Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

தொழு ! 21

அதிரைநிருபர் பதிப்பகம் | November 29, 2010 | , , ,

கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
திரு மறை ஓது
ஒரு இறை தொழு!

எத்தனை அழகு
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனை தொழு!

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
கேட்டதை உணரவும்
ஒலி புரிய செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
சண்டையின்றி பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
கச்சிதமான உடலும்
வகையாய் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு...

புதிய பூவாய் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு...

மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!

காலநேரம் கடக்குமுன்
கவனமாக தொழு!

கடமையுணர்ந்து தொழு!
கண்மனி நபி
கற்பித்தபடி தொழு!

உறுதியாக தொழு
உபரியையும் தொழு!

உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!


- Sabeer

21 Responses So Far:

crown said...

கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
திரு மறை ஓது
ஒரு இறை தொழு!...........
கடமையுணர்ந்து தொழு!
கண்மனி நபி
கற்பித்தபடி தொழு!

உறுதியாக தொழு
உபரியையும் தொழு!
-------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடமை,புண்ணியம்,கோட்பாடு சொல்லியுள்ளீர்கள் அருமை.
---------------------------------------------------------
உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!
------------------------------------------
எச்சரிக்கை, நினைவூட்டல், சுவர்கத்தின் சாவியை ஆவி போகும் முன் வாங்கி கொள் என்ற பச்சாதாபம் எல்லாம் இதுக்குள் அடங்கி போகும் , நாமும் அடங்கி போவதற்குள்.

crown said...

சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆள்பவனைத் தொழு!
-------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் என் திருப்திக்காக மாத்தி பார்த்தேன்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சுவாசிக்கும் நாசியாகவும்
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
அல்லாஹுவைத்தொழு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

ஆஹா !

- சுப்ஹு -

முடிந்த இரவை முழுமையாக்கி
விடியும் முன்பு தொழு...

- லுஹர் -

புதிய பூவாய் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

- அஸர் -

மாலை மகுடம் காத்திருக்கு
மாலை வேளை தொழு...

- மஃரிப் -

மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

- இஷா -

இன்று நன்றாய் முற்றுப்பெற
இரவு நேரம் தொழு!//

இதோடு மட்டுமா இருந்திடனும் இன்னும் இருக்கிறதே...

//கரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...//

ஆக !

//உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு! //

கவி வரிகளின் ALERT இன்றைய வலைச் சுவடியின் அவசியச் சுவடி(கள்) !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு): ஆஹா !

சுவர்க்கத்தின் திறவுகோல் தொழுகையே ! அதனை நீயும் சொல்லிய விதம் அருமை !

// எச்சரிக்கை
நினைவூட்டல்
சுவர்கத்தின் சாவியை
ஆவி போகும் முன்
பற்றிக் கொள் ! //

அன்புடன் மலிக்கா said...

தொழுகையின் அவசியத்தை அழகாய்
அதே சமயம் அறிவுரையாய் வழங்கியிருக்கும் வரிகள் மிக அருமை

தொழுகையை சரிவர [தொழுதால்]செய்தால் அனைத்தும் சரியாகும்..

sabeer.abushahruk said...

தம்பி crown,
அஸ்ஸலாமு அலைக்கும்.
//அமைத்தொரு புலன் தந்த
"ஆள்பவனைத்" தொழு!// உங்கள் திருப்திக்கேயானாலும் காதிர் முகைதீன் பள்ளி ஷன்முகம் ஐயாவை நினைவுபடுத்திவிட்டீர்கள். அவர்கள்தான் முக்காலமும் உள்ளடக்கிய ஒரு வினையை(verb)ஒரே வார்த்தையில் சொல்வதை வினைத்தொகை என்பர் என்று சொல்லித்தந்தார்கள். உதாரணம்: ஊறிய காய் (இறந்த காலம்) ஊறும் காய்(நிகழ் காலம்), ஊறப்போகும் காய் (எதிர்காலம்) என்ற முக்காலமும் உள்ளடக்கி ஊறுகாய் என்று சொல்வர் எனச் சொன்னார். (சே, எச்சில் ஊறுதுப்பா).

அதுபோல, ஆண்டவன், ஆள்பவன், ஆளப்போகிறவன் என்ற முக்காலமும் உள்ளடக்கி ஆண்டவன் என அழைக்கலாம் என நினைக்கிறேன். (ஒரு யூகம்தான், மற்றபடி தமிழ்ல உங்ககிட்ட மோதிப்பார்க்க நான் என்ன லூஸா)

//அமைத்தொரு புலன் தந்த
அல்லாஹுவைத்தொழு// பொறுங்கள் சமாளிச்சி பார்க்கிறேன்: ம்ம்ம்...ஹாங், முடிந்தவரை அரபி மொழி கலக்காமல் எழுதும் முயற்சிதான். 99 அஸ்மாவில் ஹுஸ்னாவும் உச்சரிக்கையில் உள்ளம் பூரிக்கும் உங்களைப்போன்றவன் தான் நானும். எனினும், ஆண்டவனைவிட அல்லாஹ்தான் அழகா இருக்கு என்பது உண்மைதான். (உங்களோடு விவாதிப்பதே ஒருஸ்வாரஸ்ய்மான இனிமையான விஷயம்)

அலாவுதீன்.S. said...

தொழுகையை அழகான முறையில் உயிரோட்டத்துடன்(((முஸ்லிம்களுக்கு????))) ஞாபகப்படுத்திய அதிரை கவி சபீருக்கு : அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். ( அல்குர்ஆன் : 2:153 )


ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக; நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. ( அல்குர்ஆன் : 2:149 )

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். ( அல்குர்ஆன் : 2:45 )


(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். ( அல்குர்ஆன் : 2:3 )

********************************************************************
''உங்களுக்கு தொழ வைக்கப்படும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்''
********************************************************************

Yasir said...

ஜனாப்.தாஜீதின் ஒஸ்தார் பள்ளியில் பிரம்பை வைத்துக்கொண்டு தொழு தொழு என்று சொல்லி தந்ததை.....நீங்கள் பக்குவமாக பளிச்சென்று சொல்லி தந்து இருக்கிறீர்கள்.... அல்லாஹ் நாம் அனைவரையும் அவனை கடைசி மூச்சு இருக்கும் வரை வணங்க கூடிய கூட்டத்தில் சேர்த்து அருள்வானக

crown said...

sabeer சொன்னது…
(ஒரு யூகம்தான், மற்றபடி தமிழ்ல உங்ககிட்ட மோதிப்பார்க்க நான் என்ன லூஸா)
--------------------------------------------------------------------


அஸ்ஸலாமுஅலைக்கும்.காக்கா ! மின்சாரம் தாக்கிய அதிர்வு இது இன்பமா?ஒருவித பரவச உணர்வு.
ஆனால் இன்னும் அகலாமல் இருந்துகொண்டே இருக்கிறது. நான் யார்? நீங்களார்?
ஒரே இனம்,குலம்,மார்கம்,ஆனால் மேதை நீங்கள்.
நான்?
தேனுக்குள்ள மாட்டிக்கொண்ட சித்தெறும்பு!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Yasir சொன்னது…
ஜனாப்.தாஜீதின் ஒஸ்தார் பள்ளியில் பிரம்பை வைத்துக்கொண்டு தொழு தொழு என்று சொல்லி தந்ததை.. ///

யாசிர்: நானும் முன்னால் மாணவன்(தான்) :)

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
5 வேலை தொழுகை அதன் கூட சுன்னத் தொழுகை பற்றி அழக கவிதை எழுதி அசத்தி விட்டீர்கள்.

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
கவிதை பிரியாணியை சமைத்து பரிமாறும்
நீங்கள் கட்டுரை என்ற நெய் சோறும் கொஞ்சம் பரிமாருங்களேன்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed சொன்னது…
உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
கவிதை பிரியாணியை சமைத்து பரிமாறும்
நீங்கள் கட்டுரை என்ற நெய் சோறும் கொஞ்சம் பரிமாருங்களேன் //

பதிம்மூன்றாம் வார்டு வட்டம் சார்பாக நான் இதனை அப்படியே வழி மொழிகிறேன் ! மொழியால் விழி விரித்திட வைக்கும் வித்தைகளை கற்றவர்கள் எழுப்பும் ஓசை இறுகிய இதயத்தை இளகிட வைத்திடுமே !

யோசிக்காதீங்க...

ஜலீல் நெய்னா said...

"தொழுகை"
அருமையான கவிதை, உள்ளச்சத்தை
ஏற்படுத்திய கவிதை.

ஈமானுக்கும்.. குப்ருகும்..
அடையாளமிட்ட "தொழுகை"

ஜாகிர் ஹீசைன் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சபீர், ரொம்பவும் அழகான நேர்த்தியான பொன்மொழிகளை கவிதையாய் வடித்து அதிலும் போதனைகளைச்சேர்த்து அல்லாஹ்வை ஞாகபடுத்தி எழுதிய நல்ல உபதேசங்கள் என்வாழ்த்துக்கள்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு சகோதரர் சபீர் காக்கா அவர்களுக்கு,

ஒரு மணி நேரம் மேடைப்போடு சொல்லும் போதனைகளை 2 நிமிடத்தில் மனதில் ஆழமாக பதியும் படி சொன்னதுக்கு மிக்க நன்றி

//உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!//

ஒவ்வொரு வினாடியும் மனதில் நிறுத்திக்கொள்ளப்பட வேண்டிய வரிகள்.

தொடந்து இது போன்ற ஆக்கத்தை தாருங்கள் சபீர் காக்கா.

"மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். ( அல்குர்ஆன் : 2:45 )

sabeer.abushahruk said...

தொழச்சொன்னதை வழிமொழிந்த அணைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அணைவருல்கும் நல்லருள் பாளிப்பானாக, ஆமீன்.
(அ.நி.: வரிசையா ரொம்ப கடுசான பதிவுகளாகவே வந்துட்டு இருக்கே. கொஞ்சம் நகைச்சுவையா அல்லது ஹோம்சிக்கா ஏதாவது போடுங்களேன்.)

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சிறுவயதில் மரைக்காப் பள்ளியில் (மஸ்ஜிதுல் அக்ஸா) தொழுகைக்குச் செல்லும் போது எனக்கு "inspiration"ஆக இருந்தது மரியாதைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ் "அலிய் ஆலிம்" (அல்லாஹ் ரஹ்மக்கும்) ஊரில் அவர்கள்தான், தொழுகையில் அவர்கள் அருகில் தொழுவதை அதிகம் விரும்பினேன்.

அன்று அவர்கள் நல்லதை நாடியே செய்தவைகளை ஏராளம்.

Unknown said...

காணவும் களிக்கவும்
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
உன்
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!
நேர்மையாய் தொழு. என்ன அருமையான வார்த்தைகள் சபீருக்கு நிகர் சபீரே வாழ்த்துக்கள்.

sabeer.abushahruk said...

தொழுகையைப் பொருத்தவரை நான் சிறுவனாய் இருக்கும்போதிலிருந்தே ஈடுபாடாக தொழுது வருபவன். தப்லீக்குடன் வரும் எங்களைப் பார்த்தாலே "டேய், அல்லாட போலிஸ் வருதுடானு" ஒரு கூட்டம் ஓடி ஒழியும்.

கண் முன்னாலேயே ஓடி வீட்டுக்குள் ஒழிவார்க்கள், கூப்பிடச்சொன்னால், "இப்பதான் கடைக்கு ரொட்டி வாங்க போனான். வந்ததும் அனுப்புகிறோம்" என்பார்கள். அப்புறம் எங்கே அனுப்பறது?

அல்லாட போலிஸ பார்த்ததும் ஓடிப்போனாலும் நிறைய பேரை அர்ரஸ்ட் பண்ணி பள்ளிக்கு இழுத்துட்டு வந்திருக்கிறோம். என்ன ஒண்ணுனா அடுத்தநாள் ஃபுட் பால் விளையாடும்போது நோஞ்சானுகளா நம்ம பக்கம் கொருத்து போட்டுட்டு கோலை பார்த்து அடிக்காம அல்லாட போலிஸ குறி வச்சு அடிப்பானுக. (சட்டுனு பழய நெனப்பு வந்துச்சு அதான் பகிர்ந்து கொண்டேன்)

Riyaz Ahamed said...

அல்லாஹ் நமக்கு தந்த அருட்கொடைகளை நினைவு படுத்தி, காலநேரம் கடக்குமுன்
கவனமாக தொழு!
தொழுகையின் சிறப்பை கவி சுருக்கமாக தந்து அதில் இறப்பை நினைவூட்டியது கவிக்கு ஒரு இரத்தினகல் வைத்ததுபோல்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு