பெயர் கூறுமா..?


என் மரணம் .
என் பெயர் கூறுமா...
எத்தனை கண்கள் பணிக்கும்
எத்தனை இதயங்கள் கனக்கும்

என் மரணம்
சிலருக்கு இனிக்குமா...?
பிறருக்கு வலிக்குமா...?
இப்படி ஒரு கேள்வி
என்னுள் கேட்டுப் பார்த்தேன்

என் அறிவுக்கு
எட்டிய பதிலில்
கிட்டியது தெளிவு

நீ செய்யும் செயலில்
இருக்கிறது உன் பெயர்
அதில் நல்லதும் கெட்டதும்
அடங்கி உள்ளது

கண்கள் பணிக்குமா
அது உன் உறவின் நெருக்கத்தை
பொருத்தது

இதயம் கனக்குமா
நீ எத்தனை இதயத்தில்
இருக்கிறாய் என்பதைப்
பொருத்தது...

உன் மரணம் எத்தனை
பேருக்கு இனிக்கும்...
நீ எத்தனை பேருக்கு
எதிரி என்பதைப் பொருத்தது

எத்தனை பேருக்கு வலிக்கும்
நீ எத்தனை பேருக்கு
நண்பன் என்பதைப் பொருத்தது

நீ யார்..
எப்படி..
என்பது உனக்கேத் தெரியும்..!

அதிரை சித்தீக்

15 கருத்துகள்

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…

கனமான கரு...!

எத்தனை மரணங்கள்
இதனை எதிர்பார்க்கும் !
அவற்றிற்கே தெரியாத
ஏக்கமே இந்த கரு !

அதிரை என்.ஷஃபாத் சொன்னது…


அருமையான  கவிதை.. எங்கோ படித்த ஒரு  கவிதையையும் இங்கே  பகிர விரும்புகிறேன். . 
மரண  ஊர்வலத்தில்  
மரணித்தவன்  
சற்று  எழுந்து  பார்த்தான். 
பின்  தொடர்பவரின் 
 எண்ணிக்கையைப்  
பார்த்துவிட்டு  மீண்டும்  
படுத்துக் கொண்டான்

sabeer.abushahruk சொன்னது…

மரணித்து மறைந்த பின்பும் எந்த மனிதன் எல்லோர் இதயத்திலும் வலியை விட்டுவிட்டுச் செல்கிறானோ அவனே சிறந்த வாழ்க்கை வாழ்ந்ததாகக் கொள்ள வேண்டும்.

எவர் மரணமாவது எவருக்காவது இனிக்குமா என்ன? ஆம் என்றால், மரணித்தவனைவிட அவன் மரணத்தால் மகிழ்பவனே கெட்டவன்.

மரணித்துவிட்டவனை மன்னித்துவிடுபவனே மனிதன்.

நல்ல சிந்தனை, சித்திக் பாய்.

இயல்பான சிந்தனையோ உணர்வோ மட்டுமே நல்ல கவிதையாக அமைய முடியும். அந்த வகையில் இந்தக் கவிதை அருமை.

வாழ்த்துகள்.

Ibn Abdulwahid சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

சிந்தனையால் செதுக்கிய கவிப்பொழிவு!
கவிப்புலமையில் உங்க கணிப்பு மிகச் சரி.
-------------------------------------------------------

ரபியுள் அவ்வல் 9
ஹிஜ்ரி 1434

Ebrahim Ansari சொன்னது…

தம்பி என். ஷபாத் அவர்களின் பின்னூட்டக் குறிப்புக் கவிதை அட்டகாசம்.

இளவயதில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அதன் முதலாளி மிகவும் நல்லவர். ஆனால் காசாளர் வடிகட்டிய கஞ்சன். முதலாளி ஒரு குறிப்பிட்ட தொகையை காசாளரிடம் தனிப்பட்ட முறையில் கொடுத்து ஏழைகள் வந்தால் தர்மமாக கொடுக்க சொல்வார். ஆனால் காசாளர் கொடுக்க மாட்டார். இந்த விஷயம் முதலாளிக்குத் தெரிந்ததும் முதலாளி கோபமாக காசாளரிடம் கூறியது

" நீர் மவுத்தானால் குறைந்தது நாலு பேராவது தேவைப்படும் . அந்த நாலு பேரைக் கூட உனக்காக இல்லாமல் செய்துவிடாதேங்கானும் " .

முதலாளியும், காசாளரும் நம் ஊரைச் சேர்ந்தவர்களே. ( 1972 )

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…

நன்பனின் கவிதை அழகு
இதயம் கனத்திருக்கச்செய்து விட்டது
மையத்திற்க்கு பின்னே செல்பவர்கள்
பேசிக்கொள்வதை வைத்து
இறந்த மனிதனை அறிந்து
கொள்ளலாம்

மு.செ.மு. நெய்னா முஹம்மது சொன்னது…

என்ன தான் மிடுக்காய் நடந்தவரானாலும், படுக்கையில் பல வருடங்கள் கடந்தவரானாலும் மரணித்து விட்டால் உரிய நேரம் வந்து ஜனாஸாவை தூக்கும் சமயம் அந்த வீட்டினர்கள் அனைவரும் பிரியா விடை பெருபவருக்காக வேதனையில் கதறுவது எப்படிப்பட்ட கல் நெஞ்சத்தையும் கறைத்து விடும்.

என்ன தான் வாழ்க்கையில் பல வேதனைகளையும், தொந்தரவுகளையும் ஏதோ காரணத்திற்காக தெரிந்தோ அல்லது தெரியாமலோ தந்தவராயினும் மரணித்து விட்டால் அவை எல்லாம் மறக்கடிக்கப்பட்டு மனம் இளகி விடுவதோ என்னவோ மனித இயல்பு. மரணித்த பின்பும் கூட மைய்யித்தான அவர் முகம் காணச்செல்ல மாட்டேன் என இறுகிய மனத்துடன் சிலர் இருந்து விடுவது என்னவோ வேதனையான விடயமே.

ரிஸானா நஃபீக்கின் ம‌ர‌ண‌ த‌ண்ட‌ணைக்காக‌ கூக்குர‌லிட்டு நாட‌க‌மாடும் சில‌ ஊட‌க‌ங்க‌ள், தியாக‌த்திருநாள் அன்று அமெரிக்க‌ ஏகாதிப‌த்திய‌ க‌ட்ட‌ளையால் தூக்கிலிட‌ப்ப‌ட்ட‌ ச‌தாம் ஹுசைனுக்காக‌ கூக்குர‌லிட்டு நாட‌க‌மாடி அதில் நாலு காசு ப‌ண‌ம் பார்க்காம‌ல் ம‌வுன‌ம் சாதித்த‌து ஏனோ?

முதிய‌வ‌ர்க‌ளுக்கு முன்னரே நாமும் இறைவ‌ன‌டி சேர்ந்து விட்டால் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் எப்ப‌டியெல்லாம் பேசிக்க‌த‌றுவார்க‌ள் என‌ நானும் சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் கொஞ்சம் நினைத்துப்பார்த்ததை அப்ப‌டியே சித்தீக் காக்கா அருமையான க‌விதையாக‌ வடித்திருக்கிறார்க‌ள்.

Ibn Abdulwahid சொன்னது…

அஸ்ஸலாமு அலைக்கும்

மரணம் - திட்டமாக ஒவ்வொரு ஆத்மாவும்
சுகித்தே தீரும் என்கிறது வான்மறை.

அதன் சுவை யாருக்குத் தெரியும் எப்படியென்று?
கண்டோர் கூற முடியாத மீளாப்பயனமல்லவோ

"எந்த ஒருவர் தனது கையைக்கொண்டும், நாவைக்கொண்டும் பிறருக்கு எந்த தொந்தரவும் தரவில்லையோ அவரே உண்மை முஸ்லிம்" என்கிரார்கள் இறைத்தூதர் அவர்கள் -

அவரது மரணம் அவருக்கு இனிக்கலாம் - பிறருக்கு
அது வலிக்கலாம்.

நபி மொழிக்கு எதிரானோரின் மரணம் அவருக்கு வலிக்கலாம் - பிறருக்கோ இனிக்கலாம்.

தாஜுதீன் (THAJUDEEN ) சொன்னது…

மரண நினைவூட்டல் தந்தமைக்கு மிக்க நன்றி சித்தீக் காக்கா..

Yasir சொன்னது…

மரண நினைவூட்டல் தந்தமைக்கு மிக்க நன்றி சித்தீக் காக்கா..

KALAM SHAICK ABDUL KADER சொன்னது…

இயல்பான சிந்தனையோ உணர்வோ மட்டுமே நல்ல கவிதையாக அமைய முடியும். அந்த வகையில் இந்தக் கவிதை அருமை.

வாழ்த்துகள்.

இப்னு அப்துல் ரஜாக் சொன்னது…இயல்பான சிந்தனையோ உணர்வோ மட்டுமே நல்ல கவிதையாக அமைய முடியும். அந்த வகையில் இந்தக் கவிதை அருமை.

வாழ்த்துகள்.

crown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
crown சொன்னது…

அஸ்ஸலாமுஅலைக்கும்.ம"ரணம்" அது வரும் பொழுது இரவா?பகலா?யாரரிவர் ஆனாலும் இந்த மரணக்கவிதை இறவா கவிதையா(க்)கி இருப்பது கவிதையில் உயிர் இருப்பதை காட்டுகிறது.வாழ்த்துக்கள் என் மரணம் எதிரிக்கு இனிக்கும் என்றால் நான் எப்படி இனியன் என்பதை புரிந்து கொ(ல்)ள்வர்.