Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

மூடப்பழக்கம் மண்மூடிப் போகட்டும் - 3 11

அதிரைநிருபர் | November 22, 2010 | , ,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

எல்லாரும் யோசிச்சியலா? சகோ.சாகுல் சட்டுனு சொல்லிபுட்டாஹ! எல்லாம் சரிதான் எப்படித்தான் அங்கு செயல் பாட்டின் வினை வந்திருக்கும்???

நாம் விசாரித்தவரையில், (லோக்கல் இன்வஸ்டிகேசன் டீம்) அந்த மந்திர அம்மாவுக்கும், அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண்னுக்கும் பிஸினஸ் லிங்க் இருப்பதும், இது பெரிய நெட்டொர்க்காகவே இருந்திருக்கு (இன்னும் இருக்கும்). அந்த அவ்லியாவின் ஆவி ஆஜராகுற விசயம், பெரும்பாலும் எல்லா வேலைக்கார பெண்களுக்கும் தெரிந்திருக்கிறது (தொடர்பிருக்கு). உங்க வீட்டிலோ இல்லை யாரவது நண்பர்கள் வீட்டிலோ இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா?

இந்த அம்மாவிடம் நம்ம ஊர் ஆலிம்கள் தாவத்து செய்யாதது ஏன் என்று கேட்டால் இயக்கங்களை அவர்கள் கை காட்டிவிடும் சூழ்நிலைதான் நடக்கிறது.சில இளைஞர்கள் இதை தடுக்க முயன்றார்கள். ஆனால், அவர்களை தெரு பாகு பாடு காட்டி தடுத்து விட்ட கொடுமையை என்ன சொல்ல? ஆக பில்லி சூனியம் இருக்கா? அதுக்கு ஏதும் பலம் உண்டா? இஸ்லாம் என்ன சொல்கிறது? இதை கொஞ்சம் அலசலாமா?

சூனியம் என்று எதுவுமே இல்லை என்று இஸ்லாம் மறுக்கவில்லை, அதே நேரத்தில் சூனியம் இருப்பதாகவும் இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. குர்ஆனில் அது பற்றிப் பேசப்பட்டுள்ளது, ஆனால் முஸ்லிம்கள் விளங்கி வைத்துள்ளது போன்ற சூனியத்தை இஸ்லாம் சொல்லவில்லை.

சூனியத்தின் மூலம் எவருக்கும் எத்தகைய கெடுதியையும் செய்துவிடலாம், எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கை கால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்கு தெரியாமல் அவர் வயிற்றில் மருந்தை செலுத்தி விடலாம், கருவில் வளரும் குழந்தையை கொன்று விடலாம், கர்ப்பத்தை கலைத்து விடலாம், நோய் பிடிக்க செய்து விடலாம்... இப்படியே ஏராளமான கெடுதிகளை சூனியத்தின் மூலம் செய்து விட முடியும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இத்தகைய நம்பிக்கைகளுக்கு துளி கூட குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ ஆதாரம் இல்லை.

நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களை ஊட்டி பிரச்சனைகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்த முடியும் என்பது தான் சூனியத்தின் அதிகபட்ச வேலை என்று குர்ஆன் கூறுகிறது.

'கணவன் - மனைவிக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும் சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டார்கள்' என்று சூனியம் பற்றிப் பேசும் (2:102) வசனத்தில் இறைவன் குறிப்பிடுகிறான்.

சூனியத்தில் கணவன் - மனைவிக்கு மத்தியில் பிரிவினை உருவாகும் என்பதற்கு நபி (ஸல்) வரலாற்றில் கூட மறுக்க முடியாத சான்று கிடைக்கின்றது.

நபி(ஸல்) அவர்களுடன் ஆய்ஷா(ரலி) ஒரு போருக்குப் போய்விட்டு திரும்பி வரும் வழியில் ஒரு இடத்தில் நபி(ஸல்) ஓய்வெடுக்கிறார்கள், இந்த சந்தர்பத்தில் அன்னை ஆய்ஷா அவர்கள் தம் சுய தேவைக்காக கொஞ்ச தூரம் சென்று விடுகிறார்கள். தம் மனைவி சுய தேவைக்கு சென்றுள்ளதை நபியவர்கள் அறிந்திருக்கவில்லை, ஒட்டகத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள கூண்டில் ஆய்ஷா இருப்பதாக நினைத்துக் கொண்டு சிறிது நேர ஓய்விற்குப் பின் நபியவர்கள் புறப்பட்டு விடுகிறார்கள். நடந்தவைகள் எதுவும் தெரியாமல் தன் தேவைகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த ஆய்ஷா(ரலி)க்கு அதிர்ச்சி ! அந்த இடத்தில் யாருமே இல்லை, சென்றவர்கள் தம்மைக் காணாமல் மீண்டும் இங்கு வந்து தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையோடு ஆய்ஷா(ரலி) அதே இடத்தில் உட்கார்ந்து பிறகு தூங்கி விடுகிறார்கள்.

போரின் முடிவில் முஸ்லிம் வீரர்கள் கவனிக்காமல் விட்டு வந்த பொருள்களை சேகரித்து வருவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு நபித் தோழர் கடைசியாக அந்த வழியாக வரும்போது கருப்புத் துணியால் தன்னை மூடிக் கொண்டு தூங்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்.

அங்கே அன்னை ஆய்ஷா அவர்கள் தான் என்பதை அறிந்து 'சுப்ஹானல்லாஹ்' என்கிறார், இந்த சப்தத்தில் ஆய்ஷா(ரலி) விழித்துக் கொள்கிறார்கள்.

அந்த நபித் தோழர் தனது வாகனத்தை படுக்க வைத்து அதில் ஆய்ஷா அவர்களை ஏற சொல்லி விட்டு இவர் வாகனத்தைப் பிடித்துக் கொண்டு ஊர் வந்து சேருகிறார். வேறொரு ஆணுடன் ஆய்ஷா(ரலி) வருவதைக் கண்ட நயவஞ்சகர்கள் சிலர் ஆய்ஷா(ரலி) அவர்களையும் அந்த நபித் தோழரையும் தொடர்புப் படுத்தி பேசத்துவங்கி விடுகிறார்கள். பேச்சுக்களால் பரவும் இந்த சூனியத் திட்டம் வேலை செய்ய துவங்கி நபி(ஸல்) அவர்களின் மனதில் பெரும் குழப்பத்தை - சஞ்சலத்தை - ஏற்படுத்தி, நிம்மதியை கெடுத்து குடும்பத்தில் பெரும் புயலை உருவாக்கி விடுகிறது.

'ஆய்ஷாவே! நீ தவறு செய்திருந்தால் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேள்' என்று தனது அன்பு மனைவியிடம் கூறக்கூடிய அளவுக்கு, 'ஆய்ஷாவிற்கு தலாக் கொடுத்து விடலாமா' என்று பிறரிடம் ஆலோசனை செய்யும் அளவுக்கு அந்த சூனிய பேச்சின் தாக்கம் வலுவாக இருந்தது. 'சூனியத்தின் மூலம் கணவன்- மனைவிக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துவார்கள்' என்ற இறைவனின் கூற்றை கண்ணெதிரே தெரிந்துக் கொள்ளும் படியாக அந்த சம்பவம் நாற்பது நாட்கள் வரை நபியையும் அவர்களின் பிரியமான மனைவியையும் பாதித்தது.

அழுவதும் அந்த அசதியால் தூங்குவதும் விழித்தவுடன் மீண்டும் அழுவதுமாகவே ஆய்ஷா(ரலி)யின் பொழுதுகள் கழிந்துக் கொண்டிருந்தன. இந்த சூனியப் பேச்சுக்கு எதிராக ஆய்ஷா(ரலி) அவர்களின் தூய்மையைப் பற்றி இறைவன் வசனங்களை இறக்கி வைக்கிறான்.

'இப்பழியை உங்கள் நாவுகளால் எடுத்து சொல்லிக் கொண்டு, உங்களுக்கு அறிவில்லாத ஒன்றை உங்கள் வாய்களால் கூறித் திரிகிறீர்கள். (கணவன் மனைவியை பிரிக்கும் இந்த சூனியப் பேச்சை) நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப் பெரியதாக இருக்கிறது.' (அல் குர்ஆன் 24:15) - இந்த வசனம் உட்பட இதற்கு முன்னும் பின்னும் உள்ள சில வசனங்கள் இறங்கிய பிறகே நபியின் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் தென்படத் துவங்கின (இந்த சம்பவம் புகாரியில் மிக விரிவாக பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.)

மனித மனங்களை பாழ்படுத்த ஷைத்தான்களிடம் ஏராளமான திட்டங்கள் இருப்பதால்தான் தெளிவான ஆதாரமில்லாத, சந்தேகமான எந்த ஒரு செய்திக்கும், காரியத்துக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று இறைவன் வழிக் காட்டியுள்ளான்.

'இறை விசுவாசிகளே! (சந்தேகமான) எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் எண்ணங்களில் சிலது பாவமாக அமைந்துவிடும். (அல் குர்ஆன் 49:12)

இறைவனைப் பற்றிய அச்சமில்லாத எவரும் இத்தகைய சூனியத்தை செய்துவிட முடியும். இன்றைக்கு பரவலாக அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. கணவன் மனைவியை பிரிக்கும் திட்டத்தில் இறங்கும் எவரும் சூனியக்காரர்கள் என்ற வட்டத்துக்குள் வந்து விடுவார்கள். அவர்கள் குடும்பத்தாராக இருந்தாலும் சரி, வெளி மனிதர்களாக இருந்தாலும் சரியே! இவர்களைப் போன்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் சுட்டிக் காட்டும் விதமாகவே,

'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது' என்று நபி(ஸல்) கூறியுள்ளர்கள். (உமர்(ரலி) அறிவிக்கும் இச் செய்தி புகாரியில் - 5325 இடம் பெற்றுள்ளது)

இன்சாஅல்லாஹ் தொடரும்.....

-- CROWN

11 Responses So Far:

sabeer.abushahruk said...

மார்க்க ஆதாரங்கள் கொண்டு தொடரை வலுப்படுத்துவது மிகவும் வரவேற்கத்தக்கது. தொடருங்கள்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

//'பேச்சுக்கலையில் சூனியம் இருக்கிறது'//

இதனை எத்தனையோ சந்தர்ப்பங்களில் நிஜ நிகழ்வுகளோடு கண்டிருக்கிறோம்..

எவ்வித சூழலிலும் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் !

ஜலீல் நெய்னா said...

நம் வாழ்கையில் ஒவ்வொரு விசயங்களிலும் மார்க்க அடிப்படையில் சிந்தித்து செயல் பட்டோமானால் பினக்கமே இல்லை.இதில் தான் வெற்றி இருக்கிறது

Yasir said...

என்ன சூனியம் வைத்தீர்கள்....உங்கள் கட்டுரை என்னை மெய்மறந்து படிக்க வைத்தது....சூனியத்தை பற்றி அருமையான விளக்கம்...நன்றி சகோதரரே

Shameed said...

அஸ்ஸலாமு அழைக்கும்
இறுதி கடமை ஹஜ்ஜை இனிதே முடித்து நலமுடன் வந்து சேர்ந்தோம்.

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

Shahulhameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்
இறுதி கடமை ஹஜ்ஜை இனிதே முடித்து நலமுடன் வந்து சேர்ந்தோம். ///

அல்ஹம்துலில்லாஹ் ! - Welcome back சாஹுல் காக்கா !

Yasir said...

வ அலைக்கமுஸ்ஸலாம் காக்கா..அல்லாஹ் உங்களுடைய ஹஜ்ஜை கபூல் செய்து அதன் மூலம் நீங்கள் அடைந்த தூய்மையை வாழ்வின் கடைசி நொடிவரை பாதுகாப்பானக

crown said...

Shahulhameed சொன்னது…
அஸ்ஸலாமு அழைக்கும்
இறுதி கடமை ஹஜ்ஜை இனிதே முடித்து நலமுடன் வந்து சேர்ந்தோம்.
------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹ் உங்களுடைய மற்றும் குடும்பத்தினரின் ஹஜ்ஜை பொருந்திக்கொண்டு.அதன் நன்மைகளை தந்தருள்வானாக ஆமீன்.

ZAKIR HUSSAIN said...

To

Bro Shahul Hameed

உலகில் வாழும் முஸ்லிம்களில் மிகச்சிலருக்கு மட்டும் கிடைக்கும் நற்பாக்கியம் உங்களுக்கும் & உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வழி செய்த அந்த வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்.


ZAKIR HUSSAIN

crown said...

Assalamu alikum!
http://dhargavalikedu.blogspot.com/2010/10/blog-post_2217.html?spref=fb

தாஜுதீன் (THAJUDEEN ) said...

///Assalamu alikum!
http://dhargavalikedu.blogspot.com/2010/10/blog-post_2217.html///

வ அலைக்குமுஸ்ஸலாம், இந்த வீடியோவை பார்த்ததும் அதிர்ந்து போனேன், இன்னும் நிறைய விழிப்புணர்வுகள் செய்யப்படவேண்டும் என்பதையே இது காட்டுகிறது. பகிர்வுக்கு நன்றி.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு