Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

இணையத்தில் வலை வீச்சு 16

அதிரைநிருபர் பதிப்பகம் | November 05, 2010 | ,

Version : 2

மிதமிருக்கும் பதிவும் வரும் என்று சொல்லியாச்சு முன் பதிப்பில் அதனால துண்டு போட்டுட்டு இடம் வேற போட்டிருப்பீங்க ஆக இங்கே தொடரத்தான் வேண்டும்.

வலை மேய்ச்சலில் இருக்கும் நம்மவர்களுக்கு கணினித் திரையில் தோன்றும் பிம்பங்களும், வண்ண எழுத்துக்கள் மட்டுமே தெரியும் ஆனால் அதன் பின்னால் அதவாது வலைபின்னலில் நடந்தேறும் சதிகளின் சூழ்ச்சிகள் என்னவென்று அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நீங்கள் பயன்படுத்தும் உலவியோ (browser) அல்லது வாயாடியோ / கையாடியோ (chatting client) உங்களின் இணையப் பயன்பாட்டுத் தகவல்களைச் சேகரித்து, அதன் ஆளுமையை வலைக்குப் பின்னால் இருக்கும் கொள்ளைக் கும்பலுடன் அவர்களுடனான வியாபார நிகழ்வுகளில் இருக்கும் சாதக, பாதகங்களையும் கண நேரத்தில் அலசி ஆராய்ந்து கணிக்கும் இணைய தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகி வருவது ஆபத்துக்கு உரியது.

இதன் சித்து விளையாட்டை இப்படி விளக்கலாம், நமக்குத் தெரிந்த நபராக இருக்கட்டுமே அவர் தன் வேலை செய்யும் அலுவலகம் தவிர, வீட்டிலும் இணைய வசதிகொண்ட கணினி மூலம் வலைதளங்களில் மேய்வது உண்டு. அவ்வப்போது பெங்களூர், மதுரை செல்கையில் உலவி முற்றத்தில் அதாவது பிரவுசிங் சென்டர் (browsing center) பக்கமும் மேய்ச்சலுக்கும் செல்வதும் வழக்கம். இணையத்தில் மின் அஞ்சல் (email) தவிர, சமூக பிணைப்புத் தளங்களான ஃபேஸ்புக், ஓர்குட், யூடியூப் மற்றும் சில வலைப்பதிவுத் தளங்களில் தொடர்ந்து மேய்வது உண்டு. இதோடு, நண்பர்கள் யாராவது அனுப்பும் வலைதள சுட்டிகளை (link) சொடுக்கி அவற்றைப் படித்து, பின்னூட்டங்கள் இடுவதும் இவரின் வழக்கம்.

நம்ம நபர் தமது வலைதளத்துக்கு முதல்முறை வந்து விட்டு சென்றதன் பின்னர், மீண்டும் வரும்போது அவரது வசதிக்காக என வலைதளங்கள் சில தகவல்களை Cookie எனப் படும் தேயிலை வடிகட்டியான் அவர் செல்லும் வழித் தடம் தேடும் குறிச் சொற்கள் இவைகளை கோப்புகளில் சேமித்துவைப்பதுதான் அதன் வழக்கம். தனிப்பட்ட முறையில் இந்த குக்கீஸ்கள் உங்கள் கணினியில் இருக்கும் உலாவியால் உருவாக்கப்படும் வெறும் எழுத்துக் கோப்புகளே, அவற்றால் உங்கள் கணினியில் தங்கி இருக்க முடியுமே தவிர தானாக எந்த சேதத்தையும் ஏற்படுத்த முடியாது. ஆனால், இந்த Cookieகள் வடிகட்டிய தகவல் கோப்புள் அனைத்தையும் ஒரு மென்பொருளால் வாசிக்க முடிந்தால் என்னவாகும்? அதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையே !

பல்வேறு கணினிகளில் இருந்தும், வெவ்வேறு ஊர்களில் இருந்தும் நம்ம ஆள் வலை மேச்சலுக்கு சென்றாலும், அவரது வலையலசல் புராணத்தை (Browsing History) அலசிப்பார்த்து அவரைப் பற்றிய விவரங்களைத் தொகுத்தெடுத்து இந்நபர் பற்றிய அடிப்படைத் தகவல்களைக் கணிக்க முடியும். இவர் இன்ன வயதுடையவர், சென்னை, அதிரைப்பட்டினம், மதுரை, பெங்களூரு என்று நாட்களைக் கழிக்கும் நபர். புத்தகங்கள் படிப்பதிலும், திரைப்படங்கள், அடுத்தவர்களின் முகப்பதிப்புகளை (profile) பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம். கடந்த 6 முதல் 10 மாதங்களுக்குள் பெங்களூரு பயணித்திருக்கிறார் என்று தோராயமாகவும், துல்லியமாகவும் நம்ம நபரைப் பற்றிய தகவலைச் சல்லடைப் போட்டு சலித்துச் சொல்ல முடியும்.

நம்ம ஆள் இதுவரை சென்றிருக்காத வலைதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவர் வருகை தரும்போது மிகக் குறிப்பிட்ட (குறிவைத்து Targeted) செய்திகளையும் விளம்பரங்களையும் கொடுக்க முடியும். இப்போது பரவலாக வலைதளங்களில் காணப்படும் ஃபேஸ்புக்கின் (facebook) விருப்புத் தொடுப்புகளின் பின்புலம் மற்றும் நோக்கம் இதுதான். வலைமேய்ச்சலின் அனுபவத்தைச் நல்லவகையில் செம்மைப்படுத்துவற்கும் வழிகாட்டுவதற்கு மட்டும் இதைச் செய்தால் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் அதற்காகப் பயன்படாமல், கிட்டத்தட்ட வலைத்தளங்களில் உலாவருபவர்களின் வீடு புகுந்து அவர்களின் அனுமதியின்றி அனைத்தையும் உளவு பார்க்கும் வேலை செய்வதுதான் விபரீதத்தின் எல்லை இதுதான் பிரச்னையே, இங்கேதான் இவர்களின் காசு பார்க்கும் விளையாட்டும் ஆரம்பிக்கிறது.


உதாரணத்துக்கு, நம்மவர் வேலை ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம், வேலை தேடித்தரும் அல்லது நேரடியாக வேலையிருப்பாதகச் சொல்லும் நிறுவனம் நம்மவர் தமது வலைதளத்தில் தேவையான விண்ணப்பத்தில் விவரங்களைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் அதே வேளையில், நம்மவரைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து, அவரது விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளலாம்; நிராகரிக்கலாம் அல்லது ஏமாற்றுப் பேர்வழிகள் தடத்தை மாற்றிப் போடலாம்.

மற்றொரு உதாரணமாக, பெண்ணுக்குப் பார்த்து இருக்கும் மாப்பிள்ளைப் பையனின் வண்டவாளங்களையோ பையனுக்குப் பார்த்து இருக்கும் பெண்ணின் சேட்டைகளையோ நொடியில் கண்டுபிடிப்பது சாத்தியம். மேட்ரிமோனியல் வலைதளங்கள் மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தகவல் சேகரித்துப் பெண் / ஆண் வீட்டாருக்கு விற்க முடியும்.

ஒவ்வொரு துறையிலும் இப்படி எடுக்கப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தத் தொடங்கினால், வலை மேய்ச்சலில் இருப்பவர்களின் தனித்தன்மை (privacy) அதோகதியே என்பதால், இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் ஒரு பக்கம் கூக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது இவைகள் இன்று வரை செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

வலைமேய்ச்சலில் இருக்கும் பெரும்பாலோர் செய்யும் அதிகபட்சமான செயல்கள் அவர்களுக்கே அந்த நேரத்தில் உறைக்காது என்ன செய்கிறோம், அல்லது செய்திட்டொமென்று. கீழே கோடிட்டு காட்டும் செயல்கள் எவ்வளவு ஆபத்தானது தெரியுமா ?
  • முன்பின் தெரியாவரிடமிருந்து வந்திருக்கும் மின் அஞ்சலில் இருக்கும் இனைப்பு கோப்பை (email attachments) ஆர்வக் கோளாறில் திறந்து பார்ப்பது.
  • இலவசமாக கிடைக்கிறதே என்பதற்காக அதன் பின்னனி என்றுகூட அறிந்திடாத மென்பொருள்கள் (software) கிட்டியதையெல்லாம் தனது கணினியில் நிறுவி கொள்வது (installing).
  • யார் அனுப்பியிருக்கிறார்கள் என்று பார்ப்பதுக்குகூட பொறுமையின்றி வந்திருக்கும் மின் அஞ்சலில் இருக்கும் HTML அல்லது text திறந்து பார்ப்பது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, பெரும்பாலோருக்குத் தெரிந்திருக்கனும் "http://" க்கும் "https://" இரண்டிற்குமான வித்தியாசம் (இதனைப் பற்றி மற்றுமொரு பதிவுகளில் விளக்கமாக விவாதிப்போம்).
  • முக்கியமாக சிலருக்கு வங்கியிலிருந்து வருவதாக வரும் மின் அஞ்சலில் அந்த வங்கியின் பெயரோடு அல்லது அதில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கும் தொடுப்பின் (lnik) கீழே கோடிட்டு காட்டப் பட்டிருக்கும் அதனை அழுத்தினால் அந்த வலைத்தளத்துக்குச் செல்லும் இங்கேதான் சிக்கல் அதன் பின்னால் கொடுத்திருக்கும் முகவரி போலியானதாக இருக்கும் அல்லது வேறு தளத்திற்கு உங்களை இழுத்துச் செல்லும் அந்த இழுத்துச் செல்லும் நேரத்திலேயே உங்கள் கணினியிலிருந்து நிறைய உளவு பார்த்து திருடப் பட்டிருக்கும்.
  • உலவியின் உதவி கொண்டு online games விளையாடுவதும் மிகப் பெரிய விபரீதமானது.

கிடைக்கிறதே, கண்டுவிட்டோமே, சென்றுதான் பார்ப்போமே என்று நாம் தகவல்கள் தவறாகத்தானே கொடுக்கப் போகிறோமென்று வலைதளங்களில் இருக்கும் படிவங்களின் பக்கங்களில் நீங்கள் விளையாடினால் அதனை உங்கள் பார்வைக்கு இலவசமாக விட்டவன் ஒன்றும் சும்மா இருக்க மாட்டான், நீ எனக்கு முடிவெட்டி விடு நான் உனக்கு முதுகு சொறிந்து விடுகிறேன்னு சொல்லாமல் செய்வான்.

எல்லாவற்றையும் விட வாயாடிக் குழுமம் (chatting rooms) தட்டி தட்டிக் கொடுத்து திட்டு வாங்குவது, சமூக (சிக்கல்)பிணைப்பு வலைத்தளங்களில் கடைந்தெடுத்த பொய்யர்கள் உண்மையாளனாக முகமூடியிட்டு உழன்று கிடப்பது சீர்கேட்டின் நுழைவாயிலிலேயே காத்திருப்பது மிகப் பெரிய ஆபத்தானது (90 களிருந்து இன்று வரை இந்தப் பித்தலாட்டத்தின் பரிமான ஊடுருவல் எப்படி என்பதையும் நிச்சயம் அலசித்தான் ஆகவேண்டும்).

சூடுபட்டபின் இது நெருப்பாடா கேட்டாங்களாம் ! ஆதலால் இந்த கொசுரு அனுபவத் தகவல் ரொம்பவே சீரியசான விஷயம் நிஜத்தில் நடந்துவிட்டதுதான், திருச்சியைச் சேர்ந்த எனது நண்பர் அவரின் சொந்தக்காரரின் இளைய சகோதரன் அவமானப்பட்டு மாட்டிய விவகாரம், அவரது 11 வயது மகனால். அந்தச் சிறுவன் செய்தது குற்றமா அல்லது குறும்பா என்று இன்னும் அவர்களுக்கு தெளிவு இல்லையாம், ஆனால் இச்சம்பவம் சாதாரனதுதானே என்று விட்டுவிடவும் முடியாதே, இதுவே எங்கு வேண்டுமானாலும் நடந்தேற வாய்ப்புகள் அதிகமே! இப்படியான சூழலை நாமும் உருவாக்கி வைத்திருந்தோமானால்.

என்னதான் செய்திட்டான் பொடியன், அந்தச் சிறுவனின் சித்தப்பா தினமும் வீட்டில் chattingல் (கையாடியில்) யாருடனோ தட்டி தட்டி போட்டு சொட்டுச் சொக்கி பேசிக் கொண்டிருந்திருக்கிறார் இதனை அந்தச் சிறுவன் ரொம்ப நாளாகவே பின்னால் நின்று கவனித்து வந்திருக்கிறான், அவரும் அவனைப் பொருட்படுத்தாமல் தன்செயலே கண்(ணும்) கருத்தாக (???) என்று இருந்திருக்கிறார்.

இரண்டு நாட்கள் அவர் வெளியூர் சென்றிருக்கிறார் அந்தச் சந்தர்ப்பத்தில் இந்தச் சிறுவன் தானாக கணியை இயக்கி தனது சித்தப்பனின் சாட்டிங்கில் நுழைந்து சித்தப்பன் யாருடன் பேசுவரோ அந்த நபரோடு தட்டுத் தடுமாறி டைப் அடித்திருக்கிறான் அடுத்த முனையிலிருந்த நபரோ சிறுவனின் செயலில் வித்தியாசம் தெரிந்ததால் அவனிடம் இருக்குமிடம் கேட்டிருக்கிறார் இந்தச் சிறுவனும் சொல்லியிருக்கிறான்.


விளைவு போலீசுடன் வந்து இறங்கியிருக்கிறார்கள் ஒரு பெண் மற்றும் அவரின் தந்தை, சகோதரன் சகிதம். பலநாள் திருடன் ஒரு நாள் மாட்டுவான் என்பதுபோல், இந்தச் சிறுவனின் சித்தப்பன் அந்தப் பெண்ணுக்கு சாட்டிங்கில் நிறைய தொந்தரவு கொடுத்திருக்கிறார்(ராம்), அவர் எங்கிருக்கிறார் என்று கண்டறிய அம்மணி என்னவெல்லாம் செய்து பார்த்தாராம் (???). அவரும் பிடிகொடுப்பதாக இல்லையாம், அதனால் அவர் வழியிலேயே போய் பிடிக்கலாம்னு வழிந்தும் உருகியும் பார்த்திருக்கிறாராம் (????) ம்ம்ம்ஹும் ஒன்னுமே நடக்கலையாம், ஆனால் சித்தப்பன் பிடி கொடுக்க வில்லை கடைசியாக சிறுவனின் சாட்டிங்கில் மாட்டியது வீட்டின் முகவரி, தேடி வந்து பிடிபட்டார் சித்தப்பன்.

இங்கே சில கேள்விகள் எழலாம் அந்த நபரை இலகுவாக தடை செய்ப்பட்ட பகுதிக்குள் முடக்கியிருக்கலாமே (block), அவரின் தொடர்புகள் யாவையும் முலையிலே கிள்ளி அழித்திருந்திக்கலாமேன்னு,அல்லது ஒதுக்கியிருக்கலாமேன்னு, விபரீதம் எங்கே ஆரம்பித்திருக்கிறது தெரியுமா நட்புடன் (????) பேசுவதாக ஆரம்பத்தில் (கதவை திறந்திவிட்டு) ஆரம்பித்து அப்படியே அவர் பறிமாறிக் கொண்ட ஒரு கோப்பை (attachment) திறந்து பார்க்க வைத்து அதன் மூலமாக அந்தப் பெண்ணின் கணினியில் ஊடுருவி வேவு பார்க்கும் மென்பொருளை இலாவகமாக நிறுவப்பட்டிருக்கிறது இவைகள் எல்லாம் பின்னனியில் நடந்தேறியது (இதன் செயல்பாடுகள் எப்படி என்றும் பார்ப்போமே அடுதடுத்து வரும் பதிப்புகளில்)ஆனால் இதுபற்றி அந்தப் பெண்ணுக்கு தெரியாது. இந்த யுக்கிதான் அந்தச் சித்தப்பனை சும்மா இருக்க விடாம விட்டிருக்கிறது இந்த தகவலையும் அந்தச் சித்தப்பனே (ஒப்புக் கொண்டது) சொன்னதுங்க !

வலைச் சிக்கலில் வேவு (spy) அதனால் காவு (இழப்பு) தொடரத்தான் செய்கிறது, சிக்கியது ஏராளம் சின்னா பின்னாமாகும் முன்னர் சீர்படுத்துவோம் சமுதாயத்தை இன்ஷா அல்லாஹ்…

இன்னும் (தொடரத்தான்) வேணுமா ?

- அபுஇபுறாஹிம்

16 Responses So Far:

sabeer.abushahruk said...

அபு இபுறாகீம்,

நிச்சயமாக இன்னும் (தொடரத்தான்) வேண்டும். இதிலே இத்தணை சங்கதிகள் இருக்கா? உம்மிடம் இதைப்பற்றிய தகவல் களஞ்சியமே இருக்கும்போல இருக்கிறதே!?

என்னதான் சைபர் குற்றங்கள் கூடிப்போனாலும் குற்றவளியைக் கண்டுபிடிக்க யுக்திகளும் உடனுக்குடன் கண்டறிவது திறமையே.

எல்லாவற்றையும் நல்லாக் கிளறுரீங்க. எனவே, நிச்சயமாக இன்னும் (தொடரத்தான்) வேண்டு

Unknown said...

//இன்னும் (தொடரத்தான்) வேணுமா ?//
காக்கா தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் தகவல் ஒவ்வொன்றும் புதியவை மட்டுமல்ல அவசியம் தெரிந்துக்கொள்ளவேண்டிய விசயம்.

இணையம் மனிதனின் தவிர்க்க முடியாத அங்கமாக அல்லவா மாறிப்போயிற்று! குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் விழிப்புணர்வுடன் இருந்து செயல் படவேண்டிய தளம்,களம்.எனவே நாங்கள் அதன் சூட்சமங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும். அந்தவகையில் இக்கட்டுரை தொடர் அவசியமே!

'இன்டெர்நெட்' தளத்திற்கூடான தஃவாவை யூஸுப் அல்கர்ழாவி 'காலத்தின் ஜிஹாத்' என வர்ணிக்கின்றார்.

Adirai khalid said...

இவ்லா பெறிய கட்டுரை படிக்காம "சூப்பரு, வாழ்த்துக்கள்"ன்னு போடலாமுன்னு அந்நிய மனசு கட்டளை இட்டது ஆனா நம்ப இலகிய இதயம் அத விட்டுக் கொடுக்கல அதனால படிச்சு புட்டேன்

கோப்பை (File) மாற்றும் அளவிர்க்கு பரிமாற்றம் நடந்தேரியுள்ளது இந்த சித்தப்பன் மேட்டரில்

ஏன் இந்திய உளவு அமைப்பிற்கு(IB) இனயதல அடையால எண்களை(I.P address) வைத்து கண்டு பிடிக்க முடியலையோ , சினிமா மாதிரி சித்தப்பனை வெளியூருக்கு அனுப்பி விட்டு சிருவனை பிடிக்குக்கும் காலம் மாறி சிருவர்களே இந்தமாதிரி சித்த வேலைய செய்யும் ஹை டெக் கலிகாலம் இப்போ

இனயம் பொருத்தப்பட்ட கனிணி பொதுவான இடத்தில் வைப்பதுதான் சாலச் சிரந்தது. இல்லையேல் அடிக்கடி கண்கானிப்பதும் அவசியம்.

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.அபுஇபுறாகிம் காக்காவுக்கு நான் வருவதற்குள் காக்கா வந்துவிட்டு போய்டாங்க.பின் உடனே என் தம்பி(அதிரை போஸ்ட்) வந்துட்டுப்போய்ட்டான். நான் சொல்வதற்கு என்ன இருக்கு?இருந்தாலும் ஸ்டெடி பன்னிகிட்டு இருக்கேன் முடிந்தவரையில் முயற்சிகிறேன்.

jalal said...

தம்பி அபுஇபுறாஹிம்...
அஸ்ஸாலாமு அலைக்கும் ( வரஹ்.., )
தங்களின் "இணையத்தில் வலை வீச்சு"-ல் இணைந்து தான் பார்ப்போமே என்று இணைந்தால் "தொடரத்தான் வேண்டும்" என்றாகிவிட்டது எனக்கு, உண்மையில் சுஜாதாவின் நாவல் படித்தது போல் ஒரு இனிமை தொடரட்டும் இன்னும்.
கணிணியில் வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு அதை தமிழில் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுத்தது அருமையிலும் அருமைமா தொடரட்டும் வாழ்த்துக்கள்.

crown said...

jalal சொன்னது…
உண்மையில் சுஜாதாவின் நாவல் படித்தது போல் ஒரு இனிமை தொடரட்டும் இன்னும்.
கணிணியில் வரும் ஆங்கில வார்த்தைகளுக்கு அதை தமிழில் தெரியாதவர்களும் தெரிந்துகொள்ளும்படி விளக்கம் கொடுத்தது அருமையிலும் அருமைமா தொடரட்டும் வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். நான் சொல்ல(எழுத) நினைத்தேன் அவொஹ சொல்லிட்டாஹ.இது ஒரு யுக்தி வாசகர்கள் தொடருங்கள் என்று சொல்லவைப்பதும்.....ஹாஹாஹா......

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

உ.ஒ. சொன்னது....

ஏன் இந்திய உளவு அமைப்பிற்கு(IB) இனயதல அடையால எண்களை(I.P address) வைத்து கண்டு பிடிக்க முடியலையோ , சினிமா மாதிரி சித்தப்பனை வெளியூருக்கு அனுப்பி விட்டு சிருவனை பிடிக்குக்கும் காலம் மாறி சிருவர்களே இந்தமாதிரி சித்த வேலைய செய்யும் ஹை டெக் கலிகாலம் இப்போ ///

பதிலும் இங்கேயுள்ளதே : இங்கே சில கேள்விகள் எழலாம் அந்த நபரை ................ விபரீதம் எங்கே ஆரம்பித்திருக்கிறது தெரியுமா? நட்புடன் (????) பேசுவதாக ஆரம்பத்தில் (கதவை திறந்திவிட்டு) ஆரம்பித்து ..........

உ.ஒ. உன்னோட அதே இளகிய மனசு கேட்கும்னு தெரியும் அதனாலதான் கடைசிப் பாராவும் பதிலுக்காக...

ZAKIR HUSSAIN said...

அபு இப்ராகிம்...வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் Degree in Cyber Crime investigation என்ற பட்டப்படிப்பு ஆரம்பித்து விட்டார்கள். அதில் படித்தவர்கள் எழுதினால் கூட இந்த அளவு விவரமாக எழுத முடியாது. Really superb

Unknown said...

ஹாலித் காக்கா சொன்ன மாதிரி ....
நிஜமாக படிக்க வைத்தது உங்கள் எழுத்து நடை ...
நிறைய விஷயங்கள் அறிய முடிந்தது ...கண்டிப்பாக நீங்கள் தொடரவேண்டும் ........

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அன்பிற்கினியர்வகளே! :

கட்டுரையின் நீளம் அதிகம்தான் இன்னுமா நீளனும்னு கேட்டு வைத்தேன், கருத்துக்களால் செதுக்கும் சிற்பிகள் உங்கள் யாவருக்கும் நன்றி !

வலைச் சிக்கலின் பின்னல்களை பிரிக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு மணிக்கு பிறகும் எழுதனும் தொடராக, அதனாலேயே எழுத நினைத்ததை சுருக்கி சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேண்டும், வாய்ப்புகள் கிடைக்கும் போது பின்னூட்டங்களிலும் முடிந்த வரை மேலேச் சொல்லியிருந்தவைகள் பற்றி எழுதவும் முயற்சிக்கத்தான் வேண்டும் (என்ன நான் சொல்வது சரிதானே) !

Shameed said...

படிக்கப் படிக்க உள்ளுக்குள் ஒரு பயம் வருகின்றது இதுக்குள்ள இத்துனை விசயங்களா என்று ஆச்சர்யமாக உள்ளது.

உங்கள் புண்ணியத்தில் இன்று முதல் வீட்டில் online games மம்னுதான்.

தொடரத்தான் வேணும் கண்டிப்பாக

மொழியாக்கம் ரொம்ப டாப்புங்கோ.

Yasir said...

தனிப்புத்தகமாக்கி “கணிப்பொறியும் கண்கானிப்பும் “ என்று தலைபிட்டு பாதுகாக்கவேண்டிய பொக்கிஷம் உங்கள் கட்டுரை - தொடரத்தான் வேண்டும் கண்டிப்பாக

அதிரை முஜீப் said...

சகோதரர் அபுஇபுராஹீம் அவர்களே! இன்னுமா பில்கேட்ஸ் உங்களை தொடர்புகொள்ளவில்லை? இனையதினைப் பற்றியும் அதன் பின்புற சித்துவிளையாட்டையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து, அதுவும் தூய தமிழில்!!. தொடருங்கள் இந்த கட்டுரையை. ஒரு பதிவிற்கு குறைந்தது இரண்டு துணை தலைப்பிலாவது செய்தியை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இணைய திருட்டுப் பயல்களுக்கான சாட்டையடியும், அதனூடே அதை பயன்படுத்தும் மக்களுக்கான விழிப்புணர்வும்.
அதிரை முஜீப்.- www.adiraimujeeb.blogspot.com

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.வலைக்குள் சிக்கியிருக்கும் சிக்கலை( நக்கலுடன்,கலக்கலுடன்)ஒவ்வொரு முடிச்சாக அவிழ்து.அந்த முடிச்சுக்களின் நுனி யாரின் கையில் எல்லாம் மாட்டிக்கொண்டுருக்கிறதுஎன்பதை விரல் நுனியில் விபரம் வைத்து விளக்கிகொண்டிருக்கும் எனதருமை சகோதரரே!இப்படி சூட்சுமங்களை கற்றனீங்கள் அதை சமுதாயனோக்கத்தோடு பகிர்ந்து கொள்ள வந்ததற்கு முதற்கண் நன்றி.சைபர் கிரைம் இப்படி அக்குவேறு ஆனிவேறா அலசுறவிதம் அருமை என்னவோ சொல்வது சைபர் கிரைமை ஆனால் 100% அருமை.ஆகயால் நீங்கள் தொடரவேண்டும்.இதன்மூலம் ஒரு விழுப்புணர்வு ஏற்பட இது முதல் அடியாகும்.

அலாவுதீன்.S. said...

சகோ. அபுஇபுறாஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இதுவும் ஒரு விழிப்புணர்வே. வாழ்த்துக்கள் சகோதரரே!

///வலைச் சிக்கலின் பின்னல்களை பிரிக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு மணிக்கு பிறகும் எழுதனும் தொடராக, அதனாலேயே எழுத நினைத்ததை சுருக்கி சொல்ல வேண்டியதை சொல்லத்தான் வேண்டும்.///

இணையம் என்பது நம் வாழ்வின் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது. நம் சமுதாய மக்களுக்கு கையாடல், வாயாடல், இப்படியே எத்தனையோ உள்ளது. வரும் காலத்தில் தொலைக்காட்சி, கைப்பேசி இருப்பது போல் இணையம் குடிசை, மாடிவீடு என்ற பாரபட்சம் இல்லாமல் எல்லா வீடுகளிலும் வந்து விடும். அதனால் தூய தமிழில் நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியத்திலும் அவசியம்.


///இன்னும் (தொடரத்தான்) வேணுமா ? கட்டுரையின் நீளம் அதிகம்தான் இன்னுமா நீளனும்னு கேட்டு வைத்தேன்.///

கேள்வி எல்லாம் கேட்க வேண்டாம். தொடரத்தான் வேண்டும். என்ன வேலை இருந்தாலும் இணையத்தை பார்ப்பதை நாம் விடுவதில்லை. உணவு போல் ஆகிவிட்டது. வாசகர்கள் அனைவரும் பச்சைக்கொடி காட்டி விட்டார்கள். நானும் பெரிய கொடியோடு கடைசியாக வந்துள்ளேன். எத்தனை மொழிகள் இருந்தாலும் தூய தமிழில் படிப்பது சுகம்தான் தொடருங்கள்.

தொடர்ந்து எழுதி முடித்து கடைசி தொடரில் முதலிருந்து கடைசி வரை வெளியிட்ட செய்திகள் அனைத்தையும் சாறு பிழிந்து எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை மீண்டும் கடைசியாக தந்து விடுங்கள் என்பது என் கோரிக்கை.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// தொடர்ந்து எழுதி முடித்து கடைசி தொடரில் முதலிருந்து கடைசி வரை வெளியிட்ட செய்திகள் அனைத்தையும் சாறு பிழிந்து எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்பதை மீண்டும் கடைசியாக தந்து விடுங்கள் என்பது என் கோரிக்கை. //

அன்பின் அலாவுதீன் காக்கா: இணையத்தில் கடைசி என்று காண்பது கடினமே, தொடர்ந்திடும் பயணத்தில் ஆங்காங்கே எங்கே இறங்கனும் எதில் ஏறனும் எப்படி இருக்கனும் வழியில் யாரும் ஊண் கொடுத்தால் சாப்பிடலாமா ? என் சீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றால் பார்த்துக் கொள்ளலாமா ? என் வீடு வரை வாங்களேன் என்றால் சென்றுதான் வரலாமா ? இவைகளையும் சொல்லியே ஆகவேண்டும் ஆக இந்த இணையப் பயணம் ஓயப்போவதில்லை ! :)

கிடைக்கும் நேரங்களில் வாய்ப்புகள் வசப்படும்போது வலைச் சிக்கலின் நெளிவு சுளிவுகளை பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...

மீண்டும் மிரளவைக்க வில்லை, கருத்துக் குவியல் சுருக்கமிருந்தாலும் உங்களின் உள்ளக்கிடைக்கையில் தங்கிட்ட மகிழ்ச்சியில் இங்கே கருத்துச் சிற்பிகளான் எங்கள் காக்கா மார்களுக்கும், தம்பி மார்களுக்கும் நன்றி சொல்வதை விட தொடருவேன் என்று சொல்லிவைத்தால் நன்றியைவிட பெரிதாக இருக்கும் தானே ?

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு