Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூட நம்பிக்கையின் முதலிடம் 24

ZAKIR HUSSAIN | November 08, 2010 | , ,




மொத்தமாகவும், சில்லரையாகவும் மூடநம்பிக்கையை குத்தகைக்கு எடுத்திருக்கும் சீனர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும். உலகத்தில் மொத்தமாக மற்ற இனங்கள் செய்யும் அனைத்து மூடப்பழக்கவழக்கங்களையும் ஒரு பேப்பரில் எழுதி சீனர்களின் மூடநம்பிக்கையுடன் ஒப்பிட்டால் நாம் எழுதியது ஜூஜூபி ஆகிவிடும். இது எல்லா நாடுகளிலும் உள்ள சீனர்களுக்கும் பொருந்தும். ஆகஸ்ட் மாதங்களில் செத்துப்போன முன்னோர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கிறேன் என்று ட்ராமா எல்லாம் போடுவார்கள்.
டிராமாவில் மேல் உலகத்தில் நடக்கும் கொடுமையெல்லாம் தேவதை / சாமி உருவில் வந்து சொல்வார்கள். ஒருவன் மரித்தால்

செத்துபோனவனை அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது இளநீர் மேல்புறமாக சீவி ஸ்ட்ராவெல்லாம் போட்டு வைத்துருப்பார்கள் வரும் வழியெல்லாம் [ "அம்மா" வந்து செத்துட்டானா என சாகுல் கேட்க வேண்டாம்] இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் " வீட்டுக்கு செத்தவன் வரும்பொது (ஆவிக்கு) தண்ணி தவிச்சா?"]
அதை விட கொடுமையான முட நம்பிக்கை இப்போது உயிரோடு இருப்பவர்கள் வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களுக்கு ' 30, 40 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்த மூதாதையர் 'வாகு' சரியில்லை என்று கனவில் கம்ப்ளைன்ட் செய்ததாக சோகத்துடன் சொல்வார்கள் இதற்காக புதைத்த அந்த மனிதரை [ 30, 40 வருடங்களுக்கு முன்..] எழும்பையெல்லாம் தேடி எடுத்து "வாகா' அடக்கம் செய்வார்கள். எனக்கு தெரிந்த ஒரு கிறுக்கன் தொட்டியில் போட்டு ஆட்டும் ஆட்டொமெடிச் மோட்டார் எல்லாம் ஃபிக்ஸ் செய்திருந்தான் புதைகுழிக்குள்.
இவர்களின் வாஸ்த்து சாஸ்திரக்கு பெயர் "ஃபெங் சுய்' [FENG-SUI] இதற்காக இவர்கள் செவிடும் தொகையில் ஒரு கஸ்ட் ஹவுஸ் கட்டிவிடலாம். வீட்டுக்குள் வளர்க்கும் 'அர்வானா' மீனுக்கு விலை ஒரு உயர்தர் கார் வாங்குவதிலிருந்து 2ம் நம்பரில் ஜப்பான் போகும் விசா அளவுக்கு விலை அதிகம். வீட்டு வாசலில் வலது புரம் தண்ணீர் ஊற்றிலிருந்து ஜேட் எனும் கற்கள் வரை இவர்களின் லிஸ்ட் தொடரும். தொழில் நடத்தும் இடங்களில் இவர்கள் பெரும்பாலும் 3 விதமான சாமி சிலை வைத்திருப்பார்கள். அதில் கையில் பெரிய வாளுடன் ஒரு சாமி இருக்கும்[காக்கும் கடவுள்!!]... இன்னொரு சாமி கையில்

ஒரு லெட்ஜர் புக்மாதிரி ஒன்று வைத்திருக்கும். எனக்கு ஒரு சீன நண்பன் ருந்தான்[ரொம்ப சின்ன வயதில்] அவனிடம் ஏன் உங்கள்சாமியை அப்டேட் செய்ய வில்லை, இன்னும் மேனுவலாக லெட்ஜர் வைத்து கணக்கு பார்ப்பதற்க்கு ஒரு ஏஷர் / ஃபுஜிட்சூ / பி எம் நோட் புக் வாங்கி அவர் கையில் கொடுக்களாமே என தெரியாமல் சொல்லி விட்டேன். அவன் என்னை அடிக்காத குறைதான்.
ஆகஸ்ட் மாதங்களில் இவர்களின் முன்னோர்களுக்கு சில பொருள்களை வைத்து படைப்பார்கள். அந்த பொருள்கள் எல்லாம் டூப்லிகேட்தான். அதில் க்ரெடிட் கார்டு, பணம் [சொர்க்க / நரக வங்கியின் கவர்னருடைய போட்டோவெல்லாம் இருக்கும்] இப்போது நாடு முன்னேற்றம் அடைந்து விட்டதால் மெய்டு, பென்ஸ்கார் எல்லாம் வைத்து படைக்கிறார்கள... ஏறக்குறைய சந்தனக்கூடு ஃபார்முலாதான். என்ன ஒரு வித்தியாசம் இதை அனைத்தயும் வைத்து நடு ராத்திரியில் எரித்துவிடுவார்கள், அப்பதானே தீ ஜ்வாலை வழியாக மேலோகம் போகும் என்பது இவர்களின் ஐதீகம்.
மற்றபடி வீடு குடி போகும்போது அழகான பெட் எல்லாம் வாங்கி அதில் நடுவில் மண்னை கொட்டி வைப்பது [ஏதோ சிம்பாளிக்கா சொல்றாங்க நினைக்கிறேன்], தலைவாசலில் சிரிக்கும் புத்தர் என்று புத்தருக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலையை வைப்பது [ஏதோ ஆரியபவன் முதலாளி ரேஞ்சுக்கு தொந்தி இருக்கும்] சீனப்புத்தாண்டில் இவர்கள் 7 வது நாளில் [அங்கும்கிழமை ராத்திரி” இருக்கும் என நினைக்கிறேன்] கரும்பு வீட்டு வாசலில் கட்டி வைத்து பட்டாசு எல்லாம் வெடிப்பார்கள்.[CHOP GO MEI] மேல் உலகத்திலிருந்து நல்ல தேவதை எல்லாம் அன்றுதான் இறங்குகிறார்களாம்... எப்டினு கேட்கிறீங்களா கரும்பில் உள்ள 'கனு'தான் படிக்கட்டாம்.... முதல் ஏழுநாளில் ஆன்வல் லீவில் போயிருப்பார்கள், இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன்.
- ZAKIR HUSSAIN

இவர்கள் செய்யும் விமர்சையான சடங்குகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும். வீட்டை விட்டு வெளியில் மரணம் சம்பவித்து இருந்தால் டெட்பாடியை வீட்டுகுள் கொண்டுவரமாட்டார்கள். [ ஏதோ சின்னபுள்ளையிலே வீட்டில் சொல்லாமல் படம் பார்க்க பட்டுக்கோட்டைக்கு போய் விட்டு வரும்போது ,வீட்டுக்குள் விடாமல் பிள்ளையை வெளியிலே நிற்க வைத்து தண்டிக்கிறமாதிரி…. வெளியிலேயே டெட் பாடி..என்ன கொடுமை சார் இது]

24 Responses So Far:

Yasir said...

ஓ....கொஞ்சம் படிக்கும் கண்ண கட்டுதே காக்கா....தலையேல்லாம் கிர்ருண்டு சுத்துது..
”அதில் நடுவில் மண்னை கொட்டி வைப்பது [ ஏதோ சிம்பாளிக்கா சொல்றாங்க நினைக்கிறேன் ]..hahahaha...........

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

சுழலும் தலையே !
சும்மா இருந்திடு ன்னு "ஹைக் கூவனும்" போல இருக்கு !!

இதுலேயூம் சைனா காரன் தான் முன்னாடி இருக்காம்பா !

Ahamed irshad said...

அறியாத‌ ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் ஜாஹிர் காக்கா ப‌கிர்வுக்கு டாங்கீஸ்...

மூட‌ந‌ம்பிக்கை,ம‌க்க‌ள் தொகை, அடுத்து என‌க்கு தெரிஞ்சி ஒரிஜின‌ல் எல‌க்ட்ரானிக்ஸையே அச்சு பிசுறாம‌ அடிக்கிற‌துல‌ சைனாக்கார‌ன‌ அடிக்க‌ ஆள் உண்டா?

Adirai khalid said...

மழை காலத்தில் பாட்டிகள் கதை சொல்ல அதைசிருவர்கள் எப்படி விருவிருப்பாக கேட்பார்களோ அதுபோல் உள்ளது சீனர்களின (மூட) பழக்கவழக்கங்கள் ! சகோ ஜாஹிர் விமர்சனம் செய்யும் விதம் அருமை !


கல்யாணத்திற்கு மொய் எழுதுவதுபோல் இறந்த சடலத்திற்கும் சொந்த பந்தங்கள் மொய் எழுதுவார்கலாமே.,


இறந்தவர்கள் மறுமையில் கஷ்டப்படாமல் இருக்க காகித பணத்தை எரித்து அனுப்புவார்கள் என்று கேள்வி பட்டு இருகின்றேன்


சீனர்களின் புனித புத்தகத்தில் "நீ உலகில் வாழும் பொழுது எப்படியும் சம்பாதியம் செய்துக்கொள்" (ஹராம் ஹலால் அவர்களுக்கு ஏது) அதனால் தான் சூதாட்டம் போன்றவைகளில் மது, மாது, சூது சம்மந்தப் பட்ட தொழில்களில் சீனர்கள் அதிகம் ஈடுபடுகிண்றனர்

Shameed said...

சீனர்களுக்கு மூட நம்பிக்கை அதிகம் என்று கேள்விப்பட்டதுண்டு இன்று உங்களின் கட்டுரை படித்த பின் தான் அவர்களின் மூட நம்பிக்கை பற்றி விபரம் ஆச்சர்யமாக உள்ளது

Shameed said...

அபுஇபுறாஹிம் சொன்னது…


இதுலேயூம் சைனா காரன் தான் முன்னாடி இருக்காம்பா !

ஒரே ஒரு விசயத்திலே மட்டும் தான் சைனா காரன் "பின்னாடி" இருக்காம்பா !

sabeer.abushahruk said...

ஜாகிர்,
படம் வரைந்து பாகங்களைக் குறித்தால் எந்த அளவுக்கு தெளிவாக் விளங்குமோ அந்த அளவுக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது நீ படங்களுடன் அருமையாக எழுதியுள்ளது.

(யாசிருக்கு கண்ணக் கட்டியதற்கு காரணமும் நேரில் பார்ப்பதுபோல் உணரச் செய்த உன் எழுத்துதான்)

//ட்ராமா எல்லாம் போடுவார்கள்//
மிக அதிக டெசிபலில் காது கிழிகிற மாதிரி கத்துவாங்களே அந்த டிராமாவா. ஒருமுறை நீ கோலால்ம்பூரில் எனக்கு காட்டி மிரட்டினாயே அதுவா?

//அவனிடம் ஏன் உங்கள்சாமியை அப்டேட் செய்ய வில்லை//
இதைவிட அவன் சாமியை கேவலப்படுத்த் முடியுமா? எப்ப்டி விட்டான் உன்னை? இந்த குசும்பு உன் கூடவேப் பிறந்தது. அது உன் எழுத்துக்களில் எப்பவும் இருப்பது வாசிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது.

//கரும்பில் உள்ள 'கனு'தான் படிக்கட்டாம்//

எவ்வளவு கவித்துவமானதொரு கற்பனை சீனர்களுக்கு! நமக்கும்தான் சின்ன வயதில் அழகான் சில் மூட நம்பிக்கைகள் இருந்தன:

"புத்தக பக்க்ங்களுக்கிடையே பதுக்கி வைத்த மயிலறகு...குட்டி போடுமென்று"

"தீப்பெட்டிக்குள் அடைத்துவைத்த பொன்வண்டு...பிளாஸ்டிக் முட்டைகளூக்காக'

"பாட்டிலுக்குள் அடைத்து வைத்த மின்மினி...வெளிச்சம் நிலைக்கும் என"

---க்ரவுன்/எம் எஸ் எம்; தொடருங்களேன்

Shameed said...

தொழில் நடத்தும் இடங்களில் இவர்கள் பெரும்பாலும் 3 விதமான சாமி சிலை வைத்திருப்பார்கள். அதில் கையில் பெரிய வாளுடன் ஒரு சாமி இருக்கும்[காக்கும் கடவுள்!!]... இன்னொரு சாமி கையில்
ஒரு லெட்ஜர் புக்மாதிரி ஒன்று வைத்திருக்கும்.

இவங்கள் எல்லாம் எப்போ திருந்துறது

Shameed said...

செத்துபோனவனை அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது இளநீர் மேல்புறமாக சீவி ஸ்ட்ராவெல்லாம் போட்டு வைத்துருப்பார்கள் வரும் வழியெல்லாம்

செத்தவனும் குடிக்க மாட்டான்
மத்தவனும் குடிக்க மாட்டான்.
மொத்தத்துலே வேஸ்ட்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஜலால் காக்காவைக் காணோமே.... பூணை குறுக்க போனா என்னா அத தாண்டி வாங்க காக்கா அங்கேயே நின்னுகிட்டு இருந்தா எப்படி ! அதெல்லாம் ஒன்னுமில்லை சீக்கிரம் வாங்க ஜாஹிர் காக்கா இளநீர் கட போட்டிருக்காங்க !

crown said...

செத்துபோனவனை அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வரும்போது இளநீர் மேல்புறமாக சீவி ஸ்ட்ராவெல்லாம் போட்டு வைத்துருப்பார்கள் வரும் வழியெல்லாம் [ "அம்மா" வந்து செத்துட்டானா என சாகுல் கேட்க வேண்டாம்] இதற்க்கு இவர்கள் சொல்லும் காரணம் " வீட்டுக்கு செத்தவன் வரும்பொது (ஆவிக்கு) தண்ணி தவிச்சா?"]
----------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். இந்தியாவில் சீனன் செத்துப்போனால் ஆவின் பால் ஊத்திப்பங்களோ?காரணம் ஆவிக்கு தண்ணின்னா?செத்தவனுக்குப்பால்தானே?

crown said...

எனக்கு தெரிந்த ஒரு கிறுக்கன் தொட்டியில் போட்டு ஆட்டும் ஆட்டொமெடிச் மோட்டார் எல்லாம் ஃபிக்ஸ் செய்திருந்தான் புதைகுழிக்குள்.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். ஹாஹாஹ்.... இதுதானோ ,தொட்டில் பழக்கம் (சு)இடுகாடுவரை என்பது?????

crown said...

மற்றபடி வீடு குடி போகும்போது அழகான பெட் எல்லாம் வாங்கி அதில் நடுவில் மண்னை கொட்டி வைப்பது [ஏதோ சிம்பாளிக்கா சொல்றாங்க நினைக்கிறேன்].
-----------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அது என்ன "சைனா களிமண்ணா"?

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.ஜாஹீ நீங்க எழுத ஆரம்பிச்சா அப்படியே உங்களோட பின்னாடி ஜாலி டூர் கிளம்புறமாதிரியும்,எல்லாத்தையும் விளக்குற கைடுமாறி நீங்களும் நினைக்கத்தோன்றுகிறது.இன்ஷாஅல்லாஹ் ஒருனாள் உங்களுடன் அதுபோல் டூர் போக ஆசை,ஆசையாய் வருகிறது.வாழ்த்துக்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

ஈ.வே.ரா.பெரியாரிடம் ஒருவன் கேள்வி கேட்டானாம்.

'அய்யா...கருப்பு பூணை வலது பக்கம் போனா நல்லதா...?
அல்லது இடது பக்கம் போனா நல்லதா...?னு' கேட்டான். அவனை புரிந்து ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு 'உன் மேல விழுந்து புடுங்காம போனா நல்லது' என்று சொன்னாராம்.

அபூ இப்றாஹீம் காக்கா பூணைய‌ குறுக்க இழுத்தால்...நானும் இழுத்துப்பார்த்தேன் பெரியார் குறுகே வந்தார்.

ஜாஹிர் ஹுஸைன் காக்கா காலத்தே ஏற்ற பதிவு;அருமை!
காக்கா சைனா காரன் உங்கள 'டூப்ளிகேட்' செஞ்சு மூட நம்பிகைய பத்தி அருமையா எழுதுவார்னு எந்த இணைய தள ஓனர்கிட்டையாவது விக்கப்போறான். பாத்து, பத்திரம். அல்லாஉன்காவ(ல்)!

Unknown said...

சாரி... எழுத்து பிழையால் இருமுறை கருத்தை அழித்துவிட்டேன்.

crown said...

sabeer சொன்னது…
"புத்தக பக்க்ங்களுக்கிடையே பதுக்கி வைத்த மயிலறகு...குட்டி போடுமென்று"

"தீப்பெட்டிக்குள் அடைத்துவைத்த பொன்வண்டு...பிளாஸ்டிக் முட்டைகளூக்காக'

"பாட்டிலுக்குள் அடைத்து வைத்த மின்மினி...வெளிச்சம் நிலைக்கும் என"

---க்ரவுன்/எம் எஸ் எம்; தொடருங்களேன் .
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.ம்.ஸ்.ம் ஓகே.எனக்கு அட்ரஸ் மாறி வந்த கடிதம் ஆனாலும் ஆர்வ கோளாறால் பிரித்து படித்துவிட்டேன்.சபிர்காக்கா என்னை மன்னிக்கவும்.உங்கள் சார்பாக சகோதரர்கள்.அபூஇபுறாகிம்,மற்றொரு நகல் எடுத்து சகோ.சாகுல் ஆகியோருக்கு அனுப்பி விட்டேன்.இது அவங்க ஏரியா! கொஞ்சம் நானும் சொல்லிப்பார்கிறேனே!
கை அரித்தால் காசுவரும்(அழுக்கு அதனால கை அறிக்கும் ,அதிகம் சொறிந்தால் சிரங்கு வரும்).காகம் கத்தினால் கடிதம் வரும் அல்லது விருந்தாளிகள் வருவாங்க(காகம் கத்தினால் பல காகம் தான் வந்து கூடும்).பறவை எச்சம் போட்டால் ஆயுள் கூடும்( ஒரே பிலாகொண்ட நாத்தம் எடுக்கும்- நம்ம ஊர் பாசை பேசியாச்சு).ராத்திரியில் வீடு பெருக்கினால் தரித்திரம் வரும்(கூட்டாட்டிதான் நோய் வரும்).இப்படி பல உண்டு நம்மலால முடிஞ்சது இதுதான் இனி படையெடுக்கும் பாருங்க.அப்பாடா காக்கா பத்த வச்சாங்க நான் ஊதி பெருசாக்கிட்டேன்.

அன்புடன் மலிக்கா said...

மூட நம்பிக்கைக்கு புடம்போட்டது
முன்னோர்கள் மட்டுமல்ல
இன்னோர்களும்தான்

மூடத்தை முளையிலேயே
முறிக்காவிடில்
முற்றிபோய்விடும்
முன்ஜாக்கிரதையாக
முளைக்கும் முன்னே
முட்டுக்கட்டை போடவேண்டும்..

தெளிவான விளக்கங்கள்.
அகிலத்தை இறைவன் காப்பாற்றவேண்டும் நம்மையும் சேர்த்து

crown said...

அன்புடன் மலிக்கா சொன்னது…

மூட நம்பிக்கைக்கு புடம்போட்டது
முன்னோர்கள் மட்டுமல்ல
இன்னோர்களும்தான்

மூடத்தை முளையிலேயே
முறிக்காவிடில்
முற்றிபோய்விடும்
முன்ஜாக்கிரதையாக
முளைக்கும் முன்னே
முட்டுக்கட்டை போடவேண்டும்..

தெளிவான விளக்கங்கள்.
அகிலத்தை இறைவன் காப்பாற்றவேண்டும் நம்மையும் சேர்த்து.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.சரியா சொன்னீங்க சகோதரி. நீங்கள் மூடதனத்தை நறுக்கும் கத்திரி.
முளைத்துவிட்டதை வேரோடு பிடிக்கிவிடனும்.இனிமேலும் முளைக்காமல் விழித்திடனும்.

Zakir Hussain said...

இங்கு கமென்ட்ஸ் எழுதிய அனைவருக்கும் நன்றி.தனித்தனியாக பெயர் சொல்லி எழுதாதற்க்கு காரணம் பெரிதாக ஒன்றுமில்லை.

Riyaz Ahamed said...

நம்மூர் மூடநம்பிக்கை பற்றி இருக்கும் என் நினைத்தேன் யப்பா நம்மூரை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுடாங்க சீனர்கள்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு