(*) "உப்பிட்டவரை உள்ளளவும் நினை"
பழமொழிக்கு ஏதுவாய்
என்றும் நம் நினைவில்
நின்று வாழ்ந்திடும்,
உப்புக் காற்று தந்த
ஊரோர ரயிலடி..
(*) "கம்பன் வீட்டு கட்டுத்தறியும்
கவி பாடுமாம்"
ஆனால்
எங்கள் ஊர் கடற்கரையோரத்தில்
கம்பனே கவி பாடுவான்
-ரீங்கார ரயிலோசை.
(*) ஆலமர விழுதும்
அழகாய் கவி எழுதும்.....
அசைந்தாடும் கருவேலம்
அச்சமூட்டும்..
(*) கடற்கரையும் ரயிலடியும்
வேறு வேறு என்னும்
கருத்தை உடைத்த களம்.
(*) வீசும் காற்றதனை....
கடற்கரையில் ஓர்
ரயில் என்பதா?
இல்லை
ரயிலடியில் காற்றுக்
கடல் என்பதா?
ஒரு குதூகலக்
குழப்பம்.
(*) உண்டு களைத்தவரும்
ஓய்வெடுப்பர் ரயிலடியில்.
கன்றும் தாய்ப்பசுவும்
களைப்பாறும் நடைமேடை.
(*) தேர்வுக்கு படிப்பவரும்
தேடி வரும் ரயிலடியாம்.
ஒருமனதாய் படிப்பதற்கு
உகந்ததோர் உயர்விடமாம்.
(*)சிறுவர் சிறுமியர்க்கோ
சின்னதோர் சுற்றுலா..
ரயில் பார்க்கும்
ரம்மியம்..
(*) பயணம் போகும் தந்தை,
பல வருடம் பிரிவு,
எதுவும் பெரிதல்ல,
ரயிலடி போகப்போகும்
குழந்தைக்கு.
(*) இன்னும் சில நாழிகையில்
இங்கு வரும் புகைவண்டி,
எதிர்பார்ப்புடன் இருக்கும்
பிஞ்சுகளின் நெஞ்சுகள்.
(*) புகைவண்டி வரும் முன்னே
'இறங்கிடும்' கை.
'ஏறிடும்' கண்.
"எதிரே வரும் ரயிலை
ஏறிட்டுப் பார்க்காதே,
பேய் பிடிக்கும்"
உம்மாவின் அழகான பொய்.
(*) பயணக்காசு பத்துரூபாய் தந்தாலும்,
கூடுதலாய் ஒன்று
கேட்டு வாங்கி
தண்டவாளத்தில் வைக்கும்
'காந்த மனசு'.
(*) ரயில் இழுக்கும் முன்னே
இழுத்து செல்லும் அன்னை.
பிரிய மனமின்றி
தண்டவாளத்தோடு ஒட்டிக்கொள்ளும்
காசும் கண்களும்.
(*) எத்தனையோ நினைவுகளுக்கு
காரணமான கடற்கரை
ரயிலடியில் இப்போது.......
மாருதம் மட்டுமே
ஆறுதல்.......நிலை
மாற்றுமா.. வந்த
தேர்தல்?
(*) அகலைப்பாதையாய்
தண்டவாளங்கள்
மாறுவதற்கு முன்னால்,
அகலப்பட வேண்டும்
உரியவர்களின் உள்ளம்!!
--அதிரை என்.ஷஃபாத்
பழமொழிக்கு ஏதுவாய்
என்றும் நம் நினைவில்
நின்று வாழ்ந்திடும்,
உப்புக் காற்று தந்த
ஊரோர ரயிலடி..
(*) "கம்பன் வீட்டு கட்டுத்தறியும்
கவி பாடுமாம்"
ஆனால்
எங்கள் ஊர் கடற்கரையோரத்தில்
கம்பனே கவி பாடுவான்
-ரீங்கார ரயிலோசை.
(*) ஆலமர விழுதும்
அழகாய் கவி எழுதும்.....
அசைந்தாடும் கருவேலம்
அச்சமூட்டும்..
(*) கடற்கரையும் ரயிலடியும்
வேறு வேறு என்னும்
கருத்தை உடைத்த களம்.
(*) வீசும் காற்றதனை....
கடற்கரையில் ஓர்
ரயில் என்பதா?
இல்லை
ரயிலடியில் காற்றுக்
கடல் என்பதா?
ஒரு குதூகலக்
குழப்பம்.
(*) உண்டு களைத்தவரும்
ஓய்வெடுப்பர் ரயிலடியில்.
கன்றும் தாய்ப்பசுவும்
களைப்பாறும் நடைமேடை.
(*) தேர்வுக்கு படிப்பவரும்
தேடி வரும் ரயிலடியாம்.
ஒருமனதாய் படிப்பதற்கு
உகந்ததோர் உயர்விடமாம்.
(*)சிறுவர் சிறுமியர்க்கோ
சின்னதோர் சுற்றுலா..
ரயில் பார்க்கும்
ரம்மியம்..
(*) பயணம் போகும் தந்தை,
பல வருடம் பிரிவு,
எதுவும் பெரிதல்ல,
ரயிலடி போகப்போகும்
குழந்தைக்கு.
(*) இன்னும் சில நாழிகையில்
இங்கு வரும் புகைவண்டி,
எதிர்பார்ப்புடன் இருக்கும்
பிஞ்சுகளின் நெஞ்சுகள்.
(*) புகைவண்டி வரும் முன்னே
'இறங்கிடும்' கை.
'ஏறிடும்' கண்.
"எதிரே வரும் ரயிலை
ஏறிட்டுப் பார்க்காதே,
பேய் பிடிக்கும்"
உம்மாவின் அழகான பொய்.
(*) பயணக்காசு பத்துரூபாய் தந்தாலும்,
கூடுதலாய் ஒன்று
கேட்டு வாங்கி
தண்டவாளத்தில் வைக்கும்
'காந்த மனசு'.
(*) ரயில் இழுக்கும் முன்னே
இழுத்து செல்லும் அன்னை.
பிரிய மனமின்றி
தண்டவாளத்தோடு ஒட்டிக்கொள்ளும்
காசும் கண்களும்.
(*) எத்தனையோ நினைவுகளுக்கு
காரணமான கடற்கரை
ரயிலடியில் இப்போது.......
மாருதம் மட்டுமே
ஆறுதல்.......நிலை
மாற்றுமா.. வந்த
தேர்தல்?
(*) அகலைப்பாதையாய்
தண்டவாளங்கள்
மாறுவதற்கு முன்னால்,
அகலப்பட வேண்டும்
உரியவர்களின் உள்ளம்!!
--அதிரை என்.ஷஃபாத்
19 Responses So Far:
(*) பயணம் போகும் தந்தை,
பல வருடம் பிரிவு,
எதுவும் பெரிதல்ல,
ரயிலடி போகப்போகும்
குழந்தைக்கு. ///
கலக்கலப்பா (N)ஃஷபாத் !!
இன்று கவிமழையோடு அசைபோடும் நினைவலைகள் !
//(*) அகலைப்பாதையாய்
தண்டவாளங்கள்
மாறுவதற்கு முன்னால்,
அகலப்பட வேண்டும்
உரியவர்களின் உள்ளம்!!//
சுடாமல் தொட்டது மனசை ! இதற்கென்று வரைபடம் முயற்சித்தேன் நேரமில்லை, அப்படி நிகழ்ந்தால் இங்கே ஒட்டி (ஓட்டி அல்ல) விடுகிறேன் ! :)
//(*) வீசும் காற்றதனை....
கடற்கரையில் ஓர்
ரயில் என்பதா?
இல்லை
ரயிலடியில் காற்றுக்
கடல் என்பதா?
ஒரு குதூகலக்
குழப்பம்.//
ஆச்சர்யம் கொண்டேன் அசத்தல் வரிகளுக்கு சொந்தக்காரனை நினைத்து !
தடக் தடக் தடக்
தடக் தடக் தடக்
... எனத்தொடர்ந்த ரம்மியமான் பயணம்
//(*) அகலைப்பாதையாய்
தண்டவாளங்கள்
மாறுவதற்கு முன்னால்,
அகலப்பட வேண்டும்
உரியவர்களின் உள்ளம்!!//
...என்று இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது கூட தெரியாமல் மனம் சொக்கிக் கிடந்தது உண்மை.
//(*) உண்டு களைத்தவரும்
ஓய்வெடுப்பர் ரயிலடியில்.
கன்றும் தாய்ப்பசுவும்
களைப்பாறும் நடைமேடை.//
wow!!!
//தேர்வுக்கு படிப்பவரும்
தேடி வரும் ரயிலடியாம்.
ஒருமனதாய் படிப்பதற்கு
உகந்ததோர் உயர்விடமாம்.//
//புகைவண்டி வரும் முன்னே
'இறங்கிடும்' கை.
'ஏறிடும்' கண்.//
To Bro அதிரை என்.ஷஃபாத்...Are you "Beach street's citizen?'...otherwise it is very hard to write like this..
To Zakir Kaka,
I'm a Citizen of CMP lane, not necessary to be a beach st citizen to write like that, I too went to railway station and prepared for exams when I was doing my schooling. I still remember a day on which my beloved Haaji sir conducted a 'Previous Question Paper Revising class' @ Railway station as there were public exams going on in our School. To me, Railway station had been
a) a Class room
b) a place where I used to go and prepare for exams
c) a place where my uncle used to take me out to, when I was small
d) a place which is more than a railway stop!!!!
நகைச்சுவையா சொல்லனும்னா....
ரயிலடியில் படித்து, மண்ணடியில் வாழ்ந்து, இப்போது ஜான் கென்னடி வாழ்ந்த இடத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்...:)
ரயிலடி எப்பவுமே நம்ம ஃபேவரிட்..அத வெச்சு கவிதையை எழுதி சும்மா கெடக்கிற ஊர்வாசி'ய கிளப்பி விட்றாதே ஷஃபாத்..
குறிப்பிட்ட வரியை அன்றில்லாமல்
எல்லா வரியையும் குறிப்பிடலாம்..
அருமை :)
மச்சான் சஃபாத்
நீயும் நானும் ஒன்றாக ஆற்றங்கரையில் பிறந்தோம்
ஒன்றாக படித்தோம்,
பார்பதற்கு ஒன்றாகவும் பிறர்க்கு தெரிந்தோம்,
ஒன்றாக மன்னடி தெரு,
ஒன்றாக பெசன்ட் நகர் பீச், ஆனால்
நீ முதல் மதிப்பெண்ணும் நான் 35 மதிப்பெண்ணும்
தடுமாறி எடுத்ததற்கு அந்த ரயிலடி படிப்பு ரகசியத்த இப்பதானடா சொல்ற படுவா!!..
அதானதான் நீ ஒபாமா வாழும் நாட்டிலும் நான் ஒசாமா பிறந்த நாட்டிலும் இருக்கின்றோமோ??!!
MSM(MR)
நகைச்சுவையா சொல்லனும்னா....
ரயிலடியில் படித்து, மண்ணடியில் வாழ்ந்து, இப்போது ஜான் கென்னடி வாழ்ந்த இடத்தில் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்...:)
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.கண்ணடிப்படும் ஜாக்கிரதை!(சூரத்து நாஸ்,குல் அ ஊது பிரப்பில்ஃபலக் ஓதிகொள்ளவும்).மண்ணடியில் வளர்ந்து இப்ப கென்னடி பிறந்த ஊரில் வாழ்ந்து வருகிறேன்னு சொல்லியிருக்கலாம். மண்ணடியில் வாழ்தவன் நீமட்டுதான்(சும்மா தமாஸூ). இந்த மண் மேலே மேன் மேலும் நலம் பல பெற வாழ்துகிறேன். சற்று நேரம் கழித்து வருகிறேண் உன் கவிதைக்கு.
மர(ணித்துக் கிடக்கும்)ணத்தண்டவாளப் பகுதியை மகிமைத் தண்டவாளமாக்கியது ஷூப்பர் ஷஃபாத்.
// நீ முதல் மதிப்பெண்ணும் நான் 35 மதிப்பெண்ணும்
தடுமாறி எடுத்ததற்கு அந்த ரயிலடி படிப்பு ரகசியத்த இப்பதானடா சொல்ற படுவா!!.. //
கணக்கியலும், வணிகவியலும், பொருளாதாரமும் வகுப்பை தாண்டி மற்றொரு கூட்டுப்படிப்புக்கு வகுப்பெடுத்த இந்த இரயிலடி ரகசியம் !
இந்த திறந்தவெளி (இரயிலடி) பல்கலைக் கழகத்தில் தினமும் படித்தவர்கள் மவுனமாக பள்ளி நாட்களில் முதல் மார்க் எடுப்பதில் கில்லாடிய இருந்து வீட்டிலுள்ளவங்களை கிள்ளிவிட்டு எங்கள் மீது சுள்ளியெடுத்து அடிக்க வைத்தவங்க சென்னை புதுக் கல்லூரியிலும் முதலிடம் (சென்னைப் பல்கலைக் கழகத்திலும் தங்க மெடல்)
சஃபாத் உங்களுக்கு ஒரு சபாஷ்....அகல ரயில்பாதையில் அதிரையில் இருந்து பயணிக்க போறமோ இல்லையோ...உங்கள் கவிதையின் தடக்..தடக் சத்ததில் ஆனந்தமாக பயணித்தேன்.படிக்க படிக்க நான் அனுபவித்ததை அசைபோட்டுக்கொண்டே அசந்துபோய் ரசித்தேன்..அருமை அருமை...இன்னும் நிறைய எழுதுங்கள்
(அஸ்ஸலாமு அலைக்கும். டெலிபதி போல் ரயிலின் தேவையை அதிரை பெரும் கவியும், சிறு கவியும் சேர சிந்தித்தது ஆச்சரியம்).
அதிரையில் வருமா ஆதி ரயில் கம்பன்?
பாதி வந்த ரயிலாய் மாறி போன வம்பன்.
கம்பன் தண்டவாளத்தில் வந்து தட, தட வென அதிரயில்(அதிர்வு)
உற்சாகம் தொத்திக்கொள்ளும் ஊர் சனம் நமக்கு.
இப்போது தண்டவாளத்தில் தேள்,பூரான் , மரவட்டை போன்ற ஜந்துக்கள் ஊர்ந்து செல்ல சோர்ந்து போகுதே நம் மனம்.
மொழி வாழ தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்தான்
திருவாரூர் மண்ணின் மைந்தன்.
அன்று திருவாரூர் சந்திப்பு வந்தாலே தித்திப்பு!
இன்றோ திருவாருர் சந்திப்பும் வாராததால் கசப்பு!
முதல் அமைச்சனாய் நமக்கு வாய்தவன் திருவாய் மலர்ந்தாள்,
மத்தியில் காது கேட்குமே!
எம் மண்ணில் உண்டவனே உப்பிட்டதும் மறந்ததுவோ?
உப்பிவிட்ட(பெருத்த) உன் குடும்பம் மட்டுமே கண்ணில் படுவதுவோ! ஒருவாய் மலந்திருந்தால் கிடைத்திருக்கும் உன் கீழ் பணிசெய்யும் உன் மந்திரியும் வெருவாய் மெல்லுகிறான்.
நீ வாங்கித்தருவாய் என நாங்கள் உன் கட்சிக்கே ஓட்டளித்தோம்.
அகமது துணை மந்திரி! நமக்கு துணை செய்வார் என எண்ணினோம்.
அந்த சேட்டான் கோட்டாவிலாவது கேட்டா தருமே மதிய அரசு!
யாரும் எம் ஊரின் குரலுக்கு செவிசாய்கல!
கம்பனை எந்த கொம்பனாவது எம் ஊருக்கு கொண்டு வந்தால் வரும் தலைமுறையெல்லம் உமக்கே வாக்களிக்கும்.
To Bro அதிரை என்.ஷஃபாத்..
I strongly recommend to approve your citizenship in Beach street, you deserve it.
அஸ்ஸலாமு அலைக்கும்,
தம்பி ஷஃபாத், எல்லா வரிகளும் சூப்பர்...
நம்மூர்இரயிலடி நம் மக்கள் படிப்பதற்கு ஒரு வகையில் பிரயோஜனமாக இருந்துள்ளது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை என்றாலும், முதல் ரேங்க் எடுப்பதற்கும் உதவியுள்ளது என்பதற்கு தம்பி ஷஃபாத் ஒர் உதாரணம்.
// meerashah சொன்னது…
நீ முதல் மதிப்பெண்ணும் நான் 35 மதிப்பெண்ணும்
தடுமாறி எடுத்ததற்கு அந்த ரயிலடி படிப்பு ரகசியத்த இப்பதானடா சொல்ற படுவா!!..//
தம்பி மீராசா உங்கல பார்த்தா 35 மார்க் எடுத்த ஆள் மாதிரி தெரியவில்லையே... அசத்தல் bold பின்னூட்டம்...
நீங்க தற்போது வசிக்கும் நாடு புனித பூமி, எல்லா வகையிலும் உயர்ந்த பூமி என்பது எல்லோரும் அறிந்ததே..
"பயணக்காசு பத்துரூபாய் தந்தாலும்,
கூடுதலாய் ஒன்று
கேட்டு வாங்கி
தண்டவாளத்தில் வைக்கும்
'காந்த மனசு"
காசு காந்தமாக மாறும் என்று நான் பலமுறை காசை தொலைத்துள்ளேன்!
உள்ளத்தில் உள்ள வார்த்தைகளை அழகாக வார்த்தெடுத்துள்ளீர்கள்.
//தாஜுதீன் சொன்னது…
தம்பி மீராசா உங்கல பார்த்தா 35 மார்க் எடுத்த ஆள் மாதிரி தெரியவில்லையே... //
என்னத்த செய்றது, மொட்ட மனப்பாடம் நமக்கு வராது..
அதான் சுயமாக,பிராக்டிகலா இருக்கும் படிப்புகள்ள மட்டும் 1st Class..
அருமை, ஏக்கங்கள் புரியுது
Post a Comment