இதுவரை : 45 நாள் விடுப்பில் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாட அதிரைக்கு வந்துள்ளார் அஹமது….
ஊர் வந்த இரண்டாம் நாள் அமானிதம் என்று உம்மாவிடம் ‘பொய்’ சொல்லி எடுத்து வைத்த பார்சலை அன்று மாலை மனைவியிடம் வந்து தருகிறார் அஹமது.
“என்னங்க இது?” என்று மனைவி கேட்க..
“பிரித்துத்தான் பாறேன்” என்று சஸ்பென்ஸ் வைக்க பார்சலை பிரித்த மனைவி பூரிக்கின்றாள் சந்தோசப் பார்வைகள் பறிமாறிக் கொண்டன.
“ஏங்க நான் ஒன்னு சொல்வேன் கேட்பிங்களா?”
“சொல்லு?”
“ஒன்னுமில்ல…..”
“அப்ப விடு”
“கிண்டல் பன்னாதீங்க”
“அப்படின்னா சொல்லு”
“மாப்பிள்ளையை லன்டனுக்கு அனுப்பி வச்சிட்டு மதராஸ்ல மகன படிக்க வக்கிறேன் என்கிற பெயர்ல மதராஸ்ல இருக்காஹலே ஒங்க தங்கச்சியை பார்த்துட்டு வரலாமா?”
“வேண்டாம்… வேண்டாம்… நான் திரும்ப துபை போறது சென்னை வழியாகத்தான் அப்ப போய்ப் பாத்துக் கொள்கிறேன்.”
“அப்ப நீங்க கொண்டுவந்த சாமான்களை தங்கச்சிக்கு கொடுக்கலையா?”
“அது தம்பி கொண்டுபோய் கொடுத்துடுவான்”.
“என்ன பொறுப்பில்லாம இருக்கியலே, நீங்க போய் கொடுக்கிறதுதான் சரி தம்பிகிட்டெல்லாம் சரிவராது”.
“சரி விடு நானே போறேன்”.
“நானும் கூட வாறேன்”.
“நீ எதுக்கு?”
“மதராஸ்ல போத்தீஸ்ல ஒரு பட்டுப்புடவை எடுக்கலாம்னு ஆசையா இருக்குங்க”
“அதச்சொல்லு முதல்ல, தங்கச்சிக்க்கு சாமான்னு பேசும்போதே நெனச்சேன், அதான் நான் நிறைய புடவைகள் கொண்டு வந்திருக்கேன்ல?”
“அதுல 2 புடவையை உங்க தங்கச்சிக்கு கொடுத்து பெருநாளைக்கு உடுத்த சொல்லுங்க பார்க்கலாம்?”
“ஏன் உடுத்தவா மாட்டா?”
“அவ ஏற்கனவே 8,000 ருபாய்க்கு பட்டுப்புடவை எடுத்தாச்சு”
“அது எப்படி உனக்கு தெரியும்?”
“தெரியும் தெரியும்”
“சரி இப்ப என்னாங்குறே?”
“எனக்கும் அதுபோல் எடுக்கனும்”.
“ம்ம்ஹூம்ம்ம் முடியல வந்த இரண்டு நாள்ல கண்ணைக் கட்டுதே!!!
“சரி… சரி.. நாளைக்கே சென்னைக்கு 2 டிக்கட் எடுத்துடுறேன்” என வேகமாக முடிவெடுத்து விவேகத்தில் 2 டிக்கட் எடுத்தாகிவிட்டது.
துபையில் இருந்து தங்கச்சிக்காக கொண்டு வந்த சாமன்கள் போக வக்கிய ஆட்டுத் தலை, குடல், கொடுவா பிஸ்க் என்று உம்மாவின் அடிஸனல் அன்பு கட்டளையோடு அனைத்தையும் அள்ளிக் கொண்டு விவேகத்தில் ஏறியாச்சு.
“சுபுஹானல்லதி சஹ்ஹரலனா ஹாதா வமா குல்னா மினல் முக்ரினீன்” வன்டி புறப்பட்டது…
சிங்காரச் சென்னை ‘உங்களை இனிதே வரவேற்கிறது’ என்ற அறிவிப்பு பதாகையோடு மாசுபட்ட காற்றும், வாகனப்போக்குவரத்தின் சூழல் பஸ்ஸில் வந்த அசதி வந்து சேர்ந்தது அனைவரும் விரும்பிச் சொல்லும் மதராஸ்.
மனதைக் கொள்ளையடிக்கும் அதிரை மண்வாசனை சாயலான அந்த மண்ணடியை பார்த்ததும் சுபுஹுத் தொழுகைக்கு எழுந்தவர்களும் நடை பாதையை தூங்கப் பயன்படுத்திய தரைப்படை மைந்தர்களும், அதிகாலை டீ பிரியர்களும் பேருந்தில் பயணித்தவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களைத் தவிர அந்த தெருவே சோம்பல் முறித்தது.
பயணப் பெட்டிகளை கையில் எடுத்துக் கொண்டு நடந்தே தங்கையின் வீட்டை வந்தடைந்தனர், இரண்டாவது மாடியிலிருந்து தங்கை பாத்திமா “காக்கா” என்று கொஞ்சம் சப்தமாக கூப்பிட அன்னார்ந்து பார்த்தார்… அருமை காக்கா கையை அசைத்து விட்டு மேல்மாடிக்கு சிரமப்பட்டு பயணப் பெட்டிகளையும் ஊரிலிருந்து எடுத்து வந்த அட்டைப் பெட்டிகளையும் தூக்கிக் கொண்டு ஏறினர்.
“ஒரு லிப்ட் கூட வைக்கமாட்டிக்கிறானுவ என்ன மதராஸோ?” துபை பெருமைகளை சொல்லிக்கொண்டே தங்கையின் அப்பர்ட்மென்ட் வந்தடைந்தார்.
“அப்பாடா” சோபாவில் அமர்ந்தார்.
“என்னம்மா நல்லாறிக்கியா…? மாப்ள போன்லாம் பன்றாரா? மருமகன் தூங்றானா? எத்ன மணிக்கு பள்ளிக்கூடம்?”
“பள்ளிக்கூடம் இல்ல காக்கா! காலேஜ் போறான்”.
“ஆமாமாம் பழய ஞாபகத்துல கேட்டுட்டேன்.”
“மச்சீ என்ன பேச மாட்டிக்கிறீங்க…”
“உங்க காக்கா எங்க பேசவுட்டாஹ வரிசையா கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காஹலே” என்றதும் மூவரும் சிரித்தனர்.
“இர்ரீங்க காக்கா தேத்தண்ணி போட்டு வச்சிட்டேன் கொண்டு வாறேன்” அடுப்படிக்குள் தங்கை நுழைகிறாள்.
டீயை குடித்து விட்டு உம்மா அனுப்பி வச்ச சாமான்களையும் தாம் கொண்டு வந்த சாமான்களையும் பிரித்து தங்கையிடன் கொடுக்கிறார். உம்மா தந்த சாமானை பிரித்து ஃபிரிட்ஜில் அடுக்கி விட்டு காக்கா தந்த சாமான்களை ஒவ்வொன்றாய் பார்க்கிறாள். பிறகு எதையோ தேடுகிறாள் காக்காவை பார்க்கிறாள் காக்கா கண் ஜாடை செய்கிறார், மனைவியை பார்த்து “ஏமா பாத்ரூம் போகனும்னியே போய்ட்டு வாயேன்” என்று ஞாபகப்படுத்த, மனைவியும் பாத்ரூம் சென்றுவிட தங்கையிடம் “அந்த சாமானை உம்மாட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்” என்று சொன்னவுடன் தான் தங்கையின் முகத்தில் சிரிப்பே வந்தது….
தொடரும்
மு.செ.மு.சஃபீர் அஹமது
18 Responses So Far:
என்னுடைய சமூகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கட்டுரை கரு ஆதலால் நிகழ்வுகள் அனைத்தும் என்னையும் அக்கட்டுரைக்குள் இனைக்கின்றது.
கட்டுரை நடை அருமை. மேலும் விருவிருபிற்கு குறைவில்லாமல் நகர்கிறது.... அடுத்து என்ன என்ற ஏக்கத்துடன் ஒவ்வரு பாகமும் முடிவுறுகிறது.....
“அந்த சாமானை உம்மாட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்
எனக்கு தெரியும்.இந்த சஸ்பென்ஸ்...வளையல்,அல்லது கவ்னர்மாலையாக
இருக்கும் என்று
படிக்க படிக்க ஆவலை தூண்டும் தொடர்.....அனேகம்பேர் நினைக்ககூடும்,
;அட...நம்மகதை அதிரை நிருபரில்'enru
அஹமதுடெ சம்பவங்கள் சூப்பரு!
ஆனா அவரு அங்கிட்டும் நடிச்சுக்கிட்டு இங்கிட்டும் நடிச்சுக்கிட்டு பொழப்பெ கடத்துறாரு பாவம். இதற்கெல்லாம் யார் காரணமோ!
அந்த சாமானை உம்மாட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்
எனக்கு தெரியும்.இந்த சஸ்பென்ஸ்...வளையல்,அல்லது கவ்னர்மாலையாக
இருக்கும் என்று
படிக்க படிக்க ஆவலை தூண்டும் தொடர்.....அனேகம்பேர் நினைக்ககூடும்,
;அட...நம்மகதை அதிரை நிருபரில்'enru
என்ன கமென்டு பக்கம் யாறையும் காணோம் எப்படிடா நம்ம விசயம் இந்த ஆளுக்கு தெரிந்ததுன்னு ஷாக்காயிட்டீங்களா? வடிவேல் சொல்வது போல்
//ன்ன கமென்டு பக்கம் யாறையும் காணோம் எப்படிடா நம்ம விசயம் இந்த ஆளுக்கு தெரிந்ததுன்னு ஷாக்காயிட்டீங்களா? //
வூட்டுக்காரவொலும் படிக்கிராஹ, ராத்தா தங்கச்சியும் படிக்கிராஹ என்ற அலெர்ட்டாக இருக்குமோ !?
சஃபீர் பாய்,
உங்களைப்போன்ற முதலாளிமார்கள் நினைத்த நேரம் கருத்திடலாம். எங்களைப்போன்ற தொழிலாளிகள் நேரம் வாய்க்கும்போதுதானே வாயைத் திறக்க முடியும்?
ஒன்பதுநாள் வேலையை ஒருநாளில் செய்து கேட்கும் முதலாளிகள் இருக்கும்வரை கருத்துப்பெட்டிக்கு வரத்து குறைவாகவே இருக்கும். :-) (நீங்க நல்ல முதலாளின்னு கேள்விப்பட்டென், நெஜமா?)
மாமியா மருமகள் சல்லையே எனக்கு இல்லாததால் உங்கள் தொடர் எனக்கு த்ரில்லர் மாதிரி இருக்கு.
கலக்குங்குங்கள்.
எச்சூஸ்மீ,
மாமியா மருமகள் அல்ல, கணவனின் தங்கை, மனைவிக்கு நாத்தனார்... என்று சொல்ல வந்தேன்.
நடந்தவைகளை இதுமாதிரி பப்ளிக்கா எழுதவும் ஒரு தகிரியம் வேணும் காக்கா,,.......
யான் காக்கா இப்படி எல்லாத்தையும் போட்டு ஒடச்சிட்டீங்க....அந்த “மானத” சாமான் மேட்டர் இருக்கே...அதெ நான் சத்தியமா :)செய்யல...சுவையான சுறுசுறுப்பான தொடர்...தொடர்ந்து எழுதுங்கள் காக்கா
வந்துட்டாங்கையா வந்துட்டாங்க நீங்களேல்லாம் வந்தாத்தானே கலை கட்டும் ஸ்மார்ட் போனை பாத்ரூம் கொண்டுபோய் முதளாலிக்கு தெரியாமல் கமன்டு கொடுக்கத்தெரியாதா ரொம்ப நல்லவங்களோ?
//மனதைக் கொள்ளையடிக்கும் அதிரை மண்வாசனை சாயலான அந்த மண்ணடியை பார்த்ததும் சுபுஹுத் தொழுகைக்கு எழுந்தவர்களும் நடை பாதையை தூங்கப் பயன்படுத்திய தரைப்படை மைந்தர்களும், அதிகாலை டீ பிரியர்களும் பேருந்தில் பயணித்தவர்களை அழைத்துச் செல்ல வந்தவர்களைத் தவிர அந்த தெருவே சோம்பல் முறித்தது.//
உண்மையான வர்ணனை. ஆனால் நமது ஊரிலிருந்து செல்லும் மற்றும் புறப்படும் பேருந்துகள் நிறுத்தப்படும் இடத்தின் மண் வாசனையைப் பற்றி சொல்லியாகவேண்டும். மிகவும் தூய்மைக் குறைவான சிறுநீர் நாற்றம் குடலைப் பிடுங்கும் இடங்களில் இந்தப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகளை இயக்கும் முகவர்கள் இந்தக் குறையை நீக்கும் வகையில் இட மாற்றம் அல்லது இடத்தின் நிலைமை மாற்றம் என்ற வகையில் கவனிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா, சிரிப்போடு ஒவ்வொருவரின் மனதை தொடும் நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்..
அமீரகத்தில் இன்று ஒரு அதிரை சொந்தம் அலைப்பேசியில் அழைத்து, இந்த பதிவை அவர்களின் ரூமில் உள்ளவர்கள் படித்து சிரித்தது ஒரு புரம் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட நிகழ்வாகவே இங்கு சொல்லப்பட்டவைகள் என்று கூறினார்.
பலர் கமெண்டு பதியாவிட்டாலும், அதிரைநிருபர் பதிவுகளை படிக்க மறப்பதில்லை என்பது மட்டும் உண்மை.
//“அப்ப நீங்க கொண்டுவந்த சாமான்களை தங்கச்சிக்கு கொடுக்கலையா?”//
//“என்ன பொறுப்பில்லாம இருக்கியலே, நீங்க போய் கொடுக்கிறதுதான் சரி தம்பிகிட்டெல்லாம் சரிவராது”//.
அதானே என்னப்பா பிராந்து நம்ம பக்கம் பறக்குதேன்னு பார்த்தேன். காயவச்ச கருவாட தூகத்தாநேன்னு அப்புறம் தெரிஞ்சது. எவ்வளவுதான் MBA படிச்சவர்களாக இருந்தாலும் இந்த மாதிரி பேச்சு சாதுர்யம் எல்லாம் இல்லறப் பல்கலைக் கழகத்தில்தான் நம்மவர்கள் படிக்கவேண்டும்.
// மனைவியை பார்த்து “ஏமா பாத்ரூம் போகனும்னியே போய்ட்டு வாயேன்” என்று ஞாபகப்படுத்த, மனைவியும் பாத்ரூம் சென்றுவிட தங்கையிடம் “அந்த சாமானை உம்மாட்ட கொடுத்துட்டு வந்திருக்கேன்” என்று சொன்னவுடன் தான் தங்கையின் முகத்தில் சிரிப்பே வந்தது….//
அடுத்த தடவை வெளியூரிலிருக்கும் தங்கச்சி விட்டுக்கு, மனைவியை அழைத்து செல்பவர் வேறு டெக்னிக்கை ஃபாலோ பண்ணனும், சபீர் காக்கா போறப்போக்கைப் பார்த்தா எல்லா டெக்னிக்கையும் சொல்லிடுவிய போல தெரியுது.
தாஜுதீன் சொல்வதை பார்த்தால் அமீரகத்தில் நம்மவர்கள் ஒன்று கூடி தடை உத்தரவு பிறப்பித்து விட மாட்டார்களே? நம் கட்டுரைக்கு! இபுராஹீம் அன்சாரி காக்கவின் வரவிற்கு வரவேற்ப்புகள்
அதிரைக்கு வந்த அஹமது தொழில் முனைவோர் அஹமது ஹாஜியாக மாறினால் எவ்வளவு நல்லாயிருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்,
சபீர் காக்கா, சிரிப்போடு ஒவ்வொருவரின் மனதை தொடும் நிகழ்வுகளை அப்படியே படம்பிடித்து காட்டிவிட்டீர்கள்..
Post a Comment