1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF!!!
தனி படுக்கையில் அல்ல வாப்பா, உம்மாவுடன் கூட படுத்து உறங்கியவர்கள் தான் நாங்கள்•
கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.
புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக நாங்கள் இருந்ததில்லை.
சைக்கிள் ஓட்டும் போது ஹெல்மட் மாட்டி ஓட்டி விளையாண்டது இல்லை.
பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
கால்பந்தை காலிலும், கைப்பந்தை கையிலும் விளையாண்டு மகிழ்ந்தோம் கணினியிலல்ல.
நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.
தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் பிஸிலரி பாட்டில் வாட்டரை தேடியதில்லை.
ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி வாய்வைத்து குடித்தாலும் நோய்கள் எங்களை தொற்றியதில்லை.
அதிக அளவு இனிப்பு பண்டங்களையும், தட்டு நிறைய சோறும் சாப்பிட்டு வந்த போதிலும் ஓவர் குண்டாக இருந்ததில்லை.
காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி விளையாண்டு வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
உடல் வலிமை பெற ஊட்டசத்து பானங்கள் அருந்தியதில்லை. மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்ந்தோம்.
எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும், கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.
அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை அழைக்க "தம்பீ வாப்பா" என்ற ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது. அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட வேண்டிய அவசியமில்லை.
உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஓடியதில்லை.
எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பரிமாறவில்லை.
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்பியூட்டர், லேப்டாப், நெட், சாட் போன்றவகள் இல்லை. ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர். இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
ஓட்டு வீடாக இருந்தாலும் ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தோம். தனித்தனி வீடுகள் தேவையற்ற ஒன்றாக இருந்தது.
அடைமழை பெய்து ஈர விறகுகள் அடுப்பெரிக்க அடம்பிடித்தாலும் அன்றாட வீட்டின் சாப்பாட்டுத்தேவை சங்கடமில்லாமல் நிறைவேறியது. ஆனால் இன்றோ கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் வீட்டின் ஒட்டுமொத்த அமைதியும் தீர்ந்து விடுகிறது.
ஒவ்வொருவரும் அவரவர் மதம் பேணி நடந்து வந்தோம். அண்ணன், தம்பிகளாக, மாமன், மச்சானாக பழகிய எங்களுக்குள் மதச்சண்டைகளின் அர்த்தம் என்னவென அறியாமல் அமைதியாய் வாழ்ந்து வந்தோம்.
யாரும் வழியில் ஆபத்தில், விபத்தில் சிக்கிக்கொண்டால் ஓடோடிச்சென்று உதவி செய்வோம். இன்றைய காலம் போல் வேடிக்கை மட்டும் பார்த்து செல்போனில் படம் எடுத்து வரமாட்டோம்.
உறவுகள் அருகில் இருந்தது அதனால் உள்ளம் நன்றாக இருந்தது. உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்ததில்லை.
மின்சார தடையால் எங்கள் அன்றாட தேவைகள் ஸ்தம்பித்துப்போனதில்லை. குளங்களுக்குச்சென்று உற்சாக குளியலுடன் உடல் நலம் பேணும் நீச்சல் பயிற்சியும் இலவசமாய் பெற்று வந்தோம்.
எந்தக்காய்ச்சல், உடல்நலக்குறைவுகள் வந்தாலும் ஒரு ஊசியுடன் ஓடிப்போனது. கண்டதுக்கும் ரத்தப்பரிசோதனை செய்து காசு பறிக்க ரத்தப்பரிசோதனை நிலையங்கள் கூட ஊரில் இல்லாமல் இருந்தது.
ஏதோ உடலை மறைக்க உடையணிந்து வந்தோம். பிறர் பார்வைக்கு விருந்து படைக்கவல்ல.
வருடம் முழுவதும் ஊரின் நிலத்தடி நீர் வற்றாமல் குளங்களில் நீர் இருந்தது. அடுத்த மாநிலங்களுடன் தண்ணீருக்கு மண்டியிட்டு போராடி நீதிமன்றங்களை நாடியதில்லை.
சைக்கிளில் விபத்தின்றி ஊரையே சுற்றி வந்தோம். பெட்ரோல், டீசல் விலையேற்றமும், எங்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லாமல் இருந்து வந்தோம்.
ஓட்டுக்கு காசு கொடுத்து பிறகு தேவைக்கு நாடிச்சென்று கையை கழுவும் அரசியல் அறியாமல் இருந்து வந்தோம்.
நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருந்தும் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே கண்களுக்கு தெரிகின்றன.
வசதி குறைவாக இருந்தாலும் இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.
அந்த பொற்காலங்களில் பிறந்து வளர்ந்து வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா? இல்லையா? என்பதை நீங்க தான் சொல்லனும்.....
மு.செ.மு. நெய்னா முஹம்மது
26 Responses So Far:
Assalamu Alaikkum
A fascinating portrait of our classical living standards in our childhood.
Thanks and regards
அந்த நாட்களின் அருமை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும்....நல்ல பழைய நினைவுகளை கிளரும் கட்டுரை..நம் அதிரைக் களஞ்சியம் சகோ.நெய்னா முகமது அவர்களிடமிருந்து ..வாழ்த்துக்கள்
பழசு -
பணமில்லாமல்
கிடைத்த சொகுசு - அதை
நினைக்கும் போது,
நிறைந்த மனசு.
Assalamu Alaikkum
It was time of simple(not complicated) living with
* Open and innocent hearts - strong bond in relationships and ensured harmony.
** Inherent physical works in day to day activities - no major disease.
*** No intrusion of complexities of technologies - had enough time to spend.
Those key elements are all missing, which are most wanted now for healthy mind, body and healthy era.
Luckily those who experienced those days can bring back the elements in their life now too. Shall we consider this?
Thanks and best regards,
அன்று சினிமா என்றாலே என்னவென்று தெரியாமல் அல்லாஹ், ரசூல் என்று மட்டும் இருந்த, சினிமாப்பாடல்கள், இசையை காது கொடுத்து கேட்காத 'ஆலிம்சாமார்வொளை' கூட இன்று இஸ்லாத்திற்கு எதிரான துவேசக்கருத்துக்களை வேண்டுமென்றே படத்தில் புகுத்தி அவர்களையும் வேண்டாவெறுப்பாய் படம் பார்க்க வைத்து எதிர்ப்புக்குரல் களத்தில் இறக்கியது இன்றைய கலைக்கூத்தாடிகளின் ஒரு கேவலமான சாதனையே.
நானெல்லாம் சின்ன புள்ளையா இருக்கும் பொழுது அந்த நேரத்து தெரு பெரிய பசங்க ஊர்லெ ஜெக்கரியாவிலோ அல்லது நியூசினிமாவிலோ அல்லது பக்கத்து பட்டுக்கோட்டை தியேட்டரிலோ படம் பார்த்து வந்தால் நம் மக்கள் அதை எப்படியும் பார்த்து விடுவார்கள் என்று அஞ்சி கொஞ்ச தூரம் பஸ் ஏறி சென்று தஞ்சை அல்லது திருச்சிக்கு சென்று தியேட்டரில் யாருக்கும் தெரியாமல் படம் பார்த்து வந்து பின்னர் ஊரில் எப்படியும் எவருக்கேனும் அது தெரிய வரும் பொழுது அது தெரு முச்சூடும் ஒரு பெரும் கேவலமான செயலை செய்து வந்தது போல் ஊர் பேசி ஏசும். இதை பார்த்த, கேட்ட அனுபவம் உங்களுக்கு ஞாபகம் உண்டா?
உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...அத்தனையும் ஏக்கத்தை வர வைத்த வரிகள்.
விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்துப் பொற்காலம் நோக்கி. மித மழை பெய்ததுபோல, மெந்தென்றல் வீசியதுபோல, கடுங்குளிரில் மூட்டப்பட்ட தீமூட்டத்தின் கதகதப்புபோல, அம்மா சொல்லும் கதைபோல அழகாய்ச் சொல்லி முடித்த நெய்னாவுக்கு ஒரு சபாஷும் ஒரு நன்றியும்.
இன்றய நடப்புகள் அனைத்தையும் வெருப்பது
தாழ்வு மனப்பான்மையாகிறது
நிகழ்காலம் சூன்யமாகிவிடும்
மிகவும் ஆபத்தான விஷயம்
நமக்கு அன்றைய காலம் இனிமை எனில்
நாம் அப்பொழுது இளைய வயதுடையவர்
அன்றய 40 வயது தாழ்வு மனப்பான்மை கொண்டவர்
இப்படித்தான் அன்றய நிலவரங்களை பினாத்திக் கொண்டிருப்பார்
சந்தோசமாக வாழ்வோம் வாழ்வோம்
கிடைத்ததை நலவெண்போம்
நாலைய சமுதாயத்தினர்
நாம் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்த்தட்டும்
//நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணர்ந்தோம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருந்தும் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே கண்களுக்கு தெரிகின்றன.//
நிமிர்ந்து உட்கார வைக்கும் வரிகள்.
//நானெல்லாம் சின்ன புள்ளையா இருக்கும் பொழுது அந்த நேரத்து தெரு பெரிய பசங்க ஊர்லெ ஜெக்கரியாவிலோ அல்லது நியூசினிமாவிலோ அல்லது பக்கத்து பட்டுக்கோட்டை தியேட்டரிலோ படம் பார்த்து வந்தால் நம் மக்கள் அதை எப்படியும் பார்த்து விடுவார்கள் என்று அஞ்சி கொஞ்ச தூரம் பஸ் ஏறி சென்று தஞ்சை அல்லது திருச்சிக்கு சென்று தியேட்டரில் யாருக்கும் தெரியாமல் படம் பார்த்து வந்து பின்னர் ஊரில் எப்படியும் எவருக்கேனும் அது தெரிய வரும் பொழுது அது தெரு முச்சூடும் ஒரு பெரும் கேவலமான செயலை செய்து வந்தது போல் ஊர் பேசி ஏசும். இதை பார்த்த, கேட்ட அனுபவம் உங்களுக்கு ஞாபகம் உண்டா?//
நிறைய உண்டு. அது பற்றி எழுதினால் நான் உட்பட பல வயதானவர்களின் குட்டுகளை உடைத்ததாக ஆகிவிடும்.
என்றென்றும் மனதில் நிற்கும் பதிவு.
விரல் பிடித்து அழைத்துச் செல்கின்றது சிறுபிராயத்துப் பொற்காலம் நோக்கி. மித மழை பெய்ததுபோல, மெந்தென்றல் வீசியதுபோல, கடுங்குளிரில் மூட்டப்பட்ட தீமூட்டத்தின் கதகதப்புபோல, அம்மா சொல்லும் கதைபோல அழகாய்ச் சொல்லி முடித்த நெய்னாவுக்கு ஒரு சபாஷும் ஒரு நன்றியும்.
1957ல் பிறந்தவனாதலால் அப்பொற்காலம் எனக்கும் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொள்கிறேன். நினைவு நாடாக்களைச் சுழலவிட்ட அன்புத் தம்பி நெய்நாவுக்குக் கோடி நன்றிகள்! ஜஸாக்கல்லாஹ் கைரன்!
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த கால நினைவலைகளை தட்டியெழுப்பிய உணர்வலைகளாய் இருந்தது சகோதரர் அவர்களின் இந்த ஆக்கம். மக்களிடம் பரவலாக ஒழுக்கப்பண்புகள் குறைவு, உலக மோகத்தின் மீதுள்ள கவர்ச்சிகள், போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாமல்லவா?
நமது தந்தைமார்கள், அவர்கள் வாப்பாமார்கள் யாராவது அவர்களது காலத்தில் நடந்த இதுபோன்ற செய்திகளை சொல்ல நாம் கேட்டிருப்போம் - நமக்கு அது ஆச்சரியமாக இருக்கும். - நாம் பேசும் இந்த செய்திகள் நமது சந்ததிகளுக்கு நம்பமுடியாதவையாக இருக்கலாம்.
இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!
இன்று ஏக்கம் தரும் அந்த நாட்கள் இனிமை!
உங்களின் ஒவ்வொரு வரிக்கும் விமர்சனம் எழுத வேண்டும்...அத்தனையும் ஏக்கத்தை வர வைத்த வரிகள்.
மச்சு வீடுகளில் மரப்பில் குடும்பம் நடத்திய நம் முன்னோர்களின் ஒற்றுமை மறக்கமுடியாதது.
அஸ்ஸலாமு அலைக்கும்,
ஹீலர் பாஸ்கர் டெக்னிக் நடைமுறைப் படுத்த தகுதியான காலம் அந்த காலம்.
well done MSM N.
அதிரை நிருபர் நெறியாளர் காக்கா அவர்களுக்கு,அ நி வாசகர் வட்டம் ஏற்படுத்தி,சிந்தனை தூண்டும் எழுதும் சகோ நெய்னா அவர்களுக்கு முதல் விருது கொடுக்க ஆவன செய்ய இயலுமா?ஆச்சர்யப்படும் வண்ணம் அவரது எண்ணம் ,எழுத்து ,எப்போதும் மறுமை சிந்தனை இப்படி சுற்றி இருக்கிறது.மிகைப்படுத்தாமல் சொல்கிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கு தன் உள்ளக்கருத்துக்களை அன்புடன் பகிர்ந்து கொண்ட அனைத்து நல்லுங்களுக்கும், அவர்கள் குடும்பத்தினர்களுக்கும், நம் ஊருக்கும், சமுதாயத்திற்கும் அல்லாஹ் நன்மையை என்றும் நாடுவானாக! ஆமீன்.
அன்புச்சகோ. அ.ர. அப்துல் லத்தீஃபிற்கு, வல்லாணாலையில யான் வாப்பா நமக்கு ஊர் வதுவாப்பேரு???
சிறு பிராயத்திலிருந்து இன்று வரை வாழ்வில் வாங்கிய சில அடி, உதைகளுடன் கரைபடிந்த அழுக்குகசமான உள்ளத்தில் சில நேரம் தோன்றுவதை நமக்கேன்? என அடக்கி வைக்க இயலாமல் அப்படியே ஓப்பனாக எழுத வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி விடுகிறேன். அதில் சில சமயம் சிலரின் விமர்சனத்திற்கும், வேதனைக்கும், புண்படுவதற்கும் கூட ஆளாகி விடுகிறோம். முதலில் அவர்களும், அல்லாஹ்வும் நம்மை மன்னித்தருள வேண்டும்.
விருதுகள் வாங்க, வழங்க தகுதியான, அடக்கமான சான்றோர்கள், அன்பு நெஞ்சங்கள், பெரியோர்கள், மார்க்க அறிஞர்கள், இறைபொருத்தத்திற்காக மட்டும் எழுதும் நல்ல கவிஞர்கள், இஸ்லாமிய பொருளாதார மேதைகள், சிந்தனையைத்தூண்டும் எழுத்தாளர்கள், நல்ல பல படைப்பாளிகள் நம்மைச்சுற்றி ஏராளமானோர் எளிமையாய் இருந்து வருகின்றனர். அவர்கள் நிச்சயம் சமூகத்தால் தெரிந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட வேண்டியவர்கள்.
நேற்று இரவு யா அல்லாஹ்! இஸ்லாத்திற்கு எதிரான இந்த கலைக்கூத்தாடிகளின் விஸ்வரூபம் நீதிமன்றத்தால் முற்றிலும் வெளியிட தடை செய்யப்பட வேண்டுமென ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன் உண்மையில் என் வீட்டு சொத்துப்பிரச்சினையில் நீதி மன்றத்தின் நல்ல தீர்ப்புக்கு காத்திருப்பது போல். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. நீதி தேவதையின் கண்களை கட்டி எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டது. இன்று வந்து அதன் கண்களை அவிழ்த்து அதன் முழு முகத்தையும் காண நினைக்கிறாயே மடையா? என்பது போல் இந்திய இறையாண்மையும், சிறுபாண்மையினரின் கருத்து சுதந்திரமும் பெரும்பாண்மை சமூகத்தின் முன் ஒன்றும் செய்ய இயலாது என்பது போல் அப்படி ஒரு வேதனையான தீர்ப்பு. நாம் நல்லவர்களோ, கெட்டவர்களோ அல்லாஹ் நம் வேதனைகளை நன்கு அறியக்கூடியவன்.
வேதனையின் விளிம்பில் நின்று கொண்டிருந்த 30 கோடி சிறுபாண்மை இஸ்லாமிய சமுதாயத்தை ஒரே ஒரு தீர்ப்பு மூலம் எட்டி உதைத்து விட்டது நமது உயர் நீதி மன்றம்.
இஸ்லாமிய சமுதாயத்தை இழிவு படுத்தும் காட்சிகள் அதில் எதுவும் இல்லை என்று இஸ்லாமியர்கள் அல்லவா நன்கு பார்த்து சொல்ல வேண்டும்? எப்படி மாற்று மதத்தின் சகோதரர்களால் சொல்ல முடியும்?
கலியாண வீட்டினர்கள் அல்லவா ஊருக்கு கலியாண பத்திரிக்கை அடித்து அழைப்பு கொடுக்க வேண்டும்? ஊரினர் எப்படி கலியாண வீட்டினருக்கே அவர்கள் வீட்டு கலியாணத்திற்கு பத்திரிக்கை அடித்து கொடுக்க முடியும்? இவர்களின் தீர்ப்பு இப்படியே நடந்தேறியுள்ளது.
பூனூலால் நம் சுதந்திர இந்தியாவின் நீதி மன்ற சட்டதிட்ட புத்தகங்கள் அவிழ்க்க முடியாத படி நன்கு கட்டப்பட்டு விட்டனவோ? என ஐயப்பட வேண்டியுள்ளது.
இஸ்லாமிய மதத்தைச்சார்ந்த ஒரு திரைப்பட இயக்குனர் நம் நாட்டு மத்திய அரசால் அதிகாரப்பூர்வமாக, ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தப்படும் காவிபயங்கரவாதத்தின் அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களை அப்படியே தத்ரூபமாக படம் எடுத்து வெளியிட முயன்றால் அவரின் நிலைமை என்னவாகும்? அவருடைய குடும்பமே ஒசாமாவின் குடும்பத்துடன் மாமன், மச்சானாக்கப்பட்டு நாடு கடத்தப்படாதா?
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா? தனக்கு வந்தால் மட்டும் செங்குருதி, பிறருக்கு வந்தால் அது என்ன தக்காளி சட்னியா?
இவர்கள் நீதி தவறாதவர்களாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மீறாதவர்களாக முற்றிலும் மாறி விட்டால் அதுவே உலக யுக முடிவு நாள் (கியாமத்) நெருங்கியதற்கு அதுவும் ஒரு அறிகுறியாக இருக்குமோ? என சிந்திக்க வேண்டியுள்ளது.
பொறுமையாளர்களுடன் நிச்சயம் இறைவன் துணை நிற்கிறான். அல் குர்'ஆன்.
சங்கடத்துடன்
மு.செ.மு. நெய்னா முஹம்மது.
நெய்னா.. நிச்சயமாக நிறைய இழந்திருக்காங்க இன்றைய தலைமுறையினர்
ஒரு ஃபிளாட்டுக்குள்ளார அவர்களின் உலகம், எல்லா விளையாட்டுகளும் கம்யூட்டரிலேயும், ஐபேட்லேயும் கழியுது, நீச்சல் கத்துக்க காசுகொடுத்து அனுப்பியும் தர்த்தீப் இல்லே, நிலையான மின்சாரம் இருந்தும் கண்ணாடியனிவதை தவிர்க்கமுடியவில்லை, உணவு அலர்ஜியும், மாத்திரைகளின் ஆக்கிரமிப்பும் அதிகமாவே இருக்கு, இன்னும்.....
Really we are blessed.... Mashaa Allah
உங்கள் சங்கடத்துடன் என்னையும் நான் ச்ங்கமித்து கொள்கின்றேன்...இஸ்லாம் ஆரம்பம் காலம் தொட்டு இன்று வரை சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்து வந்தாலும் அல்லாஹ்வின் உதவியால் நேர்/மறைமுகமாக வெற்றியும் பெற்று வருகின்றது...சத்தியம் என்றுமே அசத்தியத்தை அழித்தே தீரும் ..பொறுமையுடன் இருப்போம்..இது அவனுடைய மார்க்கம் அவன் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையும்..நாமும் மார்க்கம் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற உறுதியும் ”இஸ்லாத்தை” என்றென்றுமே மிளரச்செய்யும்
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர் நெய்னா ..
///நேற்று இரவு யா அல்லாஹ்! இஸ்லாத்திற்கு எதிரான இந்த கலைக்கூத்தாடிகளின் விஸ்வரூபம் நீதிமன்றத்தால் முற்றிலும் வெளியிட தடை செய்யப்பட வேண்டுமென ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தேன் உண்மையில் என் வீட்டு சொத்துப்பிரச்சினையில் நீதி மன்றத்தின் நல்ல தீர்ப்புக்கு காத்திருப்பது போல். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. நீதி தேவதையின் கண்களை கட்டி எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டது. இன்று வந்து அதன் கண்களை அவிழ்த்து அதன் முழு முகத்தையும் காண நினைக்கிறாயே மடையா? என்பது போல் இந்திய இறையாண்மையும், சிறுபாண்மையினரின் கருத்து சுதந்திரமும் பெரும்பாண்மை சமூகத்தின் முன் ஒன்றும் செய்ய இயலாது என்பது போல் அப்படி ஒரு வேதனையான தீர்ப்பு. நாம் நல்லவர்களோ, கெட்டவர்களோ அல்லாஹ் நம் வேதனைகளை நன்கு அறியக்கூடியவன்.///
இதே மன நிலை என்னையும் ஆட்கொண்டது, ஆனால் இன்று தீர்ப்பு நமக்கு சாதகம் போல் உள்ளது. ஒருவேளை நாளை எப்படி இருக்கும் என்பதை இறைவனே அறிவான். எப்படி அது இருப்பினும், நீதிபதியும் மனிதன் தானே.. அவனது அறிவின் அளவுதான் அதன் அளவு இருக்கும்.
ஆனால் ஈடு இணையற்ற, யாவற்றினையும் அறிந்த யாவற்றையும் மிகைத்த யாவற்றின் மீதும் பேராற்றல் மிக்க நீதிபக்கெல்லாம் மேலான உயர்ந்த நீதிபதியான வல்லவனின் நீதி செலுத்தும் நாளில் நியாயங்கள் நிலை நாட்டப்படும்.
அன்பினுக்கினிய நெய்நா, அஸ்ஸலாமு அலைக்கும்.
தற்பொழுது என் உடல்நிலையின் காரணியமாக விரைவில் உறங்கச் செல்லும் யான், நேற்றிரவு உங்களைப் போல் அடியேனும் ஆவலுடன் - உறங்காமல் இணையத்தின் வழி மேல் விழி வைத்தவனாய்க் காத்திருந்தேன்; உங்கட்கு ஏற்பட்ட அதே வேதனையை அடியேனும் அனுபவித்தேன். ஆனால், நம்மைச் சுற்றி யார் யார் எப்படி எல்லாம் சூழ்ச்சியாளர்களாக இருக்கின்றார்கள் என்றறியவும் இன்று எமக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிட்டியது. ஆம். என் அலுவலகத்தில் இத்தீர்ப்பால் மிகவும் மகிழ்ந்த காஃபிர்களின் கொண்டாட்டம் எனக்கு இவர்கள் யார் என்று விளங்க வைத்தது! அவர்கள் எல்லார்க்கும் நம் நிலையைப் புரியும் வண்ணம் விளக்கி- அவர்களின் கொட்டத்தை அடக்கினேன்; என் செய்வது? பிச்சைக்காரர்களாய் இந்தியாவில் இருந்தவர்களெல்லாம் இன்று இந்த அரபுலகம் கைநீட்டி வரவேற்றுக் கைநிறையச் சம்பளம் கொடுத்தும் “உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும்” நயவஞ்சகர்களாய்த் தான் இவர்கள் உளர். இவர்கள் இன்று போட்ட ஆட்டத்திற்கு இதுவே சௌதியாக இருந்தால் நடப்பதே வேறு!
இறுதி வெற்றி எமக்கே
இளைஞர்கள் சினிமாவை விட்டும் ஒதுங்க வேண்டும்; நம் பணத்தால் வளர்ந்தவர்கள்- நம்மையே அடிக்கும் காலம் அறிந்தும் இளைஞர்கள் இன்னமும் சினிமா மோகம் கொண்டலைவது வெட்கக் கேடு
யா அல்லாஹ்! எங்கள் சமுதாய இளைஞர்களைக் காப்பாற்று!
கடைசியாக வந்த செய்தி:
கலைஞரும் அரசியலாக்கி விட்டார் ; கமலைப் புகழ்ந்து தன் சுய ரூபத்தை இவ்விசரூபத்தில் காட்டி விட்டார். நோன்புக் கஞ்சிக் கொடுத்தவர்கள் எங்கே? குல்லாப் போட்டவர்கட்குக் குல்லாப் போட்டு விட்டார்!!
2010ல் யான் வனைந்த இக்கவிதையும் கீழ்க்காணும் கட்டுரையின் கருவும் ஒன்றென அறிந்து மகிழ்கிறேன்:
முரண்பாடுகளை முறியடிப்போம்..!!
உயர்ந்த கட்டிடங்கள் கட்டுகின்றோம்,
தாழ்வான எண்ணங்களில் உள்ளோம்;
விரிவான பாதைகள் அமைக்கின்றோம்,
குறுகிய மனப்பான்மையிலே உள்ளோம்;
நிறைய செலவு செய்கின்றோம்,
குறைவாகவே பெறுகின்றோம்;
பெரிய வீடுகள் உள,
சிரிய குடும்பமே வசிக்கின்றது;
நிரம்ப வசதிகள் உள,
குறைவான நேரங்களே கிடைக்கின்றன;
பட்டங்கள் நிரம்பப் பெறுகின்றோம்,
பட்டறிவு குறைவாகவே பெற்றுள்ளோம்;
நிறைய அறிந்திருந்தாலும்,
அரைகுறையாகவே நீதி வழங்குகின்றோம்;
அறிஞர்கள் அதிகமானதால்,
குழப்பங்களும் கூடி விட்டன;
மருந்துகள் பெருகிவிட்டன,
நிவாரணம் அருகிவிட்டன;
உடைமைகளைப் பெருக்கிவிட்டோம்,
அதன் மதிப்பைச் சுருக்கிவிட்டோம்;
அதிகமாகவே பேசுகின்றோம்,
அன்பைச் சுருக்கி; வெறுப்பைப் பெறுக்கிவிட்டோம்;
வாழ்வாதாரங்களை உருவாக்கக் கற்று கொண்டோம்,
வாழ்க்கையை அல்ல;
ஆயுளுக்கு ஆண்டுகளைச் சேர்க்கும் நாம்,
வாழும் பருவத்துக்கு உயிரைச் சேர்ப்ப்தில்லை;
விண்ணுக்குச் சென்று திரும்பும் நாம்,
மண்ணில் அண்டை வீட்டாரைக் காண்பதேயில்லை;
வெளிக்கட்டமைப்புகள் யாவற்றையும் வென்றாலும்,
உள்கட்டமைப்புகளை ஒழுங்குபடுத்துவதில் தோற்றுவிட்டோம்;
காற்று வெளியாவும் தூய்மைப் படுத்தி விட்டோம்,
ஆற்றல் மிகு ஆன்மாவை தூய்மைப் படுத்தவேத் தவறிவிட்டோம்;
அணுவைப் பிளக்கும் அறிவைப் பெற்றோம்,
அகத்தின் அழுக்காறு பிளந்தெடுக் கற்றோமா..?
உயர்வான ஊதியம் காணுகின்றோம்,
குறைவாகவே ஒழுக்கம் பேணுகின்றோம்;
அளவையிலே நிறைந்துள்ளோம்,
தரத்தினிலே குறைந்துள்ளோம்;
இலாபத்தைப் பெருக்கி விட்டோம்,
உறவுகளை கழித்து விட்டோம்;
"உலக அமைதி"க்கு உச்சி மாநாடு,
கலகம் உருவாக்கி உள்நாடே ம்யானக்காடு..!;
வகைவகையான உணவு பதார்த்தங்கள்,
மிகமிக குறைவான சத்துக்களே- என்பதே யதார்த்தம்;
இருவழிப் பாதையாக வருமானம்,
ஒருவ்ழிப் பாதையாக "விவாகரத்து" பெருகுவதே அவமானம்;
அலங்கார இல்லங்கள்,
அலங்கோல உள்ள்ங்கள்;
காட்சிக்கு அழகான ஜன்னல்கள் வெளியே,
வைப்பறையில் ஒன்றுமேயில்லை உள்ளே;
தொழில் நுட்பம் பெருகி விட்ட இவ்வேளையிலே
அழித்து விடாதீர் இவ்வரிய வரிகளை.......................!!!!!
-"கவியன்பன்", கலாம், அதிராம்பட்டினம்
Assalamu Alaikkum
Dear brother Mr. Kaviyanban AbulKalam
Revolutionary new age awareness couplets. All must be considered to live better nowadays.
Thanks and best regards,
Very true. I was born 1963.... So different the feeling, respects, admiration for fellow human being was different and cherished!! Can't expect that from my children!!!.... That days will never come back....
Post a Comment