அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சில வாரங்களுக்கு முன்பு அதிரையில் நூதன முறையில் திருட்டுக்கள் அதிகம் நடைப்பெறுகிறது என்ற செய்தியை அதிரைநிருபர் மற்றும் மற்ற அதிரை வலைப்பூக்களில் காணமுடிந்தது.
ஏற்கனவே தான தர்மம் சம்மந்தமாக 05/09/2010 அன்று சிந்திப்போம் என்ற எனது கட்டுரை அதிரைநிருபர் மற்றும் வேறு சில வலைப்பதிவுகளிலும் வெளியிடப்பட்டது. பிச்சைக்காரகள் போல் வேசம் போட்டுக்கொண்டு வருபவர்கள்
பற்றி எழுதியிருந்தேன். நீளமான கட்டுரை என்பதால் அது அதிக நபர்களை சென்றடையவில்லை என்றே நினைக்கிறேன். காலத்தின் தேவை கருதி, சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற பேராவலோடு இங்கே அதை சுருக்கமாகத் தருகிறேன்.
நம்மால் தான தர்மம் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்படலாம். அவை
1) சாதாரணமாக செய்யும் தர்மம்
2) பிரத்தியேகமாக செய்யும் தர்மம்.
சாதாரணமாக செய்யும் தர்மம்:
நாம் சாதாரணமாக செய்யும் தர்மம் பெரும்பாலும் யாசிப்போரையே சென்றடைகிறது. யாசிப்பவர்கள் பெரும்பாலும் திருடர்களாகவும், மோசடிப் பேர்வழிகளாகவும், அந்நேரத்தைய தேவையற்றவராகவும் இருப்பதனால் நாம் செய்கின்ற தர்மம் இவ்வுலகில் நமக்கு சரியான பலனைப் பெற்றுத்தறாமல் போய்விடுகிறது எனவே, நம்முடைய தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் "நாங்கள் கொடுப்பதில்லை" என்று மறுத்துவிட்டு அதற்கு பதிலாக நம் வீட்டில் ஒரு உண்டியலை வைத்து அதில் சேகரிக்கலாம். எப்போதெல்லம் நமக்கு தர்மம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ, எப்போதெல்லாம் யாசிப்போருக்கு தர்மம மறுக்கப்படுகிறதோ
(பிச்சைக்காரர்கள் என்ற சமூகம் உருவாகாமல் தடுக்கும் எண்ணத்தில்) அப்போதெல்லாம் அந்த உண்டியலில் பணத்தை போட்டு வந்தால் நாளடைவில் அது ஒரு பெரும் தொகையாக மாறிவிடும். இதை நான் கணக்கிட்டுப் பார்த்ததில் ஒரு ஊரில் (அதிரை போன்ற ஊர்களில்) நாள் ஒன்றுக்கு சுமார் 50 பிச்சைக்காரர்கள் வந்து சராசரியாக தலா ரூ.100 சேகரிக்கிறார்கள் என்று வைத்தால் ஒரு வருடத்திற்கு அது ரூ.18,25,000-த்தை எட்டுகிறது. மொத்தமாக கணக்கிட்டுப் பார்க்கும்போது இது மிகப்பெரிய தொகை. இதை வைத்து எத்தனையோ சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தலாம், இறைவன் நாடினால் எத்தனையோ உண்மையான ஏழைகளின் ஏழ்மைக்கு நிறந்ததர முற்றுப்புள்ளி வைக்கலாம்.
பிரத்தியேகமாக செய்யும் தர்மம்:
சாதரணமாக செய்யும் தர்மம் அல்லாமல் பல சந்தர்ப்பங்களில் பிரத்யேகமான காரணங்களுக்காகவும் நாம் தர்மம் செய்யலாம். அவை
நீண்ட பிரயானங்களை மேற்கொள்ளும் போது அல்லது ஏதேனும் நல்ல காரியங்களுக்காக செல்லும் போது ஆபத்து, வழித்தடங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க...
தீய கனவுகளால் ஏதோ ஆபத்து ஏற்படப்போகிறது என்ற எண்ணத்தால் அச்சம் ஏற்படும்போது...
நோயுற்றிருக்கும் போது என்று பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அல்லாஹ்வின் உதவியை நாடி தர்மம் செய்யலாம்.
திருமணம், குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, தொழில் வளர்ச்சி, நாடிய காரியம் நிரைவேறுதல், தேர்வில் வெற்றி பெறுதல், நோயிலிருந்து குணமடைதல் என்று பல்வேறு மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் தர்மம் செய்யலாம்.
இவ்வாறாக எல்லா நிலைகளிலும் செய்யும் தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் பணத்தை உண்டியலில் போட்டு சேகரித்து வரலாம்.
சிறு துளி பெரு வெள்ளமாய் சாதாரனமாக செய்யப்படும் தர்மம் மட்டுமே நம் கணக்குப்படி ஓராண்டில் ரூ.18,25,000/- எட்டியிருக்க பிரத்தியேகமாக செய்யும் தர்மத்தையும் சேர்க்கும் போது அது கோடிகளை எட்டிவிடும். பைத்துல்மால் போன்ற பொது தன்னார்வ அமைப்புகள் இத்தொகையை சேகரித்து அந்த ஊருக்காக, ஊர் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தங்களுடைய சேவைகளை பெருக்கிக்கொள்ளலாம். சில நேரங்களில் நமக்கு நன்கு அறிமுகமான ஏழைகள் ஆயிரம் இரண்டாயிரம் என்று ஏதேனும் மருத்துவ செலவுகள் போன்ற அத்தியாவசிய தேவைக்காக நம்மிடத்தில் கடனுதவி தேடி வரும் போது அந்த உண்டியலில் சேகரித்துள்ள பணத்திலிருந்து அவர்களுக்கு தானமாகவே கொடுத்துவிடலாம்.
சமூக மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சமூக சீர்திருத்தம் செய்யமுடியாது. எனவே, இத்திட்டம் இஸ்லாத்திற்கு மாற்றமில்லாத நிலையில் வீடு வீடாக இதை எடுத்துச் சொல்லி சமூக சீர்தித்தம் ஏற்பட தான்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் முன் வறவேன்டும். இறைவன் நாடினால் இத் திட்டம் செயல்படுத்தப்படும் ஊர்களில் வெளியூரிலிந்து வரும் பிச்சைக்காரர்களின் வருகையை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக பிச்சைக்காரர்கள் வேடத்தில் வரும் பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தலாம். மேலும் உள்ளூர் பிச்சைக்காரர்களுக்கு ஏதேனும் ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் பிச்சை எடுப்பதைத் தவிர்த்து அவர்களும் தன்மானத்தோடு வாழ வழி வகை செய்யலாம்.
மகிழ்ச்சி, துக்கம், சாதாரண நேரம் என்று எல்லா நிலைகளிலும் நாம் அல்லாஹ்விடத்தில் உதவியை எதிர்பார்த்தவர்களாக இருக்க வேண்டும். நேர்ச்சை செய்து பின் காரியம் நிறைவேறியதும் தர்மம் செய்தால் அந்த தர்மம் நமக்கு எந்த நன்மையையும் அல்லாஹ்விடத்தில் பெற்றுத்தறுவதில்லை. அதே தர்மத்தை முன் கூட்டியே செய்துவிட்டு அல்லாஹ்விடத்திலே உதவியை நாடும் போது தர்மத்திற்கான கூலியும் கிடைத்துவிடும், தர்மம் தீய விதியைத் தடுக்கும் என்ற இஸ்லாத்தின் கருத்துப்படி இறைவன் நாடினால் ஆபத்தும் நம்மை விட்டு நீங்கிவிடும்.
நாம் செய்யும் காரியம் பிறருக்கு பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே மேற்குறிப்பிட்ட யோசனைகள் சொல்லப்பட்டுள்ளது.
இது மாத்திரமே என்னிடம் இருக்கின்ற அறிவு, தீர்க்கமான ஞானம் படைத்த இறைவனுக்கே சொந்தம். மேலும் நல்ல யோசனைகள் இருந்தால் இங்கு பகிர்ந்துக்கொள்ளலாம்.
சிந்தனை தொடரும் இன்ஷா அல்லாஹ்..
ம அஸ்ஸலாம்
--அபு ஈஸா
14 Responses So Far:
சமுதாய அக்கறை கொண்ட நல்ல ஆரோக்கியமான சிந்தனைமட்டுமல்ல நல்ல பரிந்துரை !
இக்கட்டுரையை வாசித்ததும் பேச்சுவாக்கில் ஊரிலிருப்பவர்கள் சிலரிடம் ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை பேர் யாசகம் கேட்டு வருகிறார்கள் அதுவும் அவர்கள் வரும் நேரகாலம் எது என்று கேட்டேன்.
அதில் தினமும் வருபவர்கள் குறைந்தது மாறி மாறி 7 லிருந்து 8 அல்லது இதற்கு குறைவாக, ஆனால் வெள்ளிக் கிழமை திங்கள் கிழமைகளில் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமே.. வீடு ஒன்றுக்கு (கொடுக்காத வீடுகளைத் தவிர்த்து) தலா நாள் ஒன்றுக்கு ருபாய் 10 லிருந்து 15 வரை யாசிப்பவர்களுக்கு கொடுக்கப் படுகிறது.. அப்படி என்றால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் !
சமுதாய அக்கறை கொண்ட நல்ல ஆரோக்கியமான சிந்தனைமட்டுமல்ல நல்ல பரிந்துரை !
அபுஈசா,
உங்களின் இந்த கட்டுரையில் திட்டமிடும் நேர்த்தி வியக்க வைக்கிறது. ஆயினும், இதை நடைமுறைப் படுத்துவதில் சற்றேச் சிக்கலிருப்பதாகவே நான் உணர்கிறேன்.
எங்ஙனம் எனில், பிச்சை கொடுப்பது பிச்சை எடுப்பது என இரண்டுமே மனிதர்களின் இரத்தத்தில் ஊரிய குணம். உணர்வுகள் சம்மந்தப்பட்டதேயன்றி பொருட்கள் காசு பணம் சம்மந்தபட்டதல்ல (அப்படித் தோன்றினாலும்) எனவே, என்னதான் நீங்கள் தெளிவாகவும் அற்புதமாகவும் திட்டமிட்டுத் தந்தாலும் உடனடி பின்பற்றல் சந்தேகம்தான்.
ஆகவே, என் தனிப்பட்ட கருத்து என்னவெனில், இத்தகைய நல்லதொரு திட்டம் மக்களால் நடைமுறைப் படுத்தப்படவேண்டுமெனில் தாங்கள் அடிக்கடி இது தொடர்பான நினைவூட்டல்களையும், கட்டுரைகளையும் எழுத வெண்டும்.
ஒரு புகழ்பெற்ற வாசகம் பிச்சைக்கும் பொருந்தும்:
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
நல்ல யோசனைதான்..உடனே, எனக்கு தெரிந்தவர்களிம் இவ்விசயத்தை சொல்லி செயல் படுத்தும்படி சொண்னேன் (நானும் தான்)
நம் ஊர் பெண்களிடம் : நம்மூருக்கு வருபவர்கள் எல்லாம் டூப்ளிகட் பிச்சைக்காரர்கள் என்று சொன்னால் பிச்சை இடுவதை நிறுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன்.
"திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"
சபீர் அஸ்ஸலாமு அலைக்கும்...
பிச்சைக்காரர்களுக்கு இது பொருந்து மென்றால்...
நன்மையை ஏவி தீமையை தடுப்பதை நம் உம்மத்தவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கதே.
அஸ்ஸலாமு அழைக்கும்
பிச்சைகாரன் கெட்டவன் என அறிந்ததும் பிச்சை கொடுப்பதை நாம் நிறுத்துவதற்கு அல்லது வேறுவழிகளில் தருமம் செய்வதற்கு யோசிகின்றோம்
இறைவன் நமக்கு அளிக்கும் கொடையை நாம் இறை வழியில் செலவு செய்ய முயற்சிக்க வேண்டும் இல்லையோல் இறைவன் கூட நமக்கு அளித்துவரும் கொடையை நிறுத்துவதற்கு காலதாமதம் ஆகாது.
ஜலீல்,
அஸ்ஸலாமு அலைக்கும்...
இப்ப எங்கே வாசம்? சவுதியிலா? ஊரிலா?
//நன்மையை ஏவி தீமையை தடுப்பதை நம் உம்மத்தவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கதே.//
என்று தாம் சொல்வதைத்தான் நானும்...
"தாங்கள் அடிக்கடி இது தொடர்பான நினைவூட்டல்களையும், கட்டுரைகளையும் எழுத வெண்டும்" என்று நானும் சொல்கிறேன்.
மற்றபடி அந்த திருந்துகிற வாசகம் ஒரு நினைவூட்டல்தான்.
ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் நமக்கிடையே மாற்றுக்கருத்து ஏது?
ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் நமக்கிடையே மாற்றுக்கருத்து ஏது?
சந்தோஷம்..
காதே என்பதர்க்கு பதிலாக (கதே) ஒரு காலை விட்டு விட்டேன்..
தற்பொழுது வாசம் சவுதியில்(Qateef)தான்.
சகோதரர் அபு ஈசா அவர்களின் பின்னூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சகோதரர்களுடைய கருத்துகளூக்கு என் மனமார்ந்த நன்றி. கருத்து ஏற்புடையதாக இருந்தால் அதைத் தாங்களும் பின்பற்றுவதோடு, வாய்ப்புக் கிடைக்கும்போது பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இந்த நல்ல சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்
சகோதரர் சபீர்,
சகோதரரே! இதை நடைமுறைப் படுத்துவதில் அல்லாஹ்-வின் உதவியால் எந்த சிக்கலும் வராது, இஸ்லாத்தை முன்னிருத்தி மாற்றுக் கருத்து வராத வரை. "இத்திட்டம் என் வீட்டிலும், எனது மனைவி வீட்டிலும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது".
தாங்கல் சொல்வது போல் யாசகம் கொடுப்பதும், பெறுவதும், உணர்வு சம்மந்தப்பட்ட விசயமாக இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தும் உரமாய், ஊற்று நீராய் இருப்பது பணம் என்றால் அது மிகையாகாது என்றே நினைக்கின்றேன். பிச்சைக்காரர்கள் அதிரை போன்ற ஊர்களை நோக்கிப் படையெடுப்பதற்கு முக்கிய முதல் காரனம் இங்கே நல்ல வசூல் கிட்டும் என்பதே!
"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்". எனவே விழிப்புணர்வு தேவை என்கிறேன்.
*******************
சகோதரர் சாஹுல்,
சகோதரரே! தர்மம் தடுக்கப்பட வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. கொடுப்பதும், கொடுக்க வேண்டும்! அது நம் மீது கடமை! என்ற சிந்தனையும் நம்மில் மேலோங்க வேண்டும். அதுவும் சரியான நபரைச் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம்.
பிச்சைக்காரர்கள் சரியானவர்களாக இல்லை என்று நாம் தர்மம் செய்வதை நிருத்திவிட்டோம் என்றால் தர்ம சிந்தனை நம்மை விட்டுப் போய்விடும்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எனவேதான் இங்கே தர்மம் செய்வதற்கான மாற்று யோசனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் தர்மம் கேட்கக் கொடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் தாமாகவே முன் வந்து தர்மம் செய்யும் பழக்கமும் நம்மிடம் வர வேண்டும்.
ஒருவர் தனக்கு ஏதேனும் தேவை என்று வரும்போது அவருடைய தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதுவும் ஏமாந்து போய்விடாமல் உண்மை அறிந்து உதவி செய்யப்பட வேண்டும். தேவை உடையவருக்கு ஒரு ரூபாயை நாம் கொடுத்துவிட்டு மீதத்திற்கு ஒவ்வொருவரிடமும் கையேந்த வைப்பதை இஸ்லாம் கற்றுத்தரவில்லை என்றே நினைக்கிறேன்.
அவ்வாறாக ஒருவருடைய தேவை முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றால் நிதி ஒருங்கினைக்கப்பட வேண்டும்!
பிச்சை எடுப்பதை ஊக்கப்படுத்தாமல் உழைப்பு ஊக்கப்படுத்தப்பட வேண்டும்!
ஏழைகளைப் பிச்சைக்காரர்களாக உருவாக்காமல் உழைப்பாளிகளாக உருவாக்க வேண்டும்!
அல்லாஹ் நன்கு அறிந்தவன்!
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
தம்பி அபு ஈசா,
//இதை நடைமுறைப் படுத்துவதில் அல்லாஹ்-வின் உதவியால் எந்த சிக்கலும் வராது,//
ஒரு முடியாதவர் (கண் பார்வையற்றவர்கள், பிறவியிலேயே ஊனமுற்று கை கால் உழைக்கும் நிலையில் இல்லாதவர்கள், ஆதரவற்ற வயது முதிர்ந்து நாதியற்றவர்கள்) என்னிடம் வந்து பிச்சை கேட்டால் நான் என்ன செய்ய வேண்டும்? என் மனித உணர்வு "உதவு" எனும்போது என்னால் எப்படி உண்டியலை நிரப்ப முடியும்?
//எல்லா நிலைகளிலும் செய்யும் தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் பணத்தை உண்டியலில் போட்டு சேகரித்து வரலாம்//
என ஸ்திரமாகா சொல்லும் நீங்கள்...
கண் பார்வையற்றவர்கள், பிறவியிலேயே ஊனமுற்று கை கால் உழைக்கும் நிலையில் இல்லாதவர்கள், ஆதரவற்ற வயது முதிர்ந்து நாதியற்றவர்கள் ஆகியோர்களையும் உட்பட்டே சொல்வதாகத்தான் உங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது. இப்படி உதவி பெற தகுதியுள்ளவர்களுக்கு தீர்வு சொல்லாமல் உங்கள் திட்டம் ஒட்டு மொத்தமாகவே தர்மத்தை வேண்டாம் என்றுதான் சொல்கிறது.
எல்லாப் பிச்சைக்காரர்களும் ஏமாற்றுக் காரர்க்ள் அல்ல..
தவிர, நானும் உங்கள் திட்டத்தை வரவேற்றுத்தான் பின்னூட்டமிட்டுள்ளேன். ஆனால், நடைமுறை சிக்கல் என் நான் சொல்வது உணர்வுகளை, இறக்கத்தை எப்ப்டி வெல்வது? அதற்காகத்தான் நீங்கள் இன்னும் எழுத வேண்டுமென பூடகமாகச்சொன்னேன்.
(உங்களைக் காண கடந்த வெள்ளியன்று நெடு நேரம் காத்திருந்தேன் உங்கள் அறையில். நாம் அளவளாவி வெகு நாட்களாகிவிட்டன. இனியாவது இந்த அ.நி. அறையில் சந்திப்போம், இன்ஷா அல்லாஹ்)
அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் அபு ஈசா,
பிச்சைக்காரர்கள் என்ற போர்வையில் வந்து சமூகவிரோத செயல்கள் அதிகம் நடைப்பெறுகிறது என்று தன் முதல் கட்டுரையில் விரிவாக விளக்கியிருந்தீர்கள். இதை மீண்டும் ஒரு முறை பொருமையாக அனைவரும் வாசிக்க வேண்டும்.
//எல்லா நிலைகளிலும் செய்யும் தர்மத்தை யாசிப்போருக்குக் கொடுக்காமல் பணத்தை உண்டியலில் போட்டு சேகரித்து வரலாம்//
யாசிப்பதை தொழிலாக்கி மக்களை ஏமாற்று வேலையில் ஈடுபடும் (சமூக விரோத மற்றும் சோம்பேறி கூட்டத்தை ஒழிப்பதற்காகவே இத்திட்டமே தவிர, யாசிக்கும் அனைவருக்கும் தர்மம் செய்ய வேண்டாம் என்பது அல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து.
//சகோதரர் சபீர் சொன்னது..... உதவி பெற தகுதியுள்ளவர்களுக்கு தீர்வு சொல்லாமல் உங்கள் திட்டம் ஒட்டு மொத்தமாகவே தர்மத்தை வேண்டாம் என்றுதான் சொல்கிறது//
இத்திட்டத்தை செயல் படுத்தி உதவி பெற தகுதியுள்ளவர்களை கண்டறிந்து நம் தர்மங்களை செய்யலாம், அவர்களுக்கு நிரந்தர வருமானம் செய்து தரலாம், அல்லது அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யலாம். பொது சேவை நிறுவனத்தின் (பைத்துல்மால் போன்றவைகள்) உதவியுடன் உதவி பெற தகுதியுள்ளவர்களை கண்டறிந்து நம் தர்மங்களை செய்யலாம்.
இப்படி செய்வதால் நாம் செய்யும் தர்மத்தில் பயனடைபவர்களை கானும்போது நமக்கு இன்னும் நிறையை தர்மம் செய்ய தூண்டும் என்பது என்னுடைய கருத்து.
மற்றபடி இக்கட்டுரை தர்மமே செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை, மாறாக பிச்சைக்காரர்கள் என்ற போனரில் யாசகம் கேட்பதை தொழிலாக்கி கொண்டவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்பதே இக்கட்டுரையின் நோக்கம் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.
கண் பார்வையற்றவர்கள், பிறவியிலேயே ஊனமுற்று கை கால் உழைக்கும் நிலையில் இல்லாதவர்கள், ஆதரவற்ற வயது முதிர்ந்து நாதியற்றவர்கள் ஆகியோர்களைவிட நல்ல உடல் சக்தி பெற்றவர்கள் தான் பிச்சைத்தொழில் அதிகம் ஈடுபடுகிறார்கள். நிறந்தரமாக யாசகம் கேட்கும் (வெள்ளிக்கிழமையும், திங்கக்கிழமையும் வருபவர்கள்) உடல் சக்தி பெற்ற இவர்களுக்கு கொடுப்படும் பணம் உண்மையில் நல் வழியில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யத்தான் பயன்படுகிறா என்பது கேள்வி குறியே...
அஸ்ஸலாமு அலைக்கும்.தானத்திலும் நிதானம் வேண்டும் என்பதையும்.அதன் பின் வந்த கருத்துக்கள்,அந்த கருத்துக்களுக்குப்பின் வந்த விளக்கம் எல்லாம் அட்சய பாத்திரம்(அப்படி ஒன்னு இருக்கா?)போல் இது அச்சில் வார்த்த பாத்திரம். அருமை.
சகோதரர் அபு ஈசா அவர்களின் பின்னூட்டம்.....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சபீர் காக்கா,
உங்களுடைய கருத்துக்கு சகோதரர் தாஜுதீன் தெளிவாகவே விளக்கம் தந்துள்ளார் "ஜஜாக்கல்லாஹு கைரன்".
இருப்பினும் என் தரப்பிலும் சில..
"எல்லா நிலைகளிலும்" என்றது துக்கம்,மகிழ்ச்சி என்று எல்லா நிலைகளிலும் செய்யும் தர்மத்தை.
மேலும் எனது பின்னூட்டத்தை முழுமையாக படித்தீர்கள் என்றால் அதில் தகுதியானவர்களுடைய தேவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும், ஒரு ரூபாயை நாம் கொடுத்துவிட்டு மீதத் தேவைக்கு பிறரிடம் கையேந்தும் நிலையை ஏற்படுத்தக் கூடாது என்றும் சொல்லியிறுக்கின்றேன்.
நிதி ஒருங்கிணைக்கப்பட்டால் முடியாதவர்களுக்கு அவர்கள் யாசிக்கும்போது மட்டும் உதவாமல் நிரந்தரமாகவே அவர்களுகாக காப்பகம் அமைப்பது கூட சாத்தியமே.
இனி ஆய்வுக்காக சில...
யாசிப்பவர்களில் 1% - 5% அளவுக்கே நீங்கள் சொன்ன முடியாதவர்கள் இருக்கின்றார்கள். மீதமுள்ள 95% - 99% மோசடிப் பேர்வழிகளே! இந்த மோசடிப் பேர்வழிகளுக்கு கொடுக்காமல் அதை ஒருங்கிணைத்து இந்த தகுதியானகளின் தேவைகளையை முழுமையாக நிறைவேற்றலாமே!
அடுத்து கண் பார்வையற்றோர், இயங்க முடியாத அளவு ஊனமுற்றோர் ஏதோ ஒரு பகுதியிலிருந்து வந்து யாசிக்கிறார்களே! தொடர்ந்து வந்து போகிறார்களே! எப்படி? இவர்கள் மக்களின் அனுதாபத்தை அதிகம் பெருவதால் இவர்களுடைய வருமானமும் அதிகம்! அந்தப் பணத்தை என்ன செய்கிறர்கள்? தீராத நோயுற்றோருக்கு வேண்டுமானால் பணத் தேவை அதிகமாக இருக்கலாம் ஆனால் ஊனமுற்றோருக்கு தேவை அடிப்படை வசதி. அப்படியிருக்க இயலாதவர்கள் ஓய்வெடுக்காமல் ஏன் அதிகமாக பணம் திரட்ட வேண்டும்? இவர்களைக் கொண்டுவந்து விடுவதும் கூட்டிகொண்டு போவதும் யார்?
சொல்லப் போனால் இவர்கள் பெரும்பாலும் மோசடிப் பேர்வழிகளால் பனியமத்தப்பட்டு இறுப்பவர்கள். இவர்களுடைய வருமானத்தில் பெரும் பகுதியை இந்த மோசடிக் கும்பலே உண்டு கொலுக்கிறது! இதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது என்பதே என் வாதம்.
அடுத்து ஆதரவற்றவர்களை யாசிக்கும் நிலைக்குத் தள்ளாமல் அவர்களுக்கு மாத ஊதியம் கொடுத்து கன்னியமாய் வாழ வழி வகுக்கலாமே...
நேரமிருந்தால் என்னுடை முன்னால் கட்டுரையைப் படிக்கவும். http://adirainirubar.blogspot.com/2010/09/blog-post.html
அல்லாஹ் மிக்க அறிந்தவன்
ம'அஸ்ஸலாம்
அபு ஈசா
Post a Comment