அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ் புனித பயணம் நிறைவேற்றி விட்டு வரும் ஹாஜிகள் அனைவரையும் இன் முகம் கூறி வரவேற்கிறோம். ஆனால் பெரும்பாலானவர்கள் ஹஜ் முடித்தவுடன் அதன் பலனைகளை அடையாமல் விட்டுவிடுவதுடன் ஏதோ சென்றோம்.கடமை முடிஞ்சிருச்சின்னு நினைக்கிறவங்களுக்கு அவ்வாறு இருப்பது தவறு என்று நினைவூட்டவே இந்த (வேதனை) கவிதை.
ஹஜ் என்பது கொடுத்து வாங்கும் பொருளல்ல.
அது பாவம் தொலைத்து புதிதாய் பிறந்ததற்கான பிறப்புச் சான்றிதழ் !
ஹஜ் என்பது கவுரவத்தை வெளிப்படுத்த கூடிய விழாவல்ல.
அது வசதிப்படைத்தவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமை !
ஹஜ் என்பது சுற்றுலா பயணமல்ல
அது புனிதப்பயணம் !
ஹாஜி என்பது தேர்தலுக்கு ஓட்டு கேட்டும் அரசியல் அல்ல, போஸ்டர் அடித்து வரவேற்க !
அது அர்ஷில் இருந்து ஆட்சி செய்யும் வல்ல அல்லாஹ்விற்கு செய்யும் காணிக்கை !
ஹாஜி என்பது படித்து வாங்கிய பட்டமல்ல
பகட்டாய், திருமண பத்திரிக்கையில் போட்டு பெருமை கொள்ள!
ஹாஜி என்பது விலாசமோ, இனிஸியலோ அல்ல. பெயருக்கு முன் போட்டுகொள்ள.
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தம் பெயருக்கு முன் "ஹாஜி" என்று போட்டு கொள்ளவில்லை.
ஹாஜி என்பது நான் தான் பெரியவன் என்ற அந்தஸ்தல்ல
என்றும் வல்ல அல்லாஹ்வின் அடிமைதான் என்பதின் அடையாளம் !
ஊர் பார்க்க பெருமைக்காக பலமுறை ஹஜ் செய்வது கூடாது
அல்லாஹ் பார்க்கிறான் என்பதை நினைந்து ஒருமுறை செய்தாளும் நன்மை கூடுமே!
ஹஜ் என்ற பரிட்சை முடிந்து விடவோ, அதில் பாஸாகிவிட்டோம் என்ற கணவோ வேண்டாம்.
இனிதான் பரிட்சையே!
முடிவு நாளை மறுமையில்.
-- CROWN
6 Responses So Far:
கிரவுன்(னு):
அந்தந்த நேரத்தில் அதனதனைச் சொல்வதில் முன்னல் வருவதே உன் வழக்கம் (keep it up) !
ஹாஜி அழை-மொழி !
ஊரார்க்கு உருமிக்
காட்டுவதற்கு அல்ல !
அயர்ந்திட வேண்டாம்
ஆனந்தம் வேண்டாம்
இனிதான் பரிட்சையே
முடிவு மறுமையில் !
-----------------
மற்றொரு ALERT காத்திருக்கிறது (கவிதைக்குள்) ஊரார்க்கு உரைத்திட!
ஹாஜி அழை-மொழி !
ஊரார்க்கு உருமிக்
காட்டுவதற்கு அல்ல !
அயர்ந்திட வேண்டாம்
ஆனந்தம் வேண்டாம்
இனிதான் பரிட்சையே
முடிவு மறுமையில் !
---------------------------------------------------------------------
அஸ்ஸலாமுஅலைக்கும்.ஒவ்வொரு வரியும் ''ஹைகூ' மொத்த ஹைகூ கூட்டணியின் கவிதை.அருமை காக்கா.
தம்பி க்ரவுன்,
தம்பி என விளிப்பது வயது சார்ந்தது மட்டுமே, அறிவுக்கல்ல என உங்களின் ஆக்கத்தைப் படிப்பவர் யாவரும் அறிவர்.
கையில் குச்சி இல்லாமல் பாடம் நடத்தி இருக்கிறீர்கள். முக்கியமான கேள்விகளையும் குறித்துக் கொடுத்து நல்ல வாத்தியார் என்று பெயரும் வாங்கி விட்டீர்கள்.
இனிதான் பரிட்சை என்று மிரட்டியும் விட்டீர்கள்... சரிதான்.. அதுவும் ப்ராக்டிகல் எக்ஸாம்??!
//ஹஜ் என்பது சுற்றுலா பயணமல்ல
அது புனிதப்பயணம் !//
இந்தப் பொடியன் சொல்லி நாம என்னத்த கேக்கிறது என்று விடாமல், "உண்மையைச் சொன்னால் ஒத்துக்கணும்)
உமது மகுடத்தில் மற்றுமொரு ரத்தினம் இந்த ஆக்கம். வாழ்க!
படித்தவுடன் மெய் சிலிர்த்த்து....தான் சரியென்று (இதுதான் சரி )நினைப்பதை யாருக்கும் பயப்படாமல் அல்லாஹ்வை மட்டும் முன்னிருத்தி இங்கு நீங்கள் சொல்லி இருக்கும் விதம் அனைவருக்கும் வரும் என்பது ஜயம்....திருந்துவார்களா தங்களை ஹாஜி என்றும் ,ஹாஜ்ஜாஜ் என்றும் அல்ஹாஜ் என்றும் அழைத்து கொண்டு இருக்கும் தற்பெருமை பேதைகள்
சரியான சாட்டை அடி...
ஹாஜி என்றும், அல்ஹாஜி என்றும் தனது பெயருக்கு முன்னால் போட்டு..புரூf
பார்க்க வந்த திருமண பத்திக்கையை பார்த்து பெருமை படுபவர்களுக்கு.
அஸ்ஸலாமு அலைக்கும்.கருத்துச்சொன்ன அனைவருக்கும். நன்றி.குறிப்பாக வாத்தியாருக்கு(சபிர்காக்கா) வாத்தியார் என்னை வாத்தியாராய் ஆக்கி அழகு பார்தவிதம் ,இதம். நான் சாதாரன மாணவன்.(சாதரனமானவன்).அவ்வளவே!
Post a Comment