Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு.. 19

அதிரைநிருபர் பதிப்பகம் | January 25, 2013 | , , , , ,


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!

கழிப்பிடத்தில் முளைக்கும் திடீர் கப்ரு

அஸ்ஸலாமு அலைக்கும்.

அதிராம்பட்டினத்தின் கடற்கரைத் தெருவிலுள்ள தர்ஹாவில் பெண்கள் தங்குவதற்காக மண்டபம் என்றொரு பகுதி உள்ளது. தர்ஹாவும் அதன் பெண்கள் பகுதியான மண்டபமும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டவை என்று கூறப்படுகிறது.

மண்டபத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், மண்டபத்தில் தங்கும் பெண்கள் அங்குள்ள ஓர் ஓரப்பகுதியை தங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 18.1.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுவதற்காகக் கடற்கரைத் தெரு ஜும்ஆப் பள்ளிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது!

தொழுகைப் பள்ளிக்குப் பின்புறத்திலுள்ள பெண்கள் மண்டபத்தில் கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. தொழுகை முடிந்து, அங்குச் சென்று பார்த்தபோது பல்லாண்டு காலமாகப் பெண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த இடத்தில் செங்கற்களைக் கொண்டு புதிதாகக் கபுரு ஒன்றைக் கட்டும் பணியில் பிறமதத்துப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாளான 19.1.2013 அன்று திடீர் கபுருக்கு சிமெண்ட் பூசும் வேலை நடந்தது. மறுநாள் 20.1.2013இல் டைல்ஸ் அலங்காரங்கள் பதிக்கப்பட்டன.

கூடிய விரைவில் அங்கு ஓர் உண்டியல் முளைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இருக்கின்ற சமாதிகள் போதாதென்று புதிதாக சமாதிகளை உருவாக்கி வயிறு வளர்க்கும் கூட்டம் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அவமானமாகும்.

நபி (ஸல்) கூறினார்கள் :

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ


"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளை மிதிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ

"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

அன்பான தாய்மார்களே!

அல்லாஹ்வின் தூதரின் சாபம் என்பது சாதாரண மனிதர்களின் சாபம் போன்றதல்ல. ரஸூல் (ஸல்) அவர்களின் சாபத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; சமாதி வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹ்வின் பாவ மன்னிப்புக் கிடைக்காத ஷிர்க் எனும் இணைவைத்தலில் விழுந்து, நரகவாசிகளுடன் சேர்ந்துவிடாதீர்கள்.

அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அச்சமின்றி திடீர் கபுரை உண்டாக்குபவர்கள், திண்ணமாக மார்க்கத்தின் வரம்புகளை மீறிவிட்டவர்களாவர். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்:

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது (85:12).

பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இறப்பு நிச்சயம். இறப்புக்குப் பின்னர் நமக்கான கேள்வி கணக்குகள் அதைவிட நிச்சயம்.

அல்லாஹ்வின் கடினமான பிடியிலிருந்து நாம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் தப்பித்துக் கொள்ளவதற்கும் சமாதி வழிபாடு உட்பட அனைத்து வழிகேடுகளிலிருந்தும் விலகி, நேர்வழியில் வாழ்ந்து ஈமானோடு இறப்பதற்கும் வல்ல நாயன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!.
ஃஃஃ
குறிப்பு:
இந்த நோட்டீஸின் பிரதிகள் தனி மடல்களில் இணைக்கப்பட்டு நிழற்பட சான்றுகளோடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் ஹுஸைன், தலைமைச் செயலாக்க அலுவலர் அப்துல் ராஸிக் எம்ஏபிஎல், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் படிவத்தைப் பயன்படுத்தி, +91-44-25248888 எனும் எண்ணுக்குத் தொலைநகல் (Fax) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

பொதுமக்களின் பயன்பாட்டுக்கு:

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------

To
Janab F. Abdul Razick, M.A.B.L,
CEO, Tamilnadu Wakf Board,
1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar,
Chennai – 600001. 
Fax : +91-44-25248888

அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 18.1.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்ஹாவின் பெண்கள் வளாகத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணாகவும் வக்ஃபு விதிமுறைகளுக்கு எதிராகவும் திடீரென்று புதிதாக உருவாகியுள்ள கபுரை அகற்றுவதற்கு உத்தரவிட்டு ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,                                                                                                         
முகவரி : 

"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------
வெளியீடு : 5/0113 ; நாள்  25.1.2013

அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East), P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

19 Responses So Far:

Ebrahim Ansari said...

தாங்கொனாத பாவச்செயல்கள் பல்கிப் பெருகிக் கொண்டே போகின்றன.

அது சரி அந்த சிமின்ட் கட்டிடத்துக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறார்கள்? அங்கு வேலை பார்த்தவர்களைக் கூட்டி வந்தது யார்? அவர்களுக்கு கூலி கொடுத்ததும், கட்டிடப் பொருள்கள் வாங்கிக் கொடுத்தவரும் யார்? போட்டு உடையுங்கள்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஏற்கெனவே இருப்பதே இழுக்காய் இருக்க இன்னும் தேவையா ?
ஒன்றுபட்டு முறியடிப்போம்
இன்ஷா அல்லாஹ்!

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
We have been divided into so many factions and fractions. Unity and solidarity is a rare thing in our community nowadays.
All the Muslims are trying to read the translation of the Holy Qur'an and they are able to shun the "bidath" and trying to keep away from what is forbidden in the Holy Qur'an and the preachings of our beloved Prophet (PBUH).
What is the need for erecting yet another burial spot where as there were nothing in it? Do we need to encourage such kind of obfuscatory acts. Please think and try to nib in the bud and discourage this kind of hypocritical activities.
I am sorry to mention this, in the reference above to the Hadith
//"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.//
But I remember reading and article from our brother P.J that this is not an authentic one.
Please refer http://onlinepj.com/kelvi_pathil/penkal_kelvi/pengal-ziyarath-seyyalama/
I am a bit confused about it.
Could anyone clear which one is authentic?
Wassalam
N.A.Shahul Hameed

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கல்லறைக்குள் கழிவுநீர்வுகள் !

இன்னுமா திருந்தலை !!!!?

அதிரை தாருத் தவ்ஹீத் said...

Dear Br. NAS,

Asslamu Alaikkum.

Br. PJ's analytical article is related to the narrators as he quotes:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாகவும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்படும் அறிவிப்பு பலவீனமானதாக உள்ளது. ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்பு மாத்திரம் சரியானதாக உள்ளது

Kindly note that his article ends as:
மண்ணறைகளுக்கு செல்லக்கூடியவர்கள் அங்கே சொல்ல வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள். இந்தப் பிரார்த்தனையை ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

பெண்கள் மண்ணறைகளுக்கு செல்லக்கூடாது என்றால் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இந்தப் பிரார்த்தனையை நபியவர்கள் கற்றுக்கொடுத்திருக்கமாட்டார்கள்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் பெண்கள் பொது மையவாடிக்கு சென்று மண்ணறைகளை பார்த்து மறுமை சிந்தனையை வரவழைத்துக்கொள்ளலாம்.

ஆனால் ஆண்களானாலும் பெண்களானாலும் இறைவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் உரிய இடமான தர்ஹாக்களுக்குச் சென்றுவர அனுமதியில்லை

It does not conflict with the other things that are in practice by ignorant ladies generally and prohibition of Prophet (SAL) சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள் is valid always without any doubt.

Hope it is clear.

sabeer.abushahruk said...

இதைச் செய்பவர்களும் அதைச் சகித்துக்கொண்டு இருக்கும் தெருவாசிகளும் கண்டும் காணாமல் இருக்கும் ஊர்க்காரர்களும் கடற்கரைத் தெருவுக்கும் அதிரைக்கும் மாபெரும் அவமானத்தை தலைகுணிவைத் தேடித்தருகிறார்கள்.

வெட்கம்...வேதனை.

இருப்பதை உடைக்க வழியறியாமல் தவிக்கும் நேர்வழிபெற்றவர்ளுக்கு இது ஒரு சவால்.

தெருச் சங்கமமும் ஊர் அமைப்புகளும் தலைக்கட்டுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

இதை முறியடிக்காமல் உடைத்தொழிக்காமல் இருக்கும்பட்சத்தில் இந்தத் தெருவில் பிறந்து வளர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள வெட்கப் படுகிறேன், வேதனைப்படுகிறேன்.

உவ்வேக்.

Shameed said...

கழிப்பிட கபுர் ரொம்ப நாறுது

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா!!!
உண்மையிலேயே நான் உங்களிடம் இருந்து தான் சரியான விளக்கம் வரும் என்று எதிர்பார்த்தேன். அப்படியே கிடைத்துவிட்டது.
நான் அதிரயில் இருந்த 35 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்தக் கந்தூரி விழாக்களுக்குச் சென்றதில்லை. எனது அன்புக்குரிய நண்பர்கள் கூட கந்தூரி வந்துவிட்டால் N.A.S சார் இந்தப் பக்கம் வரமாட்டார் என்று கூறுவர்.
இன்னும் எத்தனை காலங்களுக்குத் தான் இவர்களின் ஏமாற்றுப் பேச்சை நம்பப்போகிறார்களோ.
In my village, Panaikkulam it is the custom that every Muslim making the Holy Haj Pilgrimage must go to the so called Dharga. When I went for my Haj pilgrimage, I did not go to that Darga and went straight to Madras. My village Jamaath dignitaries were waiting there to send off me. But my wife and me did not care about the Jamaath and completed the holy pilgrimage. While returning back also they wanted me to go to that dargah but I refused and went straight to our mosque and did a prayer thanking Allah for the safer journey.
Wassalam
N.A.Shahul Hameed

Unknown said...

Assalamu Alaikkum,

Dear brothers and sisters,

Its a sign of innocence still prevalent in the community.

What is needed is to make the innocents more aware of right knowledge of Sharia and true practices of Islam.

We should not focus on cutting the leaves, instead it must be striken on the root to uproot a (poisonous)tree.

Keeping our fellow brothers' dignity is very important I think.

Hope it is absolutely possible to realize the community absence of Darga worshiping. InshaAllah.

Thanks and regards,

B. Ahamed Ameen
Dubai.அதிரை சித்திக் said...

ஹ .ஹ ஹா ...இப்ப தான் புரிகிறது ஏன் சந்தானம் பூசுகிறார்கள்
என்று ...நாத்தம் புடித்த கழிப்பிடம் ..கொஞ்சம் மனம் கமிலட்டுமே
என்றிருக்குமோ ...வணக்க் வழிபாடு வியாபாரமாக் ஆகி விட்டது
இது போன்ற நிகழ்வு ..ஆச்சர்ய மில்லை
வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்

இப்னு அப்துல் ரஜாக் said...இருப்பதை உடைக்க வழியறியாமல் தவிக்கும் நேர்வழிபெற்றவர்ளுக்கு இது ஒரு சவால்.

Ebrahim Ansari said...

மனதில் படுவதை பட் என்று சொல்ல வேண்டுமானால் வக்பு போர்டுக்கெல்லாம் எழுதிப் பயன் உடனே கிடைக்காது. இன்று இரவே இதை இடிக்க ஒரு இளஞர் கூட்டம் போகவேண்டும். இடிக்க வேண்டும். இடித்துவிட்டு அனைவரும் அங்கேயே தங்களின் இயற்கைக் கடன்களை கழித்துவிட்டு வந்துவிடவேண்டும். அப்போதுதான் புறமபோக்குகளுக்கு புத்தி வரும்.

அப்துல்மாலிக் said...

இந்த கப்ரு கட்டி அதை மெழுகி, பெயிண்ட் செய்த காசுக்கு கழிப்பிட வசதி இல்லாத 10 ஏழை வீடுகளுக்கு கழிப்பிட வசதி கட்டிக்கொடுத்தால் வல்ல இறைவன் மிகப்பெரும் அருட்கொடையையும், நன்மைகளையும் வாரி வழங்கிருப்பான்.... சிந்திப்பார்களா?

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஒட்டுமொத்த அதிரை தவ்ஹீத் சகோதரர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கும் இது ஒரு மிகப்பெரிய சவாலாகும் -

நாம் தத்தமது கருத்து வேறுபாடுகளை அல்லாஹ்வுக்காக விட்டுவிட்டு ஏகத்துவ பிரசாரத்தில் ஒன்றுபட்டு நிற்காததன் விளைவே இது. இன்னுமா மயக்கம் இயக்க மயக்கம், ஈகோ மயக்கம் .. நிலைமை நீடித்தால் அல்லாஹ்தான் அனைவரையும் காப்பற்ற வேண்டும்.

sabeer.abushahruk said...

கடற்கரைத் தெருவின் அமீரக அமைப்பின் தலைவர் சகோதரர் இஸ்மாயில் அவர்களிடமும் செயலாளர் ஷாகுல் அவர்களிடமும் என் ஆதங்கத்தைப் பதிவு செய்தேன்.

அவர்கள் உடனடியாக உறுப்பினர்களை அழைத்து உரையாடி கபுருக்கு எதிராக தீர்மாணங்கள் நிறைவேற்ற வேண்டும் என்கிற என் கோரிக்கையை ஏற்று பேசுவதாக உறுதியளித்தனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

Yasir said...

உடைத்தெறிய வேண்டியவைகள் கடற்க்கரைதெருவில் நிறைய இருக்க ..புதிதாக இன்னொரு அனாச்சாரம் முளைப்பது ..தெருவிற்க்கு அவமானம்....இன்ஷா அல்லாஹ் பிப் 8 தேதி துபாயில் தெரு பொதுக்குழுவில் இது பற்றி விவாதிக்கப்படும்..நல்ல முடிவு எடுக்கப்படும்

Unknown said...

இந்த வருடம் இந்த கபுருக்கு யார் பினாயில் புசபோகிறார். கனவில் வந்து சொன்னதற்காக கபுரு இதே அவ்லியா தவ்ஹீத் வாதிகளிடம் கனவி்ல் இடிக்க சொன்னால் முஹல்லாவாசிகள் இடிக்கவிடுவார்களே?

மேலத்தெரு தவ்ஹீத் சகோதரர்களிடம் உள்ள பிடிப்பு கடற்கரைத்தெரு சகோதரா்களிடமும் இருக்கவேண்டும். பெருமைக்கு 1980கிளிலேயே எங்கள் தெருவில் கூட்டம் போட்டோம் என்று சொல்வதை விட்டுவி்ட்டு இப்பொழுது தெருவில் உள்ள தவ்ஹீத் சகோதரர்கள் அனைவரும் ஒன்றினைத்து தெரு நிர்வாகிகளிடம் சென்று இதை அகற்றுவதற்கு முயர்சிக்கவும் அப்படி முடியாவிட்டால் அந்த தெருவிற்கு வழங்கும் நன்கொடைகளை தவ்ஹீத் சகோதரர்கள் நிறுத்தவேண்டும்.

Unknown said...

Assalamu Alaikkum

Dear brothers and sisters,

I would like to make a point that if (now??) we realize that the 'Kabr worshiping' is a Shirk, then we should be able to go ahead with all 'Kabr worshiping (so called shrines)' places in our town with similar reactions and decisions. Please think about the possibilities.

Hope "Adirai All Muhallaa Forum" which is considered
as Adirampattinam level community unit could focus on this matters in holistic way. It's a challenge in front of "Adirai All Muhallaa Forum". My suggestion to "Adirai Allah Muhalla Forum" is approaching to the right place?

Thanks and regards,

NIDA said...

assalamu alaikum....................... please go and visit the office of the tamilnadu wakf board.... it is situated near the public toilet..... around the compound of this office you can see the human excreta ...... how do you all expect the tnwb will interfere in this matter.... alas! what can I say further...

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு