Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கொடு 46

அதிரைநிருபர் | November 05, 2010 | , ,

மூச்சுக்காற்றையும்
முலம்போட்டு விற்கும் கூட்டம்...
அன்பை அடகு வைத்து
பாசத்தை பங்கு பிரிக்கும்!
 
ஈவு இறக்கம்
வகுத்து...
மீதியும் பார்த்துவிடும்!
 
இருப்புக் கணக்கைப்
பெருக்க...
கருப்பை வெள்ளையாக்கும்!
 
சொந்த பந்தம்
கூட்டி...
சுயமாய் கொழிக்கும்!
 
எளிய உறவைக்
கழித்து...
எஞ்சுவதும் புசிக்கும்!
 
உணர்வுகளை பிண்ணங்களாக்கி
உறவுகளை பிரித்துப் போடும்.
கூட்டிக் கழித்தே-
குடும்பம் நடத்தும்!
 
உறவினரின்
பாசமும் பற்றும்-
வரவு செலவுக் கணக்கில்
சமன் ஆகிவிடாது!
 
சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா?
 
தளர்ந்த தோளுக்கும்
உலர்ந்த தோலுக்கும்
தந்தைக் கணக்கிட்டால்...
தாங்க முடியுமா?
 
முத்தக் கணக்கும் 
மெத்தைக் கணக்கும் 
பாராத மனைவிக்கு...
மாசப் பணமென்று
மழுங்கிப் போவதா?
 
கூடப் பிறந்தவர்க்கும்
கூட மணந்தவளுக்கும்
கூடப் குறையக் கொடுப்பதில்...
கூடாமல் குறையாது செல்வம்!
 
கொடு...
அது
படைத்தவன் உன்னில்
விதைத்த பண்பு!
 
 
 - சபீர்

46 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : சரியான கணக்குப் பாடம் !

//கொடு...
அது
படைத்தவன் உன்னில்
விதைத்த பண்பு! //

வயதில்லை வாழ்த்திட உங்கள் அகத்தின் அசத்தலை, அரவணைக்கும் ஆயுதம் உங்களிட(மு)ம் உள்ளது !

Shameed said...

கொடு கொடுப்பது எதுவாக இருந்தாலும் சரி கொடு அது "கொடு வா" மீனாக இருந்தாலும் சரி கொடு

Shameed said...

பிறருக்கு கொடுப்பதிலும் ஒரு இன்பம் உண்டு
அது கொடுத்து கண்டவர்களுக்கு நன்கு அறியும்.

Unknown said...

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா.என்ன அற்புதமான வரிகள் சபீர்.உம்மாவின் நினைவுகள் கண் முன் அற்புதம்.

jalal said...

மச்சான்ஸ்..
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.., )
கொடு
படைத்தவனே......
எங்க
மச்சான்ஸ்க்கு.... கொடு
எல்லாவளங்களையும்
குறைவில்லாமல் கொடு.
சிந்தனை சிற்ப்பி
கர்ப்பனை கதாநாயகனுக்கு
கொடு...கொடு...கொடு...
கொடுத்துக்கொண்டே இரு.
கவிதைப்பனி தொடர எல்லாவல்ல அல்லாஹ்யிடம்
துஆ செய்கின்றேன்.

crown said...

மூச்சுக்காற்றையும்
முலம்போட்டு விற்கும் கூட்டம்...
அன்பை அடகு வைத்து
பாசத்தை பங்கு பிரிக்கும்!
----------------------------
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்.., )
உள்ளத்தில் உண்மை அன்(பூ)பு வைத்திருந்தால்......
மூச்சுக்காற்றையும்
முலம்போட்டு விற்கும் கூட்டம் இல்லாமல் போய் இருக்கும்.
--------------------------------------------------------
இதயத்தில் ஓர் "இடம்" கொடுத்திருந்தால்...அன்பை அடகு வைத்து
பாசத்தை பங்கு பிரிக்காது.!
---------------------------------------------------------------
ஈவு இறக்கம்
வகுத்து...
---எளிய உறவைக்
கழித்து...
எஞ்சுவதும் புசிக்கும்!
.....உணர்வுகளை பிண்ணங்களாக்கி
உறவுகளை பிரித்துப் போடும்.
கூட்டிக் கழித்தே-
குடும்பம் நடத்தும்!
-------------------------------------------------------
அடடா! சுய நலவாதிகளின் நிறத்தையும்,மணத்தையும்,குணதையும் சொன்ன விதம்.அருமை அதைத்தொடர்ந்து இப்படி இருப்பவன் எல்லாத்துக்கும் விலை வைப்பான் அது பாசத்துக்கும், நெசத்துக்கும் ஆனால் இதில் எல்லாம் அடங்காதடா சொந்தம் என்பது.....
கண்ணை மூடி யோசித்தேன்,மருபடியும் நாசி வழியாகமூச்சு பலமாய் விட்டு கண்திறந்து மறுபடியும் வாசித்தேன்.தேன் ...தேன்.. அத்துணையும் தேன்.... இன்பத்தேன்.

-----------------------------------------------------------------

ZAKIR HUSSAIN said...

//தந்தைக் கணக்கிட்டால்...
தாங்க முடியுமா?//

10 மாதம் சுமப்பது தாய்..20 வருடம் சுமப்பது தந்தை...அது என்னவோ தெரியவில்லை ...அங்கீகாரம் இல்லாமல் அழிந்துபோகும் ஜீவனாக தந்தையை சித்தரித்துவிட்டார்கள்...நீயாவது எழுதினாயே...சந்தோசம்


//இருப்புக் கணக்கைப்
பெருக்க...
கருப்பை வெள்ளையாக்கும்!//

கம்யூனிசத்தமிழ் இதுதானா?

crown said...

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா?
------------------------------------------------------
தீராத கடனாயி போகும்.சாகும் வரை தீர்க முடியாத நன்றிக்கடன்.
-----------------------------------------------------------
தளர்ந்த தோளுக்கும்
உலர்ந்த தோலுக்கும்
தந்தைக் கணக்கிட்டால்...
தாங்க முடியுமா?
------------------------------------------
உழைப்பின் அடையாளம்,
தியாகத்தின் கையெழுத்து...அந்த உலர்ந்த தோல்கள்.
நம் சந்தோசதருணத்திற்காக ஓய்ந்து போன தளர்ந்த தோள் களும்.
(இங்கே தோல்களும்,தோள்களும் கவணமாய் பொருள் பகுத்து பிரித்து நெய்யப்பட்ட கவிதை. அய்யா கவிஞரே!உங்கள் தலையில் இந்த கிரிடம் சூட்டுகிறேன் நீங்கள் கவியரசுவே! சந்தேகம் கொள்ள வேண்டாம்.அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.

crown said...

முத்தக் கணக்கும்
மெத்தைக் கணக்கும்
பாராத மனைவிக்கு...
மாசப் பணமென்று
மழுங்கிப் போவதா?
------------------------------------------------------------------
செயல் கூலியா?(service charge???)
செவிட்டில் அடித்தமாதிரி இருக்கிறது.உரைக்கும்,உரைக்கனும் உப்பிட்டவளை உள்ள(ம்) அளவும் நினை மறவாதே! செயல் கூலி இந்த செலவு(மாத)பணம்.அதில் மட்டும் தீர்ந்திடுமா உன் கடன் (காரப்புத்தி)???? சரியா சொன்னிங்க!

கூடப் பிறந்தவர்க்கும்
கூட மணந்தவளுக்கும்
கூடப் குறையக் கொடுப்பதில்...
கூடாமல் குறையாது செல்வம்!

crown said...

கூடப் பிறந்தவர்க்கும்
கூட மணந்தவளுக்கும்
கூடப் குறையக் கொடுப்பதில்...
கூடாமல் குறையாது செல்வம்!
---------------------------
இது மிகைஅல்ல! கொடுத்துப்பார் உன் இதயம் மகிழ்வில் நிரம்ப, நிறைய பெருவாய்,சந்தோசமும்.செல்வமும்.
--------------------------------------------
கொடு...
அது
படைத்தவன் உன்னில்
விதைத்த பண்பு!
------------------------------------------------
அதுதான் கொடையால் வரும் மாண்பு(சிறப்பு).

crown said...

Shahulhameed சொன்னது…

கொடு கொடுப்பது எதுவாக இருந்தாலும் சரி கொடு அது "கொடு வா" மீனாக இருந்தாலும் சரி கொடு.
----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.இப்படி எதாவது எடுத்து கொடுபீங்கன்னுதான் காய்ந்து கருவாடாய் காத்திருக்கோம்.

crown said...

ZAKIR HUSSAIN சொன்னது…
//இருப்புக் கணக்கைப்
பெருக்க...
கருப்பை வெள்ளையாக்கும்!//

கம்யூனிசத்தமிழ் இதுதானா?
----------------------------------------------------------------
ஹா.ஹா.ஹா..ஹா...ஹா...கதிர் அரிவாள் அவங்க சின்னம். கருத்து குவியல் உங்க (கை)எ(வ)ண்ணம்...அவங்க கருவி அரிவாள்,உங்க செயல் கருவி அறி(வு)வாள்.
-------------------------------
நான் எழுதிய நாலு வரி கவிதை(????? பெரியவர்கள் மன்னிக்கனும்)
னிற வெறிப்பிடித்த
வெள்ளை காரன் கூட,
கருப்பு பணத்தை விரும்புகிறான்.

Unknown said...

சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா?

தளர்ந்த தோளுக்கும்
உலர்ந்த தோலுக்கும்
தந்தைக் கணக்கிட்டால்...
தாங்க முடியுமா?
--------------
இது முறையாக வடிக்கப்பட்ட வரி மட்டுமல்ல ...
முறையான வாழ்க்கையின் நெறி யும் ஆகும் ....
சபீர் காக்கா அருமை .............

அலாவுதீன்.S. said...

தாய், தந்தை, மனைவி, உறவு, என்ற பின்னலில் உணர்வுகளை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்த அதிரை கவி சபீர்: வாழ்த்துக்கள்!

/// சுமந்த கூலியையும்
சுரந்த பாலையும்
அம்மா கணக்கிட்டால்...
முடிவற்ற கடனில்
மூழ்கிவிட மாட்டாயா? ///

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தனோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். (அல்குர்ஆன் : 46: 15)

அலாவுதீன்.S. said...

/// தளர்ந்த தோளுக்கும்
உலர்ந்த தோலுக்கும்
தந்தைக் கணக்கிட்டால்...
தாங்க முடியுமா? ///

''என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (அல்குர்ஆன்:17:23)

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! ''சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக! (அல்குர்ஆன் : 17:24)

அலாவுதீன்.S. said...

/// முத்தக் கணக்கும்
மெத்தைக் கணக்கும்
பாராத மனைவிக்கு...
மாசப் பணமென்று
மழுங்கிப் போவதா? ///

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். (அல்குர்ஆன் : 7:189)

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல்குர்ஆன் : 30:21)

அலாவுதீன்.S. said...

கொடு தாய், தந்தை, உறவினர், ஏழைகளுக்கு:

/// கூடப் பிறந்தவர்க்கும்
கூட மணந்தவளுக்கும்
கூட குறையக் கொடுப்பதில்...
கூடாமல் குறையாது செல்வம்! ///

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:215)

அலாவுதீன்.S. said...

/// கொடு...
அது
படைத்தவன் உன்னில்
விதைத்த பண்பு! ////

அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன்: 2:272)

Yasir said...

கொடுத்து கொடுத்து சிவந்த கைகளில் வடிக்கபட்ட கவிதை...வார்த்தைகளை தேடுகிறேன் உங்களை வாழ்த்திட....அருமை அருமை கவிகாக்கா...

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்,
இது கணக்குப் பாடம் என்று புரியப்படுமா  என்ற ஐயம் உங்களின் //சரியான கணக்குப் பாடம்!//ல் தீர்ந்தது. முன்னுரைக்கு நன்றி.

ஷாகுல்,
//கொடுத்து கண்டவர்களுக்கு நன்கு அறியும்// உண்மை. 
எடுப்பதும் கெடுப்பதும் துன்பம். கொடுப்பதே இன்பம்.

மீராசா,
//உம்மாவின் நினைவுகள் கண் முன்//
அனுபவித்து வாசித்ததின் அடையாலம். நன்றி.

ஜலால்,
//கொடு
எல்லாவளங்களையும்
குறைவில்லாமல் கொடு.//
உன் துஆ கபூலாகி அல்லாஹ் கொடுக்கட்டும் மச்சான். 
நாம் அனைவரும் பங்கு பிரித்துக் கொள்வோம்!

என் ஜாகிர்,
//கம்யூனிசத்தமிழ் இதுதானா//
குட்டி ஹைகூ இதுதானா?
ரெண்டுவரி இலக்கியம் இதுதானா?
இந்த கற்பனை வளம் மலேசிய மண்ணில் வேறு எவருக்கேனும் வருமா?

தம்பி crown,
பகுதி பகுதியாகப் பிரித்துப் பரிசீலிக்கும் உங்கள் பங்கு இல்லாமல் போனால் மனசு திருப்தி அடைவதில்லை. (கொஞ்சம் சுணங்கினாலும் "எங்கப்பா crown"னு 'இங்கே' கேட்கத் தோனுது.)

//நிற வெறிப்பிடித்த
வெள்ளை காரன் கூட,
கருப்பு பணத்தை விரும்புகிறான்.//

கருப்பு வெள்ளை!!!
நிற வெறிப்பிடித்த
வெள்ளைக் காரன் கூட
விரும்புகிறான்...
கருப்பு பணத்தை!

பத்து வருடங்களுக்கு முன்பு சுஜாதாவின் 'மின் அம்பலம்' வலை தளத்தில் வென்ற ஹைக்கூக்களில் என்னுதும் ஒன்று:

வேலை செய்கிறான்
ஏ ஸி டெல்னீஷியன்...
வேர்க்க விறுவிறுக்க! 

உங்கள் பின்னூட்டங்களில் எங்கோ மற்றுமொரு ஹைக்கூ வாசித்தேன். 'A' class.

தம்பி harmys, 
//முறையான வாழ்க்கையின் நெறி யும் ஆகும் ....// 
சரியாகச் சொன்னீர்கள்.

//நீரினை நோக்கி  
தளர்வில்லாமல் 
வேரின் பயணம் .....//

இதெல்லாம் வச்சிக்கிட்டு எங்கே ஒரு படைப்பையும் சமீபத்தில் கானோம். எழுதுங்கள்.

அலாவுதீன்,

//வாழ்த்துக்கள்! //
என் எண்ணங்களுக்கு ஆதாரமாக நம் திருமறை வசனங்களைத் தந்து என்னை ஊக்குவிப்பதற்கு நன்றி.

தம்பி யாசிர்,
//கொடுத்து கொடுத்து சிவந்த கைகளில்//
வாழ்க்கையில் சிறந்ததைச் சொல்வதே எனக்கு வாடிக்கை என்பதை உங்களின் தலைப்புச் செய்தி style பின்னூட்டதில் சொன்னதற்கு நன்றி.

அ.நி.: 'கொடு'க்கச் சொன்னதை ஆமோதித்தமைக்கு ரொம்ப நன்றி!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : ஊசி நூல் கோர்ப்பவர்களுக்குத்தான் தெரியும் எவ்வளவு கஷ்டம் என்று ஆனால் ஊசிக்கோ நூலுக்கோ தெரியாது என்ன கஷ்டமென்று !

வாசித்தேன். 'A' class. = என்ன இது ? அப்போ நாங்களெல்லாம் "C" class ?

சரி சரி இரண்டும் சேர்ந்துதான் இங்கே "AC" போட்டிருக்கோம் !!

சுற்றும் சூரியனை
சும்மாயிருக்க சொன்னோன்
உறங்கும் நிலவை
எழுப்பி விடாதேன்னு !

அச்சத்தில் !

அன்புடன் மலிக்கா said...

கொடு கொடு
கொடுப்பதால் குறையாது செல்வம்
கொடு கொடு
கொடுப்பதால் குறையாது அன்பு
கொடு கொடு
கொடுப்பதால் குறையாது பாசம்
கொடு கொடு
கொடுப்பதால் குறையாது நட்பு
கொடு கொடு
கொடுக்கக் கொடுக்கக் குறையாது அத்தனையும்
கொடுத்ததிற்கான நற்க்கூலி
கிடைத்திடுமே இருமடங்காக இறைவனிடம்.

அழகான வரிகளால்
அடுக்கிய வார்தைகள்கொண்டு
அறிவான வாழ்க்கைக் கணக்கை
அருமையாக கவிவடித்த சகோதரத்துக்கு
அன்பான வாழ்த்துக்கள்..

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

smileக்கு மட்டுமே !

சின்ன வயசுல ஏதாவது மூட் அவுட் ஆனா கோபமா இருக்கும் பட்சத்தில் வீட்டுப் பெண்களின் கமெண்ட் இப்படி..

"ஏன் கொடு கொடுன்னு இருக்கே" அப்போ புரிந்து கொண்டது ஏன் கோபமா இருக்கேன்னு கேட்பதாக ! ஆனா இதுக்கு வேற ஏதும் இருக்கா யாராவது சொல்லுங்களேன் !

Unknown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கவிக் காக்கா வார்த்தைகளை எங்கு பிடிக்கிறீர்கள்.
ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு கட்டுப்பட்டுள்ளது.
அத்தனை வரிகளும் அபாரம்.மாஷாஅல்லாஹ்.
.........................................
அதிரை நிருபர் குழுவிற்கு
அதிரை நிருபர் படைப்பாளிகள் குழாமில் நிறைய கவிஞர்களும் கவிதாயினிகளும் உளர். அவர்களை வைத்து 'ஒரு தலைப்பில்' கவிதை படைத்தால் அவரவர் பார்வையில் அனுகும் போது படைப்பாற்றல் இன்னும் அதிகரிக்கும். வாசகர்களாகிய எமக்கும் பலப்பாற்வை கோணம் கிடைக்கும்.
இது ஹஜ்ஜுக்காலம் என்பதால் 'சகோதரத்துவம்' 'ஒற்றுமை' 'தியாகம்' போன்ற தலைப்புக்கள் கொடுக்கலாம்.

"தியாகத்திருநாள் 2010 அதிரை நிருபர் கவிதை போட்டி"
இது ஒரு வாசகனின் விருப்பமா சொல்கிறேன்.

crown said...

sabeer சொன்னது…

தம்பி crown,
பகுதி பகுதியாகப் பிரித்துப் பரிசீலிக்கும் உங்கள் பங்கு இல்லாமல் போனால் மனசு திருப்தி அடைவதில்லை. (கொஞ்சம் சுணங்கினாலும் "எங்கப்பா crown"னு 'இங்கே' கேட்கத் தோனுது.)

//நிற வெறிப்பிடித்த
வெள்ளை காரன் கூட,
கருப்பு பணத்தை விரும்புகிறான்.//

கருப்பு வெள்ளை!!!
நிற வெறிப்பிடித்த
வெள்ளைக் காரன் கூட
விரும்புகிறான்...
கருப்பு பணத்தை!

பத்து வருடங்களுக்கு முன்பு சுஜாதாவின் 'மின் அம்பலம்' வலை தளத்தில் வென்ற ஹைக்கூக்களில் என்னுதும் ஒன்று:

வேலை செய்கிறான்
ஏ ஸி டெல்னீஷியன்...
வேர்க்க விறுவிறுக்க!

உங்கள் பின்னூட்டங்களில் எங்கோ மற்றுமொரு ஹைக்கூ வாசித்தேன். 'A' class.
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நன்றி காக்கா உங்கள் அன்பிற்கும், பெருந்தன்மைக்கும். நீங்கள் யோசித்தது போலவே நானும் யோசித்திருக்கிறேன் என்பது பல நேரம் உங்கள் கவிதையின் வழியாக அறிய நேர்ந்து ஆச்சரியம்,ஆனந்தம் இருவரின் மன நிலையும் கிட்ட தட்ட ஒரே அலை வரிசையில்.மேலும் 15,16 வருடத்திற்கு முன் நான் சொன்னது.வீட்ல பேனை(Fan).
சரிசெய்யும் பணியாளன்,வேர்க்க,வேர்க்க வேலை செய்கிறான்.(இங்கே முரண் ஒரு அழகு).நீங்க பெரிய அளவில் யோசிக்கிறீங்க
ஏசின்னு நான் சிறிய அளவில் பேன்னு.என்ன இருந்தாலும் நான் உங்களின் விசிறித்தானே?(I am ur Fan)

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.என் தம்பி(அதிரை போஸ்ட்) சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன்.கவிதையோ,கட்டுரையோ.யோசியுங்களேன் நிர்வாகக்குழுவினரே!.

crown said...

அபுஇபுறாஹிம் சொன்னது…

smileக்கு மட்டுமே !

சின்ன வயசுல ஏதாவது மூட் அவுட் ஆனா கோபமா இருக்கும் பட்சத்தில் வீட்டுப் பெண்களின் கமெண்ட் இப்படி..

"ஏன் கொடு கொடுன்னு இருக்கே" அப்போ புரிந்து கொண்டது ஏன் கோபமா இருக்கேன்னு கேட்பதாக ! ஆனா இதுக்கு வேற ஏதும் இருக்கா யாராவது சொல்லுங்களேன் !
--------------------------------------------------------------------
நண்பனிடம் கொடு,சீக்கிரம் கொடுவென்றேன்.
கொடு,கொடுவெனப்பார்த்தான், கொடு வாளை எடுப்பதுபோல்...
மறுபடியும் கொடுவென்றேன்.
டேய்!!!! இன்னும் எழுதி முடிக்கல-
(அங்கே பரிட்சை அறையில் விடைத்தாள் பரிமாற்றம்).

sabeer.abushahruk said...

:/சுற்றும் சூரியனை
சும்மாயிருக்க சொன்னோன்
உறங்கும் நிலவை
எழுப்பி விடாதேன்னு !//

சுற்றும் 
சுடரே
சும்மாயிரு-
நித்திரை 
நிலவை
சீண்டாதே!

//அச்சத்தில் !// 
உகரத்திற்கு பதில் அகரம் வந்திருக்கிறது. சரி செய்யவும். 
'உச்சத்தில்' என்று இருக்கனும்.

சகோ. அன்புடன் மலிக்கா,
//கொடுத்ததிற்கான நற்க்கூலி 
கிடைத்திடுமே இருமடங்காக இறைவனிடம்.//
//அறிவான வாழ்க்கைக் கணக்கை
அருமையாக கவிவடித்த சகோதரத்துக்கு
அன்பான வாழ்த்துக்கள்..//

ஒரு கவியே கவிதையை கவிதையால் பாராட்டும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.   எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.நன்றி சகோ.

தம்பி அதிரை போஸ்ட்,
//வார்த்தைகளை  எங்கு பிடிக்கிறீர்கள். 
ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு கட்டுப்பட்டுள்ளது. 
அத்தனை வரிகளும் அபாரம்.மாஷாஅல்லாஹ்.//

மிக்க நன்றி,
"தியாகத்திருநாள் 2010 அதிரை நிருபர் கவிதை போட்டி"
உங்கள் யோசனை ஜனரஞ்சகமாக இருக்கிறது. அ.நி. பரிசீலிக்கலாம்

தம்பி crown,
உங்கள் ஹைகூக்களை ஏன் தொகுக்கக் கூடாது?
.........................................

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : //அச்சத்தில் !//
உகரத்திற்கு பதில் அகரம் வந்திருக்கிறது. சரி செய்யவும்.
'உச்சத்தில்' என்று இருக்கனும். //

அது அச்சமே... அதுக்குமேல் ஒரு எழுத்தில கால்(மேல்) போட்டிருந்தேனே அதை கவனிக்கலையா ? //சொன்னோன் // !?

crown said...

தம்பி அதிரை போஸ்ட்,
//வார்த்தைகளை எங்கு பிடிக்கிறீர்கள்.
ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு கட்டுப்பட்டுள்ளது.
அத்தனை வரிகளும் அபாரம்.மாஷாஅல்லாஹ்.
---------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.என் உடன் பிறப்பும் உங்களை கவர்ந்து விட்டது சந்தோசம்.

sabeer.abushahruk said...

அபு இபுறாஹீம்,
நான் எழுத்துப் பிழையைத் திருத்தவில்லை. கருத்துப்பிழையைத்
திருத்தினேன்.

பிற்கென்ன, அதிரை வ்லைப்பூ உலகில் உச்சத்தில் இருந்துகொண்டு அச்சத்தில் என்றால்... சும்மா விடுவோமா?

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கவிக் காக்கா : என் வீட்டு நிலவு உறங்குகிறதே ! அதனால் சொல்லியது அன்று அங்கே அச்சமென்றேன்... (நாங்களும் நவீனக் கவி பொடி வைப்போம்ல அதில் நெடி(ல்) இருந்தால் எனக்கு குட்டு வைத்திடுங்கள்)... அந்த நிலவு உறங்குவதால்தான் கணினியில் கவிதை எழுதலாம் அதவும் சுயநலமே.. :))

கவிக் காக்கா, இப்படியும் சொல்லிடாம்தான் "அச்சமில்லை அச்சமில்லை அதிரைநிருபர் அமைதியின் ஆளுமைக்கு அச்சமில்லை அச்சமில்லை" இங்கே இலக்கண பிழையோ அல்லது கருத்துப் பிழையோ இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது கொஞ்சம் பாருங்களேன் please காக்கா :)

என்னடா இவன் நல்லாத்தானே இருந்தான் ஏன் இப்படி இலக்கணம் வெளக்கனும்னு கேட்கிறான்னு மத்தவங்களெல்லாம் வழக்கமான கருத்தை சுருக்கிடாதீங்க அப்பு !

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

crown சொன்னது…
என் உடன் பிறப்பும் உங்களை கவர்ந்து விட்டது சந்தோசம் //

எலெக்க்ஷன் நெருங்குவதை என்ன அழகான கவிதையா சொல்லியிருக்கே(டா)ப்பா... தம்பி(ன்னு சொன்னா என்னாவாம்) அட N-ஐயும் சேர்த்திடுமோ அதில் ! சரி சரி.. எல்லாம் ஓர்கவிக் குட்டையில் ஊரிய கருத்துக்கள்தானே (முழிப் பிதுங்காதே கிரவுன்)

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அபு இப்ராஹிம் காக்கா 'Nனும் எழுத்தும் பழகி...எ(N)நாளும் வரலாம்.
இ(N)ன்னொரு கரமுண்டு அ.நிவுக்கு!இNஷாஅல்லாஹ்!

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அதிரைpost சொன்னது…
அபு இப்ராஹிம் காக்கா 'Nனும் எழுத்தும் பழகி...எ(N)நாளும் வரலாம்.
இ(N)ன்னொரு கரமுண்டு அ.நிவுக்கு!இNஷாஅல்லாஹ்.. //

தம்பி ஹிதாயத் "N"ஐப் போட்டு தாழித்தது அருமை !

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அன்பு பாசம் நேசம் நிறைந்த எங்கள் சகோதரர் சபீர் அவர்களை வாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் ஒரு வரி மட்டும்.

கவிகாக்கா நீங்கள் ஒரு "கவிதை encyclopedia"

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுத்துங்கள்.

வழக்கம்போல் இணையத்தில் எனக்குண்டான வேலையை வேறு யாரும் பார்த்தால், என் கருத்துக்குவியல் அதிகமிருக்கும். இருந்தாலும் மனதில் ஓடும் கருத்துக்களை அடிகடி பதிவு செய்வதற்கு முயற்சி செய்கிறேன்.

crown said...

தாஜுதீன் சொன்னது…
கவிகாக்கா நீங்கள் ஒரு "கவிதை encyclopedia.
-----------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.அதனாலத்தான் நான் சைக்கிளில் வருகிறேன் . நீங்கள் எதுல வேண்டுமானாளும் வந்து என் சைக்கிளைப்பிடியா பார்கலாம்னு சொல்றாங்க!(என்சைக்லோபீடியா) ஹா,ஹா,ஹா,சும்மா கடிச்சேன்.

crown said...

sabeer சொன்னது…
தம்பி crown,
உங்கள் ஹைகூக்களை ஏன் தொகுக்கக் கூடாது?
--------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கா நண்பர்கள் கேட்ட உடன் எழுதுவதுதான்.அல்லது இப்படி கருத்து எழுத வேண்டி எழுதுவது.சேமிப்பு இல்லை.சில சேமிப்புகள் என் இணையத்தில் போட்டேன்.பலர் காப்பி எடுத்துச் சென்று விட்டனர்.சிலதுகள் இருக்கும் என நினைக்கிறேன்,இனி (எ)அதையும் சேமித்து வைக்கிறேன் உங்கள் அன்பிற்காக.

ROYAL SON 4 said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
சில ஹைகூக்கள்.
1).என்னுடனே தொடர்ந்து வந்தது
எங்கே சென்றது?
இளமை!!!
இருவரியாய் நீயும், நானும் - பொருள் பொதிந்த இன்ப ஹைகூ.
2.மன கூட்டில் ஆயிரம் ஆசைகள்...
ஒவ்வொன்றாய் தலை காட்டும். -ஆமைபோல்.
3.இரவினில் கலந்து,பகலில் வெளிப்படும் தோழி- நிழல்.
4.அவள் மறதி போன்றவள்!! என்றும் மறக்க முடியாததால்.
5.வளைந்து ஓடிடும் ஆறு, இளைபாறினால் அது குட்டை.
6.ரகசியத்தை பகீரங்க படுத்தியது.-தொலைந்து போன காதல் கடிதம்.
7.அழியாத கிருக்கல் என் கைகளிலே.-ரேகை.
8.ஆண்டுகளாய் கூடவே இருந்து,
பின் காட்டி கொடுத்த துரோகி. -நாள் குறிப்பேடு.
9.எனக்கு நானே வலை விரித்தேன். - இரவில் கொசுத்தொல்லை .
crown.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.sabeer காக்காவுக்(கு)காய் ஒருத்தாலாட்டு(ஹைக்கூக்கள் இப்ப இயற்றிப்பார்தேன் .சரியா வந்திருக்கா?).
1).அழுது மன்றாடுகிறேன்.. அவள் அழுகையை நிறுத்தச்சொல்லி.
2).பொய் நகைப்பு,உண்மைக்கு வரவழைத்தது சிரிப்பு- சிரிக்கும் பொம்மை.
3.)கால்கள் இல்லாமலேயே ஓடுகிறது "பாத"ரசம்.
4.)தண்ணீர் அற்று குட்டை அழுதது (த)கண்ணீர் ஆறாய் ஓடியது.
5.)குட்டை நீளமாய் வளர்ந்தால் ஆறு.
6.)வரவேற்று மிதிப்படும் கம்பளம்.

crown said...

1).அழுது மன்றாடுகிறேன்.. அவள் அழுகையை நிறுத்தச்சொல்லி.
2).பொய் நகைப்பு. உண்மைக்கு வரவழைத்தது சிரிப்பு. - சிரிக்கும் பொம்மை.
3.)கால்கள் இல்லாமலேயே ஓடுகிறது "பாத"ரசம்.
4.)தண்ணீர் அற்று குட்டை அழுதது. (த)கண்ணீர் ஆறாய் ஓடியது.
5.)குட்டை, நீளமாய் வளர்ந்தால் ஆறு.
6.)வரவேற்று மிதிப்படும். - கம்பளம்.

Adirai khalid said...

(எளிய, வசதியற்ற) தொப்புல் கொடி சொந்தங்கள்

நடப்புக் கணக்கில் வராக்கடனில் சேர்கப்பட்டு

சொத்துக் கணக்கில் பொருப்புகள் பக்கம் வராக்கடனாகவே

முடக்கி வைக்கப் படுகிண்றது.

என்பதாக உங்களின்
(///எளிய உறவைக்
கழித்து...
எஞ்சுவதும் புசிக்கும்!///) வரிகள் உணர்த்துகிறது வாழ்த்துக்கள்

sabeer.abushahruk said...

crown,
ஏரளமான உங்கள் ஹைக்கூகளை
தாராளமாகத் தொகுக்கலாம்.
தற்போது பிடித்தவை:

//என்னுடனே தொடர்ந்து வந்து
எங்கே சென்றது
இளமை!!!//

//அழியாத கிருக்கல் 
என் கைகளிலே
ரேகை.//

//எனக்கு நானே 
    வலை விரித்தேன்             கொசுத்தொல்லை//. 

//வரவேற்றும் 
மிதிபடும்...
கம்பளம்.//
well done. 

சகோ. உன்னைப்போல ஒருவன்.
//சொத்துக் கணக்கில் பொருப்புகள் பக்கம் வராக்கடனாகவே //

நீங்கள் விமரிசிக்காமல் இருந்ததுச் சற்று வருத்தமாகக் கூட இருந்தது. சரியோ தவறோ, வெளிப்படையான உங்கள் விமரிசனம் எனக்கு ஒரு அத்தியவாசியத் தேவை. காரணம், நீங்கள் ஆழ்ந்து வாசித்து அழகான மொழியில் பின்னூட்டமிடுகிறீர்கள்.நன்றி.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

கிரவ்ன்(னு) : எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைங்கிறதால பழக்க தோஷத்திலே இங்கே மாத்திட்டே(டா)ப்பா !

// வளைந்து
ஓடிடும் ஆறு
இளைபாறினால்
அது குட்டை. //

ஆறு..
வளைந்து நெளிந்து
ஓடுவதால் நீளம்
சற்று
இளைப்பாறினால்
அதுவே குட்டை..

GOODடே(ய்) டே டே டே ! today Sunday :)) எதாவது புரிஞ்சுட்டா சரி(டா)ப்பா

Shameed said...

இந்த மூன்று எழுத்துக்காரர் போடும் இரண்டு எழுத்து கவிதைகளை படிக்கும் போது மலைப்பா உள்ளது

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு