அன்பு சகோதரர்களே,
இந்த வருடம் (2010) ஹஜ் மிகச் சிறப்பாக அமைத்துத் தந்த வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு நாம் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். எல்லா வருடமும் தங்களின் சேவையை மிகச்சிறப்பாக செய்து ஹஜ் செய்ய வந்த மக்கள் அனைவருக்கும் நல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த சவுதி அரசாங்கத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும். இன்ஷா அல்லாஹ் வரும் வருடங்களிலும் இது போல் மிகச்சிறப்பான சேவைகளை சவுதி அரசு செய்யும் என்று நம்பலாம்.
இந்த வருடம் ஹஜ் இனிதே நிறைவேற்றி நம் அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீது அவர்களையும், அவர்களின் குடும்பத்தவர்களையும், அதிரையிலிருந்து ஹஜ்ஜுக்கு சென்ற அனைவரையும், நம் நாட்டிலிருந்தும் உலக நாடுகள் அனைவற்றிலுருந்தும் ஹஜ் பயணம் சென்ற அனைத்து மக்களையும் நம் அதிரைநிருபர் குழு நிறைந்த மனதுடன் துஆ செய்து வரவேற்கிறது.
அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீது அவர்கள் நம் அதிரைநிருபருக்கு அனுப்பிய புகைப்படங்களை இங்கு உங்கள் அனைவருடன் பகிர்ந்துக்கொள்வதில் பெருமையடைகிறோம்.
புகைப்படங்கள்: அதிரை ஷாஹுல் ஹமீது
-- அதிரைநிருபர் குழு
6 Responses So Far:
வாருங்கள் அன்பு சகோதரர் ஷாஹுல் ஹமீது காக்கா, அன்புடன் வரவேற்கிறோம்.
அன்பு சகோதரர் ஜாஹிர் ஹுசைன் அவர்கள் அதிரைநிருபரில் வேறு ஒரு பதிவில் இட்ட பின்னூட்டத்தை இங்கு நானும் இடுகிறேன். "உலகில் வாழும் முஸ்லிம்களில் மிகச்சிலருக்கு மட்டும் கிடைக்கும் நற்பாக்கியம் உங்களுக்கும் & உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வழி செய்த அந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்"
மற்றும் சகோதரர் யாசிர் கூறியதை நானும் சொல்ல விரும்புகிறேன். "அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை கபூல் செய்து அதன் மூலம் நீங்கள் அடைந்த தூய்மையை வாழ்வின் கடைசி நொடிவரை பாதுகாப்பானக"
புகைப்படங்கள் மிக அருமை. தெளிவான இந்த புகைப்படங்கள், நேரில் பார்ப்பது போல் இருக்கிறது. நன்றி ஷாஹுல் காக்கா.
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)ஹஜ் செய்து இன்று பிறந்த குழந்தையாய் திரும்பிய ஹாஜி ஷாஹுல் ஹமீது காக்கா உங்களின் புகைப்படங்கள் அருமை,அழகு!
உங்களின் ஹஜ்ஜையும் உங்கள் குடும்பத்தார்களின் ஹஜ்ஜையும் அல்லாஹ் கபூல் செய்வானாக!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சாஹுல் காக்கா: உங்கள் மற்றும் உங்கள் குடும்பாதர்களின் ஹஜ்ஜை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக !
ஐந்தாம் கடமை
ஐக்கியமே மகிமை
சொல்லாமல் சொல்லிய
வண்ண நிழற்படங்கள்
எண்ணங்களின் நிஜப் படங்கள்
எல்லாமே அருமை !
ஷாகுல்,
ஹஜ் மப்ரூர் இன்ஷா அல்லாஹ்.
புகைப்படங்கள் அருமை. உடல் நலம், குறிப்பாக குழந்தைகள் நலம் பேனிக்கொள்ளவும். ஏனெனில் பொதுவாகவே ஹஜ் முடித்துத் திரும்புகையில் சிற்சில இன்ஃபெக்க்ஷன் வாய்ப்புகளுண்டு.
சயி செய்ய சஃப்வா மர்வாவுக்கு இடையே நடக்கயில் வாப்புச்சாக்கள் வாழ்த்தும் "எம்பேரன் ஹயாத்த போட்டுவச்சி தொங்கோட்டம் ஓடுவான்" நினைவு வந்ததா?
ஷைத்தானுக்கு கல்லெரிகையில் மனசுக்குள் கெட்ட வார்த்தை சொல்லி திட்டிக்கொண்டே கல்லெரியத் தோனியதா? (கூடாது. ஆனாலும் எனக்குத் தோனியதுப்பா)
தலைமுடி இறக்கியபின் மக்கா வந்து தவாப் செய்கையில் கூட்ட நெரிசல் கண்டு குழந்தைகளை தவாபுக்கு அழைக்க சற்று அச்சம் ஏற்பட்டதா?
ஹஜ் உங்களுக்குள் எற்படுத்திய இறையச்சம் நிலைக்க என் துஆ.
ஹஜ் மப்ரூர் இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அழைக்கும்
அனைவரின் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி
உடல் நிலை சற்று சரி இல்லாத காரணத்தால் அதிகம் அளவலவ முடியவில்லை.
Post a Comment