Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

யாசகம் - தொழுவதற்கு ஓர் இடம் வேண்டும் ! (எச்சரிக்கை !) 15

அதிரைநிருபர் பதிப்பகம் | November 12, 2010 | ,


அதிரைப்பட்டினத்து நம் மக்கள் அதிகம் வசிக்கும் தெருக்களில் இன்றைய சூழலில் கேள்விப் படும் சம்பவங்கள் சற்று அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுக்கிறது அதுவும் இந்த சம்பவம் பற்றி என் சுற்றமே உணர்ந்ததும் இன்னும் பிளிர்கிறது, அதுதான் ஒரு வித நூதன திருட்டு "தொழுவதற்கு இடம்" கேட்டு வரும் அன்னியப் பெண்களின் அட்டூழியம் ஏற்கனவே முன்று அல்லது அதற்கு மேல் நடந்தேறியிருக்கிறது இதனை அதிரைசார்பு வலைப்பூக்களில் விழிப்புணர்வு செய்திகள் வெளியிட்டும் இருக்கின்றன. ஆகவே நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நூதனத் திருட்டு எப்படி நடந்தேறுகிறது என்று இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் சொந்தங்கள் விளக்கினார்கள். இந்த மாதிரியான சம்பவங்கள் ரமளான் மாதத்திலேயே நடந்தேறியிருக்கிறது ஆனால் இவைகள் பட்டும் படாமலும் செய்திகள் வெளியில் வந்திருக்கிறது.

முதலில் யாசகம் கேட்டு வருகிறார்கள் வருபவர்கள் சற்று வயதான பெண்கள் அவர்களின் திட்டம் வீட்டிலிருக்கும் ஆட்கள் நடமாட்டத்தை கவனிப்பது அதாவது அதிகமான தளர்வுடன் இருப்பதுபோல் அயர்ந்து பதற்றம் காட்டி நடித்து வீட்டு வாசல் படியில் அமர்வதும் அங்கே ஆர அமர உட்கார்ந்து வீட்டிலுள்ளவர்களின் பேச்சு புழக்கம் இவைகளை கவனிப்பது இச்சமயத்தில் நம் வீட்டுப் பெண்கள் அந்த வயதான பெண்மனியை பார்த்து இறக்கம் கொண்டு உள்ளே வந்து படுத்துக் கொள்ளுங்கள் என்று ஆறுதல் காட்டுவார்கள் சரி அந்தப் பெண்ணுக்கு உள் வாசலில் பாய் கொடுத்து படுக்கவும் வைத்து விட்டு இவர்கள் வீட்டுக்குள் வேலைக்கும் சென்று விடுவார்கள்.

இவ்வகையான சம்பவங்கள் ஒரு சில இடங்களில் இப்படி என்றால் வேறு இடங்களில் உள்ளே வரவைக்காமல் வெளியில்தானே இருக்கிறார் அந்தப் பெண்மனி என்று அஜாக்கிரதையாக இருந்து விடுகிறார்கள் இச்சந்தர்ப்பத்திலும் நம் வீட்டுச் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வாசல் தாண்டிச் செல்வதும் வருவதும் அவர்களால் அவதானிக்கவும் படுகிறது இதெல்லாம் அந்தக் கயவர்களின் ஆயத்தம் அதாவது முன்னோட்ட ஏற்பாடுகள் (project study ??).

இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நடுத்தர வயதுடைய பெண் வருவார் இப்படியான பெண்கள் தேர்ந்தெடுக்கும் நேரம் தொழுகைக்கான வக்து நிறைவுக்கு வரும் நேரத்தில் வருவதும், தனியாகத்தான் வருவார் கொமர் காரியமென்று யாசகம் கேட்டுவருவார் குறிப்பிட்ட தொகை தோது செய்யனும் வசதியில்லை என்று வசூல் வேட்டைக்கு வருவார் இதில் நம் பெண்கள் வெகு சிலரே உதவிக்கு முன் வருகிறார்கள் அந்தச் சிலரிடம்தான் இவர்களின் கைவரிசை நீள்கிறது.


வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக வர முயற்சிப்பதும் உள்வாசல் வந்து அமர்ந்ததும் "தொழுகை வக்து முடியப் போவுது இங்கே தொழுதிடுறேம்மா" என்று உரிமையுடன் கேட்பது அதற்காக தொழுகைக்கான பாய் கேட்டு உரிமை தேடுவதும் இந்த அந்நியோன்யத்தால் இளகிய மனம் கொண்ட நம் பெண்கள் உருகி இடம் கொடுத்து விடுகிறார்கள் அவரும் சமர்த்தாக தொழுது முடித்து விட்டு சற்று நேரம் அதே இடத்தில் அமர்ந்து இருக்கிறார் (உரியவருக்கு அழைப்பு விடுக்கும் வேலையைச் செய்கிறார் மிஸ்டுகால்) இந்தப் பெண்ணின் தொழுகையை கண்டுவிட்டு சில நல்லுள்ளம் கொண்ட நம் பெண்கள் அந்தப் பெண்ணுக்கு உதவி செய்யவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

சரி இது வரை நடந்த இந்த திருட்டுக்களில் நமது செவிக்கு எட்டியதில் இங்கே :

ஒரு பெண் தொழுகைக்கு இடம் கேட்டு வந்து தொழுது கொண்டிருக்கும் போது மயக்கம் போட்டிருக்கிறார் இடம் கொடுத்த நம்மவங்க என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு பதறிப்போய் உதவிக்கு தடுமாறியிருக்கிறாங்க மயக்கம் போட்ட பெண்மனி சற்று விழித்துக் கொண்டு தன்னோட மொபைலில் இருக்கும் நம்பருக்கு ஃபோன் செய்து என்னோட சொந்தக் காரங்களை வரச் சொல்லுங்கன்னு சொல்லி நம்பர் கொடுத்து நம் பெண்மணி பேசி அவர்களை வரச் சொல்லியிருக்கிறார் வந்தது பெண்களல்ல நான்கு ஆண்கள் திடுமென்று வந்து தனியாக இருந்தப் பெண்ணை அடித்து மிரட்டி நகை அலமாரியிலிருந்த பணம் இவைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

மற்றொரு சம்பவம் ஒரு வீட்டில் அனைவரும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்றிருக்கிறார்கள் அவர்கள் செல்வதற்கு முன்னர் வீட்டிற்கு வந்த யாசகம் கேட்கவந்த பெண்ணிடம் நாங்க அவசரமா வெளியில போயிட்டு இருக்கோம் நீங்க போயீட்டு அப்புறம் வாங்கன்னு சொல்லிட்டு அவர் வெளியில் சென்றாரா அல்லது இருக்கிறார என்றும் பார்க்காமல் வீட்டின் உள்ளே சென்றதும் அந்த யாசகம் கேட்டு வந்தப் பெண் உள்ளே பதுங்கியிருந்து வேண்டியவர்களை வரவழைத்து உள் தாழ்ப்பாள் திறந்து விட்டு இருப்பதை சுருட்டிச் சென்றிருக்கிறார் இது எப்படி நிகழ்ந்திருக்கும்னு சொல்லியா தெரியனும்.

  • வீடுகளில் இருக்கும் பெண்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முன்பின் தெரியாதவர்களை வாசல் படி தாண்டி வீட்டிற்கு உள்ளிழுக்காதீர்கள்.

  • அந்நியப் பெண்களில் யாரும் அவர்கள் வைத்திருக்கும் அல்லது உங்களிடம் இருக்கும் கைபேசியிலிருந்து (mobile phone) போன் போட்டு கொடுங்கள் என்று கேட்டால் தயவு செய்து அக்காரியத்தை செய்து கொடுக்காதீர்கள் (இந்த நிகழ்வு அனுபவத்தை சந்திக்க நேர்ந்த பெண்மணி நம்மிடம் சொன்னது).

  • வீட்டு வேலை செய்யும் பெண்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துங்கள் முடிந்த வரை. சிலதை இழந்தால் தாங்க முடியாது அல்லது திரும்பப் பெற முடியாது ஆகவே எல்லை தாண்டி உரிமை கொடுக்காதீர்கள்.

  • தற்காலிக பணிக்கு வரும் பெண்களை தனித்து இருத்திட வைக்காதீர்கள் உங்கள் அனுமதியின்றி வீட்டுச் சாதனங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்காதீர்கள்.

  • வீட்டில் வேலையாட்களால் அசம்பாவிதம் எது நடந்தாலும் உடனுக்குடன் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு தெரிவித்துடுங்கள், எதனையும் மறைத்து விடாதீர்கள்.

ஹஜ் பெருநாள் நேரமிது இச்சந்தர்ப்பத்தில் திருட்டுக் கும்பலின் எண்ணிக்கை நமது சுற்று வட்டாரத் தெருக்களில் அதிகம் தென்படும், ஏற்கனவே பிச்சைக்காரகளின் அட்டூழியம் பற்றி கட்டுரை அதிரைநிருபரில் வெளியாகியிருந்தது இங்கே நினைபடுத்துகிறோம். நம்முடைய ஈகை குணத்தை ஈனக்குணம் கொண்ட கயவர்கள் சாதகமாக பயண்படுத்திக் கொண்டு கொள்ளையில் ஈடுபடுதை தடுத்தே ஆகவேண்டும்.

நம் பெண்கள் வீட்டருகே அல்லது தெருக்களிலோ முன்பின் தெரியாத அல்லது அறிமுகமில்லாத பெண்ணோ / ஆணோ தென்பட்டால் வீட்டிலிருக்கும் ஆண்களுக்கு தெரிவித்து முன்னெச்சரிக்கையாக இருந்திடுங்கள், வீட்டில் ஆண்கள் இல்லாத பட்சத்தில் பக்கத்து வீட்டுக்கு தகவல் கொடுத்து அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்திடுங்கள்.

இன்னும் இருக்கு சொல்ல.... மற்றதை என் நேசங்கள் பின்னூட்டத்தில் சொல்லித் தருவார்கள்.

- அபுஇபுறாஹிம்

15 Responses So Far:

அலாவுதீன்.S. said...

அன்பு சகோதரர் அபுஇபுறாஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நான் ஊரில் இருக்கும்பொழுது பார்த்தது அரைமணி நேரத்திற்கு ஒருமுறை கதவு தட்டப்படும். காசு கொடுப்பதற்கு ஆபிஸ் பாய் போல் ஹவுஸ் பாய் நம் வீட்டிலும் வைக்க வேண்டும் அளவுக்கு இந்த பிச்சை எடுக்கும் கூட்டங்களின் தொல்லை தாங்க முடியவில்லை.

ஒரு நாள் கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே ஒருவன் இருந்தான். கதவை திறந்தால் ஒருவன் காலை 11 மணி இருக்கும். மதியம் சாப்பாட்டிற்கு வருவேன் எனக்கு சாப்பாடு கொடுங்கள் என்று சொல்லி விட்டு போகிறான். ( நம் வீட்டு பிள்ளைகள் நான் விளையாட போகிறேன் ஒரு மணிக்கு வந்துவிடுவேன் சாப்பாடு ரெடியாகனும் என்று உம்மாவிடம் சொல்லி விட்டு போவது போல்). காசு கொடுக்கும்வரை கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் தொல்லை தாங்க முடியாது. நிம்மதியாக வீட்டில் தூங்கவும் முடியாது. காலையிலிருந்து மாலைவரை வருவார்கள். என் வீட்டு வாசல் கிரீல் கேட்டில் உள்ள துணியை விலக்கி அவர்களின் முகத்தை கேட்டில் அழுத்தி வைத்துக்கொண்டு உள் வாசல் திறந்து (வெளி கேட் பூட்டப்பட்டிருப்பதால்) இருப்பதால் அவர்களின் பார்வையில் ஒரு நோட்டம் இருக்கும். சில நேரங்களில் நாம் பயந்து போகும் அளவுக்கும் அவர்கள் முகம் இருக்கும். நாம் வந்து விட்டால் துணியை விட்டு விடுவார்கள்.

அலாவுதீன்.S. said...

ஒரு நாள் காலை 11 மணி இருக்கும் கதவை தொடர்ந்து தட்டும் சத்தம்;; கதவை திறந்தால் ஒருவன் பிச்சைக்காரன் போல் தெரியவில்லை கைலி சட்டை நன்றாக இருக்கிறது. மதியம் சாப்பாட்டிற்கு வருவேன் எனக்கு சாப்பாடு கொடுங்கள் என்று சொல்லி விட்டு போகிறான். ( நம் வீட்டு பிள்ளைகள் நான் விளையாட போகிறேன் ஒரு மணிக்கு வந்துவிடுவேன் சாப்பாடு ரெடியாகனும் என்று உம்மாவிடம் சொல்லி விட்டு போவது போல்). என்ன கொழுப்பு இது அதிகார பிச்சையாக இருக்கிறதே. பிறகு 1மணிக்கு மேல் வந்தான். எனக்கு சாப்பாடு வேண்டும் என்று சொன்னான். சாப்பாடு இல்லை இந்தா 10ரூபாய் உள்ளது போய் ஹோட்டலில் சாப்பிடு என்று சொன்னேன். இவர்களுக்கு இரக்கப்படக்கூடாது என்று நினைக்கிறேன்.

அலாவுதீன்.S. said...

காசு கொடுக்கும்வரை கதவை தொடர்ந்து தட்டிக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் தொல்லை தாங்க முடியாது. நிம்மதியாக வீட்டில் தூங்கவும் முடியாது. காலையிலிருந்து மாலைவரை வருவார்கள். என் வீட்டு வாசல் கிரீல் கேட்டில் உள்ள துணியை விலக்கி அவர்களின் முகத்தை கேட்டில் அழுத்தி வைத்துக்கொண்டு உள் வாசல் திறந்து (வெளி கேட் பூட்டப்பட்டிருப்பதால்) இருப்பதால் அவர்களின் பார்வையில் ஒரு நோட்டம் இருக்கும். சில நேரங்களில் நாம் பயந்து போகும் அளவுக்கும் அவர்கள் முகம் இருக்கும். நாம் வந்து விட்டால் துணியை விட்டு விடுவார்கள்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.இதுப்பற்றி யாராவது எழுதலாமே?

அலாவுதீன்.S. said...

/// சகோ. அபுஇபுறாஹிம் அவசியமான எச்சரிக்கை ஆக்கம். வாழ்த்துக்கள். ///
முஸ்லிம் பகுதிகளில் பிச்சை எடுக்க வருபவர்களில் நிறைய பேர் முஸ்லிம்கள் இல்லையாம் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள்தானாம். கேரளாவில் இவர்களுக்கு முஸ்லிம் போல் மேக்கப் போட்டு கொடுக்க ஒரு இடம் இருக்கிறதாம். அங்கு போய் மேக்கப் போடுவதோடு முஸ்லிம்களிடம் பிச்சை எப்படி கேட்பது என்ற கலையை கற்றுக்கொண்டு வருவார்களாம்.

சென்னையை சேர்ந்த சகோதரர் சொன்னது: ஹைகோர்ட் வாசலில் ஹைடெக் பிச்சைக்காரியாம் நல்ல ஆங்கிலத்தில் பிச்சை கேட்குமாம். (இந்தப்பெண் நினைத்தால் ஆங்கிலம் கற்றுக்கொடுத்து நல்லபடியாக சம்பாரித்து வாழலாம்) என்ன ஆங்கிலத்தில் பிச்சை கேட்கிறாயே என்றால் உன்னை விட உன் தந்தையை விட நான் நன்றாக ஆங்கிலம் பேசுவேன் என்று பிச்சை கேட்குமாம்.

அடுத்து மண்ணடியில் ஒரு பிச்சைக்காரி 100ரூபாய் பிச்சை போட்டால் கூட வேண்டாம் என்று சொல்லி விடுமாம். எனக்கு ஒரு சாப்பாடு பொட்டலம் வாங்கி கொடு போதும் என்று சொல்லுமாம். 4பேர் வாங்கி கொடுத்தால் அவர்கள் போகும் வரை இருந்து விட்டு மற்றவர்களிடம் இதே போல் கேட்குமாம். பரவாயில்லையே காசு வாங்காத பிச்சைக்காரியாய் இருக்கிறதே என்று நினைத்தாராம். பிறகுதான் தெரியவந்திருக்கிறது. இப்படி நிறைய சாப்பாடு பொட்டலங்களை வாங்கி வேறு ஏரியாவில் கொண்டு போய் விற்று விடுமாம். (வித்தியாசமான பிச்சையாய் தெரியவில்லை).

அலாவுதீன்.S. said...

மக்கள் தொலைக்காட்சியில் போனமாதம் 3தினங்கள் இந்த பிச்சைக்காரர்களைப்பற்றி ஆய்வு நிகழ்ச்சியை பார்த்தேன். இதில் கிடைத்த செய்திகள்.

தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பவர்கள் அதிகமாக வெளிமாநிலத்திலிருந்து வருபவர்கள். சில இடங்களில் போலீஸ் இவர்களை அரெஸ்ட் செய்து வருகிறார்களாம். இன்னும் இவர்களுக்காக கடுமையான சட்டம் இயற்றப்படவில்லையாம்.

படித்த பட்டதாரி பிச்சைக்காரர்கள் பாம்பே, டெல்லி, கல்கத்தா, பெங்களுர் போன்ற நகரங்களில் இருக்கிறார்களாம். வேலை கிடைக்காததால் இந்த வேலைக்கு (பிச்சைக்கு) வந்து விட்டோம் என்று சொல்கிறார்களாம்.

ஃபார்டைம் பட்டதாரி பிச்சைக்காரர்களும் இருக்கிறார்களாம்.

பிச்சைக்காரர்களுக்கு வங்கி கணக்கு, மற்றும் சொத்துக்கள் இருக்கிறதாம். குறைந்த வருமானம் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 300 முதல் 1000 வரை இதற்கு மேலும் இருக்குமாம்.

அலாவுதீன்.S. said...

அதிர்ச்சியடைய வைக்கும் விஷயம் என்னவென்றால் இந்த பிச்சைக்காரர்களை இயக்குவதற்கு ஒரு தலைவன் தாதாக்கள் என்று பெரும் கூட்டம் இருக்கிறதாம். பிச்சைக்காரர்களை வெளிமாநிலத்திலிருந்து கடத்தியும் கொண்டு வருவார்களாம், குழந்தைகளையும் கடத்திக்கொண்டு வந்து இந்த தொழில் ஈடுபடுத்துவார்களாம். தலைவனாக இருப்பவனை மீறி எதுவும் செய்யமுடியாது
இவர்களின் மேற்பார்வையில்தான் பிச்சை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பிச்சைக்காரர்கள் ஒரு நாளைக்கு இவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாம். பிச்சை எடுப்பவர்களுக்கு நாள் சம்பளம் பாக்கி எல்லாம் அந்த தாதா தலைவனுக்கு போய்ச்சேருமாம்.

பாம்பேயில் பிச்சை எடுத்து அதன் தலைவனுக்கு போகும் வருமானம் 15 கோடி என்று சொன்னார்கள். தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

வேலை செய்து பிழைத்தால் என்ன என்று கேட்டால் இந்த தொழில்தான் எந்த கெடுபிடியும் இல்லையாம். யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லையாம். (மேனேஜர் கேள்வி கேட்க மாட்டான், முதலாளி கேள்வி கேட்க மாட்டான், பார்டனருக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை, செக் வந்ததா? போனாதா? என்ற கேள்வி இல்லை, புதிதாக வந்த அலுவலக ஊழியருக்கு தொழில் கற்று கொடுக்க வேண்டியதில்லை, எந்த நேரமும் லீவு போட்டுக்கொள்ளலாம்.) இத்தனை வசதிகள் இந்த தொழில் இருப்பதால் சொகுசான தொழில் இதுபோன்ற வேறு ஒன்றும் இல்லையாம்.

பிச்சை எடுப்பவர்களை மன்னிக்கலாம் ஆனால் இவர்களை வைத்து தொழில் நடத்துபவர்களை என்ன செய்ய???????????????????????

பள்ளிவாசல் வெளியே பிச்சை எடுக்கும் பெண்களைப்பார்த்தால் தலைதுணியோடு அடக்கமாக இருப்பார்கள். வேறு இடங்களில் பார்த்தால் பிறமதத்தை சேர்ந்தவர்கள்தாம் என்பதை நிருபிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்கள் தங்க வசதியான இடமாக தர்கா இருக்கிறது. நாம் கவனமாக இருப்பது நல்லது. இவர்களின் நடமாட்டம் தெருவில் அதிகமாகத்தான் உள்ளது. ஜமாஅத் மூலம் இதற்கு ஒரு வழி செய்தால் நலமாக இருக்கும்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்த அபுஇபுறாஹிம் காக்கா அவர்களுக்கு நன்றி!
இரவில்தான் 'ஊர்காவல்' தேவைப்படுகிறது...பகலில் என்ன மாதிரியான ஏற்பாடுகளை செய்வது?

ஆலோசனைகளை இங்கு பகிர்ந்து கொண்டால் பலன் கிடைக்கும். ஆலோசனைகளின் மூலம் கிடைக்கும் நல்ல வழிமுறையை ஜும்ஆக்களில் துண்டுபிரசுரம் கொடுக்கலாம் அத்துடன்,அதே ஜும்ஆக்களில் அறிவிப்பும் செய்தால் மக்களிடம் தகவல் போய் சேரும்.

புனிதமான ஒரு கடமையை தீய வழிகளுக்கு பயன்படுத்தும் இவர்களை என்ன வென்று சொல்வது?

அதிரையிலிருந்தும் அதிரை நிருபரிலிருந்தும் கிடைக்கும் தகவல் அடிப்படையில் நோக்கினால், கிட்டதட்ட ஒரே மாதிரியான யுக்தியை பின்பற்றுகிறார்கள் என்பதை அறியமுடிகிறது. இவர்கள் எங்காவது பிடிப்பட்டால் அவள்;அவன் எந்த பகுதி,ஊர் என்பதையும் முக்கியமாக தெரிவதன் மூலம் இவர்கள் இயங்குகிறார்களா அல்லது இயக்கப்படுகிறார்களா ? என்ற விபரம் குற்றம் தடுக்க மிகவும் உதவும்.

அனேகமாக 'கைத்தேர்ந்த மூளை' இயக்குவது போல்தான் தெரிகிறது.
முன்னோட்ட ஏற்பாடுகளும் செயல் திட்டமும் இந்த கிழடுகளின் திட்டமாக இருப்பதாக தெரியவில்லை.

என் கருத்தை முன்வைத்துவிடேன்.
காக்காமார்களே உங்கள் கருத்த சொல்லுங்க.

sabeer.abushahruk said...

ஊர்கூடி தீர்வு காண்பது இதில் எந்த அளவு சாத்தியம் என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி கண்டாலும் அது எவ்வளவு சீக்கிரம் நடைமுறைப் படுத்தப்படும் என்பதிலும் தெளிவில்லை. 

எனவே, பாதிக்கப் படுமுன் காத்துக்கொள்ள அபு இபுறாகீமின்(well done Abu Ibrahim) இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நாம் அனைவரும் தத்தமது குடும்பகளுக்கும் நண்பர்களுக்கும் இச்செய்தியை உடனடியாக பரப்பி கவனமாக இருக்கச் செய்ய வேண்டும். அப்படிச்செய்வது மேற்கொண்டு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உடனடித் தீர்வாகும்.

இதனூடே, நிரந்தர தீர்வுக்கு ஊர் கூடலாம்.

அப்துல்மாலிக் said...

திருடனும் என்ரு முடிவுபண்ணிட்டா எப்படிவேணும்னாலும் ஐடியா கொடுக்க சைத்தான் இருக்கான், நாம்தான் ஜாக்கிரதையா இருக்கோனும், நல்ல விழிப்புணர்வு கட்டுரை

குறிப்பாக வீட்டுவேலைக்கு இருப்பவர்களிடம் அதி ஜாக்கிரத வேண்டும், அவங்கதான் வீட்டின் செக்க்யூரிட்டி பற்றி திருட்டுக்கூட்டத்துக்கு தகவல் தரும் கம்யூனிக்கேட்டர் என்பது என் கருத்து. இப்போதுல்ல காலக்கட்டத்தில் சகோதரிகள் தனிக்குடித்தனம் என்று பிரிந்து தனியா இருக்காங்க, இதுனே இவர்களுக்கு பெரிய ப்ளஸ் பாய்ண்ட்.

jalal said...

அஸ்ஸாலமு அலைக்கும் (வரஹ்..,)
தம்பி அபுஇபுறாஹிம்...
தாங்களின் கட்டுரையை படித்து விழித்துக்கொண்டேன் ?
இப்படிப்பட்ட ஒரு கட்டுரை தற்போது நடந்துக்கொண்டிருக்கும் திருட்டுக்கு அவசியம் தான்! அக்கம் பக்கம் அறிந்திடாத நம் ஊர் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி !
இதேபோல் மற்றுமொரு நிகழ்ச்சி நடந்து இருக்கின்றது நமது ஊரில். கை ரேகைப்பார்த்து ஜோசியம் சொல்லுவதாக வீட்டுக்குள் நுழைந்துயிருக்கு ஒரு நடுத்தர வயது பெண், வீட்டில் உள்ளவங்க சொல்லியிருக்காங்க இந்தப்பழக்கமெல்லாம் எங்களுக்கு இல்லையென்று உடனே ஜோசியம் சொல்ல வந்தப்பெண் இல்லையம்மா நான் சரியா சொல்வேன் உங்க வீட்டு அலமாரியில போய் பாருங்க 4,500 ரூ இருக்குன்னு அதேபோல் இருந்துருக்கு (ஒரு வேலை ஜோசியம் பார்க்க வந்த பெண்ணே வைத்துருப்பாலோ ? அல்லது அனுமானியமா சொல்லியிருப்பாலோ) உடனே வீட்டுப்பெண்களுக்கு அவள் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. அந்த தருனத்தை எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு மனதில் நிம்மதி, உடனே தான் வந்த வேலையை தொடங்க ஆரம்பித்து விட்டாள் . உங்க வீட்டில் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினைகள், உடம்பு சுகக்குறைவு இப்படி ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளது எல்லோரும் அருகிள் வந்து உட்காருங்க பிரச்சனைக்கு தீர்வு சொல்றேன் என்று சொல்லி எல்லோரும் பக்கத்தில் வந்ததும் பொடியை எடுத்து ஊதிவிட்டு அணைவரும் மயக்கம் அடைந்த்thaதும் வீட்டில் உள்ள எல்லாப்பொருட்க்களையும் சுவாகா செய்துவிட்டு ஆட்டத்தை முடித்துக்கொண்டால். இப்படியிருக்கு நமது ஊரில் உள்ள மக்களின் விழிப்புணர்வு.
""திருடணா பார்த்து திருந்தா விட்டாள் திருட்டை ஒழிக்க முடியாது""
""ஏமாறுகிறவன் இருக்க இருக்க ஏமாத்துறவன் ஏமாத்திக்கிட்டே தான் இருப்பான்"". போன்ற வரிகள் தான் ஞாயபகம் வருது.
விழித்துடு மனிதா விழித்துடு

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜலால் காக்கா: வாங்க ரொம்ப நாலா ஆளையேக் காணோமே ! நலம் தானே.

இன்னொரு சம்பவம் பத்தி கேட்டீங்கன்னா அவங்ககூட ஒரு டீல் போட்டுக்கலாம்னு கொஞ்சம் மாத்தி யோசிக்க போயிடுவீங்க, யாசகமே சுவாசமாகவும் அதனையே வழமையாக கொண்ட பெண்மனி அன்றும் அங்கு வர அவரை கண்டதும் அந்த வீட்டுப் பெண்மனி உள்ளே சென்று அவருக்கான அன்றைய பங்கை எடுத்து வந்து கொடுத்திருக்காங்க, ஆனால் அந்தப் பெண் "யாம்மா எப்போதும் இதத் தானமா தருவிய இன்னைக்கு என்னோட மொபைலுக்கு ரிசார்ஜ் செய்ஞ்சுடுங்கம்மா"ன்னு கேட்டது அங்கிருந்த யாவருமே அதிர்ந்தனர் அந்த அளவுக்கு அன்யோன்யமாக உள்ளே வந்து வீட்டாரோடு ஊடுவி எப்படி அவர்கள் மொபைல் ரீசார்ஜ் செய்கிறார்கள் என்பதையும் அறிந்து வைத்திருக்கிறார் என்றால் யாசகம் கேட்பவர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது பாருங்கள்...

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல விழிப்புணர்வு காக்கா,

ஆண் மக்கள் வெளிநாட்டில் அதிகம் உள்ள ஊர் அதிரைப்பட்டினம். நிச்சயம் திட்டம் போட்டு தான் திருட்டு கும்பல் சுற்றித்திரிகிறது.

ஊர் காவல்படை என்ற ஓர் அமைப்பு அதிரையில் ஒரு சில பகுதியில் செயல்பட்டு வருகிறது என்ற செய்தி அதிரை வலைப்பூக்களில் சில மாதங்களுக்கு முன்பு படித்ததுபோல் ஞாபகம். நூதன திருட்டுக்களை தடுப்பதற்கு ஒவ்வொரு முகல்லாவும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

தமிழகத்தில் தற்போது கொடிகட்டி பறக்கும் செய்தி பணத்திற்காக குழந்தை கடத்தல் மற்றும் கொலை.

நூதன திருட்டு கும்பலை பிடிக்க காவல் நிலையத்தை அதிரையில் உள்ள சமூக இயக்கங்கள் அனுக வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு