Sunday, January 12, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

ஊடகங்கள் - எனது பார்வையில்...! 19

அதிரைநிருபர் | January 20, 2013 | , , ,

அஸ்ஸலாமுஅலைக்கும்.

இணையத்தில் அன்றாட நிகழ்வுகளை தட்டிப் பார்ப்பது என்னுடைய தினசரி வழக்கம். தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் ஊர்ந்து வரும்பொழுது சிந்தையில் பட்டதையும் என் மனதைப் பாதித்த ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இப்பகிர்வு ஒரு விழிப்புணர்வாகவோ, எச்சரிக்கை மணியாகவோ, அல்லது நேரத்தை போக்கிய வெட்டிக் கதையாகவோ கூட தோன்றலாம். அது படிப்பவர்களின் கண்ணோட்டத்தையும் எண்ண ஓட்டத்தையும் சார்ந்தது.


இன்றைய ஊடகங்கள் முழுக்க முழுக்க பொருளீட்ட உதவும் நோக்கத்திலும் சில சமூகம் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களை திணிக்கும் அல்லது பரப்பும் ஒலி, ஒளி பெருக்கியாகவும் தாங்கள் சார்ந்த அமைப்புகளின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டே செயல்பட்டு வருகின்றது. இவர்கள் தானும் தான் சார்ந்தவர்களும் நன்றாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமெனில் கருப்பு நிறத்தினை வெள்ளை நிறமாகவும், அரசனை ஆண்டியாகவும், பாலினை விஷமாகவும், தாங்கள் விரும்பும் பரிணாமங்களில் மக்களுக்கு காட்டி தங்களின் விருப்பம் மற்றும் இலட்சியங்களை நிறைவேற்றி கொள்வார்கள்.

இதில் பலிகடாவாவது சாமனியர்களாகிய நீங்களும் நானும். அவர்களின் ஆட்காட்டி விரல் நம்மை நோக்கியே உள்ளது. எனவே இவ்வகை ஊடகங்களின் செயல்பாட்டினை கண்டறிந்து கணக்கில் கொள்வதன் மூலம், நீங்கள் அவர்கள் விரிக்கும் மாய வலைக்குள் உங்களை ஆட்படுதிடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

இந்த சமூகத்தின் அங்கம் என்ற நிலையில், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலமும் இவர்கள் அடிக்கும் கூத்து கும்மாலங்களினால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது. மேலும் நம்முடைய மனம் நம்மை அறியாமலேயே ஏமாற்றபடுகின்றன.

இன்று வெளியாகும் சினிமாக்களின் கதையினையும், காட்சியமைக்கப்பட்ட விதத்தினையும், பிறகு அதை வியாபாரம் செய்ய அவர்கள் செய்யும் யுக்திகளையும் கவனியுங்கள். அங்கே பாடலின் வரிகளில் காமம், தொடர் சீரியல்கலான நாடகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் அங்க அசைவுகள். ஊருக்கு வெளியே அஞ்சி ஒஞ்சி வாழ்ந்து வந்த கூத்தாடிகள் இன்று நம் நடு வீட்டில். இவர்களை நடுவீட்டிற்கு அழையாத விருந்தாளியாக உள்ளே வரவைத்ததில் பெரும் பங்கு இந்த ஊடகங்களுக்கு உண்டு. இந்த  மானங்கெட்டவர்களை பொது மேடையில் பொன்னாடை போர்த்தி அழகு பார்க்கின்றது பெரும்பாலான சமுதாயம். ஊடக விபச்சாரிகளை நம் வீட்டுப் படுக்கை அறைக்கு அழைத்து வருகின்றது.

ஊடகங்கள் நம்மை கைது செய்து அடிமைபடுத்தி வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இவர்கள் மூலம் நமக்கு ஊட்டப்பட்ட போதையை பயன்படுத்தி அதன் உரிமையாளர்களும், ஆட்சியாளர்களும், தலைவர்களும் தங்களின் எண்ணங்களை நிறைவேற்றி கொள்கின்றனர். பாழாக்கும் இந்த கூட்டத்திற்கு அரசும் துணை நிற்பது வேதனையே.

இன்றய சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை இந்த சினிமாவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுமே முடிவு செய்கின்றன. இதற்கு ஏரளமான உதாரணங்களைக் காட்டலாம். காலை எழுந்ததிலிருந்து  மக்கள் தலைவாரும் முறையில் துவங்கி, அணியும் ஆடை, பயன்படுத்தும் வாகனம், எல்லாவற்றிற்கும் மேலாக, பேச்சு நடை உடை கூட அவர்கள் சொல்லித்தரும் வழியில் தான் அமைந்துள்ளது. அதுமட்டுமா? வரப்போகும் கணவன்/மனைவி எப்படி இருக்க வேண்டும் என்ற அளவுகோலை இச்சைக்கேற்றவாறு நிர்ணயம் செய்வதே இந்த ஊடகங்கள் தான். ஒல்லியா/குண்டா?, வெள்ளையா/கருப்பா?, மீசை வேண்டுமா வேண்டாமா?, தாடி வேண்டுமா வேண்டாமா? இதுபோல அழகு எது என்று இவர்கள் நிர்ணயம் செய்வதை தான் இன்று கண்மூடித்தனமாக உலகின் பெரும்பாலான மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

மக்களின் மனதில் அவர்கள் அறியாமலேயே இந்த ஊடகங்களின் போலித்தனங்களை விதைத்து வளர்க்கப்பட்டு வருகின்றது. அந்த போலித்தனமான வாழ்வியல் முறை மக்களின் பாரம்பர்யத்தை, அவர்களின் கலாச்சாரத்தை மறக்கடிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எண்ணத் தூய்மையை சிதறடித்து சின்னாபின்னமாக்கி விடுவதில் முன்னெனியில் இருக்கிறது. சிந்திக்கத் துணிய வேண்டிய மக்களை சில்மிஷங்களை காட்டி அவர்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக!

ஷஃபி அஹமது

19 Responses So Far:

ZAKIR HUSSAIN said...

To Bro Shafi Ahamed,

//சிந்திக்கத் துணிய வேண்டிய மக்களை சில்மிஷங்களை காட்டி அவர்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கும் வஞ்சகர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக//



இது பற்றி நிறைய விரிவாக எழுதுங்கள். ஏனெனில் ஊடகங்கள் எப்படி அன்றாட வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி வைத்திருக்கிறது என்று எழுதினால் சிலர் ' இவனுக எப்பவும் இப்படித்தான்,..இவனுக பார்வை சரியில்லை' என்று ஏதோ ஊடகங்களின் ஆபிசிலிருந்து மாத வருமானம் பெறும் ஊழியனை விட அநியாயத்துக்கு ஜால்ரா அடிக்கிறாங்க.

Ebrahim Ansari said...

//போலித்தனமான வாழ்வியல் முறை// நூற்றுக்கு நூறு உண்மை.
பலர் வீடுகளில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களுக்கிடையில் விளம்பர இடைவேளை இல்லாவிட்டால் கணவன்மார்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட கிடைக்காது.

எல்லாத்தரப்பு மக்களின் அன்றாட வாழ்வை இவை ஆக்ரமித்துவிட்டன.

நல்ல விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுக்கள்.

N.A.Shahul Hameed said...

அஸ்ஸலாமு அலைக்கும்!!!
ஷபி, அருமையான ஆக்கம். இன்னும் இவற்றின் தாக்கத்தைப் பற்றி விரிவாகவும் விவரமாகவும் எழுத உன்னால் முடியும். மேலும் தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்
வஸ்ஸலாம்
N.A.Shahul Hameed

Unknown said...

சகோ.ஜாகிர், சகோ.அன்சாரி, மிக்க நன்றி. இறைவன் நாடினால் கண்டிப்பாக தொடர முயல்வேன்.
NAS சார், உங்களுக்கு Formality பிடிக்காது. So straight away சொல்லிடறேன். இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் ஒரு ஆசிரியரிடம் கிடைக்கும் அங்கீகாரத்தில் கிடைக்கும் மன நிறைவு..... அது அனுபவித்து உணர வேண்டிய ஒன்று. Thank You Sir!!!

dheen said...

http://www.popularfrontnellai.com/
இன்று நடைபெறும் SDPI மாவட்ட மாநாடு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்றைய நிலை அவர்களாகவே நிர்ணயித்ததுதான்...

சீஸன் நியூஸ் !

கடந்த வாரங்களாக கற்பழிப்பு வாரங்கள் ! எங்கு பார்த்தாலும் எதனைப் புரட்டினாலும் அதே செய்தி....

ஒரு சாமியார் மாட்டினால் அடுத்து தொடர்ந்து சாமியார்கள் மாட்டுவார்கள்....

சாதிக் கலவரம் ஒன்று நடந்தால்... அப்போதுதான் இவர்கள் கண்களுக்கு அடுத்தடுத்த சாதிக் கலவரங்கள் தெரியவரும்...

இவனுங்க திருந்த மாட்டாய்ங்க, நாமதான் அவர்கள் வலையில் விழாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் !

இதே கவலை ஏராளமான நம் சகோதரர்களுக்கு இருக்கிறது அதற்கான வடிகால்தான் சீரமைக்கப்படாமல் தொய்ந்து கிடக்கிறது...

Unknown said...

அருமையான பதிவு இது போல மேன்மேலும் எழுத மனசார வாழ்த்துக்கள் மச்சான்

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் என்ன நியாபகமிருக்கா சார்

அதிரை சித்திக் said...

ஊடகம் ..
அதிகார வர்கத்தின் கடிவாலதிற்கு அடங்கா முரட்டு குதிரை ..

Unknown said...

m.nainathambi.அபூஇப்ராஹீம் சொன்னது…
//சீஸன் நியூஸ் !
கடந்த வாரங்களாக கற்பழிப்பு வாரங்கள் ! எங்கு பார்த்தாலும் எதனைப் புரட்டினாலும் அதே செய்தி....
ஒரு சாமியார் மாட்டினால் அடுத்து தொடர்ந்து சாமியார்கள் மாட்டுவார்கள்....
சாதிக் கலவரம் ஒன்று நடந்தால்... அப்போதுதான் இவர்கள் கண்களுக்கு அடுத்தடுத்த சாதிக் கலவரங்கள் தெரியவரும்...//

மிக சரி... இதுவே இன்றைய செய்தி ஊடகங்களின் போங்கு.....
குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க முயலும் கூட்டங்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும், தம்பி ஷஃபி.

ஊடகங்களை உற்றுநோக்கும் மனசாட்சியுள்ளவர்களின் உணர்வுகளை கொட்டி இருக்கிறீர்கள்.

//இன்றைய ஊடகங்கள் முழுக்க முழுக்க பொருளீட்ட உதவும் நோக்கத்திலும் சில சமூகம் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களை திணிக்கும் அல்லது பரப்பும் ஒலி, ஒளி பெருக்கியாகவும் தாங்கள் சார்ந்த அமைப்புகளின் வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாக கொண்டே செயல்பட்டு வருகின்றது. //

//இன்று வெளியாகும் சினிமாக்களின் கதையினையும், காட்சியமைக்கப்பட்ட விதத்தினையும், பிறகு அதை வியாபாரம் செய்ய அவர்கள் செய்யும் யுக்திகளையும் கவனியுங்கள். அங்கே பாடலின் வரிகளில் காமம், தொடர் சீரியல்கலான நாடகங்களில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் அங்க அசைவுகள். ஊருக்கு வெளியே அஞ்சி ஒஞ்சி வாழ்ந்து வந்த கூத்தாடிகள் இன்று நம் நடு வீட்டில்.//

//ஊடகங்கள் நம்மை கைது செய்து அடிமைபடுத்தி வைத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. //

//இன்றய சமுதாயத்தின் வாழ்க்கை முறையினை இந்த சினிமாவும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுமே முடிவு செய்கின்றன. //

//மக்களின் மனதில் அவர்கள் அறியாமலேயே இந்த ஊடகங்களின் போலித்தனங்களை விதைத்து வளர்க்கப்பட்டு வருகின்றது.//


சபாஷ தம்பி...

கற்பனை, போலி, பொய் இவைகளை மூலதனமாக கொண்டு மனிதனால் அன்றாட வாழ்வில் எதார்த்தமாக செய்ய முடியாததை சினிமா, சீரியல்கள், டிவி விளம்பரங்கள் செய்தி ஊடகங்கள் செய்து காட்டி தினிக்க வேண்டியதை தினித்து அவரவர்களின் வருமானத்தை மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

காம இச்சைகளை உள்ளடக்கிய சினிமா, சீரியல், அனைத்து டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என்ற ஊடங்களே பாலியல் வன்கொடுமைகளுக்கும், சமூக சீர்கேடுகளுக்கு நம்பர் ஒன் காரணம்.

Unknown said...

Assalamu Alaikkum,
//பாழாக்கும் இந்த கூட்டத்திற்கு அரசும் துணை நிற்பது வேதனையே.//

Because of the politcal parties have evolved from the cinema and media.

Actors and all artists are exposed to public through media. So, they take advantage of familiarity of their face to become politicians.
(It seems their purpose to become politicians is not to execute public service as an agenda, but for personal agenda)

Making cinema or serials is for profitable business, so there is no ethics for humanity.

We need maturity for ourselves and give proper guidance and direction to our family members what to see, what not to see.

Not only the media(tv) but internet also a mega 'multi-media'.

Lets beware of evils. May Allah save us from evils.

Thanks and best regards,

மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்) said...

முண்பு கப்பல் படை வைத்திருந்தவர்கள் வள்லரசு நாடு
பின் விமானப்படை வைத்திருந்தவர்கள் வல்லரசாக இருந்தார்கள்
இன்றோ ஊடகத்துரையை யார் தன் வசம் வைத்திருக்கின்றார்களோ அவர்களே உலகை ஆள்கின்றனர்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஊடகம் பற்றிய உள்ளபடி விளக்கம்!
உடந்தையாகிப் போனது அரசு என்பதும் பரிதாபம்.

sabeer.abushahruk said...

பாதகங்களை மட்டுமே பேசிவிட்டுச் செல்லாமல் சாதகங்களையும் ஞாயமாக எடை போடுங்கள் ஷஃபி.

தைரியமான தலைப்பு. விரிவாக அலசி வெற்றிபெற வாழ்த்துகள்.

Unknown said...

Thank you all and Inshallah, will try to continue with more authentic sources to explain the pros and cons.

இப்னு அப்துல் ரஜாக் said...

நன்றாக அலசி உள்ளீர்கள்.
மீடியாக்களின் இந்த வக்கிர போக்குக்கு மக்களும் ஒரு காரணம்.சினிமா இல்லாத - அரை குறை அட்டைப்படம் இல்லாத ,நல்ல பத்திரிகைகள் விலைபோகாததன் காரணம்மக்களே .
மக்களின் கீழ் தர எண்ண ஓட்டத்தின் விளைவின் பலனே இந்த தற்போதைய மீடியாக்கள்.

அதிரை சித்திக் said...

சரியாக சொன்னீர்கள் தம்பி அர அல

Yasir said...

ஊடகங்கள் பெரும்பாலனோரை அடிமையாக்கி வைத்ததோடு மட்டுமல்லாமல் “இஸ்லாத்திற்க்கு” எதிராக பயன்படுத்தபடும் ஆயுதமாகவும் இருக்கின்றன....பிற மத ஃபார்க் தீவிரவாதிகள் / நக்சல்கள் செய்யும் மாபெரும் அட்டுழியங்களை மதம் சாயம் கொண்டு பூசாத/கண்டுகொள்ளாத மீடியாக்கள்...ஒரு முஸ்லிம் கல்லைவிட்டு குளத்தில் எறிந்தாலும் மத சாயம் பூசி பெரிதுபடுத்துகின்றன...முஸ்லிம் மீடியாக்கள் வளரவேண்டும்...அதன் அடிப்படையும் இஸ்லாமிய செங்கலை கொண்டு கட்டப்படவேண்டும்....
நல்ல ச்சுள்ளென்று கொடுக்கும் அடியைப்போல உள்ளது இவ்வாக்கம் இன்னும் பல நன்மை தீமைகளை அலசவேண்டும் அதற்க்கு பொருந்தமானவர் சகோ.ஷஃபி அவர்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.