Wednesday, April 02, 2025

Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

சின்ன சின்ன சுவாரசியம் 11

அதிரைநிருபர் | November 01, 2010 | , ,

இன்னும் திறக்கப்பட்டு வாசிக்கப்படாத டைரி, கிழிக்கப்பட்ட துப்பறியும் நாவலின் கடைசிப்பக்கங்கள், டெலிவரி செய்யப்படாமல் சுற்றிவரும் அவசரம் தாங்கிய‌ குரியர், வெளியிடப்படாத தேர்தல் மற்றும் பரிட்சை ரிசல்ட் இவைகளில் எல்லாம் எதோ ஒரு விதமான சுவராஸ்யமும், பரபரப்புடன் கூடிய படபடப்பும் ஒளிந்திருப்பதை அன்றாட வாழ்வில் நாம் அறியாமல் அறிந்து வருகிறோம்.

சவுதி ஜித்தா இந்தியத் தூதரகத்தில் WELFARE CONSUL ஆக சமீபத்தில் பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றுள்ள‌ சகோதரர். மூர்த்தி அவர்கள் கூடுதல் பொறுப்பாக புனித ஹஜ் டிபார்ட்மெண்டையும் ஏற்று அதன் மூலம் அற்புதமான பணியை செய்து வருகிறார்கள்.

"ஏற்பு மதத்தவரை விட மாற்று மதத்தவரான இவரால் எப்படி இவ்வளவு சிறப்பாக ஹித்மத் (service) செய்ய முடிகிறது?! என்று விமான தளத்தில் அவர் காது படவே நம் ஹாஜிகளின் ஆச்சரியம் கலந்த முனுமுனுப்பு!

மாற்று மத அன்பராக இருந்த பொழுதிலும் அவருக்காக அவர்கள் அனைவரும் மனமார து'ஆச்செய்வதை நேரிலேயே காண முடிந்தது.

ஒரு நாள் ஒரு காலை பொழுது ஜித்தா தமிழ்ச்சங்கத்தின் சார்பாக மத நல்லிணக்கக் கூட்டம் நடத்தலாமா? என்ற யோசனையுடனும் ஆர்வத்துடனும் திரு. மூர்த்தி அவர்களின் அலுவலகம் சென்றிருந்தோம். பல விடயங்கள் பேசிக் கொண்டிருந்தபோது தனக்கு வந்த மின்னஞ்சல்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு நம்மிடம் அவர் காண்பிக்க, அதை சற்றே வாசிக்க நேர்ந்தது. அதில் சுருக்கமாக வரையப்பட்ட அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் வார்த்தைகளை உங்களின் பார்வைக்கு இங்கு வழங்க விரும்புகிறேன்.

------------ ------------------ ----------------------------

அய்யா!

பல நாட்களுக்கு முன்னர் என் தந்தை அவர்களுக்கு தாங்கள் எழுதியனுப்பிய மின்னஞ்சலை (பிரிக்கப்படாமிலிருந்ததை )இப்பொழுது தான் படிக்க இயன்றது. எதற்கோ அவருக்கு தாம் உதவி செய்திருக்கிறீர்கள். எதற்கென்று இத்தருணம் வரை நான் அறியேன். ரொம்ப சந்தோசம். அவர் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். (சில மாதங்களுக்கு முன் என் தந்தை இறந்து விட்டார் என்பது தங்களுக்கு தெரியுமோ இல்லை தெரியாதோ..?! என்று எனக்கு தெரியவில்லை).

நன்றி!

ஜுலைகா
ரியாதிலிருந்து.

------------------------ ------------------------ -----------------------------------

சுப ஹானல்லாஹ் ! நேற்று பெற்ற உதவியை இன்று மறந்து விடும் இக்காலத்தில் அதுவும் பலன் அடைந்தோரே பராமுகமாகிவிடும் இந்நாளில் இப்படியுமா? என அச்சகோதரியின் மின்னஞ்சலை என் அகக்கண் முன்னே நிறுத்தியவனாக‌ நன்றி மறப்பது என்றும் நன்றன்று .. என உள்ளத்துக்குள் முனுமுனுத்தவனாக 'மத நல்லிணக்க' கூட்ட‌ம் ப‌ற்றி அலோசிக்காம‌லேயே வெளியே வந்து விட்டேன்!

இறைவ‌ன் இது போன்ற‌ ஆயிர‌மாயிர‌ம் ந‌ல்லெண்ண‌ம் கொண்ட‌ மாற்று ம‌த‌ ச‌கோத‌ர‌, ச‌கோத‌ரிக‌ளை ந‌ம் உன்ன‌த‌ மார்க்க‌மாம் இஸ்லாத்தின் ப‌க்க‌ம் ஆர்வ‌முட‌ன் வ‌ந்திணைந்து ஈருலக பாக்கியங்களை பெற‌ அவ‌னிட‌மே து'ஆச்செய்து அத‌ற்காக‌ ந‌ம் அன்றாட‌ அலுவ‌ல்க‌ளுட‌ன் முய‌ற்சிப்போமாக‌ என‌ அன்புட‌ன் கேட்டுக்கொண்ட‌வ‌னாக‌ உங்க‌ளிட‌மிருந்து விடை பெறுகிறேன் என் அடுத்த‌ ஆக்க‌ம் வ‌ரை.

வஸ்ஸலாம்.

வாழ்க வளமுடன்.!

மு.செ.மு. ரஃபியா

ஜித்தாவிலிருந்து.

11 Responses So Far:

அதிரைநிருபர் said...

அன்பு சகோதரர் மு.செ.மு ரஃபியா அவர்களை, அன்புடன் நம் அதிரைநிருபர் வரவேற்கிறது. முதல் பதிவே முத்தான பதிவாக உள்ளது. தங்களுக்கும், உங்கள் ஆக்கத்தை நம் அதிரைநிருபருக்கு அனுப்பி வைத்த சகோதரர் மு.செ.மு நெய்னா முகம்மது அவர்களுக்கும் மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்...

தொடர்ந்து எழுத்துங்கள்...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மு.செ.மு.(R) : புதுவரவானாலும் நிச்சயம் பெரும் ஆதரவு இன்ஷா அல்லாஹ்... அற்புதமான ரூட் போட்டுக் கொடுத்திருக்கீங்க, இனிமேல் பாருங்க ரோடு போட்டு காட்டுவோம்...

சிந்திக்க வைக்கும் சிலிர்ப்புகளை சொல்லிக் கொண்டே இருங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.. அதிரைப்பட்டினத்தின் வட்டம் மிகப் பெரியது, நீங்களும் கண்கூடாக இங்கே பார்த்தும் வருகிறீர்கள்...

Yasir said...

சகோ.மு.செ.மு. ரஃபியா அவர்களை...சகோதரத்துவம் அன்பு ஒற்றுமை என்ற பூக்களால் நெய்யப்பட்ட அதிரைநிருபர் வலை(மாலை )ப்பூ விற்கு வர வேற்கிறோம்....ஒரு மனதை டச்சிங் செய்யும் ஆக்கத்துடன் ஆரம்பித்து இருக்கிறீர்கள்..உங்களின் இனிவரும் ஆக்கங்கள் எங்களை எல்லாம் அசத்த / அசர வைக்கும் என்று நம்புகிறோம்

அப்துல்மாலிக் said...

நல்லவர் எப்போதும் நன்றியுடன் மதிக்கப்படுவார் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்

ZAKIR HUSSAIN said...

TO மு.செ.மு. ரஃபியா
இங்கு நீங்கள் புதிதாக இருக்கலாம் ஆனால் உங்கள் எழுத்தில் அனுபவம் தெரிகிறது. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். சிலரின் அனுபவம் பலருக்கு உதவியாக இருக்கும்.

அன்புடன் மலிக்கா said...

நல்லதொரு பதிவு. நன்மைகள் செய்தோரின் கூலி வழங்கப்படாமல் இருந்ததில்லை.
இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்..

Shameed said...

அன்பு சகோதரர் மு.செ.மு ரஃபியா அவர்களே அஸ்ஸலாமு அழைக்கும்.தங்களின் சின்ன சின்ன சுவராசியங்கள் அருமை. நல்ல எழுத்து நடை.

எங்கே அந்த கிங் மேக்கர் மு.செ.மு நெய்னா முகம்மது அவர் உங்களை இத்தனை தாமதமாக அறிமுகப்படுத்தியதற்கு நாங்கள் எல்லாம் செல்லமா ஒரு தண்டனை கொடுக்க உள்ளோம்.தண்டனை என்ன என்று நம்ம அபுஇபுறாஹிம் தீர்ப்பு சொல்வார்கள்

crown said...

அன்பு சகோதரர் மு.செ.மு ரஃபியா நல்ல ஆக்கம்!. உங்களை பாரட்டுவது என் முதுகை நான் தட்டிக்கொடுப்பதுபோல்.வரவேற்கிறேன் ,உங்களின் செய்கை ஒத்த சகோ.சபீரின் நட்பும்(ஒருகாள் நீங்கள் முன்பே அறிந்தவர்களாக இருக்கலாம்)மற்ற சகோ, நட்பும் இங்கே மலரட்டும்.M.S.M நைனாவின் பெரியப்பாவீட்டு மூத்த சகோதரர்தாம் இவர்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

MSM(n) என்னை MSM(r)க்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டா ?

sabeer.abushahruk said...

சகோ...ரஃபியா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

First impression is the best impression என்று சொல்வார்கள். நீங்களும் உங்களின் bestஐ பதிந்து மனம் கவர்ந்து விட்டீர்கள்.

முந்தா நாள்தான் மச்சான் ஜலால் நீங்கள் US சென்றபோதான உங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டான்.

அதிரை நிருபருக்கு வந்ததன் மூலம் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு.

தங்களை நான் இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். முதல் முறை Jeddahவில் AIDA MEETINGகில் உங்கள் வீட்டில் சந்தித்து ஊர் நலன் தொடர்பாக் உறையாடியிருக்கிறோம்.

அப்போது என்னுடன் ஜாகிரும் இருந்தான். மலேசியாவிலிருந்து வந்து உம்ரா முடித்து மதினா செல்ல இருந்த சமயத்தில் அந்த சந்திப்பில் கலந்து கொண்டோம். பிறகு, நீங்கள் எங்களை விமான் நிலையத்தில் கொண்டுபோய் விட்டீர்கள். நாங்களும் தாமதமானதால் விமானத்தை தவற் விட்டு விட்டு வேறு விமானத்தில் மதினா சென்றோம்.

மற்றொரு முறை துபை பைத்துல் மால் சந்திப்பில் எங்கள் வேண்டுகோளுக்கிணங்கி கலந்துகொண்டு AR ரஹ்மானை உம்ராவில் சந்தித்தது தொடர்பாக சுவாரஸ்யமாக சொல்லிக் காட்டினீர்கள்.

எனவே, இங்கு உங்களுக்கு பரிச்சயமானவர்க்ள்தான் இருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்.

-தழுவ கை நீட்டியவனாய் சபீர்.

பி.கு.: தம்பி crown, என்னைப் பற்றிய உங்களின் அபிப்ராயத்திற்கு மிக்க நன்றி. புதுக் கல்லூரியில் நான் சேர்வதற்கு ஒரு வருடம் முன்புதான் நடிகன் கார்த்திக் கல்லூரி முடித்தான்.

crown said...

இங்கே! புதிதாகப்பதிந்துள்ள என் உயிரின்,உயிருக்கு நிகரான அவர்களை வரவேற்கிறேன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு
அதிரைநிருபர் தளத்தை உங்களின் இணைய முகப்பாக வைத்திட இங்கே சொடுக்கவும்.