Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மக்கள் நிலை - தெருவில் ! 30

அதிரைநிருபர் பதிப்பகம் | February 29, 2012 | , , ,


அதிரையில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவம் பெரும்பாலான வெளிநாடு வாழ் சகோதரர்களை மட்டுமல்ல ஊரில் இருக்கும் சொந்தங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சகோதர வலைத்தளங்களில் வெளியான ஒரு செய்தி - அதுதான் சகோதர இயக்கங்கள் இரண்டுக்கிடையே கைகலப்பு அதனைத் தொடர்ந்து ஊரில் நன்கு அறியப்பட்ட சகோதரர் ஒருவரை, முகத்தை மூடிக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வந்த இருவர் சரமாரியாக தாக்கிவிட்டு ஓடிவிட்டதாகவும் அதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியிருந்தது.

சம்பவம் நடந்தது ஏதோ வெறிச்சோடிப்போன ஆள் நடமாட்டமில்லாத இடத்திலோ அல்லது, ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திலோ அல்ல, நமது பெண்டிரும் குழந்தைகளும் சரளமாகவும் நிம்மதியாகவும் புழக்கத்தில் இருக்கும் அமைதியான சூழலில் ஊருக்கு நடுவில் இருக்கும் தெருவில்தான் நடந்திருக்கிறது.

சகோதர இயக்கங்களுக்கிடையே சமுதாயத் தொண்டாற்றுவதிலும், அவரவர்களின் செயல்பாடுகளில் கருத்தொற்றுமை இல்லாவிடினும் போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது அது என்றாவது ஓர் நாள் ஒன்றிணைவார்கள் என்ற ஏக்கம் இருப்பதை அவர்கள் உணர்ந்து திருந்தும் வரை அதனை ஒருபக்கம் வைப்போம்.

ஏன் இந்த வெறியூட்டும் செயல்பாடுகள் எங்கிருந்து கற்றார்கள் ? நம்மைச் சார்ந்த ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கும் சகோதரர்களை எளிதில் எதிரியாக்கியது எது !?

துண்டு துண்டாக இருக்கும் இயக்கங்கள் அனைத்துமே போட்டி போடுகிறீர்கள் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் நல்லதைச் செய்யனும் சமுதய மக்களிடம் நல்லவர்களாக பெயரெடுத்து தாங்கள் மட்டுமே நிலைத்திருக்கனும் என்று. நல்லவர்களாக வெளிக்காட்டிட முயலும் உங்களால், உங்களது செயல்களால் ஏன் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை ?. எங்கே இடறுகிறீர்கள் ?  இந்த வெறியூட்டும் செயல்களுக்கு எது காரணம் ?

இனவெறியையும் அடிமைத்தனத்தையும் அடியோடு ஒழித்தொழித்த இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் நம்மிடையே ஏன் இயக்க வெறி ? இதனால் இழந்தைவகளை நீங்களே பட்டியலிட்டுப்பாருங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலமே மிஞ்சுகிறது.

அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை மட்டுமே நாடி சமுதாயப் பணியாற்ற உருவெடுத்த இயக்கங்கள் இன்று அரசியல் ஆதாயங்களை முன்னிருத்தி இழந்து கொண்டிருப்பதோ நமது ஒற்றுமையை. எதனைப் பெற முயல வேண்டிய இளைய சமுதாயம், மூன்றாம் தர வேலைகளிலும், கூலிப்படைகளால் அரங்கேற்றப்படும் காட்சிகளைப் போன்று தங்களின் கரங்களில் எடுத்துக் கொண்டு ஈடுபடுவதை எண்ணி நம் சமுதாய இளைஞர்களின் நிலைமை கவலையளிக்கிறது.

மனித நேயத்தை பறைசாற்றி, சகிப்புத் தன்மையின் உச்சம் எதுவென்று உலகுக்கு எடுத்துக்காட்டிவரும் எளிய மார்க்கத்தில் இருந்து கொண்டு இவ்வாறான வன்முறைகளால், உடன் பிறந்த சகோதரர்களுக்கும் நம் வீட்டுப் பெண்களுக்கும் அச்சத்தையூட்டும் காரியங்களிலிருந்தும் விடுபடுங்கள். உங்களின் எதிர்காலத்தையும் உங்களை நம்பியிருக்கும் குடும்பங்களையும் மனதில் நிறுத்தி சகிப்புத் தன்மையை கையாளுங்கள்.

போராட்ட குணம் வேண்டும், அது எவ்வகையில் அவசியம் என்பதை இனிய மார்க்கம் கற்று தரும் பாதையில் நிதானத்தை கடைபிடித்து சானக்கியமாக செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் வலிமை தருவானாக.

சிந்தியுங்கள் அன்புச் சகோதரர்களே !

-அதிரைநிருபர்-குழு

30 Responses So Far:

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

இயக்கம் என்ற மயக்க வெறியால்.மதி மயங்கி போகும் இஸ்லாமிய சகோதரர்கள்.ஒழியட்டும் இயக்கங்கள் ஓங்கட்டும் ஒற்றுமைகள்.

ஒவ்வொரு இயக்கத்தினரும் ஆட்சி பொறுப்புக்கு நாம் வரவேண்டும் .வந்தபின் நம்மை அதிலிருந்து யாரும் அகற்றக் கூடாது என்றே விரும்புகின்றனர்.

ஆட்சி பொறுப்பிற்கான முதல் முக்கியத் தகுதிகள் எவை ?

ஒழுக்கத்தின் விழுப்பம் ,ஆக்கப் பனியின் சிறப்பு இவை இரண்டும்தான்.

இவைகளும் - இறைவன் விரும்பும் இன்னும் பல தகுதிச் சிறப்புகளும் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கின்றன?

மனத்தூய்மை கசடாக இருந்தால் சமுதாய சிந்தனை கெட்டுவிடும் என்பதை இயக்கவாதிகள் உணர்ந்துக் கொள்ளட்டும்.பொதுமக்கள் நிம்மதி பெறுவதற்காக.

Noor Mohamed said...

இஸ்லாத்தில் இல்லாதது இல்லை. அதற்கு இணையும் இல்லை இந்த உலகத்தில்.

ஏகத்துவம் என்ற பெயரில் ஏகப்பட்ட பிரிவுகளாக பிரிந்து, நம் நாட்டின் சிறுபான்மை பிரிவாகிய நாம் சிதறிக் கிடக்கின்றோம்.

why this கொலைவெறி? என்று பாடியது யாருக்கோ என்று எண்ணினோம். அது நம்மிடையே பரவிக் கிடப்பதை பார்க்கும் போது மனம் வேதனையடைகிறது.

நம்மிடையே அமைதியும் ஒற்றுமையும் நிலவ நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றென்றும் துஆ செய்து அவற்றை செயல் படுத்துவோமாக.

இப்னு அப்துல் ரஜாக் said...

மிகவும் வேதனையான செய்தி.அல்லாஹ் நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஏற்பட உதவி செய்வானாக

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோதரரை தாக்கிய மர்ம நபர்கள் விரட்டிச்சென்று பிடிக்கப்பட்டு உண்மை நிலை உடனுக்குடன் தோலுறித்துக்காட்டப்பட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இயக்கத்தினர்களாலேயே அவ்வியக்கத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் கிடைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு இயக்கமும் துடைத்தெறியப்பட வேண்டும். நாடும் அதன் மக்களும் நலமுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும். மதங்களுக்கு அப்பாற்பட்ட மனிதம் மதிக்கப்பட வேண்டும்.

கண்டதற்கெல்லாம் மாறி, மாறி வசைபாடிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் போல் இல்லாமல் இது போன்ற துரதிஸ்டவசமான சம்பவங்களுக்கு நாம் மத்திய, மாநில அரசுகளையோ அல்லது ஊர் பஞ்சாயத்தையோ குறை சொல்ல முடியாது.

"ஏன்ய்யா ஊரு நல்லாத்தானே அமைதியா போய்க்கிட்டு இருக்கு? சும்மா இருக்க மாட்டியளா? குடும்ப‌ங்க‌ளையெல்லாம் ஊரில் இறைவ‌னுடைய‌ பாதுகாப்பில் விட்டு விட்டு உங்க‌ளின் ஆத‌ரவு, அனுச‌ர‌ணைக‌ளையும் விமான‌ம் ஏறுவ‌த‌ற்கு முன் அமானித‌மாக‌ உங்க‌ளிட‌ம் ஒப்ப‌டைத்து விட்டு இங்கு வ‌ந்த‌த‌ற்கு நீர் செய்யும் ந‌ன்றிக்க‌ட‌னா? அல்ல‌து ந‌ம்பிக்கை துரோகமா? நீயே உம் நெஞ்சை யாரும‌றியாம‌ல் தனியே ஒரு ஓர‌மாய் நின்று ஒரு முறை தொட்டுப்பார்த்துக்கொள்ளும்!!!"

ஊரில் எப்படியாவது க‌ல‌க‌மும், குழ‌ப்ப‌மும் ஏற்ப‌டுத்த‌ துடிக்கும் அந்த‌ துர்குண‌ம் உடைய‌வ‌ர்க‌ளுக்கு வெளிநாடு வாழ் அதிரை வாசிக‌ளின் ஒருமித்த கருத்தாகிய‌ ஒரே கேள்வியே மேலே கேட்கப்பட்டுள்ளது பதில் சொல்லும்......

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அப்பாவிகளின் செங்குருதியில் சிகப்புக்கம்பளம் விரிக்க நினைக்காதே; பிடிக்காதவர்களெல்லாம் வெட்டி வீழ்த்தப்பட வேண்டுமென்றால் உன்னை ஊருக்கே பிடிக்கவில்லையே என்ன செய்வது?

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பெண்களும், குழந்தைகளும் நடமாடும் பொதுவீதியில் நடந்தேறிய இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட கோழை ரவுடிகளும், இதை தூண்டிய மனசாட்சியற்றவர்களும் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவர்கள்.

உணர்ச்சிவசப்பட்டு பழிவாங்கும் உணர்வு மனிதர்களிடம் சகஜமே என்றாலும், அடிவாங்கியிருக்கும் சகோதரர் அய்யூப் அப்படி என்னதான் தவறு செய்தார், அவரை தெருவீதியில் முகமூடி அணிந்து கொலை செய்ய?

ஏற்கனவே இது போன்று உணர்ச்சிவசப்பட்டு நம் சகோதர்களால் பின் விளைவுகளை அறியாமல் நடத்தபட்ட நிகழ்வுகளிலிருந்து இன்னும் பாடம் கற்கவில்லை என்பது வேதனையே..

பாதிக்கப்பட்ட சகோதரர் தைய்யூப் அவர்கள் விரைவில் குணம் அடைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...

Abdul Razik said...

Kind request to all Forums, to avoid such kind of spiteful activities please elect the right person who has sound knowledge in Islamic view , well educated, brotherhood and morality.

Abdul Razik
Dubai

தாஜுதீன் (THAJUDEEN ) said...

பாதிக்கப்பட்டவரும், பாதிப்பை உண்டாக்கியவரும் நாமும் கீழ் உள்ள குர் ஆன் வசனத்தையும், நபிமொழியையும் ஞாபக்கப்படுக்கொள்வோம்.


அல்குர்ஆன் : 49:10. "நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."


மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (121).

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2442).




உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி (2444).


மன்னிக்கும் மனிதனே சிறந்த மனிதன் என்பதை அடிக்கடி ஞாபக்கடுத்திக்கொள்வோம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

To Bro. Abdul Razik,

As you expect, every one of us is willing so far to elect the right persons for the bright future of our hometown and country. Unfortunately, after selection little by little the most of the candidates are peeling their false skins instead of the truth. Hence, no one will be born like Mahatma Gandhi, Marhoom Qae-de-millath, Nehru, Periyar and Anna etc. in TN, so whoever already in the power I mean participating in the government from top position to bottom they have to become perfect men with humanity to do something for their places and the nation.

Prime minister or president or chief minister can't rule for a street of the biggest country. The ruling power has already been divided perfectly by the constitution of India.

"நம்ம, நம்ம‌ மவுத்துக்கு முன்னாடி இந்த ஊரும், உலகமும் என்னண்டு தான் ஆகப்போவுதோ? தெரியலங்க......"

"பணம் காசு கொஞ்சம் கொடுக்கல், வாங்கலில் கூடப்பிறந்த அண்ணன், தம்பிகளே நீயா? நானா? அமெரிக்காவா? ஈரானா? என்று எதிரும், புதிருமாக வீராப்புடன் ஒரு பெரும் போருக்கு தயாராகும் இன்றைய காலத்தில் மத்தவங்களைப்பத்தி என்னெத்தெ சொல்றது?"

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அடுத்தவனை துன்புறுத்தி கட்சி வளர்ப்பது இஸ்லாமியம் அல்ல.

அடுத்தவன் வளர்ச்சியை தடுக்க சதி செய்வதும் இஸ்லாமியம் அல்ல.

எதிரிக்கும் நன்மை செய்வதே (அல்லது தீமை எதுவும் செய்யாமலிருப்பதே) தூய்மையான இஸ்லாமும் சரியான ஜனநாயகமும் ஆகும்.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
கோழைகள் செய்யும் காரியம். உண்மையான மூமின் செய்யும் காரியம் இது இல்லை.

எந்தப்பிரச்சனையும் பேச்சு வார்த்தையில் தீர்க்க வழி இருக்கும்போது. இது போன்ற காரியங்கள் கோழைத்தனமாது.

இந்த செய்தி பற்றி (ஈடுபட்டது யார்) காரணம் என்ன என்பதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

சில நேரங்களில் உண்மை விபரங்கள் தெரியாமல் கருத்திடவும். கருத்து கூறவும் நேரிடும்.

சேக்கனா M. நிஜாம் said...

மனித நேயத்திற்கு எடுத்தக்காட்ட விளங்கக்கூடிய நமதூரில் இப்படி ஒரு துன்பியல் நிகழ்வு !

மிகவும் வேதனையளிக்கிறது !

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர்களையும் பாதுகாப்பானாக ஆமின் !

Abdul Razik said...

TO Bro Naina
I think u misinterpret on my comment, just I indicated our local (brothers)forums only, your point of view went broadly as nationwide. As of your comments, we are the lower quantity to elect a leader to govern India in Islamic view. Insha allah we hope it will be achieve in future. Any way, Allah will pity us to bring unison in our community .

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

// இந்த செய்தி பற்றி (ஈடுபட்டது யார்) காரணம் என்ன என்பதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.//

SDPI.யின் ரயில் மறியல் போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக ஒரு சகோதரன். SDPI.யின் அலுவலகத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றான்.அவன் நிற்ப்பதை பார்த்து விட்டு தையுப் அவனுடைய மூத்த சகோதரனுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி இருக்கிறார்.இப் பிரச்சினை இதன் மூலம் ஆரம்பமானது என்று மக்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

Yasir said...

ச்ச்சீசீ.....படிக்கும்போதே அருவருப்பாக உள்ளது..இயக்க மயக்கம் ..இஸ்லாம் ஹராம் என்று சொன்ன போதையை விட மோசமானது...போதை உட்கொண்டால் அது அவனையும் அவன் குடும்பத்தையும் தான் பாதிக்கும்...ஆனால் இயக்க போதை சமுதாயத்தையை துண்டு துண்டாக்கி நிலைகுழைத்துவிடும்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

Assalaamu Alaikum.

Dear Bro. Abdul Razik,

Nothing to interfere your comments which you expressed in your previous post with good thought. I just exposed my intension as an answer that's it. We every one is thinking in different ways but in one concept. Pls. don't mistake me.

Abu Easa said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

அன்பான சகோதரர்களே நாமெல்லாம் ஒற்றுமை என்று சொல்லிக்கொன்டே இருக்கின்றோம். ஆனால் பிளவுகள் வீரியமடைந்து மக்கள் வெறி பிடித்துத் திரிவதை இச் சம்பவம் காட்டியிருக்கிறது.

நடுத்தெருவுக்கு இது ஒன்றும் முதல் சம்பவமில்லை. இதே தெருவில் பஞ்சாயத் தேர்தல் முடிவுக்குப் பின் சகோ.சம்சுத்தீனை தாக்க வந்த SDPI கும்பல் அதன் முன்னால் நிர்வாகியை சரமாரியாகத் தாக்கிய சம்பவமும் இத் தருனத்தில் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியது.

இஸ்லாத்திற்காகவும், முஸ்லிம்களின் மேன்மைக்காகவும் போராடுகிறோம் என்று சொல்லும் இயக்கங்கள் இது போன்று தன் சகோதரன் மீதே வெறித்தாக்குதல் நடத்தியிருப்பது வேதனைக் குறியது.

அல்லாஹ் தன் திருமறையில் "நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் யார் உபதேசத்தப் பின்பற்றி அர்ரஹ்மானை மரைவிலும் அஞ்சுகிறர்களோ அவர்களைத்தான்; அவருக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டென்று நீர் கூறுவீராக" என்று தன் தூதருக்குச் சொல்லும் செய்தி ஸூரா யாசீனில் பதிவாகியிருக்கிறது.

என்ன தான் நாம் ஒற்றுமை, ஒற்றுமை என்று சொன்னாலும் இயக்க வெறியர்களுக்கு ஏறுவதாய் இல்லை. சிந்திக இயலாத இளைஙர்களை மூளைச் சலவை செய்து இது போன்ற செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. பிள்ளை வாழ்க்கையில் மேம்பட்டு நம்மை எதிர்காலத்தில் தாங்கிப்பிடிப்பான் என்று பிள்ளைகளுக்காக தங்களையே உருக்கிக்கொள்ளும் ஏராளமான பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளை கேள்விக்குறியாக்கும் இயக்கங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.

அல்லாஹ் தனது திருமறையில் "சிந்தித்துணரும் மக்களுக்கு படிப்பினைகள் ஏராளம் இருக்கிறது", "நீங்கள் சிந்திக்க வேண்டாமா?" என்று பல முறை இந்த மனித சமுதாயத்தை கேட்கிறான். சிந்திப்பவர்களுக்கே நல்லதையும் தீயதை தெளிவாய் பிரித்துணர முடியும். எத்தனையோ இயக்கங்கள் மழைக்குப் பின் வரும் காளான் போல முளைத்துக்கிடக்கிறது சமூகத்தில். அனைத்து இயக்கங்களும் தாங்களே சிறந்தவர்கள் என தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன. இயக்க வெறி பிடித்து மதி மயங்கிய மக்களும் எதையுமே சிந்திக்காமல் ஏவல் ஆட்களைப் போல் செயல்படு மிகவும் வேதனையளிக்கிறது.

அனைது இயக்கங்களின் நாடியும் பொருளாதாரத்தில் தான் இருக்கிறது. எனவே, இயக்க வெறிபிடித்துத் திறியும் எந்த இயக்கத்திற்கும் யாரும் உங்களுடைய பொருளாதாரங்களை கொடுக்காதீர்கள். அது எத்தனை முக்கியமானது என்று சொல்லப்பட்டாலும் சரியே. இயக்கங்களின் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பாருங்கள். வெறுமனே சம்பந்தப்பட்ட இயக்க வாதியின் பேச்சை மட்டுமே நம்பிவிடாதீர்கள். குருட்டுத்தனமாய் உதவி செய்யும் எவரும் அதன் தீமைக்கும் பொறுப்பாகிவிடக்கூடும் என்பதை அஞ்சிக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு இயக்கத்தின் வளர்ச்சியும் சமூகத்திற்கு தீங்காய் அமையுமோ அது வளராமல் இருப்பதே நலம்.

எங்களுடைய இறவனே! எங்களின் உள்ளதில் பிணக்கை ஏற்படுத்தி எங்களை இம்மையிலும், மறுமையிலும் தோழ்வியடையச் செய்யும் அனைத்து தீங்குகளைவிட்டும் எங்களையும், எங்களது சந்ததிகளையும் பாதுகாத்துக்கொள்வாயாக!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

சகோ. அலாவுதீன் கூறியது போல் "உண்மையில் SDPI அமைப்பைச்சார்ந்தவர்கள் தான் முகமூடி அணிந்து வந்து சாதாரன சிறு பகைக்காக சகோ. தைய்யுபை தாக்கினார்களா? அல்லது சமயம் பார்த்து வேறு ஏதேனும் தீய‌ சக்திகள் (இஸ்ரேலின் மோஸாத் போல்) இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டனவா? என அன்றாட உலக நிகழ்வுகள் போல் உள்ளூர் நிகழ்வுகளையும் ஆராய வேண்டியுள்ளது."

எது எப்படியோ சூட்சுமக்காரர்களுக்கெல்லாம் பெரும் சூட்சுமக்காரன் அல்லாஹ்விடம் இவர்களின் சூட்சுமம் பலிக்கப்போவதில்லை.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்

பெரும்பாலும் நம்மூரில் இது போல் நடந்தது கிடையாது எப்பொழுது இயக்கங்கள் மரவேற்போல் பிரிந்தனவோ அப்பொழுதான் இந்த பகைமை என்னும் இலை முளைக்க தொடங்கிற்று ஏன் இந்த இயக்க வெறி பிடித்து அலையும் இந்த இளைய சமுதாயம் நம்மூரில் மட்டுமல்லாது போன நோன்பில் நடந்த சம்பவம் இருவேறு இயக்கங்களுக்குள் நடந்தேறிய இந்த இழிவு செயல் தூப்பாக்கி குண்டு துளைத்து ஒருவர் கொல்லப்பட்டார்

சாதாரணமாக முஸ்லிம் இயக்கங்கள் என்றாலே மாற்று மதத்தார் மத்தியில் நிலவும் குழப்பங்களும், அவர்கள் கருதும் எண்ணமே வேறு இப்படி இருக்க நமக்குள் நிலவும் இயக்க வெறி எதற்கு? நம் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்

இவர்கள் மத்தியில் நிகழும் இந்த மோதல் அவரவர் இயக்க தலைவர்கள் என்ன செய்துகொண்டு இருகிறார்கள் இதை தான் அவர்கள் இளைய சமுதாய சகோதரகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்களா?

ஊர் நலன் கருதி நம்மூர் ஆலிம்களும் / உலாமாக்களும் மற்றும் ஊர் பெரியவர்களும் இந்த மோதலை கண்டித்து அவரவர் இயக்க தலைவர்களை அணுகி இருதரப்பிலும் சமரசம் செய்து இனிமேல் எக்காலத்திலும் இந்த மோதல் வராமலிருக்க முயற்ச்சிகள் மேற்கொள்(ளலாமே?)வோம்....இன்ஷா அல்லாஹ்

அப்துல்மாலிக் said...

கடந்த 10 வருடங்களுக்கு முன் அரசியல்வாதிகளும், காவல்துறையும் முஸ்லீம்களை பார்த்து பயந்து நம் மீது சிறு கேஸ் போடுவதற்கு கூட தயங்கிய காலம் அது, தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை பெறல் போன்றவற்றை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது, முஸ்லிம்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். காலச்சூழலில் அணுகுண்டு போல் சுக்குநூறாக சிதறி மற்ற மதத்தவரையும் தாண்டி நமக்குள்ளே அடித்துக்கொண்டிருக்கும் அளவுக்கு இப்போ மாறிப்போச்சு, இது வருங்காலத்தில் எந்தளவுக்கு போகும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை, அல்லாஹ் பாதுகாக்கனும் நம் சமுதாயத்தை...

அலாவுதீன்.S. said...

//////@ : லெ.மு.செ.அபுபக்கர் சொன்னது…
அஸ்ஸலாமு அலைக்கும்.

// இந்த செய்தி பற்றி (ஈடுபட்டது யார்) காரணம் என்ன என்பதை பற்றி விபரம் தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.//

SDPI.யின் ரயில் மறியல் போராட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக ஒரு சகோதரன். SDPI.யின் அலுவலகத்தில் நின்றுக் கொண்டிருக்கின்றான்.அவன் நிற்ப்பதை பார்த்து விட்டு தையுப் அவனுடைய மூத்த சகோதரனுக்கு போன் பண்ணி தகவலை சொல்லி இருக்கிறார்.இப் பிரச்சினை இதன் மூலம் ஆரம்பமானது என்று மக்கள் அனைவரும் பேசிக் கொள்கிறார்கள். /////@:
******************************************************************************************************************************************

வஅலைக்கும் ஸலாம் வரஹ்!

மேற்கண்ட செய்தியை தந்த சகோதரருக்கு நன்றி! இந்த செய்தியின்படி இரண்டு இயக்கங்களுக்கு மத்தியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த பதிவில் யார் செய்தது என்ற காரணம் இல்லாததால் நான் விபரம் கேட்டிருந்தேன்.

இந்த பதிவில் விளக்கங்கள் சரியாக இல்லாததால் - இரண்டு இயக்கங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்ச்சி போல் இங்கு கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

வரும் காலங்களில் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை விபரங்கள் யார் ஈடுபட்டது என்ற விரிவான விளக்கத்துடன் வெளியிட்டால் ஊகத்தின் அடிப்படையில் கருத்துக்கள் வராமல் இருக்கும்.

கேள்விப்பட்டதை செய்தியாக வெளியிட்டால் வீண் குழப்பங்கள்தான் ஏற்படும்.

வதந்திகளை வைத்து கருத்துக்கள் வந்தால் ஆரோக்கியமாக இருக்காது.

sabeer.abushahruk said...

//கேள்விப்பட்டதை செய்தியாக வெளியிட்டால் வீண் குழப்பங்கள்தான் ஏற்படும்.

வதந்திகளை வைத்து கருத்துக்கள் வந்தால் ஆரோக்கியமாக இருக்காது.//

அற்புதமான அறிவுரை. ஊடகத்துரையில் இருக்கும் நம் போன்றோர் இதில் நிச்சயமாக கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

எனினும் அலாவுதீன், இயக்கங்களாகப் பிரிந்து கிடக்கிறோம் என்பது யூகமல்ல. அப்படி பிரிந்து கிடக்கும் நாம் முட்டி மோதிக்கொள்கிறோம் என்பதும் கற்பனையல்ல.


பூசி மெழுகி மறைத்து வைக்க நம்மைப்போன்ற தொண்டர்கள்தான் முனைகிறோம். தலைமைகளோ அப்பட்டமாக அடித்துக்கொள்கிறார்கள்.
ஒன்றை கவனித்துக்கொள். இச் சம்பவம் வேண்டுமானால் இயக்கங்களுக்கிடையே இல்லாமல் இருக்கலாம். எனக்கும் தெரியாது. ஆனால் அப்படி இயக்கங்களுக்கிடையேயான சம்பவம் நடப்பது வெகு தூரத்தில் இல்லை.

அதிலிருந்து தப்பிக்க துஆச் செய்வதோடு கூடிப்பேசி தீர்வு காண இந்தப் பதிவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்வோம்.



இயக்க மயக்கம் !


இவ்வுலகை மட்டுமல்ல
ஈருலகை வென்றெடுக்க
அல்லாஹ்வின் அடியார்களாய்
அவதரித்த தொரு இயக்கம்

பிறக்கின்ற வகையினிலே
பிரிந்ததொரு இயக்கம்
வளர்கின்ற விதத்தினிலே
விளைந்ததொரு இயக்கம்

பயிலுகின்ற பாங்கினிலே
பதிந்ததொரு இயக்கம்
பயிற்றுவிக்கும் பணியினிலும்
பன்மடங்காய் இயக்கம்

உண்ணும் விதம் விளக்க
உதித்த தொரு இயக்கம்
உடுத்துகின்ற தோரணையை
எடுத்துச் சொல்ல இயக்கம்

வணக்க வழிபாட்டில்
இணக்க மின்றி இயக்கம்
வணக்கத்தி னுள் முறையில்
வழக்காடு தொரு இயக்கம்

மார்க்கத்தில் நேர்வழியென
காட்டு தொரு இயக்கம்
மாற்று வழி சுட்டிக்காட்டி
மயக்கு தொரு இயக்கம்

இருக்கின்ற இயக்கமெல்லாம்
இயங்க என்ன தயக்கம்
இனிமேலும் வேண்டாமையா
இன்னுமொரு இயக்கம்

எத்துனை தேவையுண்டோ
அத்துனைக்கும் சேவை வேண்டும்
எல்லா சேவைகளையும்
எல்லோரும் செய்வதறிவா?

கல்வி ஓர் இயக்கம்
கல்யாணம் ஓர் இயக்கம்
அரசியல் ஓர் இயக்கம்
ஆண்மீகம் ஓர் இயக்கம்

சுற்றுப்புரச் சூழலுக்கும்
சுகாதாரத்துக்கும் ஓர் இயக்கம்
சாலை மேம்பாட்டுக்கும்
சமரசத்துக்கும் ஓர் இயக்கம்

சாக்கடை சீர்படுத்த
சகதி மனை சரிசெய்ய
கொசுக்களை கொன்றொழிக்கும்
கொள்கைக்கு ஓர் இயக்கம்

கொள்கைகளை வகுத்துக்கொண்டால்
சேவைகளைப் பிரித்துக்கொண்டால்
எல்லாத் துறைகளிலும்
எழுந்து நிற்கும் எம் குலமும்

இயக்க மயக்கம் தெளி
இயங்க முழக்கம் தரி!

- சபீர்

அதிரைநிருபர் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அன்பிற்கினிய அலாவுதீன் காக்கா அவர்களுக்கு:

ஏடு-இட்டோர்-இயல் பதிவில் கேள்விபட்டதை முன்னிருத்தி எமது ஆதங்கத்தை வெளியிடவில்லை கண்களால் கண்ட சாட்சி (பெண்கள்) அலைபேசி வாயிலாக சொன்னதும், அந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சகோதரர்களின் தகவலின் அடிப்படையில்தான் இயக்க வெறியை தகர்க்கத்தான் இந்தப் பதிவே அன்றி வேற எந்த நோக்கமும் இல்லை.

இந்த இரு இயங்கங்களை முன்னிருத்தவோ அல்லது ஒரு இயக்கத்திற்கு ஆதரவாகவோ இந்தபதிவில் குறிப்பிடவில்லை மாறாக இத்தகைய சகோதரர்களின் செயல்களால் பாதிக்கப்படுவது நாமே அன்றி வேறு யாருமல்ல.

இந்த பதிவின் முதல் பத்தியிலேயே தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது "சகோதர வலைத்தளங்களில் வெளியான செய்தி என்றும்" இந்த சம்பவத்தை மறுத்து யாரும் இங்கே கருத்திடவில்லை.

அப்துல்மாலிக் said...

செய்தி அரசல் புரசலாக வந்தவண்ணம் இருக்கிறது, எதுவும் பேசப்படும், ஒரு வகையில் ஏதாவது பாதிக்கப்பட்டவர்களிடையேயுள்ள பழைய பகையை இதனூடே முடிச்சிப்போடவும் வாய்ப்பிருக்கிறது, ஆகையால் இந்த பதிவு நடந்த சம்பவத்தை விளக்கவில்லை, நாமெல்லாம் சகோதரர்களாக ஒன்ரிணைந்து வாழும் நமக்குள் ஏன் இந்த பகைமை, ஆள் வைத்து அடித்தல் போன்ற வெறிச்செயல்களிலிருந்து விடுபட்டு ஒன்றுமையை பேணவேண்டும் என்று சொல்லுகிறது என்பது என் கருத்து

அதிரைக்காரன் said...

இந்த இயக்கவாதிகளால் சகமுஸ்லிமின் உயிருக்கே பாதுகாப்பில்லை என்ற நிலையில் இவர்கள் இயக்கம் நடத்தி யாரைக்காப்பாற்றப்போகிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது.

இத்தகைய பக்குவமற்ற தொண்டர்கள் இருக்கும்வரை முஸ்லிம்களுக்கு அச்சுருத்தல் வெளியிலிருந்தல்ல; நமக்குள்ளேயே என்பது மட்டும் கசப்பான உண்மை.

தனிமனிதர்களை பக்குவப்படுத்தாத இயங்கங்களால் சமுதாயத்தை திருத்த முடியாது.

இத்தகையை இயக்கவெறியர்களிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காக்கட்டும் என்று முறையிடுவதை தவிர வேறு வழியில்லை!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கருத்தொற்றுமையின்மை, நீயா, நானா என்ற போக்கு இன்றல்ல இது நீண்ட நெடுகாலமாக இருக்கிறது அவ்வாறான சந்தர்ப்பங்களிலெல்லாம் இதுமாதிரியான ஆயுதம் ஏந்தி ஆள் குறித்து தாக்குதல் இதுவரை நடந்திராத ஒன்று.

ஒன்றாக இருப்பதுபோல் தலை(மை)கள் நடிப்பதும், வால்கள் கையில் வாள் எடுப்பதும், இளையவர்களை பக்குவப்படுத்தாத இந்த இயக்கங்கள் எங்கே இட்டுச் செல்கிறது இளைஞர்களை ?

இம்மாதிரியான ஈனச் செயல்களில் ஈடுபட்டவர்களை சதிச் சிக்கலில் சிக்க வைக்க மாற்றானே செய்துவிட்டு உங்கள் மீது பழிபோட எவ்வளவு நேரமாகும் இம்மாதிரியெல்லாம் நடப்பதில்லை என்று சொல்லத்தான் முடியுமா ?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

சொந்த ரத்தங்களுக்குள் வன்முறையை கையில் எடுத்து கொலைவெறி தாக்குதல்களில் ஈடுபடச்சொல்லி அவரவர் இயக்கங்கள் சொல்கின்றனவா? மார்க்கத்தில் சீர்திருத்தங்கள் செய்யப்போகிறோம் என்று வரிந்து கட்டிக்கொண்டு முழங்கி வருபவர்கள் இப்படி நாமே நமக்குள் ரத்தம் சிந்திக்கொள்வதை வரவேற்கிறார்களா? இந்த அளவோடு இதை அனைவரும் நிறுத்திக்கொள்ள இனியாவது அனைவரும் முயலவேண்டும்.

ஒரு புறம ஊரில் ஒற்றுமை முதலில் தெருக்களுக்குள் எற்படுத்தவேண்டுமேன்று அனைத்து முஹல்லா கூட்டங்கள், அல்- அமீன் பள்ளி விவகாரங்களில் தீர்வு என்று ஒரு சாரார் உழைத்துக்கொண்டிருக்க மறுபுறம் மாற்றார் எள்ளி நகைக்கும் வண்ணம் வன்முறைகளில் ஈடுபட்டு ஒற்றுமையை சிதைப்பதைத்தான் அவரவர் ஈடுபாடும் இயக்கங்கள் போதிக்கிறதா? தனிப்பட்ட பகைகளை தீர்க்க இஸ்லாத்தின் போர்வை தேவைப்படுகிறதா?

எதற்குமே ஒரு முடிவு உண்டு. இந்த சமுதாய ஒற்றுமையின்மைக்கு இந்த சம்பவம் ஒரு முடிவாகட்டும். இறைவனை இறைஞ்சி நிற்போம். பாதிக்கப்பட்ட சகோதரருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அனைவரும் ஆறுதலாக இருப்போம். வேண்டியன செய்வோம்.

வஸ்ஸலாம்.
இப்ராகிம் அன்சாரி

KALAM SHAICK ABDUL KADER said...

மாற்று மத நூற்கள், இணைய தளங்களை நோக்கினால், அவர்கள் எல்லாரும் ஒரே விதமாக நம்மைப் பற்றிக் கணித்து வைத்துச் சொல்வது,” முஸ்லிம்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்; அதனால் அவர்களை மிக எளிதாக வீழ்த்தி விடலாம்; அது மட்டுமல்லாமல் அவர்கட்குள்ளாகவே அடித்துக் கொள்வார்கள் (குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சிப் போர்) இவர்களை நாம் சீண்ட வேண்டியதில்லை; அவர்களாகவே அவர்களை வீழ்த்திக் கொள்ள முடிவெடுத்தப் பின்னர், நமக்கு வேலை மிச்சமாகிவிட்டது” இந்த வரிகளைப் படிக்கும் பொழுதெல்லாம் இக்கருத்தை எப்படி நம்மவர்களிடம் எத்தி வைப்பது நினைப்பேன்; இன்று செயல்படுத்திக் காட்டி மாற்றார் கூற்றை மெய்ப்படுத்தி விட்டார்களே இவ்வியக்க அரை வேக்காடுகள்!

ஒற்றுமையாய் இருக்கும் வரை இஸ்லாமியர்களை வெல்வது மிகவும் கடினம் என்பதால் அவர்களிடமிருந்து,

1) ஜூம் ஆ, 2) ஹஜ் 3) கொள்கை ஒற்றுமை ஆகியனவற்றில் குழப்பம் உண்டாக்கிப் பிரித்துப் போட்டு விட்டால் மிக எளிதாக வீழ்த்தி விடலாம் என்று மேலை நாட்டு மேதாவி ஒருத்தன் யூகித்துச் சொன்னது உண்மையிலும் உண்மையாகி விட்டதே!

இந்த பிரித்தாளும் சூழ்ச்சி வெள்ளையன் முதல் இன்றைய கொள்ளையர்கள் வரை நம்மை ‘கறிவேப்பிலை’ யாக “எடுப்பார் கைப்பிள்ளையாக” அரசியலில் பந்தாடி விட்டுக் கொண்டிருப்பது கண்டு நொந்து போயுள்ள நம் சமுதாயத்தினை இப்படி “கொலை வெறி”க் கூட்டமாக இளைஞர்களை “மூளைச் சலவை” செய்து விட்டு மூலையில் ஒளிந்து கொண்டிருக்கும் தலைமைகட்கு அல்லாஹ்வின் சாபமும். சமுதாயத்தின் சாபமும் உண்டாகும் என்பதை எங்களின் கோபமாகப் பதிகின்றோம். தயவுசெய்து எல்லா இயக்கங்களையும் தடை செய்து எங்களை நிம்மதியாக வாழச் செய்யுங்கள். ஒரு காலம் வரும், இப்படியே நீங்கள் அடித்துக் கொண்டிருந்தால், “வெறுத்துப் போய்” போங்கடா நீங்களும் உங்கள் கொள்கைகளும் என்று பிற்கால சமுதாயம் மாற்றானின் வலையில் வீழ்ந்து விடும். அப்பொழுது முழுப் பொறுப்பும் இந்த இயக்கவாதிகள் மீதேச் சாட்டப்படும்!

அனைத்து முஹல்லாக் கூட்டமைப்பினர் எவ்வளவு முன்னெச்செரிக்கையாக “இயக்கங்களில் உள்ளோர் யாரும் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது” என்றுத் தீர்மானம், மிகமிகச் சரியானத் தீர்க்கதரிசனம்! ஆம். இவ்வியக்கவாதிகளால் எந்த ஒரு செயலும் உருப்படியாக=ஒற்றுமையாகச் செயல்படுத்த விடாமல் குழப்பத்தால் குலைத்து விடுவர்!

Canada. Maan. A. Shaikh said...

எங்கே செல்கிறது நமது சமுதாய சகோதரத்துவம்? மிகவும் வேதனையான செய்தி.அல்லாஹ் நம் சமுதாய மக்களிடையே ஒற்றுமை ஏற்பட உதவி செய்வானாக ஆமின்

புதுசுரபி said...

~30 நாட்கள் ஜெபக்கையேடு~ என்ற ஒரு கிறிஸ்தவ அமைப்பின் புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. இஸ்லாமிய இளைஞர்களைக் குறிவைத்து எழுதப்பட்ட புத்தகம். இதுபோன்ற பிரிவினைகளை ஏற்படுத்தும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் பிரச்சார பீரங்கியாக மாற்றுவதே அதன் முதன்மையான திட்டம். இதற்காக சிறப்புப் பிராத்தனை வேறாம்....
எங்கெல்லாம் இஸ்லாம் தழைத்தோங்குகிறதோ.. அங்கெல்லாம் புள்ளிவிபரங்கள் சேகரித்து, எப்படி என்னென்ன உத்திகள் கையாளப்பட வேண்டும் என்று பயிற்றுவிக்கின்றது அந்த தீயநூல்.

எதிராளிகள் இப்படி சர்வதேச ரீதியில் சதித்திட்டங்கள் தீட்டி வரும் வேளையில், ~...ஒற்றுமையின் கயிற்றினைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்...........~ என்று ஓங்கி ஒலிக்கும் இறைவனின் கட்டளையினைப் புறந்தள்ளும் இதுபோன்ற இயக்கத்தினரையும், அமைப்பினரையும் பார்க்கும் போது, இன்னும் நமக்கு அல்லாஹ்வையும் அவனது தூதரையும் புரிந்து, தெளிந்த தலைமை இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு