காலைப் பசியாறிவிட்டு “வெளியில் போயிட்டு வாரேன்” என்று அஹமது தனது மனைவி மற்றும் தங்கையிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். மச்சிமார்கள் இருவரும் ஊர் கதைகளையும் குடும்ப விசயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அடுத்து ஆமினா கேட்டாள் “மச்சி நீங்க பட்டுப்புடவை எடுத்து இருக்கீங்களாமே? காட்டுங்களேன் பார்க்கலாம்!”
பாத்திமாவோ அந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை சொலக்கென்றது ‘மச்சிக்கு எப்டி தெரியும்’ என்ற யோசனையோடு “எடுத்துக் கொண்டு வாரேன் மச்சி” என்று சொலேர்ப்பை வெளிக்காட்டாமல் பீரோவை நோக்கி நடந்தாள்.
புடவையை ஆமினாவிடம் கொடுக்க ஆமினா புடவை டிசைனை பார்ப்பதுபோல் புடவையின் விலை அட்டையை தேடினால் அது ஒளிந்திருந்த அந்த அட்டையை மடிப்பை லேசாக விலக்கிப் பார்த்து ‘அப்பாடா நாம் கேள்வி பட்டது சரிதான்’ என்று மனதை சமாதானப் படுத்திக்கொண்டாள்.
“மச்சி புடவை எந்த கடையில் எடுத்தது?”
“போத்தீஸ்லதான் மச்சி”
“என்ன விலை?”
“அதான் இப்ப பாத்திங்களே!?”
“நா பாக்கலமா… பட்டு ஜரிகையைத்தான் தொட்டு பார்த்தேன்” என்று சமாளித்தாள்.
“எட்டாயிரம் மச்சி, புடவை நல்லாயிருக்கா?”
“ம்ம்..”
“ஆட்டுதலை தலை, கொடலு ஊர்லேந்து தருவிக்கிறீங்களே ஏன் இங்கே கிடைக்காதா?”
“கெடைக்குது…. வக்குன தலை கிடைக்குறது இல்ல, தோல உறிச்சி கொடுத்துடுரானுவ ருசியே இருக்குறது இல்ல அதான்”
“அப்ப கொடல?”
“எனக்கு கொடல சரியா கலுவத் தெரியாது அதுனால உம்மா சுத்தம் பன்னி அனுப்புவாஹ..”
“கொடுவா பிஸ்க்குக்கூட அனுப்பிக்கிறாஹளே” விடாக் கொண்டி கேல்விகளை கேட்டுக்கொண்டே இருந்தாள்.
பதிலுக்கு பாத்திமாவும் (கொடாக் கொண்டி) விடவில்லை பதில் சொல்வதை தொடர்ந்தாள்.
“அது உங்களுக்கு பொரிச்சிக் குடுக்கத்தான்” என்று சமாளித்தாள்.
மச்சிமார்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே வெளியில் சென்ற அஹமது திரும்பி வந்துவிட்டார்.
“என்னம்மா மச்சிமார்கள் இரண்டு பேரும் என்ன பேசிக்கிறிங்க?”
“சும்மா மதராஸ் எப்டியிருக்கு அதிராம்பட்டினத்துல நடந்த விசயங்களை பேசிக்கிட்டு இருந்தோம்”
“சரி, மதராஸை சென்னைன்னு பேர் மாத்தி ரொம்ப நாளாச்சு இன்னும் மதராஸ்சுன்னே சொல்லிக்கிட்டு இருக்கியே?”
“நா சொல்லுறதுல உங்களுக்கு என்ன கஸ்டம்?”
“சரி சொல்லிக்கோ.”
“சரி எங்கே போய்ட்டு வர்ரீங்க?”
“ஃபிரண்ட்ஸை சந்திச்சேன் 10வது கூட பாஸ் பண்ணாதவங்கள் கூட நல்ல வசதியா இருக்கானுவ மாப்ள நீயும் சென்னையிலேயே செட்டில் ஆகுடா நிறைய வியாபாரங்கள் இருக்குன்னு சொல்றானுவ யோசனை பன்றேன்னு சொல்லிட்டு வந்தேன்.”
“ஆமாம் காக்கா நீங்க படித்தவர் ஏதாச்சும் வியாபாரம் பண்ணலாம்.”
“நீ என்னமா சொல்ற?” மனைவியை பார்த்து கேட்டார்.
“பாத்துமாவோட மாப்ளயும்தான் படிச்சவர்தான் இவ மட்டும் யான் லன்டனுக்கு அனுப்பிவச்சானு கேளுங்க?”
“இப்ப எதுக்கு தங்கச்சியோட சண்டைக்கு போர என் கேள்விக்கு பதில் சொல்”
ஆனால் ஆமினா விடமிருந்து எந்த பதிலும் இல்லை. வியாபார சிந்தனை லேசாக மனதில் துளிர் விட்டு இருக்கிறது. வேறு ஒரு சமயத்தில் மனைவியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பேச்சை வேறு திசைக்கு திருப்பினான்.
“சாய்ங்காலம் ‘T’ நகர் போகலாமா?” என்று கேட்டார்.
“எதுக்கு காக்கா?” என்று தங்கை கேட்க…
“பெருநாள் வருதுல துணிமனி எடுக்கத்தான்”
“போகலாம் காக்கா”
“மருமகன் பள்ளி. சாரி காலேஜ் போயாச்சா?”
“ஆஆ போய்ட்டான்”
அசர் தொழுகையை முடித்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து T-நகர் சென்றார்கள். ஆட்டோ சென்ட்ரலை தாண்டியதும் ஒரு கார் அவர்களை ஓவர் டேக் எடுத்து சென்றது பளபள வென இருந்தது. அந்த வெளிநாட்டுக் காரின் பின்புற கண்ணாடியில் ‘மாஷா அல்லாஹ்’ என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.
“காக்கா முன்னாடி போறது யார் கார் தெரியுமா? நம்ம பெரியப்பா கொளுந்தியா மொவன் யூசுப்ட கார்.”
“அப்டியா! நானும் கேள்விப்பட்டேன் நல்ல வசதியாமே?”
“சார்” இது ஆட்டோ ஓட்டுனரின் குரல்…
“என்னப்பா?”
“என்ன சார் ஒங்க சொந்தக்காரர்னு சொல்ரீங்க இது கூட தெரியாதா? இந்த சென்னையில அவருக்கு காரு, பஸ்ஸு, வேனுன்னு, மொத்தம் 10,000த்திற்கு மேல் ஓடுது சார்.”
“அது எப்டீப்பா உனக்குத் தெரியும்?”
“சார் அவருடய வண்டிகள்ல பூரா அவங்க கம்பனி பேர் போட்டு இருக்கும் சார் அதகூட பாருங்க MASHA ALLAH ஸ்டிக்கர் ஒட்டி இருக்கு பாருங்க” என்று சொல்லி முடிப்பதற்குள் அஹமது வாய் விட்டே சிறித்து விட்டார்.
“அது கம்பனி பெயர் இல்லப்பா இஸ்லாமியர்களாகிய நாங்கள் எங்களுக்கு கிடைத்த பரிசுகளை அதாவது வீடு, கார், பைக், இன்னும் இது போன்ற பொருள்களில் அல்லாஹ்வை புகழ்ந்து ‘மாஷா அல்லாஹ்’ என்று நன்றியை தெரிவிப்பதுண்டு அதன் பொருள் என்னவென்றால் ‘இறைவன் நாடியது நடந்தது”
அஹமதுவிற்குள் மீண்டும் துளிர் விட்ட சொந்த வியாபார ஆசை தன்னைவிட வயதில் 7 வருடம் குறைந்தவன் தான் யூசுப் 28 வயதிலேயே வியாபாரத்தில் முழு ஈடுபாடு 7-8 வருடம் ரொம்ப சிரமப்பட்டான். அதன் பிறகு நானும் வெளி நாட்டு சபுராளியாக ஆனதால் அவன் வளர்ச்சி தெரியவில்லை. பரவாயில்லை உழைப்புக்கேற்ற ஊதியம் மரம் வளர்த்ததின் பலன் எப்படியாவது மனைவியை ஒத்துக் கொள்ள வைத்து உள் நாட்டிலேயே தொழில் செய்திட வேண்டியதுதான் மனதிற்குள் நினைத்து கொண்டான்.
பயணம் தொடரும்...
மு.செ.மு.சஃபீர் அஹமது
21 Responses So Far:
கதை,கொண்டு போகும் விதம் அருமை.வட்டார மொழி சூப்பர்.
Congrats Kakka
ஆட்டுதலெ, கொடலு, மதுராசு, T.நகரு, போத்தீசு, அசரு தொழுகையோடு சேர்ந்து விடுப்பில் தாயக உலா மாஷா அல்லாஹ் ரொம்ப சுவாராஸ்யமாயிருக்கு!
தொடர் தொடரட்டும்!
நமது ஊரில் நடக்கும் நிகழ்வுகளை மண் வாசனை மற்றும் மொழியோடு கலந்து எழுதுவது படிக்கும் போது மகிழ்வாக இருக்கிறது. சென்னையில் இருக்கும் ஒரு நண்பரின் மகளின் வீட்டுக்கு கொடுவாப் பிசுக்கும், சுத்தம் செய்யப்பட குடலும் , வக்கிய ஆட்டுத்தலையும் அனுப்பபடுவது எனக்குத்தெரியும். நானே ஒருமுறை கொண்டுபோய் கொடுத்து இருக்கிறேன்.
இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.
முதல்ல "சொலேர்ப்பை" கவனிங்க ... Super!!!
அனைத்து commenders தங்களுடைய கவனத்திற்க்கு அதிரை மொழி நடைக்கு அதிரை நிருபர் குழுவும் பங்களிப்பாளர்கள் ஆவார்கள்
நண்பன் சபீரின் எழுத்து தாமரை மணாளன் என்ற எழுத்தாளர்
ஞாபகம் வருகிறது ...தொடருங்கள் ..இன்னும் பல தகவல்கள் தாருங்கள்
அது சரி.. அப்பமா? தோசையா?
இடியப்பம்
ஒவ்வொரு விசயத்தையும் நீங்கள் விவரிப்பதில் தெரிகிறது உங்கள் மனசுமுழுக்க 'ஹோம்சிக்'
i am with my famli in tirupur
ஒவ்வொரு வெளிநாட்டு “சபுராளிகளின்” நாடித் துடிப்பு; உங்களின் கதையில் படப்பிடிப்பு!
சஃபீர் பாய்,
பதிவில் வரும் எல்லோரும் ரொம்ப நல்லவஙகளா இருக்காங்களே...எங்கேயோ இடிக்குதே... எப்ப போட்டு உடைக்கப் போறிய உண்மை சொரூபங்களை?
வட்டார மொழியில் உரையாடல் மனசை மயக்குது.
குடும்பக்கத த்ரில்லர் மாதிரில்ல போகுது... போட்டுத் தாக்குங்க.
/மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) சொன்னது…//
""இடியப்பம்""
அப்ப சிக்கலாச்சே.
என்னமோ நம்ம குடும்பத்தில் நடக்குறது போலவே இருக்கின்றதே....நடை அருமை ரொம்ம அனுபவித்து படித்தேன்...சூப்பர் காக்கா தொடருங்கள்....அந்த மச்சி புடவை வெலையை பார்த்த மேட்டரு சூப்பரோ சூப்பரு !!! ரொம்ப ஏதார்த்தம்
ம்.. ம் .. நான் அப்பமா? தோசையா என்று கேட்டால் நீங்கள் இடியப்பம்னு சொல்றீங்க - இப்பதான் புரியுது ஆட்டுத்தலைக்கும் இடியாப்பத்திற்க்கும் சூப்பர் காம்பினேஸன் - சரிதான் சாப்பாட்டில் நம்பர் ஒன் நீர்தான்...!
எல்லாம் சரி இந்த பட்டுப்புடவை படத்தை யாரு இங்கே போட்டது..மாசக்கடைசி ஏதாவது ஒரு கலர் பிடித்துவிட்டது என்று சொல்லிவிட்டால் நாங்க என்ன செய்வது
//எல்லாம் சரி இந்த பட்டுப்புடவை படத்தை யாரு இங்கே போட்டது..மாசக்கடைசி ஏதாவது ஒரு கலர் பிடித்துவிட்டது என்று சொல்லிவிட்டால் நாங்க என்ன செய்வது //
ஹா ஹா !!!
அப்போதுதானே அவங்களு (வாங்கித் தருபவர்களைப்) புடிக்கும் ! :)
நல்ல வேல ..நான் இருக்கும் நாட்டில் பட்டு புடவை கடை இல்லை ..
சித்திக் காக்கா இப்பிடியெல்லாம் ஏமாத்தக் கூடாது?
பெர்கிலி க்கு கூட்டி போங்க ராத்தாவ.உங்களுக்கு பக்கத்து ஊருதான்.
ஆஹா ...தம்பி லத்தீப் ..இருக்கிறத..மறந்து விட்டேன் .. இந்த ஊர்ல போர்தீஸ் இல்லைன்னு சொன்னேன் .. அவளவு தான் இன்னொரு விஷயம் வலை தளம் பக்கம்
எங்க வீட்டு காரவோ ..வர மாட்டாக .அத நால பட்டு போடவா சமாசாரம்
அவோ களுக்கு தெரியாது
புடவைக்கு மச்சிமார்கள் போட்டி போடுவதுபோல் மாப்பள்ளை மார்களாகிய நீங்கள் புடவை எடுத்து கொடுப்பதில் ஏதோ கார சார விவாதம் செய்கிண்றீர்களே
ஆட்டுத்தல,கொடலூ,இடியாப்பம்,பட்டு போத்தீசு,,,, பத்தல பத்தல பத்தல
Post a Comment