Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பாலியலுக்கு பலியாகாதே! - தொடர்கிறது...2 8

அதிரைநிருபர் பதிப்பகம் | March 27, 2013 | ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..

நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாகட்டுமாக!

ஒழுக்கக் கேடுகளை விளைக்கும் ஊடகங்கள் தவிர்ப்போம்!

சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் வருந்தத்தக்க வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தினம் ஒரு கற்பழிப்பு என்று தலைப்பு இல்லையே தவிற கற்பழிப்பு செய்தி இல்லாத தினங்களுமில்லை தினசரிகளுமில்லை. எங்கோ மேலை நாடுகளில் நடந்ததாக செவியுற்ற செய்தியெல்லாம் இன்று நம் நாட்டில் அதுவும் கலாச்சாரம் பேசும் நம் நாட்டில் நடக்கக் கேட்டு வியக்கும் வேலையில், இதில் மறைந்திருக்கும் எச்சரிக்கையும் மறுப்பதற்கில்லை. அதாவது நாளை நம்மைச் சுற்றியும் இது போன்று நடக்கலாம்! அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாத்து ஈருலகிலும் நம்மை கண்ணியப் படுத்துவானாக!

எனவே, பாலியலில் நாம் பலியாகி விடக் கூடாதெனில் பாலியல் குற்றங்களுக்கான காரண காரியங்கள் கண்டறிந்து அவை முழுமையாகத் தவிர்க்கப்பட வேண்டும். அதன் வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும். நம்மையும் நம்மைச் சார்ந்தோரையும் பாதுகாப்பது நம் கடமை என்றெண்ணி நாம் களமிறங்க வேண்டும். அரசாங்கம் நம்மை பாதுகாக்கும் என்று யாரும் பொறுப்பற்றிருந்தால் வரும் வலியும் வேதனையும் சம்பத்தப்பட்டவரையே சாரும் என்பதை மறந்துவிடக் கூடாது.

பாலியல் குற்றங்களில் இருபாலரும் ஈடுபட்டாலும் பெரும் பாதிப்பைச் சுமப்பவள் பெண்ணாகவே இருக்கிறாள். குற்றம் அவள் இழைத்தாலும் அல்லது அவள் மீது குற்றம் இழைக்கப்பட்டாலும் சரியே. மேலும் அதன் பாதிப்பு அவளோடு நின்றுவிடாமல் மொத்தக் குடும்பத்தையும் பதம் பார்த்துவிடுகிறது. காரணம் பெண் ஒரு குடும்பத்தின் முக்கிய அங்கமாக இருப்பதே. இதயத்தின் நோய் ஏனைய உறுப்பையும் பாதித்தல் ஒன்றும் புதினமல்லவே. அதற்காக பெண் மட்டுமே ஒழுக்கமாக இருக்க வேண்டும், ஆண்கள் எப்படியும் இருக்கலாம் என்றும் அர்த்தமல்ல. ஆனால் பெண்ணால் விளைகின்ற தீமை ஒருபடி பாதிப்பை அதிகப்படுத்தி விடுகிறது.

இன்று பாரெங்கும் பரவிக்கிடக்கின்ற பாலியல் குற்றங்களில் ஊடகங்களின் பங்கு வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட்டுச் செல்லும் அளவிற்கு குறைவானதல்ல. பெண்களைக் காட்சிப் பொருளாக்கியதில் ஒலி ஒளி ஊடங்களுக்கு பெரும் பங்குண்டு. அவைகளே பெண்களின் அரை நிர்வாண ஆபாச காட்சிகளை மூலதனமாக்கி சந்தைப்படுத்தின. அதன் தாக்கம் மனோ ரீதியில் ஆண், பெண் என இரு பாலரிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆடைக் குறைப்பு பெண்களின் முன்னேற்றத்தின் அடையாலமாக எடுத்துக் காட்டப்பட்டது. அச்சு ஊடகங்களும் அவர்கள் பங்கிற்கு அட்டையிலும் நடுப்பக்கத்திலும் பெண்களின் அரை நிர்வாணக் காட்சிகளைப் பிரசுரித்து காசு பார்த்தன. சபலமுடைய பலகீனமான ஆண்கள் ஆபாச அம்புகளால் வேட்டையாடப்பட்டனர்.

திரைப்படங்களிலும், சீரியல்களிலும், தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை என்ற போர்வையிலும் இரட்டை அர்த்தமுடைய வசனங்கள் இடம்பெற்று நெஞ்சில் நஞ்சை விதைக்கின்றன. அவை பெரும்பாலும் பாலியல் ரீதியான மாற்று அர்த்தம் கொடுப்பதாகவே இருக்கிறது. அதைக் காண்பவர்களிடம் ஏற்படுகின்ற மாற்றம் வஞ்சகர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.  அதாவது அந்த இரட்டை அர்த்தமுடைய வசனத்தால் ஒரு பெண்ணிடத்திலே ஏர்படுகின்ற பிரதிபலிப்பு அவளின் மனநிலையை ஒருவாறு படம் பிடித்துக் காட்டுவதோடு அதுவே அவளுக்கு ஆபத்தையும் தேடித் தந்துவிடுகிறது. இதை நடைமுறைப்படுத்தி இரட்டை பொருள் தரும் வசனம் பேசி அதை ஆணோ பெண்ணே புரிந்துகொண்டு, என்ன எப்படி அசிங்கமாகப் பேசுகிறாய்? என்ற கேள்வி எழுந்தால் உன் புத்தி ஏன் இப்படிப் போகிறது!? நான் சாதாரன அர்த்தத்தில் தானே சொன்னேன் என்று சமாளிப்பத்தற்கும், சொன்ன வார்த்தையில் சறுக்கிக் குழைந்தால் அடுத்த கட்டம் நோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் வழிவகுத்துத் தருகிறது.

ஒருகாலத்தில் திரைப் படத்தில் வருகின்ற காட்சிகளில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் தொடமலேயே நடித்திருப்பதைப் பார்க்கலாம். இன்று திரைத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி? அதன் காட்சி அமைப்பில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை என்னும் அளவிற்கு சர்வ சாதாரனமாக ஆபாசக் காட்சிகள் இடம் பெருகின்றன. சமீபத்தில் முத்தக் காட்சியில் நடித்ததற்காக நடிகை அழுத செய்தி வெளியிடப்பட்டிருந்தது. நானும் சற்றே ஆச்சரியப்பட்டு செய்தியை வாசித்தால் உண்மையிலேயே முத்தம் கொடுக்க வைத்துவிட்டாரே என்று வருந்தி கால் மணி நேரம் அழுத நடிகை, காட்சி நன்றாக அமைந்திருக்கிறது என்று இயக்குனர் காட்டிய முன்னோட்டக் காட்சியைக் கண்டு அரை மணி நேரம் சிறித்தார் என்று எழுதப்பட்டிருந்தது. இது தான் இன்றைய திரைப் படங்களின் நிலை. இப்படி விளையாட்டாய் மனிதனின் சிந்தனையில் விஷத்தை விதைத்து விருட்சமாக்கி பாலியல் வன்கொடுமைகள் ஆலமாய் வேரூண்ட வழிவகை செய்திருக்கிறது இன்றைய தொ(ல்)லைக் காட்சி நிகழ்ச்சிகளும், திரைப் படங்களும்.

இதில் பெரும் கொடுமை என்னவென்றால் இந்த அசிங்கங்கள் குடும்ப சகிதம் எல்லோர் முன்னிலையில் அரங்கேற்றபடுவதே. நடுக் கூடத்திலிருக்கின்ற நவீன ஷைத்தான் தொலைக் காட்சிப் பெட்டி. வைக்கும் போது எல்லோரும் வக்கனையாய்ப் பேசுவார்கள். நாங்கள் சீரியல் பார்க்க மாட்டோம், சினிமா பார்க்க மாட்டோம், செய்திகளைப் பார்த்து நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள, என்றுதான் ஆரம்பமாகும். ஆனால் ரத்த நாளங்களில் ஒடிக்கொண்டிருக்கும் ஷைத்தான் நம்மை மிகைத்து விடுகிறான். விளைவு எழுதுவதற்குக் கூசுகின்ற ஆபாசக் காட்சிகள் அத்துனையும் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய், தந்தை, மாமன் என்று அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றம் பெறுகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் இங்கும் அங்கும் நெகிழ்வார்கள். பின் நாளடைவில் பழகிப் போய் ஆரம்பத்தில் இருந்த வெட்கம் பிறகு இல்லாமலாகி சகஜ நிலையில் எல்லோரும் கண்டு மகிழும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

வெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.

என்று ஒருவன்/ஒருத்தி வெட்கம் களைந்தனரோ அவன்/அவள் எதையும் செய்யத் துணிவர். அதன் விளைவுகளே இன்றைய பிரச்சனைகள்…

இன்ஷா அல்லாஹ் தொடரும்
அபு நூரா

8 Responses So Far:

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

பதிவுக்கு ஜசக்கல்லாஹ் ஹைர், மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்

Ebrahim Ansari said...

அடுக்கடுக்கான ஆதாரங்கள்- ஆழமான விவாதங்கள்- அறிய வேண்டிய அறிவுரைகள் நிறைந்து காணப்படும் நேரத்துக்குரிய கட்டுரை.
பாராட்டுக்கள்.

Abu Easa said...

//இரட்டை பொருள் தரும் வசனம் பேசி அதை ஆணோ பெண்ணோ புரிந்துகொண்டு, என்ன இப்படி அசிங்கமாகப் பேசுகிறாய்? என்ற கேள்வி எழுந்தால் உன் புத்தி ஏன் இப்படிப் போகிறது!? நான் சாதாரன அர்த்தத்தில் தானே சொன்னேன் என்று சமாளிப்பத்தற்கும், சொன்ன வார்த்தையில் சறுக்கிக் குழைந்தால் அடுத்த கட்டம் நோக்கி அடியெடுத்து வைப்பதற்கும் வழிவகுத்துத் தருகிறது//

இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பரவலாக புலக்கத்தில் இருப்பதை காணமுடியும். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல. இது மிகவும் மோசமான பழக்கமாகும். இது பெரும்பாலும் தன்னுடைய நிலையை சூழ்நிலைக் கேற்ப மற்றிக்கொள்ள உதவுவதால் இதில் வஞ்சகத்தன்மை ஒழிந்திருப்பதை மறுக்கமுடியாது.

அல்லாஹ் மனித குலத்திற்கு அருளிய தனது இறுதி வேதத்தில் "சொல்வதை நேரடியாக/வெளிப்படையாகச் சொல்லுங்கள்" என்று இறை நம்பிக்கையாளர்களுக்கு கட்டளையிடுகின்றான்.

பெண்களே இவ்விசயத்தில் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களிடத்தில் எவரேனும் பாலியல் தொடர்பான இரட்டை அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளைப் பேசினால் அது உங்களுக்குப் புரிந்தாலும் புரிந்ததாகக் காட்டிக்கொள்ளாதீர்கள். அவ்வாறு நீங்கள் புரிந்தாகக் காட்டி சாதாரனமாக விட்டுவிட்டால் சூழ்சிக்காரன்/சூழ்சிக்காரி உங்களை நோக்கி ஒரு அடி நெருங்கிவிட்டார்கள் என்று அர்த்தம். என்வே காட்டிக்கொள்ள வேண்டாம். இது போன்ற செயல்கள் அவர்களிடம் தொடர்ந்தால் மேலும் அவர்கள் எண்ணம் சரியில்லை என்று ஊர்ஜிதமாகத் தெறியும்போது அவர்களை விட்டும் விலகிவிடுங்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் விசயத்தில் மிகவும் கவனமாக இருங்கள்.

மேலும் ஆபாசமான பேச்சையோ தொடுதலையோ எக்காரனம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். இதுபோன்ற செயலை எவரும் பகிரங்கமாக செய்தால் அது விளையாட்டு என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு நடந்தாலும் கடும் கோபத்தை வெளிப்படுத்துங்கள் அது உங்கள் விசயத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

அலாவுதீன்.S. said...

சினிமா, சீரியல், தொலைக்காட்சி, பத்திரிக்கைள் இவை அனைத்திற்கும் வலுவான கடிவாளம் போடாதவரை இந்த அசிங்களுக்க முடிவு வராது.
பணத்திற்காக எதையும் செய்யும் மேற்கண்ட இந்த கூட்டணிகளுக்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ளாதவரை பாலியல் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

எந்த பாலியல் வன்முறை நடந்தாலும் அறிவு ஜீவிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எவரும் இந்த கூட்டணிக்கு எதிராக போர்க் கொடி தூக்குவதில்லை.

சட்டம் கடுமையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
வீட்டை, கடையை திறந்து போட்டு விட்டு திருடு போய்விட்டது என்று சொல்வது எப்படிப்பட்ட முட்டாள்தனம். மூளை உள்ளவர்கள் செய்யும் செயலா?

தவறை தூண்டும் அத்தனை வாசலையும் அடைத்து விட்டு அல்லவா கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். தவறை தூண்டுவதில், சினிமா, சீரியல், தொலைக்காட்சி, பத்திரிக்கைத் துறைகள், மது இவை அனைத்திற்கும் பங்கு இருக்கிறது. எந்த அறிவு (கெட்ட) ஜீவிகளும் இதைப்பற்றி பேசுவது கிடையாது.

இந்த அனைத்திலும் களை எடுக்காமல் பாலியல் தொல்லைகளை எத்தனை சட்டம் போட்டாலும் தடுக்க முடியாது.

sabeer.abushahruk said...

பாலியல் பலிகளுக்கான காரண காரியங்களை அலசுவதன் மூலம் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவரமுடியும் என்கிற அபுநூராவின் இந்த முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்.

தவிர, பெரும்பான்மையான சாமன்யர்களிடம் திணிக்கப்பட்டு அத்தியவாசியமாகப் போய்விட்ட தொலைகாட்சி வாயிலாக இதுபோன்ற விஷயங்கள் குறும்படம், ஆவணப்படம், மக்கள் அரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மண்டைக்குள் செலுத்துதல் சுலபம்.

சொன்னா ட்டிவியை ஆதறிக்கிறான்டான்னு வம்புக்கு வருவீங்க.

எதுக்கு வம்பு. வாங்க சும்மா பேசிட்டு களஞ்சிப் போவோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//சொன்னா ட்டிவியை ஆதறிக்கிறான்டான்னு வம்புக்கு வருவீங்க.

எதுக்கு வம்பு. வாங்க சும்மா பேசிட்டு களஞ்சிப் போவோம்.//

அதெப்படிங்க காக்கா கூரைக்கு கம்பெல்லாம் வாங்கியாச்சு... ட்விட்டுல பேசிக்கலாமா ?

Anonymous said...

//தவிர, பெரும்பான்மையான சாமன்யர்களிடம் திணிக்கப்பட்டு அத்தியவாசியமாகப் போய்விட்ட தொலைகாட்சி வாயிலாக இதுபோன்ற விஷயங்கள் குறும்படம், ஆவணப்படம், மக்கள் அரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மண்டைக்குள் செலுத்துதல் சுலபம்//

அல்லாஹ்வின் இறுதித் தூதர் இட்ட கட்டளைகளில் "நம்மையைக் கொன்டு தீமையை அகற்றுங்கள்" என்பதும் ஒன்று.

தாங்கள் சொல்வதைப் போல் இவ்விழிப்புணர்வை குறும் படம் மற்றும் ஆவனப் படம் மூலம் மண்டைக்குள் செலுத்த வேண்டுமெனில் அரை குறை ஆடையையும் ஆபாசக் காட்சிகளையும், சிமிசங்களையும் ஒளிபரப்ப வேண்டிய சூழல் ஏற்படும். எதை கூடாது என்கிறோமோ அதை நாமே செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிமுறை மிகவும் வேடிக்கையானதே. மேலும் மேற்சொன்ன நபி மொழிக்கு இது மாற்றமானதுமாகும்.

//மக்கள் அரங்கங்கள் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மண்டைக்குள் செலுத்துதல் சுலபம்//

இதுதான் மக்கள் அரங்கம். சிந்திக்கூடிய நல்லெண்ணம் கொண்ட மக்களின் அரங்கம். இங்கே விழிப்புணர்வு ஏற்படின் அது இவ்வலைத்தளத்தோடு வாடிவிடாமல் மற்றவரையும் சென்றடையும் என்ற நன்னோக்கோடு எங்கே விழிப்புணர்வு விதை தூவி விருட்சமாக்க விளைகிறோம்.

அபு நூரா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இத கொஞ்சம் கேளுங்கள் http://www.youtube.com/watch?v=uYi5r-Xw2Ag&feature=share

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு