Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

எங்களுக்கும் அருள்வாயாக 15

அதிரைநிருபர் | November 14, 2010 | , ,

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
அண்ட சராசரத்தின் அதிபதியே!
அருளும் அன்பும் நிறைந்தவனே!

ஆதம் நபியை மண்ணால் படைத்து
அவரிலிருந்து  பல சந்ததிகளை 
அற்புதமாக மனிதரில் விதைத்து
அகிலத்தை வலம் வரவைத்த
ஆற்றல் மிகுந்த மறையோனே!

வெளிப்படுத்திய மனிதர்களை
வேதனைகளிலிருந்து காப்பாற்ற
வெவ்வேறு காலக் கட்டங்களில்
வெவ்வேறு நபிகளை உலகுக்கனுப்பி
விபரங்கள் விளக்க மக்களுக்கு
வாய்ப்பளித்த வல்லவனே !

தியாகத்தின் திருஉருவமாய்
திருநபியாம் இப்ராஹீம் [அலை]
அவர்களின்மூலம் உன்ஆற்றலை
அனைவருக்கும் அறியத்தந்து
மனிதர்களின் பொறுமைக்கும்
மனஉறுதியான இறைநம்பிக்கைக்கும்
மகத்தான சான்றிதழ்களைத் தந்து
மகத்துவத்தை ஏற்படுத்திய
மாபெரும் அருளாளளனே!

இப்ராஹீம் நபியின் தியாகத்தை
இவ்வுலகம் அழியும் நாள்வரைக்கும்
இம்மக்கள் மறந்திடாதவன்னம்
இத்தியாகத் திருநாளாம்
ஹஜ்ஜுப் பெருநாளை
ஹிதாயத்தோடு  தந்தத் தூயவனே!

இறையில்லமிருக்கு மக்காவிற்கு
இறுதிக் கடமையை நிறைவேற்ற
இனிதே  சென்றுள்ள மக்களங்கே
இன்னலை நீக்க கண்ணீர் மல்க
இருகரமேந்திய இறையச்சதுடன்
இறைஞ்சி வேண்டி கேட்போர்க்கு
இன்முகம் நோக்கிப் பார்ப்பவனே!
இன்பத்தை வாரிக் கொடுப்பவனே!

எங்களுக்கும்  இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...

ஹஜ் செய்வதோடு மட்டும் நம் கடமை முடிவதில்லை ஹஜ்ஜின் காரியங்களை முடித்து நாயனின் அருள் கிடைத்து நாடு திரும்பிவந்த பின், அதன்படி நடக்க வேண்டும். நாம் செய்த ஹஜ்ஜின் கடமை இறுதிவரை பலன் தருவதுபோல் நடக்கவேண்டும். பாவங்களைபோக்கிவிட்டு வந்து நல்லதை செய்து நன்மையின் பக்கம் நன்மை முதன்மைப்படுதல் வேண்டும். இதுவே நாம் ஹஜ் செய்ததிற்கான நற்பலனைத்தரும்..
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன் 


-- அன்புடன் மலிக்கா

15 Responses So Far:

Yasir said...

யாஅல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்களுக்கும் உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் அருள்வாயாக...இந்த கவியரசிக்கும் அந்த பாக்கியத்தை வழங்குவாயாக

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நாம் யாவரும் விரும்புவதும் இதுவே...

எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்க வேண்டி

அல்லாஹ்விடமே மன்றாடுகிறோம் !

Unknown said...

எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் இப்பாக்கியத்தை தந்து ஈருலகிலும் நமக்கு நல்லருள் புரிவானாக .. ஆமீன்

sabeer.abushahruk said...

முதல் ஹஜ்ஜை நண்பர்களுடனும், இரண்டாவது ஹஜ்ஜை மனைவி மக்களுடனும், மூன்றாவது ஹஜ்ஜை வாப்பா உம்மாவுடனும் நிறைவேற்ற அருளிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளவற்ற கருணையை நன்றியுடன் நினைவு கூர்ந்து ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.

அரஃபாத் மைதானத்தில் தங்கி அமல்கள் செய்து அஸர் தொழுகைக்குப் பின் எல்லா ஹாஜிகளும் துஆக்கள் கேட்பதிலேயே பெரும்பான்மையான நேரத்தை பயன்படுத்துவார்கள்.

இந்த நேரத்தில் கேட்கப்படும் துஆக்கள் நெஞ்சை உருக்கி, இறையச்சத்தைக் கூட்டி, மறுமையின் அச்சத்தை உணரவைக்கும். என் வாழ்நாளிலேயே அரஃபாத் துஆக்களைப் போல உணர்ச்சிகரமான துஆக்களை எங்கும் கேட்டதில்லை. அங்கு அழுததைப்போல எங்கும் அழுததில்லை.

எல்லாக் கூடாரங்களிலுமிருந்தும் துஆவும் கதறி அழும் அழுகை சத்தமுமே அரஃபாத் எங்கும் எதிரொலிக்கும்.

அல்லாஹு அக்பர்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

யா அல்லாஹ் இந்த பாக்கியத்தை எங்கள் அனைவருக்கும் தந்தருள்வாயாக.

அருமையான துஆக்களை, எழுதிய சகோதரரி மலிக்கவுக்கு நன்றி.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//எல்லாக் கூடாரங்களிலுமிருந்தும் துஆவும் கதறி அழும் அழுகை சத்தமுமே அரஃபாத் எங்கும் எதிரொலிக்கும்.//

அன்பினிய சபீர் காக்காவுக்கு,

உங்களின் பின்னூட்டத்தை படிக்கும்போதே கண்ணீர் வந்துவிட்டது. நாளை மிக முக்கியமான நாள் என்பதை உலக மூஸ்லீலம்கள் அறிவார்கள். நாளை அரஃபாத் தினத்தை மிக அமைதியுடன் கூடிய சிறப்பான தினமாக அல்லாஹ் அருள்புரிவானாக.

ஹஜ் செய்யும் அனைத்து சகோதர, சகோதரிகள் நல்ல உடல் நலத்துடன் தங்கள் ஹஜ் கடமைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்ற அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக.

அதிரைநிருபரில் ஹஜ் நேரலையில் பார்க்கும் போது உள்ளம் உருகிப்போகிறது. இக்காலத்தில் பல வசதிகள் ஏற்படுத்தியுள்ளவைகளை பார்க்கும்போதே உள்ளம் உருகுதே. 1400 ஆண்டுகளுக்கு முன்பும் பின்பும் நம் மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. இக்காலத்தில் வாழும் நாம், நம்மை படைத்து பாதுகாத்து வாழ்வழித்து வரும் அல்லாஹ்வுக்கு என்றுமே நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹு அக்பர்.

அல்லாஹ் போதுமானவன்.

crown said...

எங்களுக்கும் இதுபோன்றொரு
வாய்ப்பளிக்கச் சொல்லி
எங்களின் கல்பும் இங்குருக
விரும்பி விம்மி விசும்பியழுது
வேண்டி நிற்கிறோம் தினம் தொழுது
வேண்டியதை நிறைவேற்றி
எங்கள் விருப்பங்களை கபுளாக்கி
வசந்தத்தை தந்து வாழ்வளித்து
எங்கள் வாட்டங்கள் போக்க அருள்புரிவாயாக
எங்கள் நாட்டங்கள் நிறைவேற வகைசெய்வாயாக.

எல்லாம் வல்ல இறையோனே!
எங்களைக் காக்கும் ரஹ்மானே!
உன்னை மட்டும் நாடுகிறோம்
உன்னிடமே உதவி தேடுகிறோம்...
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
சகோதரி இயற்றிய வசன கவிதைக்கு வாழ்த்துக்கள்.
***********************************************
தூஆக்களை வல்ல நாயன் நிறைவேற்றித்தர அருள்வானக ஆமீன்.

crown said...
This comment has been removed by the author.
crown said...
This comment has been removed by the author.
crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஹஜ் முடித்தவுடன் கடமை முடிஞ்சிடுச்சின்னு பலர் அதன் பின் தம் வாழ்கை முறையை நன்மையின் பக்கம் மாற்றிக்கொள்வதில்லை.அது பற்றி நான் சிறு கவியாக்கம் செய்யலாம்னு இருக்கேன்.அதிரை நிருபர்குழு முன்பே யாரும் ஆக்கம் அனுப்பிவிட்டார்களா? அப்படி அனுப்பி இருந்தால் நான் பின்னூட்டத்தில் அந்த கவி ஆக்கத்தை பதிந்து கொள்கிறேன்.விபரம் தரவும்.அப்படி யாரும் ஆக்கம் அனுப்பவில்லை யென்றால் ஒரு கவிதை எழுதலாம்ன்னு யோசனை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பினிய சகோதரர் சகோதரர்களே,

நம் அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்கள் இன்று சற்று முன்பு அரஃபாவில் இருந்து sms அனுப்பினார்கள். நம் அனைவருக்காகவும் துஆ செய்து வருவதாகவும் சொல்லியிருந்தார்கள். குறிப்பாக சகோதரர் கிரவுனிடம் இத்தகவலை சொல்ல சொன்னார்கள்.

அல்லாஹ் போதுமானவன்.

அதிரைநிருபர் said...

//அதிரை நிருபர்குழு முன்பே யாரும் ஆக்கம் அனுப்பிவிட்டார்களா? //

வ அலைக்குமுஸ்ஸலாம், அன்பு சகோதரர் கிரவுன், இதுவரை யாரும் அனுப்பவில்லை. இது தொடர்பாக நீங்கள் ஆக்கம் அனுப்பினால் நிச்சயம் பதிவு செய்கிறோம்.

crown said...

தாஜுதீன் சொன்னது…

அன்பினிய சகோதரர் சகோதரர்களே,

நம் அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்கள் இன்று சற்று முன்பு அரஃபாவில் இருந்து sms அனுப்பினார்கள். நம் அனைவருக்காகவும் துஆ செய்து வருவதாகவும் சொல்லியிருந்தார்கள். குறிப்பாக சகோதரர் கிரவுனிடம் இத்தகவலை சொல்ல சொன்னார்கள்.

அல்லாஹ் போதுமானவன்.
---------------------------------------------------------------------

அஸ்ஸலாமு அலைக்கும்.அல்லாஹ்வின் அருளினால் அன்பைப்பெற்றேன்.அன்பினால் அல்லாஹ்வின் அருளைப்பெறுகிறேன். என்னை பெற்ற பெற்றோரினால் பாசம் பெற்றேன். நான் பெற்ற பாசம்,என் குழந்தைகள் பெற பேரு பெற்றேன்.வாழ்கையே சக்கரம்தான்.சகோ.சாகுலுக்கும்,குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக அமீன்.

அன்புடன் மலிக்கா said...

கருத்துக்கள் பகிர்ந்த அனைத்து நெஞ்சங்களுக்கு மிக்க நன்றி.
இறைவன் அனைவரின் துஆக்களையும் நிறைவேற்றித்தரபோதுமானவன்..

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு