Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்ஙனம்? 30

அதிரைநிருபர் பதிப்பகம் | January 17, 2013 | , ,


எல்லை தாண்டிய
பயங்கரவாதத்தில்
இயற்கையின்
இன்னோர்  அலை
ஈடுபடாத வரை...
எங்ஙனம்
இயற்கை எய்திடல் சிறப்பு
என
எதிர்பார்ப்பு
எவர்க்கும் இருக்கலாம்!

சிலருக்கு
நித்திரையிலோ
நிம்மதியான இருப்பிலோ...
இன்னும் சிலருக்கு
தாம் விரும்பும்
மடியிலோ
தம்மை விரும்புபவர்
மடியிலோ...
இறந்துபோக ஆசை!

எனினும்
வாய்ப்ப தென்னவோ
வாகன விபத்திலோ
வன்மத்தின் முடிவிலோ
நீர்க் குமிழியாகவோ
நெஞ் சடைப்போடோ
உறுப் பறுந்தோ
நோய் வதைத்தோ
ஒற்றையாகவோ
கொத்துக் கொத்தாகவோதான்.

 எனக்குமுண்டு
எதிர்பார்ப்பு...
ஒரு
தொலைதூரப் பயணத்திலிருந்து
வீடு திரும்பும் பின்னிரவில்
சன்னலோர
இருக்கையில்
குட்டிக் குட்டி
மரணங்களான
தூக்கத்தை
என் மகன்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்
அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...!

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்

30 Responses So Far:

Yasir said...

படிக்க படிக்க தெவிட்டாத தேன் கவிதை இது...பல பெற்றோரின் ஏக்கம்...அருமை கவிக்காக்கா

N.A.Shahul Hameed said...

Assalamu Alaikkum!!!
Awesome verses. Include this line too.
Spelling the Kalima Shahadaaa peacefully and gratifying Allah and His Holy Prophet.
Wassalam
N.A.Shahul Hameed

ZAKIR HUSSAIN said...

கடைசி வரிகளை என்னால் கவிதைக்காக கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன்டா இப்படியெல்லாம் எழுதுரே...

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

என் மகன்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்
அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...கண்ணீரைக் குளமாக்கும் கவிதை வரிகள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எனக்குமுண்டு
எதிர்பார்ப்பு !

அது சரி! அசத்தல் காக்கா !

கடைசி வரியில் 'நடித்து' என்பதையா சொல்றீங்க !?

என...!
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்னு சொல்லலாமா ?

N .K .M .அப்துல் வாஹித் அண்ணாவியார் New York, U S A said...

என் மகன்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கும்
அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
துணியாவின் கடைசி வார்த்தையாய்
கலிமாவுடன் கண்களை மூடியிருக்க வேண்டும் என...

இப்படி சொல்லலாம் என்பது என் கருத்து

Unknown said...

Assalamu Alaikkum,

Nice poetic perspectives
on 'the awakening moments'.

Real soul awakening happens
At the time of death;
Till then this life
Is a kind of dreaming...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கவியில் இது கண்ணீர்!

இது போன்ற
நடிப்பாசை வந்தது
எங்ஙனம்?

அதிரை சித்திக் said...

சகோ அன்பு கவி அபூ சாரூக்
தங்களின் கவிதையின் பார்வையில்
எத்தனை கோணம் ...
மகன் மீது பாசம் கொண்டது ஒரு புறம்
உலகில் நடக்கும் துர்மரனங்களில் இருந்து
பாது காப்பு கேட்கும் உங்கள் மனம்
தீவிர வாதம் வேண்டாம் என்று கூறும் நீங்கள்
நீங்க இடம் கவியில் மட்டுமல்ல இக்கவியை
படிக்கும் உங்கள் மகன் மனத்திலும்தான்

Ebrahim Ansari said...

அன்பான தம்பி கவிஞர் சபீர் அவர்களே!
கவிதையின் கருத்துக்களை வரவேற்கும் அதே நேரம் கடைசி வரிகளில் உடைந்து நொறுங்கிவிட்டேன். அந்த "நடித்து முடித்திருக்கவேண்டும்" என்கிற வார்த்தைகள் எவ்வளவு பொருள் பொதிந்தவை? எல்லோரின் இதயத்தையும் எக்ஸ்ட்ராவாக அசையச்செய்யும் வார்த்தைகள். நினைக்கவே அச்சமாக இருக்கிறது.

நடித்து முடிக்கும் மேடையை தேடித்தான் நானும் வந்து விட்டேன்.

நமது நண்பர்கள் அனைவரும் நீண்ட காலங்கள் " நடிக்க வேண்டும் " என து ஆச செய்கிறேன்.

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.முன்பே (சு)வாசித்து இருந்தாலும் சுவாசம் நசுங்கும்படி,சித்து பித்து பிடிக்கும்படி இன்பரணமாய் தொண்டையில் இறங்கும் ஒவ்வொரு வார்த்தை மிடருக்கும் உயிரே தண்ணீராய் உள்ளே சென்று கலங்குவதென்னவோ மறுபடியும்,மறுபடியும் நிகழ்கிறதே!கண்ணீரை எதார்த்தத்துடன் பிழிந்தெடுக்கும் கருவியாய் உங்கள் கவிதை!அதிரை நிருபருக்கு ஓர் வேண்டுகோள்,இவரை கொஞ்ச நாளைக்கு கவிதை எழுதவேண்டாம்னு சொல்லுங்கள்.கண்ணீர் மிச்சமில்லை.அன்பைபற்றி எழுதினால் அன்பு ஒட்டிக்கொள்கிறது.காதலைபற்றி எழுதினால்(பற்றுவதுதான் காதல்)அதே எண்ணம் சில நாட்கள் ஓடும்.(ஓடுவதெல்லாம் காதலும் அல்ல)இப்ப உயிரின் வலி! நல்ல இருங்க கவிஞரே.

crown said...

கவிஞரே!இதைப்பார்த்ததும் ஒரு ஹைக்கூ எழுததோனியது நல்லா இருக்கா இல்லையா என்பதை சொல்லவும்.; '' நம் எதிர்காலத்தில் வருவதே
இறக்கும் காலம்''.
(இறக்கும் காலம் நடப்பதே அன்று நிகழ்(ழும்) காலம்????)

sabeer.abushahruk said...

ஓர் ஆழிப்பேரலையோ கொடும்பூகம்பமோ கடும்புயலோ பெருந்தீயோ என ஏதாவதொரு இயற்கையைக்கொண்டு இறைவன் சீறி முடித்து, மனித உயிர்களின் அற்ப மதிப்பினை அறிவிக்கும்போதெல்லாம் எனக்கு இந்த "எங்ஙனம்" தோன்றுவதுண்டு

யாசிருக்கும்  தோன்றியிருக்கிறது. அதனால்தான் இதை வெறுமனே படித்துச் செல்லாமல் வாசித்து உணர்ந்திருக்கிறார். 

NAS sir: thanks for having it corrected this paper with 'pass mark'. identifying it's verses as 'awesome' is some bonus marks from you.

However, the intension of this poem is just a 'willingness/desire/haajath' of a father. it doesn't have to get mixed with the religious obedience and the ONE AND ONLY wish of every Muslim that to die while reciting sahaadhah.

(I wish you are fine now).

sabeer.abushahruk said...

ஜாகிர்: 

ஏன் பதறுகிறாய்
மற்றுமொரு நிமிடமும்கூட
மறக்கக் கூடியதல்ல

எங்கு சென்றாலும்
ஒன்றாகவேப் போன நாம்
ஒன்றாகவே திரும்பி வந்தோம்

மற்றுமொரு நிமிடம்
நமக்குள் நிகழ்கையில்
ஒன்றாகவே போவோம்
ஆனால்
ஒற்றையாகவே
திரும்பி
வர
வேண்டியிருக்கும் 
அல்லவா?

crown said...

sabeer.abushahruk சொன்னது…

ஜாகிர்:

ஏன் பதறுகிறாய்
மற்றுமொரு நிமிடமும்கூட
மறக்கக் கூடியதல்ல

எங்கு சென்றாலும்
ஒன்றாகவேப் போன நாம்
ஒன்றாகவே திரும்பி வந்தோம்

மற்றுமொரு நிமிடம்
நமக்குள் நிகழ்கையில்
ஒன்றாகவே போவோம்
ஆனால்
ஒற்றையாகவே
திரும்பி
வர
வேண்டியிருக்கும்
அல்லவா?
-----------------------------------------
ஒன்றாக சுவனம் புக அல்லாஹ் அருளட்டும் ஆமின்

sabeer.abushahruk said...

கிரவுன்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இப்பவெல்லாம் கிரவுன் வருவாரா வரமாட்டாரா என்று எண்ணும் அளவுக்கு தங்களின் வரத்து குறைவாகிப் போனதால், கிரவுன் வாசிக்க வேண்டுமே என்கிற ஆவலுடனேயே இதைப் பதிந்தோம்.

வந்துவிட்டீர்கள், நன்றி. தங்களின் வேலைப்பலுவை இலேசாக்கித் தர என் துஆ.

//நம் எதிர்காலத்தில்
வருவதே
இறக்கும் காலம்'//

இவற்றோடு, இவையும் நீங்கள் எழுதியதுதான்:

//வார்த்தை மிடருகள்
உள்ளே சென்று
உயிர்த் தண்ணீரைக் கலக்குகின்றன.//

//சுவாசம் நசுங்கும்படி
சித்து பித்து பிடிக்கும்படி
இன்பரணம்
மரணத்தைப் பற்றி வாசிப்பது//

வாழ்த்துகள் கிரவுன். (தங்களின் பங்களிப்பு ஏறத்தாழ நின்றே போனதில் வருத்தம் உண்டு.)


sabeer.abushahruk said...

சகோ என் எம் கே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் முதற்கருத்திற்கு நன்றி.

இரண்டாவது அலோசனையை முற்றிலும் புறக்கணிக்க இயலாததால், ஓர் உதாரணம் கொண்டு விளங்கிக்கொள்வோம். சரியா?

நான் எழுதியக் கீழ்கண்ட கவிதை இவ்வார திண்ணை டாட் காமில் கவிதைகள் பகுதியில் வெளியாகியுள்ளது (www.thinnai.com).

அங்கு ஒருவர் "கவிதையில் எல்ல்ல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது. வாசகனை நம்ப வேண்டும். வாசகன் தன் எண்ணங்களைக் கொண்டு விரிவாக உணரவேண்டி கவிதையை இறுக்கமாக எழுத வேண்டும்" என்று மல்லுக்கட்டுகிறார். எனக்கும் சரியெனவேப் பட்டாலும், சில சமயம் ஒரேக் கருத்தை மிக விரிவாகவும், சில சமயம் நிறைய விஷயங்களை சுருக்கமாகவும் சொல்ல கவிதையே சிறந்த வடிவமாகும் என்பது என் அபிப்ராயம்:

"அம்மாவின் அங்கி" (உங்களுக்காக):

திங்கள் முதல் வெள்ளிவரை
நெடுந்தொடர்களின்
நாயகிகளின்
குடும்பப் பிரச்சினைகளில்
ஒன்றிப்போன மனைவி

வார விடுமுறையின் துவக்கத்தில்
காரணமின்றி கோபித்துக்கொண்டு
மகளின் அறையில் படுத்துக்கொள்ள

என்னுடன் படுத்துக்கொண்ட
சின்னவன்
நெடுநேரமாகியும்
தூக்கமில்லாமல்
என் தோளிலேயே தவித்திருந்தான்

டைனோஸர் கதை
கேசம் துழாவிய வருடல்
என
எந்த முயற்சியும்
அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க

சட்டென எழுந்து
மேசையின் இழுவரையில்
மடித்திருந்த
மனைவியின்
இரவு அங்கி ஒன்றை
எடுத்துவந்து
அதன்
முன்கழுத்து வளைவில் தொங்கிய
நாடாக்களின் குஞ்சத்தினை
நெருடிக்கொண்டிருந்தவன்
சடுதியில் உறங்கிப்போனான்

புதுமையான வடிவங்களிலும்
எழிலான வண்ணங்களிலும்
எத்தனையோ
நவீன
கவர்ச்சியான இரவு அங்கிகள்
வந்துவிட்டப்போதிலும்
அந்தக்
குஞ்சம் வைத்த
பழைய வடிவத்து அங்கியையே
அவள் தேடித்தேடி வாங்கியது நினைவுக்கு வர
அடுத்த அறைக்குச் சென்று
அவன் அம்மாவின்
ஆழ்ந்த உறக்கத்தை
நெடுநேரம்
பார்த்துக்கொண்டு நின்றேன்.

sabeer.abushahruk said...

Dear brother B. Ahamed Ameen,

assalamu alaikkum varah...

Thanks for your appreciation note. Your thoughts on life almost resembles mine with a slight difference that you are seeing as a dream whereas mine viewing it as a play(drama).

Any play has to come to an end so as every dream to get terminated upon waking up.

It looks as if you are up to a theme, ignited in the below lines:

//Real soul awakening happens
At the time of death;
Till then this life
Is a kind of dreaming...//

It might continue like...

Dream whatever you want
Mean your dream to come true
through your efforts....

Shall we wait for a fresh posting on this concept "LIFE IS BUT A DREAM"

sabeer.abushahruk said...

தம்பி எம் ஹெச் ஜே,

என்றுமே நடிக்கத் தோன்றியதில்லை. எனினும், வாழ்ந்த வழியை இங்கிருந்து திரும்பிப் பார்த்தால் எல்லாமே ஒரு நடிப்பு போலவே தோன்றும். வாழ்க்கையை மொத்தமாக நாடக மேடையையொத்த நடிப்பு என்று சொல்ல வரவில்லை. குட்டிக் குட்டித் தூக்கங்களை மரண ஒத்திகை என்று ஒப்பிட்டால் இறுதி மரணத்தை நடிப்பு என்று சொன்னாலே கவிதை முழுமை பெறும் இல்லையா?

நலம்தானே தம்பி? ஒரு பிரிவுத் துயர் கவிதை எழுதித் தாருங்களேன், நாளாச்சு.

க்ளூ:

லண்டனி உன்றன் நினைவு:

கண்மணி குளிரோடு
கணவன் நான்
எழுதும் கடிதமே

பனிப்பொழிவால்
இங்கு
வீதியெல்லாம் வெண்மணல்
ஏனோ எங்கள்
விதியெல்லாம் வெந்தனல்!

இப்டி...அல்லது உஙகள் விருப்பப்படி.

அபு இபு,உங்கள் ஆலோசனையை ஏற்றால் கவிதை சுபமாக முடிந்திருக்கும். வலியோடு நின்றிருக்காது. சரியா?

தம்பி சித்திக் & ஷஃபாத்: வாசித்த்துக் கருத்திட்டமைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

ஈனா ஆனா காக்கா:

தங்களின் துஆவுக்கு நன்றி. நடித்து முடித்து விட்டதாக யாருமே கருதிவிட முடியாது. அது அல்லாஹ்வின் கையில். ஆயினும் குறுகிய காலத்தில் தங்களின் குழுவின் சேர்ந்து நானும் நடிக்கக் கிடைத்தது ஒரு பாக்கியம். இத்தனை நாட்களாக எங்கள் கண்களின் மாட்டாமல் மறைந்து நடித்துக் கொண்டா இருந்தீர்கள்?

நடிப்பைத் தொடர்வோம்... சன்னலோர பயணமும் சாய்ந்துகொள்ள தோளும் வாய்க்கும்வரை.:)

இதைப் பதிந்த அ.நி.க்கும் மிகவும் பொறுத்தமான புகைப்படத்தால் மெறுகூட்டிய அபு இபுவுக்கும் என் நன்றி.

Unknown said...

sabeer.abushahruk சொன்னது…
ஓர் ஆழிப்பேரலையோ கொடும்பூகம்பமோ கடும்புயலோ பெருந்தீயோ என ஏதாவதொரு இயற்கையைக்கொண்டு இறைவன் சீறி முடித்து, மனித உயிர்களின் அற்ப மதிப்பினை அறிவிக்கும்போதெல்லாம் எனக்கு இந்த "எங்ஙனம்" தோன்றுவதுண்டு//
----------------------------------------------------
Poem Justified:)

இப்னு அப்துல் ரஜாக் said...

இதுக்கு எப்படி கருத்திடுவது என மூன்று நாள் யோசித்தேன்,ஒன்னும் ஒடல ,மனதை பிழியும் கவிதை ,நம் எல்லாரின் முடிவும் சுபமாய் இருக்க அல்லாஹ் அருள் புரியட்டும்.ஆமீன்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...!/////
என்ன ஓர் சிந்தனை
தொடருங்கள்

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

அக்கணம்
அவன்
தோளில் தலை சாய்த்து
நான்
நடித்து முடித்திருக்க வேண்டும்
என...!/////
என்ன ஓர் சிந்தனை
தொடருங்கள்

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

இரண்டு நாட்கள் சென்ற பின்னரே கவிக்காக்காவின் கவிதையை படிக்க நேரிட்டது. இத்தருணம் மர்ஹூமா ரிஸானா நஃபீக்கின் அந்த கடைசி நிமிடங்களே கண் முன் வந்து நின்று கவிக்காக்காவின் கவிதையோடு கலந்து கண்ணீராய் உருமாறுகிறது.

இலங்கையிலுள்ள அந்த பெண்ணின் தாயிடம் கடைசி நாட்களில் உரையாடியது. "உம்மா நான் செய்யாத தவறுக்கு நான் ஏன் தண்டணை அனுபவிக்க வேண்டும்? எப்பம்மா ஊர் வந்து உன்னையெல்லாம் பார்ப்பேன்?

தண்டணை நிறைவேற இருக்கும் ஓரிரு நாட்கள் முன்பு சிறைச்சாலையில் அதிகாரிகளால் மரணசாசனமாய் கேட்கப்பட்டு அதை அறியாமலேயே அப்பாவியாய் சொல்லப்பட்டது "கடைசியாய் ஏதேனும் ஹாஜத்துக்கள் உண்டா? என கேட்கப்பட்டதற்கு அப்பாவியான பதில் என்னை எப்பொழுது ஊருக்கு அனுப்புவீர்க‌ள்? கைவ‌ச‌ம் ஏதேனும் ப‌ண‌ம் இருக்கிற‌தா? வெறும் 500 ரியால்க‌ள் ம‌ட்டும் உள்ள‌ன‌. அதை என்ன‌ செய்ய‌ வேண்டும்? யாருக்கு அனுப்ப‌ வேண்டும்? அதை இங்கேயே ச‌த‌க்கா செய்து விடுங்க‌ள்.

யா அல்லாஹ்! இந்த‌ மாதிரி ச‌ம்ப‌வ‌ங்க‌ளை ப‌டிப்ப‌த‌ற்கோ அல்ல‌து பார்ப்ப‌த‌ற்கோ ப‌ரித‌வித்து ப‌டாத‌பாடுப‌டும் இளகிய உள்ள‌ங்க‌ளைக்கொண்ட‌ ந‌ம‌க்கு குடும்ப உயிரை இழந்து வாடும் அந்த‌க்குடும்ப‌த்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லை. அவர்களுக்கு அல்லாஹ் நீயே பாதுகாவ‌ல‌னும் போதுமான‌வனுமாக‌ இருக்கின்றாய்.........

ZAKIR HUSSAIN said...

To Brother மு.செ.மு. நெய்னா முஹம்மது,

சகோதரி ரிஸானா நஃபீக்கின் மரண தண்டனையால் மனது பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அந்த சகோதரிக்காக 2 ரக்க அத் தொழுதேன்.

என்னதான் 13 நீதிபதிகள் , குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்று சொன்னாலும், குழந்தையை இந்த ரிஸானா சாகடித்தால் என்பதற்கு கண்ணால் பார்த்த சாட்சியம் இல்லை. எனவே Benefit Of Doubt என்பதை வைத்து சிறைத்தண்டனை மட்டும் கொடுத்திருந்தால்
[ குழந்தை அவளது பொருப்பில் இருந்ததற்காக ] தீர்ப்பு ஞாயமாக இருந்திருக்கும்.


Unknown said...

Assalamu Alaikkum,

Dear brother AbuShahrukh

//Shall we wait for a fresh posting on this concept "LIFE IS BUT A DREAM"//

Thanks for your appreciation and hope for a fresh post on "Dreaming"
InshaAllah..

Thanks and regards

Unknown said...

Assalamu Alaikkum,

Mr. Kaviyanban has been missed in this "Kaviyarangam".

Hope Mr. Kaviyanban is doing good, and take care.

Thanks and regards

KALAM SHAICK ABDUL KADER said...

எனக்குமுண்டு
எதிர்பார்ப்பு...

என் மகனின் தேவைகள்
என் அயராச் சேவைகளால்
தீரும் வரைக்கும்
இருதயத் துடிப்பின்
இயக்கம் இருக்க வேண்டும்
இன்ஷா அல்லாஹ்!

அன்று
காம்பிலிருந்து மலர் உதிர்வதுபோல்
உடலிலிருந்து உயிர் பிரிய
நோவினை இல்லாச்
சாவினைச் சந்திக்கும்!


அன்பின் சகோதரர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும்
உங்களின் துஆவினால் என் அருமைப் புதல்வன் உடல்நலம் தேறி வருகின்றார்.

KALAM SHAICK ABDUL KADER said...

//Mr. Kaviyanban has been missed in this "Kaviyarangam".

Hope Mr. Kaviyanban is doing good, and take care.//

jazakkallah khairan brother Ameen. Presently I am at Adirai on short and an emergency vacation.

my contact number 00 91 7200332169

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு