Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இணையத்தில் வலை வீச்சு... 20

அதிரைநிருபர் பதிப்பகம் | November 30, 2010 | ,

Version - 3

இணையத்தில் காண்பது (சமூக) பிணைப்பா அல்து தனிமனித சுதந்திரமா ? இவைகளையும் இங்கே பார்த்து வருகிறோம். இணையத்திலிருக்கும் சாதக பாதக நிகழ்வுகளை முடிந்த வரை என் தேடலுக்குள் எட்டியதையும் சிக்கியதையும் கோர்வையாக்கி உங்களின் சிந்தனைக்காக வைத்திருக்கிறேன்.

இன்றையச் சூழலில் மிகப் பிரபலமாக இருந்துவரும் எத்தனையோ சமூக பிணைப்பு வலைத் தளங்களில் முதன்மையாகவும் அதோடு நாம் யாவருக்குமே நன்கு அறிந்த "சமூக பிணைப்பு" வலைத் தளமான "facebook.com" தோற்றமும் அதன் அசு வளர்ச்சியும் வியக்க மட்டும் வைக்கவில்லை அதன் விபரீதம் எந்த அளவுக்கு பரந்து விரிந்து கடை போட்டிருக்கிறது என்பதும் அதிர்ச்சியை கொடுக்கிறது.

"ஃபேஸ்புக்" 2004ம் வருடம் ஜனவரி இரண்டாவது வாரத்தின் இறுதியில் "ஹார்வர்ட் பல்கலைகழக" மாணர்வகள் விடுதி அறையில் தனியாக இருந்த "மார்க் ஜுக்பெர்க்" தனது தொலைந்த நட்புகளை எப்படி மீட்டெடுப்பது என்று மல்லாக்க படுத்து யோசித்தன் வினையே பின்னர் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 2004 ஃபிப்ரவரி மாதம் உருவாக்கிய வலைத் தளம்தான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே என்று உலவவிட்டனர், பின்னர் பாஸ்டன் இன்னும் பிற கல்லூரி மாணவர்களையும் வலைக்குள் சிக்க விட்டனர் அதோடில்லாமல் பள்ளிகளிலும் இதன் ஊடுருவல் எத்தியது.

பள்ளிக்கூட எல்லையைத் தொட்டவுடன்தான் ஒரு கட்டுப்பாடு வைக்கப்பட்டது அதில் 13 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இதில் இணையலாம் என்று ஆனால் அங்கிருக்கும் வரை அவர்கள் வயதைச் சரியாகத்தான் சொல்லி வந்தனர் பின்னர் இதனை வெளியுலகிற்கு திறந்து விட்டதும் எத்தனை பேர் உண்மையான வயதைச் சொல்லியிருப்பார்கள் ? இன்று 500 மில்லியனுக்கு மேல் பயன்பாட்டார்களைக் கொண்டிருக்கிறது இந்த வலைத் தளம் இதுவே தடம் மாறுபவர்களின் மனதையும் கொன்று குவித்து வருவதையும் மறுக்க முடியாது.

ஆரம்பித்தவர்கள் நோக்கம் என்னவோ தொலைத்த நண்பர்களை வலைக்குள் சிக்கவைக்கத்தான், ஆனால் இதனை நாளடைவில் நட்பு என்பதன் அற்புதமான மகிமையை கொச்சைப் படுத்தவும், காமம் கலக்கவும், களவு கற்பிக்கவும், நம்பிக்கை துரோகம் செய்யவும், குழப்பம் உண்டாக்கவும், கணவன் மனைவி உறவுக்குள் ஊடுருவவும், பழிவாங்கிடவும் ஒரு சாரார் பயண்படுத்த ஆரம்பித்து விட்டனர். இதில் மிகச் சிலரே நல்ல முறையில் இந்த தளத்தை ஆக்கப் பணிகளுக்கும் அவர்களின் நலன் தேடும் நேசங்களை ஒன்றினைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் பயன்பாடுகள் பற்றி சொல்வதனால் நீண்டு கொண்டே செல்லும், ஆகவே கேள்விகளாக உங்களிடையே ஏதும் உதித்தால் பின்னுட்டங்களாக அனுப்பித் தாருங்கள் அதற்கான பதிலோடு இன்னும் விரிவாக பார்க்கலாம். சரி, இவர்கள் எப்படி இந்த சேவையை இலவசமாகத் தருகிறார்கள? இவர்களின் வெற்றி எங்கே ஆரம்பித்தது?

முதலில் இவர்கள் வைத்த குறி தடுமாறும் இளமையை இலகுவாக வலைத்துப் போட்டு மிகப் பெரிய வலை வட்டம் உருவாக்கினார்கள் அங்கே அவர்கள் கண்டது இளைஞர்களின் அதீத உலக ஆசைகளும், ஆண் பெண் மோகம் இவைகள்தான். இதனையே முலதனமாக வைத்தார்கள் தங்களின் பொழப்புக்கும் இந்த வலைத் தளத்தை இலவசமாக நடத்துவதற்கும், பெரிய பெரிய நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்களைப் பெறுவதற்கு சேமித்து வைத்திருக்கும் அங்கே பெற்ற அரிய தகவல்களை பரிமாறிக் கொள்ளச் செய்தார்கள்.

இதன் பயன்பாட்டாளர்கள் ஏற்கனவே பதிந்து வைத்திருந்த தகவல்களை அவர்களுக்குத் தெரியாமலே இவ்வகை வலைத் தளங்களை நடத்துபவர்களின் தகவல் பெட்டகத்திலிருந்து அதாவது சுயவிபரங்களின் குறிப்புகளிலிருந்து அவர்களின் ஆண்/பெண் பால், விருப்பு, வெறுப்பு, இடம், மோகம், செலவீனங்கள், குடியிருப்பு, உறவுகள், எவ்வகையில் தேவைகள் நிறைவு செய்வார்கள் இன்னும் நிறைய விபரங்களை எடுத்து அவரவர் நாட்டிற்கு தகுந்த மாதிரி, மாநிலத்திற்கு தகுந்த மாதிரி நேர்படுத்தி ஆங்காங்கே இருக்கும் நிறுவனங்களுக்குக்கு சந்தைபடுத்தும் ஆய்வு (market study) என்ற பெயரில் கொடுத்து அவர்களின் விளம்பரங்களை பெருவதற்கு பயன்படுத்துகிறர்கள்.

அவ்வாறு பெறப்படும் விளம்பரங்களை பயன்பாட்டாளர்களின் விருப்பு வெறுப்புக்குத் தகுந்தார்போல் அவர்கள் ஃபேஸ்புக் வலைத் தளத்திற்கு வருகை தரும் நேரங்களில் தானாக இவ்வகை விளம்பரங்கள் கண்ணுக்குள் சிக்க வைக்கின்றனர் இதில் சிலர் “அட இதென்ன புதுசா இருக்கேன்னு” அந்தச் சுட்டியை தட்டி விட்டால் வலைத் தளம் நடத்துபவர்களின் கல்லா கட்டும் சொட்டு நீர் பாசனம் போல் அங்கே ஒரு சொட்டு இங்கே ஒரு சொட்டு என்று சிறு துளிகள் அப்படியே பெரும் வெள்ளப் பெருக்கெடுத்து நிறையும் அவர்களது கஜானா. இதுமட்டுல்ல ஆன்லைன் கேம்ஸ் இதில் இவர்கள் அடிக்குக்கும் கொள்ளைக்கும் எல்லையில்லை.

உதாரணத்திற்கு வளைகுடாவில் இருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் உங்களின் நுழைவு மின் அஞ்சல் முகவரியையும் கடவுச் சொல்லையும் இட்டு இந்த வலைத்தளத்திற்குள் சென்றால் இங்கே இருக்கும் நிறுவனங்களின் விளம்பரங்கள் உங்கள் கண்ணில் படும் அவைகள் உங்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போலிருக்கும், அப்படியே ஊருக்குச் சென்றதும் நடுவிக் காட்டுக்கு போயி அங்கே தோப்பில உட்கார்ந்துகிட்டு ஃபேஸ்புக்கை திறந்து மேய்ச்சலில் ஈடுபட்டால் கண்ணுக்குள் சிக்கும் இந்திய நிறுவனங்களின் விளம்பரங்கள், என்ன ஒரு வித்தியாசம் இங்கே எந்த வகை பொருளின் விளம்பரமோ அதுவே அங்கே இந்திய கம்பெனியாக வரும் ஏன் ஒருவேலை உங்களின் ரசனைக்கு தகுந்தார் போல் "தரமான உரம்" என்ற விளம்பரமும் கூட வரலாம்.

மிகப் பெரிய இரண்டு நிறுவனங்களில் இங்கே இவர்களின் செயல்பாடுகளில் நாம் கண்ட அனுபவம். இவர்கள் எப்படி அனுகுகிறார்கள் என்றால், அவர்களின் முன்னுரையே இப்படித்தான் இருக்கும் "உங்கள் பொருட்களை சந்தைப் படுத்த சரியான வழி என்றும், உங்களின் பொருட்களின் மோகம் அதிகம் எந்த எந்த இடங்களில் இருக்கிறது என்று பட்டியலிடுவதும் அதனை அப்படியே அச்சு எடுத்துவந்து பூச்சாண்டி காட்டுவதும் அதில் முதல் ஒரு இலட்சம் அடி(க்கு) hit இலவசம் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு அடிக்கும் (hit) இவ்வளவு வரும் என்றுதான் வருவார்கள், முதல் மாதம் நன்றாக இருப்பதாக உணர்வோம், அடுத்தடுத்த மாதம் அவர்கள் கேட்டுவரும் தொகைகயைக் கண்டால் தலையைச் சுற்ற ஆரம்பிக்கும், மூன்றே மாதத்தில் அந்த இரண்டு நிறுவனங்களும் இந்த விளையாட்டுக்கு நாங்க வரலைன்னு பின் வாங்கிக் கொண்டன.

ஒவ்வொரு அடிக்கும் காசு கொட்டுவது "வீட்டு மணைகளில் மட்டுமல்ல" இந்த இணையக் கடலில் வலைகட்டி உல்லாசம் தேடும் இவ்வலைத் தொட்டிலிலும் ஒவ்வொரு அடிக்கும் (click) காசு இதுதான் இவர்களின் வயத்துப் பொழப்பு ???

இந்தப் பாவப்பட்ட "முகப்புத்தகம்" (facebook.com) தனது கிளை தலைமை அலுவலங்களை அமெரிக்கா, ஐயர்லாந்து, சவுத்கொரியா, நியூஸ்லாந்து மற்றும் இந்தியா (ஹைதராபாத்) வைத்திருக்கிறது. சென்ற வருடம் வரை இதன் வருமானம் 800 மில்லியன் டாலர்கள். மொத்தம் 1789 க்கு மேல் வேலையாட்கள் இருக்கிறார்கள்.

எந்தவிதமான ஆக்கபூர்வமான பனிகளுமில்லாமல் வெறுமனே பொழுது போக்குக்காக பயன்படுத்திவருகிறோம்னு நாம் சொல்லிக் கொண்டாலும் இதன் பாதகங்களை உணர்ந்திருக்கிறோமா ? அதனால் பாதிக்கப் பட்டிருக்கிறோமா ? நமது நேசங்களில் எத்தனை பேர்கள் இதனை சிக்கலாக பார்க்கிறார்கள் ? எத்தனை பேர் சிறப்பாக வலைய வருகிறார்கள் ? இதனால் கண்ட பலன்கள்தான் என்ன ?
?!

|-|-|-|-|-|- என்ன |-|-| இங்கே |-|-| மணை |-|-| போட்டிருக்கான்னு |-|-| கேட்டுடாதீங்க !-|-|-|-|-|-|


சொடுக்கு : நினைவலைகள் சும்மா இருக்காமல் "பட்டா இல்லாத (தனி)குடில்கள் என்று ஒரு சிறிய ஆக்கம் ஒன்றினை ஏனோ திடீரென்று ஞாபகத்திற்குள் வரவைத்து யோசிக்க வைக்கிறது இன்னும், அதன் சாரமும் இங்கே:-

தனிக் குடில் blog எனப்படும் வலைப்பூக்கள். இவைகளின் ஆதிக்கத்தினால் வேண்டியவர்கள் தனக்கென தனி வீடு கட்டிக் கொண்டு அங்கே நடத்தும் கொட்டங்கள் ஏராளம், என் வீடுதானே நான் எதனையும் செய்வேன் எப்படி வேனும்னாலும் இருப்பேன், இதுதான் என் வாதமென்று தன்னிச்சையாக செயல் படுபவர்களையும் காண்கிறோம்,.

கிடைத்திருக்கிற இடத்தில் இலவசமாக வீடுகட்டி நல்லது செய்பவர்களும் ஏராளம். அதுமட்டுமா இப்படி கட்டிக் கொண்ட தனிக் குடிலில் தனிமனித துவேஷம், சங்கங்கள், கட்சிகள், இயக்கங்கள் வாடகை கொடுக்காமல் தன்னிச்சையாவோ அல்லது பொது நலனோடும் குடில் கொண்டு வருகிறார்கள்.

சிலர் கதவைப் பூட்டிக் கொண்டு அடிக்கும் கொட்டம், மற்றும் சிலர் கதவை திறந்து போட்டுக் கொண்டு அடிக்கும் கொட்டம், வேறு சிலரோ பினாமியாக (முகமூடியுடன்) இலவசமாக கிடைத்திருக்கிறதே என்று படுத்தும் பாடு அதிகம் அதிகம் அதிகம்.

இந்த இலவச குடில் கட்டி போஸ்டர் ஓட்டுபவர்களோ முழு நேரப் பத்திரிக்கைக்கு நிகராக செயல்படுவதாக சொல்லிக் கொண்டும் அதோடு தங்களின் முகம் மூடிக் கொண்டு ஆனால் ஊருக்கு வெளிச்சம் காட்டுவதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

சரி, இந்த இலவச (மணைப்) பட்டா இல்லாத குடில்களுக்கு இடம் கொடுத்தவர் திடீரென்று பிடுங்கிக் கொண்டால் என்ன செய்வார்கள் இவர்கள் ?

சரி நாம மல்லாக்க படுத்து யோசிப்போமா

- அபுஇபுறாஹிம்

20 Responses So Far:

sabeer.abushahruk said...

வர வர மர்ம நாவல் லெவலுக்கு முக்கியமான இடத்தில் தொடரும் போட்டு அடுத்தவாரம் வரை நெஜமாகவே மல்லாக்க படுத்து யோசிக்க வைத்துவிடுகிறீர்கள்.

(ஆனால், எத்தனை யோசித்தாலும் நம்ம மண்டைக்குத்தான் ஒண்ணும் பிடிபட மட்டேங்கிறது.)

அபு இபுறாகீம், உண்மையிலேயே எனக்கு ரொம்ப புதிதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது நீங்கள் சொல்லும் விஷயங்கள். எல்லாம் சொல்லித்தாருங்கள்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
தொலைந்த நட்புகளை எப்படி மீட்டெடுப்பது என்று மல்லாக்க படுத்து யோசித்ததன் வினையே பின்னர் தனது மற்ற மூன்று நண்பர்களுடன் சேர்ந்து 2004 ஃபிப்ரவரி மாதம் உருவாக்கிய வலைத் தளம்தான் அந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே.

சின்னதா சட்டி வச்சி பிரியாணிய போட்டான் அந்த பிரியாணி சட்டி இம்மாம் பெரிசா வளர்ந்து போச்சி பிரியாணிய சாப்பிடுபவனுக்கு தெம்பு வருது சமயத்துலே வைத்துப்போக்கும் வருது

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். என்ன சொல்ல ,காக்காவின் ஆக்கம் பார்த்து கவிதை ஒன்று அதிரை நிருபருக்கு அனுப்பியுள்ளேன்.அவ்வளவு நல்லதாகவும்,சிந்திக்கத்தூண்டுவததாகவும் உள்ளது.

Yasir said...

அப்போ வலையத்துல....சமுக விரோதிகள் வலையை விரிச்சிக்கிணுண்டு யாருடா வந்து மாட்டுவானுவோ என்றுதான் உர்காந்து இருக்கானுவ...நல்ல பயனுள்ள தொடர் காக்கா...தொடரட்டும்..உங்கள் வ(வாள்)லை வீச்சு

sabeer.abushahruk said...

//ஆகவே கேள்விகளாக உங்களிடையே ஏதும் உதித்தால் பின்னுட்டங்களாக அனுப்பித் தாருங்கள் அதற்கான பதிலோடு இன்னும் விரிவாக பார்க்கலாம்.//

கேள்வி கொஞ்சம் அப்பாவித்தனமாத்தான் தெரியும், இருந்தாலும் தெரியாததைக் கேட்டுத் தெளிதல் நல்லதல்லவா?

எங்கெங்கோ சிதறிப்போன நேசங்களைக் கண்டெடுத்தல் என்பது ஒரு நல்ல விஷயம்தானே, ஆதலால், இப்ப உள்ள அபாயமெல்லாம் தவிர்த்துக்கொண்டு ஒரு பிணையம் நடத்துதல் சாத்தியமா?

ZAKIR HUSSAIN said...

to

bro Abu ibrahim

இதுபோன்ற விசயங்களின் சந்தேகம் கேட்க துபாய் வந்தாலும் தப்பில்லை. இன்ட்ரஷ்டிங்... இந்த சனியனுக்குத்தான் முன்னாடியே அந்த முகப்பக்கத்து [Facebook] கணக்கை ஊத்திமூடியாச்சு..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எங்கெங்கோ சிதறிப்போன நேசங்களைக் கண்டெடுத்தல் என்பது ஒரு நல்ல விஷயம்தானே, ஆதலால், இப்ப உள்ள அபாயமெல்லாம் தவிர்த்துக்கொண்டு ஒரு பிணையம் நடத்துதல் சாத்தியமா?//

கவிக் காக்கா: சந்தேகமே இல்லை, ஜரூராக செய்யலாமே சிதறிய நேசங்களை (நன்னோக்கோடு) கண்டெடுப்பதில். இதில் மற்றொன்றையும் அவதானிக்க வேண்டும் இவைகள் இந்த சமூக பிணைப்புத் தளங்கள் யாவவும் கூரையில்லா வீடுகள்.

அட சிக்கிய நட்பில் என்னடா பாலினம் மாறியிருக்கே அங்கே என்னதான்னு இருக்குன்னு பார்ப்போமே என்று கண்ணுக்குள் சிக்கிய சுட்டியை விரல் கொண்டு தட்டிச் சிக்கலில் மாட்டவும் வாய்ப்புகள் அதிகம்.

சரி சிக்கியவர்கள் நன்கு பழகியவர்கள் எனும் பட்சத்தில் அவர்க்ளோடு உழலுவதிலும் ஜாக்கிரையாகத்தான் இருக்க வேண்டும். இதில் என்ன வேடிக்கை நீங்கள் தேடுவது 16 வயதில் தொலைத்த நண்பனை ஆனால் அவர்கள் உங்கள் காட்ட்சிக்கு கூடுதலாக (addition suggestion) வைப்பார்கள் அதே 16 வயடைய அல்லது அந்த கிறக்கத்திலிருக்கும் வேற்று பாலினத்தின் விபரங்களும் கிடைக்கும் அதுவும் நீங்களிருக்கும் ஊரைச் சுற்றி அல்லது உங்களது விருப்பு வெறுப்புக்கு ஒத்துப் போவதாக ஆலோசனைவேறு தருவார்கள் !

ஆக கத்திமேல் நடக்கும் நாம்தான் காலை அழுத்திடவும் கூடாது சற்று அசந்திடவும் கூடாது இரண்டிலும் இடறினால் நம் காலுக்குத்தான் கட்டு(போடனும்).

இன்னும் கேட்கனும்னு தோனுமே... :)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//துபாய் வந்தாலும் தப்பில்லை //

ஜாஹிர் காக்கா: காத்திருக்கோம் ஆவலாக, சிதறிய நட்பைத் தேடப் போற கவிக்காவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தோஷமான செய்தி..

sabeer.abushahruk said...

//கூரையில்லா வீடுகள்// 
what a poetic thought!!!

//ஜாஹிர் காக்கா: காத்திருக்கோம் ஆவலாக, சிதறிய நட்பைத் தேடப் போற கவிக்காவுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் சந்தோஷமான செய்தி//

செய்தியாகவே ஆயிடுச்சா? அப்ப எப்படா வர்ரே? (வருவேன்...அனா வரமாட்டேனு மட்டும் சொல்லிடாதே)

அபு இபுறாகீம்,

//இன்னும் கேட்கனும்னு தோனுமே...// கேட்கிறமாதிரிதானேய்யா கொக்கி போட்றிய? 
சேஃப் பினையத்துக்கு சாத்தியக்கூறுகளை வரிசைப்படுத்துங்களேன்??

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// சேஃப் பினையத்துக்கு சாத்தியக்கூறுகளை வரிசைப்படுத்துங்களேன்??///

கவிக் காக்கா:

பிணையப் பயண்பாட்டுக்கு மட்டுமல்ல பொதுவாக வலை மேய்ச்சலுக்கு கீழ்கொடுத்துள்ள இருபது அம்சத் திட்டங்கள் சரியா வருமான்னு பாருங்களேன்:-

- பின்னூட்டம் 1


இணைய பயன்பாட்டில் அன்றாடம் நாம் பயந்து கொண்டு தான் இருக்கிறோம். இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் நம்மை அறியாமலேயே ஏதாவது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம் வந்துவிடுமோ என்ற அச்சம். ஏதாவது புதிய மென்பொருள் ஒன்றை இன்ஸ்டால் செய்தால் அதனுடன் சேர்ந்து வரும் புரோகிராம் கணினியைக் கெடுத்துவிடுமோ என்ற பயம். இதற்காக இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் கணினியினூடே உலவியில் மேய்ச்சல் முடியாது.

இருந்தாலும் இன்றைய இணைய பயன்பாட்டில் எந்தவித அச்சமும் இன்றி செயல்படவும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கென்று கணினியில் மென்பொருள் கைப்பாவை (tools software) பதிந்து தொடர்ந்து சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட படி இருக்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம்.

1. கணினி பினி எதிர்ப்பு மென்பொருள் (anti-virus software) நிறுவி எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்கவும். அந்த புரோகிராமினை அவ்வப்போது புதிப்பித்து கொண்டிருக்கவும்.

2. கணினி வேவு தடுப்பு (anti spyware) ஒன்று அல்லது இரண்டு மென்பொருள்களை பதிந்து வைத்து இயக்க வேண்டும். பொதுவாக கணினி பினி எதிர்ப்பு மென்பொருட்களுடன் இணைந்து இவை இலவசமாக கிடைக்கும். மைக்ரோசாப்ட் விஸ்டாவுடன் விண்டோஸ் டிபன்டர் மற்றும் ஸ்பை ஸ்வீப்பர் புரோகிராம்களைத் தருகிறது.

3. இருவழி பயர்வால் தொகுப்பு ஒன்றைப் பயன்படுத்த வேண்டும். விஸ்டாவுடன் இது தரப்படுகிறது. மற்றவர்கள் உசுப்பு மண்டலம் Zone Alarm போன்ற பயர்வால்களைப் பயன்படுத்துவது நல்லது.

4. இணைய இணைப்புக்கு பயன்படுத்தும் அகல அலைவரிசைக்கு (broadband) அகல அலைவரிசை இணைய அணுகல் - இணக்கி / வழிச்செயலி (ADSL modem / router) இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது.

5. ஒரு கோப்பு (file) உங்களுக்கு வந்துள்ளதா? அல்லது நீங்களே கொண்டு வந்திருக்கிறீர்களா? அதில் வைரஸ் எதுவும் உள்ளதா என்று சந்தேகம் வருகிறதா? உங்கள் ஆன்டி வைரஸ் கொண்டு சோதிக்க பயமா? உடனே அதனை Virustotal.com என்ற தளத்திற்கு அனுப்பவும். அல்லது அட்டாச்மென்ட் scan@virustotal.com என்ற இமெயில் முகவரிக்கு ஸ்கேன் என்ற ஒரு வரிச் சொல்லை சப்ஜெக்டில் அமைத்து அனுப்பவும். உடனே 32 வகையான வைரஸ் சோதனை செய்து உங்களுக்கு ரிபோர்ட் கிடைக்கும்.

- continue.. 2

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

- பின்னூட்டம் - 2


6. கணினியின் இயக்கத்தின் போது பல உந்து நோக்கு மென்பொருள்கள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும். என்ன என்ன மென்பொருள்கள் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதன் மேல் ஒரு கண் இருக்க வேண்டும்.

7. எண்களும் எழுத்துக்களும் கலந்த கடவுச்சொல் (password) உருவாக்கிப் பயன்படுத்தவும். நீட்டம் கூடி இருந்தால் நல்லதுதான்.

8. கடவுச்சொல் (password) அவ்வப்போது மாத்திய் யோசிக்காம மாற்றிக்கிட்டெ இருக்க வேண்டும்.

9. சரியென்று பட்டால் மட்டுமே இமெயில் உடன் வரும் தொடுப்பு சுட்டிகளை தட்டிடவும். இல்லை என்றால் மூடிவிடுங்கள் அல்லத் ஓடிவிடுங்கள் அவ்விடத்தை விட்டு.

10. வாழ்த்துக்கள் குவியும் நாட்களில் மிக கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே கணினி பினியோ அல்லது கணினி வேவு(கண்களோ) இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம்.

continue..3

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பின்னூட்டம் - 3


11. உங்கள் கணினியில் வேவுக் கண்கொண்ட ஆவி குடியிருக்கிறது ஆகவே இந்த இலவசமாக மின்பொருளுக்கான சுட்டியை தொட்டுப் பாருங்கள் உடனே அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற இனிப்பு வழங்கும் சுட்டியைக் கண்டீர்களென்றால் உடனே அதனை நீக்கி விடுங்கள். அதனை தொட்டுதான் பார்ப்போமே என்று தடவுனீர்கள் என்றால் ஒன்னுமே தெரியாத மேளாலர் நமக்கு வந்து வாய்த்தால் கிடைக்குமே அந்த நிரந்தரத் தொல்லை அதுபோல்தான் இதுவம்.

12. ACTIVE-X என்ற தனித்து இயங்கும் கட்டுபாடில்லாத தானியங்கி மென்பொருள்களை நிரந்தரமாக உறங்க வைத்து விடுங்கள்.

13. உங்களைப் பற்றிய சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களை ஏதாவது வலைத் தளத்திற்கு கொடுக்கும் எண்ணமிருந்தால், அந்த தளம் பாதுகாப்பானது தானா என்று பார்க்கவும். அதன் முகவரியில் ‘https’ என S சேர்த்து இருக்க வேண்டும். அல்லது அட்ரஸ் பாரில் அல்லது வேறு இடங்களில் பாதுகாப்பு பூட்டு அடையாளம் இருக்க வேண்டும்.

14. முன்பெல்லாம் குக்கிகள் (cookies) என்ற வடிப்பான் வழியாகத்தான் கணினிப் பினிகள் (virus) வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது குக்கிஸ்கள் (cookies) நம் வேலையைஇன்டர்நெட் பிரவுசிங்கில் எளிதாக்குகின்றன. இல்லை என்றால் நம் பெயரையும் தகவல்களையும் ஒவ்வொரு முறையும் ஒரு தளத்திற்கு நினைவு படுத்த வேண்டும். இருப்பினும் வேவு தடுப்பு தொகுப்பு மோசமான குக்கிகளை எடுத்துவிடுவதால் அத்தொகுப்புகளை புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும்.

15. உங்களைப் பற்றிய சுயக்குறிப்புகளடங்கிய தகவல்களையோ புகைப்படங்களையோ, குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களோ எக்காரணம் கொண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்திடவோ அல்லது உலவவிட வேண்டாம். அவை நிரந்தரமாக அங்கு தங்கி யாரும் எடுத்துக் கையாளும் நிலைக்கு தள்ளப்படும்.

continue..4

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பின்னுட்டம் - 4

16. வலை மேய்ச்சலுக்கென்று உள்ள முற்றத்தில் (browsing center) கம்ப்யூட்டர்கள் மூலம் நீங்கள் பிரவுசிங் செய்திடும் நிலை ஏற்பட்டால் உங்கள் பிரவுசிங் பற்றிய தகவல்களை அழித்து விட்டு வெளியேறுங்கள். அதே போல அத்தகைய கணினியில் கடவுச்சொல்லை சேமித்து (save) அல்லது நினைவூட்டலில் (remember) செய்து வைக்காதீர்கள்.

17. உங்களுக்கு ஒரு சேவையை தரும்போது இணைய தளங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை உறுதி செய்திட உங்கள் மின் அஞ்சல் முகவரிகளைக் கேட்பர் அதற்காக சில நிமிடத்திற்குள் செய்தி அனுப்பப்படும் என்ற மீள் செய்தியும் உங்களுக்குத் தெரியும். அப்போது தற்காலிக மின் அஞ்சல் முகவரி தரும் 10minutemail.com போன்ற தளங்களின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தளம் பயன்படுத்திவிட்டு நமக்கு நாமே திட்டத்தில் கடாசி விடும் மின் அஞ்சல் முகவரிகளை உங்களுக்கு தருன்கின்றனர்.

18. உங்களுடைய வழக்கமான இமெயில் முகவரியை உங்களால் நன்கு அறியப்பட்டவர்களுக்கும் நண்பர்களுக்கு மட்டுமே கொடுக்கவும்.

19. பெருநாள் நேரங்களில் வரும் குறவர்கள் போல் வந்துக் குவியும் ஒரு துர்நாற்றத்துடன் வரும் மின் அஞ்சல்கள் உங்களுக்குத் தேவையான செய்தியைக் கொண்டு வந்திருந்ததாக அறிந்தாலும் அவற்றைப் படிக்க வேண்டாம். ஏனென்றால் திறந்து படித்தால் உங்களுடைய முகவரி அவர்களிடம் சிக்கி விடும்.

20. இவைகள் எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்றுதான் சொல்லித் தரமுடியும் இதைவிட நம்மைப் படைத்தவனுக்கு அஞ்சியவர்களாக தனிமனித ஒழுக்கத்துடன் இருந்திடுவோமேயானல் எதிலும் சிக்கிட மாட்டோம்.

- End -

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

திருத்தம்:

4. இணைய இணைப்புக்கு பயன்படுத்தும் அகல அலைவரிசைக்கு (broadband) அகல அலைவரிசை இணைய அணுகல் - இணக்கி / வழிச்செயலி (ADSL modem / router) இணைப்பு வைத்துக் கொள்ளாமல் இருக்கக் கூடாது.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
கேள்வி கேட்டவருக்கும் பதில் சொல்லி கேள்வி கேட்காதவருக்கும் புரியும் படி விளக்கமளித்து.
ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்து மாங்காய் அடித்த அதே கல்லை துரும்பவும் கையில் எடுத்த விதம் அருமை.

இப்படிக்கு
மறு மாங்காய் எப்போ விழும் என காத்திருக்கும் பலரில் ஒருவன்

sabeer.abushahruk said...

நன்றி நன்றி நன்றி. 
படிச்சு தந்ததற்கு மிக்க நன்றி. 
ஷாகுலின் வர்ணனை அருமை. (கல்லை திரும்ப கையிலெடுத்ததாக சொல்வது அழகு)

மேலே சொன்ன ஒவ்வொவொரு நன்றியும் ஓராயிரம் நன்றிகளுக்கு சமம் எனக் கொள்க. ஒவ்வொரு ஆயிரமும் ஒரு லட்சத்துக்கு சமம் எனவும் கொள்க. 

மணி அடிச்சாச்சு, நீங்க போங்க. அடுத்த பீரியடை ஆரம்பிக்க அலாவுதீன் சார் வந்தாச்சு.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அப்படின்னா ஒரு ருபாய் வைத்திருப்பவங்களு - ஒரு இலட்சம் வைத்திருப்பவங்களும் : சமமே... ஆஹா.. ஒன்றை இலட்சமாக மாற்றிட்டீங்களே ! :))

கற்றது கடுகிலும் கடுவு(தான்)
கற்றதை கற்பிப்பதிலும் காண்பிப்பதிலும்
சுவையான சுதந்திரச் சுமை(யே) அடுத்து எப்படி இருக்கனும் என்று !

தொடருக்கு இடையிடையே கருத்திடும் கருத்தாய்வர்கள் ஒவ்வொரு வருக்கும் நன்றி சொல்வதில் மட்டும் இருந்திடாமல் ஆக்கபூர்வமாக எதாவது ஒரு வகையில் பயன்கண்டெடுக்க உறுதுணையாக இருந்திட முயற்சிக்கிறேஎன் அதே நேரத்தில் உபத்திரமாக இருந்திட மாட்டேன்.

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அபுஇபுறாஹிம் சொன்னது…
அப்படின்னா ஒரு ருபாய் வைத்திருப்பவங்களு - ஒரு இலட்சம் வைத்திருப்பவங்களும் : சமமே... ஆஹா.. ஒன்றை இலட்சமாக மாற்றிட்டீங்களே ! :))

எத்தனை லட்சம் வைத்திருந்தாலும் மௌதாகி விட்டால் ஒரே கபன் தானுங்கோ

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எத்தனை லட்சம் வைத்திருந்தாலும் மௌதாகி விட்டால் ஒரே கபன் தானுங்கோ//

அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்)..

சாஹுல் காக்கா:

எவ்வித சந்தேகமும் இல்லை..

நேற்று மதியம் இங்கே ஒரு "மைத்துக்கு" கஃபனிடும்போது அருகில் இருக்க எனக்கு நேர்ந்தது... நீங்கள் சொன்னதுபோல் வெள்ளைத்துணி சுருட்டிய மையத் குழிக்குள் உள்ளே வைக்கப்பட்டது நினைவுக்குள் வந்துவிட்டது.

அல்லாஹ் நன்கறிவான்...

ம.தி.சுதா said...

ரசனைக்குரிய வகையில் அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
http://mathisutha.blogspot.com/

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு