Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நடுவுல கொஞ்சம் நட்சத்திரங்களைக் காணோம்...! தொடர்கிறது... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | March 23, 2013 | , , ,

என்னாச்சு?

அதிரை என் ஷஃபாத்:

முக்குளித் தாராவும்
முல்லை மலர்களும் என
செக்கடிக் குளம்பற்றி
சிலிர்க்க வைத்தவர்

ஆயத்த ஆடையைப்போல்
பிசகாது இவர் எழுத்து
அளவெடுத்து தைப்பதற்கு
அழகான சொல்லெடுப்பார்

இவரின்
கவிமேகம் சூழ்ந்துவிட்டால்
அடைமழைதான்
ஏனோ
நீலவான ஏகாந்தமாய்
நீண்டுவிட்ட விடுப்பில்

அணு உலைக்கெதிராய்
மனு பதிந்துச் சென்றவர்
அதிரை நிருபரை
அனுகாத தேனோ?

****

என்னாச்சு?

அஹமது இர்ஷாத்:

இங்கேயும் காணோம்
அங்கேயும் காணோம்

அலைவரிசையிலும்
அதிர்வுகள் இல்லை
தொலைபேசியிலும் தொடர்புகளில்லை

நாலைந்து வார்த்தைகளில்
நச்சென்று சொல்பவர்
போகிற போக்கிலே
புதுமையாய் எழுதுவார்

சிறுகதையாயினும்
கருவெனக் கொள்வது -நற்
கருத்தேயாகும்

இவர் நக்கலில்
விக்கல் வரும்
நையாண்டி தர்பாரில்
யூகி சேது

அதிரை நிருபரின்
பங்களிப்பாளர்களின் பட்டியலில்
பதுங்கியிருக்கும்
இந்தப் புலி
பாய்வதென்று?

****

என்னாச்சு?

எல் எம் எஸ் அபூபக்கர்:

இவர்
பதிவுகளைவிட
கருத்துகளாகப்
பகிர்ந்தவை மூலமே
பரிச்சயம் மிகுதி

நேரில் நிறைவான
இஸ்லாமிய வெண்பா
இவர்முகம், நண்பா

இவர் எழுத்து
ஒரு மார்க்கமாக இருக்காது
ஓரிறை மார்க்கமாகவே இருக்கும்

அதிரை நிருபரின்
சங்கிலி
நடுவில் நலிந்ததுபோல்
இவர் மெளனம்

என்னாச்சு?

Sabeer AbuShahruk

20 Responses So Far:

crown said...

என்னாச்சு?

அதிரை என் ஷஃபாத்:
------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும். சரியா கேட்டீங்க கவிஞரே! எங்கே போனான் என் தம்பி!ஏன் இப்படி செய்துவிட்டான். கவிக்கேட்காமல் தவிக்கவிட்டுவிட்டான்.
"அணு உலைக்கெதிராய்
மனு பதிந்துச் சென்றவர்
அதிரை நிருபரை
அனுகாத தேனோ?"
-------------ஆமாம் இவன் கவிதைத்தேன் நம்மை அனுகாததேன்? அந்த அலுக்காதத் தேன்!ஏன்,ஏன்,ஏன்,ஏன்,????

crown said...

என்னாச்சு?

அஹமது இர்ஷாத்:
------------
இவர் நக்கலில்
விக்கல் வரும்
நையாண்டி தர்பாரில்
யூகி சேது
-----------------------------------
கவிக்காக்கா யூகி சேது வென "யூகிச்சது" சரிதான். எழுத்து நடையில் அங்காங்கே நக்கல் எனும் நகைச்சுவை வைரக்கல் பதித்து செல்பவர்! எங்கே?எங்கே???

crown said...

என்னாச்சு?

எல் எம் எஸ் அபூபக்கர்:
--------------------------
சிரித்த முகம் ,சீரிய சிந்தனை!எல்லாம் ஒருங்கே சேர்ந்தது இவன் முகம்! தும்பைப்பூ வெள்ளை அகம் கொண்டவன் இங்கே அகப்படாமல் ஒதுங்கியதெங்கே?

crown said...

எழுத்து நடையில் அங்காங்கே
----------------------
2ம் கருத்து ஆங்காங்கே என இருக்கனும் .மன்னிக்கவும்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

காணாது இருப்பவர்கள் பற்றிய கவிஞர் கவிகளில் இது நட்சத்திரம்!

//செக்கடிக் குளம்பற்றி
சிலிர்க்க வைத்தவர் இவர்

நக்கலில்
விக்கல் வரும்

ஒரு மார்க்கமாக இருக்காது
ஓரிறை மார்க்கமாகவே இருக்கும்//

வாங்க எல்லாரும். சீக்கினமா!

KALAM SHAICK ABDUL KADER said...

என். ஷஃபா அத்;

//இவரின்
கவிமேகம் சூழ்ந்துவிட்டால்
அடைமழைதான்
ஏனோ
நீலவான ஏகாந்தமாய்
நீண்டுவிட்ட விடுப்பில்//

*வானம் பார்த்த பூமியாய்
வாடும் எங்கள் நிலையை
காணும் உன்றன் மனமும்
கடிதாய்த் திரும்ப வேண்டும்!


அஹ்மத் இர்ஷாத்:

\\அலைவரிசையிலும்
அதிர்வுகள் இல்லை
தொலைபேசியிலும்
தொடர்புகளில்லை\\

அலைபோல் அசையும்
நிலையில் உள்ளீர்
தலையைக் காட்டும்
தரையைத் தொட்டு!


எல் எம் எஸ் அபூபக்கர்:

//நேரில் நிறைவான
இஸ்லாமிய வெண்பா
இவர்முகம், நண்பா\\


நேரும் நிரையும் நிரையுடன் நேரும்தான்
சேரு மிடத்தில் செழிக்கும் மரபினில்
வெண்பா இலக்கணம்; வெல்லுமுன் அன்பினை
நண்பா விரைவாய் நவில்.


Yasir said...

நட்சத்திரங்கள் எங்கோ மின்னிக்கொண்டிருந்தாலும், நாங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருப்பதால்...கொஞ்சம் அ.நி க்கு வந்து மின்னி விட்டுச் செல்லலாமே...கவியால பிரிவுத்துயரை கலக்கலாக சொல்லும் எங்கள் கவிக்காக்காவின் சொல்லாற்றாலுக்கு நிகரே இல்லை

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

வெத்திலையில மை தடவி பார்க்கும் காலெமெல்லாம் காணாமல் போயிடுச்சாம்.... அதனால !

தலைய காட்டிடுவீங்க தானே !

அதிரை என்.ஷஃபாத் said...

சில வெள்ளிகளைத் தேடி, ஒரு  கவிநிலா  எழுதிய கடிதம் கண்டேன். கருத்துகளிட்ட சக விண்மீன்களின் ஆவலும் கண்டேன். பணிச்சுமை சற்று குறைந்திருக்கின்றது அல்ஹம்து லில்லாஹ். விரைவில் மீண்டு(ம்) வருகிறேன்  இன்ஷா அல்லாஹ்  

sabeer.abushahruk said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவு ஒரு ஆர்வக்கோளாறு தந்த தேடல். ரயில் பயணங்களில் வாய்த்தது போலல்ல எனக்கு இங்கு வாய்த்த நண்பர்கள். 

நான் என் நண்பர்களோடு ஆக்கபூர்வமாக மட்டுமே பேசும் தன்மையுடையவன் அல்லன். ஆனால், எதார்த்தமாகவும் பாவணையில்லாமலும் வெள்ளந்தியாகவும் மட்டுமே பழகத் தெரிந்த எனக்கு அத்தகைய பழக்கத்தால் ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்ட பலர் தத்தமது ஆழ்மனதின் உள்ளக்கிடக்கைகளை இங்குப் பதிந்துள்ளனர்.

அவர்களைக் காணும் தேட்டம் மட்டுமே என் குறிக்கோள். அப்படிப்பட்ட என் தேடலை உணர்ந்து அட்டென்டன்ஸ் போட்ட சகோக்களுக்கும் என்னைப்போலவே இந்த நட்சத்திரங்களைத் தேடியவர்களுக்கும் நன்றியும் து ஆவும். 

இர்ஷாத் மற்றும் எல் எம் எஸ் இருவரும்கூட விரைவில் எங்களுடன் கைகோர்க்கவேண்டும் என்பதே என் ஆசை.

வஸ்ஸலாம்.

عبد الرحيم بن جميل said...

வ அலைக்கும் முஸ்ஸலாம் சபீர் மாமா!!

கவிதையில் உள்ள நட்சத்திரங்களை நீங்கள் தேடுவதுபோல,பல சகோதரர்களுக்கு நீங்கள் காணாமல் போன நட்சத்திரம்போல் ஆகிவிட்டீர்கள் போல தெரிகிறதே!!

KALAM SHAICK ABDUL KADER said...

கவிவேந்தர்க்
கவித்தூண்டிலுடன்
வலைத்தளத்தின்
வலையை வீசியதும்
மீன்கள் சிக்கின!

வேண்டுதலை ஏற்று விரைவில் வலைக்குள்ளே
மீண்டு(ம்)வரும் தம்பியை மெச்சு.

sabeer.abushahruk said...

//பல சகோதரர்களுக்கு நீங்கள் காணாமல் போன நட்சத்திரம்போல் ஆகிவிட்டீர்கள் போல தெரிகிறதே!!//

சரிதான், கேட்டுட்டாப்ல. காரணத்தைச் சொல்வோம் என்று கிளம்பினால் "நோ பெர்ஸனல் ட்டாக்" என்று குச்சியைத்தூக்கவா? நான் இந்த ஆட்டத்துக்கு வரல.

KALAM SHAICK ABDUL KADER said...

கவிநிலவுக்கு அமாவாசை!
புவியெங்கும் சுற்றிவர ஆசை!!
இடைப்பட்ட காலத்தில்
தடைப்பட்ட காரணமிதுவே

sabeer.abushahruk said...

கவியன்பன்,

இருப்புப் பாதைகள்
அகற்றப்பட்டதும்
நமதூர்
உருப்பறுந்து
ஊனமுற்றதுபோல் கண்டேன்.

ரயில் தடதடக்கும்
சப்தத்தையேக் காணோம்
நான் செவிடா
ஊர் மெளன விரதமா

Ahamed irshad said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

கவிக்காக்கா[வின்] என் பேரில் நம்பிக்கை வைத்து வைத்த தேடலுக்கு நன்றி.. :) அதே போல் அபுஇபுறாகிம் காக்கா, தஸ்தகீர் காக்கா,மற்றும் யாசிர், கவியம்பர் கலாம் காக்கா உட்பட இந்த திரியில் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.. இன்ஷா அல்லாஹ் அநிருபரில் என் பேரில் உள்ள பங்களிப்பாளர் அட்டையை ரீசார்ஜ் செய்துட்டு இதோ வந்துடுறேன்..

Ebrahim Ansari said...

அன்புச் சகோதரர்களே!

பாசத்தால் கட்டுண்ட இந்த வலைதளத்தின் பங்களிப்பாளர்கள் பண்புடன் பறிமாறிக் கொள்ளும் நேசம் நிலைத்திருக்க து ஆச செய்கிறேன்.

நான் வந்து கருத்திடுவதற்குள் தேடப்பட்ட நட்சத்திரங்களில் இருவர் ஆஜர்.

தம்பி எல். எம் . எஸ். அபூபக்கர் அவர்கள் தம்பி எ. எஸ். எம். நெய்னா அவர்களுடன் கடந்த வாரம் என் இல்லத்துக்கு வந்து ( யான வாப்பா இந்த வேவா வெயில்லே) நலம் விசாரித்து சென்றனர். அபூபக்கர் அவர்கள் கடையில் பிசி. இணைய தள இணைப்பில்லாததால் கருத்திட இயல்வதில்லை என்று கவலைப் பட்டார்கள்.

எனது சாட்சியத்தை ஏற்று தம்பி அபூபக்கர் மேல் வாசிக்கப் பட்ட குற்றப் பத்திரிக்கையையும் இரத்து செய்யும்படி கனம கோர்ட்டார் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Ebrahim Ansari said...

எம். எஸ். எம். நெய்னா.

عبد الرحيم بن جميل said...


sabeer.abushahruk சொன்னது
//சரிதான், கேட்டுட்டாப்ல. காரணத்தைச் சொல்வோம் என்று கிளம்பினால் "நோ பெர்ஸனல் ட்டாக்" என்று குச்சியைத்தூக்கவா? நான் இந்த ஆட்டத்துக்கு வரல.//

வலைப்பூ வாடிவிடக் கூடாதென்பதற்க்காக வாபஸ் வாங்கிவிட்டேனே!!மேலும் ஒரு சஜ்ஜஸ்ஸன் தான் சொன்னேன் பெர்ஸனல் டாக்ஸ் வேண்டாமென்று,நீங்களுமா சீரியஸ் ஆகிவிட்டீர்கள்?

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

கவிவேந்தர் தீட்டிய கவியம்பு சரியாக பதம் பார்த்து இங்கே இழுத்துவரவும் செய்தது வாழ்த்துக்கள் சபீர் காக்கா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு