Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

நடுப்பக்கத்தில் நட்சத்திரம் (புகைப்படமல்ல) ! 16

அதிரைநிருபர் பதிப்பகம் | March 25, 2013 | , ,


கிண‌றுக‌ளில் இருக்கும் த‌ண்ணீர் இன்ப‌மாக‌ இருக்கும்; வீட்டு தேவைக‌ளுக்கும், குளிய‌லுக்கு உத‌வ‌க்கூடிய‌ வ‌கையில் இருந்த‌வை இன்றைக்கு இப்ப‌டித்தான் இருந்த‌து கிண‌று என்று வ‌ரைந்து காட்ட‌ வேண்டிய‌ சூழ‌ல்; சாதார‌ண‌மாக‌ ப‌த்து அடி ஆழ‌த்திற்கு மேல்தான் இருக்கும்; முன்பெல்லாம் ம‌ழைக் கால‌த்தில் குள‌ம், கிண‌று எல்லாம் நிறைந்து போதும் போதும் என்ற‌ள‌வுக்கு ம‌ழை கொட்டித் தீர்த்த‌து; ம‌ழை பெய்த‌ அந்த‌ காலை ம‌ண்ணெல்லாம் ஒருவித‌ ஈர‌ப்ப‌த‌த்தோடு ம‌ண்வாச‌மும் ம‌ண‌க்க‌ ம‌ன‌தினுள் ஒரு குளுமை ஆட்டோமேட்டிக்காக‌ குடி கொள்ளும்.

பால் என்ற‌ப‌டி சைக்கிளில் பால்கேனை க‌ம்பியால் த‌ட்டி ஒலியெழுப்பும் பால்கார‌ர்; ரெண்டு உள்ள‌ங்கைக‌ளையும் தேய்த்த‌ப‌டி வ‌ரும் அடுத்த‌ வீட்டுக்கார‌ர்; ச‌ட்டையை அக்குளில் வைத்து க‌ன‌மான‌ ப‌னிய‌னை போட்டு த‌லையில் துண்டை க‌ட்டிய‌ப‌டி வ‌ரும் கொத்த‌னார் என‌ அன்றைய‌ பொழுதுக‌ளில் ப‌ல‌வ‌ற்றை காண‌லாம் சொல்ல‌லாம்; ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌ காலையில் கிண‌று நிர‌ம்பியிருக்கிற‌தா என்ற‌ ஆவ‌ல் ஏற்ப‌டும்; போய் பார்த்தால் கிண‌ற்றின் க‌ழுத்து வ‌ரை த‌ண்ணீர் ஏறி கிண‌ற்றின் த‌ண்ணீரில் முருங்கைக்காய் இலை மித‌ப்ப‌தையும், நீண்ட‌ கால்க‌ளையுடைய‌ த‌ண்ணீரில் ஓடும் பூச்சி ஓடுவ‌தையும் பார்க்க‌லாம் [அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை]; த‌ண்ணீர் கை எட்டும் தூர‌த்தில் இருப்ப‌தால் க‌யிற்றின் துணையின்றி நேர‌டியாக‌வே த‌ண்ணீர் அள்ளும் செள‌க‌ரிய‌ம் இருந்த‌து;

ஜில் ஜில்லென்று அதிக‌ குளிரில் இருக்கும் அந்த‌ த‌ண்ணீர்; ப‌ட‌க்கென்று குவ‌ளையில் த‌ண்ணீரை எடுத்து உட‌ம்பில் ஊற்ற‌ முடியாத‌ அள‌வுக்கு த‌ண்ணீர் குளிர்ந்து இருக்கும்; அத‌னால் ஒரு குவ‌ளை த‌ண்ணீர் முத‌லில் ஒரு கைக்கு ஊற்றிவிட்டு அப்புற‌ம் ம‌றுகைக்கு ஊற்றி மெதுவாக‌ த‌லைக்கு கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி குளிச்சு முடிய‌ற‌துக்குள் ஸ்கூலில் இன்ட‌ர்வெல் பில் அடித்துவிடுவார்க‌ள்; அதே போல் இர‌வினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருணமாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை; இனிமே அடாப் ஃபோட்டோஷாப்பில் பிர‌மாத‌மாக‌ பார்க்க‌லாம்; 

--------------------------------------------------------------------

ரப்பர் மிட்டாய் என்பது என் சிறுவயதில் படுபிரபலம்; ஒரு நீண்ட தடித்த கம்பு அதில் பாதி கம்புலேர்ந்து மலைப்பாம்பு உடலைபோல் வளைந்து ஒட்டப்பட்டு வைத்திருக்கும் இனிப்பு சொர்க்கம்; ரோஸ்,பச்சை,வெள்ளை என கலர்கள் பின்னி பிசைந்திருக்கும் அந்த ரப்பர் மிட்டாயில் வாட்ச் செய்து தருவார்; அதை என் கைகளில் ஒட்டிவிடுவார்; அதை கையில் ஒட்டியதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம்; டுர் டுர் டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு ரெண்டு கையையும் பைக் ஓட்டுவது மாதிரி முறுக்கிக்கிட்டு அரைக்கால் டவுசரோடு ஓடியது இன்னிக்கு நினைச்சாலும் சிரிப்பா வருது; கையில் ஒட்டிய வாட்சை சாப்பிடாமல் வைத்திருந்து சாயங்காலம் சாப்பிட்டு இருக்கிறேன்; ரப்பர் மிட்டாய்க்காரர் தெருவிற்குள் வந்தால் ஒரே குதூகலம்தான்.

அதேபோல் காசு மிட்டாயும் பிரபலம்; அதாவது ரோஸ் கலர் மிட்டாயை சிறிய அதற்கேற்ப பிளாஸ்டிக்கில் சுருட்டி வைத்திருப்பார்கள்; அஞ்சு பைசா அல்லது பத்து பைசா விலை; அந்த மிட்டாயை சப்பி சப்பி காசு இருக்கிறதா இல்லையான்னு பார்த்தே ஓய்ந்துடுவோம்; ரொம்ப எக்ஸைட்டிங்கான மூவ்மெண்ட் அது; காசு தட்டுப்பட்டால் ரவுசு தாங்காது; ‘ஹேய் எனக்கு வந்துருச்சுல்ல வந்துருச்சுல்ல’ என யாருக்கு காசு வருதோ அவன் கொண்டாடுவான்;அழகான அருமையான நினைவுகள் அவை; மாங்காய் கீத்து கீத்தா சீவி அரிசி பொடியோடு தொட்டு சாப்பிடுறது 'வெளி தீனிகளில் ஃபர்ஸ்ட் ஆக இருந்தது சின்ன வயசில்; அதற்கு அடுத்த வெளி தீனிகளில் கல்கோனாதான் அதிகம்; மறக்க முடியாதது; கூகிளான் உதவியோடு இந்த படத்தை பார்க்கும் போது  சுஜாதா சொன்னதுதான் நினைவுக்கு வருது;

'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'


--------------------------------------------------------------------
அகலப் பாதையாக மாற்றும் பணி தொடங்கியதால் நம்ம ஊர் ரயில்வே ஸ்டேஷன் தற்போது செயல் இழந்து விட்டது; உட்காருவதற்க்காக போடப்பட்டிருந்த க்ரானைட் கற்கள் பெஞ்சுகளையும் பெயர்த்து எடுத்துட்டு போய்விட்டார்கள்; அலுவலகமும் பூட்டு; கிட்டத்தட்ட பொலிவை இழந்து விட்டதென்றாலும் அடிக்கிற கடல்காற்றும் இயற்கை ரம்மியமான சூழலும் காப்பாற்றிவிடுகிறது; 2015ல் திரும்ப ஆக்ட்டிவ் ஆகும் என்கிறார்கள் சந்தோஷம்; அகலப்பாதையில் ஓடும் ரயில்களில் ஜன்னலோர கம்பிகளில் எட்டிப்பார்க்கும் சிறுவர்களை காண ஆவலோடு வெயிட்டிங்;
--------------------------------------------------------------------

ப‌க‌ல் நேர‌ம் இர‌ண்ட‌ரை ம‌ணி இருக்கும்..ஒரு தேவைக்காக‌ ப‌ட்டுக்கோடை போக‌ வேண்டியிருந்த‌து. பைக் ப‌ஞ்ச‌ரான‌தால் பேருந்தில் போக‌லாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் என‌ப்ப‌டும் பேருந்தில் உட்கார்ந்தேன். டிரைவ‌ருக்கு பின் த‌ள்ளி நாலு சீட்டுக்கு ஒரு வ‌ல‌துபுற‌த்தில் இட‌ம் கிடைத்த‌து. டிரைவ‌ருக்கு மேலே " அப்பா ப்ளிஸ் வேக‌மாக‌ போகாதீங்க‌ " என்ற‌ ஸ்டிக்க‌ர் வாச‌க‌ம் ஒட்டியிருந்த‌து ஸ்பெஷ‌ல். அதை அவ‌ர் க‌வ‌னிக்கிறாரோ தெரியாது ம‌ற்ற‌ எல்லோரும் க‌வ‌னிக்கிறார்க‌ள். ப‌க‌ல் சாப்பாட்டுக்கு பிற‌கான‌ நேர‌ம் என்ப‌தால் எல்லோரும் தூங்க‌ப் போகும் ஸ்டெஜிலேயே இருந்த‌ ச‌ம‌ய‌த்தில் க‌ல்யாண‌ வீட்டு ஸ்பீக்க‌ரில் அள‌விற்கு ஒரு ச‌த்த‌ம் எல்லோரையும் 'த‌ட்டி' எழுப்பிய‌து. 

க‌டைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த‌வ‌ரின் சைனா மாட‌ல் ஃபோனாம். ஒட்டுமொத்த‌ பேருந்திலிருந்த‌ எல்லோரும் திரும்பி பார்க்க‌ அப்ப‌வும் கொஞ்ச‌ம் அல‌ற‌ விட்டுட்டுத்தான் எடுக்கிறார். இந்த‌ மாதிரி ஹை டெஸிப‌ல் ச‌த்த‌ம் அவ‌ர் ப‌ர‌ம்ப‌ரைக்கே காது கேட்காம‌ல் போய்விடும் என்ப‌து உண்மை. அவ‌ர்கிட்ட‌ போய் 'ஏங்க‌ இவ்ளோ ச‌த்த‌மா ரிங்டோனை வைக்கிறீங்க‌ன்னு சொல்ல‌ யாருக்கும் தேவையும் இல்லை என்ப‌து மாதிரியான‌ ஒரு தோற்ற‌ம் நில‌விய‌து பேருந்தில். நானும் அமைதியாகி விட்டேன், சில‌ நேர‌ங்க‌ளில் சில‌ வேளைக‌ளில் அமைதியாக‌வே இருந்துவிடுவ‌து உட‌ம்புக்கு சேஃப்ட்டி. ஒன்ப‌தாவ‌து அல்ல‌து ப‌த்தாவ‌து கி.மீ.ட்ட‌ரில் வ‌ண்டி நின்ற‌து, இதுதான் எங்கேயும் நிற்காத‌ பேருந்தாச்சேன்னு ப‌க்க‌த்திலிருப்ப‌வ‌ரிட‌ம்…

“ஏங்க‌ இங்க‌ நிக்குது?'”

“இந்த‌....' ஸ்கூல்ல‌ ம‌ட்டும் நிக்குது என்னான்னு தெரிலீங்க‌ன்னார்..”

த‌வ‌று ந‌ட‌க்கிற‌து அதை த‌ட்டிக்கேட்க‌ யாருக்கும் நேர‌மில்லை. ந‌ம‌க்கேன்? என்ற‌ டோண்ட் கேர் ம‌ன‌ப்பான்மை த‌லைவிரித்தாடுகிற‌து. க‌ண்ட‌க்ட‌ரிட‌ம் பாக்கி ப‌ண‌ம் வ‌ர‌வேண்டியிருப்ப‌தால் நான் அந்த‌ மாதிரி கேள்வி ப‌தில் பிசின‌ஸ்க்கெல்லாம் த‌யாரில்லை.

--------------------------------------------------------------------

ஏழு ம‌ணிவாக்கில் மெயின்ரோடு சாரா க‌ல்யாண‌ ம‌ண்ட‌ப‌த்திற்கு ப‌க்க‌த்தில் ஒருத்த‌ர் த‌ள்ளு வ‌ண்டியில் வைத்து ஆவி ப‌ற‌க்க‌ சுண்ட‌ல், வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லை, சோழ‌/ல‌/க்க‌திர், அவிக்காத‌ நில‌க்க‌ட‌வை விற்பார்...ப‌ழைய‌ டால்டா நெய் ட‌ப்பாவில் செங்குத்தான‌ சிறிய‌ குழாயில் திரிவைத்து இருப்பார்..அந்த‌ ட‌ப்பாவில் ம‌ண்ணென்னையை ஊற்றி திரியை கொஞ்ச‌ம் ஈர‌மாக்கி கொளுத்துவார்..ஓர‌ள‌வு வெளிச்ச‌த்தில் எரியும் அவ்விள‌க்கே அந்த‌ த‌ள்ளுவ‌ண்டியின் பிர‌தான‌ அடையாள‌ம்..தெருவிள‌க்கு,ரோட்டில் போகும் வாக‌ன‌ங்க‌ளின் வெளிச்ச‌ம் இருந்தாலும் இந்த‌ விள‌க்கின் மேல் அவ‌ருக்கு ந‌ம்பிக்கை..எரியும் நெருப்பின் புகையும், சுண்ட‌லிலிருந்து வ‌ரும் ஆவியும் ஒன்றாக‌ க‌ல‌க்கும் அத் த‌ருண‌த்தை ஏதோச்ச‌யாக‌ பார்த்திருக்கிறேன்..முன்பு எல்லாம் தெரு வ‌ழியாக‌ வ‌ண்டியை த‌ள்ளிக் கொண்டே விற்ப‌னை செய்வார்..

'முன்ன‌ மாதிரி முடிய‌லீங்க‌'ன்னார்.. ஒருவித‌மான‌ ச‌லிப்பு பேச்சில்..ஆர்வ‌ங்கொண்டு தொழில் செய்ய‌ இய‌லாத அள‌வுக்கு உட‌ல்நிலை இருந்தாலும் தொழில் செஞ்சே ஆக‌வேண்டுமென‌ அவ‌ரை கொண்டு போய் த‌ள்ளியிருந்த‌து வ‌றுமை..சின்ன‌ சின்ன‌ மாங்காய் கீத்துக‌ள்,ப‌ச்சை மிள‌காய் ஆங்காங்கே தூவ‌ப்ப‌ட்டு,வெங்காய‌ம்,கேர‌ட் போன்ற‌வ‌ற்றோடு கூட்ட‌ணி அமைத்து மெஜாரிட்டியோடு ந‌ம் ம‌ன‌ங்க‌ளை வென்று ந‌ம்மை சாப்பிட‌வைக்கிற‌து அவ‌ரிட‌ம் இருக்கும் சுண்ட‌ல். வெள்ளை கொண்ட‌க்க‌ட‌லையும் சாப்பிட‌ ந‌ன்றாக‌ இருந்த‌து..

'ம‌ழை வ‌ந்தா என்ன‌ செய்வீங்க‌?'

'இந்தெ [சிக‌ப்பு க‌ல‌ர் தார்ப்பாயை எடுத்து காட்டுகிறார்] வ‌ண்டிய‌ சுத்தி மூடிட்டு நான் ஓர‌மா ஒதுங்கி நின்றுவேன்' 

'ம‌ழ‌ வ‌ந்தாத்தான் ந‌ல்ல‌து..ஆனா அதிக‌மா வ‌ர‌ப்பிடாது' க‌ண்டிஷ‌ன் போடுகிறார் என்னை பார்த்த‌ப‌டி.

'ஏங்க‌ அப்ப‌டி?'

'அப்ப‌த்தான் சீக்கிர‌ம் வித்துப்போவும் நானும் வூட்டுக்கு போயிடுவேன்ல‌'

ஒவ்வொருத்த‌ருக்கும் ஒவ்வொரு ப்ரார்த்த‌னைக‌ள்..வித‌வித‌மான‌ அப்ளிகேஷ‌ன் ஃபார்ம்க‌ள் பார‌மாக‌ கிடைக்கிற‌து எல்லோர் ம‌ன‌திலும்...

--------------------------------------------------------------------

ம‌ணி எக்சேஞ்சிலிலுள்ள‌ க‌வுண்ட்ட‌ரில் இருந்த‌ நேபாளிகூட‌ த‌மிழில்? பேசிக்கொண்டிருந்தார். அவ‌ர் வ‌ளைகுடா சின்ன‌ அடிமை (பெரிய‌ அடிமை ர‌க‌ம் வேற‌) லேப‌ர் உடையில் இருந்தார். அவ‌ன் திருப்பி இந்தியில் சொல்ல‌ இவ‌ர் மீண்டும் மீண்டும் த‌மிழிலியே பேச‌ அந்த‌ நேர‌ம் நான் அங்கு என்ட்ராவுறேன். இவ்வ‌ள‌வுக்கும் ப‌க்க‌த்தில் ஒரு ம‌லையாளி உட்கார்ந்திருக்கிறார் அவ‌ருக்குத்தான் மெட்ராஸி, த‌மிழ்நாட்டுக்கார‌ன் என்றாலே ஒருவித‌ எள‌க்கார‌ம் அவ‌ர் எப்ப‌டி உத‌வி செய்வார்.

நான் போய் அவ‌ரிட‌ம்,

'என்ன‌ங்க‌ பிர‌ச்ச‌னை'?

'இல்ல அண்ணே ப‌ண‌ம் அனுப்ப‌னும் ர‌ண்டு மாச‌மா இங்க‌தான் வ‌ர்றேன்' என்ற‌தும்,

என‌க்கு பேய‌றைந்த‌து போலிருந்த‌து, ஏனென்றால் அது வெஸ்ட்ர்ன் யூனிய‌னில் ம‌ட்டுமே அனுப்ப‌ வேண்டிய‌ எக்சேஞ் அது.. ச‌ராச‌ரியாக‌ ஒரு ட்ரான்செக்ச‌னுக்கு இருப‌த்து அஞ்சு ரியால் மொய் எழுதிவிடுவார்க‌ள். நான் அர்ஜென்ட்டா அனுப்ப‌ மட்டும் அங்கு வ‌ருவேன். ரூமிற்க்கு ப‌க்க‌மாக‌வும் உள்ள‌தாலும்,

'ஏங்க‌ உங்க‌ளுக்கென்ன‌ பைத்திய‌மா ஏன் இங்க‌ வ‌ந்து ப‌ண‌ம் அனுப்புறீங்க‌?'

'இல்லேண்ணே எங்க‌ ரூம்க்கார‌ய்ங்க‌ சொல்லித்தான் என‌க்கு வேற‌ ஏதும் தெரியாதுங்க‌'

'ப்ச்... எத்த‌ன‌ மாச‌மா இதுல‌ அனுப்புறீங்க‌?'

'நாலு மாச‌மா அனுப்புறேன்னே'

அட‌ப்பாவிக‌ளா... அவ‌ரின் ச‌ம்ப‌ள‌ம் வெளியில் சொல்ல‌முடியாத‌ அள‌விற்கு மிக‌ச் சொற்ப‌ம். அதிலும் வெஸ்ட்ர்னில் அனுப்பும்போது முழுமையாக‌ இருப‌த்து அஞ்சு ரியாலை ச‌ர்வீஸ் சார்ஜாக‌ எடுத்துவிடுவார்க‌ள் என்ப‌து அந்தோ ப‌ரிதாப‌மாக‌ ப‌ட்ட‌து என‌க்கு அன்னிக்கு அவ‌ரைப் பார்க்கும்போது..

'நேபாளிட்ட‌ போய் த‌மிழ்ல‌ பேசுறீங்க‌ அவ‌னுக்கு எப்ப‌டி புரியும்ங்க‌' என்று கோப‌மாக‌வே கேட்டேன்,

'இல்லீங்க‌ இல்லீங்க‌'

'ச‌ரி எந்த‌ ஊரு?'

' க‌முதிக்கு ப‌க்க‌ம்ணே'

ச‌ரி விடுங்க‌.. இனிமே இங்க‌ வ‌ராதீங்க‌.. என்னே.. உங்க‌ வீட்'ல‌ யாருக்காவ‌து பேங்க் அக்க‌வுண்ட் இருக்கா?'

'இல்ல‌ண்ணே'

'ச‌ரி யார் இருக்கா வீட்ல‌'?

'என் பொண்டாட்டி இருப்பா'

'ச‌ரி அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லி உட‌னே ஒரு பேங்க‌ அக்க‌வுண்ட் ஆர‌ம்பிக்க‌ சொல்லுங்க‌.. ஆர‌ம்பிச்ச‌தும் ஒரு ந‌ம்ப‌ர் பேங்க்லேர்ந்து கொடுப்பாங்க‌ அதை வாங்கி வெச்சுக்கோங்க‌'

அடுத்த‌ மாச‌ம் ப‌ண‌ம் அனுப்ப‌ வேறொரு எக்சேன்ஞ'ஐ நான் காமிக்கிறேன் அங்கே போங்க‌, அங்க‌ போய் ந‌ம்ப‌ரை காமிச்சு ப‌ண‌ம் அனுப்புங்க‌ 12 ரியால் இல்லாட்டி 15 ரியால்தான் வ‌ரும் என்ற‌தும் ரொம்ப‌ ந‌ன்றிண்ணே என்ற‌ப‌டி சொன்ன‌ அந்த‌ ம‌னித‌ரைப் பார்த்த‌போது என்னை அறியாம‌லேயே நான் க‌ல‌ங்கிவிட்டேன்..

உட‌ல் உழைப்பை ம‌ட்டுமே ந‌ம்பி இந்த‌ கொடூர‌ வெயிலில் வேலை செய்ய‌வ‌ரும் இவ‌ரைப் போன்ற‌வ‌ர்க‌ள் பாவ‌ம்.. இதுக்கு இங்க‌ வ‌ர‌வே தேவையில்லை..

அஹ்மது இர்ஷாத்

16 Responses So Far:

Iqbal M. Salih said...

// 'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'//

இந்த இழந்த இளவயது நாட்களையும் அத்துடன் ஒன்றிப்போய்விட்ட ஒவ்வொரு சம்பவங்களையும் நினைத்து, ஒருமுறையேனும் வாழ்வில் ஏங்கிப் பார்க்காத மனிதனேயில்லை இர்ஷாத்!

இந்த லெளகீக வாழ்வின் கால ஓட்டம், படைத்தவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நிற்கும் பிரபஞ்சங்களின் மர்மமான இயக்கங்கள் இவற்றையெல்லாம் தாண்டி, இந்த சட பரிமாணங்களையெல்லாம் கடந்துவிட்ட ஓர் உன்னத வாழ்வான மறுமையில் நீங்கள் தேடி நிற்கும் கடந்த காலத்தின் மீள்சுழற்சியை எல்லாம் காண்பதற்க்கான சாத்தியம் இறையருளால் இன்ஷா ஆல்லாஹ் இருக்கவே செய்கிறது!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

எதிர்த்த வீட்டு நெய்னாவின் மண் வாசனையில் 'டச்' செய்து கமுதி ஆள் கதை வரை கலக்கல்!

Ebrahim Ansari said...

அதிரை நிருபரின் அரசவைக் கவிஞர் ஏக்கப்பட்டுத் தேடிய இந்த நட்சத்திரம் வந்ததும் வராததுமாய் நம்மை ஏமாற்றவில்லை.

அதிலும் அந்த பாயின்ட் டூ பாயின்ட் = நல்ல பாயின்ட்.
மணி எக்ஸ்சேஞ்ச்= மனித நேயம்
கிணறு =மீளாக் கனவு
சுண்டல் = சுவை கலந்த கிண்டல்
எனக்கென்னவோ ரப்பர் மிட்டாயின் ஜவ்வு இழுப்பும் ரயில்வே யும் ஒரே நிலையாகத் தெரிகிறது. கடைசியில் விளையாட்டாக தேள் போல் செய்து கையில் கட்டிவிட்டுவிடுவார்களோ என்ற உண்மை அச்சம்.

பாராட்டுக்கள். மீண்டும் தந்த வருகைக்கு நல் வரவு.

sabeer.abushahruk said...

நல்-மீள் வரவு இர்ஷாத்,

என் அபிமான எழுத்தாளர்களுல் ஒருவரான சுஜாதா மறைந்த பிறகு எப்போதாவது இங்கொருவரோ அங்கொருவரோ அதே சுவாரஸ்யத்தோடு எழுதுவதை வாசித்திருக்கிறேன், அதில் நீர் ஒருவர்.

சரியாகச் சொன்னால் இந்தப் பதிவின் ஒவ்வொரு துணுக்குக்கும் என்னிடம் கருத்துண்டு. எதார்த்த நிகழ்வுகளும் அதில் உங்கள் பார்வையும் வசீகரிக்கின்றன.

வாழ்த்துகள்.

Adirai pasanga😎 said...

எல்லோருடைய அனுபவத்தையும் சேர்த்து எழுதியுள்ளார். படிப்பதற்கு நன்றாக உள்ளது. இன்னும் கொஞ்சம் லேட்டாக வந்தால் இதுபோல் இன்னும் நிறைய எழுதுவாரோ?

ரீவைண்ட் பட்டன் ஒன்லி நினைவு மட்டும்தான். அது இருந்தால் பல கஸ்டமான நினைவுகளையுமல்லவா மீண்டும் அனுபவிக்க நேரிடும்.

sabeer.abushahruk said...

//இரவினில் வான் நிலாவை கிண‌ற்று த‌ண்ணீரில் பார்த்தால் அற்புத‌ த‌ருணமாக‌ இருக்கும் என‌ கேள்விப்ப‌ட்டிருக்கேன் ஆனால் பார்த்த‌தில்லை;//

வான் நிலவைக்
குனிந்து பார்க்கவேண்டிய
இரண்டு தருணங்களில்
கிணற்றில் நிலா ஒன்று.

ஈர நிலா
நீரில் ததும்பி நிற்க
மற்றொன்றோ
மருவி மயக்கும் 

சீக்கிறம் பார்த்துவிடுங்கள்
விடிந்துகொண்டிருக்கிறது!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இதுக்கு தாங்க இந்த புள்ளைய தேடுனது !

இவரு 'ஷோ'சியல் சர்வீஸ்'ல பிஸியா இருக்கிறாராம் !

sabeer.abushahruk said...

//'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'//

கூடவே
ஒரு
ஃபாஸ்ட் ஃபார்வேட் பட்டனும்
பரீட்சை நேரத்தில் உபயோகிக்க?

//கல்கோனா//

காசைவிட
கடிக்கக்
கடினமானது
கல்கோனா

இருப்பினும்
என்னுது
கோபால் பற்பொடி பற்கள்

sabeer.abushahruk said...

//அகலப்பாதையில் ஓடும் ரயில்களில் ஜன்னலோர கம்பிகளில் எட்டிப்பார்க்கும் சிறுவர்களை காண ஆவலோடு வெயிட்டிங்;//

ரயில்
கடந்துவிடும்
ஜன்னலும்
கையசைத்தப் பிஞ்சும்
மனத்தில்
கிடந்துவிடும்

அந்த
ரெட்டை வட
இருப்புச் சங்கிலி
விரைவில்
அதிரையின் கழுத்தை
அலங்கரிக்கட்டும்.

அப்துல்மாலிக் said...

ரொம்பா நாள் கழிச்சி எல்லா வழிகளை அடைக்கும் அடைக்க முற்படும் ஒரு டச் இருக்கு, நெய்னாவை மிஞ்ச முடியாட்டாலும் ஓரளவுக்கு மண் வாசனையை கிளரிருக்கீங்க...

// பைக் ப‌ஞ்ச‌ரான‌தால் பேருந்தில் போக‌லாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் என‌ப்ப‌டும் பேருந்தில் உட்கார்ந்தேன்.//

பஸ்லே போகக்கூடாதா? யாராவது கேட்டுடுவாங்களேனு பைக் பஞ்சரெல்லாம் சொல்லுறீங்க...!!! லாஜிக் புரியுதுதான்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//'விசிஆர்ல இருக்கிறமாதிரி ஒரு ரீவைன்ட் பட்டன் வாழ்க்கையிலும் இருந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்'//

நீங்களும் MSM (N)ம் இருக்கீங்களே... தம்பி இர்ஷாத் உங்கள் இருவரின் பதிவுகளை கிளிக் செய்தாலே எல்லா பழைய நிகழ்வுகளும் கண்முன்னே வந்துசெல்லுமே..

Ahamed irshad said...

சாலிஹ் காக்கா...

// இந்த லெளகீக வாழ்வின் கால ஓட்டம், படைத்தவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நிற்கும் பிரபஞ்சங்களின் மர்மமான இயக்கங்கள் இவற்றையெல்லாம் தாண்டி, இந்த சட பரிமாணங்களையெல்லாம் கடந்துவிட்ட ஓர் உன்னத வாழ்வான மறுமையில் நீங்கள் தேடி நிற்கும் கடந்த காலத்தின் மீள்சுழற்சியை எல்லாம் காண்பதற்க்கான சாத்தியம் இறையருளால் இன்ஷா ஆல்லாஹ் இருக்கவே செய்கிறது! //

இன்ஷா அல்லாஹ்...கண்டிப்பாக...கருத்துக்கு மிக்க நன்றி..
--

ஜெஹபர் சாதிக் காக்கா... கருத்துக்கு நன்றி..

--
இப்றாகீம் அன்சாரி காக்கா... உங்க பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி...கருத்துக்கும் நன்றி..

--
சபீர் காக்கா...உங்களுக்குத்தான் முதலில் நன்றி... பொழுதுபோக எழுதுகிறேன்..அதுக்கு உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி... இன்ஷா அல்லாஹ் மீண்டும் ஒரு முறை நல்ல பதிவோடு [மீள் பதிவாக இல்லாமல்] வருவேன்..

//
வான் நிலவைக்
குனிந்து பார்க்கவேண்டிய
இரண்டு தருணங்களில்
கிணற்றில் நிலா ஒன்று.

ஈர நிலா
நீரில் ததும்பி நிற்க
மற்றொன்றோ
மருவி மயக்கும்

சீக்கிறம் பார்த்துவிடுங்கள்
விடிந்துகொண்டிருக்கிறது!
//

ஹாஹா... சீக்கிரமே பார்த்துடனும்.. :)

--
அப்துல் வாஹித்....உங்கள் கருத்துக்கு நன்றி..

--
அபூஇபுறாகிம் காக்கா... ரொம்ப சந்தோஷம் தேடினதுக்கு.. இன்னுமொரு சிறப்பான பதிவின் மூலம் இன்ஷா அல்லாஹ் வர்றேன்.. கருத்துக்கு நன்றி..

--
அப்துல் மாலிக்..

// ரொம்பா நாள் கழிச்சி எல்லா வழிகளை அடைக்கும் அடைக்க முற்படும் ஒரு டச் இருக்கு, நெய்னாவை மிஞ்ச முடியாட்டாலும் ஓரளவுக்கு மண் வாசனையை கிளரிருக்கீங்க...
//

கருத்துக்கு நன்றி... ஒரு வேண்டுகோள்.. இங்கு யாரையும் யாரோடும் கம்பேர் செய்யாமல் இருப்பது நல்லது என நினைக்கிறேன்...

--

தாஜுதீன் காக்கா... ரொம்ப சந்தோஷம்... கருத்துக்கு நன்றி...

--

KALAM SHAICK ABDUL KADER said...

கவிநிலாப் போட்டத் தூண்டிலில் கனமான மீன் சிக்கி விட்டது; ருசியான ஆனம்!

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

"ம்மடி திடுக்கிண்டு பெயந்துட்டேன்" என்ற தலைப்பில் தீடீர்ண்டு ஒரு கட்டுரை எழுத ஆசை. ஆனால் அதற்கு நம்மூர் கெரண்டும், கம்ப்யூட்டரும் தனித்தமிழ் ஈழம் போல் பெரும் போராட்டமாக இருக்கின்றன. என்ன செய்ய?

Yasir said...

சகோ.இர்ஷாத்தின் குஷிப்படுத்தும் ஆக்கம்..அடிக்கடி இந்த பக்கம் வாங்க

//அந்த‌ பூச்சி பேர் தெரிய‌வில்லை// நாங்க அதனைக் காசு பூச்சி என்று கூறுவோம்,அதனை புதைத்து வைத்தால் காசு வரும் என்று சில அறிவாளிகள் கூற புதைத்து வைத்துவிட்டு வெட்டியான் வேலை பார்த்த ஞாபகம் எல்லாம் வருகின்றது உங்கள் கட்டுரையை படித்தவுடன்

அலாவுதீன்.S. said...

மலரும் நினைவுகள்! சகோ. இர்ஷாத் - வாழ்த்துக்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு