Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்... தொடர் - 9 25

அதிரைநிருபர் பதிப்பகம் | March 09, 2013 | , ,



தொடர் ஒன்பது

இசங்களும்  பொருளாதார இயலும்

சோசலிசம் :-

ரஷ்யப்புரட்சிக்குப் பிறகு உலகெங்கும் அதே பாணியில் பொதுவுடைமைக் கருத்துக்கள் கோலோச்சிய பொருளாதாரக் கோட்பாடுகள் உலக அரங்கில் செல்வாக்குப் பெற ஆரம்பித்தன.  ஓரளவுக்கு சுருக்கமாக  சொல்லப் போனால் கம்யூனிசத்தின் இந்திய எடிசன்தான் சோசலிஸம். இந்திய மதசார்பற்ற  சோஷலிச ஜனநாயகக் குடியரசு   ( SECULAR SOCILAIST DEMOCTATIC REPUBLIC OF INDIA ) என்பதுதான் இந்தியாவின் அரசியல் நிர்ணய சபை இந்தியாவுக்கு சூட்டிய பெயர்.  

ரஷ்யப் புரட்சியின் போது நடந்த வன்முறைகளை ஓரம்கட்டிவிட்டு நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைக் கொடுத்து – அந்த ஜனநாயக முறைகளின் பெயரால் சாத்வீக முறையில் தனியார் உடைமைகளை சமூகத்துக்கு சொந்தமாக எடுத்துக் கொண்டு திட்டமிடல், உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை அரசே மேற்கொண்டு  செய்யும் பொருளாதார முறையே சோசலிசம் என்று சுருக்கமாக விவரிக்கலாம். மக்களுக்குள்ள உரிமைகளை மதிப்பது, ஏற்ற தாழ்வைக் குறைப்பது, வரிகள் தரும் வருமானங்கள் மூலம் நாட்டை ஆள்வது ஆகியவை சோசலிசத்தின் அம்சங்கள்.

A POLITICAL AND ECONOMIC THEORY OF THAT ADVOCATES THAT THE MEANS OF PRODUCTION, DISTRIBUTION & EXCHANGE SHOULD BE OWNED AND OR REGULATED  BY STATE. 

இத்தகைய முறைகளில் இந்தியாவில் சோஷலிச நடவடிக்கைகள் பண்டித ஜவர்ஹர்லால் நேரு பிரதமாக இருந்த காலம் தொட்டு  ஐந்தாண்டுத்த் திட்டங்கள் மூலம் ஆரம்பித்தனர். அரசின் முதலீட்டில் பெரும் தொழில்கள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்தும் வந்த பிரதமர்களால் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது; முன்னாள் அரச குடும்பங்களுக்கு  வழங்கப்பட்ட இராஜ மானியம் நிறுத்தப் பட்டது;  நில உச்ச வரம்புச் சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன; பெரிய வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன; போக்குவரத்து நாட்டுடமையாக்கப்பட்டது. அனல் மின் நிலையங்கள், பாய்லர் தொழிற்சாலைகள், நிலக்கரி சுரங்கங்கள், இரயில்  பெட்டி  தொழிற்சாலைகள் போன்ற பெரும் தொழிற்சாலைகளை அரசே தனது மூலதனத்தில் நடத்திடத்தொடங்கியது.   

அரசே நடத்திய அலட்சிய நிர்வாகம் காரணமாக பல அரசுத் தொழில்கள் நஷ்டங்களை சந்தித்தன.  தொழிலாளர்களின் பொறுப்பற்ற தன்மையின் காரணமாக ‘மணியடித்தால் சாப்பாடு மாதம் முடிந்தால் சம்பளம்’ என்கிற மனப்  போக்கு காரணமாக உற்பத்திக் குறைவு ஏற்பட்டது. சோஷலிசம் என்பது பார்ப்பதற்கு ஒரு அலங்கார பொ ம்மையாகவும் பழகினால்  கையைக் கடிக்கும் கரடியாகவும் பொருளாதார ரீதியில் உணரப் பட்டது. 

இன்றும் கூட அரசின் நிறுவனங்கள் நஷ்டக்கணக்கைத்தான் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆகவே   பொருளாதார ரீதியில் வெற்றிபெறாத ஒரு  கோட்பாடே சோஷலிசம். அதனால்தான் இன்றைய அரசு தனியார்துறைகளுக்குப் பல தொழில்களைப் பாட்டாப் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது.  

கம்யூனிசம் அல்லது பொது உடைமைக் கொள்கை. :-

பார்ப்பதற்கு கம்யூனிசம் என்பது கிட்டத்தட்ட சோசலிசம் போலத்தோன்றும் ஆனால் அடிப்படையில் தனியாரிடம் இருக்கும் உடைமைகளை சாத்வீக முறையில் சட்டப்படி அரசு எடுப்பது சோசலிசம் ; அப்படி எடுக்கும்போது அதுவரை அந்த சொத்துக்களை வைத்து இருந்தவனுக்கு நாலு அடியைக் கொடுத்து அல்லது அவனை அழித்து ஒழித்துவிட்டு எடுத்துக் கொள்வது கம்யூனிசம். 

“இருப்பவன் தரமாட்டான் இல்லாதவன் விட மாட்டான்” என்பது புகழ்பெற்ற கம்யூனிச கோஷம். தனியாரிடம் இருந்த சொத்துக்களைப் பிடுங்கி நாட்டுக்கு சொந்தமாக்கி அவரவர் உழைப்புக்கன்றி  அவரவர் தேவைக்குத் தருவது – பங்கீடு செய்வது கம்யூனிசம். இதை சாந்தமாக செய்ய முடியாது என்பதால் அரசே வன்முறைகளை கையிலெடுத்து அடக்குமுறையால்- தனி மனித உரிமைகள் மற்றும் உணர்வுகளை அடக்கி ஒடுக்கி – ஆளும் கோட்பாடே கம்யூனிசம். 

ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை கேள்விப்பட்டதுண்டு. 

மூன்று நாய்கள் ஓரிடத்தில் சந்தித்தன. ஒன்று அமெரிக்க நாய்; மற்றது இந்திய நாய்; இன்னொன்று ரஷ்ய நாய். 

அமெரிக்க நாயை மற்ற நாய்கள் கேட்டன “ எங்கே இந்தப் பக்கம்?” 

அமெரிக்க நாய் சொன்னது “ எங்கள் நாட்டில் உணவு அதிகம். நான் நிறைய சாப்பிட்டு விட்டேன். சாப்பிட்ட உணவு செறிப்பதர்க்காக சற்று ஓடினால் நலமென்று தோன்றியது ஆனால் வழி தவறி இப்படி வந்துவிட்டேன் . ஆமாம் நீ எங்கே இந்தப் பக்கம் ?” என்று இந்திய நாயைக் கேட்டது.

இந்திய நாய் சொன்னது. “ எங்கள் நாட்டில் உணவுப் பஞ்சம் சாப்பிட ஒன்றும் கிடைக்கவில்லை . அதனால் ஏதாவது சாப்பிடக்கிடைக்குமா என்று தேடித் பார்த்துக் கொண்டே வந்தேன். ஆமாம் நீ எங்கே இந்தப் பக்கம்?” என்று ரஷ்ய நாயைக் கேட்டது.  என்றது.   

ரஷ்ய நாய் சொன்னது “ எனக்கு எதுவும் பிரச்னை இல்லை. அளவோடு சாப்பாடெல்லாம் கிடைக்கிறது. ஆனால் எங்கள் நாட்டில் வாய்விட்டு குரைக்கக் கூட முடியவில்லை . அதனால்தான் இவ்வளவு தூரம் ஓடி வந்தாவது ஆசை தீர லொள் லொள் என்று  குரைத்துவிட்டுப் போகலாமென்று வந்தேன் “ என்றதாம். கம்யூனிச நாடுகளில் தனிமனித சுதந்திர உணர்வுகள்  இந்தப்பாடுதான் பட்டன. 

கம்யூனிசம் என்கிற கோட்பாடு இனம், நிறம், நிலம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து ஓர் சமுதாய அமைப்பை நிறுவிட உண்மையில் விரும்பியது. ஆனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காக  முடிந்த கதையாக கம்யூனிசம் மனித இனத்தை மனித இனத்துக்குரிய இயல்புகளால் பிணைக்க இயலவில்லை. மாறாக, மனித இனத்தை வர்க்க பேதம் என்கிற கோட்பாட்டால் கூறு போட்டது. கம்யூனிசம் காலூன்ற வேண்டுமானால் இருப்பவரை இல்லாதார் வெறுக்க வேண்டுமென்ற தன்மை அவசியமானது. மனித இனத்தை, இருப்பவர், இல்லாதவர் என்ற இரண்டு பிளவுகளாகப் பிளந்து இல்லாதவரை ஏவி, இருப்பவர் மீது கோபமும் பொறாமையும் கொள்ளச்செய்து  கம்யூனிசம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. மனிதர்களின் கீழான மிருக குணங்களை வளர்த்துவிட்டுத்தான் கம்யூனிச கோட்பாடு உயிர்வாழவேண்டி வந்தது. 

இந்த மிருக குணங்களின் தன்மைகளான உணவு, உடை , உறைவிடம், ஆகியவற்றையே இந்தக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளும் சமுதாயங்களும் பெரிதாகக் கருதின. இவற்றிற்கெல்லாம் அப்பால் மனிதனுக்குள் இருக்கும் புனிதமான நற்பண்புகளையும், ஆன்மீக நெறிகளையும், சிறந்த குணாதிசயங்களையும் பார்த்திடவோ அங்கீகரிக்கவோ இயலவில்லை. கம்யூனிச வரலாறு என்பது சோற்றுக்கு போடும் கூப்பாடு அல்லாமல் வேறொன்றுமில்லை என்று ஆகிவிட்டிருந்தது.  

கம்யூனிச சமுதாயம் இறை மறுப்பைக் கொண்ட சமுதாயம். இந்த உலகம் தானாகத் தோன்றியது அல்லது இயற்கையாகவே உருவானது என்று நம்பும் அல்லது நம்பவைக்கப்படும் சமுதாயமாகும். இதனால் இறை வழிபாட்டுத்தலங்கள் பூட்டிவைக்கப்பட்டன.  மனித வரலாறு என்பது பொருளாதார போராட்டத்தால் ஆனது என்பது கம்யூனிசத்தின் ஆணிவேர். உற்பத்தி செய்வதும் உற்பத்தியானதை பங்கிட்டு உண்டுவாழ்வது மட்டுமே வாழ்க்கை என்கிற உப்பு சப்பற்ற கொள்கையே கம்யூனிசம். விலங்கினங்களுக்கு எப்படி உணவும் உறைவிடமும் தேவையோ அவை இருந்தால் போதும் என நினைக்கவைக்கும் சித்தாந்தம். மக்கள்  தங்களின் தனித்தன்மையை ஒரு போதும் வெளிப்படுத்த இயலாத  , சொத்து சேர்க்க இயலாத, விரும்பும் தொழிலை தேர்ந்தெடுக்க இயலாத மனித இனத்துக்கு ஒரு இயந்திரத்தன  வாழ்வை கற்றுத்தரும் கோட்பாடே கம்யூனிசம். 

இவ்வளவு   மோசமான இந்த கம்யூனிசம் தான் தோன்றிய இடத்திலேயே  அழிந்தது. வீழ்ந்தது.  வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்க்கும் யாரும் சில சம்பவங்களை மறந்துவிட இயலாது. சில கோட்பாடுகள் , சில மதங்கள் உலகில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் உருவாகும். ஆனால் நல்ல மாடாக இருந்தால் உள்ளூரிலேயே விலை போய்விடுமென்று சொல்வார்களே அப்படி உள்ளூரில் அந்த மதங்கள் அல்லது கோட்பாடுகள் வெற்றி பெற இயலாது போயின.  புத்த மதமும் ஜைன  மதமும் இந்தியாவில் உருவாயின. ஆனால் இந்தியாவில் இவை நிலை பெறவில்லை. அதே போல்தான் கம்யூனிசம்  ரஷ்யாவில் உருவாகி, சீனாவில் பரவி, உலகின் பல பாகங்களில் தனது வேர்களைப் பரப்பினாலும் இன்று தோன்றிய இடத்திலும் பரவிய இடத்திலும் அழிந்து ஒழிந்த சித்தாந்தமாக ஆகிவிட்டது. 

இன்றைய நிலையில் கம்யூனிஸ கோட்பாடுகள் என்பவை  நினைவுச்சின்னம் ஆகிவிட்ட ஒன்றாகிவிட்டது.  சிலர் போட்டுக்கொண்டு திரியும் சிவப்புத்துண்டுகளும் விரைவில் சாயம் போய்விடும். சித்தாந்தமே போய்விட்டது சிகப்புத்துண்டா நிலைக்கப் போகிறது?

அன்பானவர்களே! இதுவரை உலகில் தோன்றிய மதங்கள், பல கோட்பாடுகள் ஆகியவற்றின் பொருளாதார அம்சங்களை அறிமுகமாக விவாதித்தோம். 

இனி என்ன? இஸ்லாம்தான். வரும் வாரங்களில் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் மற்றும் இதர  கோட்பாடுகளுடனான ஒப்பீடுகளை காண்போமாக.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
இபுராஹீம் அன்சாரி

25 Responses So Far:

sabeer.abushahruk said...

உழைத்துக் கலைத்துச் செல்வம் சேர்ப்பவனும் சோம்பிக் கிடந்து சுகம் கண்டவனும் சகனில் வேண்டுமானால் சரிசமமாகலாம் சபையில் எப்படி ?

உழைப்பவனிடம் பிடுங்கி ஊதாரியிடம் கொடுப்பதெல்லாம் ஒரு கோட்பாடா, அதனால்தான் ஊத்திக்கிச்சு.

காக்கா,
சிவப்புத்துண்டு, கருப்பு சிவப்பிலோ கருப்பு சிவப்பு வெள்ளையிலோ சரணாகதியாகி வெகுகாலமாகிவிட்டது. 

அதிலும் தற்போது ஒன்றுக்குப் பதிலாக ரெண்டு இலைச் சாப்பாட்டால் பஜனை காதை பிளக்கிறது.  

உங்கள் கட்டுரையைப் படித்து முடித்ததும் கம்யூனிஷம் என் கண்களில் கட்டுப்போட்டு கம்பூன்றி ஒட்டுப் பிளாஸ்ட்டர்களும் தலையில் கட்டுடனும் ஒரு கண்ணில் பச்சைப் பட்டியுமான மதன் கார்ட்டூன் மனிதனாகக் காட்சி தருகிறது.

ஹய்யோ ஹய்யோ!

Unknown said...

Assalamu Alaikkum

Dear brother Mr. Ebrahim Ansari,

Excellent desriptions about Socialism and Communism with nice examples.

Both of those isms are having principles of imbalance at their core, so they have been collapsing.

We expect the forth coming Islamic Economic thoughts series from your matured writing. Hoping that impact the readers with concepts of purity, balanced, practicable, solution oriented principles by human beings, which are universally acceptable and fastly embraced nowadays after the economic crisis.

Thanks and best regards,


B. Ahamed Ameen
from Dubai


www.dubaibuyer.blogspot.com

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

/கம்யூனிசம் என்கிற கோட்பாடு இனம், நிறம், நிலம், மொழி ஆகிய வேறுபாடுகளைக் களைந்து ஓர் சமுதாய அமைப்பை நிறுவிட உண்மையில் விரும்பியது. ஆனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்த கதையாக கம்யூனிசம் மனித இனத்தை மனித இனத்துக்குரிய இயல்புகளால் பிணைக்க இயலவில்லை. மாறாக, மனித இனத்தை வர்க்க பேதம் என்கிற கோட்பாட்டால் கூறு போட்டது. கம்யூனிசம் காலூன்ற வேண்டுமானால் இருப்பவரை இல்லாதார் வெறுக்க வேண்டுமென்ற தன்மை அவசியமானது. மனித இனத்தை, இருப்பவர், இல்லாதவர் என்ற இரண்டு பிளவுகளாகப் பிளந்து இல்லாதவரை ஏவி, இருப்பவர் மீது கோபமும் பொறாமையும் கொள்ளச்செய்து கம்யூனிசம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. மனிதர்களின் கீழான மிருக குணங்களை வளர்த்துவிட்டுத்தான் கம்யூனிச கோட்பாடு உயிர்வாழவேண்டி வந்தது. //

கண்கூடாக நாமே இதனை கண்டும் வருகிறோமே !

இலைச் சாப்பட்டில் இப்போது முழ்கியிருக்கிறது தமிழகத்தில்...

//இனி என்ன? இஸ்லாம்தான். வரும் வாரங்களில் இன்ஷா அல்லாஹ் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் மற்றும் இதர கோட்பாடுகளுடனான ஒப்பீடுகளை காண்போமாக.//

ஆமா ! அதுதானே தீர்வு ! வர இருக்கும் தொடர் அனைத்து சாயங்களை வெளுக்கச் செய்யட்டும் ! இன்ஷா அல்லாஹ்...!

Ebrahim Ansari said...

//சிவப்புத்துண்டு, கருப்பு சிவப்பிலோ கருப்பு சிவப்பு வெள்ளையிலோ சரணாகதியாகி வெகுகாலமாகிவிட்டது.

அதிலும் தற்போது ஒன்றுக்குப் பதிலாக ரெண்டு இலைச் சாப்பாட்டால் பஜனை காதை பிளக்கிறது. //

கவிஞர் தம்பி சபீர் அவர்களே! சிவப்புத்துண்டுகள் சில பச்சைப் போர்வையும் போர்த்த ஆரம்பித்துவிட்டன.

Ebrahim Ansari said...

Alaikkumussalam. wa rahmathullahi.

Dear brother Mr. Ahamed Ameen,

Thanks for your continued patronage. Insha Allah.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

கதிரறுக்க அரிவாள் கொண்டு வரச்சொன்னால் அது மனித கழுத்தையல்லவா அறுக்கிறது? என்றெண்ணி மக்களே இந்த இசங்களை நிசங்களில்லா ஒரு கற்பனைக்காவியமாக்கி அதை அப்படியே கவிழ்த்து கடையை மூடி விட்டனர் போலும்.

இ.அ. காக்காவின் கட்டுரை தன் பாண்டித்துவத்தில் தமிழக கதிரருவாளையே பொழந்து கட்டுகிறதே.....நல்லார்க்கு உங்க பாணி.......

சிகெப்பு துண்டுக்கு அப்ப,அப்ப பாண்டியன் ஊதா நீலம் போடுக்கொள்கிறார் பாவம்......

sabeer.abushahruk said...

//சிகெப்பு துண்டுக்கு அப்ப,அப்ப பாண்டியன் ஊதா நீலம் போடுக்கொள்கிறார் பாவம்......//

எம் எஸ் எம்,

அவரு நேரங்காலத்துக்குத்
தோதா போட்டுப்பாரு சரி. அதென்ன
"ஊதா"?

Ebrahim Ansari said...

விவசாயிகளுக்கு நெல் அறுக்க வேண்டிய கதிர் அரிவாள்
போயஸ் தோட்டத்தில் புல் அறுக்கிறது. - பேராசிரியர். தி .மு. அ.காதர்.

sabeer.abushahruk said...

ஈனா ஆனா காக்கா,

அது ஏனெனில்,

நெல் விளைக்க வக்கில்லை; மேடைதோறும் சொல் விதைக்கிறார்கள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பொருளாதார தொடரில் இது வண்ணம் கலந்த தொடர்.
போலிச்சாயங்களை வெளுத்துக் காட்டிட அடுத்தடுத்து ஆவலுடன் எதிர்நோக்கும் உங்கள் அன்பு ரசிகன் M.H.J.

KALAM SHAICK ABDUL KADER said...

\\இந்த மிருக குணங்களின் தன்மைகளான உணவு, உடை , உறைவிடம், ஆகியவற்றையே இந்தக் கொள்கைகளைக் கொண்ட நாடுகளும் சமுதாயங்களும் பெரிதாகக் கருதின. இவற்றிற்கெல்லாம் அப்பால் மனிதனுக்குள் இருக்கும் புனிதமான நற்பண்புகளையும், ஆன்மீக நெறிகளையும், சிறந்த குணாதிசயங்களையும் பார்த்திடவோ அங்கீகரிக்கவோ இயலவில்லை. கம்யூனிச வரலாறு என்பது சோற்றுக்கு போடும் கூப்பாடு அல்லாமல் வேறொன்றுமில்லை என்று ஆகிவிட்டிருந்தது. \\


’மதம் அபின் போன்ற மயக்கம் தருவது” என்று நாத்திக விதையை ஊன்றிய கம்யூனிசம், நீர், நிலம், காற்று ஆகியன இயற்கையின் கொடைகள் என்றே சொல்லி இறைவனின் உள்ளமையை உணராத- உணர முடியாத ஓர் அற்பமான (தாங்கள் குறிப்பிடுவது போல் மிருகத்தனத்தை வளர்க்கும்) தத்துவம்(?) என்பதை புகுமுக வகுப்பில் பொருளாதார அடிப்படைப் பாடம் பயின்ற வேளையில் உணரத் தொடங்கினேன்; அப்பொழுது விரிவுரையாளரிடம் குறுக்கிட்டு “பொருளாதாரக் கோட்பாடுகள் முற்றிலும் இறைநம்பிக்கையைத் தகர்க்கின்றனவாகவே உள.” என்று வாதிட்டுள்ளேன். ஆயினும், தங்களிடமிருந்து இப்பொழுது பெறுகின்ற அரிய- ஆழமான- கருத்துக்கள் அப்பொழுது எனக்குக் கிட்டியிருந்தால், என் கருத்துக்கு வலுவூட்டும் வண்ணம் அமைந்திருக்கும் என்பது திண்ணம். எனினும், தொடர்ந்து தங்களின் ஆக்கங்களைப் படிக்கும் எனக்குப் “புதிய பொருளாதாரம்’ என்னும் பாடம் பயில்வதாகவே எண்ணுகிறேன்; இன்ஷா அல்லாஹ் , தங்களின் இப்பாடங்களிலிருந்து பெறப்படும் விடயங்களை வைத்து இறைமறுப்பாளர்கள்- கம்யூனிசவாதிகள் எவரும் என்னிடம் வாதிட வந்தால் அவர்கட்குத் தெளிவை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. ஜஸாக்கல்லாஹ் கைரன்.

தங்களை அல்லாஹ் எதற்காகப் படைத்தானோ, அந்தப் பணியை நிறைவாய்ச் செய்து கொண்டிருக்கின்றீர்கள்; அல்லாஹ் வழங்கியுள்ள இப்பேராற்றலால் “இஸ்லாம் ஒன்றே இகத்தின் பிரச்சினைகட்குத் தீர்வு” என்பதை நிருபித்து, அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டும் பெரும்பணியாற்றும் தங்களின் ஆயுளை நீட்டிப்பானாக(ஆமீன்)

ZAKIR HUSSAIN said...

//விவசாயிகளுக்கு நெல் அறுக்க வேண்டிய கதிர் அரிவாள்
போயஸ் தோட்டத்தில் புல் அறுக்கிறது. - பேராசிரியர். தி .மு. அ.காதர்.//

கோபாலபுரத்தில் கூலி அதிகம் கிடைத்தால் அங்கு வேலியடைக்கவும் கிளம்பிவிடும்.

Iqbal M. Salih said...

மிகவும் எளிதாகவும் இனிமையாகவும் தெளிவாகவும் எழுதியிருக்கும் டாக்டர் காக்கா அவர்களுக்கு அல்லாஹ் நல்ல சரீரசுகத்தைக் கொடுப்பானாக!

+2 மாணவனாக இருக்கும்போது ஆர்வமுடன் படித்த இந்தியாவின் Traditional, ரஷ்யாவின் Authoritarian, அமெரிக்காவின் Market Economy ஆகியவற்றையெல்லாம் ஒரு வினாடியில் என் நினைவுக்குக் கொண்டிவந்து அசைபோட வைத்துவிட்டது தங்களின் விரிவான இந்தப் பொருளாதாரக் கட்டுரை!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும் காக்கா,

கொள்கையுடவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் கொள்ளைக்கார கொள்கைகூட்டத்தை பற்றிய அலசல் அருமை.

இன்னும் கட்சிகளை வளர்க்க உண்டியல் ஏந்திக்கொண்டிருக்கெண்டே கோபலபுரத்திற்கும், போயஸ் தோட்டத்திற்கும் ஓடி அலைந்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். கேரளத்திலும் மேற்கு வங்காலத்திலும் கொஞ்சம் சோசலிச கக்டைல் அரசியல் செய்தது, பிறகு மம்தாவிடமும், உம்மஞ்சாண்டியிடமும் பறிக்கொடுத்தது.வட கிழக்கில் தீவிரவாதத்தை தூண்டியதை தவிர வேறு எதையும் சாதிக்கவில்லை இந்த கம்யூனிசம்.

வலைத்தளங்களில் இணைய தீவிரவாதத்தை தூண்டி இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை விதைப்பதில் பசீஸ கும்பலுக்கு இணையாக பங்காற்றிவரும் இந்த லெனின், மர்க்ஸ் அடிவருடிகள் முக்கிய பங்குதாரர்கள் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

Ebrahim Ansari said...

தம்பி தாஜுதீன்.

அலைக்குமுஸ் ஸலாம். எங்கே இந்தப் பக்கம்?ஹஹஹஹஹா.

தி மு க வில் வெற்றி கொண்டான் என்று ஒரு பேச்சாளர் இப்போது இறந்து விட்டார். 1980 -ல் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டத்தில் பேசியது இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது .

" இந்த கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு ஒரு சிகப்புத்துண்டை போட்டுக்கொண்டு திறிகிரார்களே இவர்கள் யார் தெரியுமா ? தகரம் கண்டு பிடிக்கும் முன்பே உண்டியலைக் கண்டு பிடிச்சவணுக.

இந்த காங்கிரஸ்காரர்கள் என்றைக்கு தான் போடும் சட்டைக்கு அளவு கொடுத்து தச்சுப் போடுராங்களோ அன்றைக்குத்தான் உருப்படும்."

தம்பி ஜாகிர். சூப்பர். நேற்று தஞ்சையில் நடந்த பாராட்டுவிழாவில் தா. பா. உடைய ஜால்ரா ஒலி யே அதிகம் கேட்டது.

தம்பி அபூ இப்ராஹீம் வரப்போகும் தமிழ்நாடு பட்ஜெட் பற்றி முன் கூட்டிய அனுமான பட்ஜெட் கேட்டிருந்தீர்கள். நான் சொல்கிறேன் பன்னீர் செல்வம் தரப் போகும் பட்ஜெட் இதுதான்.

பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .பொன்மனச்செல்வி புரட்சித்தலைவி- தங்கத்தாரகை-எதிர்கால பாரதம்- பொன்னியின் செல்வி - இதய தெய்வம் அம்மா .இத்துடன் அம்மாவின் பாதம் ஒற்றி எனது பட்ஜெட் உரையை நிறைவு செய்து சமர்ப்பிக்கிறேன்.

பட்ஜெட் கூட்டத்தொடர் இனிதே முடிவுறும்.

Ebrahim Ansari said...

தம்பி இக்பால் அவர்களுக்கு ஜசக்கல்லாஹ். எல்லாம் சரி இந்த இந்த சுந்தரத் தமிழ் மட்டும் சுட்டுப் போட்டாலும் வரவில்லையே தம்பி. அன்புக்கு அடிமை என்று சொல்வார்கள். உங்களின் தமிழ் நடைக்கு நாங்கள் அடிமை.

அலாவுதீன்.S. said...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சோசலிசம், கம்யூனிசம் - மற்ற பொருளாதாரம் அனைத்தையும் தெளிவாக்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

இனி உலகை படைத்த வல்ல அல்லாஹ் வழங்கிய பொருளாதாரத்தைப் பற்றி விரிவாக அறிய காத்திருக்கிறோம்.

Ebrahim Ansari said...

அலைக்குமுஸ்ஸலாம். சகோதரர் அலாவுதீன் !

வரவிருக்கும் தொடரின் மற்ற அத்தியாயங்களின் தாங்கள் தந்துள்ள அருமருந்தின் துளிகளையும் தெளிக்க நேரிடும் . துஆச் செய்யுங்கள். தங்களின் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வேண்டுகிறேன்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//தம்பி தாஜுதீன்.

அலைக்குமுஸ் ஸலாம். எங்கே இந்தப் பக்கம்?ஹஹஹஹஹா. //

எப்போதும் நான் உங்க பக்கம் தானே காக்கா :) :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//தம்பி அபூ இப்ராஹீம் வரப்போகும் தமிழ்நாடு பட்ஜெட் பற்றி முன் கூட்டிய அனுமான பட்ஜெட் கேட்டிருந்தீர்கள்.//

காக்கா, அடுத்த பிரதமரை மிஸ் பன்னிட்டீங்க காக்கா... அம்மாவின் பிள்ளைகள் உங்களை ஒரு கண் வைச்சுட்டாங்கன்னு கதிரருவால் த.பா.சொல்லச் சொன்னார்...

KALAM SHAICK ABDUL KADER said...

பொருளாதார மேதை டாக்டர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்கட்கு, அஸ்ஸலாமு அலைக்கும். உண்மையில் இன்று- இப்பொழுது வாய்விட்டுச் சிரித்தேன்; நோய்விட்டுப் போகும் அளவுக்கு. ஆம். வெற்றிக் கொண்டானின் நகைச்சுவை மற்றும் பன்னீர் செல்வத்தின் பட்ஜெட் உரை இரண்டும் படித்துக் கொண்டே சிரித்துக் கொண்டேன்; அறை நண்பர்கள் கேட்டார்கள்.” என்ன படம் பார்த்து சிரிக்கின்றீர்கள்?| என்று. உண்மையில் திரைப்படத்தை விட அதிகத் தாக்கம் உள்ளது உங்களின் எழுத்து. இதுவே போல், அடிக்கடி நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்; வாய்விட்டுச் சிரிக்க வேண்டும்; நோய் விட்டுப் போகும் என்பது “மன அழுத்தம் “ காரணமாகச் சென்றமாதம் மருத்துவரிடம் பரிசோதனைக்காகச் சென்று பொழுது, மருத்துவரும் இந்த ஆலோசனையைத் தான் வழங்கினார். தங்களுடனும் , கவிவேந்த சபீர் அவர்களுடனும் சில மணித்துளிகள் உரையாடினால் போதும் மனம் இலேசாகி விடும் அளவுக்குச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள் நிரம்பக் கிட்டும்.

உண்மையில் தாங்கள் குறிப்பிட்டது போன்று, அன்புச் சகோதரர் இக்பால் பின் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் இன்பத்தமிழ் என்னையும் ஈர்த்து விட்டது!

sabeer.abushahruk said...

கவியன்பன்,

மெயின் ஆள வுட்டுட்டீங்க. மலேசியாக் காரனுக்கு ஒரு ஃபோனப் போடுங்க. மனசு லேசாகும் அளவுக்கு சிரிப்பு கியாரன்ட்டி, ஆனால், சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிடும் பரவால்லயா?

எல்லாம் இப்ப கொஞ்ச நாளாத்தான் லேசா மாறிப்போயிட்டான். படிக்கட்டு எழுதுனப்பிறகு மந்திரிச்சி உட்ட மாதிரி ரொம்ப் சீரியஸாயிட்டான். மதன் ஜோக்ஸ் மாதிரி இருந்தவன் மாருதி ஓவியம் மாதிரி சீரியஸாயிட்டான்.

இங்கே இட்டாந்து பட்டான் லைஃப் ஸ்டைலையும் பங்காளி பழக்க வழக்கங்களையும் காட்டி கொஞ்சம் மந்திரிச்சி விடலாம்னு இருக்கேன்.

Ebrahim Ansari said...

அன்புள்ள கவியன்பன் மற்றும் தம்பி கவிஞர் சபீர் அவர்களுக்கு,

சிரிப்பதுதான் உலகத்திலே கவலைக்கு மருந்து
சிரிக்காத நம் வாழவு சிறப்பது எப்போது?

நம்மில் பலர் நகைச்சுவை கலந்து எழுதுவது இயல்பானதாக இருக்கிறது. மண்ணின் குணமா அல்லது மட்டனின் குணமா? இங்கே முத்துப் பேட்டையில் கூட இப்படி சில நண்பர்கள் யோசிக்காமல் இயல்பாக பேசி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.

தம்பி சபீர்! படிக்கட்டுகளின் நாயகன் ஜாகிர் விஷயமாக ஏதாவது செய்யுங்கள். விரைவில் இட்டாருங்கள்.

Ebrahim Ansari said...

தம்பி அபூ இப்ராகிம்!

//கதிரருவால் த.பா.சொல்லச் சொன்னார்...// நல்லவேளை கதிரருவளால் கொல்லச் சொல்லவில்லையே.

அன்பின் தம்பி தாஜுதீன்.! நீங்கள் எப்போதும் என் பக்கம்தான். என்னமோ தெரியவில்லை உங்களை நான் மிகவும் மிஸ் பண்ணுவதாக ஒரு உள்மனதின் ஊஞ்சலாட்டம்.

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

//எம் எஸ் எம்,

அவரு நேரங்காலத்துக்குத்
தோதா போட்டுப்பாரு சரி. அதென்ன
"ஊதா"?//

புளூ க‌ல‌ருக்குத்தான் ந‌ம்மூரில் ஊதாண்டு சொல்வாஹ (காக்கெ முட்ட ஊதாண்டு சொல்வாஹ) காக்கா. சும்மா வார்த்தைக்கோர்வைக்காக இங்கு எழுதுனா நீங்க என்னாண்டாக்கா அதுல‌ கொஸ்டின் வேற‌ கேக்குறிய‌ளே???

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு