Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள்... 7

அதிரைநிருபர் பதிப்பகம் | August 04, 2014 | , , , , ,

தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .

மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !

கிப்லாவை
டாலருக்கு மாற்றிக் கொண்டு
முசல்லாவை விற்று
அமெரிக்க அழகுச் சிலை வாங்கியதால்
மினாராக்கள்
யூதர்களுக்கு சஜ்தா செய்கின்றன !

ஆப்கன் விதைஎடுத்து
அமெரிக்கா பயிரிடும்
கொடிமுந்திரித் தோட்டக்
குலைகளில்
முஸ்லிம் குழந்தைகளின்
முழிக்கும் விழிகள் !

அமெரிக்க - இஸ்ரேல்
காக்டெயில் விருந்தின்
ஐஸ்க்ரீம் மகுட உச்சியில்
செர்ரிப் பழமாய்
பாய்மார்களின்
தாய் மார் கள் !

அலிப்
எழுத்துப்போல சேராது
தனித்திருக்கும்
அரபு நாடுகளே ...

ஒன்றாய் நீங்கள்
ஒன்றுக்கிருந்தால்
மூத்திரத்தில் மூழ்கிப்போகும்
யூத - அமெரிக்கக்
கள்ள உறவில் தோன்றிய
கர்ப்பக் கழிவு !

அஸாக் கோல்களால் ஆன
சந்தூக்குகள்
அமெரிக்காவில் கிடைக்கலாம் !
ஆனால்...
மூமின் உடல்களை
அடக்கம் செய்ய
ஓரடி மண்கூட
உங்களிடம் இருக்காது !

உங்கள் பாலஸ்தீன
கபுர்க்குழி ஒன்றிலிருந்து
கடிதம் ஒன்று
கண்ணிமை உதடு திறக்கிறது !

" பாலஸ்தீன விடுதலை இயக்கப்
பதினாறு வயதுப்
பச்சிளம் பிறை நான் !
போரில் வெடித்து சிதறிய
விரலால்
இரத்தம் தொட்டு எழுதுகிறேன் !

வீரர்களே ...
தாயக மீட்சிக்காக
தீன் நெறி ஆட்சிக்காக
என் கையத்துப் போனாலும்
என் மெய்யத்துப் போனாலும்
நான் மையத்து ஆனாலும்
என் நிய்யத்துப் போகாது !

மூமின்களே ...
ஆமீன்களுக்காக மட்டும்
உயரும் கரங்கள்
புனித
ஆயுதங்களுக்காக உயரட்டும் !

விடுதலை விதைகளே...
நீங்கள் எப்போதாவது
களத்தில்
நிராயுதபாணியாக நின்றால்
ஆயுதம் இல்லையே என
அவதியுற வேண்டாம் !

என் சவக்குழியைத் தோண்டுங்கள்
என் கபாலத்தைக் கேடயமாக்குங்கள்
என் கைகால் எலும்புகளை
ஆயுதமாக்குங்கள்
என் எலும்புகளுக்கு
இரண்டாம் முறையும்
போரிடும் வாய்ப்பு தாருங்கள்
இன விடுதலைக்காக... ! "

பேராசிரியர் கவிமாமணி தி மு அப்துல் காதர் ( வாணியம்பாடி)
பரிந்துரை : இப்ராஹீம் அன்சாரி

7 Responses So Far:

sabeer.abushahruk said...

யூத அமெரிக்க கள்ள உறவைக் கதைப்பதிலாகட்டும்;

அரபுலக அமைதி வேடத்தை அடித்து உதைப்பதிலாகட்டும்;

நரம்புகள் விடைக்க வீரத்தை விதைக்கிறது கவிதை;

கபுருக் குழந்தையின் கடிதம் வாசித்து பதை பதைக்கிறது உள்ளம்!

வென்றெடுக்க இயலாமல் போனாலும் அங்கு கொன்றடங்கி மடிந்த என் இனத்தின் எண்ணிக்கையிலாவது ஒரு இலக்கமாகிவிட விழைகிறது மனம்!

அருமையான; ரோசமேற்றும் கவிதை!

பரிந்துரைத்த காக்காஅவர்களுக்கு மிக்க நன்றி!

sheikdawoodmohamedfarook said...

ஐநாவுக்குசாமுத்திரிக்காகசாரியும்வலையலும்அனுப்பிவைக்கலாம். முடிந்தால்கூடவேகொஞ்சம்மஞ்சலும்சேர்த்துஅனுப்பலாம். தேச்சுகுளிக்கட்டும்.

Ebrahim Ansari said...

அன்றொருநாள் அதே நிலவில் வாணியம்பாடி தமிழ் மன்றத்தில் வரவேற்புரையாறிப் பேசியது நினைவுக்கு வருகிறது. .

எனது பேராசிரியரின் பேச்சைக் கேட்டால் அடைத்துக் கிடக்கும் செவிட்டுக் காதுகள் கூட க்ரீச் என்ற சப்தத்துடன் திறந்து கொள்ளும்.

அவரது கவிதை வரிகளைப் படித்தால் காது மடல்கள் எழுந்து நிற்கும் ; கண்கள் காந்தம் பெறும் ; உதடுகள் நடுங்கும் ; இதயத்தின் இரத்த ஓட்டம் கூடுதலாக இன்னும் இருபது முறை உறிஞ்சிக் கக்கும்

" இறைவனை சந்திக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்
இரைப்பைக்கு பதிலாக இன்னொரு நுரையீரல் கேட்பேன் !
அப்போதாவது அவைகள்
இலவசமாக தங்களை நிரப்பிக் கொள்ளட்டும். " என்று எழுதியவர்.

இன்னும் இது போல் எவ்வளவோ.

adiraimansoor said...

///காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .///

உலக மகா கொடுங்கோலன்,மனித மாமிசம் தின்னும் அயோக்கியன்,
அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்தும் கொலைவெறி தாக்குதலுக்கு கூடியவிரைவில்சரியான பாடம் நிச்சயம் இறைவனிடமிருந்து கிடைக்கும்
எற்கனவே சிறிதாக காட்டிய இறைவன் இப்பொழுது பெரிய அளவில் காட்டப்போகின்றான் இறைவனின் திருவிளையாடலுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் இன்ஷா அல்லாஹ் இறையாகும்

மாமா வேலப்பார்ப்பதற்குத்தானே ஐ நா சபை.

ஐ நா சபையின் உருப்பினர்கள் யாவரும் கூட்டிக்கொடுக்கும் மாமாவைவிட மோசமான்வர்களாகத்தான் இருக்க முடியும்

adiraimansoor said...

///மானபங்கப்படும்
மனிதநேயத்திற்கு
உத்தரீயம் கொடுக்கவும்
அமெரிக்க சகுனியிடம்
உத்தரவு கேட்கும்
கவுரவர் சபை
பஞ்ச பாண்டவர்களாய்
வளைகுடா நாடுகள் !///

இவர்களையும் இறைவன் விட்டுவைப்பான் என்று கனவு காணுகின்றார்கள்
அமெரிக்க நாய்களின் மூத்திரத்தை குடிக்கும் வரை புத்தி மழுங்கியே இருக்கும்

aa said...

வளைகுடா நாடுகளையும் அதன் சுன்னி முஸ்லிம் ஆட்சியாளர்களையும் எதற்கெடுத்தாலும் பழித்துரைப்பது சிலருக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்படி பழித்துரைப்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமிய அகீதா பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்களாகவும் ஈரானிய ஷீஆக்களையும், அவர்களுடன் கொஞ்சி குலாவும் இஹ்வானி மற்றும் வழிகெட்ட ஹமாஸையும், கவாரிஜிய தீவிரவாத இயக்கமான் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற வழிகேடர்களை ஹீரோவாக கருதுபவர்களாகவும் இருப்பதை பார்க்கலாம்.

எவன் அல்லாஹ், ரசூல் என்ற பெயரில் துப்பாக்கி தூக்கினாலும் (Emotional Outburst) உணர்வு குழம்பாய் இவர்கள் வெடிப்பதை காண முடிகிறதே தவிர எந்த அறிவார்ந்த இஸ்லாமிய அனுகுமுறையும் இந்த ஷீஆ மற்றும் தீவிரவாத ஆதரவாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு அகீதாவும் தெரியாது, மன்ஹஜும் தெரியாது. தெரிந்ததெல்லாம் உணர்வு பிழம்பாய் தொண்டை கிழிய கத்தவும், வாழ்க ஒழிக கோஷம் போடவும் தான்.



ZAEISA said...

அடேய்.....டேய்....இங்கேந்து....ஓடிபோயிடு.....ஆமா..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு