Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 30 6

அதிரைநிருபர் பதிப்பகம் | March 15, 2013 | , ,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின் திருப்பெயரால். . .
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!.

உலக பற்றியின்மையின் சிறப்பு உலக சுகங்களை குறைத்துக் கொள்ள ஆர்வமூட்டல், ஏழ்மையின் சிறப்பு

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்.(அல்குர்ஆன்: 18:46)

விளையாட்டும், வீணும், கவர்ச்சியும், உங்களுக்கிடையே பெருமையடித்தலும், பொருட் செல்வத்தையும், மக்கட் செல்வத்தையும் அதிகமாக்கிக் கொள்வதும் ஆகியவையே இவ்வுலக வாழ்க்கை.'' என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (இவ்வுலகின் நிலை) மழையைப் போன்றது. அதன் (காரணமாக முளைத்த) பயிர்கள் (ஏக இறைவனை) மறுப்போருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பின்னர் அது காய்ந்து விடுகிறது. அது மஞ்சள் நிறமாக மாறுவதைக் காண்பீர். பின்னர் கூளமாக ஆகிறது. மறுமையில்  (தீயோருக்குக்) கடும் வேதனையும், (நல்லோருக்கு) அல்லாஹ்விடமிருந்து மன்னிப்பும், திருப்தியும் உண்டு. இவ்வுலக வாழ்வு ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை. (அல்குர்ஆன்:57:20)

''உஹத் மலை போன்ற அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும், மூன்று நாட்களில் என்னிடம் அது இல்லாமல் போவதே என்னை மகிழ்வுபடுத்தும். கடனுக்கு நான் ஒதுக்கி வைத்தவற்றைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 466)

''உங்களுக்கு கீழே உள்ளவர்களைப் பாருங்கள். உங்களுக்கு மேல் உள்ளவர்களை நீங்கள் பார்க்காதீர்கள். உங்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடையை நீங்கள் குறைவாக மதிக்காமல் இருக்க இது, மிக பொருத்தமாக இருக்கும்'' என்று கூறினார்கள்.    

புகாரியின் மற்றொரு அறிவிப்பில் கீழ்க்கண்டவாறு உள்ளது:
''சொத்திலும், உடலிலும் உங்களைவிட சிறப்பிக்கப்பட்டவரை உங்களில் ஒருவர் பார்த்தால், உடனே அவர் தம்மை விட கீழானவரைப் பார்க்கட்டும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 467)

''தீனார், திர்ஹம், பழங்கள், துணிமணிகள் ஆகியவற்றின் அடிமையாக இருப்பவன் நாசமாகிவிட்டான். அவன் கொடுக்கப்பட்டால் திருப்தியுறுகிறான். கொடுக்கப் படவில்லையானால் திருப்தியுற மாட்டான்'' என்று நபி(ஸல்)கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 468)

''திண்ணைத் தோழர்கள் எழுபது பேர்களைப் பார்த்தேன். அவர்களில் எவரும் தன்னிடம் மேலங்கி வைத்துக் கொண்டதில்லை. வேட்டியோ, போர்வையோதான் இருக்கும். அதை அவர்கள் தங்களின் கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். சிலருக்கு இரண்டு முட்டுக்கால் வரை அவை இருக்கும். சிலருக்கு கரண்டை வரை இருக்கும். தனது மறைவுப் பகுதி பிறரால் பார்க்கப்படுவதை வெறுத்து (அது விலகிவிடாமல் இருக்க) தன் கையால் அதை பிடித்துக் கொள்வார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 469)

''உலகம், இறை விசுவாசிகளுக்கு சிறைச்சாலையாகும். இறை மறுப்பாளர்களுக்கு சொர்க்கம் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 470)

''நபி(ஸல்) அவர்கள் என் தோள் பட்டையைப் பிடித்துக் கொண்டு,  ''ஒரு பயணியாகவோ அல்லது பாதையைக் கடந்து செல்பவராகவோ நீர் இந்த உலகில் இருந்து கொள்'' என்று கூறினார்கள். ''நீர் மாலை நேரத்தில் இருந்தால் காலை நேரத்தை எதிர் பார்க்காதே! நீ காலை நேரத்தில் இருந்தால் மாலை நேரத்தை எதிர் பார்க்காதே! உன் நோய் (நிலையை கருத்தில்) கொண்டு, உன் உடல் நிலையையும், நீ இறப்பதை (கருத்தில்) கொண்டு உன் உயிர் வாழும் காலத்தையும் பயன்படுத்திக் கொள்வீராக! என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுபவர்களாக இருந்தார்கள்.''   (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 471)

''உலகத்தின் பயனை மக்கள் பெற்றுக் கொண்டது குறித்து நினைவு கூர்ந்த உமர்(ரலி) அவர்கள், அன்றைய நாளில் பசி காரணமாக சாய்ந்த நிலையில் நபி(ஸல்) அவர்களைக் கண்டுள்ளேன். அவர்கள் தன் வயிற்றை நிரப்பிட மட்டமான பேரீத்தம் பழத்தைக் கூட பெற்றுக் கொண்டதில்லை'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: நுஹ்மான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 473)

''நீங்கள் சொத்துக்களை (கவனத்தில்) எடுத்துக் கொள்ளாதீர்கள். இதன் மூலம் நீங்கள் இவ்வுலகில் பேராசைக்காரர்களாகி விடுவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)
அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 479)

''ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு சோதனை உண்டு. என் சமுதாயத்திற்குச் சோதனை, செல்வம் (பெருகுவது) தான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். (அறிவிப்பவர்: கஹ்பு இப்னு இயாழ் (ரலி) அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ)   (ரியாளுஸ்ஸாலிஹீன்: 481)

''அல்ஹாகுமுத்த காஃதுரு... எனத்துவங்கும் அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருக்கும் போது, அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் ஆதமின் மகன், ''இது என்னுடையது. இது என்னுடையது என்கிறான் (ஆனால்) ஆதமின் மகனே! நீ சாப்பிட்டு அழித்தது, அல்லது நீ உடுத்திக் கிழித்தது. அல்லது நீ தர்மம் செய்து முடித்து விட்டதைத் தவிர வேறு எதுவும் உனக்கு என உள்ளதா? என்று கேட்டார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு ஷிக்கீர் (ரலி) (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 483)

''இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை நேசிக்கிறேன்என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். 'நீ கூறுவதை நன்கு சிந்தித்துக் கூறு' என்று நபி (ஸல்) கூறினார்கள். 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களை நான் நேசிக்கிறேன்' என மூன்று முறை கூறினார். 'என்னை நீ விரும்புவதாக இருந்தால், வறுமையை சந்திக்க நீ தயாராகிக் கொள்வாயாக! என்னை விரும்புகின்றவருக்கு, வெள்ள நீர் தன் இறுதி எல்லையை தொட ஓடுவது போல் வறுமையும் மிக தீவிரமாக வரும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு முஹஃப்பல் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 484)

''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி)  அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 486)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)

'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''
  
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
அலாவுதீன் S.

6 Responses So Far:

Adirai pasanga😎 said...

வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ் மதுல்லாஹி வ பரகாதுஹு

சிறப்பான தொகுப்பு - ஜஜாகல்லஹு கைரா-

உத்தமத்தூதரும் அவர்தம் உற்ற தோழர்களும் சித்தம் ஏற்று நன்றாய் பேணினர் அவர் போதனையை. அதன் பயனால் உலகம் வீழ்ந்தது அவர்கள் காலடியில்.
ஆனால் இன்றோ உம்மத்தும் உலக மக்களும் அதனை பேண மறந்து சோதனையில் சிக்கி வீழ்ந்து கிடக்கிறார்கள் உலத்தின் காலடியில்

யா அல்லாஹ் அனைவருக்கும் காட்டுவாயாக நேர்வழியை!

Unknown said...

பதிப்புக்கு நன்றி
உலகத்தின் சுகங்களுக்கு ஆட்பட்டு நிம்மதியற்ற வாழ்க்கைக்கு இஸ்லாமும் நபி மொழியும் மட்டுமே அருமருந்து.அல்லாஹ் வழங்கிய திருமறையின் படியும் பெருமானார் நபி(ஸல்) வழியும் நடந்தால் மட்டுமே நிம்மதியுடனும் ஈருலகிலும் வெற்றி கிடைக்கும்.இயந்திர வாழ்வில் இல்லாமை என்பது மட்டுமே இருக்கும்.மனிதனுக்காக இறைவனால் அருளப்பட்ட திருகுர்ஆன் மட்டுமே நிம்மதியற்ற மக்களுக்கு அருமருந்து
---------------------
இம்ரான்.M.யூஸுப்

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும் . அன்பின் சகோதரர் அலாவுதீன் அவர்களே !

நான் எழுதிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் தொடரில் நான் இதை மேற்கோளாக எடுத்து எழுதுவேன் இன்ஷா அல்லாஹ்.

//''நபி(ஸல்) அவர்கள் ஓர் ஓலைப்பாயின் மீது படுத்து உறங்கினார்கள். அவர்களின் விலாப்புறத்தில் அதன் தடயம் ஏற்பட்டது. 'இறைத்தூதர் அவர்களே! உங்களுக்காக நாங்கள் ஒரு மெத்தையை ஏற்படுத்தித் தரலாமா?' என்று கேட்டோம். ''எனக்கும் இந்த உலகத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு பயணி ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, பின்பு ஓய்வெடுத்து, அதை விட்டும் செல்வான் அல்லவா! அது போன்றே தவிர நான் இவ்வுலகில் இல்லை'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 486)//

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா...

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

ஜஸாக்கல்லாஹ் ஹைர் காக்கா

KALAM SHAICK ABDUL KADER said...

//நான் எழுதிக் கொண்டிருக்கும் இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் தொடரில் நான் இதை மேற்கோளாக எடுத்து எழுதுவேன் இன்ஷா அல்லாஹ். \\

என் மனத்தினில் ஓடிய அதே எண்ணம் இங்குப் பதியப்பட்டிருப்பது கண்டு வியந்தேன். ஆம், முனைவர் இப்றாஹிம் அன்சாரி காக்கா அவர்களின் “இஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்” என்னும் தொடரில், அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களின் தொடரான “அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து” என்னும் ஆக்கத்திற்கும் தொடர்பு உண்டு என்று முனைவரின் ஆக்கத்தின் பின்னூட்டத்தில் இடுகையிட எண்ணினேன். என் எண்ணத்தை ஆசிரியரே ஒப்புக் கொண்ட விதமாக அமைவது கண்டு வியந்தேன். ஆம். எங்கு நோக்கினும், அது பொருளாதாரம், அரசியல், சமூகம், குடும்பம் அல்லது தனிநபர்ப் பிரச்சினைகள் யாவற்றிலும் தீர்வு என்பது படைத்தவனின் வழிகாட்டுதலில் (அல்-குர் ஆன்); பண்பின் சிகரம் பெருமானார் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையில் (அல்-ஹதீஸ்) மட்டுமே காணக் கிடைக்கின்றன. அண்மையில் உலகம் அறியத் தொடங்கி விட்டதைப் பெருகி வரும் பிரச்சினைகளே சான்று பகிர்கின்றன.

அன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்கட்கு இப்பணிக்காக அல்லாஹ் சிறப்பான நற்கூலி வழங்குவானாக(ஆமீன்)

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு