அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ் பெயரால்..
நேர்வழி பெற்றோர் அனைவர் மீதும் ஓரிறையின் சாந்தி என்றென்றும் உண்டாகட்டுமாக!
"கேட்பவன் கேனப்பயலாக இருந்தால் எருமை மாடு ஏரோபிலேன் ஓட்டும்" என சொல்வார்கள் என்பது வழக்கு மொழி. நம் நட்டின் உளவுத் துறை இந்தியக் குடிமக்களை அவ்வாறு நினைத்துக் கொன்டதோ என்ற எண்ணமே இந்த செய்தியை வாசிக்கும் போது ஏற்பட்டது. எத்தனை முறை உதை வாங்கினாலும் அத்தனை முறையும் பிறரை அடித்துத் துவைத்தது போன்று பாவனை செய்யும் நகைச் சுவை நடிகளை மிஞ்சிய நடிப்பு மன்னர்கள் நம் உளவுத் துறை அதிகாரிகள். குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லையே என்று சொன்னவனுக்காவது கீழே விழுந்ததை ஒப்புக்கொண்டான். ஆனால் நம் உளவுத் துறை குப்புற விழவே இல்லை என்று சொல்லும் மகா யோக்கியர்கள்(?).
ஒவ்வொரு முறையும் கொத்துக் கொத்தாய், குழந்தைகள், பெண்கள், முதியவர் என்று ஏற்றத் தாழ்வின்றி கருவின் குழந்தையையும் கொடூரமாய்க் கொன்ற கூட்டு மனசாட்சிகள் ஒற்றை உயிரில் குளிர்ந்துவிடுமா?
2013 கடந்த பிப்ரவரி மாதம் ஆந்திர மாநிலம் தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம். இதில் சுமார் 17 பேர் இறந்தும் பலர் படுகாயமும் அடைந்தனர். மனித உயிர்களை வேட்டையாடும் இது போன்ற ஈனச் செயல் வன்மையான கன்டனத்துக்குறியது. அதன் உண்மைக் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
ஆனால் ஒவ்வொரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பின்னும் எது வருகிறதோ இல்லையோ இமெயில் மட்டும் தவறாமல் வரும். எங்கிருந்து தான் தேடிப்பிடித்து கொன்டு வருகிறார்களோ புதுப்புது பெயர்களை!? படைத்தவனே மிக்க அறிந்தவன். (பெயர் வைக்கத்தான் உளவுத்துறை என்றால் அப்படி ஒரு துறை அவசியமே இல்லை)
எப்போதும் போல்
இப்போதும் வரலாம்
முன் பின் இணைப்போடு
முஜாஹிதின் அமைப்பு –
என்று கவிக் காக்கா மாதிரி கவிதை எழுதலாம் என்று நினைத்துக் கொன்டிருக்க, கட்டுரை எழுத வைத்து விட்டது இச்செய்தி.
அனைத்து குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னும் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் தீவிரவாத? அமைப்பு வழிய வந்து பொறுப்பேற்றுக் கொன்டது என்றும் அதில் பயிற்சி பெற்றவர்கள் என்று சில முஸ்லிம் இளஞர்களை கைது செய்து அவர்களுடைய வாழ்க்கையை நாசமாக்கியும் சாதனை? படைத்த உளவுத்துறை, காவல் துறை, ஊடகத்துறை என்று பல்வேறு பெயர்களில் இயங்கும் அனைத்தும் காவித்துறைகளே என்பதை தில்சுக் நகரில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திலும் நிறுபித்திருக்கிறது.
அழையா விருந்தாளியாய் வந்து முஜாஹிதின் அமைப்புகள் பொறுப்பேற்றுக் கொன்ட அனைத்திலும் சங்பரிவாரத்தின் பங்களிப்பு இருப்பது வெட்ட வெளிச்சமாக்கப்பட்ட பின்னும் ஈமெயில் வந்தால் மக்கள் காரித்துப்பிவிடுவார்கள் என்று ரூம் போட்டு யோசித்தார்கள் போலும்.
முதலிலே அத்வானி "ஹைதராபாத் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருக்கிறது, சில பத்தாண்டுகளாக நம்முடன் யுத்தம் நடத்தி வெற்றியடையவில்லை. என்வே அது போலி யுத்தத்தை நடத்தி வருகிறது. இந்தியாவில் பிரச்சனைகளை ஏற்படுத்த தொடர்ந்து பயங்கரவாதச் செயல்களை செய்து வருகிறது "என திருவாய் மலர்ந்தார்" http://www.inneram.com/news/india-news/pakistan-behind-hyderabad-blasts-advani-9194.html
இரண்டாவது ஆந்திர மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டிக்கு லஸ்கர் எ தொய்பா விடமிருந்து நடந்த குண்டு வெடுப்புக்கு பொறுப்பேற்றும் மேலும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பேகம் பஜார், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்புகள் தொடரும் என்றும் மிரட்டல் கடிதம் வந்ததாம் (இவர் லஸ்கர் எ தொய்பாவோடு தொடர்பி லிருப்பதால் இவருக்கு கடிதம் அனுப்பப்பட் டிருக்கலாம்). சோலியங் குடும்பி சும்மா ஆடாது! http://www.inneram.com/news/india-news/lashkar-threat-letter-claims-responsibility-9232.html
அதைத் தொடர்ந்து ஸ்லீபர் செல் எனப்படும் இரகசியமாக செயல்படும் தீவிரவாதிகள் 200 பேர் ஆந்திராவில் ஊடுருவி இருக்கிரார்கள். இவர்களை இந்தியன் முஜாஹிதீன் போன்ற உலக நாடுகளிலுள்ள 10 தீவிரவாத அமைப்புகள் வழி நடத்துகிறது என்று உளவுத்துறை அதிர்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது என்றும், இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காவிட்டாலும் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புதான் இதை செயல்படுத்தி இருக்க வேண்டும் என்று போலிஸ் விசாரனையில் தெரிய வந்துள்ளது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும் வறுமையில் வாடும் ஏழை இளைஞர்களைப் பாணத்தாசை காட்டி வேலை வாங்கித்தருவதாக துபாய் அழைத்துச் சென்று அங்கிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பி மூலைச் சலவை செய்து தீவிரவாத பயிற்சி கொடுத்து பின் அவர்கள் இந்தியா திரும்பி மக்களோடு மக்களாக இருந்து தலைமை சொல்லும் செயலை செயல்படுத்துவார்களாம். இத்தகைய பயிற்சிக்கு திருட்டுத்தனமாக குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை வழியாகவு பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்கிறார்களாம் (எல்லைப் பாதுகாப்புப் படைகளெல்லாம் என்ன செய்கிறது என்று யாரும் கேட்கக் கூடாது). மேலும் வங்க தேசத்திலும் இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறதாம். கேட்பதற்கே பயமாக இர்ந்தாலும் துப்பாக்கி திரைப்படத்தை திரைக் கதை என்பதால் பயப்படத் தேவையில்லை.
இதில் பெரிய ஆச்சரியத்துக்குறியது என்னவென்றால் குண்டு வெடிப்பு சிதறல்களில் இருந்த துணியில் உருது எழுத்து எழுதி இருந்ததாம். அது நார் நாராய் கிழிந்திருந்ததால் என்ன எழுதியிருக்கிறது என்ரு தெரியவில்லையாம். இதன் மூலம் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சதி இருப்பது உறுதியாகியுள்ளதாம் எத்தனை நகைப்புக்குறிய ஆய்வு என்பதை நாம் சொல்லித்தெறிய வேண்டியதில்லை. http://tamil.oneindia.in/news/2013/02/26/india-sleeper-cells-have-increased-hyderabad-say-police-170466.html
பாகிஸ்தான் தொடர்பு என பஜனை பாடுவதே முஸ்லிம்களைக் குறிவைக்கப் போடும் திட்டம் என்பதையே என்பதையே கடந்த கால நிகழ்வுகள் மெய்பித்திருக்கின்றன
வழக்கம்போல் சிலர் கைது செய்யப்பட்டு, இருக்கிறார்கள். உளவுத்துறையின் பரிந்துரையின் பெரில் சிறையிலிருக்கும் மதானியிடம் காவல் துறை விசாரனை நடத்தயிருக்கிறது. அனைத்து வகையான சித்திரவதைகளையும் அனுபவித்து சிறைக் கம்ம்பிகளுக்கிடையே வாழ்க்கை சீரழிந்த பின் அப்பாவிகள் அன விடுதலை செய்யப் படலாம், அல்லது கூட்டு மனசாட்சியைக் குளிர்விக்க காவு கொடுக்கப்படலாம் அப்சல் குருவைப் போல்!
...அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்'ஆன் 8:30)
அபு ஈஸா
11 Responses So Far:
..அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்'ஆன் 8:30)
யா அல்லாஹ், யார் யாரெல்லாம் இந்த உம்மத்தை அழிக்க நாடுகிறார்களோ, அவர்களுக்கும் இந்த பரிசுத்தமான தீனை விளங்க வைத்து, ஹிதாயத் என்ற நேரான வழியை நசீபாக்கி வைப்பாயாக!!!ஆமீன்.. உன்னிடத்தில் அவர்களுக்கு ஹிதாயத் இல்லை என்றால்,அவர்களை இப்பூமியில் இருந்து அப்புறப்படுத்தி, இப்பூமியை பரிசுத்தமாக்கி வைப்பாயாக. ஆமீன்,,,
சிறப்பான பதிவு . இன்றைய தேவைக்கான விழிப்புணர்வு. தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு இப்படி பல சித்தரிப்புகளை பார்ப்பன ஊடகங்கள் தீவிரமாக பரப்ப ஆரம்பிக்கும். நமக்கென ஒரு வலுவான எதிர்த்து ஆதாரங்களுடன் போராடும் ஒரு ஜனரஞ்சகமான ஊடக வலிமை தேவை. ஒரு தரப்பாரே இப்போது இதில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
அபு ஈஸா,
சினிமாவைப் பிரதான கலாச்சார அடையாளமாகக் கண்டு வரும் இந்தியச் சமூகத்திற்கு எந்தச் சம்பவத்தையும் திரித்துக் கதை வசனம் எழுதுவது சிரமமா என்ன?
அதனால்தான் எங்கு என்ன வெடித்தாலும் இஸ்லாமியன் வைத்ததாகச் சொல்லி வருகிறார்கள்.
கட்டுரையின் நிறைவில் சொல்லியிருப்பதுபோல் நிச்சயம் இவர்களுக்கு பதலடி காத்திருக்கிறது.
எல்லா முஸ்லீம் அமைப்புகளும் இதற்காக ஒரு அமைதிப்போராட்டம் நடத்தினால் [ இந்திய அளவில் ]
பிரச்சினைகள் ஃப்ளாஸ் நியூசாகி உலகம் முழுதும் தெரிய வரலாம்.
//எல்லா முஸ்லீம் அமைப்புகளும் இதற்காக ஒரு அமைதிப்போராட்டம் நடத்தினால் [ இந்திய அளவில் ] பிரச்சினைகள் ஃப்ளாஸ் நியூசாகி உலகம் முழுதும் தெரிய வரலாம். ///
காக்கா, அமைதி வழியில் 'அதி பயங்கரம்'னு நியூஸ் வரும் பரவாயில்லையா ?
இவர்கள் அமைதியாக போராடியதால் சந்தேகம் எழுந்து கைது ன்னு வருமே...!
துப்பு கெட்டவனுங்க துப்பு துலக்குவானுங்களேஎ !
நல்ல தொகுப்பு
சூழ்ச்சிகள், உண்மைகள் பற்றி உலகமே உணரும் தருவாய் இது.
இன்சா அல்லாஹ் நமது ஒற்றுமையைக் கொண்டு விரைவில் இது ஒழிந்து சாந்தியான காலம் வரும்.
---------------------------------------------------------------------------------------
ரபியுள் ஆகிர் 25
ஹிஜ்ரி1434
ஊடகங்கள் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதை நீதிபதி மார்கண்டேய கட்ஜு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ள கருத்தில், " சிறுபான்மையினர் தேசிய கமிஷன் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா தமக்கு எழுதிய கடிதத்தில், ஐதராபாத் வெடிகுண்டு தாக்குதலில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது ஊடகங்கள்தான்" என்று சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக திரித்துக் கூறுவதால் வேலைவாய்ப்புகள் பெருமளவில் மறுக்கப்பட்டு வருகிறது என்றும் சச்சார் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், இஸ்லாமியர்கள் மீதான தவறான அனுகுமுறையால் காவல்துறையினராலும் அப்பாவி இஸ்லாமியர்கள் துன்புறுத்தப் படுகின்றனர்.
எனவே ஊடகங்களுக்கு சமூக பொருப்பு உள்ளது. எனவே செய்தி வெளியிடும்போது உணமை தன்மையின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் மீது வெறுப்புணர்வு ஏற்படாதபடி செய்திகள் வெளியிட வேண்டும் என்று கட்ஜு ஊடகங்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
Read more about தீவிரவாதம் குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு நீதிபதி கட்ஜு எச்சரிக்கை! [9497] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com
எல்லா முஸ்லீம் அமைப்புகளும் இதற்காக ஒரு அமைதிப்போராட்டம் நடத்தினால் [ இந்திய அளவில் ]
பிரச்சினைகள் ஃப்ளாஸ் நியூசாகி உலகம் முழுதும் தெரிய வரலாம்.
...அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன். (அல்குர்'ஆன் 8:30)
அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும் காவி மயமே என்பதற்குச் சான்றுகள் பல உள. ஒரு முஸ்லிம் சகோதரர் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக விண்ணப்பித்து அதற்கான நிழற்படம் எடுக்கும் அவ்வலுவலகத்தில் அவர் அணிந்திருந்த தொப்பியைக் கழட்டினாற்றான் படம் எடுக்க முடியும் என்று வலியுறுத்தி இருக்கின்றார்கள் என்றால் காவிக் கறை இல்லாத இடமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பஞ்சாப் சிங் இடம் தலைப்பாகையைக் கழட்டச் சொன்னால் என்னாகும்? முஸ்லிம்கள் என்றால் எவ்வளவு தூரம் கேவலமாகப் பார்க்கின்றார்கள்; நெஞ்சைச் துளைக்கும் தோட்டாக்களாய் வசை மாரிப் பொழ்கின்றார்கள் அரசு ஊழியர்களாய் இருக்கும் காவி சிந்தனைவாதிகள் என்பதற்கு மற்றுமொரு சான்று. குடந்தையில் என் நண்பர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கச் சென்றார்; அவரிடம் உடனே, ஏய் துலு..........உங்களுக்கெல்லாம் அரபுநாடு இருக்குடா, நீங்கள் ஏன் இங்கு வந்து எங்களைத் தொல்லைக் கொடுக்கின்றீர்கள், பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டிற்குப் போங்கடா: என்றாராம் ஒர் அரசு ஊழியர். அந்த நண்பரின் பொறுமைக்கு இந்தியாவில் பொறியாளராக இருப்பதை விட அபுதபியில் “கேஸ்கோ”வில் உயர்பதவியில் பொறியாளாராகச் சகல வசதிகளுடனும் அல்லாஹ் அந்நண்பர்க்கு வாழ்க்கையைச் சீராக்கி வைத்து விட்டான். அல்ஹம்துலில்லாஹ். எனினும். அன்று நடந்த அந்த உரையாடலை இன்றும் என்னிடம் சொல்லிச் சொல்லி வேதனைப்படுவார். முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என்பதே அரசின் எல்லாத் துறைகளிலும், ஊடகங்களிலும் காவிக் கறைப் படிந்து விட்டது.
முகநூலில் நண்பர் கவின்மலர் என்பவர் அனுப்பிய செய்தி:
இன்று காலை சென்னையிலிருந்து கோவை செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் பயணித்துக்கொண்டிருந்தேன். சிறிது நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்திருந்தால், அடையாள அட்டையை எல்லோரும் காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது இல்லையா? டிக்கெட் பரிசோதகர் வந்தார். பெட்டியில் எல்லோரையும் டிக்கெட் கேட்டார். எனக்கு எதிரில் அமர்ந்திருந்தனர் இஸ்லாமியர் ஒருவரும் அவர் மனைவியும், எனக்கு அருகில் இன்னொரு இஸ்லாமிய தம்பதியர் இருந்தனர். அவர்க்ளின் உடையும் அணிந்திருந்த தொப்பியும் அவர்களை இஸ்லாமியர்களாக அடையாளம் கண்டுகொள்ள வைத்தது. டிக்கெட் பரிசோதகர் டிக்கெட்டுகளை பரிசோதித்தபின்னர், அவர்களிடம் மட்டும் அடையாள அட்டையைக்கேட்டார். அவர்கள் எடுத்துக்காட்டியவுடன் போய்விட்டார் டிக்கெட் பரிசோதகர். இஸ்லாமியர் அல்லாதவர்கள் அல்லது இந்துக்கள் என்று அவர் நம்பும் எவரிடமும் அடையாள அட்டையைக் கேட்கவில்லை அவர். அவர் தனது கடமையைத் தானே செய்தார்; இஸ்லாமியர்களிடம் அடையாள அட்டையைக் கேட்டதை குற்றமாகக் கூற முடியாது என்று யாரேனும் வாதிடலாம். அதுதானே நடைமுறை எனலாம் இந்துக்களிடம் அடையாள அட்டையை பரிசோதிக்காமல் பயணம் செய்ய அனுமதித்தார் என்று அவர்மீது குற்றம்சாட்டலாம்தானே? அவரை நிறுத்தி ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள் என்று கேட்கவேண்டும் என்று தோன்றியது. ஆனால் அந்த இரண்டு இஸ்லாமிய குடும்பங்களும் மற்றவர்களிடம் அவர் அடையாள அட்டை கேட்காததை கவனித்தார்களா என்று நிச்சயமாக எனக்குத் தெரியாதபோது, அவர்களுக்கு இவ்விஷயம் தெரியவந்து அவர்களை வேதனைப்படுத்தவேண்டுமா என்றெண்ணி விட்டுவிட்டேன். அந்த டிக்கெட் பரிசோதகரை கேட்காமல் விட்ட கேள்வி காலம்பூராவும் துரத்தும்
Post a Comment