Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரைநிருபர் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ! 7

அதிரைநிருபர் பதிப்பகம் | January 24, 2013 | , ,


அதிரைநிருபர் வலைத்தளம் ஏற்கனவே வலைக்காட்சி நேரலையை 2010 வருடம் அரம்பித்து கிடத்தட்ட ஒன்றரை வருடம் இந்திய நேரம் இரவு 10:30 முதல் 11:30 வரை  ஒளிபரப்பியது அது ஒரு வெள்ளோட்டமாகவே செய்தோம். பெரும்பாலான வாசகர்களின் பேராதவைப் பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

வெள்ளோட்டத்தையே முன்னோட்டமாக வைத்து அடுத்த படி எடுத்து வைத்திக்கிறோம்.

அதிரைநிருபர் வலைத்தளம் வாரம் ஒருநாள் வலைக்காட்சி செய்தித் தொகுப்பு ஒவ்வொரு வாரமும் வழங்க இருக்கிறது. நாளடைவில் இதனை விரிவுபடுத்தவும் எண்ணியிருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !

'அகர வரிசையில்' அதிராம்பட்டினம் என்று வாநிலை அறிக்கையில் முதலிடம் இருப்பதோடு அல்லாமல் இனிவரும் வரும் காலங்களில் அனைத்து செய்திகளிலும் முன்னிலைப் படுத்த எல்லா வகையில் முயற்சிப்போம்.


அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

அதிரை சித்திக் said...

நல்ல முயற்சி ..
வாழ்த்துக்கள் .
செய்தி வாசிப்பவர் கலைப்பு மேலிடாமல் இருக்க
மற்றொருவர் துணை புரிந்தால் நலம் ..
அரசியல் நிகழ்வுகளுக்கு நமது விமர்சனங்களோடு செய்தி சொல்ல லாம்
விபத்து போன்றவைகளுக்கு நிகழ்வுகளை மட்டும் கூறினால்
செய்தி வாசிப்பில் சுவை கூடும் ..வாழ்த்துக்கள் நன்றி

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

செய்தித் தொகுப்புத் தொடர் வெற்றி பெற துஆவும் வாழ்த்தும்!

----------------------------------------------------------------------------


பிறை 12
ஹிஜ்ரி 1434
ரபியுள் அவ்வல்.
(முஹம்மது நபி (ஸல்)அவர்கள் இவ்வுலகில் உதித்த, மறைந்த மாதமாக பெரும்பாலோரால் கருதப்படும் மாதம். இறைவனே முற்றிலும் அறிந்தவன்)

Ebrahim Ansari said...

நீங்கள் எடுத்து வைத்துள்ள அடுத்த படி நல்ல முயற்சி.

இதற்கு அடுத்தபடி என்ன ?

படிக்கட்டுகள் நிறைவடைந்த பிறகு அப்படி இப்படி இல்லாமல் இந்தப்படி நீங்கள் திட்டமிட்டபடி மிகவும் நல்லபடியாக அமைந்துள்ளது. செய்திகளை படிக்க இயலாதவர்கள் இந்தப்படியாகப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்தச் செய்தி வாசிக்கும் குரலுக்குச் சொந்தக்காரர் உடைய அன்பு முகத்தையும் தொடக்கத்தில் காட்டலாமே.

கலக்குங்க!

sabeer.abushahruk said...

அடுத்த முயற்சியாக எடுத்து வைத்திருக்கும் செய்திகள் வாசிப்பதில் ஓர் அர்ப்பணிப்பு இருப்பதை உணர முடிகிறது.

ஈனா ஆனா காக்கா சொல்வதுபோல் ஒவ்வொவொரு செய்தியின் துவக்க வினாடிகளில் வாசிப்பவரின் இன்முகம் காட்டி அதைத் தொடர்ந்து தற்போது உள்ளதுபோல் காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதுபோல அமைத்தால் இன்னும் "கெத்து" கூடும்.


சித்திக் பாயின் இரண்டாவது கருத்தான 'செய்தியின்பால் அதிரை நிருபரின் நிலைபாட்டையும் சேர்த்தல்' அலோசிக்கத் தக்கது.

வாழ்த்துகள் அபுமுஹம்மது; சூப்பர் அ. நி.

ZAKIR HUSSAIN said...

இது முதல் முயற்சி..இன்னும் மெருகூட்ட வாழ்த்துக்கள். அதிராம்பட்டினம் & சுற்றுவட்டார ஊர்களில் உள்ள விசயங்கள் இருந்தால் இன்னும் அழகாக இருக்கும். அப்படி நியூஸ் சேகரிப்பதும் கஷ்டம்தான். ஊரில் இருந்தால் இதெல்லாம் செய்யலாம். [ கேமராவுக்கு ட்ரைபோட் கொண்டு போகிறோமோ இல்லையோ நிச்சயம் கொசு அடிக்கும் பேட் கொண்டு போக வேண்டும் ]

புதுசுரபி said...

மிக அருமையான முயற்சி - வாழ்த்துகள்

தமிழ் உச்சரிப்பில், குறிப்பாக ல,ள மற்றும் ழ உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு