மழைக்காலம் என்றாலே மழலை முதல் முதியோர் வரை அனைவரின் உள்ளங்களிலும் சந்தோச சாரல் வீசி குளிரூட்டாமல் இருப்பதில்லை. அதனால் தான் மழை பெய்யும் நேரம் செய்யும் இறைப்பிரார்த்தனைகளை (து'ஆ) இறைவன் ஏற்றுக்கொள்வதாக ஹதீஸ் மூலம் நாம் அறிகின்றோம்.
மழைக்காலங்களில் மாடியில் இருப்பவனை விட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில் குடியிருப்போருக்கு பல சிரமங்கள் வராமல் இருப்பதில்லை. தொடர் மழையால் ஒழுகும் வீடும், அடுப்பெரிக்க வைக்கப்பட்டிருந்த விறகுகளில் குடிகொள்ளும் ஈரமும், துண்டிக்கப்படும் மின்சாரத்தால் வரும் மண்ணெண்ணெய் தேவையும், குடி தண்ணீரில் கலந்து வரும் கிருமிகளால் வரும் நோய்நொடிகளும், கொசுக்கடியால் வரும் தொல்லைகளும், ஈரக்காலில் வரும் சேத்துப்புண்ணும் என பல சிரமங்களையும் நாம் எதிர்கொள்ளாமல் இருக்கவும் இயலாது.
மாடி வீடாக இருந்தாலும், குடிசை வீடாக இருந்தாலும் மழைக்கு ஏங்காதோர் எவர் தான் இருக்க முடியும் இவ்வுலகில்? இன்று மழையின் அருமை டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு நன்கு விளங்கும்.
நாமெல்லாம் சிறுவர்களாக இருந்த சமயம் வந்த மழைக்காலங்களில், இன்று வங்கியின் பண இருப்பு பற்றி எப்படிக் கவலைப்படுகிறோமோ அது போல் அன்று நமதூர் குளங்களின் தண்ணீர் இருப்பை மிகவும் கவனமாகவே கவனித்து வந்து பரவசமடைந்திருக்கிறோம். ஒவ்வொரு குளமும் நிறையும் சமயம் இன்று எப்படி ஒரு கடலை வியாபாரி தன்னை 27,000 கோடிக்கு அதிபதி என்று பேசி பெருமிதம் கொள்கிறாரோ அதை விட அதிகமாகவே அந்நேர நம் பிஞ்சு உள்ளங்கள் பெருமிதம் அடையாமல் இருந்ததில்லை.
அந்த நேரத்தில் கொஞ்சம் வசதியானவர்கள் குதிரை வண்டி பிடித்து குடும்பத்துடன் நமதூர் அருகிலுள்ள ஏரிக்கு சென்று குளித்து வருவர். நாகரீக உலகில் அவுட்டோர் திறந்தவெளி குளியலெல்லாம் இன்று ஆபாசமாகிப்போனது. ரகசிய கேமராவில் நாம் எங்கிருந்தோ கண்காணிக்கப்பட்டு ஒருநாள் ஃபேஸ்புக்கிலோ அல்லது யுடியூப்பிலோ காணொளியாக்கப்பட்டு கண்டவருக்கும் விருந்தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் மக்களை ஆட்டு வித்து விடுகிறது பாலியல் அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய காலங்களில். அதுவே நிதர்சனமான உண்மையும் கூட.
ராத்திரியோட ராத்திரியா அவரவர் தெருக்குளங்களுக்கு மண்மூட்டை வைத்து அடைத்து மழைத் தண்ணீரை திருப்பி விடும் அன்றைய இளைஞர்களின் சிரத்தை மிகுந்த அப்பணியையும், சுறுசுறுப்பையும் அவர்களின் வீட்டு களரியில் கூட அந்தளவுக்கு பார்க்க இயலாது.
மழைக்காலங்களில் வீட்டின் வாசலில் ஓடும் சிறு ஓடையில் நெளிந்து தாவி ஓடி சிறுவர்களை குதூகலமடையச்செய்யும் சிறு மீன்களைப்பற்றி நாம் என்றேனும் சிந்தித்திருக்கிறோமா? அது எங்கிருந்து, எப்படி வருகிறது? (சிந்தித்து செயல் பட ஆயிரம் காரியங்கள் இருந்தாலும் இதுவும் நம்மை சிந்திக்க வைக்கிறது)
இணையத்தின் ஒரு காணொளியில் நான் கண்ட காட்சி இறைவனின் ஏற்பாடுகளை எண்ணி வியர்க்கவும், வியக்கவும் வைக்கிறது.
கருமேகத்திலிருந்து கடலை சுருள் போன்ற ஒரு காற்றுச்சுருள் (டொர்னடோ) தரையை நோக்கி சுழற்றிக்கொண்டு வாக்கும் கிளீனர் போன்று தரையில் இலகுவானவற்றை அப்படியே சுத்தம் செய்து சுழற்றி மண்ணிலிருந்து விண்ணுக்கு தூக்கிச்செல்கிறது. (இப்பொழுது எதற்கெடுத்தாலும் அந்த கடலை வியாபாரி தான் நினைவுக்கு வருகிறார்).
அப்படியே அது மெல்ல, மெல்ல நகர்ந்து ஒரு சிறு நீர்நிலையை அடைகிறது. ஸ்ட்ரா மூலம் ரோஸ்மில்க் சர்பத் குடிக்கும் பொழுது கிளாஸிலிருந்து எப்படி ஸ்ட்ராவிற்கு ஏறும் சிறு பாதாம், பிஸ்தா, பிசின் துகள்கள் போல் அந்த கருமேகக்காற்றுச்சுருளில் சிக்கி அந்த நீர்நிலையிலிருந்து விண்ணுக்கு சிறு,சிறு மீன்கள் அப்படியே உயிருடன் மேலே பயணிக்கின்றன. அந்த மேகக்கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வேறு எங்கோ ஓரிடத்தில் மழையுடன், அந்த உயிர் மீன்களையும் அப்படியே தூவிச்செல்கின்றன. அங்குள்ள மக்களும் அந்த மீன் மழையில் நனைந்து வியக்கின்றனர். இதுபோல் உலகில் எங்கோ ஒரு மூளையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறைவனின் அதிசயங்கள் அரங்கேறாமல் இருப்பதில்லை. அவைகள் யாவும் நம் அறிவுக்கு வந்து சேர்வதில்லை என்பதே உண்மை. சுபஹானல்லாஹ்......
மு.செ.மு.நெய்னா முஹம்மது
12 Responses So Far:
//கடலை வியாபாரி தன்னை 27,000 கோடிக்கு அதிபதி என்று பேசி பெருமிதம் கொள்கிறாரோ\\
இன்று வந்த தகவல்: அக்கடன் பத்திரங்கள் யாவும் “டுபாக்கூர்”
\\அந்த நேரத்தில் கொஞ்சம் வசதியானவர்கள் குதிரை வண்டி பிடித்து குடும்பத்துடன் நமதூர் அருகிலுள்ள ஏரிக்கு சென்று குளித்து வருவர். நாகரீக உலகில் அவுட்டோர் திறந்தவெளி குளியலெல்லாம் இன்று ஆபாசமாகிப்போனது. ரகசிய கேமராவில் நாம் எங்கிருந்தோ கண்காணிக்கப்பட்டு ஒருநாள் ஃபேஸ்புக்கிலோ அல்லது யுடியூப்பிலோ காணொளியாக்கப்பட்டு கண்டவருக்கும் விருந்தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் மக்களை ஆட்டு வித்து விடுகிறது பாலியல் அக்கிரமங்கள் நிறைந்த இன்றைய காலங்களில். அதுவே நிதர்சனமான உண்மையும் கூட.\\
காலத்திற்கேற்ற விளக்கம்!
//அப்படியே அது மெல்ல, மெல்ல நகர்ந்து ஒரு சிறு நீர்நிலையை அடைகிறது. ஸ்ட்ரா மூலம் ரோஸ்மில்க் சர்பத் குடிக்கும் பொழுது கிளாஸிலிருந்து எப்படி ஸ்ட்ராவிற்கு ஏறும் சிறு பாதாம், பிஸ்தா, பிசின் துகள்கள் போல் அந்த கருமேகக்காற்றுச்சுருளில் சிக்கி அந்த நீர்நிலையிலிருந்து விண்ணுக்கு சிறு,சிறு மீன்கள் அப்படியே உயிருடன் மேலே பயணிக்கின்றன. அந்த மேகக்கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து வேறு எங்கோ ஓரிடத்தில் மழையுடன், அந்த உயிர் மீன்களையும் அப்படியே தூவிச்செல்கின்றன. அங்குள்ள மக்களும் அந்த மீன் மழையில் நனைந்து வியக்கின்றனர். இதுபோல் உலகில் எங்கோ ஒரு மூளையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் இறைவனின் அதிசயங்கள் அரங்கேறாமல் இருப்பதில்லை. அவைகள் யாவும் நம் அறிவுக்கு வந்து சேர்வதில்லை என்பதே உண்மை. சுபஹானல்லாஹ்......\\
பாடம் நடத்தும் பக்குவமும் காண்கிறேன்!
சுட்டும் விழிச்சுடர் “ஷா” அவர்கள் கருவாடு-பூனையையும், நீங்கள் சர்பத்-ஸ்ட்ராவையும் அழகான - எளிமையான- புரிந்து கொள்ளும் வண்ணம் காட்டுகளாய்க் காட்டியிருப்பது அற்புதமான ஓர் ஆசான் என்பதற்குச் சாலச் சிறந்த சான்று
சுபஹானல்லாஹ்
அது ஒரு மழைக் காலம் என்ற தலைப்பை அதுவும் தம்பி நெய்னா அவர்களின் பெயரால் வந்த ஆக்கத்தின் தலைப்பைப் பார்த்ததும் சரி ஏதோ மழைக்கால அதிரையின் மண்வாசனை வீசும் விஷயங்கள் என ஆவல் மேலிட படிக்கத் தொடங்கினேன்.
ஆனால்
படித்ததும் மகிழ்ச்சியை விட மலைப்பே மேலிட்டது.
என்றோ ஒரு காலத்தில் சலனமின்றி ஓடும் சிறு வாய்க்கால்களில் கூட்டம் கூட்டமாக வரும் மீன் குஞ்சுகளை தண்ணீரோடு சேர்த்துக் காலால் "தெத்தித் தெத்தி" விட்டு அவை துடிப்பதைப் பார்த்து மகிழ்ந்த காலங்கள் நினைவுக்கு வந்தன.
கருத்தறியாத காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் இப்படி ஒரு இறை அதிசயம் இருப்பதை அறியும்போது உதடு உச்சரிக்கிறது சுபகானல்லாஹ்.
பாராட்டுக்கள் தம்பி நெய்னா அவர்களே!
மலரும் நினைவுகளை மலர விட்டுவிட்டீர்கள். அழகு!!!
பள்ளிக்கூட பருவத்தில் விடுமுறைக்காக ஏங்கும் மழையை.!!குளங்களை நிறைக்க மன்மூட்டைகளை அடுக்கிய அந்த இளைய வயதும் நினைவுக்கு வருகிண்றது
அல்லாஹ்வின் அற்புதங்களை மனிதன் நன்றியோடு உற்றுநோக்கினால் "சுபுஹானல்லாஹ்" என்று புகழ்ந்து தன் ஆனவம் விட்டொழிப்பான்.
நம்மைச் சுற்றிலும் அல்லாஹ்வின் “வெளிரங்கமான” அற்புதங்களும் கண்டப் பின்னரும் நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது?
மவுனம் கலைத்த மழைக்காலம் - நன்றி MSM(N) !
படித்து பாராட்டிய அருமை நெஞ்சங்களுக்கு நன்றிகள்.
இப்படித்தான் சுமார் 20, 25 வருடங்களுக்கு மேல் பட்டுக்கோட்டை செல்லும் வழியில் மாளியக்காட்டிலிருந்து ஆரம்பிக்கும் செல்லிக்குச்சி ஏரியில் ஒரு மழைக்காலத்தில் கார்மேகக்கூட்டம் அப்படியே வானிலிருந்து இறங்கி வந்து குழாயின்றி நீரை ஏரியிலிருந்து வானுக்கு அள்ளிச்சென்றதை பட்டுக்கோட்டை வழியில் சென்றவர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கின்றனர். பால் குடித்த சம்பவம் போல் அக்கம்பக்கத்து கிராமவாசிகள் யானையின் சும்சுகை (தும்பிக்கை) போல் இருப்பதாக சொல்லி அப்படியே ரூட்டை திருப்பியும் விட்டதாக பார்த்து வந்தவர்கள் சொல்லக்கேட்டேன். (அந்த நேரத்தில் மொபைல் ஃபோன் கேமாராக்கள் இருந்திருந்தால் வளச்சி,வளச்சி ஃபோட்டோ எடுத்திருக்கலாம் தான்)
இதையெல்லாம் நினைக்கும் பொழுது தெருவில் ஓடிய மீன்களை காலில் தெத்தி வேட்டியில் பிடித்து வந்து வீட்டில் வாங்கிய அடிகளும் ஞாபகத்திற்கு வராமல் இல்லை.
// ஈரக்காலில் வரும் சேத்துப்புண்ணும் //
இதனால் நிறையபேர் அனுபவ்சிருக்கோம், இதை பற்றி யாராவது தெளிவான விளக்கங்களுடன் எழுதினால் நல்லது..
Post a Comment