Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

பிஞ்சு உதிர்ந்தது ! நெஞ்சு அதிர்ந்தது !! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | November 21, 2010 | ,

முபீன்! இதுதான், பதினைந்து வயதே நிரம்பிய அச்சிறுவனின் பெயர்.
இன்று அதிகாலை, நண்பர் ஏ.ஜே. தாஜுத்தீன் அவர்கள் இச்சிறுவனின் அகால மரணத்தைத் தொலைபேசியில் சென்னையிலிருந்து அறிவித்தபோது, அதிர்ந்தேன்!

ஊரின் பொதுத் தொண்டுகளில் ஆர்வமுடைய சகோதரர் அ. இ. அப்துர்ரஸ்ஸாக் (புது ஆலடித் தெரு) அவர்களின் அருமை மகன் இவர். பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!

பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுவர் முபீன், தன் வீட்டில் நடந்த விபத்தில் படுகாயமுற்று, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களின் விரைவான சிகிச்சைகள் ஏதும் பலனின்றி, விரைந்து சென்றுவிட்டான், அல்லாஹ்விடம்! மற்றவர்களுக்கு ஓர் எச்சரிக்கையையும் விட்டுச் சென்றுள்ளான் இச்சிறுவன். ஆம்! எதிலும் எச்சரிக்கை தேவை என்பதுதான் அது! இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

'மூனா மீயன்னா' குடும்பக் குலக் கொழுந்து முபீன், தன் பெற்றோருக்கும் தன் பள்ளித் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. கருணையுள்ள இறைவன் அல்லாஹ், இவரின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை வழங்கி, இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன்.

மங்ரிபுத் தொழுகைக்குப்பின், தக்வாப் பள்ளியில் ஜனாஸா தொழுகை நடந்து, அங்குள்ள மையவாடியில் நல்லடக்கம் நிகழ்ந்தது.

தகவல் : அதிரை அஹ்மது

8 Responses So Far:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நேற்று இரவு தம்பி முபீன் படுகாயமுற்ற செய்தி அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது, நாங்கள் துஆ செய்துக்கொண்டிருந்தோம். அல்லாஹ்வின் நாட்டம் இச்சிறுவயதில் மரணம்.இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக!

அல்லாஹ் தம்பி முபீனின் பெற்றோருக்கும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் பொறுமையை தருவானாக.

நாம் அனைவரும் துஆ செய்வோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

இளந்தளிரை இழந்து துயரத்தில் இருக்கும் பெற்றோருக்கும், இதனை தாங்கும் சக்தியையும், பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக !

MSM(n) இங்கே வேறு பதிவில் குறிப்பிட்டதை இங்கே நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

//இது போன்ற எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்கள் இனி எவர் வீட்டிலும் நடக்காதிருக்க நாமெல்லாம் நம்மால் இயன்றவரை விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (இறைவன் நாட்டத்தில் நம் பிறப்பு, இறப்பு முன்பே எழுதப்பட்டு விட்டது)//

Yasir said...

படிக்கும் போதே மனம் பதறுகிறது அல்லாஹ் அவர் குடும்பத்தினர்க்கு பொருமையை கொடுப்பானக இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அதிரைநிருபர் said...

Naina Mohamed சொன்னது…

ஹாஜி அப்துல் ரஜாக் அவர்களின் மகனார் நேற்று ஊரில் அவர்கள் வீட்டில் எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தில் மரணமடைந்த செய்தி கேள்விப்பட்டு மிகவும் வேதனையாக உள்ளது இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.... அல்லாஹ் ஈன்றெடுத்த அத்தாய், தந்தையருக்கும் மற்றும் குடும்பத்தினர்களுக்கும் பொறுமையைத்தந்து, மன தைரியத்தையும் தரவும், மரணமடைந்த அவர்களின் அருமை மகனாருக்கு அல்லாஹ் ஆஹிரத்தில் நற்பாக்கியத்தைத்தந்தருளவும் நாமெல்லாம் இங்கு து'ஆச்செய்வோமாக. ஆமீன்....

இது போன்ற எதிர்பாராமல் நடக்கும் அசம்பாவிதங்கள் இனி எவர் வீட்டிலும் நடக்காதிருக்க நாமெல்லாம் நம்மால் இயன்றவரை விழிப்புணர்வுடனும், முன்னெச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (இறைவன் நாட்டத்தில் நம் பிறப்பு, இறப்பு முன்பே எழுதப்பட்டு விட்டது)

ம‌ர‌ண‌த்தின் பிடியிலிருந்து எவ‌ர்தான் ந‌ழுவ‌ முடியும்?

நேற்றிருந்த‌வ‌ர்க‌ள் இன்றில்லை ந‌ம்முட‌ன். இன்றிருக்கும் நாமோ நாளை இருப்ப‌தில் எவ்வித‌ நிச்ச‌ய‌மும் இல்லை.

எல்லாம் இறைவ‌னிட‌மே ஒரு நாள் மீள‌க்கூடிய‌வ‌ர்க‌ளாக‌ இருக்கின்றோம்.


மு.செ.மு. நெய்னா முஹ‌ம்ம‌து

ச‌வுதியிலிருந்து

crown said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அல்லாஹ் அந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு.அமைதியையும்,பொருமையை தந்தருள் புரிவானாக ஆமீன். பெரும் துயரசம்பவம் ஒரு வித எச்சரிக்கை.அசட்டையாக இருக்காமல் விழிப்புடன் நடப்பது நம் கையில்தான் உள்ளது.அல்லாஹ் மிகப்பெரியவன்.

Unknown said...

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அதிரைப்பட்டினம் சமூக சேவையாளர் அ. இ. அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் மகன் முபீன் அவர்கள், தன் பெற்றோருக்கும் தன் பள்ளித் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. கருணையுள்ள இறைவன் அல்லாஹ், இவரின் பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை வழங்கி, இவரைத் தன் சொர்க்கச் சிறார்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாக! ஆமீன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அந்த செய்தி கேட்ட எல்லாரையும் சுனாமி தாக்கிய அதிர்ச்சி.ஒன்றும் சொல்லத்தெரியவில்லை

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிஊன்!

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சகோதரருக்கு ஜன்னத்துல் பிர்தவுசை வழங்குவானாக.அவரின் தாய் தந்தைக்கு பொறுமை அளித்து,அவர்களுக்கும் உயரிய பதவி கொடுப்பானாக

Shameed said...

அஸ்ஸலாமுஅலைக்கும்.
இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அல்லாஹ் அந்த சிறுவனுக்கு சொர்க்கத்தில் இடம் கொடுத்து பெற்றோர்களுக்கு பொறுமையை கொடுப்பானாக ஆமீன்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு