நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சிந்திக்கத் தூண்டும் சித்திரம் - தொடர்கிறது...! 11

அதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜனவரி 08, 2013 | , ,


இரும்புக் கோட்டை வாசலிலும் எல்லைக் கோட்டின் விளிம்பிலும் இருக்க வேண்டிய இந்த பீரங்கி சூரியனை குறிபார்த்து நிற்கிறது. பாவம் அந்தச் சூரியனும் ஓடி ஒளிய இடம் தேடி மறைந்து கொண்டிருக்கிறது.

குருவியைச் சுட துப்பாக்கியைத் தேடுபவர்களுக்கும் இங்கே சவாலாக பறவையொன்று குண்டுகள் சீறும் குழலின் மூக்கில் அமர்ந்துக் கொண்டு முறுக்கேற்றுகிறது.

கொழும்பு கடற்கரையில் அந்தி மாலைப் பொழுதில் காலார நடந்து சென்றபோது கண்ணால் கண்டதை காமிராவில் சுட்டது !

இதெப்படியிருக்கு !?


ஷஃபி அஹமது

11 Responses So Far:

sabeer.abushahruk சொன்னது…

அஸ்தமனங்களைச்
சுட்டுப் பொசுக்குங்கள்
அப்படியாவது
சீக்கிரம் விடியட்டும்!

பணிமூப்பெய்த இந்தப்
பீரங்கியை
ஓய்வு காலங்களைக்
கழிக்க
கடற்கரையில் வைக்க
பீரங்கியைச் சுடும் சூரியன்

இலங்கையில்
ஒற்றையாய்
விடுபட்டுப் போனது
காகம் மட்டுமல்ல
தமிழ் இனமும்தான்.

குட் ஷாட், ஷஃபி.

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் சொன்னது…

செவ்வானம் தீட்டும் கலைகள்
.....செங்கடலாய் மாறும் அலைகள்
இவ்வாறு மூன்றாம் விழியும்
....இங்கிதமாய்ப் பேசும் மொழியாம்!

”யாரங்கே துணிவிருக்கா?” பறவையும்
....எவரிடம் கூவும் அவ்விடத்தில்
பீரங்கி முனையிலேயே பறவையைப்
....பிடித்தவர் பேசும் இப்படத்தில்!..

B. Ahamed Ameen சொன்னது…

Assalamu Alaikkum

Exceptional picturization
Excellent perceptions....

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…

கடல்
காக்கை
கதிரவன்
பீரங்கி இவைகளோடு
அந்தி மாலை அழகுக் காட்சி.
----------------------------------

இன்று ஸபர் மாதத்தில் வரும் கடைசி புதன்.
(26/ஸபர்/1434)
ஆஸ்பத்ரிலெ, ஆட்டுதலை வக்குறது இல்லை என காமெடி பண்ண மாட்டிங்க என நம்புறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷபர் மாதத்தில் அதுவும் அம்மாதத்தில் கடைசி புதனில் நோயுற்றதை அறியாமைக் காலத்தவர்கள் மாதத்தையும் கிழமையையும் தவறாக கருதிய நாள் இன்று.

Ebrahim Ansari சொன்னது…

//இதெப்படியிருக்கு !?//

பேஷ்! பேஷ்! ரெம்ப நன்னாயிருக்கு.

Umar Farooq சொன்னது…

The Crow, The Pole, The Sea, The Sun, The Sky, The Stones, The Sand....
Simply Perfect in the frame wearing all the needful ornaments to make the picture beatiful!!!

தாஜுதீன் சொன்னது…

தமிழ்நாட்டு மினவர்களை காக்காவை சுடுவது போல் சுட்டு கொள்ளத்தான் இந்த பீரேங்கியா? :)

அதிரை தென்றல் (Irfan Cmp) சொன்னது…

சிந்திக்க வைத்த சித்திரம் அருமை

Yasir சொன்னது…

குட் ஷாட், Bro.ஷஃபி.

Shafi Ahamed சொன்னது…

Jazakallah, Thanks to give a better caption for this pictures by AN,and a wonderfull couplets by Sabeer Kaka, Abul Kalam Kaka. And for the comments of Bro.Ameen,Bro.Jahabar Sathik,Bro.Ara Ala,Bro.Ebrahim Ansari,Bro.Irfan,Bro.Yasir and Taj Kaka.

இறைவனுக்கு பயந்து எழுதுங்கள்...

பின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்
அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு