 

"அரபி தெரியுமா?"
"தெரி...யு..ம்.. ஆனா தெரியாது"
என்றும் சொல்லியிருப்பீர்களோ?

என் ஃபிரன்ட் ஒருத்தன் தமிழை அப்படியே பேசி பேஸ் கோர்டிலே 'ஒரு கத்தியை சாணை பிடிக்கும் சப்தம்' மெயின்டைன் பண்ணுவான். கேட்டால் மலையாளமாம் :)

கல்லூரியின் ஸ்ட்ரைக் கால எதிர்பாராத விடுப்பில் கம்பனின் ரிசெர்வேஷன் கிடைக்காமல் டே எக்ஸ்பிரஸ்ஸில் எக்மோரிலிருந்து தஞ்சை செல்லுகையில் பிரித்து வாசிக்கும் விகடனின் சுகம்... உங்கள் பதிவில்! வாழ்த்துகள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// கம்பனின் ரிசெர்வேஷன் கிடைக்காமல் டே எக்ஸ்பிரஸ்ஸில் எக்மோரிலிருந்து தஞ்சை செல்லுகையில் //

அதானே... குங்குமம் இருக்கு இதயம் இருக்கா ?ன்னு கேட்கும் சம்பாஷனைகளும் ஞாபகத்திற்கு வரனுமே !?

அது சரி கம்பன் எப்போ தஞ்சைக்கு போனான் ? (ஒரு வேளை நாங்க பொறக்கிறதுக்கு முன்னாடியா ?)

sabeer.abushahruk said...

//நேர்மையானவர்கள் - மர்மயோகி//
எங்கள வச்சி காமெடி கீமெடி பண்ணலையே???

அப்துல்மாலிக் said...

//ZAKIR HUSSAIN சொன்னது…

துபாயில் உள்ளவர்கள் மலையாளிகளை இப்படி வருத்தெடுக்கும் அளவுக்கு அநியாயம் நடக்கிறதா?...இங்கு மலேசியாவில் அப்படி ஒன்றும் தெரியவில்லை...சில ஜெனரேசன் மாறினால் வித்தியாசம் தெரியலாம்//

ஜாகீர் பாய், வளைகுடாவில் இவனுங்க பண்ணும் அட்டூழியம்/அநியாயம் சிங்கை மலேசியாவில் மிக மிக குறைவு என்று நினைக்கயில் நம்மாட்களின் ராஜ்ஜியம் நினைத்து பெருமை, அந்த நாட்டையாவது விட்டுவைத்தானுங்களே என்று.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இது போல் தம்பி இர்ஷாத்தின் நகைச்சுவை பதிவுகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும்.

இது ஒன்னும் ஜால்ரா இல்லைங்கோ...

Yasir said...

இர்ஷாத் எழுதின அதை குறைந்தது பத்து முறையாவது படிக்க தூண்டும்...எழுத்து நடை அப்படி....வாழ்த்துக்கள் நண்பரே....

சொல்லுவோம்ல.....இது “ஜால்ரா” இல்லீங்க....

எதோதோ நடக்குது “ மர்ம” மா இருக்குது....

Ahamed irshad said...

ஆஹா.. இங்கே என்ன‌ ந‌ட‌க்குது.. தேங்க்ஸ் தேங்க்ஸ் எல்லோருடைய‌ க‌மெண்ட்ஸ்க்கும்..என் பேச்சையும் கேட்க‌ இங்கே நாலுபேர் இருக்கும்போது என‌க்கேன் க‌வ‌லை.. :)

Ahamed irshad said...

தாஜுதீன் சொன்னது…
இது போல் தம்பி இர்ஷாத்தின் நகைச்சுவை பதிவுகள் அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும்.

இது ஒன்னும் ஜால்ரா இல்லைங்கோ... //

*மொத‌ வெட்டு...*

Yasir சொன்னது…
இர்ஷாத் எழுதின அதை குறைந்தது பத்து முறையாவது படிக்க தூண்டும்...எழுத்து நடை அப்படி....வாழ்த்துக்கள் நண்பரே....

சொல்லுவோம்ல.....இது “ஜால்ரா” இல்லீங்க....

எதோதோ நடக்குது “ மர்ம” மா இருக்குது....//

*ரெண்டாவ‌து வெட்டு..*

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//..என் பேச்சையும் கேட்க‌ இங்கே நாலுபேர் இருக்கும்போது என‌க்கேன் க‌வ‌லை.. :) //

அட டா ! தம்பி பேசிகிட்டா இருந்தா இவ்வ்ளோ நேரமா என் காதுல உளுவலையே நல்லா தூங்கிட்டேம்பா... சரி சரி அடிக்கடி மேடையேறி பேசிக்கப்பா (ம்ம்ம்ஹும் தூங்காம இனிமே இருக்கேன்) :))

துபாயில வேலை தேடிட்டு கத்தாரில் வேலை செய்றீங்களே ! அப்பாய்ன்மெண்ட் இங்கே பேமெண்ட் அங்கேயா ?

Ahamed irshad said...

துபாயில வேலை தேடிட்டு கத்தாரில் வேலை செய்றீங்களே ! அப்பாய்ன்மெண்ட் இங்கே பேமெண்ட் அங்கேயா ?//

ஆஹா.. காக்கா என் நிலைமையை இப்போ கேட்டால் அல‌றிய‌டித்துக் கொண்டு ஓடிறிவீங்க‌..

பொதுமேடையாவ‌தால் சொல்ல‌ முடிய‌வில்லை.. ம‌ன்னிக்க‌வும் :(

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பிளாக்கில் புடிக்காத வார்த்தை "மன்னிக்கவும் :(" !!!

:)) சும்மா தான் தம்பி சொன்னேன்... (உnnஐ)திரும்பி பார்க்கவைக்கத்தான் :) வச்சுட்டோம்ல ! (உன்னைய மாதிரியே எழுதுறேன்ல !)

எப்பவுமே உன்னோட வலைப்பக்கம் வந்தால் ரிலாக்ஸ இருக்கும்னு இங்கிருக்கும் முக்க்கியஸ்தர்கள் எல்லோருக்கும் தெரியும் !

Ahamed irshad said...

உங்க‌ பாராட்டுக்க‌ள் என‌க்கு உத்வேக‌ம் த‌ருது காக்கா.. நீங்க‌ ச‌க‌ல‌த்திலும் அச‌த்துகிறீர்க‌ள்.. உங்க‌ கைவ‌ண்ண‌த்தில் க‌தை,க‌விதை,க‌ட்டுரை ஏதுவாகினும் எழுதும்ப‌ட்ச‌த்தில் ஒரு மாறுத‌லுக்கு என் த‌ள‌த்தில் வெளியிடுகிறேன்.. வ‌ர்ற‌ ரெஸ்பான்ஸ் என்னான்னு பாருங்க‌..நானும் தொட‌ர்ந்து உங்க‌ளை க‌வ‌னிக்கிறேன்..அதிரைவாசிக‌ள் திற‌மையை அவிழ்த்து விட்டால் இல‌க்கிய‌மே உற்று நோக்கும் என்ப‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//அதிரைவாசிக‌ள் திற‌மையை அவிழ்த்து விட்டால் இல‌க்கிய‌மே உற்று நோக்கும் என்ப‌தில் ஆச்ச‌ரிய‌மில்லை.. //

கணினிக்கே தமிழ் கற்றுக் கொடுத்து தேனீ(யாக) பிறந்தவங்க ஊர் நம்மூர் !

கற்றது தமிழ்
கலக்குவது கணினியில்
ஒருங்குறி எழுத்துருக்குள்
உலகையே வலைத்துப் போட்டது !

நம்ம அதிரைவாசி(தானே) !

தேனீ(யாயிருந்த)உமர்(தம்பி) பிறந்த மண்ணில் தமிழ் இப்படியில்லை என்றால் வேறு எப்படி !?!?

Ahamed irshad said...

ம்ம்..க‌ழுவுற‌ மீனில் ந‌ழுவுற‌ மீனா இருக்குறீங்க‌..

நான் எழுதி அனுப்புறேன்னு சொல்ல‌வே இல்லையே..

உம‌ர்த‌ம்பி காக்கா அவ‌ர்க‌ளின் பெருந்த‌ன்மைக்கு வார்த்தைக‌ளே இல்லை.. என்னுட‌ன் தொட‌ர்பிலிருக்கும் ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளிட‌ம் தேனீ உம‌ர்த‌ம்பி அவ‌ர்க‌ளை ப‌ற்றி விலாவாரியாக‌ எடுத்துக்கூறினேன்..ஏற்க‌ன‌வே அறிய‌ப்ப‌ட்டாலும் அவ‌ரின் குண‌ந‌ல‌ன்க‌ள் க‌ண்டு ரொம்ப‌வும் விய‌ந்த‌ன‌ர். அவ‌ர் பிற‌ந்த‌ ஊரில் அதுவும் ஓரே தெருவிலிருந்தேன் என‌ நினைக்கும்போது பெருமைதான் போங்க‌.. ச‌கோ.ம‌லிக்காவும் சொல்லியிருக்காங்க‌ ரொம்ப‌ பெருமையா..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி உமர்தம்பி மாமாவைப் பற்றிய உருக்கமான கவிதையை அவர்களின் காக்கா வாவன்னா சார் எழுதியது இதோ !
----------------------------------------

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு...

வா.. வின் ஓவியம்

உ(த்த)மர்தம்பி

ஓரிரண்டு வயதில் அம்மாவை இழுத்து வந்து,
அமர வைத்துப் பால் உண்டாய்!
ஈறைந்து வயதில் அண்ணனைக் கூட்டி வந்து
உன் உணர்வுக்குத் தீனி போட்டாய்!

ஆறைந்து வயதுக்குப் பின், அறிவின்
ஊற்றாய்த் திகழ்ந் திருந்தாய்!
குரல் வெளி வரும்போதே உன்னிடமிருந்து
குறளும் சேர்ந்தே வந்தது!

ஆறாவதில் அமர்ந்து கொண்டு, ஏழாவதின்
அறிவியல் பாடம் கற்றாய்!
படிப்பில் மார்க் கோணிய பின்னரும்
மார்க்கோனியை முந்த முயன்றாய்!

உயிரியலைக் கற்று உணர்வுக்குப்
புத்துயிர் அளித்து நின்றாய்!
சர்க்கரையாகப் பிறருடன் பேசிய நீ,
சர்க்கரையால் கரைந்து போனாய்!

தென்றலாய்த் தவழ்ந்து வந்த நீ,
இனிப்புப் புயலால் அலைக்கழிந்தாய்!
தெரிந்திருந்தும் தேனீயை நீ
ஏனப்பா தேர்ந் தெடுத்தாய்?

தகாதோரை தேனீயாய்க் கொட்டினாய்!
தமிழ்மீது ஏன் தேனைக் கொட்டினாய்?
தொட்டிலி லிருந்து நெட்டு வரை
என்னுடன் வாழ்ந் திருந்தாய்!

என்னைத் தனி மரமாய் விட்டுவிட்டு
ஏன் தம்பி நீ மட்டும் மறைந்து போனாய்?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//ம்ம்..க‌ழுவுற‌ மீனில் ந‌ழுவுற‌ மீனா இருக்குறீங்க‌..//

நழுவல... தம்பி ! நிச்சயம் எழுத்துப் பரிமாற்றம் தொடரும் (உன் வலையில் சிக்கிட்டேனே)

ஷேரிங்க் ஈஸ் மை சீக்கிரட் ஆஃப் அவர்(களின்) எனர்ஜி(தானே)

Ahamed irshad said...

ஒவ்வொரு வ‌ரிக‌ளிலும் உண்மைக‌ள் காக்கா..

இன்னும்மொரு ச‌ந்தோஷ‌ செய்தி.. கூடிய‌ விரைவில்(விரைவில் என்றால் குறைந்த‌து ஆறு மாத‌ங்க‌ளுக்குள்) என் ஹைக்கூ பொய‌ட்ரி த‌னி புத்த‌கமாக‌ வ‌ரும்/வ‌ர‌லாம்.. அந்த‌ புத்த‌க‌த்தில் உம‌ர்த‌ம்பி அவ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ இடையுரை க‌ட்டாய‌ம் இருக்கும் அவ‌ர்க‌ளின் புகைப்ப‌ட‌த்தோடு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

///கூடிய‌ விரைவில்(விரைவில் என்றால் குறைந்த‌து ஆறு மாத‌ங்க‌ளுக்குள்) என் ஹைக்கூ பொய‌ட்ரி த‌னி புத்த‌கமாக‌ வ‌ரும்/வ‌ர‌லாம்//

பாராட்டுக்கள் ! காத்திருக்கோம் பிறக்கப்போகும் பொயட்ரி குழந்தைக்காக !

Ahamed irshad said...

ம்ம் ந‌ன்றி காக்கா.. நாமெல்லாம் பின்னூட்ட‌த்தில் க‌ருத்து விளையாட்டுக‌ளிலிருந்தாலும் ப்ளாக்க‌ர் ரெண்டு மூணு நாளா கொஞ்ச‌ம் ஓவ‌ரா வெளாட்டு காட்டுது..கோளாறு ச‌ரி ப‌ண்ணிட்டேன் என்று இன்னும் அறிவிப்பு வ‌ர‌ல‌..

http://buzz.blogger.com/

crown said...

உயிரியலைக் கற்று உணர்வுக்குப்
புத்துயிர் அளித்து நின்றாய்!
சர்க்கரையாகப் பிறருடன் பேசிய நீ,
சர்க்கரையால் கரைந்து போனாய்!
------------------------------------
தகாதோரை தேனீயாய்க் கொட்டினாய்!
தமிழ்மீது ஏன் தேனைக் கொட்டினாய்?
தொட்டிலி லிருந்து நெட்டு வரை
என்னுடன் வாழ்ந் திருந்தாய்!
-----------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். தமிழுக்கு முத்தாய்பாய் இருந்த வரிகள்.அமுதுண்டு விசத்திற்கு விருந்தாய் போனதுபோல் இந்த இறவல் பா. உயிர் பூவாய் இருந்து சரிந்த பூ,மறைந்த பூவானாலும் இன்னும் மணம் வீசும் பூ! கண்ணீரை வரவழைத்த நிசங்கள். அல்லாஹ் அவர்களின் சுவனப்பதவிக்கு துணைனிற்பானாக ஆமீன்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு