Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பதிவிலக்கணம் ? ! ! ! 41

அதிரைநிருபர் | November 09, 2010 | , , ,

QUOTE

ஒருவன் சரியான நேரத்துக்கு மீட்டிங் போக வேண்டியவன், அன்று கொஞ்சம் தாமதமாக வந்தான்.... கான்பெரன்ஸ் ரூம் கதவு பூட்டியிருந்தது

"வாசல் கதவை தட்டலாமா... யாரும் தவறாக நினைக்கலாம்... நான் போட்டிருக்கும் உடை சரிதானா... சரியாக தலைவாரியிருக்கிறேனா... நான் உள்ளே சென்றவுடன் எல்லோரும் என்னை ஏளனமாக பார்க்கலாம்... பேசாமல் திரும்பி விடலாமா... ஏதோ ஒரு சின்ன தைரியத்தில் கதவின் கைப்பிடியில் கைவைத்து மெல்ல திறக்க..... ரூமுக்குள் ஒருத்தனும் இல்லை...... இல்லாத ஆட்களுக்கா இத்தனை யோசனை???

இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் மற்றவர்களை நினைத்தே நாம் நேரத்தை விரயம் செய்து முன்னேற்றத்தை ஒத்திப்போடுகிறோம்.


பதிவிலக்கணம் ? ! ! !

கருத்துச் சூழ்கொண்ட
குருத்துக் கவிஞர்காள்...
கோர்ப்பது பிசிறினாலும்
வார்ப்பது தொடரட்டும்!

எழுத்துப் பிழையால்
எண்ணம் குழையுமா?
சுமந்து வந்த செய்திச்
சுருங்கிப் போகுமா?

ஞஙன நமண யரல வழள
செழிக்கும் எழுத்தை...
லகர ளகரம் னகர ணகரம்
கிழித்துப் போடுமா?

உணர்ச்சி பொங்க
உருவாகும்
உள்ளக் கிடக்கையை...
புணர்ச்சி இலக்கணம்
புதைத்துப் போடுமா?

அடுக்குத் தொடரும்
ரெட்டைக் கிளவியும்...
அலங்கார மல்லாது
விலங்குக ளல்லவே?

குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
திரிபு மரபுகளும்
உற்று நோக்கியா
உணர்வுகள் பொங்கும்?

நாலடி, வெண்பா
அறுசீர், ஈரடி எல்லாம்...
பாட்டன் பூட்டன்
பழகிய வித்தை!

எதுகை மோனையில்
முதுகு சொரிந்தால்...
சொக்கும் சுகத்தில்
திக்குமே தீர்வுகள்!

இலக்கண விலங்குகள்
தலைக்கன வியாக்யானம்...
தகர்த்து தந்தது
தற்காலத் தமிழின்
தனித்திறன் அன்றோ?

எண்ணங்களை
ஒட்டி வந்தால்...
கூட்டிச் செல்வோம்;
இடறிவிட்டால்...
உதறி விடுவோம்
இலக்கண கைவிலங்குகளை!

மொழி எமக்கு ஊடகம்...
ஒலியின் -
மாத்திரை அளக்கவோ
அசை பிரிக்கவோ
அல்ல!
கற்றதும் உற்றதும் ...
நினைத்ததும் உணர்ந்ததும் ...
ஜனித்ததும் கணித்ததும்
சொல்ல!

முற்றும் தெளிந்தோர்
கற்றுத் தாருங்கள்.

அதுவரை...
வெற்றாய் நின்று
அற்றுப் போகாமல்-
சொல்வோம்
சுட்டுவர் உள்ளமும்
வெல்வோம்!

-- Zakir Hussain / Sabeer

41 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//எதுகை மோனையில்
முதுகு சொரிந்தால்...
சொக்கும் சுகத்தில்
திக்குமே தீர்வுகள்! //

எதுகை ?
என் கை சரியாக அடித்திருந்தால் இப்படி ஒரு உந்தும் முன்னுரையும் கவிதைப் பொக்கிஷமும் வருமா ?

ஊட்டமிதுதான் என்று வரும் பாருங்கள் பொருத்திருங்கள் கருத்தூட்டமும் படையெடுக்கும் பாருங்கள்...

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.குழந்தை(கவிதை)பிறந்ததும் எடுத்து முத்தம் கொடுக்கிறேன்.வருவேன் பிறகுதான் சீ(ரும்)ரோடும்,சிங்கார வாழ்த்தோடும்.இன்ஷாஅல்லாஹ்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஒரு இலக்கணத்தின் இலக்கணத்திற்கு என் கருத்து மாலைசூடவந்தேன்.சில இடங்களில் பட்டிமன்ற நாயகன் சாலமன் பாப்பையா நினைவு வந்தால் நான் பொருப்பல்ல.

crown said...

கருத்துச் சூழ்கொண்ட
குருத்துக் கவிஞர்காள்...
கோர்ப்பது பிசிறினாலும்
வார்ப்பது தொடரட்டும்!
------------------------------------------------------------------
பாலப்பாடம் படிக்கும் போது பிழைகள் நேரத்தான் செய்யும் அதற்கு படிப்பே வராது என்று முடிவு கொள்வது எவ்வளவு தவறோ,அதுபோல் இலக்கண பிழையால் எழுதாதே என்பதும். நறுக்கு தெரித்த நயம்.

crown said...
This comment has been removed by the author.
crown said...

நன்கு விளக்கப்பட்டதை மேலும் விளக்க முடியாது.தெளிவான விளக்கம்.
இரு இணைபிரியா நண்பரிகளின் ஆக்கம்.ஊக்கம் தரும் ஊட்டச்சத்து.
இரட்டை குழல் துப்பாக்கி. ஆனால், பொழிந்ததெல்லாம் பூ மத்தாப்பு.அதனாலே தித்திப்பு.பிரகாசம்.
நாவல் எழுத்தர்கள் சுரேஸ், பாலாப்போல இந்த இருவர்.
சுந்தர மொழியில் மந்திர வார்த்தை.
வேறு என்ன சொல்ல முடியும்? அத்துனையும் அள்ள,அள்ள இன்பம்.
மாணாக்கர்களுக்கு பிடித்த வாத்தியார்கள். நன்றி.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். அஹமது சாச்சா கவனிக்கிறதுக்குள்ளே திருத்தி விடுகிறேன் .அது பெர்னாட்சா அல்ல சேக்ஸ்பியர்.மொதத்திலே தவறு நடந்துடக்கூடாதுன்னு ஒரு பியர்.அவ்வளவுதான்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உற்று நோக்கினால் சற்றே இடறுகிறது !
கவிதையை எப்படித்தான் உரை நடையிலிருந்து பிரித்து பார்ப்பது ? அதற்கு மரபு இலக்கணம் எந்த வகையில் அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! ஏனென்றால் வரிகளை மடித்து விட்ட எல்லா வார்த்தைகளும் கவிதையாகிவிட முடியாது !

கடிகாரம் ஓடிட அங்கே சுழல் சக்கரத்தின் அளவுகோல் ஒரேமாதிரியாக இருக்கும் அதன் சுழற்சி கூடினாலும் குறைந்தாலும் காலம் காட்டுவதில் தவறுகள் ஏற்பட்டிடும், இலக்கணம் புரியாதர்வகளுக்குத்தான் சிக்கல் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் நாம் தான் சிக்கலை சின்னா பின்னாமாக்குதில் வல்லவர்களாச்சே !

என் கருத்து மரபுக் கவிதைகளின் முக்கியத்தும் இன்னும் நம்மிடையே ஒன்றிடவில்லை என்பதே... அதனால்தான் சில உரை நடைகளை மடித்து பார்த்தோம் அட... looks niceன்னு ரசிக்கவும் ஆரம்பித்தோம்.

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,
உரைநடையை மடித்தால் புதுக்கவிதையாகாது. கொஞ்சம் மாற்றி யோசித்தால் புதுக்கவிதையின் சரியான சாயலை அடையாலம் கானலாம்.

எனக்குத் தெறிந்த வழி சொல்கிறேன். மடித்துப்போட்ட வரிகளை உரைநடைபோல வாசிக்க முயன்றால் நெருட வேண்டும். புரிவதில் தடுமாற வேண்டும்.

உரைநடை வாசிக்கையில் வரிகளைப் புரிந்தால் போதுமானது. புதுக்கவிதையை வாசிக்கும்போது வரிகளுக்கிடையேயும் புரிய வேண்டும்.

இந்த வடிவம் கவிக்கோ அப்துர்ரஹ்மானால் கொணரப்பட்டு, மு மேத்தா, வைரமுத்து போன்றோரால் பிரபலப்படுத்தப் பட்டது. மரபு மட்டுமே கவிதை அல்ல என்று நிரூபித்தது.

sabeer.abushahruk said...

மரபு அஸ்த்திவாரம்
எனில் 
புதுசு அடுக்கு மாடி

மரபு கட் கடா கட கடா 
எனில்
புதுசு உள்ளங்கையில் உலகம்

மரபு ஒற்றையடிப்பாதை
எனில்
புதுசு தேசிய நெடுஞ்சாலை!

மொத்தத்தில்
மரபு
மூத்தவர்களின் மந்திரம்
புதுசு
இளைஞர் கை எந்திரம்
எந்திரம் இயக்க
மந்திரம் எதற்கு?!


 

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா:

அம்மா சொன்னாள் அவன் அப்படித்தான், பொருத்திரு மகனே எல்லாம் உன் கையில், ஆதால் காத்திருந்தேன்.

மேலேச் சொன்ன வரிகளை மடக்கிப் பார்த்தேன்... இப்படியாக.

அம்மா சொன்னாள்
அவன் அப்படித்தான்
பொருத்திரு மகனே
எல்லாம் உன்
கையில் ஆதலால்
காத்திருந்தேன்..

அதே அர்த்தங்கள் கொள்வதாக நான் காண்கிறேன், காக்கா இதெப்படி என்று சொல்லுங்களேன்...

மற்றொன்று..

கீழ் இருக்கும் கவிதை புதுமையா / மரபா உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்..

இத்தனையும் கொண்டு இன்பம் - நெஞ்சில்
எட்டி அலைமோத என்வழி சென்றேன்
எத்தனையோ அழகாக - இந்த
ஊரை உலகைப் படைத்தவன் செய்தான்
வித்தைகள் அன்றோ புரிந்தான் - என்று
வீறுநடை கொண்டு ஏகிடும்போது
பத்தைசிறு மரக்காடு - அதன்
பக்கத்தி மயானக் காட்டினைக் கண்டேன்

அஸ்திவாரம் உறுதியாக இருந்தால்தானே, புதுசு புதுசா மேலே எழுப்ப இயலும் ஆகவே மரபைத் தழுவி புதுமை காண்போம் :)

sabeer.abushahruk said...

ஆபு இபுறாகீம்,
மேலே சொன்னது உரைநடையாகவும் உருத்துகிறது, கவிதையாகவும் சுவை இல்லை. 

மற்றொன்றோ மரபாகவே ஒலிக்கிறது. சரியாகச் சொல்லிவிட நாம் சான்றோர் அல்ல. தவிர, நாம் மரபை எந்த இடத்திலும் சாடவில்லை. அதேசமயம், மனிதன் தன் எண்ணங்களை எழுத்தில் வடிக்க எந்த வகைப்படுத்தப்பட்ட வட்டங்களுக்கும் சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறேன்.

மனிதன் தான்
மாற்றம் கொணர்வான்.
கனவான்களே
கனவு காண்பர்.
ஒரு புது
விருட்சத்தின்
விதையோ
ஒரு பழைய
வினாவுக்கான
விடையோ அதில் இருக்கலாம்
கலாமே சொன்னாலும்...
கனவு காணாது 
கணினி!

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். ஆசிரியர் பாடம் நடத்திக்கிட்டு இருக்கும் போது நான் ஊடல வருவது தவறுதான் மன்னிக்கவும்.இதற்கு முன் ஒரு செய்தி பதிந்திருந்தேன்.பின் சில தவறு ஏற்பட்டதால் அழித்து விட்டேன் .
அந்த செய்தியை இப்பொழுது பதிந்துவிட்டுச்செல்லலாம்னு வந்தேன்.
மேலை நாட்டு பிரபல மேடை நாடக எழுத்தாளர் சேக்ஸ்பியர் எழுத்தில் அதிகம் எழுத்துபிழை(Spilling mistakes) வரும்.அதனால் அவர் சொல்ல அவர் நண்பர் எழுதியதே அவரின் ஆக்கம்.
இங்கு சிந்தனை சேக்ஸ்பியருடையது.
செயல் வடிவம் நண்பன் தந்தது.

ZAKIR HUSSAIN said...

Spelling Mistake in "spilling mistakes'

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா :

///சரியாகச் சொல்லிவிட நாம் சான்றோர் அல்ல. தவிர, நாம் மரபை எந்த இடத்திலும் சாடவில்லை. அதேசமயம், மனிதன் தன் எண்ணங்களை எழுத்தில் வடிக்க எந்த வகைப்படுத்தப்பட்ட வட்டங்களுக்கும் சிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறேன். //

மரபு வேண்டும் அதை நேசிக்கும் மான்பும் வேண்டும் உங்களின் கருத்தை ஏற்கிறேன்.

நம் சிந்தனைகளை, சீற்றங்களை, மெல்லிய உணர்வுகளை, ஆதங்கத்தை (எல்லாமே ஒன்னு தானேன்னு சாஹுல் கையத் தூக்குற மாதிரி தெரியுது).. வெளிப்படுத்த எழுத்துகளில் வட்டம் போட்டு சுற்ற வேண்டாம், எல்லைக் கல் குத்தி வேலி எழுப்ப வேண்டாம் அதற்கு கவிதை என்றோ கட்டுரை என்றோ பெயரிட்டுக் கொள்வோம் ஆகவே இதுவல்ல நம் இலக்கு, ஊர்கூடி உறவுகள் கலந்துரையாடி ஒற்றுமையே குறியாக சென்றிட வாகனம் எதுவானாலும் சரியே..

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
///சரியாகச் சொல்லிவிட நாம் சான்றோர் அல்ல

சான்றோர்கள் கூட சில நேரங்களில் எழுத்துப்பிழை இலக்கண பிழைகள் செய்துள்ளார்கள் என்பது திண்ணமே

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நேசிப்பவர்களின் நேர்மை தெரியும் சபையிது, நம்மவர்கள் இங்கே எழுத்துப் பிழை(ப்பு)க்காக யாரும் எழுதுவதில்லை அதனால் அவைகளை ஏன் இந்த எழுத்து பிழை(ப்பா)யிது என்று நான் யாரையும் சுட்டிடவுமில்லை... ஏற்றுக் கொள்ளும் தரம் இருக்கும் நம்மிடையே எங்கேயும் எக்காலத்திலும் ஏளனம் செய்திட/காட்டிட மாட்டோம் இதில் உறுதியாயிருப்போம்...

மரபுக்கு கொடுத்திடுவோம் நன்-மதிப்பு
புதுமைக்கு கொடுத்திடுவோம் வர-வேற்பு (with smile)

ஜன்னலைத் திறந்து வைத்தேன்
சில்லென்ற காற்று முகத்திலடித்தது
எப்படியதனை உணர்த்தி இடுவேன்
தென்றல் என்றா ! வசந்தமென்றா ?

பி.கு.: வழக்கமான புன்னகை இழையோடும் என்றுமே ! once again smile Kakkah(s) :)

அன்புடன் மலிக்கா said...

அஸ்ஸலாமு அலைக்கும்..

குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
திரிபு மரபுகளும்
உற்று நோக்கியா
உணர்வுகள் பொங்கும்?//

பொங்காது,,,,

உணர்வுகள் பொங்கும் வேளையில் இலக்கணமோ இலக்கியமோ அறியாது
நினைவுகளுக்கு ஓடும் அத்த்தனையும் நிஜமாக்கிப் பார்க்கத்துடிக்கும் மனதுபோல், எண்ணங்களுக்குள் ஓடும் அத்தனையும் எழுத்தாக்கிப் பார்க்கத்துடிக்கும் உணர்வுகள்.

தோன்றிய எண்ணம் மாறிவிடுவதற்குள் மடமடவெனவே எழுததுடித்து அதை வடிக்கும்போது
ஐகாரம் - ஒளகாரமாகும்
உயிரளப்பெடை -ஒற்றளப்பெடையாகும்
மகரம் ஆயுதமாகும்

வார்த்தைகள் சிதறும்
வரிகள் குளறும்
வரிசைகள் மாறும்
பிழைகள் தோன்றும்
அவையெல்லாம் தாண்டி ஆவல் தூண்டி எழுதிமுடித்ததை எடுத்துபடிக்கையில்
ஆயிரம் நிலவு முகத்தில் உதிக்கும்
ஆத்மாக்குள்ளே ஆனந்த ஆரவாரம் கேட்கும். இவையனைத்தும் அடங்கியபின் முடித்து மீண்டும் ஒருமுறை திரும்பப் படிக்கையில்,,

அறை க்கு
அரை யென்றும்

கரை க்கு
கறை யென்றும்

ஆவலுக்கு அவலென்றும்
ஆசைக்கு அசையென்று

அர்த்தங்கள் மாரி[றி]யிருப்பது புலப்படும்.

அவைகள் நமக்கு அறியும் பட்சத்தில் திருத்திக்கொள்ளலாம் அறியாதபோது பிறர் அறிவுறுதுகையில் திருத்திக்கொள்ளலாம். [இது என் செயல்]

நாலடியோ ஈரடியோ
மரபோ சீரோ
பாவோ அடியோ
புதுகவியோ ஹைக்கூவோ
உரைநடயோ செய்யுள்நடையோ

நான் அறிந்தது இல்லை ஆயினும் கவி என்ற கவிதையின்மீது கொண்ட ப்ரியத்தால் உணர்வுகளை, அகம் புறம் அண்டம் ஆகியவைக்களுக்கு அடங்கியவைகள் அடங்காதவைகளென என் எண்ணங்களுக்கு புகுத்தி எழுத்தின் வடிவத்தில் எழுதுகிறேன் அவ்வளவுதான்.

மேலே எழுதிய கவிஞர்களிடம் இருக்கும் திறமைகள்கூட நமக்கும் வரவேண்டுமென்ற எண்ணங்களோடு முடிக்கிறேன்..

வாழ்த்துக்கள்..

அன்புடன் மலிக்கா.

ZAKIR HUSSAIN said...

அப்பவே சொன்னாய்ங்க என்னெ...ஒழுங்கா தமிழ் க்ளாஸ்லெ உட்கார்ந்து படிடானு...இருந்தாலும் நீங்கள் எல்லாம் சொல்ற அந்த லிகரம் / லுகரம் எல்லாம் ஏதோ அனஷ்தடிக் கொடுக்கும்போது டாக்டர் சொல்ற வார்த்தைகள் மாதிரி காதில் விழுந்தது மனதில் விழவில்லை...இல்லாட்டி இருக்கவே இருக்கு...அந்த க்ளாஸ் நடத்தும்போது நான் லீவுப்பா....

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜாஹிர் காக்கா: இங்கே மட்டும் என்ன வாழுதாம் அதோகதிதான் அன்று இலக்கண வகுப்பு என்றால் தல கனக்கும் அதனால லீவு போட்டோம்... ஆனாலும் மரபு கற்றவன் என்றுமே பிரபுதான் !

சென்னை புதுக் கல்லூரி உமறுப் புலவர் பேரவை ஒரு விழா எடுத்தது நான் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில், அன்று எங்களின் நன் மதிப்பைப் பெற்ற அதிரைப்பட்டினத்தின் திருமகன் ஜனாப் அதுல் ரஜாக் காக்கா(வக்கீல்) அவர்கள்தான் பள்ளியின் தாளாராக இருந்தார்கள் அவர்களின் முன்னுரையில், "பச்சையப்பன் கல்லூரி படிகளெல்லாம் தமிழ் மணக்கும் ஆனால் எங்கள் புதுக் கல்லூரி புழுதியெல்லாம் தமிழ் படிக்கும்" என்று சொன்னார்கள்..

அதன் பின்னர் பேசிய திருவாருர் திருக்குவலைச் சேர்ந்த திரு மு. கருனாநிதி அன்று முதல் அமைச்சராக இருந்தார் அவர்தான் சிறப்பு விருந்தினரும்.. தொடர்ந்து பேசிய அன்றைய (தமிழக) முதல்வராக இருந்த/இன்றைய முதல்வராக இருப்பவர் தாளாளரின் கவிதையைச் சுட்டிக் காட்டி சொன்னார் இப்படி:-

பசுமை போர்த்திய
புதுக் கல்லூரியில்
புல்லரிக்கிறது !

என்றாரே கரகோஷம் கிளம்பியது ஏன்னா நாங்கள் அமர்ந்திருந்தது புல்வெளி மைதானத்திலே...

sabeer.abushahruk said...

//அந்த க்ளாஸ் நடத்தும்போது நான் லீவுப்பா.//
நீ மட்டுமல்ல நிறைய பேர் லீவு போல தெரியுது. கைல கம்போடு எந்த வாத்யாரும் இங்கே இல்லப்பா.

ஜாகிர், உனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே...இதற்கெல்லாம் கட்டுப்பட்டால் கைகளையும் கட்டிப்போட்டுடும். அப்புறம் கக்கத்ல ஒரு அகராதியோ, கண்ணுக்கு எட்ற தூரத்ல ஒரு தமிழ் பன்டிட்டோ இல்லாமல் நாம தமிழ்ல புழங்கவே முடியாது.

sabeer.abushahruk said...

//பொங்காது//
நன்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். காரணம், புதுக்கவிதைகள் புனைந்து நீரோடையிலும் திண்ணையிலும், தற்போது அதிரை நிருபரிலும் பிரசித்தி பெற்றுவிட்டதால் இது உங்கள் வழக்கு. நீங்களே வாதாடுகிறீர்கள். என் நன்றி வேண்டாம்.

உங்கள் வாதம் தீர்ப்பாகவே திடமாயிருக்கிறது.

வழ்த்துக்கள் சகோ.

sabeer.abushahruk said...

//பாலப்பாடம் படிக்கும் போது பிழைகள் நேரத்தான் செய்யும் அதற்கு படிப்பே வராது என்று முடிவு கொள்வது எவ்வளவு தவறோ//

அது! சும்மா நச்சுனு சொன்னீங்க க்ரவுன்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
Spelling Mistake in "spilling mistakes'
-----------------------------------------------------------------------Assalamualikum.bro.don't mistake me நம்புங்கள் இவ்வளவு பரபரப்புள யாரவது கவனிக்கிறாங்களான்னுப்பார்க வேன்டும்மென்றுதான் அவ்வாறு அடித்தேன்.ஆனால் உங்களுக்கு கழுகுப்பார்வை.வெல்டன்.( நம்புங்க சார்.. எனக்கு பொய் சொல்லிப்பழக்கம் இல்லை- இதுவே பெரிய பொய்னு அபுஇபுறாகி காக்கா சொல்றது கேட்குது).

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…
நாங்கள் அமர்ந்திருந்தது புல்வெளி மைதானத்திலே...

அஸ்ஸலாமு அலைக்கும்.ஆனால் ஒரு துரதிஸ்டம்.பெரும்பாலான மாணவர்கள் FULLலாத்தான் திரியிராங்க,உங்க செட் நல்ல செட் நானறிந்தவரையில்.அதுக்காக "தண்ணி" தர பம்பு செட்டுன்னு,சட்டு ,புட்டுனு சொல்லிடாதிங்க.சில க.....ல் போன்றவர்களைத் தவிர்த்து.

அன்புடன் மலிக்கா said...

அப்பவே சொன்னாய்ங்க என்னெ...ஒழுங்கா தமிழ் க்ளாஸ்லெ உட்கார்ந்து படிடானு...இருந்தாலும் நீங்கள் எல்லாம் சொல்ற அந்த லிகரம் / லுகரம் எல்லாம் .//

நமக்கும் அதெல்லாம் தெரியாதுமா.
நாங்க பள்ளியையே தாண்டலை இதெல்லாம் எப்படிதெரியுமாம்.

//sabeer சொன்னது…
//பொங்காது//
நன்றி சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். காரணம், புதுக்கவிதைகள் புனைந்து நீரோடையிலும் திண்ணையிலும், தற்போது அதிரை நிருபரிலும் பிரசித்தி பெற்றுவிட்டதால் இது உங்கள் வழக்கு. நீங்களே வாதாடுகிறீர்கள். என் நன்றி வேண்டாம்.

உங்கள் வாதம் தீர்ப்பாகவே திடமாயிருக்கிறது.

வழ்த்துக்கள் சகோ. ///

எவ்வளவு கற்றாலும் அப்போதும் கற்றுகுட்டிதான். இன்னும் எவ்வளவோயிருக்கு கற்வேண்டியது.
தாங்களின் வாழ்த்துக்களுக்கும் கருத்துக்களுக்கும் மனமார்ந்த நன்றி..

நர்கீஸ். முரசொலி. தமிழ்தேர்.[அமீரகம்] இனிய திசைகள். ஆகிய பத்திரிக்கைகள். மற்றும் மாத இதழ்களிலும். ஆண்டு மலர்களிலும் என் கவிதைகள் வெளியாகியுள்ளன சகோ
தற்போது தமிழ் குடும்பம்.தமிழ் குறிஞ்சி. முத்துப்பேட்டை ஓ ஆர் ஜி. பேஷ்புக். மற்றும் கவிதைபோட்டிகளிலும் எழுதி வருகிறேன்
இறைவனின் உதவியால். இறைவன் நாடினால் இன்னும் எழுதுவேன் எனக்குதெரிந்த என் எழுத்துக்களில்..

Unknown said...

சபீர் ,ஜாகிர் காகாமார்களின் தமிழ் ஆர்வம் அமர்க்களம் ............

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அட ! கிரன்(னு): நீ வாலி(ய) நினைச்சு தண்ணீர் இரைக்கிறே... ஏன்னா அந்த வாலி தண்ணீரில் மிதக்கும், மூழ்கும் ஆனா குளத்து மேட்டுல வீட்டை வைத்து கிட்டு இப்படியெல்லாமா... நமக்குன்னு மரபுண்டு அதனால புட்டுப் போட இதுவல்ல(டா)ப்பா தளம் ! :) காமெடி கீமடி பன்னலையேன்னு கேட்டு வைத்திடாதே !

தீர்ப்பை நம்ம கையில் கொடுத்து விட்டதால், எனது தீர்ப்பு மரபு கவிதை கீரீடமாகவும் இருக்கும் அஸ்திவாரமாகவும் இருக்கும்.. இதற்கிடையிலிருக்கும் வண்ணங்களும் எண்ணங்களும் தான் புதுக் கவிதைகள் (என்ன சரியா பாலகா ? சாலமன் பாப் மாதிரி சொலிட்டேனே :))
------------

சகோ அன்புடன் மலிக்கா : உங்களின் வலைகள் கடந்த கவிதைகளை வாசித்து இருக்கேன் பல சந்தர்ப்பங்களில், நானும் ஆங்காங்கே தூவியிருக்கேன் அதெல்லாம் வெறும் தூறல்தான்... இங்கே நடக்கு கருத்துக் குவியலில் நான் கற்றது கவிக் காக்காவோ / அசத்தல் காக்காவோ சொல்ல வந்தது "ஒரு விடயம் மட்டுமே எழுதுங்க எழுங்க எழுதிகிட்டே இருங்க.. தயங்காம எழுதுங்கன்னுதான்" இது நம் எல்லோருக்கும் பொருந்தும், இதற்கு முன்னர் பதியப்பட்ட முந்தைய கவிதை / கட்டுரைகளுக்கும் பொருந்தும்...

தொடருங்க... தொடர்ந்து எழுதுங்க...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

யாசிர், அப்துல் மாலிக் தம்பிகளா we are missing you both ! எங்கே ?

mohamedali jinnah said...

இதுவும் ஒரு அருமையான கட்டுரை

sabeer.abushahruk said...

கடலளவு
கற்றவர்தான்
கருத்துச் சொல்வரா?
கையளவு
கற்றவரென்ன
கையாலாகதவரா?

நற் சிந்தனைகளும்
நல் லெண்ணெங்களும்
கற்பனை வளமும்
கட்டுரைத் திறனும்
கவிதை புணைவும்
கதை சொல்லலும்
பிழைகள் பயத்தில்
பதுக்கி விடுவதா?

sabeer.abushahruk said...

//எனது தீர்ப்பு மரபு கவிதை கீரீடமாகவும் இருக்கும் அஸ்திவாரமாகவும் இருக்கும்//

சர்தான்ப்பா,
இருக்கட்டுமே,
யார் வாணான்டா,
பேஷா இருக்கட்டும்,
இருக்க வேண்டிய இடத்ல இருக்றதால ஜோரா இருக்கட்டும், யாரையும் குத்தாமல் குடையாமல் தாராளமா இருக்கட்டும்.

ஊடால,..

//இதற்கிடையிலிருக்கும் வண்ணங்களும் எண்ணங்களும் தான் புதுக் கவிதைகள்//

கிரீடத்திற்கும் (நம்ம கிரீடம் அல்ல) அஸ்திவாரத்திற்கும் இடையேயுள்ள
புதிமை விரும்பும் மூளையும்
இளகிய இனிய இதயமும்
சாதிக்கும் கைகளும்
எல்லைகளை எட்டும் கால்களும்
கலாம் சொன்ன கனவு காணும் கண்களும்
என உயிரோட்டதுடன் புதுசு இருந்துவிட்டுப் போகட்டுமே.
இப்ப இன்னான்ரே(றீங்க)?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

sabeer சொன்னது…

பிழைகள் பயத்தில்
பதுக்கி விடுவதா?/////

கவிக் காக்கா : :)) சான்ஷே இல்லே, விசாரனை கமிஷன் போட்டுடலாம்... கிரவுனு கமிஷன்ல பங்கு கேட்டுடாதே(டா)ப்பா !

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.முப்பாட்டன் மரபு வழி வந்த என் பிள்ளை "புதுகவிதை".

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மர(ப்)பு (திரை)போடாத வாசல் கானும்போது உள்ளேயிருப்பது தெரிவதால் என்னதான் இருக்கிறதுன்னு நின்று பார்த்திடச் செய்யும் அட இவ்வளவுதான்னு அசதியும் அவிழும்.

மர(ப்)பு (திரை)போட்ட வாசல் கானும்போது உள்ளேயிருப்பது தெரியாமல் தெரியும் ஆதால் உள் சென்று பார்க்கத் துடிக்கும் ஆவல் கூடும் சென்றுதான் பார்த்தால் எல்லாமே தெரியும்..

ரோஜா முற்களோடிருந்தால் குத்திடுமோன்னு ஏன் பயப்படனும் ? முள்ளை முள்ளால் எடுக்கலாமே ! அதுதானே சிறந்தது.

மரபு கவிதைகளும் அவசியமே !

sabeer.abushahruk said...

சார்,

மரபுக் கவிதை வேண்டாம் என்று புதுசா எழுதுரவங்க யாருமே சொல்வதில்லை. ஆனால், புதிதை கவிதை என்றே ஏற்றுக்கொள்வதில்லை மரபுக்காரர்கள்.

என் தனிப்பட்ட பார்வையில் என் எழுத்துக்களை கவிதை என்று அழைப்பதை நான் நிர்பந்தித்ததே இல்லை. எப்படி வேண்டுமானலும் வகைப் படுத்திக்கொள்ளட்டும். 'மடித்த உரைநடை' 'சீரழிந்த கவிதை' 'சிதைந்த கலாச்சாரம்' இப்படி எப்படி வேண்டுமாலும் அழைத்துவிட்டுப் போங்கள். யார் கேட்க்கப்போகிறார்கள். 

ஆயினும், தமிழ்லதான எழுதி இருக்கு? வாசிக்கவே மாட்டோம் என்று மரபு மனிதர்கள் வீம்பு பிடிப்பது சிறு பிள்ளைத்தனமாக இல்லையா?

வாசிக்கவே மாட்டோம் என்று புறக்கனித்தால் நஷ்டம் மொழிக்கா? எல்லாம் புறம்தள்ளி புதுசுதான சார் முன்னால் நிற்கிறது?

 மரபு புறிய வேண்டுமெனில் மொழியில் புலமை வேண்டும். உலக மொழியெல்லாம் உலகமயமாக்களில் எளிமைபடுத்தப்பட்டு பரப்பப்பட்டுகொண்டிருக்கும்போது நாம் மட்டும் மரப்பு போட்டு மூடுவது ஏனோ?

எண்ணங்களைப் பாருங்கள்
எழுத்துபிழைகளைப் பொருத்துக் கொள்ளுங்கள்
எமக்கும் சற்று கற்றுத்தாருங்கள்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா(சார்) இதென்ன புதுப் பழக்கம்... :) :) :)

sabeer.abushahruk said...

//முப்பாட்டன் மரபு வழி வந்த என் பிள்ளை "புதுகவிதை"//

இப்போது உங்களிடம் இருக்கும் பிள்ளையை பாராட்டி சீராட்டி வளர்ப்பீர்களா அல்லது முப்பாட்டன் புதைகுழி பிராண்டுவீர்களா?

முப்பாட்டனுக்கான மரியாதையை மனதில் வைத்துக்கொண்டு... பிள்ளையை போய் கவனிங்கப்பா!

Unknown said...

எண்ணங்களை
ஒட்டி வந்தால்...
கூட்டிச் செல்வோம்;
இடறிவிட்டால்...
உதறி விடுவோம்
இலக்கண கைவிலங்குகளை!...............

i like it............

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

நான் (அதிரைப்பட்டினத்து மருத்துவர்களை பார்க்கனும் அங்கே போறேன்... வரிகளால் வருடி விடுவோம்
தென்றலை இழுத்து மூச்சு விடுவோம்
ஏரிக்காரை ஒதுங்கும் மெல்லிய
அலைகளை ரசிப்போம்
ஆங்காங்கே வலை
மேய்ச்சலுக்கு செல்வோம்
அதோடு
கட்டும் படிகளை
கான்கிரீட்டால் கட்டிடுவோமே
அஸ்திவாரம் ஸ்ட்ராங்க இருக்கும்போதே... :) :) smile please !

எங்களின் வாரிசுகளே வாருங்கள், வாருங்கள் வரிகளிலும் இளமை வேண்டி மரபு உங்கள் சொத்து அதனை எப்படியும் நீங்கள்தான் பங்கிட்டு எடுத்திட வேண்டும்.. பாதுகாத்து கொள்ளுங்கள் (புதுக் கவிதை) வாரிசுகளே !

இப்படிக்கு
மடிப்பு களையாத மரபு(அப்பா)

Riyaz Ahamed said...

குற்றியலுகர குற்றியலிகர
உகர இகரங்களும்
இதை எல்லாம் மறந்து இருக்கிறேன் என்றிருக்கும் நேரம் நினைவு படுதிடிங்க அண்ணா

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு