Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிரியாவில் நடப்பது என்ன? - பகுதி 3 4

அதிரைநிருபர் | January 17, 2013 | , ,

அல்லாஹ்வின் திருப்பெயரால்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரியாவில் நடப்பது என்ன என்ற தலைப்பில் இரு பதிவுகள் part1 மற்றும் part2 பதிந்திருந்தோம். ஏதோ அரேபிய புரட்சி (ARAB SPRING) என்று ஒரு விளையாட்டாக உலக நாடுகள் சிரியாவில் ஆட்சியாளன் பஸ்ஸாருல் அட்டுழியங்களை ஊடங்களின் மூலம் உண்மை செய்திகளை மக்கள் பார்வைக்கு தர மறுக்கிறார்கள். இதில் இந்திய ஊடகங்களுக்கு சொல்லவே தேவையில்லை. 

ஐ.நா. சபையின் அறிக்கைப்படி, சிரியாவில் பஸ்ஸாரின் கொலைவெறிக்கு இது வரை 60,000 மக்கள் பலியாகியுள்ளார்கள். ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்பதாக சிரியாவின் ஆட்சியாருக்கு எதிராக போராடி வரும் Free Syrian Army தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது.


இதோ ஒரு குழந்தையின் சோகமான வாழ்க்கையை கேளுங்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்புடன்கூடிய காணொளி.


சிரியாவில் குழந்தைகளின் அன்றாட வாழ்வினை தாய், தந்தை, சகோதரர், சகோதரி மற்றும் உறவினர்களை இழந்த குழந்தைகள் விவரிக்கிறார்கள். இதில் 11 வயது அஹ்மதுடைய சோகச் செய்திகளுக்கும், 5 வயது மலக் என்ற பெண் குழந்தை தன்னுடைய தாய் எப்படி கொல்லப்பட்டார் என்பதை விவரிப்பதற்கும், 10 வயது அப்துல்லா மற்றும் 11 வயது ஃபைசன் ஆகியோரின் கோபத்துடன் கூடிய கேள்விகளுக்கும் பதில் தான் என்ன?


நேற்று முன் தினம் அல்ஜஜீரா செய்தியில் போதிய மருத்துவ வசதியின்மையால் குழந்தைகளே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த காணொளியை பாருங்கள்.


மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக… 

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், இதுவே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி…. அந்த மக்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

 அதிரைநிருபர் பதிப்பகம்

4 Responses So Far:

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

அங்கே குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத் உம்மத்திற்கு பொறுமையை கொடுத்து மன நிம்மதியோடு வெற்றியையும் கொடுப்பாயாக ஆமீன்.
-----------------------------------------------------------------------


ரபியுள் அவ்வல் 5
ஹிஜ்ரி 1434

Adirai pasanga😎 said...

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு மன நிம்மதியை அளித்தருள்வாயாக.. யா அல்லாஹ்! அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் குர்ஆன் சுன்னாவை நிலைநாட்ட அஹ்லுல் சுன்னத்துவல் ஜமாத்து உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

Unknown said...

Assalamu Alaikkum,

Even now in the time of advanced medicines and technologies to save the human from many critical conditions - 60000 people passed away in this chaos!!!. Innalillahi wa Innailaihi rajivoon.


I pray to Allah for relief of our muslim brothers and sisters who suffer because of the chaos in Syria.

InshaAllah the ordeal will end there soon.

There will be good times in Syria after this tough times.

Allah says in the Quran, "After every hardship there will be easiness" (twice).

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு