Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கலப்பட உணவு!? - கலக்கல்(!!?) காணொளி! 7

அதிரைநிருபர் | March 01, 2013 | , , , ,

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..


நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!

கடந்த சில நாட்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் மாட்டு இறைச்சி பர்கரிலும், நெஸ்ட்லே நிறுவனத்தின் தயாரிப்பான பாஸ்தாவிலும் குதிரை மாமிசம் கலந்திருந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இப்போது தென்னாப்பிரிக்க நாட்டில் உணவுப் பொருளில் கலப்படம் தொடர்பாக மேற்கொன்ட ஆய்விலும் மாட்டு இறைச்சி பர்கரில் எருமை மற்றும் கழுதையின் மாமிசம் கலந்திருந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் உணவுப் பொருட்களின் ஹராம் ஹலால் பேன வேண்டிய நிலையில் இச்செய்தி மிகவும் கவனிக்கத் தக்கதாகும்.

இலங்கையில் ஹலால் உணவுக்கு எதிராக புத்தர்களின் போராட்டம் முஸ்லிம்களை ஆன்மீக ரீதியாக பலகீனப்படுத்த யூத, கிறித்தவர்களின் சூழ்ச்சி பணத்திற்காக எதையும் செய்யத் துணிகின்ற நேர்மையற்ற வியாபாரிகள் என்று மனித நலனுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கைக்கு எதிராகவும் பெரும்பான்மை உலகம் களம் இறங்கியிருக்க, நம்முடைய இறை நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்வது நம் ஒவ்வொருவர் மீதும் கடமை.

இறை மார்க்கமான இஸ்லாம் மனிதர்களுக்கு உண்ணத் தடை செய்தவற்றுள் தானாய் செத்ததும், இரத்தமும், இறைவன் பெயர் சொல்லி அறுக்கப்படாததும், பன்றியின் மாமிசமும், கழுதையும் அடக்கம்.

மாட்டுக் கறியோடு குதிரை, கழுதையின் கறியைக் கலந்தவர்கள் தானாய் செத்த கோழியையும், மாட்டையும், ஆட்டையும் எப்படி விற்பனை செய்யாமல் விடுவார்கள்?




கலப்படம் சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் தானாய் செத்ததை பயன்படுத்தினால் எந்த சோதனையில் தெறிய வரும்?

இது போன்றவைகள் ஹலால் என்ற பெயரில் நமக்கும் விற்பனை செய்யப்படலாம். அதை வாங்கி நாமும் உட்கொள்ள நேரலாம்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

இது போன்ற நிலையில் அது நம் மீது குற்றமாகாது என்றாலும் கால நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மேலை நாடுகளிலிருந்தும், நிராகரிப்பாளர்களிடமிருந்தும் வருகின்ற ஹராம், ஹலாலோடு தொடர்புடைய பொருட்களை தவிர்ப்பதே இறை நம்பிக்கைக்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் ஷைத்தானின் அனைத்து சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாக்கப் போதுமானவன்.

அபு ஈசா
கலக்கல்(!!?) காணொளி !


அதிரைநிருபர் பதிப்பகம்

7 Responses So Far:

sabeer.abushahruk said...

அபு ஈஸா,
அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லதொரு எச்சரிக்கை. நன்றி.

வளைகுடா நாடுகளில் இதுபோன்ற கலப்படச் சதிகளின் சாத்தியம் குறைவு என நினைக்கிறேன். சரியா?

யாசிர்/ அதிரை முஜீப்,

பீட்ஸா ஹட்டின் புதிய டிஷ்ஷான "ஃபன் 4 ஆல்" ஒரு நல்ல வெரைட்டி மீல். பசங்கள்ட்ட நான் சொன்னதாச் சொல்லிடுங்க.

ZAKIR HUSSAIN said...

Fast Food = Fast in Sickness , Fast in Death

Iqbal M. Salih said...

a good awareness article by AbuEisa in right time.

anyhow, junk food either it is Halal or Haram but definitely makes you feel bad and becoming sick too! no doubt on it.

ஜலீல் நெய்னா said...

Fast உணவு பிரியர்களுக்கு நல்ல ஒரு எச்சரிக்கை.

Abu Easa said...

அலைகுமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்

//வளைகுடா நாடுகளில் இதுபோன்ற கலப்படச் சதிகளின் சாத்தியம் குறைவு என நினைக்கிறேன். சரியா?//

இங்கே உற்பத்தியாகும் உணவில் சாத்தியம் குறைவுதான், ஆனால் இறக்குமதியாகும் பொருட்களுக்கு?

Yasir said...

தக்க சமயத்தில் தரப்பட்டிருக்கும் செய்தி...வெளிநாட்டில் தயாரிக்கபடும் உணவுகளை தவிர்ப்பதே சாலச்சிறந்தது...நன்றி அபு ஈஸா அவர்களே

عبد الرحيم بن جميل said...


வியாபார நோக்கில் வியாபாரம் செய்பவர் ஹலால்/ஹராம்,இது பற்றி பெரும்பாலானோர் பேனுதலாக நடப்பதில்லை!!நாம் வேண்டுமானால் நினைத்துக்கொள்ளலாம்,(B)பாய் கடை தானே என்று,நாம் நினைக்கும் பெரும்பாலான (B)பாய்களுக்கு தக்பீருக்கும் கலிமா வுக்கும் வித்தியாசம் தெரியாது....இப்போதைய நிலை என்னவென்றால்,K.F.C. சாப்பிட நினைத்தால் போதும் இது ஹலால் தானா என்ற வினா கூட நமது இஸ்லாமிய சமூகத்தினர் மனதில் எழுவதில்லை...மேலும் என்னுடன் தங்கியிருக்கக் கூடிய ஒரு இஸ்லாமியரிடத்தில் இது பற்றி நான் வினவிய போது இதில் என்ன இருக்கிறது என்று கூலாக சொல்கிறார்...வீடுகளில் அல்லாது வெளியில் அசைவ உணவுகளை தவிர்த்துக் கொள்வது சிறந்தது!!


அப்துர்ரஹீம் ஜமீல்!!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு