அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்பு சகோதர சகோதரிகளே,
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நம் அதிரைநிருபரில் மேல் கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல் முகாம் நடத்தப்படவேண்டும் என்று கட்டுரை வெளியிடப்பட்டது, இதனைத் தொடர்ந்து நம் அன்பு சகோதரர்களின் பின்னூட்டங்களும் நம்மூரில் மேல் கல்வி விழிப்புணர்வும், வழிகாட்டலும் அவசியம் தேவை என்பதை உணரமுடிந்தது. இது தொடர்பாக அன்பு சகோதரர் சரபுதீன் நூஹூ அவர்களின் ஆர்வமூட்டலாலும், சகோதரர் அதிரை அஹமது அவர்களின் முயற்சியாலும் அதிரையில் இவ்வருடம் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்த சிறிய ஏற்பாட்டு வேலைகள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிரை அஹமது அவர்கள் விடுத்துள்ள வேண்டுகோள் செய்தியை கிழே பதிந்துள்ளோம். உங்கள் மேலான கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள்.
நம் எதிர்கால சந்ததியினர் சரியான மற்றும் முறையான வழிகாட்டுதலில் கல்வி கற்று இவ்வுலகில் தலைச்சிறந்தவர்களாக வாழ நம்மால் முடிந்த முயற்சி செய்யலாமே. இன்ஷா அல்லாஹ் நம் அதிரைநிருபர் குழு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற தம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் தரும் என்று இங்கு மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் போதுமானவன்.
-- அதிரைநிருபர் குழு.
கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு
அதிராம்பட்டினம்
அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும். இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது, டிசம்பர் இறுதியில், நமதூரில் கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு ஒன்றை நடத்த இருக்கிறோம். அதுபோது, கல்வியாளர்கள், இஸ்லாமியச் சிந்தனையாளர்கள், மார்க்க அறிஞர்கள் ஆகியவர்களை வரவழைத்து, கல்வி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த நாடியுள்ளோம்.
இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட 'இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை' என்ற அமைப்பொன்று முழுமையாகச் செயல்படாமல் இருக்கின்றது. எனவே, அதற்கு மீண்டும் உயிர் கொடுத்து, அவ்வமைப்பின் கீழ் இம்மாநாட்டை நடத்தத் தீர்மானித்துள்ளோம்.
இதுவரை, மூன்று அமர்வுகளில் கருத்துப் பரிமாற்றம் செய்துள்ளோம். அவற்றில்,
• General Lectures
• Career Guidance
• Educational Workshop
• Exam Tips
• Educational Exhibition
போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இது பற்றிய உங்கள் அனைவரின் ஆலோசனைகளை எமக்குத் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இம்மாநாட்டை உங்களைப் போன்ற NRIகளின் முழுமையான பொருளுதவியால் நடத்தத் தீர்மானித்துள்ளோம். உங்கள் மேலான கருத்துகளையும் பரிந்துரைகளையும் ஒத்துழைப்பையும் தருமாறு அன்புடன் கோருகின்றோம்.
-- அதிரை அஹ்மது
0091 9894989230
9 Responses So Far:
ஏற்கனவே எங்களது பங்களிப்பு அவசியம் இருக்கும் என்றும் தெளிவாகவே சொல்லியிருக்கோம் அதனை மீண்டும் உறுதி செய்து கொள்கிறோம் இன்ஷா அல்லாஹ்..
தங்களின் இந்த நல்ல முயற்சியின் துவக்கம் சிறப்பாக நடைபெறவும் அதன் பலன்களை நம் சமுதாயம் கண்டிடவும் துஆ செய்கிறோம் இன்ஷா அல்லாஹ்...
insha allah..
அபுஇபுறாஹிம் காக்கா சொன்னதை வழி மொழிகிறேன்
நம் வருங்கால சமுதாயம் முறையான வழிகாட்டுதலில் கல்வி கற்று, தனித்தன்மையுடன் தலை நிமிர்ந்து வாழ்ந்திட இது போன்ற நிகழ்ச்சிகள் நிச்சயம் உதவும் என்று நம்பலாம். நம்மூரில் தொடர்ந்து முறையாக சமூக நோக்கத்தை மட்டும் கருத்தில் கொண்டு இம்மாதிரி கல்வி விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பம்.
இம்முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் அதிரை அஹமது அவர்களை இங்கு பாராட்டியே ஆகவேண்டும், ஊக்கப்படுத்தவேண்டும், ஒத்துழைப்புத்தரவேண்டும்.
நிச்சயமாக அல்லாஹ் துனையிருப்பான். இன்ஷா அல்லாஹ்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மற்று பெண்களுக்கு தனித்தனியாக Career Guidance, Educational Workshop நடத்தப்பட வேண்டும்.
அரையாண்டு விடுமுறையில் அதிரையில் கல்யாண season என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மாணவர்களின் ஆர்வத்தைவிட பெற்றோர்களின் ஆர்வதையும் இதில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வெளிநாட்டு மோகத்திற்கு நிறந்தர முற்றுப்புள்ளி வைக்க இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் நடத்தப்பட்டு இளம் நெஞ்சங்களிடம் நம் நாட்டில் நமக்கு உள்ள சரியான கல்வி, வேலை வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு அவசியம் நடத்தப்படவேண்டும்.
நம் அனைவரின் ஆதரவு அவசியம் தேவை.
அன்பிற்கினிய நேசங்களே:
அல்லாஹ்வின் உதவியால் "கல்வி விழிப்புணர்ச்சி மாநாடு" நடந்தேறுவதற்கான ஆக்கப் பணிகள் நடைபெறும் இவ்வேளையில் நம் சமுதாயச் சிந்தனையுடைய ஊரிலிருக்கும் ஆர்வளர்கள் யாவரும் உங்கள் யாவரின் ஒத்துழைப்பை மாநாடு ஒருங்கிணைப்பாளர்களுக்கு எவ்வித பாகுபாடின்றி முழுமனதுடன் தானாக முன்வந்து களப்பணிகளில் கைகொடுக்க என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோலை வைக்கிறேன்... இன்ஷா அல்லாஹ் !
இது நம் பிள்ளைகளின் எதிர்காலம் அல்லாஹ்வின் உதவியுடன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று கூடிப் பேசும் களம், வாருங்கள் யாவரும் இணைந்து செயல்பட !
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த சிறப்பான முயற்சியை நல்ல முறையில் நடந்தேறவும் வெற்றியடையவும் அருள்புரிவானாக !
அஸ்ஸலாமு அலைக்கும்,
கல்வி விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலின் தொடர்ச்சியாக, அதிரையில் இவ்வாண்டு குறிப்பாக +2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆங்கில பேசும் திறன் பயிற்ச்சிக்கு ஏற்பாடு செய்தால், வரும் வருடம் கல்லூரி செல்பவற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை, குறிப்பாக அதிரை அஹ்மது காக்கா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
அல்லாஹ் அனைவருக்கும் நற்கூலி தருவானாக.
வஸ்ஸலாம்.
அப்துல் கபூர் - துபை.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புள்ள அப்துல் கபூர் காக்கா அவர்களுக்கும்,
உங்களை கோரிக்கையை நானும் வழிமொழிகிறேன். ஆங்கில பேசும்திறன் பயிற்சியை யாராவது நடத்தினாலும் அதை மேலும் சிறப்பாக நடத்த உதவலாம்.
10 வகுப்பு மற்ற வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு தான் பயிற்சி கொடுக்கும் பயிர்சியாளர்களை அனுக முடியும், மற்றும் அவர்களை வரவழைக்க முடியும்.
இன்ஷா அல்லாஹ் இது தொடர்பாக ஆங்கில அறிவின் அவசியம் பற்றி அதிரை சகோதரர் அபூபக்கர் அவர்கள் கவலையுடன் எழுதி ஆக்கத்துடன் ஆங்கில பேசும்திறன் பயிற்சி முகாம் தொடர்பான கருத்துக்களை எதிர்ப்பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
Post a Comment