Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தினசரிகள் 14

அதிரைநிருபர் பதிப்பகம் | January 12, 2013 | , ,

(*)அச்சுத் தாயின்
முதற் குழந்தை
இந்தச் செய்தித்தாள்.

(*) ஒரு கையில் தேநீர்,
மறு கையில் செய்தி..
இரண்டுமே சுடச் சுட
இருப்பது தான்
அதிகாலை ஆனந்தம்.

(*) ஒரே நாளில்
உயர்விழந்துப் போகும்
இவை
நிரந்தரமின்மையின்
நிதர்சனம்.

(*)செய்தித்தாள்களுக்குப் பின்னால்
இருக்கும் உழைப்பாளர்களின்
எண்ணிக்கை,
செய்திகளிலிருக்கும்
எழுத்துக்களின் எண்ணிக்கையை
ஒருவேளை
ஒத்திருக்கக் கூடும்.

(*) பேருந்து, ரயில்களில்
இரவல் வாங்கப்படும்
பத்திரிகைகள்
'செய்திகள் எல்லோருக்கும்
பொதுவானவை' என்பதை
சூசகமாய்ச் சொல்லும்.

(*) செய்திகளுக்கு
மட்டுமானதல்ல
இந்தச்
செய்தித்தாள்கள்.

இன்றைய செய்தித்தாள்கள்
இனி நாளை முதல்..

(*) ஓர் ஏழை மாணவனின்
புத்தக உறையாக..

தெருவோர தேநீர்க்கடையில்
வடையிலிருந்து
எண்ணெய் அகற்றும்
வடியாக..

முன்பதிவில்லா
புகைவண்டிப் பெட்டிகளில்
விரித்து அமரும்
பாயாக..

சில்லரை மளிகையில்
சர்க்கரை மடிக்கும்
சுருளாக..

(*) இன்னும் பலவாக..
இரண்டாம் முறையாய்
பயன் தந்து
மரித்து மக்கிப்
போகும்.

அதிரை என்.ஷஃபாத்

14 Responses So Far:

KALAM SHAICK ABDUL KADER said...

\\(*) ஒரு கையில் தேநீர்,
மறு கையில் செய்தி..
இரண்டுமே சுடச் சுட
இருப்பது தான்
அதிகாலை ஆனந்தம்.

(*) ஒரே நாளில்
உயர்விழந்துப் போகும்
இவை
நிரந்தரமின்மையின்
நிதர்சனம்.

(*)செய்தித்தாள்களுக்குப் பின்னால்
இருக்கும் உழைப்பாளர்களின்
எண்ணிக்கை,
செய்திகளிலிருக்கும்
எழுத்துக்களின் எண்ணிக்கையை
ஒருவேளை
ஒத்திருக்கக் கூடும்.\\

நீண்ட நாட்கட்குப் பின்னர் “சுடச்சுட” வாசித்தேன்;நேசித்தேன்; எனக்கும் இப்படி “நச்”என்று வர்ணணைகள் உள்ளத்தில் உதிக்க யாசித்தேன்
வாவ்.. என்னே சொல்லாட்சி; இதுதான் புதுக்கவிதையின் உத்தி; கவிதைத் தாக்கத்தின் சக்தி!

அன்புத் தம்பி ஷஃபாஅத்: அஸ்ஸலாமு அலைக்கும்

அடிக்கடி வருக; அமுதமாய்த் தேன் கவிதை தருக!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//முன்பதிவில்லா
புகைவண்டிப் பெட்டிகளில்
விரித்து அமரும்
பாயாக..//

கம்பனில் பயணம்... ஞாபகம் வருகிறது!

ஸ்டார் வைத்த ஸ்டார் கவிதை !

Unknown said...

சபாஷ் நண்பா,
ஒரு நாள் செய்திதாளின்
வாழ்க்கை வரலாறு
ஓராயிரம் சரித்திரம் சொல்லும்

பொய்யையும் மெய்யையும்
கலந்து கூறும் பல
உண்மையையும் உரக்க
கூறும் சில

நவீன ஊடகம் தொ(கொ)லைக்காட்சி
நாகரிகத்தின் வீழ்ச்சி
செய்தித்தாள் தான்
உண்மையின் மாட்சி
-------------------
இம்ரான்.M.யூஸுப்

sabeer.abushahruk said...

தினசரிகளைப் பற்றி மிகச்சரியான கவிதை.

வாழ்த்துகள் ஷஃபாத்.

KALAM SHAICK ABDUL KADER said...

பழைமையை மறக்காத
புதுமையின் வடிவம்
வழமையாய் அறிவிக்கும்
வனையுமுன் கவியும்

ஆம். “அம்மி, உரல்” பற்றி அன்றும்,"தினசரிகள்” பற்றி இன்றும்

கருவைப் பழமையான பொருட்களாயும் கவிதையைப் புதுமையாயும் தெரிவு செய்யும் உன் உத்தியைக் கண்டு வியக்கிறேன்!

அதிரை சித்திக் said...

நான் ...
1982 தினசரி என்ற நாளேட்டுக்கு
முகவராக இருந்த போது
அதிகாலை ..செய்தி தாள்
பேருந்து மூலம் ஊர் வந்து சேரும்
அதனை பிரித்து பகுதி வாரியாக
அனுப்பி விடும்போது மனதில் உள்ள
பரபரப்பு ...உற்சாகம் ..சூடான செய்தியாக
இருந்தால் எங்களை சுற்றி வாசகர்கள்
கேட்கும்போது மரியாதை யாய்
இருப்பு இல்லை எனும்போது
வாசகர்கள் மாத சந்தா தாராகமுன் வரும்போது
ஏற்படும் ஆனந்தம் ...இப்படி
எத்தனையோ மலரும் நினைவு
இக்கவிதையை படித்த போது
மனதில் வந்து சென்றது ....
சபாஷ் ..ஷாபாத் ...

இப்னு அப்துல் ரஜாக் said...

சகோ சபாத்
நம்ம ஊரு சகனுக்கு
சகலையாய் இருப்பதும்
அந்த தினசரி அல்லவோ?

ZAKIR HUSSAIN said...

To Bro அதிரை என்.ஷஃபாத்....

ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் கவிதையை படிக்கும் வாய்ப்பு ...அடிக்கடி எழுதுங்கள்..உங்களைப்போன்றவர்களின் புதுக்கவிதைகளுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

ஒரு நேரம் தின'சரி'களாக இருந்தவைகள்
இன்று தின'தவறு'களாக ஆகிப்போயின.

நல்ல செய்திகளெல்லாம் தன் வாலை
சுருட்டிக்கொண்டு எங்கோ பதுங்கிப்போயின‌

கெட்ட செய்திகளெல்லாம் அருதிப்பெரும்பான்மை பெற்று
பக்கங்கள் முழுவதையும் அபகரித்துக்கொண்டன.

ந‌வீன‌ துரித‌ த‌க‌வ‌ல் தொட‌ர்பு சாத‌ன‌‍ங்க‌ளால்
தின‌ச‌ரிக‌ள் மெல்ல‌மெல்ல‌ ம‌க்க‌ளிட‌ம் பிரியாவிடை பெறுகின்ற‌ன‌.

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

இன்னமா இப்படியெல்லாம் கலக்குறே உன் கவித செம கிக்குப்பா..சூப்பர் நண்பா சஃபாத்

தினசரி
விரி(டி)கிறது பொழுது
கழிகிறது நிமிஷம்
காலம் என்ற ஓட்டை பானையில்
உயிர் சிந்தி
உழைப்பை கொட்டி
தொலைந்து போகிறது வாழ்க்கை!

அப்துல்மாலிக் said...

பேடுகளும், ஆன்ராய்டுகள் வந்த போதும்
தினசரிகள் தினமும்
சரியாக நேரத்துக்கு
வருவது கூட ஆச்சரியம்தான்
ஒரு நாள்
இதுவும் மக்கிப்போய்
தொழிலாழிகளின் தலையில் கைவைக்கும்

Yasir said...

அசத்தல் கவிதை-சகோ.ஷஃபாத் வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்

அதிரை என்.ஷஃபாத் said...

அருமை சகோதரர்கள், அன்பின் பெரியவர்களின் வாசிப்பிற்கும், வார்த்தைகளுக்கும் நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு