நினைவலைகளை நிழலாட வைப்பதில் அதிரைநிருபருக்கும் அதில் பங்கேற்கும் படைப்பாளிகளுக்கும் என்று தனித் தன்மையுண்டு என்பதை எங்களோடு நேசம் வருடித் தரும் உங்கள் யாவருக்கும் தெரிந்ததே..
இந்த தியாகத் திருநாளை அதிரைநிருபர் வாசக நேசங்களோடு நாங்களும் சந்தோஷமாகவும், இறை அச்சத்தோடும் கொண்டாடுவோம் இன்ஷா அல்லாஹ்..
இச்சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் "அதிரைக் கவி" சபீர் அவர்களும் "கிரவுன்" தஸ்தகீர் அவர்களும் நினைவு கூறும் "ஹஜ் பெருநாள்" குதூகலங்களை பகிர்ந்து கொள்வதில் பங்கேற்போம்...
. . . . . . . . . . . . . .
ஆஹா பெருநாள்
அருமையான திருநாள்...
ஆண்டவன் நமக்களித்த
அழகான ஒருநாள்!
ஆர்ப்பரிக்கும் மனத
அசைபோடும் இனிதாய்
அதிரைப் பட்டினத்து
அந்தக்கால பெருநாள்!
அன்றிரவு முழுதும்
அமைதியில்லா உறக்கம்...
அதிகாலை தொழுகை
அதற்கடுத்து குளியல்!
குளியல் என்ற பெயரில்
கும்மாலம் குதூகலம்...
குளத்து மேட்டிலிருந்து
குபீர் பாய்ச்சல் குட்டிக்கரணம்!
உச்சந் தலை முதல்
உள்ளங் கால் வரை
உஷ்ணம் தீர உடம்பில்
உம்மா தேய்த்த எண்ணெய்!
எண்ணெய்ப் பிசுக்கெல்லாம்
எங்கெங்கும் மிதக்க
வெட்டிக்குளமெல்லம்
தொட்டு விளையாட்டு..
உள்நீச்ச லோடு
கண்டு விளையாட்டு!
புத்தம்புது கைலி
புதிதாய் தைத்த சட்டை
புட்டாமாவு போட்டு
பினாங்கு அத்தர் பூசி...
உச்சமான உடுப்பாக
ஷைத்தானுக்கு தடுப்பாக
ஹெல்மெட்டு போல
வெல்வெட்டில் தொப்பி!
கண்களில் சுர்மா
கையில் சீக்கோ ஃபைவ்
கால்களில் கித்தாச் செருப்பு
கைக்குட்டைக்குள்ளும்
யாட்லி பவுடர்...
சங்கு மார்க்கு லுங்கி
டெட்ரெக்சில் கம்சு சட்டை
சில்லென்ற ஹவ்தில்
ஒலூச் செய்ய நனையும்
தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!
ஊருக்கே உரித்தான ப்ரத்யேக ராகத்தில்
அத்தனைப் பள்ளிகளிலும் சத்தமாய்க் கேட்கும்...
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்...
லா இலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர்...
அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து!
பெருநாள் காசு பைக்குள்ளே
திருநாள் தொழுகை நிறைவேற்றி
தோள்தழுவி வாழ்த்தி
சந்தோஷ தருணங்களை பகிர்வோம்!
உப்புக்கண்டம் சப்புக்கொட்டி
வர்ணங்களிலும் வடிவங்களிலும்
வார்த்துவைத்த கடப்பாசி
வாய்க்குள் கரையும் வட்லப்பம்
இடியப்பம் சவ்வரிசி
ரொட்டி எறச்சானம்...
அதிரைபட்டினத்தின் அந்தகால பெருநாள்!
இன்றோ...
நெட்காலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்
மூடிய இமைகளுக்குள்
முடிவற்ற நினைவுகளிலும்
செல்ஃபோனில் சேகரித்த
செல்லுலாய்டு முகங்களிலும்
சட்டென முடிந்துபோகிறது
பெருநாள் சந்தோஷங்கள்!!!
KulluAam WaAnthum BiKhair
- Sabeer
........................................................................................
ஈகைத் திருநாளாம்
முஸ்லிம் எல்லோரும்
மகிழ்வடைய வந்த பேருனாளாம்.
பணகாரர் முதல் ஏழை, எளியவர் வரை
சிறுவர் முதல் பெரியவர்வரை
பெறும் சந்தோசம்... வார்தையில் அடங்காது.
தியாகத்தின் பிறந்த நாள்
ஹஜ் புனித பயனம் தந்தனாள்.
வருடத்தில் ஒருமுறை வரும் வசந்த நன்னாள்.
புத்தாடையும்
புது, புது உணவு பலகாரமும்
குதூகலமும், மகிழ்சி ஆராவாரமும்
தந்திடும் இன்னாளில்
நமக்குள் ஒரு சபதம் செய்வோம்.
அந்த சபதம் ஒற்றுமையின் கயிற்றை பிடிப்போம் !!!
-- crown
........................................................................................
அன்பிற்குரியவர்களே..
"பெருநாள் வாழ்த்துக்கள்" பகிர்ந்து கொள்வது பல்லாண்டு கால பழக்கமாக இருந்தாலும், நடைமுறையில் உள்ள பெருநாள் வாழ்த்துச் செய்திகள் எல்லாம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்தது அல்ல.
இந்த இத்தருணத்தில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் மிக சந்தோசமாக ஹஜ்ஜுப் பொருநாளை கொண்டாடுவோம். செந்தங்களின் நலன் விசாரிப்போம்.
நம் அனைவரின் நலனுக்காகவும், நம் பெற்றோர்களின் நலனுக்காவும், நம் சொந்தங்களின் நலனுக்காவும், உலக முஸ்லீம்கள் அனைவரின் நலனுக்காகவும் துஆ செய்வோம்.
அல்லாஹ் போதுமானவன்.
தொடர்ந்து இணைந்திருங்கள்...
-- அதிரைநிருபர் குழு
16 Responses So Far:
தியாகத் திருநாள்
தித்திக்கும் பெருநாள்
சொந்தம் பந்தங்களை
தேடிச் சென்று
நேசம் காட்டிடும் நாள்
முதுமை காண்டிடும் முன்
சுற்றியிருக்கும் மூத்தவர்களை
பெற்றெடுத்த தாய் தந்தையர்களை
சுற்றம் போற்றும் உற்ற உறவுகளை
மனம் குளிரவைத்திடுவோம்
அவர்களுக்காக பிராத்திர்ப்போம்
இன்ஷா அல்லாஹ்...
KulluAam WaAnthum BiKhair
தெருவெங்கும் ஒலிக்கும்
தக்பீரின் முழக்கம்,
ஊரெங்கும் திளைக்கும்
தக்வாவின் சிறப்பும்!
-------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். காக்கா எங்கே கிடைக்கும் இதுபோல் வார்தைகள்?
இன்றோ...
நெட்கலிலும்
நீண்ட பெருமூச்சிலும்
ரகசிய கண்ணீரிலும்
மூடிய இமைகளுக்குள்
முடிவற்ற நினைவுகளிலும்
செல்ஃபோனில் சேகரித்த
செல்லுலாய்டு முகங்களிலும்
சட்டென முடிந்துபோகிறது
பெருநாள் சந்தோஷங்கள்!!!
-----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நெஞ்சு அடைக்கிறது. பாசம் தூரத்தில் இருந்து அழைக்கிறது.கண்ணீர் திரண்டுவர தருணம் பார்கிறது.எதார்த்தம்,எதார்த்தம்....
அபுஇபுறாஹிம் சொன்னது…
தியாகத் திருநாள்
தித்திக்கும் பெருநாள்
சொந்தம் பந்தங்களை
தேடிச் சென்று
நேசம் காட்டிடும் நாள்
முதுமை காண்டிடும் முன்
சுற்றியிருக்கும் மூத்தவர்களை
பெற்றெடுத்த தாய் தந்தையர்களை
சுற்றம் போற்றும் உற்ற உறவுகளை
மனம் குளிரவைத்திடுவோம்
அவர்களுக்காக பிராத்திர்ப்போம்
இன்ஷா அல்லாஹ்...
KulluAam WaAnthum BiKhair.
----------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.முதுமை காண்டிடும் முன்.... இன்சாஅல்லாஹ்... கவிதைக்கு, கவிதை. வைரத்தை,வைரத்தால் அறுப்பது போல்.
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ..,)
அன்பிற்க்கினிய சகோதரர்கள்..........
அதிரைநிருபர் குழு, படைப்பாளிகள், பின்னூட்டாளிகள் மற்றும் வாசகசிகாமணிகள் அணைவருக்கும் ஜலால் -ன் இனிய
""" ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் """
*** குல் ஆம் வயின் த்தும்பி கையர் ***
எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
//கைக்குட்டைக்குள்ளும்
யாட்லி பவுடர்.//ஆழ்ந்த அனுபவத்தின் விளைவு இந்த வரிகள்..எப்படிக்காக்கா இப்படியெல்லாம் எழுத முடிகிறது...கிரவுன் உங்கள் கவிதையில் உங்கள் எண்ணம் பிரதிபலிக்கிறது.எல்லோருக்கும் மனமார்ந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
எப்படி இவ்வளவு விசயமும் உனக்கு ஞாபகம் இருக்கிறது...ஊரில் நான் பெருநாள் கொண்டாடி 25 வருடத்துக்கு மேல் இருக்கும். இப்போது எல்லாம் மாறிப்போய் இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதரர்கள் சபீர், தஸ்தகிர் இருவரின் கவிதைகள் நம்மை நம் சிறுவதிற்கே அழைத்து சென்றுவிட்டது.
அனைவரும் மிக சந்தோசமாக ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி இருக்கலாம்.
அன்பு சகோதரர் ஷாஹுல் அவர்கள் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது நமக்கு sms மூலம் ஹஜ்ஜுடைய நேரத்தில் நிகழ்வுகளை அறிவித்து வந்தார்கள் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
சபீர் காக்கா எங்கே ஆளே காணோம்?
//சபீர் காக்கா எங்கே ஆளே காணோம்?//
ஒமான் நாட்டின் மலைக்குன்றுகளுக்கிடையே இறைவன் அலட்சியமாக கிறுக்கிப்போட்ட மரபு மற்றும் புதுக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மூன்று நாட்களுக்கு என் நேரத்தை நிர்வகிப்பது குழந்தைகளின் கைகளில். வெள்ளியன்று சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
sabeer சொன்னது…
//சபீர் காக்கா எங்கே ஆளே காணோம்?//
ஒமான் நாட்டின் மலைக்குன்றுகளுக்கிடையே இறைவன் அலட்சியமாக கிறுக்கிப்போட்ட மரபு மற்றும் புதுக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். மூன்று நாட்களுக்கு என் நேரத்தை நிர்வகிப்பது குழந்தைகளின் கைகளில். வெள்ளியன்று சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நானும் தேடினேன் ,வாடினேன்,மொனமாய் தேடி,தேடி தேம்பினேன்.சுகமில்லையோ?வேலைப்பளுவோ? தேடல் யாரிடமும் சொல்லாமல் தொடர்ந்தது.இன்று தான் சந்தோசம் தலையெட்டிப்பார்க்கிறது.(வெள்ளியன்று சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்). இன்ஷாஅல்லாஹ் வெள்ளி முளைக்கும்.
// ஒமான் நாட்டின் மலைக்குன்றுகளுக்கிடையே இறைவன் அலட்சியமாக கிறுக்கிப்போட்ட மரபு மற்றும் புதுக்கவிதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.//
கவிக் காக்கா:
"இறைவன் அற்புதமாக" என்றிருந்தால் இன்னும் அழகா இருந்திருக்கும். அவனது படைப்புகளில் எதிலும் அலட்சியம் இல்லை மாறாக ஒவ்வொன்றும் அற்புதமே இவ்வுலக மானுடனுக்கு !
அங்கேயும் மரபு வாசிக்க வைத்தோம்ல ! :)
//ஒமான் நாட்டின் மலைக்குன்றுகளுக்கிடையே இறைவன் அலட்சியமாக கிறுக்கிப்போட்ட மரபு மற்றும் // யான் காக்கா சொல்லாமல் கிளம்பி போய்விட்டீர்கள்...நான் யாரவது கம்பெனி கிடைத்தால் செல்லலாம் என்று ஒமனுக்கு கார் இன்ஷீரன்ஸ் எடுத்து வைத்து காத்திருந்தேன்
அபு இபுறாகீம்,
அஸ்ஸாலாமு அலைக்கும்.
//இறைவன் அற்புதமாக" என்றிருந்தால் இன்னும் அழகா இருந்திருக்கும். அவனது படைப்புகளில் எதிலும் அலட்சியம் இல்லை மாறாக ஒவ்வொன்றும் அற்புதமே இவ்வுலக மானுடனுக்கு !/
நிச்சயமாக மாற்றுக் கருத்து இல்லை. அனால்,/
"அலட்சியமாக" வில் 'உயர்வு நவிழ்ச்சி அணி' போன்றதொரு அணி தொக்கி நிற்பதைக் காணவில்லையா? நாம் வணங்கும் இறைவனை 'அவன்' என்ற ஏக வசனதில் அழைப்பதைப் போல?(என்ன மரபோ போங்கள்)
யாசிர்,
மன்னிக்கவும், நீங்கள் ஒமான் போக விரும்பியது தெரியாமல் போய்விட்டது. மூன்று நாட்களில் 3,000 கி.மீ. காரோட்டியது என் வழ்நாளில் முதல் முறை. நீங்களும் வந்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். அடுத்த முறை முயல்வோம் இன்ஷா அல்லாஹ்.
க்ரவுன்,
உங்கள் தேடல், துஆவாக எங்களை ஊர் வந்து சேர்த்து. நீஙகள் எங்கே சென்றீர்கள் விடுமுறைக்கு?
ஹமீது, என்று திரும்புகிறீர்கள்?
கவிக் காக்கா, அட அது 3,000 கி.மீ.யா நான் உங்கள இங்கே பார்த்த அவசர்த்தில "3,000 கி.மு.ன்னு" வாசிச்சுட்டேன்னா பருங்களேன் !
அவ்வ்வ்வ்ளோ நாள் மாதிரியில ஆயிடுச்சு !
க்ரவுன்,
உங்கள் தேடல், துஆவாக எங்களை ஊர் வந்து சேர்த்து. நீஙகள் எங்கே சென்றீர்கள் விடுமுறைக்கு?
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ். நல்ல தொரு செய்தி நலமாய் அமைந்த பயணம்.குறிஞ்சி,மருதம்,முல்லை, நெய்தல்,பாலை. எல்லா நிலப்பரப்பும் உண்டு என் நிலப்பரப்பு,குடும்பமும்,குடும்பம் சார்ந்த இடமும்( என் வீட்லேயே முடிந்துவிட்ட விடுமுறை)இதற்கு என்ன பெயர் இடலாம்? புலவர்காள் எழுதுங்களே?
Post a Comment