Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கனியிருக்கக் காய் பறிப்போர்! 8

தாஜுதீன் (THAJUDEEN ) | November 21, 2010 | ,

இது (அடியும் முடியுமான) ஒரு மரபுக் கவிதை:

 

இணையிலாத இறைவனைத்தன் பாதுகாவலாய் - உறுதி
எடுத்திருக்கும் முஸ்லிமுக்கு வேறுயார்துணை?
துணையிருக்கும் அவனைவிட்டுப் பிறரிடத்திலே - போய்த்
துதிகள்பாடி வேண்டிநிற்போர் பாவியாகுவார்!

உயிரினத்தின் தேவையற்ற வல்லநாயனின் - ஆற்றல்
ஓப்பிலாத தென்றறிந்து கொண்டபின்னரும்
பயிர்களுக்கும் உயிர்கொடுக்கும் பாதுகாவலன் - நமைப்
பரிதவிக்க விட்டுவிட்டுப் பார்த்திருப்பனோ?

கெஞ்சிநின்று கையையேந்திக் கேட்கவேண்டுமாய் - நாம்
கேட்பதையே விரும்புகின்ற கருணையாளனை
அஞ்சியஞ்சி அவனருளை வேண்டுவோமெனில் - அவன்
அள்ளியள்ளித் தருவதற்குக் காத்திருக்கிறான்.

என்னிடத்தில் கேட்பவர்கள் இல்லையா?’வென - அவன்
இறங்கிவந்து கேட்பதாக நபிகள்நாயகம்
சொன்னசொல்லை மறந்துவிட்டுப் படைப்பினத்திடம் - நோய்
சுகமளிக்க வேண்டுவோர்கள் பேதைமக்களே!

திண்ணமாக மனிதரான இறையின்நேசரும் - பெருந்
தேவையோடு வல்லநாயன் கருணைவேண்டுவார்!
மண்ணறைக்குள் போனவர்கள் மீண்டிடாமலே - நம்பும்
மறுமையதன் வரவுநோக்கிக் காத்திருப்பரே!

கனியிருக்கக் காய்பறிக்கும் மனிதருக்குநான் - நல்ல
கவிபுனைந்தும் கட்டுரைத்தும் பயனுமில்லையே!
இனியிருக்கும் கொஞ்சநாளில் திருந்திடாவிடில் - அவர்
இறுதிநாளின் வேதனைக்குச் சொந்தமாவரே!

- கவிஞர் அதிரை அஹ்மது
   ( நன்றி: 'சமரசம்' )

8 Responses So Far:

வேண்டாம் வரதட்சணை said...

வாருங்கள் கை கோர்ப்போம்.
வேரறுப்போம் கைக்கூலியை
இன்ஷா அல்லாஹ்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இவ் விதி(முறை) யாவருக்குமென்று உரைத்தீர்
இவ் விதிமீறலில் கொள்கை கொண்டோரும் - அடங்கினரே !

Unknown said...

பின்னூட்டம் ஒன்று: பொருத்தமில்லையே!

பின்னூட்டம் இரண்டு: புரியவில்லையே!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். வல்லமை மிக்க அல்லாஹ் இருக்க அவன் அல்லாத அடிமைகளிடமும்,படைக்கப்பட்டவவைகளிடம் உதவி தேடுபவன் மூடன்,பாவி,கடந்தெடுத்த முட்டாள், நரகம் செல்பவன். "கனியிருப்ப காய்கவர்ந்தற்று" என்று கூறி, கவிதை மூலம் உணர்திட்ட சாச்சாவின் நினைஊட்டலுக்கு அல்லாஹ் நற்கூலி அளிப்பானாக ஆமீன்.

sabeer.abushahruk said...

பச்சைப் போர்வை போர்த்தியும்
பச்சை பொய்யை பேசியும்
படைத்தவனை பின் தள்ளி -அவன்
படைத்தவற்றை புகழ் பாடி
பிழைப்பு நடத்தும் புல்லரிடம்
பினி நீக்க கையேந்தும்
பிச்சைக்கார மானிடா
புதைபடுமுன் திருந்து- உனை
படைத்தவனை மட்டும் நெருங்கு!

அஹமது காக்கா...அடிக்கடி சொடுக்குங்கள் இதுபோல்
அழகிய சாட்டையை.

Unknown said...

அபயமுண்டு அல்லாஹ்விடம்
அவனில்லா மனிதரிடம் கையேந்தும்
மூளை முடங்கிக்கிடக்கும் மூடர்களுக்கு
ஏக தத்துவத்தை கவிதையாக்கி
அச்சமூட்டி எச்சரித்து போர்முரசு கொட்டும்
மரபுக்கவிதையிது!

இஸ்லாமிய இலக்கிய வழி நின்று
இலக்கியம் படைத்துவரும் அதிரை அஹ்மது சாச்சா அவர்களுக்கு...
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கவிதைகளை செவிமடுத்த அண்ணலார் அவர்கள் செய்த துஆ தாங்களுக்கும் பொருந்தட்டுமாக‌

அண்ணலாரின் துஆ
"நீர் கவிதை பாடும் போதெல்லாம் ஜிப்ரீல் உன்னைப் பலப்படுத்துவாராக".

crown said...

அதிரைpost சொன்னது…
அபயமுண்டு அல்லாஹ்விடம்
அவனில்லா மனிதரிடம் கையேந்தும்
மூளை முடங்கிக்கிடக்கும் மூடர்களுக்கு
ஏக தத்துவத்தை கவிதையாக்கி
அச்சமூட்டி எச்சரித்து போர்முரசு கொட்டும்
மரபுக்கவிதையிது!

இஸ்லாமிய இலக்கிய வழி நின்று
இலக்கியம் படைத்துவரும் அதிரை அஹ்மது சாச்சா அவர்களுக்கு...
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கவிதைகளை செவிமடுத்த அண்ணலார் அவர்கள் செய்த துஆ தாங்களுக்கும் பொருந்தட்டுமாக‌

அண்ணலாரின் துஆ
"நீர் கவிதை பாடும் போதெல்லாம் ஜிப்ரீல் உன்னைப் பலப்படுத்துவாராக"
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். என் உடன் பிறந்த(தம்பி)வன்.என்றும் அறிவிலும்,
செயலிலும்.எனக்கு மூத்தவனாய் இருப்பதும்,
அவன் சொல்லும் கருத்தும்
என்னை சந்தோசப்பட வைப்பதுடன்
அவனிடம் நான் கற்றுகொள்ளாமல் போய்விட்டேனே?
ஆதங்கம் தான் மேலிடுகிறது.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பின்னூட்டம் இரண்டு: புரியவில்லையே! ///

இன்றளவும் தாங்கள்தான் ஏகத்துவாதிகளென்று முரசு கொட்டிக் கொண்டும் மார்தட்டும் அவர்களிடமும் சுற்றத்திடமுதான் இன்னும் இருக்கிறது இணைவப்பும் - தக்லீதும் இதைத்தான் சொல்ல வந்தேன், ஒருவேளை சொல்லிய விதம் சரியில்லை போலும்.
------------------------------------

இஸ்லாமிய இலக்கிய வழி நின்று
இலக்கியம் படைத்துவரும் அதிரை அஹ்மது சாச்சா அவர்களுக்கு...
ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தின் கவிதைகளை செவிமடுத்த அண்ணலார் அவர்கள் செய்த துஆ தாங்களுக்கும் பொருந்தட்டுமாக‌

அண்ணலாரின் துஆ
"நீர் கவிதை பாடும் போதெல்லாம் ஜிப்ரீல் உன்னைப் பலப்படுத்துவாராக". ///

தம்பி ஹிதாயத்துல்லாஹ்: என்றோ படித்ததை எனக்கும் ஞாபகத்தில் வரவைத்து நீ இங்கே பதிந்தாலும் அடிப்படை கரு கண்ட மரபுக் கவிதைக்கு வைத்திருக்கிறாய் மகுடம்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு