Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

படிக்கட்டுகள்... ஏற்றம் - 16 44

ZAKIR HUSSAIN | July 08, 2012 | , , , , ,

"ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பாள்"  என்று சொல்லக்கேள்வி. இது ஒரு ஆண் மட்டும் வெற்றி அடைந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. ஒரு குடும்பம் வெற்றியடைய பெண்களின் பங்கு மிக மிக அவசியம். ஒரு குடும்பம் நல்ல பெயர் வாங்கவும் கெட்ட பெயர் வாங்க வைக்கவும் பெண்களால் நிச்சயம் முடியும்.

ஆண்கள் சம்பாதிக்காமல் வீணாக காலத்தை கழித்து அதை பார்த்த பெண்கள் குடும்ப பொறுப்பை சுமந்து கடை வைத்து, துணிமணிகள் விற்று தன் குடும்பத்தை ஒரு நல்ல நிலைக்கு நிறுத்தி இன்று அந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்புடன் வாழ தன் வாழ்க்கையை தியாகம் செய்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

அதே சமயம் தனக்கு எல்லாம் தெரியும் என்று "அட்டு லாயர்" மாதிரி பேசி குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்கி கடைசியில் எல்லோரும் வெறுப்படைகிற மாதிரி நடந்து கொள்வதும், வீட்டில் கணவன் எல்லா வசதிகள் செய்து கொடுத்தும் அதை முறையாக பயன்படுத்தாமல் கேவலங்களை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்து அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தலை குனிய வைத்த பெண்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

பாராட்டும்படி நடக்கும் பெண்கள் , மன சங்கடத்தை ஏற்படுத்தும் பெண்கள் எல்லா குடும்பத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம் என்பதை வைத்தே நமது குடும்பத்தின் பயணம் இருக்கும் என்பது நிச்சயம். 

மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் பேசாமல் தன் கருத்தும் ,  சொல்லும் முதலிடம் பெற வேண்டும் என்று கத்திப்பேசும் பெண்களிடம்  பேச முயற்சிப்பது கிரிமினல் வேஸ்ட். இது ஆண்களுக்கும் பொருந்தும்.

இந்த நேரத்தில் சொல்ல வேண்டிய விசயம் டெலிவிசனின் ஆதிக்கம்.

அடிமைத்தனத்தில் மிகவும் கொடுமையானது நாம் எதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமையாக இருப்பது அல்லது அடிமைத்தனம் பழகிப்போவது. ஒரு வருடத்தில் நீங்கள் டெலிவிசன் முன்னால் உட்கார்ந்து போக்கும் பொழுதை நீங்கள் கணக்கிட்டால்.. உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய காலப்பகுதி அனாவிசயமாக திருப்பி திருப்பி ஒளிபரப்ப பட்ட ஒரே காட்சிகளை  டி வி யில் பார்த்தே கரைந்து போயிருக்கும். இப்படி 'மாத்தி  மாத்தி' ஒளிபரப்பப்படும்   விசயங்கள் உங்களை அடிமைப்படுத்தி விட்டபிறகு நீங்கள் உண்மையான விழிப்புணர்வு பெரும் சூழலில் இந்த சமுதாயம் உங்களை விட்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை தாண்டி முன்னேறியிருக்கும்.

நேரமும் உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வம்தான் அதை முறையில்லாமல் செலவழித்தால் உங்கள் குடும்பத்தை யார் வந்து வழிநடத்தமுடியும்.

30 வருடத்துக்கு முன் இருந்த பெண்களுக்கும் இப்போது உள்ள பெண்களுக்கும் நடைமுறை என்று பார்த்தால் மிகப்பெரிய சவால் இன்று உள்ள பெண்களுக்குத்தான். பிள்ளைகள் பிறந்தால் அதை படிக்க அனுப்ப பள்ளிக்கூடம் , ஒதுவதற்கு பள்ளி / மதரசா என்று இருந்த காலம் போய், காலையில் பள்ளிக்கூடம் அனுப்புவதிலிருந்து ஹோம் வொர்க், பள்ளியில் ஒதுவதை வீட்டில் ஒத ப்ராக்டிஸ் கொடுப்பதுவரை வீட்டில் உள்ள பெண்களுக்கே முழுப்பொறுப்பு. இதில்  பிள்ளைகளுக்கு என்ன ஊட்டுகிறோம் என்பதில் கவனம் தேவை. வெறும் பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமில்லை வாழ்க்கை. அதன் எதிர்காலத்திட்டமும் சரியாக ஊட்டப்பட வேண்டும். "எனக்கு என்ன தெரியும், நான் என்ன வெளியில் போய் வரும் ஆண்பிள்ளையா.. அதை எல்லாம் தகப்பன் பார்த்துக்கொள்ளட்டும்' என இருந்தால் திசை தெரியாமல் பிள்ளைகளை வளர்க்கும் கொடுமைக்கு ஆளாகி விடுவோம்.

இன்றைய உலகம் போட்டிகள் நிறைந்தது.இன்று உங்கள் பிள்ளை 10 வயதானால் இன்னும் 20 வருடத்தில் [30 வயதில்] எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதில் கவனம் தேவை. அந்த பிள்ளையை தயார் படுத்துவது பெண்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதே உண்மை. 

சின்ன வயதில் பிள்ளைகளுக்கு 'லாட்ஜ் ரூம் பாய்' மாதிரி எல்லாம் செய்து கொடுத்து விட்டு பிள்ளை வளர்ந்த பிறகு "பொறுப்புதான் வரமாட்டேங்குது" என புலம்பி புண்ணியமில்லை.

குடும்பத்துக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் மார்க்க அறிவும் உலக கல்வியும் சரியான விதத்தில் கலந்து தரும் டாக்டர் நீங்கள்தான்.

நம் ஊர் போன்ற இடங்களில் என்னதான் வாய்கிழிய பெண்ணுரிமை, மார்க்கம் எல்லாம் பேசினாலும் பெண்கள் தனது கல்வி , பணத்தேவைகளுக்கு இன்னும் ஆண்களையே சார்ந்து இருக்கிறார்கள். இன்றைக்கு நம் பெண்கள் பல்கலைக்கழகம் வரை படித்து விட்டதால் மட்டும் பணத்தேவைகளுக்கு தன் சொந்த முயற்சியின் வேலை / தொழில் என்று இதுவரை இறங்க முடிவதில்லை.

ஆண்களை பொருத்தவரை தன் மனைவி தனது குடும்பத்தை குழந்தைகளை தான் இல்லாத போதும் சரியாக வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அவனால் வேறு எந்த தடங்களையும் எண்ணாமல் நல்லபடியாக சம்பாதிக்க முடியும்.

பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் சமுதாயம் ஆண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பெண்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்வதில்லை.

மெட்டீரியலிஸ்டிக் வாழ்க்கை என்று சொல்லப்படும் "பொருள்களை வாங்கி குவிக்கும்" மனப்பாங்கு என்பது சின்ன பிள்ளைகள் மிட்டாய் கேட்டும் அழும் மனப்பாங்கு மாதிரி.  5 வயது பிள்ளை மிட்டாய்க்கு அழுவது இயற்கை. 25 வயது ஆள் மிட்டாய்க்கு அழுதால் அது மனநோய்.இதை நான் எழுத காரணம் நம் ஊர் பகுதியில் நான் பார்த்த சில பெண்கள் எப்போது பார்த்தாலும் ஏதாவது வாங்கிவர வெளியூர்பயணத்திலேயே இருக்கிறார்கள். [ இவர்களுக்கு அலுத்துபோகாதா என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை]

டி வி / மேகசினில் வரும் விளம்பரங்களை பார்த்த பிறகு எடு ஆட்டோவை, எடு காரை உடனே நான் போய் கடையில் இறங்கி அந்த பொருளை வாங்கி வந்து வீட்டில் வைத்தால்தான் மனம் லேசாகும் என அலையும் பெண்கள் வெகு சீக்கிரம் குடும்பத்தை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிடுவார்கள்.

இன்றைய தேதியில் அத்தியாவிசயமான பொருட்களை வாங்க ஆசைப்படுவதில் தவறில்லை. ஆசைப்படும் எல்லாப்பொருள்களும் அத்தியாவிசயம்தான் என்று வாதிடுவதில்தான் தவறு. பொருள்கள் வாங்க சரியான விதி '"தேவைப்படுவதை வாங்கு, ஆசைப்படுவதை வாங்க யோசி".

சில சமயங்களில் வீட்டில் உள்ள கணவரிடம் சொல்லி வாங்க சொன்ன பொருள்கள் உடனே வீடு வந்து சேராததற்கு அவரை எதிரி மாதிரி பார்க்காதீர்கள். இன்னும் வாழ்க்கையில் ஏற்படும் விவாதங்களுக்கும் கருத்து வேறுபாடுகளும் உங்கள் சந்தோச வாழ்க்கைக்கு வேட்டு வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  உங்கள் கணவர் அடிப்படையில் நல்லவர்தானே என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் பிரச்சினைகள் நீண்டு கொண்டே போகாது.  

மற்றவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஒப்பிட்டு உங்கள் கணவரை குறை சொல்லாதீர்கள். "நீங்களும் முன்னேறமுடியும்" என்ற நம்பிக்கை வார்த்தைகளை அவரின் மனதுக்குள் விதையுங்கள். "உங்களின் முன்னேற்ற பயணத்தில் எப்போதும் உங்களுடன் துணையிருப்பேன்" என்ற உண்மையை உங்கள் கணவரை உணரச்செய்யுங்கள்.

50 வருடத்துக்கு முன் உங்கள் பாட்டி சொன்ன "பால் கறி- இறால் ஆனம்" மட்டும்தான் எனக்கு செய்யத் தெரியும் என்று சமைத்துப்போட்டு வதைக்காதீர்கள்.  டி வி, புத்தகம், இன்டெர்னெட்டில் வரும் சின்ன சின்ன ரெசிப்பிகள் செய்வதன் மூலம் குடும்பத்தில் பெரிய மகிழ்ச்சிகள் காத்திருக்கிறது. [ஏதோ குடு குடுப்பைக்காரன் சொன்ன மாதிரி இல்லே!!].

அலுவல்களை முடித்து வரும் கணவரிடம் வந்து உட்காருமுன் பிரச்சினைகள கொட்டாதீர்கள்.

உங்கள் கணவர், கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யும்போது நீதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு ஆட்களுக்கு உதவி செய்யும்போது ஹீரோயினாகவும், கணவர் வீட்டு உறவுக்கு உதவி செய்யும்போது பொருளாதார நிபுணர் மாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்

நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடம் மிகவும் குறைவு.

அதற்கு காரணம் நோய் - உடற்பயிற்சி இதுவெல்லாம் ஆண்கள் சமாச்சாரம் என்று பெண்கள் நினைப்பதுதான்.  அது தவறு என்பது வேறு விசயம். 

சரியான உடற்பயிற்சிகள் இல்லாமல் ' நான் தான் வீட்டு வேலை பார்க்கிறேனே" என்ற ஒரே பிடிவாதத்தில் இருப்பதால் இப்போதைக்கு நான் எந்த காலத்திலும் பார்த்திறாத அளவு நியூரோ பேசன்ட்களை பார்க்கிறேன். அந்த பெண்களும் நியுராலஜிஸ்ட்களை பார்த்து மருந்து சாப்பிடும்போது அதில் வரும் சைட் எஃபெக்ட் ஆன தூக்க மாத்திரையில்லாமல் தூங்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  

கலோரி அளவு தெரிந்து செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.

நீங்கள் சரியாக இருந்தால்தானே குடும்பம் சரியாக இருக்கும்.

ZAKIR HUSSAIN

44 Responses So Far:

அதிரை சித்திக் said...

பெண்கள் பற்றிய கட்டுரைகள் ..

இன்னும் அதிகமாக எழுதப்பட வேண்டும் ..

சகோ ,ஜாகிர் ஹுசைன் என்னை விட இரண்டு

வருடம் மூத்தவர் கா.மு .மேல்நிலை பள்ளியில்

பார்த்திருக்கிறேன் ..மாணவ தலைவன் அப்துல் பத்தாஹ்

தங்களின் சகா தானே ..

Shameed said...

// [ இவர்களுக்கு அலுத்துபோகாதா என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை]//

இதை பலபேர் கேட்டுகேட்டு அலுத்து போய்விட்டார்கள் என்பதுதான் உண்மை

sabeer.abushahruk said...

லிஃப்ட் வேகத்தில் மேலேற்றிச் செல்கிறது படிக்கட்டுகள்.

கிஃப்ட் கொடுக்கத் தகுதியான புத்தகமாக வரவேண்டும்.

KALAM SHAICK ABDUL KADER said...

”தாயின் மடிதான் குழந்தையின் முதற்பாடசாலை”
“பிஸ்மி சொல்லி பாலூட்டப்படும் குழந்தை சாலிஹானதாக வளரும்”

இக்கருத்துக்கள் முன்பொருமுறை பெண்கள் மதரஸாவின் பட்டமளிப்பு விழாவில் கேட்ட பயானில் சொல்லப்பட்டவைகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//கலோரி அளவு தெரிந்து செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.//

அவங்களுக்கு மட்டும்தானா ?

Shameed said...

// நோய் பற்றிய விழிப்புணர்வு நம் பெண்களிடம் மிகவும் குறைவு.//

பெண்கள் சார்பாக ஆண்களாகிய நாங்கள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம் பண்ணா மீன் முதல் பாறை மீன் வரை கல்லில் போட்டு தேய்த்து துவைத்து எடுத்து சுத்தம் செய்து நோய் கிருமிகளை அகற்றிவிட்டுதானே சமைக்கின்றார்கள்

sabeer.abushahruk said...

//கல்லில் போட்டு தேய்த்து துவைத்து எடுத்து சுத்தம் செய்து நோய் கிருமிகளை அகற்றிவிட்டுதானே சமைக்கின்றார்கள்//

இவ்வளவு விளக்கமாச் சொல்றதப் பார்த்தால்... ஹமீது பாய்,

சமைக்கிறார்களா?
சமைக்கிறோமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனக்கு தனி மின்னஞ்சலில் வந்த கருத்தினை பொதுவில் வைக்காமல் இருக்க முடியவில்லை !

........

என் பெயருக்கு பின்னால் / முன்னால் - [minus symbol] இருப்பது வாஸ்துபடி சரியில்லை என்று ரஞ்சிதாவின் குரு சொன்னார். [அதான்பா... கதவை திறனு... சொல்லும்போது கேமரா உள்ளே வந்தது தெரியாமல் ஜொல்லு விட்ட நித்யானந்தா].

என் பெயருக்கு பின்னால் / முன்ன்னால் இனிமேல் - சிம்பள் போடுவதற்கு பதில் Rs, $ , DRHM , SR , RM , €, ரூ, போடலாம். எப்படி உட்கார்ந்த இடத்திலேயே கஸ்டப்படாம சம்பாதிக்களாம் என்று பதிவு எழுதுபவருக்கு இதை அனுப்பலாம்.

₹ சிம்பள் போடவேண்டாம்... அதில் ஏதோ கழுத்துகிட்ட வெட்டுனமாதிரி இருக்குனு யாரோ ஒரு 'தயிர்சாதம் பார்ட்டி" சொல்லிடுச்சாமே.... [யோவ் சிம்பள் கண்டுபிடிக்க முன்னாடி யோசிங்கப்பா... போடக்கூடாத எடத்திலே போட்டுட்டா?/??]
.......

இப்புடி சொல்லிபுட்டா மவுனமா இருந்திடுவோமா என்ன !?

இதேபோல் யாருக்கும் தனி மின்னஞ்சல் வந்திருந்தால்... சும்மா இருக்காதீங்க பாஸ் !

Ameena A. said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கு சகோதரர்கள் வைத்திருக்கும் பெயருக்கேற்ற அசத்தல் கட்டுரை.

ஒரு மனோதத்துவ நிபுனரின் நேர்த்தியான பயனுள்ள அறிவுரைகளை உங்களிடமிருந்து பெறுகிறோம்.

நன்றி சகோதரரே.

சகோதரர் S.அலாவுதீன் அவர்களின் சகோதரியே தொடர் எங்கே ?

Shameed said...

sabeer.abushahruk சொன்னது…

//கல்லில் போட்டு தேய்த்து துவைத்து எடுத்து சுத்தம் செய்து நோய் கிருமிகளை அகற்றிவிட்டுதானே சமைக்கின்றார்கள்//

//இவ்வளவு விளக்கமாச் சொல்றதப் பார்த்தால்... ஹமீது பாய்,

சமைக்கிறார்களா?
சமைக்கிறோமா? //

கொஞ்சம் இருங்கப்பா கையிலே மீன் கவுச்சி வாடையா இருக்கு சோப்பு போட்டு கைய கழுவிட்டு வர்றேன்

Shameed said...

முன்பெல்லாம் உங்கள் கட்டுரையை படிக்கும்போது போது உங்கள் நடை உடை பாவனைகளை மனதில் நிறுத்தி நீங்கள் சொல்வதுபோல் மனதில் நினைத்துக்கொண்டு படிப்பேன்

ஆனால் தற்போது உங்கள் கட்டுரையை படிக்கும்போது நீங்களே நேரில் வந்து வாசித்து காட்டுவதுபோல் உள்ளது உங்கள் எழுத்துக்களில் அத்தனை முதிர்ச்சி தெரிகின்றது

crown said...

அடிமைத்தனத்தில் மிகவும் கொடுமையானது நாம் எதற்கு அடிமையாக இருக்கிறோம் என்பது தெரியாமலே அடிமையாக இருப்பது அல்லது அடிமைத்தனம் பழகிப்போவது. ஒரு வருடத்தில் நீங்கள் டெலிவிசன் முன்னால் உட்கார்ந்து போக்கும் பொழுதை நீங்கள் கணக்கிட்டால்.. உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய காலப்பகுதி அனாவிசயமாக திருப்பி திருப்பி ஒளிபரப்ப பட்ட ஒரே காட்சிகளை டி வி யில் பார்த்தே கரைந்து போயிருக்கும். இப்படி 'மாத்தி மாத்தி' ஒளிபரப்பப்படும் விசயங்கள் உங்களை அடிமைப்படுத்தி விட்டபிறகு நீங்கள் உண்மையான விழிப்புணர்வு பெரும் சூழலில் இந்த சமுதாயம் உங்களை விட்டு கண்ணுக்கு எட்டாத தூரத்தை தாண்டி முன்னேறியிருக்கும்.
----------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். சரியாக சுட்டி காட்டிருக்கிறீர்கள்.

crown said...

அலுவல்களை முடித்து வரும் கணவரிடம் வந்து உட்காருமுன் பிரச்சினைகள கொட்டாதீர்கள்.

உங்கள் கணவர், கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யும்போது நீதமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டு ஆட்களுக்கு உதவி செய்யும்போது ஹீரோயினாகவும், கணவர் வீட்டு உறவுக்கு உதவி செய்யும்போது பொருளாதார நிபுணர் மாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்.
---------------------------------------------------------------------
பெண்மணிகளுக்கு உங்களின் மணி.மணியான அட்வைஸ்.இது மனிதாபிமானம் எல்லோர் இடத்தின் மேல் இருக்க வேண்டும் என்பதை சொல்லியவிதம் அருமையிலும் அருமை!மனிதாபிமானம் MONEYனால் பிரித்துப்பார்க்கபடகூடாது.

crown said...

கலோரி அளவு தெரிந்து செய்யும் உடற்பயிற்சி உங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது.
-----------------------------------------------------------------------
களரி சாப்பாடு அளவு இல்லையே? சரியா சொல்லிடுங்க அப்புறம் கருத்துபிழையா போய்விடும்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைகும்
நல்ல பயனுல்ல கட்டுரை. இதில் எல்லாமே ஹைலேட் விசயங்கள் தான். என்றாலும் இதில் பொருள் வாங்கும் விதி என்று தேவைப்படுவதை வாங்கு, ஆசைப்படுவதை வாங்க யோசி".
என்று பொருளியலுக்கு புதிய ''வரைவிளக்கனம்'' தந்துள்ளது அதிரைக்கு மிகவும் ஏற்புடைய விதி.
இந்த விதியை பார்த்தவுடன் எனக்கு 12 ஆம் வகுப்பில் பொருளியலிள் ஹாஜி முகம்மது சார் சொல்லி தந்த ''தேவை விதி'' குழப்பமாக உள்ளது. எனவே உங்கள் வரைவிலக்கனதுக்கு கீழே உங்கள் பெயரை போட்டல் நன்றாக இருக்குமா என சொல்லுங்கள் மூத்தோர்களே. வ்ஸ்ஸலாம்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

குடும்பம் படிக்கட்டாய் உயர்ந்து மேலேறவும், தறிகெட்டு தாழ்ந்து போகவும் பெண்ணின் செயல்பாடே முக்கியம் என்பதற்கு இந்த (படிக்)கட்டுரை தெளிவான விளக்கம்.

Mr.கிரவ்ன்: அங்கே காஞ்சி, இங்கே களரி சிரிப்பு தான் வந்துச்சு!

KALAM SHAICK ABDUL KADER said...

அலைபேசி உரையாடல் - உங்கள்
நிலைபேசிச் சென்றது

வேகமாய்ப் பேசும் நீங்கள்- எழுத்திலும்
வேகாமாய்ப் படிக்க வைக்கும் நடை!

//ஆண்களை பொருத்தவரை தன் மனைவி தனது குடும்பத்தை குழந்தைகளை தான் இல்லாத போதும் சரியாக வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டாலே அவனால் வேறு எந்த தடங்களையும் எண்ணாமல் நல்லபடியாக சம்பாதிக்க முடியும்//

அதெப்படி என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்து வரும் அப்பட்டமான உண்மையை மலேசியாவிலிருந்து “டெலிபதி” யாக கண்டுபிடித்து விட்டீர்கள்! உண்மையில் எனக்கு “டென்சன்” இல்லாமல் இத்தனை ஆண்டுகள் அயல்நாட்டில் சம்பாதிக்க முடிகின்றது என்றால் நீங்கள் மேற்சொன்ன அவ்வுண்மையான நம்பிக்கை தான்! இக்கட்டுரை முழுவதும் என் இல்லாளிடம் படித்துக் காட்டினேன்; உங்கட்கு நன்றி சொன்னார்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

பெண்களுக்குண்டான கட்டுரை என்றாலும்,ஆண்களுக்கும் இதில் நிறைய விஷயமுண்டு.

நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்கு நபிப் பட்டம் கிடைக்கு முன்பும் -
நபிப் பட்டம் கிடைத்த பின்பும் -
நம் தாய் அன்னை கதீஜா ரலி அவர்கள்
நம் தலைவர் அவர்களுக்கு செய்த சேவைகள் மற்றும் எல்லா வித நற்பண்புகளையும் - நம் பெண்கள் அவசியம் அவர்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும்,இன்ஷா அல்லாஹ்

அப்துல்மாலிக் said...

//மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் பேசாமல் தன் கருத்தும் , சொல்லும் முதலிடம் பெற வேண்டும் என்று கத்திப்பேசும் பெண்களிடம் பேச முயற்சிப்பது கிரிமினல் வேஸ்ட். இது ஆண்களுக்கும் பொருந்தும்.// ஜாஹிர் காக்கா, இது முழுமுதல் உண்மை, ஏற்படவேண்டிய சமாதானமும் தெக்குத்தெரியாமல் மறைந்துவிடும் நிலமை. நிதானமான, தெளிவான, அடக்கமான, சுருக்கமான கலந்துரையாடல்கள் மட்டும்தான் ஒரு முடிவுகு வரும்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

காலமெல்லாம் மூளையில் கிரகித்த நல்ல பல அனுபவங்களை கச்சிதமாக கட்டுரை மூலம் வடித்துத்தருவது என்பது ஜாஹிர் காக்காவிற்கு தட்டச்சில்(கை)வந்த கலை.

காக்கா, ஒரு உண்மை என்னவெனில் நம் வாழ்க்கைச்சூழல் ஏதேனும் காரணத்தால் மாறும் பொழுது தனக்கேயுரிய கட்டுப்பாடுகளும் சில வேளை கலகலத்து ஆட ஆரம்பித்து விடுகிறது. அல்லாஹ்வின் கிருபையில் பணத்திற்காக யாரையும் தேடிப்போகாத சூழ்நிலையும், வீடு, நல்ல பெற்றோர், மனைவி மக்களும் நமக்கு வாழ்வில் வாய்த்து விட்டால் கட்டுப்பாட்டுடன் அமைதியாக இவ்வுலக இன்பத்தை அனுபவிப்பதோடு மறு உலக வாழ்விற்கும் நல்ல சேமிப்பை இவ்வுலக வாழ்விலேயே ஏற்படுத்திக்கொள்ள முடியும்....

Ebrahim Ansari said...

தம்பி ஜாகிர்

ஒவ்வொரு வார்த்தையையும், இடப்பட்டுள்ள கமா உட்பட பாராட்டுகிறேன்.

நமது பெண்கள் பொதுவாக சமுதாயப் பெண்களின் பொருளாதார தற்சார்பு என்று தீருமோ?

Yasir said...

ஆழ்ந்த சிந்தனை பொருந்திய அர்தங்களுடனும்,சில இடங்களில் நகைச்சுவையாகவும்...பெண்களுக்கும் அவர்களை சார்ந்த ஆண்களுக்கும் புரியும்படி சொல்லி இருப்பது...ஜாஹீர் காக்காவின் தனித்தன்மையான எழுத்துக்கு உதாரணம்

Yasir said...

//ஆட்களுக்கு உதவி செய்யும்போது ஹீரோயினாகவும், கணவர் வீட்டு உறவுக்கு உதவி செய்யும்போது பொருளாதார நிபுணர் மாதிரி// எல்லார் விட்லயும்மா இது ?? ஹாஹாஹா

அலாவுதீன்.S. said...

அன்புச் சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
நலம் நலமறிய ஆவல். 60 நாட்களுக்குப் பிறகு கருத்திட வந்திருக்கிறேன்.

அன்புச் சகோதரர் ஜாகிர் : சகோதரி தொடரில் நான் எழுத நினைத்தவைகள் இந்த பதிவில் வந்துள்ளது. பரவாயில்லை மீண்டும் என் பதிவிலும் வரும்.

வாழ்த்துக்கள்!

அலாவுதீன்.S. said...
This comment has been removed by the author.
அலாவுதீன்.S. said...
This comment has been removed by the author.
அலாவுதீன்.S. said...

/// Ameena A. சொன்னது… : சகோதரர் S.அலாவுதீன் அவர்களின் சகோதரியே தொடர் எங்கே ? ///

சகோதரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வேலைகளின் காரணமாக தாமதமாகி விட்டது. சகோதரியே தொடர் விரைவில் வெளி வரும் இன்ஷா அல்லாஹ்!

ZAKIR HUSSAIN said...

To AbuIbrahim,

//அவங்களுக்கு மட்டும்தானா ?// ...நமக்கும்தான்

To Tuan Haji Shahul,

"பண்ணா மீன் முதல் பாறை மீன் வரை கல்லில் போட்டு"...
தமாமுக்கு கல் எல்லாம் கார்கோவில் கொண்டுபோய் சேர்த்தாச்சா?

//சமைக்கிறார்களா?
சமைக்கிறோமா? //எனக்கும் இந்த சந்தேகம் வந்துச்சி...லைட்டா...

To Our Sister . Ameena.A

//ஒரு மனோதத்துவ நிபுனரின் நேர்த்தியான பயனுள்ள அறிவுரைகளை உங்களிடமிருந்து பெறுகிறோம்.//.. இறைவனுக்கு நாம் நன்றி சொல்வோம்

To Tuan Haji Shahul,
//நீங்களே நேரில் வந்து வாசித்து காட்டுவதுபோல் உள்ளது//
இது நீங்கள் என் மீது வைத்துள்ள பிரியம்தான்...டெக்னிக்களா நான் எதுவும் செய்யலே

To Bro Crown,

//களரி சாப்பாடு அளவு இல்லையே? சரியா சொல்லிடுங்க அப்புறம் கருத்துபிழையா போய்விடும். //
நான் சொல்வதெல்லாம் களோரி..களோரி..களோரியைத்தவிற வேறதுவுமில்லை.

ZAKIR HUSSAIN said...

To Bro Abulkalam,

//வேகமாய்ப் பேசும் நீங்கள்- எழுத்திலும்
வேகாமாய்ப் படிக்க வைக்கும் நடை!//

உங்கள் கவிதையான கமென்ட்ஸுக்கு நன்றி. [ நான் நடப்பது ஒடுவதுமாதிரி இருக்கிறது என்று குடும்பத்தில் ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான் தொடர்ந்து ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பதன் சிம்ப்டம்ஸ் என்று உண்மையை விளம்பவில்லை]

To Bro Ebrahim Ansari,
//இடப்பட்டுள்ள கமா உட்பட பாராட்டுகிறேன்//

நன்றியுடன் உங்கள் அன்புத்தம்பி...உங்களைப்போன்றவர்களின் எழுத்தை ரசிப்பது ஒரு காரணமாக இருக்களாம்.

To Bro Yasir..

என் வீட்டில் இன்னும் என் சொல்தான்.இன்னும் ரிட்டயர் ஆகவில்லையல்லவா?

And Thanx to Bro Ara Ala, MHJ, Mohamed Buhari.


To Bro MSM Naina Mohamed,

நான் என்ன நினைக்கிறோனோ அதை ஒரு பாராவில் சொல்லிவிட்டீர்கள்.


அப்துல் மாலிக் நீங்களும் நான் பார்த்த ஆட்கள் மாதிரி பார்த்திருக்கிறீர்கள்.

அலாவுதீன்... நல்வரவு..உங்கள் பதிவுக்கு காத்திருக்கிறோம்.

KALAM SHAICK ABDUL KADER said...

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோ.அலாவுதீன். மதுரை கண் மருத்துவமனையில் சந்தித்த பின்னர் இன்று இங்குக் காண்கிறேன்; சிகிச்சை சிறப்பாக நடந்தேறியதா? சகோதரி ஆமினா போன்ற சகோதரிகள் உங்களின் “சகோதரியே” தொடரை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர் என்று அறியும் பொழுது உங்களின் எழுத்தின் தாக்கம் மட்டுமல்ல “இக்லாஸ்” எனும் உளத்தூய்”மை”யும் உங்கள் எழுத்தில் நிரப்பப்பட்டுள்ளதைக் காண்கிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

To Bro. Zahir Hussain,

நீங்கள் நடையிலும் வேகமானவர் என்பதும்; உங்களைச் சுற்றி நண்பர் குழாம் எப்பொழுதும் இருப்பர் என்பதும்; நகைச்சுவைப் பிரியர் என்பதும் என் கணிப்பு!

sabeer.abushahruk said...

ஏற்புரையில் என் பெயருக்கான கிஸ்தி கட்டப்படாததற்கு யார் காரணம்? லிஃப்ட், கிஃப்ட் என்றெல்லாம் மாஞ்சி மாஞ்சி எழுதியதை இருட்டடிப்புச் செய்ததன் மர்மமென்ன?

ஆசிரியர்க்கு காட்ராக்ட்டுக்கான வயசு வர இன்னும் காலம் பாக்கியிருக்கும்போது என் கருத்தை மட்டும் திரையிட்டது எது?

வரி வரியாய் வாசித்து எழுதியவனின் கருத்தை வரி விளம்பரங்களைப் போல புறக்கனிக்க ஆசிரியருக்கு 7 நம்பியார், 5 அசோகன், 3 ரகுவரத்தனமான வில்லன் மனசா அல்லது அருகே பழைய புதுக்கல்லூரி விடுதியின் பிரஸிடென்ட் உடன் இருக்கும் தெனாவட்டா?

(இந்த கண்டனப் போஸ்ட்டரை ஆசிரியர் பதில் சொல்லுவதற்குள் அ.நி. கிழித்தால் போராட்டம் வழுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்)

சோடா ப்ளீஸ்!

sabeer.abushahruk said...

"போராட்டம் வழுக்கும்" என்பதில் ழகரம் வந்து என் கோபத்தையே காமெடி ஆக்கிவிடும் அபாயம் உள்ளதால்

"போராட்டம் வலுக்கும்" என்று லகரம் போட்டு வாசிக்கவும்

Yasir said...

//போராட்டம் வழுக்கும்// ஹாஹாஹா...பார்த்தீங்களா உற்ற நண்பரை குற்றம் சொல்லக்கூட வார்த்தைக்கு பிடிக்கவில்லை...உங்கள் போராட்டம் “வழுக்க” என் வாழ்துக்கள் கவிவேந்தே..சாரி கட்சி பணிகள் பின்னாடி அழைப்பதால் என்னால் இப்போராட்டதில் கலந்து கொள்ள முடியாது

அலாவுதீன்.S. said...

////அபுல் கலாம் (த/ பெ. ஷைக் அப்துல் காதிர் )) சொன்னது…அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோ.அலாவுதீன். மதுரை கண் மருத்துவமனையில் சந்தித்த பின்னர் இன்று இங்குக் காண்கிறேன்; சிகிச்சை சிறப்பாக நடந்தேறியதா? ////
*****************************************

அன்புச் சகோதரர் அபுல் கலாம் அவர்களுக்கு: வ அலைக்கும் ஸலாம் (வரஹ்):

///மதுரை கண் மருத்துவமனையில் சந்தித்த பின்னர் இன்று இங்குக் காண்கிறேன்; சிகிச்சை சிறப்பாக நடந்தேறியதா?////

கண் பரிசோதனைகள் அனைத்தும் நல்லபடியாக முடிந்தது. முக்கியமான சோதனை கண் நீர் அழுத்த நோய்க்காக, எதுவும் பயப்படவேண்டாம் நார்மலாக உள்ளது, வருடம் ஒரு முறை மதுரை வந்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று டாக்டர் கூறினார். அல்ஹம்துலில்லாஹ்!

////சகோதரி ஆமினா போன்ற சகோதரிகள் உங்களின் 'சகோதரியே' தொடரை ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர் என்று அறியும் பொழுது உங்களின் எழுத்தின் தாக்கம் மட்டுமல்ல 'இக்லாஸ்' எனும் உளத்தூய்'மை'யும் உங்கள் எழுத்தில் நிரப்பப்பட்டுள்ளதைக் காண்கிறேன்.////

என்னிடம் எதுவும் இல்லை. வல்ல அல்லாஹ் நாடியபடி என் எழுத்து அமைகிறது. அகில உலகின் வல்லவனுக்கே எல்லாப்புகழும்! மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

தங்களின் அக்கரையான விசாரிப்புக்கும், கருத்திற்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

Yasir said...

Ahle Wa Sahla Alavudden Kakka...May Allah keep you in good health

ZAKIR HUSSAIN said...

//"போராட்டம் வழுக்கும்" என்பதில் ழகரம் வந்து என் கோபத்தையே காமெடி ஆக்கிவிடும் அபாயம் உள்ளதால் //


அதான் காமெடிஆயுடுச்சே அப்புறம் ஏன்டா விளக்கம் எல்லாம் கொடுத்து காமெடி செய்றெ

KALAM SHAICK ABDUL KADER said...

//அதான் காமெடிஆயுடுச்சே அப்புறம் ஏன்டா விளக்கம் எல்லாம் கொடுத்து காமெடி செய்றெ//

வழுக்குந் தருணத்தில் வாளா விருந்தால்
அழுக்காய்க் கருதி அதிரை நிருபர்
பழிக்கு மெனநீ பயந்துபோய் ஈண்டு
விழிக்கும் கருத்தை வியந்து

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ.அலாவுதீன் அவர்களின் வருகை மகிழ்வைத்தருகிறது. அல்லாஹ் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுள் தருவானாக ஆமீன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள ஜனாப். அலாவுதீன்,
உங்களை தேடிய கண்களில் என் கண்களும் உண்டு. உங்கள் கண்களின் நலக்குறைவு நலமாகி மீண்டும் உங்களின் ஆக்கங்களைக் காண ஆவலுறுகிறோம்.

அலாவுதீன்.S. said...

///Yasir சொன்னது…
Ahle Wa Sahla Alavudden Kakka...May Allah keep you in good health///

அன்புச் சகோதரர் யாசிர்க்கு அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) தங்களின் துஆவிற்கு - ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

///crown சொன்னது…
அஸ்ஸலாமுஅலைக்கும். சகோ.அலாவுதீன் அவர்களின் வருகை மகிழ்வைத்தருகிறது. அல்லாஹ் அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து நீண்ட ஆயுள் தருவானாக ஆமீன்.////

அன்புச் சகோதரர் தஸ்தகீர் அவர்களுக்கு வ அலைக்கும் ஸலாம் (வரஹ்). தங்களின் துஆவிற்கு - ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

அலாவுதீன்.S. said...

////Ebrahim Ansari சொன்னது…
அன்புள்ள ஜனாப். அலாவுதீன்,
உங்களை தேடிய கண்களில் என் கண்களும் உண்டு. உங்கள் கண்களின் நலக்குறைவு நலமாகி மீண்டும் உங்களின் ஆக்கங்களைக் காண ஆவலுறுகிறோம். ////

அன்புச் சகோதரர் இப்றாறீம் அன்சாரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). ஜஸாக்கல்லாஹ் ஹைர்!

சென்ற மாதம் ஊரில் இருந்தபொழுது கடற்கரைத்தெரு பள்ளியில் தொழுது விட்டு வரும்பொழுது தங்களின் முகச்சாயலில் இருந்தவரை பார்த்து நீங்கள்தான் இப்றாஹீம் அன்சாரியா என்று கேட்டேன். அவர் நான் இல்லை., என் பெயர் அப்துல் காதர் என்று சொன்னார்.

Iqbal M. Salih said...

டியர் ஜாகிர்,
,
நீ forward செய்யுமுன்பே நான் படிக்கட்டுகள் 16 படித்துவிட்டேன். மொத்தத்தில் சபீர் சொல்லியிருப்பதைப்போல,

"உன்னை மாதிரி மயக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர்களால் நிச்சயமாக சமுதாய மேம்பாட்டிற்கு பிரயோஜனமுண்டு."

இன்ஷா அல்லாஹ், இன்னும் நிறைய எழுது. இப்படி எழுத இயலாத situation இருக்கும்போதிலும், சில வருடங்களுக்குமுன், உன்னையும் சபீரையும் அஹ்மத் காக்காவையும் இணையத்தில் எழுதுமாறு நான் சொன்னதன்பேரில், நீங்கள் மூவருமே மூன்று வெவ்வேறு தலைப்புகளில் சக்கை போடு போட்டுக்கொண்டிருப்பதைக்கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்!

தாய்மை, சகோதரபாசம், காதல், நட்பு போன்ற உன்னதமான தன்மைகளை மனிதர்களுக்கு அணிவித்து அழகுபார்க்கும் அவன் எத்தகைய ஒப்பற்றவன் என்பதையும் அப்படிப்பட்டவனின் குணமாண்புகளைப்பற்றியும் நீ நிறைய சிலாகித்து எழுது. படித்து ரசிக்கவும் பாராட்டவும் உனக்காக மேலும் துஆச்செய்யவும் காத்திருக்கிறோம்.
-இக்பால் ஸாலிஹ்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு