Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நபிமணியும் நகைச்சுவையும் - முக்கிய அறிவிப்பு ! 14

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2013 | , , ,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அளவிலா அருளும் நிகரிலா அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் இறுதித் தூதர் ஈருலக வெற்றிக்கு இனிப்பான மார்க்கம் காட்டிய நம் உரியிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த, நெகிழ்ந்த, மகிழ்ந்த, உணர்த்திய அற்புதமான நிகழ்வுகளை இலகு தமிழில் இறையச்சம் நிரம்பிய சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களால் எழுதப்படும் தொடர் பற்றிய ஒரு முக்கிய அறிவிப்பு !

சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அர்களின் வழக்கமான தொடர் பயணத்தினூடே ஒரு முறை துபாய் வழிச் செல்லுகையில் நட்புகளை சந்திக்க வாய்த்தது. 

அவ்வாறான சந்தர்ப்பத்தில் கண்மணி நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை முறையை அமெரிக்க மூடன் ஒருவனால் திரைப்படமாக எடுத்து வெளியாகி உலகமே கொந்தளித்துக் கொண்டிருந்த தருணத்தில் அதற்கான எதிர்ப்பலைகளை எவ்வாறு நம்மக்கள் காட்டிவருகிறார்கள், ரஸுல் (ஸல்) அவர்களின் நற்பண்புகளோடு அவர்களின் நகச்சுவையுணர்வை (sense of humor) தனியாக யாரும் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை அதைப் பற்றி ஏன் யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள் என்று சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் கேட்டதுதான் தாமதம். அதனை நீங்களே ஏன் செய்யக் கூடாது என்று அவர்களின் பால்யகால நண்பரான அதிரைநிருபரின் ஆஸ்தான கவிஞர் சகோதரர் சபீர் அஹ்மத் அபூஷாரூக் அவர்கள் கேட்க அவர்களோடு அந்த சந்திப்பில் உடனிருந்த அதிரைநிருபரின் நெறியாளர் சகோதரர் அபூஇப்ராஹீம் அவர்களும் அதனையே வழிமொழிய, அங்கே ஆரம்பித்தது அழகு தமிழில் அற்புதங்கள் நிறைந்த அல்லாஹ்வின் தூதர் அவர்களின் நகைச்சுவையுணர்வு தொடருக்கான ஆரம்பம்.

அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்கள் மின்னஞ்சல் கலந்துரையாடலுக்குப் பின்னர் 2012 செப்டம்பர் மாதம் 13ம் தேதி முதல் அத்தியாயம் தழிழால் தரம் உயர்த்தி தரணியிலிருக்கும் தமிழ்கூறும் மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் அதிரைநிருபரில் வெளியானது. அதுதான் "யா அத்தஹாக்!(சிரிப்பழகரே!)" http://adirainirubar.blogspot.ae/2012/09/blog-post_13.html என்ற முதல் பதிவு !

மாஷா அல்லாஹ் ! பால் பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் மனதை கொள்ளை கொண்ட எளிய தமிழ் நடையில் எட்டுதிசைக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது. சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்களின் தமிழ் மொழியாடல் மிகச்சிறப்பாக இருக்க அவர்கள் எடுத்துக் கொண்ட கருவின் கருணை அவர்களை மிகச் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த எழுத்தாளராக அடையாளம் காட்ட வைத்திருக்கிறது இந்த தொடர் அல்ஹம்துலில்லாஹ் !

கடந்த வியாழன் வெளியான தொடரின் முதல் பத்தியே பறைசாற்றும் ! நேர்வழி பெற்ற மக்களின் மார்க்கம் நீதியுடன் ஆட்சி செய்யும் என்பதை.

துவக்கம் என்று எதுவானாலும் அதற்கு நிறைவு என்று இருக்கத்தான் செய்யும் அதுதான் மரபு, அவ்வகையில் இந்த தொடருக்கும் நிறைவு ஒன்று இருக்கிறது. அடுத்த பதிவுடன் நிறைவுக்கு வருகிறது இன்ஷா அல்லாஹ் !

அதிரையைச் சார்ந்த சிறந்த எழுத்தாளர்களில் ஒருவராக மிளிரும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் அவர்கள் தொடர்ந்து மற்றுமொரு தலைப்பின் கீழ் அதிரைநிருபரில் அடுத்த பதிவுக்கு தயாராகுவார்கள் இன்ஷா அல்லாஹ்!

மக்கள் மனதை வெற்றி கண்ட இந்த தொடரின் நிறைவுக்கு பின்னர் விரைவில் புத்தகமாக வெளிவரும் இன்ஷா அல்லாஹ் !

ஏற்கனவே அதிரைநிருபர் பதிப்பகம் வெளியிட்ட முதல் நூல் என்ற பெருமையை சகோதரர் இபுராஹீம் அன்சாரி அவர்களால் எழுதிய "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" என்ற வெற்றித் தொடர் பெற்றிருக்கிறது (சுட்டியை தட்டிப் பார்க்க : இங்கே தட்டவும்). நூல் வெறிகரமாக கடந்த டிசம்பர் 9ம் தேதி 2012 அன்று வெளியிட்டு விற்பனையில் இருக்கிறது.

அதிரைநிருபரில் வெற்றிகரமாக வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர்களான...

சகோதரர் அதிரை அஹமது அவர்கள் எழுதிய- "கவிதை ஓர் இஸ்லாமியப் பாரவை"

சகோதரர் S.அலாவுதீன் அவர்கள் எழுதிய - "கடன் வாங்கலாம் வாங்க"

சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் எழுதிய - "படிக்கட்டுகள்"

வெற்றிகரமாக நிறைவுக்கு வர இருக்கும் சகோதரர் இக்பால் M.ஸாலிஹ் எழுதிய "நபிமணியும் நகைச்சுவையும்"

விரைவில் புத்தக வடிவம் பெற இருக்கிறது இன்ஷா அல்லாஹ்...

இன்னும் சொல்லத்தான் விருப்பம் இருந்தாலும் அடுத்தடுத்த புதுமையான மாற்றங்களால் இன்னும் உங்கள் மனதை வெல்வோம் என்று மட்டும் சொல்வோம் இப்போதைக்கு !

அதிரைநிருபர் பதிப்பகம்

14 Responses So Far:

Ebrahim Ansari said...

அஸ்ஸலாமு அலைக்கும்.


மகிழ்ச்சி தரும் செய்திகள். அதிரை நிருபர் பதிப்பகத்தின் முதல் நூலாகிய நான் எழுதிய மனு நீதி மனித குலத்துக்கு நீதியா ? என்ற நூல் ஏற்கனவே வெற்றிகரமாக வெளியிடப்பட்டது என்பதையும் பணிவுடன் அனைவருக்கும் நினைவூட்டிக் கொள்கிறேன்.

Ahmed Ali said...

சகோதரர் இக்பால் எம்.சாலிஹ் அவர்களுக்கு,ஜஸாகல்லாஹு கைர். தங்களுடைய பல பணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து அதிரை நிருபரில் வரைந்ததைப் போன்று,மற்றும் ஒரு தொடர் மழை பொழிய அல்லாஹ் தங்களுக்கு துணை செய்வானாகவும்,ஆமீன்!!...

Ebrahim Ansari said...

அன்புத் தம்பி இக்பால்,

நபிமணியும் நகைச்சுவையும் தொடர் வலையுலகத்தை வண்ணத் தமிழால் அலங்கரித்தது. இத்தொடர் நிறைவுரப் போவது ஒருவகையில் வருத்தமானாலும் தொடர்ந்து வேறொரு தொடர் உங்களிடமிருந்து வரவிருக்கிறது என்பதை அறியும்போது மிக்க மகிழ்ச்சி. அனைத்துக்கும் து ஆச் செய்கிறோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைநிருபர் பதிப்பகம் உருவெடுக்கவும் அதன் முதல் பதிப்பாக எங்கள் மூத்த சகோதரர் இப்ராஹிம் அன்சாரி (காக்கா) அவர்களால் எழுதி அதிரைநிருபரில் வெளிவந்து ஏராளமான வாசர்களின் பேரதரவைப் பெற்று நிரம்ப விமர்சனத்திற்கும், எடுத்தாய்வுக்கும் உறுதுணையாக இருந்த "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" தொடர் புத்தகமாக வெளிவந்தது.

முதல் பதிப்பான "மனுநீதி மனிதகுலத்துக்கு நீதியா?" கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் ஏழுக்கும் மேற்பட்ட ஸ்டால்களில் விற்பனைக்கும் வைக்கப்பட்டது ! என்ற கூடுதல் தகவலையும் இங்கே பதிகிறேன்.

KALAM SHAICK ABDUL KADER said...

மதிப்பிற்குரிய - “இளந்தமிழ் மொழியன்” இக்பால் பின் முஹம்மத் ஸால்ஹ் அவர்களின் இவ்வாக்கத் தொடர் நிறைவுப் பகுதி பற்றிய முன்னறிவுப்புச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்; ஆயினும், இன்னும் அடுத்தடுத்த ஆக்கங்களினூடே அவர்களின் வருகையும் , அழகுத் தமிழ் நடையும் காண்போம் என்ற கூடுதல் அறிவிப்பால் உள்ளம் அமைதி அடைந்தவனாய் - அவர்களின் அடுத்தப் பதிவுக்கு ஏங்கியவனாய் உள்ளேன்.

Adirai pasanga😎 said...

அஸ்ஸலாமு அலைக்கும்
நபிமணியும் நகைச்சுவையும் தொடர் நமக்கெல்லாம் உள்ளத்தில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தது. இது புத்தக வடிவில் வந்து அனைவரின் வாழ்விலும் நல்ல ஒரு திருப்பம் வர அல்லாஹ் அருள்புரிவானாகவும்.

Unknown said...

மகிழ்ச்சியான செய்தி. நான் ஆவாலுடன் எதிர்ப்பார்த்த அழகிய செய்தி.எனது அன்பிற்குரிய சிறிய தந்தை“இளந்தமிழ் மொழியன்" என்று அன்புடன் அழைக்க பெறும் இக்பால் M.ஸாலிஹ் அவர்களின் அருகில் பெற்ற அறிவைவிட அதிரை நிருபரின் மூலம் பெற்றதே அதிகம் என்பேன்.எளிய நடையில் அழகிய தமிழின் வார்த்தை வர்னைகளில் "நபிமணியும் நகைசுவையும்" படித்ததை நூலுருவில் படிக்க இருக்கும் என்போன்றவர்களுக்கு அழகிய பொக்கிஷமாய் இருக்கும்.கவிஞர்கள்,அறிஞர் பெருமக்கள் ஆகியோர்களின் எழுத்து மூலமாக சந்திக்க வைத்து எங்களின் சிந்தனையை கூர்தீட்டிய அதிரை நிருபர் பங்களிப்பாளர்களுக்கு நன்றி.
---------------------
இம்ரான்.M.யூஸுப்

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

உள மகிழ்வும் மன நெகிழ்வும் நிறைந்த இத்தொடர் தந்த இளந்ததமிழ் மொழியனார் அவர்களின் தொகுப்பு தமிழுக்கும் நிச்சயம் புகழ் சேர்க்கும். இன்சா அல்லாஹ்! இதுவும் புத்தக வடிவிலும் உருவாகி வெற்றியடைய துஆ! அடுத்தொரு தொடர் இங்கு உங்களால் தொடர அவா!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,

அற்புதமான தொடர் எங்களை ஒவ்வொரு வியாழன் அன்று புத்துயிரூட்டிக் கொண்டிருந்தது, அடுத்து வரும் வியாழனோடு அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதை எண்ணி மனம் மகிழ்ந்தாலும், இதேபோல் இன்னொன்றும் தொடர வேண்டும் என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

சிறப்பான பணியை மிகவும் நிதானத்துடனும், அழகு தமிழில் எங்களுக்கு நிறைய விஷயங்களை எடுத்துக்காட்டிய உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் அல்லாஹ்விடம் நற்கூலி நிலைத்திருக்கும் இன்ஷா அல்லாஹ்!

அதற்காக நாங்களும் துஆச் செய்கிறோம்.

Yasir said...

இந்த அறிவிப்பு மனத்திற்கு சிறிது சங்கடத்தைத் தந்தாலும், ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் முடிவு நிச்சயம் இருக்கும் என்று உணர்ந்தவனாக எங்கள் இனிய இளந்ததமிழ் மொழியனார் இக்பால் காக்காவின் மற்றொரு பதிவிற்க்காக காத்திருப்போம், இந்நூலும் மற்ற நூல்களும் புத்தகவடிவில் வெளிவந்து விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா வல்ல அல்லாஹ்விடம் துவாச்செய்வோம்

இக்பால் காக்காவிற்கு அல்லாஹ் நீண்ட ஆயுளையும்,உடல் நலத்தையும் கொடுத்து அடுத்த கட்டுரைகள் மூலம் எங்கள் அறிவுப்பசியை தமிழ் தேன் தடவிக்கொடுத்து ஆற்ற துவாச் செய்கின்றேன்

அலாவுதீன்.S. said...

அழகிய தொடரை – அழகிய தமிழில் - அழகான முறையில், எளிமையான நடையில் தொடர்ந்து வழங்கிய சகோ. இக்பாலுக்கு வாழ்த்துக்கள்!

Iqbal M. Salih said...

அஸ்ஸலாமு அலைக்கும்

கருத்துத் தெரிவித்த சகோதரர்கள் அனைவருக்கும்
நன்றிகள்!

அதிரை தென்றல் (Irfan Cmp) said...

நபிமணியும் நகைச்சுவையும் தொடர் மட்டுமல்லாத பதிவுகளை தரவிருக்கும் / தந்துக்கொண்டிருக்கும் சகோ. இக்பால் அவரகளுக்கு வாழ்த்துக்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு